சனி, 22 டிசம்பர், 2012

சிக்கலான கிறுக்கல் விழுந்த சி.டி.களிலிருந்து தகவல்களை பெற !!!

இன்று கணினி வைத்திருப்பவர்கள் என்று இல்லாமல் அனைவருக்கும் இருக்கும் ஒரு பெரிய சிக்கல் என்ன வென்றால் சி.டி தாங்க சி.டி யில் நாம் நம்முடைய போடோக்களிலிருந்து, பிறந்தநாள் நிகழ்சிகள், திருமண நிகழ்சிகள், நமது தனிப்பட்ட விஷயங்கள் அவரைக்கும் பதிவு பண்ணி பாதுகாத்து வருகிறோம். ஆனால், இதிலும் ஒரு பெரிய சிக்கல் வந்து விடும்.

அதுதான் சி.டி.கள் மோசமாகி போவது அதாவது சி.டி களில் சிக்கல் ஏற்பட்டு விடும் உராய்வு, தூசு படித்தல் போன்ற பல காரணங்களால் சி.டியில் இருக்கும் தகவல்களை நாம் பெற முடியாத சூழல் ஏற்படும் போது தான் நாம் அதிகமாக பாதிக்கப்படிகிறோம். நாம் ஆசை ஆசையாக சேமித்து வைத்த வீடியோக்கள். அனைத்தும் வீணாகி போகும் பொது அதனால் நாம் அடையும் பாதிப்பு மிக மிக அதிகம்.

இப்படி பட்ட சிக்கல் சி.டி.க்களில் இருந்து தகவல்களை பெறும் வழிமுறைகளைப் பற்றி இன்றைக்கு பார்க்க போகிறோம்.வேறொரு சி.டி.யில் இருந்து தகவல்களை, வீடியோக்களை காப்பி செய்து கொண்டு வந்து நமது கணினியில் போட்டு பார்த்தல்,அல்லது நமது சி.டி.க்களை போட்டு பார்த்தால் cannot read from the source destination என்று கணினியில் பதில் வரும்.சி.டி.யில் நமக்கு தெரியாமல் ஏற்பட்டிருக்கும் கீறல்கள், பதிந்திருக்கும் தூசுக்களால் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

எனவே, முதலில் மெல்லிய துணி கொண்டு சி.டி.க்களை உள்ளே இருந்து வெளிப்புறமாக துடைக்க வேண்டும். சோப்பு கலந்த நீரில் போட்டு கழுவவும் செய்யலாம். அதன் பிறகும் சிக்கல்கள் ஏற்பட்டால் கீழே இருக்கும் வழிமுறைகளை கையாளலாம்.

நீங்கள் இந்த( http://isobuster.com/ ) இணையத்தளம் வழங்கும் மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். பிறகு பிறகு மென்பொருளின் ஆய்வுக்கு சி.டி.யை உட்படுத்த வேண்டும். அப்போது இந்த மென்பொருள் பாதிக்கப்பட்ட சி.டி.யிலுள்ள தகவல்களை பெற்று தரும். அல்லது அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பின் பாதிக்கப்பட்ட பகுதிகளை மட்டும் விட்டுவிட்டு மற்ற பகுதிகளில் உள்ள தகவல்களை நமக்கு பெற்று தரும்.

இதன் மூலம் நாம் சிக்கல் சி.டி.களில் இருந்தும் தகவல்களை பெறலாம். நண்பர்களே இன்னும் சிக்கல் விழுந்த சி.டி.க்களை தூக்கி வீசாமல் தகவல்களை பெற இந்த வழியில் முயற்சித்து பாருங்கள்.

மவ்லானா கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ ஹழ்ரத் வஃபாத்; K-Tic விடுக்கும் இரங்கல் அறிக்கை!


பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...
நாடறிந்த மார்க்க அறிஞரும், அற்புதமான சொல்லாற்றல் மிக்கவரும், மார்க்கப் பணிகளில் மிகப் பெரும் சேவையாற்றியவரும் காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் முதல்வர்  மவ்லானா மவ்லவீ அல்ஹாஜ் எஸ்.எஸ். கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ ஹழ்ரத்  அவர்கள், வியாழன் (20.12.2012) அதிகாலை 2.30 மணியளவில்  சென்னையில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ஹழ்ரத் அவர்களுக்கு வயது 72. நெல்லை மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த இவர்கள், காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக் கல்லூரியின் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார்கள். அப்போது முதல்வராக இருந்த மர்ஹூம் மவ்லவீ  எஸ்.எம். ஸாஹிப் தம்பி ஆலிம் மறைவுக்குப் பின், அக்கல்லூரியின் முதல்வராகப் பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார்.
அன்னாரின் ஜனாஸா சென்னையிலிருந்து அவர்களின் சொந்த ஊரான கடையநல்லூருக்கு கொண்டு வரப்பட்டு, இன்று (21.12.2012 வெள்ளிக்கிழமை) காலை 09.00 மணியளவில் கடையநல்லூர் நடு அய்யாபுரம் ஜமாஅத்  பள்ளிவாசலில்  ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டுஅய்யாபுரம் ஜமாஅத்  பள்ளிவாசல் வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஹழ்ரத் அவர்களின் நல்லடக்க நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சங்கைக்குரிய உலமா பெருமக்களும், சமுதாயப் பிரமுகர்களும், ஜமாஅத்தினரும் கலந்து கொண்டனர்.
சிந்திக்க வைக்கும் சொற்பொழிவுக்கு சொந்தக்காரரான ஆலிம் பெருந்தகையான ரஹ்மானீ ஹஜ்ரத் அவர்களின் மரணச் செய்தி ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்தையும் குலுக்கி எடுக்கும் துக்கச் செய்தியாகியுள்ளது.
அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்  கொள்கை பற்றிய தெளிவான விளக்கங்களை மக்களுக்கு விளக்கியவர்கள். சன்மார்க்க விளக்கம் தருவதில் முன்மாதிரியான அறிஞராகவும், சிக்கலான மார்க்க விஷயங்களைக் கூடப் பாமரரும் புரிந்திடும் வகையில் விவரித்துக் கூறுவதில் வல்லவராகவும் திகழ்ந்தவர்கள் ரஹ்மானீ ஹஜ்ரத் அவர்கள்.
தமிழகத்தில் மீலாது விழாக்களிலும், ஷரீஅத் மாநாடுகளிலும், கல்லூரி விழாக்களிலும், ஹஜ்ரத் அவர்களின் உரை என்றால், அதனைக் கேட்கும் கூட்டம் தனியே தெரியும். இதயங்களை ஈர்க்கும் இனிய சொல்லரசாக விளங்கினார். ஹஜ்ரத் அவர்களின் சொற்பொழிவுகள் பல்லாயிரக்கணக்கில் ஒளி, ஒலிப் பேழைகளாக உலகம் முழுவதும் பரவியுள்ளன. 
மிகச்சிறந்த நாடறிந்த நாவலரும், சுன்னத்து வல் ஜமாஅத் கொள்கை கோட்பாடுகளில் மிக உறுதி மிக்கவருமான கண்ணியத்துக்குரிய   ரஹ்மானி அவர்கள் மிகவும் அற்புதமான பேச்சாற்றல் கொண்ட நல்ல ஒரு மனிதர். இஸ்லாமிய சரித்திரத்தின் கருவூலத்தை மனக்கண் முன் கொண்டு வரும் ஆற்றல் மிக்க சொல்லின் செல்வர். சொல்லேர் உழவர் அவர்கள். மாற்றுக் கருத்து உள்ளவர்களும் அவர்களின் அற்புதமான பேச்சை கேட்க குழுமியிருப்பார்கள். தமிழும் அரபியும் குர்ஆனும் ஹதீசும் அவர்களுக்கு கை வந்த கலை. நூற்றுக்கணக்கான மணவர்களை ஆலிம்களாக உருவாக்கிய மகத்தான மனிதர். கனீரெனும் குரலில் ஹதீஸ்களை சொல்லும் பேச்சாற்றல் மிக்க பெருந்தகை.

தமிழக மக்களின் இறைநம்பிக்கை(ஈமான்)யை தகர்த்தெறிந்த நவீன குழப்பவாதிகளின் முகத்திரைகளை கிழித்தெறிந்தார்கள். சத்திய மார்க்கத்தை தெளிவான முறையில் எடுத்துரைத்தார்கள்.ஃபிக்ஹ் சட்டங்கள் குறித்து எழுந்த முறையற்ற விமர்சனங்களுக்கும், குழப்பவாதிகளால் தவறாக சித்தரிக்கப்பட்ட சட்டங்களுக்கும் ஆதாதங்களுடன் பதில் கொடுத்து குழப்பவாதிகளின் வாய்களை அடைத்தார்கள்.

யாருக்கும் பயப்படாமல், எந்தவித மிரட்டலுக்கும் அஞ்சிவிடாமல் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு மார்க்கப் பணியாற்றினார்கள். உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசும் பழக்கமில்லாத மார்க்க மேதை. எதையும் இதயத்தைத் தொடும்படியாக எடுத்துக் கூறும் இயல்புள்ள அறிஞர். சிந்தனையாளர்களுக்கு தூண்டுகோல், செயல் வீரர்களுக்கு துணைவர். மொத்தத்தில் சமுதாய ஒற்றுமைக்கும், சன்மார்க்க எழுச்சிக்கும் பாடுபட்டு மறைந்துள்ள பண்பட்ட தாயி, அவர்களின் மறைவு, உண்மையில் அறிவுலகத்திற்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பாகும்.
அறிஞரின் மறைவு அகிலத்தின் மறைவு என்னும் பழமொழிதான் இங்கே நினைவுக்கு வருகிறது.
எல்லாம் வல்ல அல்லாஹ் ஹழ்ரத் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டுஅப்பழுக்கற்ற மார்க்கச் சேவைகளை அங்கீகரித்துகுற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன்அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும்உற்றார்உறவினர்மாணவர்கள்ஆலிம் பெருமக்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) பிரார்த்தனை செய்கிறது. ஆமீன்!
உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் அன்னாரின் ஹக்கில் துஆ செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

குவைத்தில்  இன்று (வெள்ளிக்கிழமை 21.12.2012) K-Tic தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசலில்  ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு  ஹழ்ரத் அவர்களின் சேவைகள் நினைவு கூறப்பட்டு, மறுமை வாழ்வின் வெற்றிக்காக சிறப்பு துஆ  செய்யப்பட்டது.

நன்றி! வஸ்ஸலாம்.

அன்புடன்....
மவ்லவீ அல்ஹாஜ் எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ – தலைவர்
மவ்லவீ அஃப்ழலுல் உலமா அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ., - பொதுச் செயலாளர்
மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள். 

புதன், 5 டிசம்பர், 2012

இணைய குற்றங்கள் (Cyber Crimes):

   1) சைபர் க்ரைம் - ஒரு பார்வை
       இணையம் ஒரு விசித்திரம். ஒரு பக்கம் எண்ணற்ற வசதிகள் மூலம் இனிய முகங்களை காட்டி நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன. இன்னொரு பக்கம் ஹேக்கிங்ஸ்பாம், ஆபாசம் போன்ற வக்கிர முகங்களை காட்டி நம்மை துன்பத்தில் ஆழ்த்துகின்றன. சைபர் க்ரைம் எனப்படும் இணைய குற்றங்களை பற்றியும்பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றியும் சிறிதளவு இங்கு பார்ப்போம்.

2) இணைய குற்றங்கள் (Cyber Crimes):
       1. ஸ்பாம்(Spam) எனப்படும் தேவையில்லாத மெயில்கள்.இவற்றை பற்றி ஈமெயில் ஐடியை பாதுகாக்க சில வழிகள் என்ற பதிவில் பார்த்தோம்.

2. கிரெடிட் கார்ட்டெபிட் கார்ட் மூலம் இணையத்தில் பணபரிமாற்றங்கள் நடக்கும்பொழுது
கடவுச்சொல் உள்பட கணக்கு விவரங்களை திருடுவது.

3. பாலியல் ரீதியான தொல்லைகள் . சாட்டிங்கில் ஆரம்பித்து டேட்டிங்கில் முடிகிறது இன்றைக்கு சில இணைய நட்புகள். அதுமட்டுமின்றி காதலன் என்ற பெயரில் வக்கிர வெறிபிடித்த கயவர்கள் பெண்களை ஆபாசமாக படம்பிடித்து அதனை இணையத்தில் வெளியிடுகிறார்கள். மேலும் அதனைக் கொண்டே பெண்களை மிரட்டி வருகிறார்கள்.


4. போதை பொருள் விற்பனை. தடைசெய்யப்பட்ட போதை பொருள்களை விற்பனை செய்வதற்கும் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

5. இணையதளங்களை ஹேக் செய்வது. ஹேக்கர்களிடமிருந்து அமெரிக்காவின் சி.ஐ.ஏ-வும் தப்பவில்லை
மின்னணு சாதனங்களில் ஜாம்பவனாக திகழும் சோனி(Sony)யும் தப்பவில்லை. சமீப காலமாக பல தளங்கள் ஹேக் செய்யப்படுகின்றது.

6. இருபது வயதுக்குட்பட்டவர்களுக்கு அல்லது இருபது வயதுக்குட்பட்டவர்களின் ஆபாச புகைப்படங்கள்படங்கள் இன்னும் சிலவற்றை இணையத்தில் பதிவது. [ஒன்றுமட்டும் புரியவில்லை. அது போன்ற ஆபாச தளங்களுக்கு சென்றால் கேள்வி கேட்கும். நீங்கள் இருபது வயதுக்குட்பட்டவரா? இல்லையாஎன்று. சிறுவர்களும் "ஆம்" என்பதை க்ளிக் செய்தால் எளிதாக அந்த தளங்களை பார்க்கலாம். இது எப்படி இருக்கிறது என்றால்சிகரெட் பாக்கெட்டில் மண்டை ஓடு படத்தை போடுவது போல தான். ஆபாச தளங்களை முழுமையாக தடை செய்வதே இதற்கு சரியான தீர்வாகும்.]


7. இவற்றைவிட கொடியது
குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்கள். மனித உருவில் பல மிருகங்களும் நம்முடன் வாழத்தான் செய்கின்றன. இவர்கள் சிறுவர், சிறுமிகள் உரையாடும் அரட்டை அறைகளுக்கு(Chatting) சென்று தங்களை குழந்தைகளாகவே அறிமுகம் செய்கின்றனர். பிறகு அவர்களின் புகைப்படங்கள், வீட்டு முகவரிபள்ளி முகவரி என தகவல்களை பகிர்கின்றனர். இது போன்ற கேடு கெட்டவர்கள் ஒரு அமைப்பாகவே செயல்படுகின்றனர். தங்களுக்குள் குழந்தைகளின் ஆபாச புகைப்படங்களையும்தகவல்களையும் பகிர்ந்துக் கொள்கின்றனர். 

3. பாதுகாப்பு வழிகள்:
    1. எந்த நிலையிலும் முகம் தெரியாத நபர்களிடம் உங்கள் தொலைபேசி எண்வீட்டு முகவரிபள்ளி முகவரி போன்றவற்றை பகிர வேண்டாம்.

2. ஃபேஸ்புக் போன்ற சமூக தளங்களில் அறிமுகம் அல்லாதவர்களை நண்பர்களாக சேர்க்க வேண்டாம்.


3. குழந்தைகள் தனி அறையில் இணையத்தில் உலவுவதை அனுமதிக்காதீர்கள். குழந்தைகள் பயன்படுத்தும் கணினிகளை பொதுவான இடத்தில் வைப்பது நலம்.

4. இணையம் பற்றியும் பாதுகாப்பு வழிகள் பற்றியும் உங்கள் குழந்தைகளிடம் மனம் விட்டு பேசுங்கள். கணினி பற்றி அவர்களுக்கு என்ன தெரியும்
என்பதை கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள். அவர்களுடன் இணையத்தில் சிறிது நேரம் செலவிடுங்கள். அதிகமான குழந்தைகள் வழிமாறி செல்வதற்கு சரியான அரவணைப்பு இல்லாதே காரணம் என நான் கருதுகிறேன்.

5. உங்கள் குழந்தைகள் பார்வையிடும் வலைத்தளங்களை கண்காணியுங்கள். நீங்கள் செல்லும் போது குழந்தைகள்அவர்கள் பார்த்துக் கொண்டிருந்த வலைத்தளத்தை மூடினால்
உடனே கவனிக்கவும்.

6. அறிமுகம் இல்லாத நபர்கள் உங்களை நேரில் சந்திக்க அழைத்தால் மறுத்துவிடுங்கள். 


7. நீங்கள் மற்றவர்களுடன் அரட்டை அடிப்பதை அவர்கள் பதிவு செய்யக் கூடும் என்பதை மறவாதீர்கள்.

8. அறிமுகம் இல்லாதவர்களுடன் முகம் பார்த்து அரட்டை அடிக்கும் வீடியோ சாட்டிங்கை தவிர்த்துக் கொள்ளுங்கள். அதுவும் பதிவு செய்யப்பட்டு
, உங்களுக்கு தெரியாமலே இணையத்தில் பரப்பப்படலாம்.

9. இணையத்தில் உங்களை பற்றிய முழு விவரங்களையும் பகிர வேண்டாம். முக்கியமாக ஃபேஸ்புக்கில்.


10. குழந்தைகள்
பெண்கள் புகைப்படங்களை இணையத்தில் பகிர்வதை தவிர்க்கவும். தற்போது உள்ள தொழில்நுட்பங்கள் மூலம் அந்த புகைப்படங்களை ஆபாசமாக மாற்றலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

11. உங்கள் password-
ஐ பெற்றோர்களை தவிர வேறு யாரிடமும் தெரிவிக்க வேண்டாம்.

12. பணபரிமாற்றங்கள் செய்யும் பொழுது அந்த பக்கத்தின் முகவரியை பாருங்கள். http::// என இருந்தால் உங்கள் கார்ட் விவரங்களை கொடுக்காதீர்கள். https:// என்று இருந்தால் மட்டுமே பணப்பரிமாற்றம் செய்யுங்கள். https:://
 என்பது பாதுகாப்பான வழியாகும்.

13. காதலன் என்றாலும் உங்களை படம்பிடிப்பதை அனுமதிக்காதீர்கள்.


பிரச்சனை பெரிதாக ஆனால் ஃசைபர் க்ரைமில் புகார் செய்யலாம். புகார் செய்யும் முன் வக்கீல்களிடம் ஆலோசனை பெறவும்.

சைபர் க்ரைமில் ஏற்றுக்கொள்ளப்படும் புகார்கள்:
        இண்டர்நெட் கடவுச்சொல் திருட்டு

1. அச்சுறுத்தும் மின்னஞ்சல்கள் 


2. இணைய பின்தொடர்தல் (
Cyber Stalking) [பாலியல் ரீதியிலான தொல்லைகள்வேறொருவர் உங்களை போல இணையத்தில் உலவுவதுமிரட்டல்கள் ஆகியவைகளும் அடங்கும்].

3. குழந்தைகள் வன்கொடுமை / ஆபாச தளங்கள் 


4. கடன் அட்டை எண் திருட்டு

5. வலைத்தள ஹேக்கிங்
6. தமிழ்நாட்டில் புகார் கொடுக்க:

சென்னை தவிர பிற மாவட்டங்கள்:

Tmt.Sonal V.Misra, IPS,
SCB, Cyber Cell
SIDCO Electronics Complex, 
Block No. 3, First Floor,
Guindy Industrial Estate, 
Chennai -32

மின்னஞ்சல் முகவரி: spcybercbcid.tnpol(at)nic.in


சென்னை:

Tr.S.Aravind,
DSP, CBCID, Cyber Crime Cell
SIDCO Electronics Complex, 
Block No. 3, First Floor,
Guindy Industrial Estate, 
Chennai -32

தொலை பேசி எண்: 044-22502512
மின்னஞ்சல் முகவரி: cbcyber (at) nic.in

கவனிக்க: இந்த பதிவை எழுதுவதற்கு என்னை தூண்டியதே 3
,6,7 ஆகிய குற்றங்கள் தான். அவைகள் என்னை அதிகம் கவலைப்பட வைத்தது. நாளைய தலைமுறையினர் வழிமாறி செல்லக்கூடாது என்பதே எனது ஆசை.

நன்றி: இந்த பதிவு டெர்ரர் கும்மி விருதுகள் 2011-ல் விழிப்புணர்வு பகுதியில் இரண்டாம் பரிசு பெற்றுள்ளது. டெர்ரர் கும்மி நண்பர்களுக்கும்தேர்ந்தெடுத்த நடுவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி! 


(எனப்பகிரும் இக்கட்டுரை ஆசிரியருக்கு பதிவுத்தடாகம் நன்றியை சொல்லிக்கொள்ளுகிறது, பெயர் தெரியாததனால் ஆசிரியர் பெயர் குறிப்பிடப்படவில்லை)