சனி, 26 மே, 2012

சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்

பத்து ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளவர்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் கோவையில் நடைபெற்ற இ.யூ. முஸ்லிம் லீக் பொதுக் கூட்டத்தில் தமிழக அரசுக்கு எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. வேண்டுகோள் 


பத்து ஆண்டுக்கும் மேலாக சிறையில் வாடுபவர் களை தமிழக அரசு கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று கோவையில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்கூட்டத்தில் காயிதெ மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பா ளர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., வேண்டுகோள் விடுத்தார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோவை மாநகர் மற்றும் புறநகர் மாவட்டத்தின் சார்பாக கோவை சாரமேடு ரோட்டில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகர் மாவட்டத் தலைவர் பி.ஏ. அப்துல் ரஹீம் தலைமையிலும், எஸ்.எம். காஸிம், பி அப்துல் கபூர், எம்.ஏ. முஹம்மது சிபிலி, ஏ. அப்துல் ரஹ்மான், டி ஷாஜஹான், எம்.எஸ். முஹம்மது யாகூப், வி.எம். முஹம்மது காசிம், வி.எ. முஹம்மது குட்டி, பி.கே. அப்துல் சலாம், வி.கே. ரஹமத்துல்லா, பி.எஸ்.எம். உசேன், எம்.எஸ். முஹம்மது ரபீக், கியூ அக்பர் அலி, ஏ.கே. சாகுல் ஹமீது, ஐ. அப்துல் காதர், கே.எச். யஹ்யா, ஏ.வி.இப்ரா ஹீம், ஏ.எம். அப்துல் வாப், த.மு. ஜலீல், வி.ஏ. சஹாப்தீன், பி.ஐ. சித்தீக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புறநகர் மாவட்டச் செயலாளர் ஏ.எம். இப்ராஹிம் வரவேற்புரையாற்றினார்.

எம். அப்துல் ரஹ்மான் எம்.பி.

பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளவர் களை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோவையில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்கூட்டத்தில் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார். கோவை மாநகரத்திற்கு வரும்போதெல்லாம் எனக்குள் என்னை அறியாமலேயே ஒரு சோகம் நிலைக்கு தள்ளப்படு கிறது. அதற்கு காரணம், ஏதோ ஒரு காலத்தில் இளைஞர்களாக இருந்தவர்கள் யாருடைய வழிகாட்டுதலின்பேரிலோ அல்லது சமுதாய உணர்வு என்ற அடிப்படையிலோ ஏதோ சமூக பணி செய்வதாக கருத்தில் கொண்டோ அல்லது அறியாமை யின் காரணமாகவே பல இளை ஞர்கள், இளமை காலங்களில் தட்டுத்தடுமாறி தவறு செய்தார் களோ இல்லையோ ஆனால் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றங்களால் தீர்ப்புகள் வழங்கி சிறையில் அடைக்கப்பட்டு சிறைக் கைதி களாக 13 ஆண்டுக ளுக்கு மேல் சிறையில் உள்ளனர். இதில் பலர் விடுதலை செய்யப் பட வேண்டும் என்ற கோரிக் கையினை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முந்தைய அரசாங்கத்திடம் வைக்கப்படு வந்ததன் விளைவாக பலர் விடுதலை செய்யப்பட்டும் உள்ளனர். 

விடுதலையாகாமல் சிறையில் உள்ள மற்றவர்களை யும் விடுவிக்க வேண்டி, அப் போதைய முதல்வர் கலைஞரி டம் தாம்பரத்தில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டில் கோரிக்கை வைக்கப் பட்டு, அதன்மேல் நடவடிக்கை தொடரப்பட்ட போது சிலரின் தவறான தகவல்களால் அந்த நடவடிக்கையில் முடக்கம் ஏற்பட்டு கிடப்பில் போடப்பட்டது வருத்தமளிக்கின்ற செயலாயி னும், இதனை விரிவுபடுத்திப் பேசும் தருணம் இது அல்ல என்பதனை வருத்தத்துடன் தெரிவிக்கின்றேன். 

இதில் மிகவும் வேதனைக் குரிய விஷயம், கோவை சிறையில் வாடும் அபுதாஹிர் என்ற இளைஞன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசியர் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் உடல்நலம் பாதிக்கப்பட்டு மிக வேதனைப் பட்டு வருவதாகவும், தனக்கு சிகிச்சை அளிக்க தகுந்த நடவடிக்கை மேற் கொள்ள வேண்டுமென்றும் குறிப்பிட்டிருந்தார்.

அந்த நபர் தொடர்பான விபரங்களை அறிய தலைவர் விரும்பினார். அப்பொழுது 17 வயது நிரம்பிய இளைஞராக சிறைக்குச் சென்ற இவர் இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளார் என்பதை அறிந்து, இவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டி மத்திய, மாநில அரசிடம் கோரிக்கை வைத்து (மூன்று முறை) மூன்று மாதங் கள் பரோலில் வெளியில் வந்து அந்த இளைஞர் சிகிச்சை பெற, தான் சொந்த பொறுப்பேற்றுக் கொண்டார். அதன்பின் நானும் பாராளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்று தொடர்ந்து மூன்று மாதங்கள் சிகிச்சை பெறுவதற்கு பரோலில் வருவ தற்கு அனுமதி பெற்றுக் கொடுத்தேன்.

அதன்பேரில் அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக் கப்பட்டாலும் இரண்டு சிறுநீர கங்களும் பாதிக்கப்பட்டு தற் போது இரு கண்களும் பாதிக் கப்பட்டு பார்வையும் இழந்த நிலையில் உள்ளார். இவர் மேலும் தொடர் சிகிச்சை பெறுவதற்காக பரோலில் விடுதலை செய்ய வேண்டு மென்று தற்போதைய அரசிடம் வைத்து வரும் கோரிக்கை யினை ஏற்கின்ற மனநிலையில் அரசு இல்லை. எனவே, தமிழக அரசிற்கு இக்கூட்டத்தின் வாயிலாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக வேண்டு கோள் விடுக்கின்றேன். 

நோயாளியாக அவதிப்படும் அபுதாஹிர் என்ற இளைஞன் சிகிச்சை பெறுவதற்கு பரோலில் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், தண்டனை விதிக்கப்பட்டு 10 ஆண்டுக ளுக்கு மேல் சிறையில் உள்ள முஸ்லிம்கள் மட்டுமின்றி அனைத்து சமூகத்தைச் சார்ந்த சிறைவாசிகளையும் அவர்களது நன்னடைத்தையைக் கணக் கில் கொண்டும் அவர் மீது கருணை அடிப்படையில் தமிழக அரசால் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்கிற வேண்டுகோளை இந்த கூட்டத் தின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், தமிழக அரசுக்கு தெரிவிப்பது, கோவை சிறையில் இருந்த பலரை பிற ஊர்களில் உள்ள சிறைக்கு மாற்றப்பட்டதன் விளைவாக அவர்களது குடும்பத்தார் பிரிவுத்துயர் மட்டுமல்லாமல் அவர்களை எளிதில் காணவும் இயலாமல் பெருந்துயரத்திற்கு ளாகி வருகின்றனர். இந் நிலை சிறைத் துறை அதிகாரிகளால் ஏற்படுவதாக உள்ளது. எனவே, இந்த இன்னல்களையும், இடையூறு களையும் முற்றிலும் விலக்கி திரும்பவும் அவர்களை கோவை சிறைக்கே மாற்றப்பட வேண்டும். 

இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் காவல் துறை தலைவர், பிற அதிகாரிகளையும் சென்னைக்கு சென்றதும் சந் திக்க உள்ளேன் என்ற செய்தியை இக்கூட்டத்தின் வாயிலாக தெரிவித்துக் கொள்வதோடு, இன்று சமுதாய நிலையில் இடஒதுக்கீடு சம்பந் தப்பட்ட விபரங்களை பாராளு மன்ற உறுப்பினராக இருக் கக்கூடிய காரணத்தினால் நாடாளுமன்றத்தில் அங்கு என்ன பேச வேண்டுமோ அதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். 

ஒருமுறை பாராளுமன்றத் தில் சிவசேனாவைச் சேர்ந்த சந்திரகாந்த் ஜேரே, உலமாக்க ளுக்கு எதிராகவும், உண்மைக்கு புறம்பான கருத் துக்களை எடுத்துரைத்தார். அதனை எதிர்ப்பதற்கு பாராளு மன்றத்தில் இருந்த முஸ்லிம் எம்.பி.க்கள் முன்வரவில்லை. எதிர்த்து சபாநாயகரிடம் அவர் சொல்வது அனைத்து உண்மைக்கு புறம்பான தகவல்களை எடுத்து பேசி வருகிறார். எனவே அவர் பேசுவதை அனுமதிக்க கூடாது என்று வாதிட்டேன். 

இது சம்பந்தப்பட்ட செய்தி தகவல்கள் வெளிவந்துள்ளது . அதேபோன்று பாபரிமஸ்ஜித் இடிப்பு முஸ்லிம்கள் அனைவ ருக்கும் வேதனை தரக்கூடிய விஷயம்தான். 

டிசம்பர் 6-ம் தினத்தை முஸ்லிம் லீக் சமூக நல்லிணக்க தினமாக அனுசரித்து வருகி றோம். பெரும் பான்மை சமுதா யத் தினர் பாபரி மஸ்ஜித் இடித்ததை ஏற்றுக் கொள்ள வில்லை. ஆனால், அவர்களை எதிர்க்கின்ற தோரணையிலும், அவர்களது மனம் புண்படுகின்ற வகை யிலும் போராட்டம், ஆர்ப் பாட்டம் என்ற பெயரில் சில அமைப்புகள் நடந்து கொள்வது வேதனை தருவதாக அமைகி றது. 

இந்த நாட்டில் இருக்கக் கூடிய சிறுபான்மையினரும், பெரும்பான்மை சமூகத்தினரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் செயல்பாடு களை ஏற்றுக் கொள்கின்றனர். அதுமட்டுமல் லாமல் முஸ்லிம் லீகை சேர்ந்தவர் கள் அரசு அதிகாரிகளையோ அல்லது காவல் துறை அதிகாரி களையோ சந்திக்க சென்றால் அவர்களுக்குரிய மரியாதை யும், கண்ணியமும் வழங்கப்படு கிறது.

இன்று சமுதாய உணர்வு மிக்க நிலையில் சமூக சேவை ஆற்ற வேண்டும் என்ற எண் ணத்தில் பல இளைஞர்கள் சில இயக்கங்களில் தங்களை இணைத்துக் கொண்டு செயல் படுகின்றனர். அதுமட்டு மின்றி இதன் மூலம் போராட்டங்க ளும், ஆர்ப்பாட்டங்களும் பல நடத் தப்பட்டு வருகின்றனர். இவற் றால் சமூகத்திற்கு எவ்வித பயனுமில்லை என்பதை உணர்ந்த வர்களாக பலர் இன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மகத்துவத்தை அறிந்து நம்மோடு இணைந்து வருகின் றனர்.

இவ்வாறு எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. பேசினார்.

சனி, 19 மே, 2012

சமத்துவம்��- அங்கும் இங்கும்

``ஏழுமலையான் கோயிலில் பணக்காரர்களுக்கும், நடிகை, நடிகர்களுக்கும் முக்கியத்துவம்��- இந்தத் தலைப்பில் `தினகரன் (17-5-2012) சென்னை பதிப்பு ஒரு செய்தி தந்திருக்கிறது. ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியை அவர் தங்கியிருந்த விடுதிக்குச் சென்று திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரதான அர்ச்சகர் ரமண தீட்சிதர் நேரில் சந்தித்து பிரசாதம் வழங்கி ஆசீர்வாதம் செய் தாராம் என்றும், இதனால் பக்தர்கள் அதிர்ச்சிய டைந்துள்ளனர் என்றும், சாதாரண ஏழை மக்களை தேவஸ்தானம் கண்டு கொள் வதில்லை; ஆனால், தொழில் அதிபர்களுக்கும், நடிகை நடிகர் களுக்கும் தாம் தேவஸ்தானம் மரியாதை கொடுக்கிறது என்றும் குற்றம் சாட்டினர் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டிருக்கிறது. இது பற்றிய வாதப் பிரதிவாதங்கள் பற்றியும் அச் செய்தியில் கூறப்பட்டிருக்கிறது.

``இறைவன் எல்லோருக்கும் பொதுவானவன்; எல்லாரும் இறைவன் சந்நிதானத்தில் சமமானவர்களே; ஏழை பணக்காரன் என்று வித்தியாசப் படுத்துவது இல்லாத ஒரே இடம் இறைவனின் சந்திதானம்தான்�� என்று எல்லா மதங்களிலும் கூறப் பட்டுள்ளது.

இதற்கு மாற்றமான ஒரு புதிய நடைமுறையை திருப்பதி தேவஸ்தானத்தில் பார்த்தவுடன் பக்தர்கள் கொதித்துக் குமுறியிருக்கிறார்கள். இந்தச் செய்தியைப் படித்த போது இரண்டு மூன்று தினங்களுக்கு முன்பு தஞ்சாவூர் மாவட்டத்தில் சுற்றுப் பயணம் செய்தபோது முஸ்லிம் லீகர்களின் மத்தியில் நடைபெற்ற ஓர் உரையாடல்தான் பளீரென்று நினைவுக்கு வந்தது.

மாவட்டத் தலைவர் பி.எஸ். ஹமீது ஹாஜியார், மாவட்டச் செயலாளர் லயன் பஷீர் அஹமது, வழுத்தூர் நகர செயலாளர் கமர்தீன், மாநில துணைத் தலைவர் அதிரை எஸ்.எஸ்.பி. நஸீருத்தீன், எம்.எஸ்.எஃப் மாநில துணைச் செயலாளர் ஷாநவாஸ் ஆகியோருடன் நானும் பயணம் செய்யும் வாய்ப்பு வந்தது.

பயணத்தின் போது சமுதாயம் பற்றியும், மார்க்கம் பற்றியும், அந்தக் காலத்துப் பெரியவர்கள் எப்படி கை கால் முகம் எலலாவற்றையும் கசக்கிப் பிழிந்து `ஒலு� செய்யும் போது செய்தார்கள் என்பது பற்றியும், தொழுகைக்கு `ஒலு� செய்வதிலேயே `அக்குபஞ்சர்�, `அக்குபிரஷர்� வைத்திய முறைகள் எல்லாம் உள்ளன என்பது பற்றியும் நீண்டு கொண்டிருந்தது.

அப் பேச்சுக்கிடையில் தி.மு.க.வின் முந்திய காலத்துப் பெரியவர் மன்னை நாராயணசாமி அவர்கள் பற்றிய பேச்சு வந்தது. அதிரை நஸீருத்தீன் சொன்னார்: மன்னையார் இஸ்லாம் பற்றி நிரம்பவும் தெரிந்து வைத்திருந்தார். காயிதெ ஆஜம் ஜின்னா சாஹிபை முதன் முதலில் தமிழகத்துக்கு அழைத்து வந்தவர் பெரியார்தான் என்று மன்னை ஒரு முறை கூறியுள்ளார். அதோடு, தொழுகை பற்றிய அற்புதமான செய்தி ஒன்றையும் அவர் கூறினார். `தி இல்லஸ்ட்ரேட்டு வீக்லி ஆஃப் இண்டியா� ஏட்டில் வந்த படத்தை என்னிடம் காட்டி, இப்படிப்பட்ட இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றும் நீங்கள் உண்மையில் கொடுத்து வைத்தவர்கள் என்று கூறுவார்.

திருமதி இந்திரா அம்மையார் பிரதமராக இருந்த போது, சவூதி அரேபிய மன்னர் காலிது டெல்லி வந்தார். பிரதமருடன் பேச்சுவார்த்தை நடந்து முடிந்து -அன்று வெள்ளிக்கிழமை - டெல்லி ஜும்ஆ மஸ்ஜிதுக்கு விரைந்து சென்றார். மன்னர் பள்ளிவாசலை நெருங்கிய போது ஜும்ஆ தொழுகை ஆரம்பமாகி விட்டது. காரில் இருந்து இறங்கிய மன்னர் காலிது, வேகமாகச் சென்று தொழுகையில் சேர்ந்தார். அவர் நின்று தொழுவதற்குக் கிடைத்த இடம் எது தெரியுமா? ஜும்ஆ மஸ்ஜிது மேலே ஏறுகின்ற படிக்கட்டுகள்தாம். அந்தப் படிக்கட்டுகளில் தெருவில் செருப்பு தைக்கும் முஸ்லிம் தொழிலாளிகள் கடைசி நேரத்தில் தொழுகையில் சேர்ந்துள்ளனர். அவர்கள் நின்று தொழுத இடத்தில் மன்னர் காலிதும் நின்று தொழுதார். அவர் ஸஜ்தா செய்தபோது, அந்த அரபக மன்னரின் தலை, முன்வரிசையில் அவருக்கு முன்னே நின்று தொழுத செருப்புத் தொழிலாளி ஒருவரின் இரண்டு கால் பாதங்களுக்கு இடையில் இருந்தது.

- இதைக் காட்டும் தத்ருபமான படத்தை அந்த `வீக்லி� ஏடு பிரசுரித்திருந்தது. அதை பாதுகாப்பாக வைத்துக் கொண்டிருந்த மன்னை நாராயணசாமி அவர்கள் வருவோர் போவோர் எல்லாரிடமும் அந்த படத்தைக் காட்டி, இஸ்லாமிய மார்க்கத்தின் பெருமையை - சிறப்பை - மகத்துவத்தைப் பற்றியே பல காலம் பேசி வந்தார். நானே பல முறை அவர் சொல்லக் கேட்டிருக்கிறேன் என்று அதிரை நஸீருத்தீன் உணர்ச்சி மேலிட்டவாறு நினைவு கூர்ந்தார்.

திருப்பதி கோயிலில் நடந்த சம்பவத்தை தினகரனில் படித்தபோது, மன்னை நாராயணசாமி அவர்கள் கூறியதுதான் நினைவுக்கு வந்தது; முஸ்லிம்கள் எவ்வளவு கொடுத்து வைத்தவர்களாக இருக்கிறார்கள் என்னும் சிந்தனை மனதுக்கு பேரின்பம் தந்தது! -கே.எம்.கே.

ஓராண்டு அதிமுக ஆட்சி

கோவில்களில் நீதி போதனை ; 6ம் வகுப்பிலேயே சாதிச்சான்றிதழ் வரவேற்புக்குரியவை முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு உயர்த்தப்படாதது வருத்தத்திற்குரியது அ.இ.அ.தி.மு.க ஓராண்டு ஆட்சி பற்றி தலைவர் பேராசிரியர் கருத்து 


கோவில்களில் நீதிபோ தனை, 6ம் வகுப்பிலேயே சாதி சான்றிதழ் என்ற அறிவிப்புக்க ளெல்லாம் வரவேற்பிற்குரியவை. முஸ்லிம் களுக்கு தனி இட ஒதுக்கீடு உயர்த்தி வழங்காதது வருத்தத் திற்குரியது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழக தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் கருத்து தெரிவித்தார்.

தூத்துக்குடி மாநகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் நவ்ரங் எம். சகாபுதீன் இல்ல திருமண விழாவில் பங்கேற்றக் சென்ற அவர் செய்தியாளர் களுக்கு பேட்டியளித்தார்.

ஜெயலலிதா தலைமையி லான அ.இ.அ.தி.மு.க அரசின் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்த ஆட்சி பற்றி இந்திய யூனி யன் முஸ்லிம் லீகின் மதிப்பீடு என்ன என்று அவரிடம் செய்தி யாளர்கள் கேட்டனர்.

இதற்கு பதில் அளித்த பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் கூறியதாவது.

செல்வி ஜெயலலிதா தலை மையில் அமைந்துள்ள அ.இ. அ.தி.மு.க அரசு செய்யும் அத் தனையும் தீங்கும் அல்ல, அத் தனையும் நன்மையும் அல்ல, 

ஒவ்வொரு இந்துக் கோவில் களிலும் வாரம் ஒருமுறை நீதி போதனை வகுப்புகள் நடத்தப் பட வேண்டும்; சாதி, இருப்பிட , வருமான சான்றிதழ்கள் 6ம் வகுப்பிலேயே பள்ளியில் வழங் கப்படும் என்ற திட்டங்களெல் லாம் மகிழ்ச்சியைத் தருகிறது.

இத்தகைய நீதிபோதனை வகுப்புகளால் நல்ல விளைவுகள் ஏற்படும். சாதி, வருமான சான்றி தழ்கள் பெற வருவாய் துறையில் செய்யப்படும் அலைச்சலும் சிரம மும் அறவே நீங்கும். ஆகவே வர வேற்க கடமைப் பட்டுள்ளோம்.

அதே சமயம் முந்தைய தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நல்ல திட்டங்களை யெல்லாம் முடக்குவதை ஏற்க முடியாது. பிரம்மாண்டமாக எழுப்பப்பட்டுள்ள புதிய தலை மைச்செயலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம், கோட்டை யில் இயங்கிய செம்மொழி தமிழாய்வு நூலகம் இவைகளை முடக்கி போடுவதை எப்படி வரவேற்க முடியும்? தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத்தந்து செம் மொழிக்காகவே உலகளாவிய மாநாடு நடத்தி தமிழுக்கு பெருமை சேர்த்தவர் டாக்டர் கலைஞர் எனவே தமிழ் மொழி வளர்ச்சி என்பதை கிடப்பில் போடக்கூடாது.

இந்துக்களின் புனித யாத்திரைக்கு மானியம்

இந்து யாத்தீர்கள் சீனாவிற் கும், நேபாளத்திற்கும் புனிதப் பயணம் செல்ல மானியம் வழங் கப்படும் என்று முதல்வர் ஜெயல லிதா நேற்று அறிவித்துள்ளார் இதை நாங்கள் வரவேற் கிறோம்.

இந்தியா என்பது ஆன்மீக பூமி; அதன் வெளிப்பாடே மதத் தின் வழியில்தான் உள்ளது. ஆண்டவனை அடைய ஒவ் வொரு மதமும் வெவ்வேறு நிலைப்பாடுகளை கொண்டுள் ளது. கணவன் மனைவி, தோழன், எஜமான் என்ற நிலைக ளெல்லாம் பல மதங்களில் உள்ளன. சில மதங்கள் இறை வனுக்கு நாம் அடிமைகள் என தெளிவாகக் கூறுகின்றன.

எனவே இந்த நம்பிக்கையின் அடிப்படையில் ஒவ்வொரு மதத்தவரும் இறைவழிபாட்டில் செல்வதை தங்கள் வாழ்வின் கடமையாகக் கொண்டுள்ள னர். ஏக இறைவனை வழிபடு கின்ற முஸ்லிம்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது ஹஜ் பயணம் செல்ல வேண்டு மென ஆசைப்படுகின்றனர். இப்படிச் செல்கின்றவர்களுக்கு அந்தந்த வசதிகளை செய்து கொடுப்பதை யாரும் குறை கூற முடியாது.

இந்த ஹஜ் பயணத்திற்காக இந்திய அரசு வழங்கும் விமான கட்டண சலுகையைத்தான் மானியம் என்கின்றனர். இது கூடாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அந்த தீர்ப்பை நாங்கள் ஏற்கவில்லை.

ஒரு காலத்தில் குறைவான எண்ணிக்கையில் ஹஜ் பயணம் மேற்கொண்டனர். மக்கள் தொகை பெருகி விட்ட இந்தக் காலத்தில் 45 லட்சம் பேர் வரை கூடுகின்றனர். திறந்த மைதா னம்; மேலே சூரி யன் கீழே தரை. அத்தனை லட்சம் பேரும் ஒரே இடத்தில் கூடுகின்றனர். ஹஜ் தொடர்புடைய விஷயங்கள் சில நாட்கள் நடைபெறுகின்றன.

இந்தியாவில் இருந்து ஒன்னே முக்கால் லட்சம் பேர் செல்கிறார்கள் என்றால் இந்திய பிரஜைகளுக்கான அவர் களுக்கு மருத்துவம் போக்கு வரத்து உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுப்பது அரசின் கடமை.

நாங்கள் மானியம் கேட்க வில்லை; மானியம் வாங்கி முஸ்லிம்களும் ஹஜ் பயணம் செல்ல மாட்டார்கள்! விமான கட்டண சலுகையை மானியம் என்று சொல்வதை ஏற்க முடியாது. ஹஜ் செல்ல மானியம் கூடாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்புச் சொல்கிறது. புனிதப் பயணம் செல்ல இந்துக்களுக்கு மானியம் வழங்கப்படும் என ஜெயலலிதா அறிவிக்கிறார்.

ஜெயலலிதாவின் இந்த துணிச்சலை நான் பாராட்டு கிறேன்.

வேகத்துடன் விவேகமும் வேண்டமா?

நிர்வாகத்தை கொண்டு செல்வ தில் வேகம் காட்டுகிறார் ஆனால் விவேகம் இருக்கிறதா என தெரியவில்லை. வேகத் துடன் விவேகமும் இருக்க வேண்டும் அப்போது சரியான அரசாக அது அமையம்.

தமது ஆட்சியின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு அவர் சட்டப்பேரவையில் உறை யாற்றிய போது அ.இ.அ.தி.மு.க ஆட்சியின் சாதனைகளாக வெளியிடப்பட்ட திட்டங்க ளெல்லாம் தேர்தல் காலத்தில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகள் அதைத்தான் நிறைவேற்றியுள்ள தாக சொல்லியுள்ளார்.

கல்வி வேலைவாய்ப்பில் மிகவும் பின் தங்கியுள்ள முஸ்லிம்களுக்கு கலைஞரின் தி.மு.க அரசு 3.50சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது. இதனை உயர்த்தி தர வேண்டு மென கோரிக்கை வைத்தோம். மீண்டும் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் உயர்த்தி தருவதாக கலைஞர் வாக்களித்தார்.

தேர்தல் பிரச்சார கூட்டங் களில் உறையாற்றிய ஜெயல லிதா அம்மையாரும் மீண்டும் தான் ஆட்சிக்கு வந்தால் முஸ் லிம்களுக்கான இடஒதுக்கீடு உயர்த்தி தரப்படும் என உறுதி யளித்தார். ஓராண்டு நிறைந்து விட்ட நிலையிலும் முஸ்லிம் களின் இட ஒதுக்கீடு உயர்த்தி வழங்கப்பட வில்லை என்பது வருத்த மளிக்கிறது.

இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் குறிப்பிட்டார்.

பேட்டின் போது மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், தூத்துக் குடி மாவட்ட தலைவர் பி.மீராசா, செயலாளர் எஸ்.ஜே.மஹ்மூதல் ஹஸன் மாநில தணிக்கைகுழு உறுப்பினர் இபுராஹிம் மக்கி காயல்பட்டினம் நகர தலைவர் வாவு நாசர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட, மாநகர நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

நபியவர்களின் பண்புகளும் நற்குணங்களும

வார்த்தைகளால் வருணிக்க முடியாத வகையில் அழகிய பண்புகளையும், சிறந்த குணங்களையும் 
கொண்டவர்களாக நபி (ஸல்) திகழ்கிறார்கள். மக்களுடைய உள்ளங்களின் ஆழத்தில் அவர்களது 
கண்ணியம் வேரூன்றி இருந்தது. நபியவர்களை பாதுகாக்க மக்கள் தங்களையே அர்ப்பணித்துக் 
கொண்டார்கள். இதுபோன்றதொரு மரியாதையையும் மதிப்பையும் வேறு எவரிடமும் இவ்வுலகம் 
கண்டதில்லை. அவர்களோடு வாழ்ந்தவர்கள் அவர்களை ஆழமாக நேசித்தனர். தங்களின் கழுத்துகள் 
வெட்டப்படுவதைக் கூட பொருட்படுத்த மாட்டார்கள். ஆனால், நபியவர்களின் நகத்துக்கு ஓர் இடைåறு 
ஏற்படுவதை கூட பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். சிறந்த பண்புகளும் அழகிய குணங்களும் நபி (ஸல்) 
அவர்களிடம் இருந்ததுதான் தோழர்களின் இந்த நேசத்திற்குரிய காரணமாகும். நபியவர்களின் 
குணங்களையும் பண்புகளையும் முழுமையாக நம்மால் விவரிக்க முடியாது என்ற இயலாமையை ஏற்றுக் 
கொள்வதுடன் அடுத்து வரும் பக்கங்களில் அவற்றைப் பற்றிய அறிவிப்புகளை முடிந்தளவு சுருக்கமாகக் 
கூறுகிறோம்.
================================================
பேரழகு உடையவர்
================================================
நபி (ஸல்) ஹிஜ்ரா செய்து மதீனா செல்லும் வழியில் குஜாம்ய்யா கிளையைச் சார்ந்த 'உம்மு மஅபத்' 
என்ற பெண்ணின் கூடாரத்தைக் கடந்துச் சென்றார்கள். இந்நிகழ்ச்சியைப் பற்றி ஹிஜ்ரா பாடத்தில் முன்னர் 
கூறியிருக்கிறோம். வீடு திரும்பிய தனது கணவர் விசாரித்த போது நபியவர்களைப் பற்றி உம்மு மஅபத் 
விவரித்தது யாதெனில்:
பிரகாசமான முகம் உடையவர் அழகிய குணம் பெற்றவர் வயிறோ தலையோ பெருத்தவர் அல்லர் தலை 
சிறுத்தவரும் அல்லர் கவர்ச்சிமிக்கவர் பேரழகு உடையவர் கருத்த புருவம் கொண்டவர் நீண்ட இமைமுடி 
பெற்றவர் கம்பீரக் குரல் வளம் கொண்டவர் உயர்ந்த கழுத்துள்ளவர் கருவிழி கொண்டவர் மை தீட்டியது 
போன்ற கண்ணுள்ளவர் வில் புருவம் கொண்டவர் கூட்டுப் புருவம் கொண்டவர் கருண்ட தலைமுடி 
கொண்டவர் அவரது அமைதி கம்பீரத்தைத் தரும் ஒளி இலங்கும் பேச்சுடையவர் தூரமாகப் பார்த்தால் 
அழகும் வனப்பும் பெற்றவராய்த் திகழ்வார் அருகில் சென்றால் பழக இனிமையானவர் நற்பண்பாளர் நாவலர் 
தெளிந்த நடையுடைய பேச்சாளர் நீளமாகவோ சுருக்கமாகவோ இல்லாமல் நடுத்தரமான சொல்லாற்றல் 
பெற்றவர் அவருடைய மொழிதல் மணிமாலை உதிர்வது போல் இருக்கும் நடுத்தர உயரமுடையவர் 
பார்வைக்கு நெட்டையாகவோ குட்டையாகவோ இருக்க மாட்டார் இரண்டு கிளைகளுக்கு இடையிலுள்ள ஒரு 
கிளையைப் போன்றவர் மூவர் குழுவில் பளிச்செனத் தெபவர் சிறந்த கண்ணியம் வாய்ந்தவர் நண்பர்கள் புடை 
சூழ இருப்பவர் அவர் உரைத்தால் யாவரும் செவிமடுக்கின்றனர் அவர் ஆணையிட்டால் நிறைவேற்ற 
விரைகின்றனர் பணிவிடைக்குரியவர் மக்கள் கூட்டம் பெற்றவர் கடுகடுப்பானவருமல்லர் பிறரைக் குறைவாக 
மதிப்பவரும் அல்லர். (ஜாதுல் மஆது)

அலீ இப்னு அபீதாலிப் (ரழி) நபி (ஸல்) அவர்களை வருணித்துக் கூறுகிறார்கள்:
நபி (ஸல்) மிக நெட்டையோ மிகக் குட்டையோ இல்லை கூட்டத்தில் பார்ப்பதற்கு நடுத்தரமானவர் 
அடர்த்தியான சுருட்டை முடி உடையவருமல்லர் கோரைமுடி கொண்டவருமல்லர் சுருட்டை, கோரை 
இரண்டிற்கும் நடுத்தரமான முடி கொண்டவர் பெருத்த உடம்பில்லை முழுதும் வட்ட வடிவ முகமுமல்ல 
நேரான கத்தி (ஒடுக்கமான) முகமுமல்ல சிவந்த வெண்மை நிறமானவர் கருவிழி உடையவர் நீண்ட இமை 
முடி பெற்றவர் புஜமும் மூட்டு எலும்புகளும் தடிப்பானவர் நெஞ்சிலிருந்து தொப்புள் வரை கொடி போன்ற முடி 
உள்ளவர்கள் உடம்பில் முடி இருக்காது உள்ளங்காலும் கையும் தடித்தவர்கள் அவர்கள் நடந்தால் 
பள்ளத்தில் நடப்பது போன்று பிடிப்போடு நடப்பார்கள் திரும்பிப் பார்த்தால் முழுமையாகத் திரும்பிப் 
பார்ப்பார்கள் இரண்டு புஜங்களுக்கு இடையில் நபித்துவ முத்திரை இருக்கும் தூதர்களில் இறுதியானவர் 
மக்களில் மிக அதிகம் வழங்கும் கை உள்ளவர் துணிவுடைய உள்ளம் கொண்டவர் மக்களில் மிக அதிகம் 
உண்மை பேசுபவர் மக்களில் பொறுப்புகளை மிக அதிகம் நிறைவேற்றுபவர் மிக மிருதுவானவர் பழக மிகக் 
கண்ணியமிக்கவர் திடீரெனப் பார்த்தால் அச்சம் தரும் வடிவம் அறிமுகமானவர் அவரை விரும்புவர் அவர்களை 
யார் வருணித்தாலும் 'அவர்களுக்கு முன்னும் அவர்களுக்கு பின்னும் அவர்களைப் போன்று யாரையும் 
பார்த்ததில்லை' என்றே கூறுவர். (இப்னு ஹிஷாம்)

அலீ (ரழி) கூறுவதாக மற்றொரு அறிவிப்பில் வருகிறது: நபி (ஸல்) கனத்த தலையுள்ளவர் மொத்தமான 
மூட்டுகளைக் கொண்டவர் நெஞ்சிலிருந்து தொப்புள் வரை கோடு போன்ற முடிகளைக் கொண்டவர் 
நடந்தால் பள்ளத்தில் நடப்பது போல் நடப்பார். (ஜாமிவுத் திர்மிதி)

ஜாபிர் இப்னு சமுரா (ரழி) அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அகலமான வாய் உடையவர் அகல விழி 
கொண்டவர் சதை குறைந்த கெண்டைக்கால் பெற்றவர். (ஸஹீஹ் முஸ்லிம்)

அபூ துஃபைல் (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) வெண்மை நிறமுடையவர் அழகிய முகமுடையவர் நடுத்தர 
உடம்பும், உயரமும் கொண்டவர். (ஸஹீஹ் முஸ்லிம்)

அனஸ் இப்னு மாலிக் (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) அகலமான கரமுடையவர்கள் முற்றிலும் சிவந்த நிறம் 
கொண்டவர் அல்லர். அவர் உயிர் பிரியும் போது தாடியிலும் தலையிலும் சேர்த்து இருபது வெள்ளை முடிகள் 
கூட இல்லை. நரை இரு பொட்டுப் பகுதியில் (கிருதாப் பகுதியில்)\

மட்டும் இருந்தது. தலையிலும் மிகக் 
கொஞ்சமாக நரைமுடி இருந்தது. (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

அபூ ஜுஹைஃபா (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்களின் கீழ் உதட்டுக்கு கீழே கொஞ்சம் முடி 
வெண்மையாக இருந்தது. (ஸஹீஹுல் புகாரி)

அப்துல்லாஹ் இப்னு புஸ்ர் (ரழி) கூறுவதாவது: நபி (ஸல்) அவர்களின் கீழ் உதட்டு முடிகளில் சிறிது 
வெண்மை இருந்தது. (ஸஹீஹுல் புகாரி)

பராஃ (ரழி) கூறுகிறார்: நபி (ஸல்) நடுத்தர உயரமுள்ளவர்கள். அகன்ற புஜம் உடையவர்கள். அவர்களது தலைமுடி காது சோனை வரை இருக்கும். ஒரு நாள் நபி (ஸல்) அவர்களைச் சிவப்பு ஆடையில் 
பார்த்தேன். அவர்களை விட அழகான எதையும் பார்க்கவில்லை. வேதமுடையவர்களை ஒத்திருக்க வேண்டும் என்ற பிரியத்தில் நபி (ஸல்) தங்களது முடியை வகிடு எடுக்காமல் நேராக சீவிக் கொண்டிருந்தார்கள். பின்பு 
தங்களது தலைக்கு வகிடு எடுத்து சீவினார்கள். நபி (ஸல்) மக்களில் மிக அழகிய முகமும் குணமும் கொண்டவர்கள். அவர்களிடம் ''நபியின் முகம் கத்தியைப் போன்று இருந்ததா?'' எனக் கேட்க ''சந்திரனைப் போல், அதாவது சற்று வட்ட வடிவ முகம் உடையவர்களாக இருந்தார்கள்'' என்று பதிலளித்தார். 
(ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

ருபய்ம் பின்த் முஅவ்வித் (ரழி) கூறுகிறார்: நபி (ஸல்) அவர்களை நீ பார்த்தால் அவர்கள் உதிக்கும் அதிகாலை சூரியனைப் போல் இலங்குவார்கள். (முஸ்னத் தாரமி, மிஷ்காத்)

ஜாபிர் இப்னு சமுரா (ரழி) அறிவிக்கிறார்கள்: ஒரு நாள் சந்திர இரவில் நபி (ஸல்) அவர்களைப் பார்த்தேன். 
நபி (ஸல்) சிவப்பு ஆடை அணிந்திருந்தார்கள். நபி (ஸல்) அவர்களையும் சந்திரனையும் மாறி மாறிப் பார்த்தேன். நபி (ஸல்) அவர்களே எனக்கு மிக அழகாக தென்பட்டார்கள். (ஷமாயிலுத் திர்மிதி, மிஷ்காத்)

அபூ ஹுரைரா (ரழி) அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்களை விட மிக அழகான எதையும் நான்
பார்த்ததில்லை. அவர்களது வதனத்தில் சூரியன் இலங்கியது. அவர்களை விட வேகமாக நடப்பவர்களை 
நான் கண்டதில்லை. பூமி அவர்களுக்கு சுருட்டப்பட்டது போல் இருக்கும். நாங்கள் சிரமத்துடன் நடப்போம். 
நபி (ஸல்) அவர்களோ சிரமம் தெரியாமல் நடப்பார்கள். (ஜாமிவுத் திர்மிதி, மிஷ்காத்)

கஅப் இப்னு மாலிக் (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் சிரித்தால் அவர்களது முகம் மிக ஒளி 
பொருந்தியதாக, பார்ப்பவர்களுக்கு சந்திரனைப் போன்று இருக்கும். (ஸஹீஹுல் புகாரி)

ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் தமது வீட்டில் செருப்பு தைத்துக் கொண்டிருக்க, ஆயிஷா (ரழி) ஓர் 
ஆடையை நெய்து கொண்டிருந்தார்கள். அப்போது நபி (ஸல்) உடலில் இருந்து வியர்வை வந்தது. நபி 
(ஸல்) அவர்களின் முக ரேகைகள் ஒளியால் இலங்கிக் கொண்டிருந்தன. இதைக் கண்ட ஆயிஷா (ரழி) 
திடுக்கிட்டார்கள். ''அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூ கபீர் ஹுதலி தங்களைப் பார்த்தால் தமது
''அவரது முக ரேகைகளை நீங்கள் பார்த்தால்
மின்னும் நட்சத்திரத்தைப் போன்று இலங்குவதைப் பார்க்கலாம்.'' (தஹ்தீப் தாரீக் திமஷ்க்)

என்ற கவிகளுக்கு பிறரை விட நீங்களே பொருத்தமானவர்'' என்று கூறுவார்.நபி (ஸல்) அவர்களைப் பார்த்தால் அபூபக்ர் (ரழி),நம்பிக்கைக்குரியவர் தெரிவு செய்யப்பட்டவர்
நன்மைக்கு அழைப்பவர் இருள் நீங்கிய சந்திரனைப் போன்றவர். (குலாஸத்துஸ் ஸியர்)

என்ற கவிதையைக் கூறுவார்கள்.
ஜுஹைர் என்ற கவிஞர் ஹரீம் இப்னு சினானுக்கு படித்த கவிதையை நபி (ஸல்) அவர்களுக்கு உமர் 
(ரழி) கூறுவார்கள்.
''நீ மனிதனல்லாத வேறு படைப்பாக இருந்திருந்தால்,
பவுர்ணமி இரவின் நிலவாக இருந்திருப்பாய்.''
இக்கவிதையைப் பாடிவிட்டு உண்மையில் நபி (ஸல்) அப்படித்தான் இருந்தார்கள் என்று கூறுவார்கள். 
(குலாஸத்துஸ் ஸியர்)

நபியவர்கள் கோபித்தால் முகம் சிவந்துவிடும். மாதுளம் பழ முத்துக்களை முகத்தில் தூவப்பட்டது 
போன்றிருக்கும். (ஸுனனுத் திர்மிதி, மிஷ்காத்)

ஜாபிர் இப்னு சமுரா (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் மெல்லிய கெண்டைக்கால் உடையவர்கள். 
அவர்களது சிரிப்பு புன்முறுவலாகத்தான் இருக்கும். அவர்களைப் பார்த்தால் கண்ணில் 'சுர்மா' இட்டதைப் 
போல் இருக்கும். ஆனால், சுர்மா இட்டவல்லை. (ஜாமிவுத் திர்மிதி)

உமர் இப்னு கத்தாப் (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் அழகிய பற்களைக் கொண்டவர்கள். 
(ஸஹீஹ் முஸ்லிம்)

இப்னு அப்பாஸ் (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் அகன்ற முன் பற்கள் உடையவர்கள் அவர்கள் 
பேசினால் பற்களின் இடைவெளியிலிருந்து பிரகாசம் வெளியேறுவது போன்றிருக்கும் அவர்களது கழுத்து 
தூய்மையான வெள்ளிச் சிலையின் கழுத்தைப் போல் இருக்கும் அவர்களது இமை முடி நீளமாக இருக்கும். 
தாடி அடர்த்தியாக, நெற்றி விசாலமாக இருக்கும் புருவம் அடர்ந்து வில் வடிவம் பெற்றிருக்கும் நீண்ட 
மெல்லிய மூக்குடையவர். மிருதுவான மெல்லிய கன்னமுடையவர். நெஞ்சிலிருந்து தொப்புள் வரை குச்சிப் 
போல முடி இருக்கும். வயிற்றிலோ நெஞ்சிலோ அதைத் தவிர முடி இருக்காது. குடங்கையிலும் தோள் 
புஜத்திலும் முடி இருக்கும். மார்பும் வயிறும் சமமானவர். அகன்ற மார்பும், நீளமான மணிக்கட்டும், விசாலமான உள்ளங்கையும் உள்ளவர் நீளமான முன் கையும், கெண்டைக்காலும் உள்ளவர் உள்ளங்கால் 
நன்கு குவிந்தவர்கள் விரல்கள் நீளமாக இருக்கும் அவர்கள் நடந்தால் கால்களை எடுத்து வைப்பவரைப் 
போல் பணிவுடனும் முன் பக்கம் சாய்ந்தவராகவும் நடப்பார்கள். (குலாஸத்துஸ் ஸீரா, தாரமி, மிஷ்காத்)

அனஸ் (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்களின் கையைவிட மென்மையான பட்டாடையை நான் 
தொட்டதில்லை. அவர்களிடமிருந்து வரும் நறுமணத்தைப் போன்று வேறு எந்த நறுமணத்தையும் நான் 
நுகர்ந்ததில்லை.
மற்றொரு அறிவிப்பில்: நபி (ஸல்) அவர்களிடமிருந்து வரக்கூடிய நறுமணத்தைவிட வேறு நறுமணத்தை 
அம்பலோ அல்லது கஸ்தூயிலோ நான் நுகர்ந்ததில்லை. (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

அபூ ஜுஹைஃபா (ரழி) கூறுகிறார்கள்: ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் கரத்தை எடுத்து என் கன்னத்தில் 
வைத்தேன். அது பனிக் கட்டியை விட குளிர்ச்சியாக, கஸ்தூரியை விட மணமிக்கதாக இருந்தது. 
(ஸஹீஹுல் புகாரி)

ஜாபிர் இப்னு சமுரா (ரழி) கூறுகிறார்கள்: நான் சிறுவனாக இருந்த போது எனது கன்னத்தை நபி (ஸல்) 
அவர்கள் தடவினார்கள். அவர்களது கை மிகக் குளிர்ச்சியாகவும், அத்தர் பாட்டிலிருந்து கையை எடுத்தது 
போன்று மிக்க நறுமணமாகவும் இருந்தது. (ஸஹீஹ் முஸ்லிம்)

அனஸ் (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்களின் வியர்வை, முத்துகள் போல் இருக்கும். (ஸஹீஹ் 
முஸ்லிம்)

உம்மு சுலைம் (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்களின் வியர்வை மிக உயர்ந்த நறுமணமாக 
இருக்கும்.
ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) ஒரு பாதையில் சென்றிருக்க அதே பாதையில் 
மற்றொருவர் செல்கிறார் என்றால் அவர் அவ்வழியில் நபி (ஸல்) சென்றுள்ளார்கள் என்பதை அவர்களது 
வாடையின் மூலம் அறிந்து கொள்ளலாம். (மிஷ்காத், முஸ்னத் தாரமி)

நபி (ஸல்) அவர்களின் இரண்டு புஜங்களுக்கு மத்தியில் புறாவின் முட்டையைப் போல் மேனி நிறத்திலேயே 
நபித்துவ முத்திரை இருந்தது. அது இடது புஜத்திற்கு மேல் மிருதுவான தசைக்கு அருகில் மச்சம் போன்று 
இருந்தது. (ஸஹீஹ் முஸ்லிம்)
================================================
உயர் பண்பாளர்
================================================
நபி (ஸல்) அவர்கள் தௌ;ளத் தெளிவாக இலக்கிய நயத்துடன் மொழிபவர்களாக இருந்தார்கள். இதனால் 
மக்களில் மிக உயர்ந்த அந்தஸ்தில் இருந்தார்கள். மக்களில் யாரும் அவர்களை அறியாமல் இருக்க 
முடியாது. நல்லியல்பு பெற்றவர்கள். அவர்களுடைய பேச்சு சரளமாகவும், சொல் தெளிவாகவும், கருத்து 
சரியானதாகவும் இருக்கும். ஆனால், அதற்காக சிரமம் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அவர்களது 
சொல்லாக்கம் முழுமை பெற்றதாக இருக்கும். நூதனமான நுட்பங்களால் சிறப்பிக்கப்பட்டவர்கள். அரபிய 
மொழிகளின் பல வகைகளைத் தெரிந்திருந்தார்கள். ஒவ்வொரு இனத்தாரிடம் அவரவர் பாணியில் அவரவர் 
தொனியில் உரையாற்றுவார்கள். நகரவாசிகளைப் போல் இலக்கியமாகவும், கிராமவாசிகளைப் போல் எளிய 
முறையிலும் அவரவர் நடைக்கேற்ப பேசுவார்கள். இது மட்டுமின்றி வஹியினால் இறை உதவியைப் 
பெற்றிருந்தார்கள்.

சகித்துக் கொள்வதும், பொறுத்துப் போவதும், சக்தியிருந்து மன்னிப்பதும், சிரமங்களைத் தாங்கிக் 
கொள்வதும் அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கிய இயற்கைப் பண்புகளாகும். எத்தனையோ 
அறிவாளிகள், மேதாவிகள் சமயத்தில் சருகலாம். பொறுமைசாலிக்கும் சமயத்தில் கோபம் தலைக்கேறலாம். 
இடைåறு அதிகமான போது நபி (ஸல்) அவர்களின் சகிப்புத் தன்மை அதிகரித்தது. மூடனின் வரம்பு மீறல் 
நபி (ஸல்) அவர்களுக்குப் பொறுமையைத்தான் தந்தது.

ஆயிஷா (ரழி) கூறுகிறார்கள்: இரண்டு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டால் நபி (ஸல்) அவர்கள் அதில் மிக 
எளிதானவற்றையே எடுத்துக் கொள்வார்கள். ஆனால், அது பாவமாக இருக்கக் கூடாது. அது 
பாவமானதாக இருந்தால் அதை விட்டு வெகு தூரம் சென்று விடுவார்கள்

. நபி (ஸல்) அவர்கள் தங்களுக்காகப் பழிவாங்கியதில்லை. எனினும், அல்லாஹ்வின் கண்ணியம் பாழாக்கப்பட்டால் 
அல்லாஹ்வுக்காக பழிவாங்குவார்கள். மெதுவாக கோபம் வரும். விரைவாக மகிழ்ச்சி அடைவார்கள். 
கணக்கிட முடியாத அளவு தான தர்மங்களை வழங்கி வந்தார்கள். வறுமைக்கு அஞ்சாமல் ஏழை 
எளியோருக்கு தேவையுடையோருக்கு செலவு செய்தார்கள். (ஸஹீஹுல் புகாரி)

இப்னு அப்பாஸ் (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் மக்களில் மிகக் கொடைத் 
தன்மையுடையவர்களாக விளங்கினார்கள். வானவர் ஜிப்ரீல், நபி (ஸல்) அவர்களை ரமழான் மாதத்தில் 
சந்திக்கும் நாட்களில் மிக அதிகம் நபி (ஸல்) கொடையளிப்பார்கள். ஜிப்ரீல் ரமழானுடைய ஒவ்வொரு 
இரவிலும் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து குர்ஆனை பரிமாறிக் கொள்வார்கள். அக்காலங்களில் விரைந்து 
வீசும் காற்றின் வேகத்தை விட செல்வங்களை வாரி வழங்குவார்கள். (ஸஹீஹுல் புகாரி)

ஜாபிர் (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்களிடம் ஏதாவதொன்று கேட்கப்பட்டு, அவர்கள் அதை இல்லை 
என்று சொன்னதில்லை. (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்களின் வீரமும் துணிவும் யாரும் அறியாத ஒன்றல்ல. நபி (ஸல்) அவர்கள் மக்களில் மிகுந்த 
துணிச்சல் கொண்டவர்களாக விளங்கினார்கள். எத்தனையோ அபாயமான நிலைகளைச் சந்தித்துள்ளார்கள். தங்களிடமுள்ள வாள் வீச்சு வீரர்களும், அம்பெறியும் வீரர்களும் அவர்களைத் தனிமையில் பலமுறை விட்டுவிட்டு சென்றுவிட்ட போதிலும் நிலைகுலையாமல், தடுமாற்றமில்லாமல், புறுமுதுகுக் காட்டாமல், எதிரிகளை எதிர்த்து நின்றார்கள். எத்தனையோ வீரர்கள் ஒரு சில நேரங்களில் புறமுதுகு காட்டி ஓடி இருக்கின்றார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் ஒருபோதும் அவ்வாறு செய்ததில்லை.

அலீ (ரழி) கூறுகிறார்கள்: போர் சூடுபிடித்து கண்கள் சிவந்து விடும்போது நாங்கள் நபி (ஸல்) அவர்களுக்கருகே சென்று எங்களைப் பாதுகாத்துக் கொள்வோம். எதிரிகளுக்கு அருகில் நபி (ஸல்) அவர்களைத் தவிர எங்களில் எவரும் நெருக்கமாக இருந்ததில்லை. (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், 
ஸுனன் அபூதா¥து, ஸுனனுத் திர்மிதி)

அனஸ் (ரழி) கூறுகிறார்கள்: மதீனாவாசிகள் ஒரு நாள் இரவு சப்தத்தைக் கேட்டு பயந்து விட்டனர். சப்தம் 
வந்த திசையை நோக்கி மக்கள் விரைந்து செல்கையில் அதற்கு முன்பே நபி (ஸல்) அவர்கள் சென்று 
விவரத்தை அறிந்து திரும்பிக் கொண்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் கழுத்தில் வாளை தொங்கவிட்டுக் 
கொண்டு அபூ தல்ஹாவுக்குரிய குதிரையில் எவ்வித சேனம் கடிவாளம் ஏதுமின்றி சென்று வந்தார்கள். 
மக்களைப் பார்த்து ''நீங்கள் அஞ்ச வேண்டியதில்லை பயப்பட வேண்டியதில்லை'' என்று கூறினார்கள். 
(ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் மிகக் கூச்சச் சுபாவமுள்ளவராக இருந்தார்கள்.
அபூ சயீத் குத் (ரழி) கூறுகிறார்கள்: திரை மறைவிலுள்ள கன்னிப் பெண்களை விட அதிக நாணமுள்ளவர்களாக நபி (ஸல்) அவர்கள் இருந்தார்கள். ஏதாவது பிடிக்காவிட்டால் அதை அவர்களது முகத்திலிருந்து அறிந்து கொள்ளலாம். எவரது முகத்தையும் ஆழமாக உற்று நோக்கியதில்லை. 
பார்வையைக் கீழ்நோக்கி வைத்திருப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் மேல் நோக்கி பார்ப்பதை விட கீழ்நோக்கி பார்ப்பதே அதிகம். பெரும்பாலும் கடைக்கண்ணால் பார்ப்பார்கள். வெட்கத்தினாலும் உயர்ந்த பண்பின் காரணத்தாலும் யாரையும் வெறுப்பூட்டும்படி பேச மாட்டார்கள். (ஸஹீஹுல் புகாரி)

ஒருவரைப் பற்றி விரும்பாத செய்தி தங்களுக்குக் கிடைத்தால் அப்போது நபி (ஸல்) அவர்கள் ''சிலர் ஏன் 
இவ்வாறு செய்கிறார்கள்?'' என்பார்கள். அவருடைய பெயரைக் குறிப்பிட்டு சங்கடப்படுத்த மாட்டார்கள்.
''நாணத்தால் பார்வையைத் தாழ்த்துகிறார்!
அவர் மீது பயத்தால் பார்வை குனிகிறது.
அவர் புன் முறுவல் பூத்தால்தான் அவருடன் பேச முடியும்.''
என்ற ஃபரஸ்தக்கின் கவிக்கு நபி (ஸல்) அவர்களே மிகத் தகுதியுள்ளவர்கள்.

நபி (ஸல்) அவர்கள் மக்களில் ''மிக்க நீதவானாக, ஒழுக்க சீலராக, உண்மையாளராக, 
நம்பிக்கையாளராகத் திகழ்ந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் இப்பண்புகளை உடன் இருந்தவர்கள் 
மட்டுமல்ல எதிரிகள் கூட நன்கு அறிந்து வைத்திருந்தனர். நபித்துவம் கிடைக்கும் முன்பே அவர்களை 
'நம்பிக்கைக்குரியவர் (அல் அமீன்)' என்று மக்கள் அழைத்தனர். இஸ்லாம் வருவதற்கு முன்பே அறியாமைக் 
காலத்தில் கூட மக்கள் தங்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு நாடி அவர்களிடம் வருவார்கள்.

அலீ (ரழி) கூறுகிறார்கள்: ஒருமுறை நபியவர்களை பார்த்த அபூஜஹ்ல்
''நாங்கள் உங்களை பொய்ப்பிக்கவில்லை. 
நீங்கள் சொல்கின்ற மார்க்கத்தைத்
தான்பொய்ப்பிக்கிறோம்'' 
என்றான்.
இது விஷயமாக அல்லாஹ் கூறுகிறான்:
(நபியே! உங்களைப் பொய்யரென) அவர்கள் கூறுவது, நிச்சயமாக உங்களுக்குக் கவலையைத் தருகின்றது 
என்பதை உறுதியாக நாம் அறிவோம். நிச்சயமாக அவர்கள் உங்களைப் பொய்யாக்கவில்லை. ஆனால், 
இந்த அநியாயக்காரர்கள் அல்லாஹ்வின் வசனங்களையே (பொய்யாக்கி) நிராகரிக்கின்றனர். (அல்குர்ஆன் 
6:33) (மிஷ்காத், ஸுனனுத் திர்மிதி)

அன்றொரு நாள் மன்னன் ஹிர்கல் (ஹெர்குலிஸ்) அவையிலே அபூ ஸுஃப்யான் எதிரியாக இருந்தும் 
நபியவர்களைப் பற்றிக் கூறிய உரையாடல் நினைவுகூரத் தக்கது. ''அவர் (நபி) இஸ்லாமைப் பற்றிக் கூறுவதற்கு முன்பு, பொய் பேசியுள்ளார் என்று அவர் மீது நீங்கள் பழி சுமத்தி இருக்கிறீர்களா?'' என்று மன்னன் கேட்க, அதற்கு அபூ ஸுஃப்யான், ''அவ்வாறு அவர் ஒருபோதும் பொய் பேசியதில்லை'' என்று 
கூறினார்.

நபி (ஸல்) மற்றவர்களை விட அதிகம் பணிவுடையவர்களாகவும், பெருமை கொள்வதை விட்டு 
விலகியவர்களாகவும் இருந்தார்கள். மக்கள் அரசர் முன்பு எழுந்து நிற்பது போன்று தன் முன் எழுந்து நிற்பதைத் தடை செய்தார்கள். நலிந்தோர்களையும், நோயாளிகளையும் நலம் விசாரிப்பார்கள். ஏழைகளுடன் சேர்ந்திருப்பார்கள். அடிமை விருந்துக்கு அழைத்தாலும் இன் முகத்துடன் ஏற்றுக் கொள்வார்கள். தங்களுடைய தோழர்களுடன் அவர்களில் ஒருவராக அமர்ந்திருப்பார்கள்.

ஆயிஷா (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) தங்களது காலணிகளையும், தங்களது ஆடைகளையும் தாங்களே 
தைத்துக் கொள்வார்கள். உங்களில் ஒருவர் வீட்டில் வேலை செய்வது போன்றே நபியவர்களும் தங்களுடைய வீட்டில் வேலை செய்வார்கள். மனிதர்களில் ஒருவராகவே இருந்தார்கள். தங்களது ஆடைகளைத் தானே சுத்தம் செய்வார்கள். தனது ஆட்டில் தானே பாலைக் கறப்பார்கள். தங்களது வேலைகளைத் தானே செய்து கொள்வார்கள். (மிஷ்காத்)

மற்றெவரையும் விட அதிகம் நபி (ஸல்) வாக்குகளை நிறைவேற்றுபவர்களாக இருந்தார்கள். உறவினர்களுடன் சேர்ந்து நெருக்கமாக வாழ்ந்தார்கள். மக்கள் மீது மிக்க அன்பும் பாசமும் கருணையும் கொண்டவர்களாக இருந்தார்கள். அவர்களுடன் மிக அழகிய முறையில் ஒழுக்கத்துடன் நடந்து கொண்டார்கள். மக்களில் மிக உன்னதமான குணம் பெற்றிருந்தார்கள். அவர்களிடம் எந்தக் கெட்ட குணமும் இருந்ததில்லை. அருவருப்பான சொல், செயல் ஏதும் அவர்களிடம் இருந்ததில்லை. சபிக்கும் வழக்கமோ, கடைத் தெருக்களில் கூச்சல் போடும் பேதைமையோ கிடையாது. கெட்டதைக் கெட்டதை 
கொண்டு நிவர்த்தி செய்ய மாட்டார்கள். மாறாக, அதனை மன்னித்து மறந்து விடுவார்கள். எவரையும் 
தனக்குப் பின்னால் நடக்க அனுமதிக்க மாட்டார்கள். உடையிலோ ஆடையிலோ தங்களுடைய 
அடிமைகளைக் காட்டிலும் தம்மை உயர்வாக காட்டிக் கொள்ள மாட்டார்கள். தங்களுக்கு பணிவிடை 
செய்தவர்களுக்குப் பணிவிடை செய்வார்கள். தங்களதுப் பணியாளரை 'சீ' என்று கூட கூறியதில்லை. ஒரு 
செயலை செய்ததற்காகவோ, செய்யாமல் போனதற்காகவோ யாரையும் கண்டித்ததில்லை.

நபி (ஸல்) தோழர்களை அதிகம் நேசித்து, அவர்களுடன் அதிகம் பழகுவார்கள். அவர்களுடைய 
ஜனாஸாக்களிலும் கலந்து கொள்வார்கள். ஏழையை அவரது இல்லாமையினால் இளக்காரமாகப் பார்க்க 
மாட்டார்கள்.ஒரு பயணத்தின் போது ஆடு ஒன்றை அறுத்து சமைக்கும்படி கூறினார்கள். ஒருவர் நான் அறுக்கிறேன் 
என்றார் ஒருவர் உக்கிறேன் என்றார் ஒருவர் சமைக்கிறேன் என்றார் நபி (ஸல்) ''அதற்காக நான் விறகுகளை சேர்த்து வருவேன்'' என்றார்கள். அதற்கு தோழர்கள் ''அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு ஏன் சிரமம்! நாங்கள் இதைச் செய்து கொள்கிறோம்'' என்றனர். அப்போது நபி (ஸல்) ''உங்களால் செய்ய முடியும் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இருந்தாலும் உங்களில் என்னைத் தனியே உயர்த்திக் காட்ட விரும்பவில்லை. ஏனெனில், ஒருவர் தனது தோழர்களில் தனியாக வேறுபடுத்திக் காட்டுவதை அல்லாஹ் வெறுக்கிறான்'' என்று கூறி விறகுகளைச் சேகக்கச் சென்றார்கள். (குலாஸத்துஸ் ஸியர்)

நபியவர்களை ந்து வருணிப்பதை நாம் கேட்போம்: ''நபி (ஸல்) தொடர் கவலைக் கொண்டவர்கள் நிரந்தரச் சிந்தனையுடையவர்கள் அவர்களுக்கு ஓய்வு கிடையாது தேவையின்றி பேசமாட்டார்கள் நீண்ட நேரம் அமைதியாக இருப்பார்கள் பேசினால் வாய் நிரம்பப் பேசுவார்கள் பேச்சை முடிக்கும் போது முழுமையான வார்த்தைகளைக் கொண்டு முடிப்பார்கள். கருத்தாழமுள்ள வாக்கியங்களால் 
உரையாற்றுவார்கள் தெளிவாகப் பேசுவார்கள் அது தேவையை விட குறைவாகவோ அதிகமாகவோ 
இருக்காது. முரட்டுக் குணம் கொண்டவரும் இல்லை அற்பமானவரும் இல்லை அல்லாஹ்வின் அருட்கொடை 
குறைவாக இருந்தாலும் அதை நிறைவாக மதிப்பார்கள் எதையும் இகழமாட்டார்கள் உணவுகளைப் புகழவோ 
குறைகூறவோ மாட்டார்கள்.சத்தியத்திற்கு பங்கம் விளைவித்தால் அவர்களுடைய கோபத்திற்கு முன் யாரும் நிற்க முடியாது பழிவாங்கியே தீருவார்கள். தங்களுக்காக கோபப்படவோ, பழிவாங்கவோ மாட்டார்கள் சந்தோஷம் மிகுந்தால் தங்களது பார்வையைத் தாழ்த்திக் கொள்வார்கள் பெரும்பாலும் புன்முறுவலாகவே சிரிப்பார்கள் சிக்கும் போது பற்கள் பனிக்கட்டிகளைப் போல் காட்சியளிக்கும் தேவையற்றதைப் பேசாமல் தங்களது நாவைப் பாதுகாத்துக் கொண்டு தேவையானவற்றையே பேசுவார்கள் தங்களது தோழர்களிடையே நட்பை ஏற்படுத்துவார்கள் பிரிக்க மாட்டார்கள் ஒவ்வொரு சமுதாயத்தின் சிறப்புக்குயோர்களைத் தானும் கண்ணியப்படுத்திச் சிறப்பிப்பார்கள் அவரையே அவர்களின் நிர்வாகியாக நியமிப்பார்கள் ஒருவருடைய தீங்கினால் அவரிடமிருந்து பாதுகாப்பாக இருப்பார்கள், முற்றிலும் அவரை விட்டு முகத்தைத் திருப்பிக் கொள்ள மாட்டார்கள் காணாத தங்களின் தோழர்களைப் பற்றி அக்கரையாக விசாரிப்பார்கள் மக்களிடம் அவர்களின் நிலவரங்களைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்வார்கள் நல்லதை நல்லது என்றும் சரியானதென்றும் கூறுவார்கள் கெட்டதைக் 
கெட்டதென்று உரைத்து அதனைப் புறக்கணித்து விடுவார்கள்.நடுநிலையாளர்கள் முரண்பட மாட்டார்கள் மக்கள் மறந்து விடுவார்கள் என்பதால் அவர்கள் எதையும் 
மறவாமல் இருப்பார்கள் எல்லா நிலைகளிலும் ஆயத்தமாக இருப்பார்கள் சத்தியத்தில் குறைவு செய்யவோ அதை மீறவோ மாட்டார்கள் மக்களில் சிறந்தவர்தான் நபியவர்களுடன் இருப்பர். நபியவர்களிடம் மிகச் சிறப்பிற்குரியவர்கள் யாரெனில், மக்களுக்கு அதிகம் நன்மையை நாடுபவர்கள்தான் அதிகம் மக்களுக்கு 
உதவி உபகாரம் புரிபவர்கள்தான் நபியிடம் மிக்க கண்ணியத்திற்குரியவராக இருப்பர் அமர்ந்தாலும் 
எழுந்தாலும் அல்லாஹ்வையே நினைவு கூர்வார்கள் சபைகளில் தனக்காக இடத்தைத் தெரிவு செய்து 
கொள்ள மாட்டார்கள் சபைக்குச் சென்றால் சபையின் இறுதியிலேயே அமர்ந்து கொள்வார்கள் அவ்வாறே 
பிறரையும் பணிப்பார்கள் தன்னுடன் அமர்ந்திருக்கும் ஒவ்வொருவருடனும் உரையாடுவார்கள் தன்னைவிட 
யாரும் நபியவர்களிடம் உயர்ந்தவர் இல்லை, தானே நபியவர்களிடம் நெருக்கமானவர் என்று ஒவ்வொருவரும் 
எண்ணுமளவுக்கு நடந்து கொள்வார்கள்.ஒருவர் ஏதாவது தேவைக்காக வந்தால் அவராகச் செல்லும் வரை அவருடன் நபி (ஸல்) இருப்பார்கள் தேவையை கேட்கும் போது அதனை நிறைவேற்றித் தருவார்கள் அல்லது அழகிய பதிலைக் கூறுவார்கள் நபி (ஸல்) தங்களது தயாளத் தன்மையையும் நற்குணங்களையும் அனைத்து மக்களுக்கும் விசாலப்படுத்தியிருந்தார்கள். எனவே, மக்களுக்கு ஒரு தந்தையைப் போல் திகழ்ந்தார்கள். உரிமையில் அவர்களிடம் அனைவரும் ஒருவருக்கொருவர் நெருக்கமாக இருந்தார்கள்.
இறையச்சத்தைக் கொண்டே மக்களுடைய சிறப்புகள் நிர்ணயிக்கப்பட்டன. கல்வி, கண்ணியம், பொறுமை, சகிப்புத் தன்மை, வெட்கம், நம்பிக்கை அனைத்தும் நிறைந்ததாக அவர்களது சபை இருந்தது. அங்கு உரத்த குரல்கள் ஒலிக்காது கண்ணியம் குலைக்கப்படாது தவறுகள் நிகழாது இறையச்சத்தால் ஒருவருக்கொருவர் பிரியத்துடன் நடந்துகொள்வர் பெயரிவருக்கு கண்ணியமும் சிறியவர்களுக்கு இரக்கமும் காட்டுவார்கள் 
தேவையுடையோருக்கு உதவி செய்வார்கள் புதியவர்களுடன் நட்புடன் நடந்து கொள்வார்கள்.
எப்பொழுதும் மலர்ந்த முகமும், இளகிய குணமும், நளினமும் பெற்று இருப்பார்கள் கடுகடுப்பானவரோ, 
முரட்டுக் குணம் கொண்டவரோ, கூச்சலிடுபவரோ, அருவருப்பாகப் பேசுபவரோ, அதட்டுபவரோ, அதிகம் 
புகழ்பவரோ அல்லர் விருப்பமற்றதைக் கண்டுகொள்ள மாட்டார்கள் நிராசையாகவும் மாட்டார்கள்.
மூன்று குணங்களை விட்டு தங்களைப் பாதுகாத்துக் கொண்டார்கள்:

1) முகஸ்துதி, 2) அதிகம் பேசுவது, 3) தேவையற்றவற்றில் ஈடுபடுவது.

மக்களைப் பற்றி மூன்று காரியங்களைத் தவிர்த்துக் கொண்டார்கள்:

1) பிறரைப் பழிக்க மாட்டார்கள், 2) பிறரைக் குறைகூற மாட்டார்கள், 3) பிறரின் குறையைத் 
தேடமாட்டார்கள்.

நன்மையானவற்றைத் தவிர வேறெதுவும் பேசமாட்டார்கள் அவர்கள் பேசினால் சபையோர்கள் அமைதி 
காப்பர்கள் தங்களின் தலைமீது பறவை அமர்ந்திருப்பது போல் அசையாமல் இருப்பார்கள் நபி (ஸல்)
அமைதியானால் தோழர்கள் பேசுவார்கள் நபியின் முன் பேசும்போது தோழர்கள் போட்டியிட்டுக் கொள்ள 
மாட்டார்கள். யாராவது பேசத் தொடங்கினால் அவர் முடிக்கும் வரை அவருக்காக அமைதி காப்பார்கள் முதலில் பேசியவன் பேச்சை ஏற்பார்கள் மக்கள் சிரிப்பதைக் கண்டு தானும் சிரிப்பார்கள் மக்கள் ஆச்சரியப்படுபவற்றைக் கண்டு தானும் ஆச்சரியப்படுவார்கள் புதியவன் முரட்டுப் பேச்சை சகித்துக் கொள்வார்கள் தேவையுடையோரை நீங்கள் பார்த்தால் அவர்களின் தேவையை
நிறைவேற்றுங்கள் என்பார்கள் உதவி உபகாரம் பெற்றவர் நன்றி கூறினால் மட்டும் ஏற்றுக் கொள்வார்கள். (ஷமாயிலுத் திர்மிதி, அஷ்ஷிஃபா)

காஜா இப்னு ஜைத் (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) சபையினில் கண்ணியத்திற்குரிய வர்களாக தோற்றம் 
அளிப்பார்கள் தங்களது உடல் உறுப்புகளில் எதையும் வெளிக்காட்ட மாட்டார்கள் அதிகம் மௌனம் 
காப்பார்கள். தேவையற்றதைப் பேசமாட்டார்கள் அழகிய முறையில் உரையாடாத வரை புறக்கணித்து 
விடுவார்கள் அவர்கள் புன்முறுவலாகவே சிரிப்பார்கள் அவர்களின் பேச்சு தெளிவாக இருக்கும் தேவையை 
விட அதிகமாகவோ குறைவாகவோ இருக்காது நபியவர்களின் கண்ணியத்தை முன்னிட்டும் அவர்களைப் 
பின்பற்ற வேண்டும் என்பதற்காகவும் அவர்களுக்கு முன் தோழர்கள் புன்முறுவலாகவே சிரிப்பார்கள். 
(அஷ்ஷிஃபா)

சுருங்கக் கூறின் நபி (ஸல்) முழுமை பெற்ற தன்மைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தார்கள். நற்பண்புகளில் அவர்களுக்கு நிகர் கிடையாது. அல்லாஹ் நபியவர்களுக்கு மிக அழகிய முறையில் ஒழுக்கங்களைக் கற்றுக் 
கொடுத்தான்.

''நிச்சயமாக நீங்கள் நற்குணமுடையவராகவே இருக்கின்றீர்கள்.'' (அல்குர்ஆன் 68:4)