சனி, 5 மே, 2012

மனிதரின் மன இயல்பு

தத்துவ மேதை டாக்டர் சிக்மண்ட் ப்ராய்ட்: டாக்டர் பிராய்ட் மனிதரின் மன இயல்புகளை கீழ்க்கண்டவாறு 3 பகுதிகளாக சொல்கிறார்.

1. அய்டென்டிட்டி 
2. ஈகோ ( நான் என்ற அகந்தை) 
3. சூப்பர் ஈகோ 

1. அய்டென்டிட்டி:

நமக்கு ஏற்படும் சகல விதமான ஆசைகள், உணர்வுகள்...பசி, பாலுணர்வு, இவைகள் மூலம் உருவாகும் உணர்வுகளிற்கு வடிகாலைத் தேடுவது தான் சுருக்கமாக அய்டென்டிட்டி.

பிராய்டின் கருத்துப்படி, மகிழ்ச்சியாக இருக்கும் மனநிலைகள்...அதே சமயம், யதார்த்த நிலை பற்றிக் கவலைபடாமல் ( யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளையிடம் கேட்டுப் பார்க்கலாம்.!) இருப்பது என்பதாகும். விஷ் புல்பில்மெண்ட், அப்ஜக்டிவ் மெமரி இமேஜ், ப்ரைமரி மற்றும் செகண்டரி ப்ராசஸ்...இதெல்லாம் வேணாம்.


2. ஈகோ....நான் என்னும் அகந்தை: இது என்னன்னு எல்லாருக்குமே தெரியும். விளக்கமே தேவையில்லை. பேஷ்புக்குல ரொம்ப ஜாஸ்த்தி. அம்புட்டுதேன்.

3. சூப்பர் ஈகோ: அனேகமா சூப்பர் ஸ்டார்களுக்கு இருக்கும் என நினைக்கிறேன். தகுந்த கல்வியறிவுடன்...அனைத்தையும் சீர்தூக்கி பார்த்து செய்வது என்று ப்ராய்டு சொல்ரார்.

ஆக மனிதர்களில் பர்சனாலிட்டி அல்லது குணாதிசயங்கள்...கேரக்டர்னும் சொல்லலாம்...நிர்ணயிப்பவை மேலே சொல்லப்பட்ட 3 நிலைகளுக்கும் இடையே ஏற்படும் மோதல்கள். மனசக்தி, மின்காந்தச் சக்தி...இப்படியெல்லாம் நிறைய சொல்கிறார் ப்ராய்டு. அதெல்லாம் வேணவே வேணாம்.

சிக்மண்ட் பிராய்டின் தத்துவார்த்தமான புத்தகங்களுக்கு, அவர் பேசிக்காக ஒரு மனநல மருத்துவராக இருந்ததும் ஒரு காரணம். டைனமிக் பர்சனாலிட்டி, உளவியல் ரீதியான சில முக்கிய தகவல்களை நமக்கு புரியவைக்க முயற்சி செய்கிறார். ஆனா புரிய மாட்டேங்குது என்பது தான் உண்மை. தத்துவமேதை டாக்டர் சிக்மண்ட் ப்ராய்டிற்கு 156 வயது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக