சனி, 19 மே, 2012

சமத்துவம்��- அங்கும் இங்கும்

``ஏழுமலையான் கோயிலில் பணக்காரர்களுக்கும், நடிகை, நடிகர்களுக்கும் முக்கியத்துவம்��- இந்தத் தலைப்பில் `தினகரன் (17-5-2012) சென்னை பதிப்பு ஒரு செய்தி தந்திருக்கிறது. ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியை அவர் தங்கியிருந்த விடுதிக்குச் சென்று திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரதான அர்ச்சகர் ரமண தீட்சிதர் நேரில் சந்தித்து பிரசாதம் வழங்கி ஆசீர்வாதம் செய் தாராம் என்றும், இதனால் பக்தர்கள் அதிர்ச்சிய டைந்துள்ளனர் என்றும், சாதாரண ஏழை மக்களை தேவஸ்தானம் கண்டு கொள் வதில்லை; ஆனால், தொழில் அதிபர்களுக்கும், நடிகை நடிகர் களுக்கும் தாம் தேவஸ்தானம் மரியாதை கொடுக்கிறது என்றும் குற்றம் சாட்டினர் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டிருக்கிறது. இது பற்றிய வாதப் பிரதிவாதங்கள் பற்றியும் அச் செய்தியில் கூறப்பட்டிருக்கிறது.

``இறைவன் எல்லோருக்கும் பொதுவானவன்; எல்லாரும் இறைவன் சந்நிதானத்தில் சமமானவர்களே; ஏழை பணக்காரன் என்று வித்தியாசப் படுத்துவது இல்லாத ஒரே இடம் இறைவனின் சந்திதானம்தான்�� என்று எல்லா மதங்களிலும் கூறப் பட்டுள்ளது.

இதற்கு மாற்றமான ஒரு புதிய நடைமுறையை திருப்பதி தேவஸ்தானத்தில் பார்த்தவுடன் பக்தர்கள் கொதித்துக் குமுறியிருக்கிறார்கள். இந்தச் செய்தியைப் படித்த போது இரண்டு மூன்று தினங்களுக்கு முன்பு தஞ்சாவூர் மாவட்டத்தில் சுற்றுப் பயணம் செய்தபோது முஸ்லிம் லீகர்களின் மத்தியில் நடைபெற்ற ஓர் உரையாடல்தான் பளீரென்று நினைவுக்கு வந்தது.

மாவட்டத் தலைவர் பி.எஸ். ஹமீது ஹாஜியார், மாவட்டச் செயலாளர் லயன் பஷீர் அஹமது, வழுத்தூர் நகர செயலாளர் கமர்தீன், மாநில துணைத் தலைவர் அதிரை எஸ்.எஸ்.பி. நஸீருத்தீன், எம்.எஸ்.எஃப் மாநில துணைச் செயலாளர் ஷாநவாஸ் ஆகியோருடன் நானும் பயணம் செய்யும் வாய்ப்பு வந்தது.

பயணத்தின் போது சமுதாயம் பற்றியும், மார்க்கம் பற்றியும், அந்தக் காலத்துப் பெரியவர்கள் எப்படி கை கால் முகம் எலலாவற்றையும் கசக்கிப் பிழிந்து `ஒலு� செய்யும் போது செய்தார்கள் என்பது பற்றியும், தொழுகைக்கு `ஒலு� செய்வதிலேயே `அக்குபஞ்சர்�, `அக்குபிரஷர்� வைத்திய முறைகள் எல்லாம் உள்ளன என்பது பற்றியும் நீண்டு கொண்டிருந்தது.

அப் பேச்சுக்கிடையில் தி.மு.க.வின் முந்திய காலத்துப் பெரியவர் மன்னை நாராயணசாமி அவர்கள் பற்றிய பேச்சு வந்தது. அதிரை நஸீருத்தீன் சொன்னார்: மன்னையார் இஸ்லாம் பற்றி நிரம்பவும் தெரிந்து வைத்திருந்தார். காயிதெ ஆஜம் ஜின்னா சாஹிபை முதன் முதலில் தமிழகத்துக்கு அழைத்து வந்தவர் பெரியார்தான் என்று மன்னை ஒரு முறை கூறியுள்ளார். அதோடு, தொழுகை பற்றிய அற்புதமான செய்தி ஒன்றையும் அவர் கூறினார். `தி இல்லஸ்ட்ரேட்டு வீக்லி ஆஃப் இண்டியா� ஏட்டில் வந்த படத்தை என்னிடம் காட்டி, இப்படிப்பட்ட இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றும் நீங்கள் உண்மையில் கொடுத்து வைத்தவர்கள் என்று கூறுவார்.

திருமதி இந்திரா அம்மையார் பிரதமராக இருந்த போது, சவூதி அரேபிய மன்னர் காலிது டெல்லி வந்தார். பிரதமருடன் பேச்சுவார்த்தை நடந்து முடிந்து -அன்று வெள்ளிக்கிழமை - டெல்லி ஜும்ஆ மஸ்ஜிதுக்கு விரைந்து சென்றார். மன்னர் பள்ளிவாசலை நெருங்கிய போது ஜும்ஆ தொழுகை ஆரம்பமாகி விட்டது. காரில் இருந்து இறங்கிய மன்னர் காலிது, வேகமாகச் சென்று தொழுகையில் சேர்ந்தார். அவர் நின்று தொழுவதற்குக் கிடைத்த இடம் எது தெரியுமா? ஜும்ஆ மஸ்ஜிது மேலே ஏறுகின்ற படிக்கட்டுகள்தாம். அந்தப் படிக்கட்டுகளில் தெருவில் செருப்பு தைக்கும் முஸ்லிம் தொழிலாளிகள் கடைசி நேரத்தில் தொழுகையில் சேர்ந்துள்ளனர். அவர்கள் நின்று தொழுத இடத்தில் மன்னர் காலிதும் நின்று தொழுதார். அவர் ஸஜ்தா செய்தபோது, அந்த அரபக மன்னரின் தலை, முன்வரிசையில் அவருக்கு முன்னே நின்று தொழுத செருப்புத் தொழிலாளி ஒருவரின் இரண்டு கால் பாதங்களுக்கு இடையில் இருந்தது.

- இதைக் காட்டும் தத்ருபமான படத்தை அந்த `வீக்லி� ஏடு பிரசுரித்திருந்தது. அதை பாதுகாப்பாக வைத்துக் கொண்டிருந்த மன்னை நாராயணசாமி அவர்கள் வருவோர் போவோர் எல்லாரிடமும் அந்த படத்தைக் காட்டி, இஸ்லாமிய மார்க்கத்தின் பெருமையை - சிறப்பை - மகத்துவத்தைப் பற்றியே பல காலம் பேசி வந்தார். நானே பல முறை அவர் சொல்லக் கேட்டிருக்கிறேன் என்று அதிரை நஸீருத்தீன் உணர்ச்சி மேலிட்டவாறு நினைவு கூர்ந்தார்.

திருப்பதி கோயிலில் நடந்த சம்பவத்தை தினகரனில் படித்தபோது, மன்னை நாராயணசாமி அவர்கள் கூறியதுதான் நினைவுக்கு வந்தது; முஸ்லிம்கள் எவ்வளவு கொடுத்து வைத்தவர்களாக இருக்கிறார்கள் என்னும் சிந்தனை மனதுக்கு பேரின்பம் தந்தது! -கே.எம்.கே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக