புதன், 15 ஜூன், 2011

மாவீரன் திப்புசுல்தான்: இந்திய விடுதலைப் போரின் உயிர்நாடி




Tipu Sultan (1750-1799) was the de-facto ruler of the Kingdom of Mysore.
He is better known as the 'Tiger of Mysore
His full name was Sultan Fateh Ali Tippu and he was born on 20th November, 1750 at Devanahalli, in present-day Kolar district, near Bangalore, India.
He is the eldest son of Hyder Ali and Fakhr-un-nissa (Fatima Begum). Tipu ascended the throne of his father after his death in 1782, following the Second Mysore War, to then rule the Kingdom of Mysore. Tipu Sultan was a benevolent and instrumental leader, whose constant valiant efforts against the British oppression in southern India resulted in his name being etched in the annals of Indian history

1799 ஆம் மே மாதம் நான்காம் தேதி சாதாரண சிப்பாய் போல் ஆங்கிலேய அந்நிய படைக்கெதிராக களமிறங்கி தனது உடலில் கடைசி மூச்சு நிற்கும் வரை உறுதியுடன் போராடி உயிர் தியாகியானார் மாவீரன் திப்பு. அந்த வீரத் திருமகனின் வரலாற்றை நினைவுக்கூறுவது இந்திய தேசத்தின் விடுதலை வரலாற்றையே நினைவுக்கூறுவதற்கு சமமாகும்.

‘கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்’ திப்புசுல்தானின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இதுவாகும். இந்தியாவில் ஆங்கிலேயர்களின் உள்ளங்களில் பீதியை விதைத்த தீரர் தான் திப்பு. அதனால்தான் திப்பு சுல்தான் தனது இன்னுயிரை தியாகம் செய்த வேளையில் அவரின் வீரமரணத்தை கேள்விப்பட்டு மனம் மகிழ்ந்த ஆங்கிலேய ஜெனரல் ஹாரிஸ் இவ்வாறு கூறினான்: ‘இன்று முதல் இந்தியா நம்முடையது’ என்று.
அடுத்து வந்த நூற்றி ஐம்பது ஆண்டுகள் ஆங்கிலேய ஆட்சி இந்தியாவில் நிலைபெற திப்புவின் மரணம் ஆங்கிலேயர்களுக்கு உதவியது. ஆனால் அந்த மாபெரும் வீரனின் தீரமிக்க போராட்டத்தை மறைப்பதற்காக அந்நியக் கைக்கூலிகள் இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்டம் 1857 ஆம் ஆண்டிலிருந்துதான் துவங்கியது என்ற வரலாற்றுப் புரட்டை எழுதி வைத்துள்ளனர்.

இந்தியாவின் முதல் பிரதமரான பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள் தமது டிஸ்கவரி ஆஃப் இந்தியா என்ற நூலில் ”ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும், பெரும் சவாலாகவும் இருந்தவர்கள் ஹைதர் அலியும், திப்பு சுல்தானும். அவர்கள் பிரிட்டீஷாருக்கு கடுமையான தோல்வியின் மூலம் வேதனைமிக்க அனுபவத்தை ஏற்படுத்தினார்கள். கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரத்தை உடைத்தெறியும் அளவுக்கு அவர்கள் நெருங்கினார்கள்” எனக் குறிப்பிடுகிறார்.(. ‘Haider Ali and Tipu Sultan were formidable adversaries who inflicted a severe defeat on the British and came near to breaking the power of the East India Company‘ என The Discovery of India, (6th edn., London, 1956, pp.272-73)).

1750 நவம்பர் 20ல் ஹைதர் அலி ஃபக்ருன்னிஸா தம்பதியருக்கு மகனாய்ப் பிறந்த திப்புசுல்தான், தனது 17ம் வயதிலேயே போர்ப்படைத் தளபதியாக நின்று வாணியம்பாடி யுத்தத்தில் ஆங்கிலேயரை வென்றார்.

1761ல் மைசூர் மன்னராக பொறுப்பேற்ற திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலி 1767-1769ல் முதலாம் மைசூர் யுத்தம், 1780ல் இரண்டாம் மைசூர் யுத்தம் உட்பட ஆங்கிலேயரை எதிர்த்து பலயுத்தம் கண்டு வெற்றி பெற்றார்.

திப்பு கி.பி 1767 ல் தமது 17 ம் வயதில் ஜோசப் ஸ்மித் தலைமையில் போரிட்ட ஆங்கிலப் படையை எதிர்த்து வாணியம்பாடியில் தமது முதல் வெற்றிக்கனியை பறித்தார் கி.பி.1767 முதல் கி.பி.1769 வரை தமிழ்நாட்டில் பரவலாக பல இடங்களில் ஆங்கிலப் படைக்கும் மைசூர் படைக்கும் நடந்த போர்களில் எல்லாவற்றிலும் வெற்றியே பெற்றார் திப்பு.

1782 டிசம்பர் 6ல் தந்தை ஹைதர் அலி மரணத்தைத் தொடர்ந்து 1782 டிசம்பர் 26ல் தமது 32ம் வயதில் திப்புசுல்தான் மைசூர் மன்னரானார். மேற்கு கடற்கரையிலிருந்து ஆங்கிலேயர்களை துரத்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு பிரெஞ்சுப் படையினரையும் சேர்த்துக் கொண்டு ஆவேசத்துடன் போரைத் தொடர்ந்தார் திப்பு.

ஆனால் பிரஞ்சு மன்னன் பதினாறாம் லூயி பிரிட்டனுடன் சமரசம் செய்துக் கொண்டதால் திப்பு வேறுவழியில்லாமல் போரை நிறுத்த வேண்டியதாயிற்று. 1784 ஆம் ஆண்டு முடிவுற்ற இப்போரில் ஆங்கிலேய தளபதி உள்ளிட்ட 4000 சிப்பாய்கள் திப்புவால் போர்க் கைதிகளாக பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்த அவமானம் ஆங்கிலேயர்களுக்கு திப்புவை நினைத்து குலை நடுங்கச் செய்தது.

கி.பி.1790 ஆம் ஆண்டு முதல் 1792 ஆம் ஆண்டுவரை நடைபெற்ற மூன்றாவது மைசூர்போர் ஆங்கிலேயனின் கைக்கூலியான திருவிதாங்கூர் மன்னனான தர்மராஜாவால் தூண்டி விடப்பட்டது. திருவிதாங்கூர் எங்களது நட்பு நாடு அதனை போரில் ஆதரிப்பது எமது கடமை எனக்கூறி ஜெனரல் கார்ன் வாலிஸ் திப்புசுல்தானுக்கெதிராக போர் புரிய தயாரானான்.

இச்சூழலில் திப்புவிற்கெதிராக போர்புரிய ஆற்காட்டு நவாபும், தொண்டைமான், ஹைதராபாத் நிஜாம், மைசூர் அரசின் முன்னாள் பாளையக்காரர்கள் அனைவரும் ஆங்கிலேயருடன் இணைந்துக் கொண்டனர். இதில் சற்றும் கலங்காத திப்பு எதிரிகளை தன்னந்தனியாக துணிச்சலுடன் எதிர்கொண்டார்.
ஸ்ரீரங்கப்பட்டினம் 30 நாட்களுக்கு மேலாக முற்றுகையிடப்பட்ட போதிலும் எதிரிகளால் திப்புவின் கோட்டைக்குள் நுழைய இயலவில்லை. இதனைக் குறித்து ஆங்கிலேய தளபதி மன்றோ கூறுகையில், ‘30 நாட்கள் முற்றுகையிட்டும் எங்களால் அந்தக் கோட்டையையும், தீவையும் தூரத்திலிருந்துக் கொண்டு தரிசிக்கத்தான் முடிந்தது’. என்று குறிப்பிட்டான்.

போரின் துவக்கத்தில் வெற்றிப் பெற்ற திப்பு போரின் இறுதிக்கட்டத்தில் மராட்டியர்கள் நயவஞ்சகத்தனமாக ஆங்கிலேயர்களுடன் இணந்துக் கொண்டதால் ஒப்பந்தம் செய்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார். மைசூரின் பாதி நிலப்பரப்பும் எதிரிகள் வசம் சென்றது. இழப்பீடுத் தொகையாக 3.3 கோடி நிர்ணயிக்கப்பட்டது. இழப்பீடு தொகையை செலுத்துவரை திப்புவின் இருமகன்கள் பிணையக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டனர். இழப்பீட்டுத் தொகையை செலுத்தி தனது மகன்களை மீட்ட திப்பு 1792 ஆம் ஆண்டு நடந்த போருக்கு பதிலடிக் கொடுக்க வலிமையான முறையில் படையையும், பொருளாதாரத்தையும் கட்டமைத்தார்.

திப்பு சுல்தானை போரில் நேரில் சந்திக்க திராணியற்ற ஆங்கிலேயர்கள் குறுக்கு வழியை கையாள ஆரம்பித்தனர். லஞ்சத்தை ஆயுதமாக பயன்படுத்தி திப்புவின் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் விலைக்கு வாங்கினர். இதனைக் குறிப்பிட்டு வெல்லெஸ்லி ஆங்கிலத் தலைமைக்கு இவ்வாறு கடிதம் எழுதினான், ‘இனி நாம் துணிச்சலாக திப்புவின் மீது போர்த்தொடுக்கலாம்’ என்று.

ஆங்கிலேயனுக்கு எதிராக நடைபெற்ற இறுதிப் போரில் தன்னந்தனியாக களமிறங்கினார் திப்பு. துரோகிகள் ஒருபக்கம் கூட இருந்தவர்களின் குழிபறித்தல் ஒருபக்கம் என எதிர்ப்புகள் ஒன்றிணைந்து தம்மை சந்தித்த பொழுதும் உதவிக்கு வருவதாக வாக்களித்திருந்த நெப்போலியனுக்கு வர இயலாத போதிலும் கலங்காமல் தமது 11 ஆயிரம் படைவீரர்களுடன் தானும் ஒரு போர் வீரனாக தீரமுடன் போரிட்டார் திப்பு.

எதிரிகள் உயிர் தியாகத்தின் வாசலை திப்புவுக்கு திறந்துக் கொடுத்தனர்.குண்டுக் காயங்களுடன் கோட்டை வாயிலில் சரிந்து கிடக்கும் திப்புவிடம். “அரசே! யாரேனும் ஒரு ஆங்கிலேய அதிகாரியை அழைக்கட்டுமா,சரணடைந்து விடலாம்” என்று பதறுகிறான் அவருடைய பணியாள். “முட்டாள்… வாயை மூடு” என்று உறுமுகிறார் திப்பு. ஆம்! “ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விடப் புலியைப் போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம்” என்று பிரகடனம் செய்த அந்தப் வேங்கை போர்க் களத்திலேயே தன் கண்ணை மூடியது.

எதிரிகள் உயிர் தியாகத்தின் வாசலை திப்புவுக்கு திறந்துக் கொடுத்தனர்.
திப்பு சுல்தான் நவீன தொழில் நுட்பத்தின் முன்னோடி
ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகளை எதிர்ப்பதற்கு தொழில் முறையில் பயிற்சிப் பெற்ற ராணுவமும், தொழில் நுட்பமும் தேவை என்பதை உணருகிறார் திப்பு சுல்தான். இதனால் ராணுவத்தில் ஏவுகணைத் தொழில் நுட்பத்தை புகுத்தியதில் முன்னோடியாக திகழ்ந்தார் அவர். இதனை டாக்டர் அப்துல்கலாம் தனது ‘அக்னி சிறகுகள்’ என்ற நூலில் தான் அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையத்திற்கு சென்றபொழுது திப்புசுல்தான் பயன்படுத்திய ஏவுகணையின் புகைப்படத்தை அங்கே பார்த்ததாக ஆச்சரியத்துடன் கூறுகிறார்.

இதனை இந்திய பாதுகாப்புத் துறையின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப்பிரிவின் (Defence Research and Development Organisation – DRDO) தலைமை இயக்குனரும் இந்தியாவின் பிராமோ ஏவுகணையின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றிய விஞ்ஞானியான திரு. சிவதாணு பிள்ளை, ‘இரு நூற்றாண்டுகளுக்கு முன்பே திப்பு சுல்தான் பயன்படுத்திய ஏவுகணைகளுக்கான தொழில் நுட்ப அடிப்படைக் கோட்பாடுகளை விவரிக்கும் ஆதாரங்களுக்கான அனைத்து ஆவணங்களையும் தயார் செய்யும் பணியில் DRDO முழு மூச்சுடன் இறங்கும்’ என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ‘ஏவுகணை வரலாற்றில் ஒரு மைல் கல்லான திப்பு சுல்தானின் படைகள் பயன்படுத்திய 2 கி.மீ தூரம் வரை சென்று இலக்கைத் துல்லியமாகத் தாக்கக்கூடிய ஏவுகணைகளுக்கான பகுப்பாராய்வு ஆவணங்கள் தற்போது இலண்டனில் உள்ள ஆர்ட்டிலரி பொருட்காட்சி மையத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன’ என்று கூறியிருந்தார்.

வணிகத்தில் திப்புசுல்தானின் சாதனை
திப்புசுல்தான் வெறும் ஒரு போர்வீரர் மட்டுமல்ல அவர் ஒரு சிறந்த நிர்வாகியாகவும், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்ட ஒரு பொருளாதார வல்லுநராகவும் திகழ்ந்தார். ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதற்கு வெறும் போர்ப்படை மட்டுமல்ல வணிகத்திலும் முன்னேற வேண்டும் என்பதை உணர்ந்து அதற்காக உயிர்துடிப்புடன் செயல்பட்டார்.

இந்தியா முழுவதும் 14 இடங்களில் வணிக மையங்கள், 20 வணிக கப்பல்கள், 20 போர்க்கப்பல்கள் கான்ஸ்டாண்டி நோபிள் என அழைக்கப்பட்ட இன்றைய துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல்லில் மைசூர் அரசின் கப்பல்துறை என பரந்து விரிந்தது திப்புவின் வணிகத் திட்டம். வணிகத்தில் பெருமளவில் ஈடுபட்டு ஆங்கிலேயன் நடத்திய போர்களுக்கு பொருளுதவிச் செய்து வந்தனர் பனியா, மார்வாடி, பார்ஸி வணிகர்கள். ஆனால் வணிகத்தையே ஏகாதிபத்திய அந்நிய எதிர்ப்பு ஆயுதமாக மாற்ற விளைந்தார்

நல்லொழுக்கத்தை போதித்த ஒழுக்க சீலர் திப்பு சுல்தான்

அரசிற்கு வருமானத்தை ஈட்ட மது விற்பனையை அனுமதித்த தமது அமைச்சரை கண்டித்த திப்பு இவ்வாறு கூறினார்: “மக்களின் உடல்நலனையும், ஒழுக்கத்தையும்,பொருளாதார நலனையும் காட்டிலும் நமது கருவூலத்தை நிரப்புவதுதான் முதன்மையானதா?” என்றார். ஆங்கிலேயர்கள் விவசாயிகளை கஞ்சா பயிரிடுமாறு வற்புறுத்தி துன்புறுத்திய வேளையில் கஞ்சா உற்பத்தியை தடை செய்தார் திப்புசுல்தான். ஆங்கிலேயர்கள் விபச்சாரத்திலும் காசு பார்த்த வேளையில் விபச்சாரத்தை தடைச்செய்ததோடு அநாதைச் சிறுமிகளை கோயிலுக்கு தேவதாசியாக தானமளிப்பதையும் தடைச்செய்தார்.

அடிமை விற்பனையை தடைச்செய்த திப்பு
‘எந்த அரசு வேலையானாலும் கூலி கொடுக்காமல் வேலை வாங்கக்கூடாது’ என ஆணை பிறப்பித்தார். கேரளாவில் மேல்ஜாதி நம்பூதிரிகளால் விதிக்கப்பட்ட கடுமையான சடங்குகளால் ஒரேநேரத்தில் பல கணவர்களைப் பெற்று ஆண்களுடனான தொடர்பில் எவ்விதக் கட்டுப்பாடுமில்லாமல் நாயர் சமூக பெண்களால், சொந்த தந்தையின் பெயர்கூட தெரியாத சமுதாயமாக அச்சமூகம் மாறியது. நம்பூதிரிகள் ஒழுக்க சீரழிவின் உச்சத்திற்கு சென்று சூத்திர பெண்களையும் பாலியல் பலாத்காரம் செய்த வேளையில் பல நம்பூதிரி கன்னிப்பெண்கள் தனியறைக்குள் சிக்கி பலர் கன்னியராகவே இறந்தனர்.

வரதட்சணை கொடுமை வேறு சமூகத்தில் புழக்கத்திலிருந்தது. இத்தகையக் கலாச்சார, பண்பாட்டுச் சீரழிவு, குலவழக்கம் என்ற பெயரில் நடைமுறையில் இருந்த காலகட்டத்தில்தான் திப்புவின் சீர்திருத்த முயற்சிகள் தொடங்கின. சன்மார்க்க விதிமுறைகளை உறுதியாகப் பேணிய திப்பு, உடம்பை நிர்வாணமாகக் காண்பிப்பதைக் கடுமையாக வெறுத்திருந்தார். குளிக்கும் வேளையில் கூட உடம்பை மேலிருந்து கீழ்வரை மறைத்திருந்த அவரது வெட்க உணர்வு, மிகப் பிரபலமாக இருந்தது.

சட்டத்திற்கு உட்படாத ஆண்-பெண் தொடர்புகளைச் சமுதாய விரோதமாகத் திப்புக் கருதியிருந்தார்; சன்மார்க்க அடிப்படைகளை உயர்ந்ததாகக் கருதவும் தனது சொந்த வாழ்க்கையில் அவற்றை உறுதியாகக் கடைபிடிக்கவும் செய்தார். அதன் காரணத்தினாலேயே, மேலாடையின்றி மதியத் தூக்கம் தூங்கும் தனது அறையில் நுழைந்த வேலைக்காரப் பெண்ணிடம் திப்பு, கடுமையாகக் கோபப்பட்டார். இதனை பி.கே.பாலகிருஷ்ணன் என்பவர் புகழ்ந்து பாராட்டுகிறார்.

இவ்விதம் சன்மார்க்கத் தத்துவங்களில் உறுதியான நம்பிக்கையுடன் அதன் கொள்கைகளைப் பின்பற்றிய திப்பு, தனது பிரஜைகளும் அசிங்கமான பழக்க வழக்கங்களைத் துறந்து, தூயவாழ்க்கை வாழ வேண்டும் என ஆவல் கொண்டிருக்க வேண்டும். இந்த மனப்பூர்வமான நல்லெண்ணம், தான் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரி என்ற அவரது உணர்வு ஆகியன கீழ்க்காணும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கட்டளையைப் பிறப்பிக்க அவரைத் தூண்டியது.

“உங்களுக்கு இடையில் ஒரு பெண் பத்து ஆண்களுடன் இணைந்து உறவு கொள்வதும் உங்களின் தாய், சகோதரிகளை இவ்விதம் நடப்பதற்கு நீங்கள் சம்மதிப்பதும் உங்களது பூர்வ ஆச்சாரமாக இருந்து வருகின்ற நிலையில், நீங்கள் அனைவரும் விபச்சாரத்தில் பிறந்தவர்களும் ஆண்-பெண் உறவு விஷயத்தில் நிலத்தில் மேய்ந்து நடக்கும் கால்நடைகளை விடக் கீழான வெட்கமற்றவர்களுமாகின்றீர்கள். இவ்விதமுள்ள பாவகரமான துர் ஆச்சாரங்களை விட்டொழித்து, சாதாரண மனிதர்களைப் போன்று வாழ்வதற்கு நாம் இதன் மூலம் உங்களுக்குக் கட்டளையிடுகின்றோம்.”

மேல்ஜாதி நம்பூதிரிகளால் ஒரு பெரும் சமுதாயமே கேவலமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்ததை நினைத்துப் பார்த்தால், எத்தனை மகத்துவமிக்க கட்டளை இது என்பது புரியும்!

கீழ்சாதிப்பெண்கள் மேலாடை அணியக்கூடாது என்று மேல்ஜாதி வர்க்கம் விதித்த சட்டத்தை மாற்றி மேலாடை அணிய சட்டம் வகுத்தவர் திப்பு.

திப்புவின் மத நல்லிணக்கம்
திப்புசுல்தான் இஸ்லாத்தில் பிடிப்புள்ளவராக சிறந்த முஸ்லிமாக வாழ்ந்தவர். அவருக்கு இஸ்லாத்தின் மீதான பிடிப்பு பிறமதங்களின் மீது எவ்வித காழ்ப்புணர்வையும் ஏற்படுத்தவில்லை. இந்துக் கோயில்களுக்கும், மடங்களுக்கும் திப்பு அளித்த கொடைகள் ஏராளம்.

திப்புவின் நிர்வாகத்தில் அரசால் சமய நிறுவனங்களுக்காக செலவழிக்கப்பட்ட ஆண்டுத் தொகையான ரூ.2,33,959 வராகன்களில் இந்துக் கோயில்களுக்கும் மடங்களுக்கும் மட்டும் 2,13,959 வராகன்கள் அளிக்கப்பட்டது என்ற கணக்கு விபரமே திப்பு தனது ஆட்சியில் பெருவாரியாக இருந்த இந்துக்களுக்கு பெருமளவில் ஆதரவளித்தார் என்பது புலனாகிறது.

இதனை சேலம் அரசு அருங்காட்சியக காப்பாட்சியராகயிருந்த க.இலக்குமிநாராயணன் தமது ‘திப்புவின் சமயக் கொள்கை’ என்ற நூலில் குறிப்பிடுகிறார். ஆனால் இதனை ஒப்புக்கொள்ளாத காழ்ப்புணர்வுக் கொண்ட கல்கத்தா பல்கலைக்கழக சமஸ்கிருத பிரிவின் தலைவராகயிருந்த டாக்டர் ஹரிபிரசாத் சாஸ்திரி என்பவர் ‘திப்பு முஸ்லிமாக மாறச்சொல்லி வற்புறுத்தியதால், 3000 பிரமாணர்கள் தற்கொலைச் செய்துக் கொண்டனர்’ என்று எழுதிய அண்டப் புழுகு வங்காளம், அஸ்ஸாம், பீகார், ஒரிஸ்ஸா, உ.பி.,ம.பி ஆகிய மாநிலங்களிலிலுள்ள பாடப் புத்தகங்களில் இடம் பெற்றிருந்ததை கண்ணுற்ற இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்குக் கொண்டவரும் ஒரிஸ்ஸா மாநிலத்தின் ஆளுநராக பதவி வகித்திருந்த பி.என்.பாண்டே இதனைக் கண்ணுற்று திடுக்கிட்டு இச்சம்பவம் நிச்சயமாக பொய்யான ஒன்று கூறி இதனை எழுதிய ஹரிபிரசாத்தைத் தொடர்புக் கொண்டு அவரது கூற்று அவதூறானது என்று நிரூபித்ததோடு பல்கலைக்கழக பாடத்திட்டத்திலேயே ஹரிபிரசாத் எழுதிய புத்தகத்தையே நீக்குவதற்கு காரணமான மகத்தானதொரு பணியைச் செய்தார் பி.என்.பாண்டே.

திப்புவின் விவசாயக்கொள்கை
“எந்தச் சாதி மதத்தைச் சேர்ந்தவரானாலும் சரி, உழுபவர்களுக்குத் தான் நிலம் சொந்தமாக இருக்கவேண்டும்” என்று திப்பு பிரகடனம் செய்கிறார். ரயத்வாரி முறையை அமல்படுத்தியதுடன், பிராமணர்களின் நிலங்களுக்கு வழங்கப்பட்ட வரிவிலக்கையும் திப்பு ரத்து செய்திருக்கிறார். இராணுவம் மற்றும் துணை இராணுவப் படையினர் 3 லட்சம் பேருக்கு நிலம் வழங்கியிருக்கிறார்.

சென்னை மாகாணத்தைப் போல அல்லாமல் மைசூர் அரசில் தலித் சாதியினருக்குப் பல இடங்களில் நிலஉடைமை இருந்ததாக எட்கர் தர்ஸ்டன் என்ற ஆய்வாளர் கூறுகிறார்.

1792 போருக்குப்பின் திப்புவிடமிருந்து ஆங்கிலேயர்கள் கைப்பற்றிக் கொண்ட சேலம் மாவட்டம் வேலூர் தாலூக்காவிலிருந்து வரிக் கொடுமை தாளாமல் 4000 விவசாயிகள் திப்புவின் அரசுக்குக் குடி பெயர்ந்ததை 1796லேயே பதிவு செய்திருக்கிறான் ஆங்கிலேய அதிகாரி தாமஸ் மன்றோ.

1792 ஆம் ஆண்டு தோல்விக்கு பிறகும் கூட ஆங்கிலேயரை வர்த்தகம் செய்ய தமது எல்லைக்குள் அனுமதிக்கவில்லை திப்புசுல்தான். அதுமட்டுமல்லாமல், உள்ளூர் வர்த்தகர்களை ஊக்குவித்தார். பணப் பயிர் உற்பத்தி, பெங்களூர் லால் பாக் என்ற தாவரவியல் பூங்கா, பட்டுப் பூச்சி வளர்ப்பு என விவசாயத்தை பிற உற்பத்தித் துறைகளுடன் இணைப்பதிலும்பாசன வசதியைப் பெருக்கி விவசாயத்தை விரிவுப்படுத்துவதில் கவனம் செலுத்தியிருக்கிறார்.

1911 இல் ஆங்கிலேய பொறியாளர்கள் கிருஷ்ணராஜ சாகர் அணையக்கட்ட பணிகளைத் துவக்கியபொழுது அதே இடத்தில் அணைக்கட்டு கட்டுவதற்கு 1798 ஆம் ஆண்டு திப்பு அடிக்கல் நாட்டப்பட்ட கல்லைக் கண்டனர். இந்த அணைநீரை பயன்படுத்தி உருவாக்கப்படும் விளைநிலங்களுக்கு வரிவிலக்கு அளிக்கவேண்டும் என்ற திப்புவின் ஆணையையும் கண்டனர்.

திப்புவின் ஜனநாயக பண்பு அவருடைய நிர்வாகம் தொடர்பான உத்தரவுகள் அனைத்திலும் வெளிப்பட்டது. “விவசாயிகள் மீது கசையடி போன்ற தண்டனைகளை நிறுத்திவிட்டு, 2 மல்பெரி மரங்களை நட்டு 4 அடி உயரம் வளர்க்க வேண்டும்” என்று தண்டனை முறையையே மாற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

போர்களத்தில் நேர்மை
“தோற்கடிக்கப்பட்ட எதிரி நாட்டின் சொத்துக்களைச் சூறையாடுவதன் மூலம் சிலர் பணக்காரர்கள் ஆகலாம். ஆனால் தேசத்தை அது ஏழ்மையாக்கும்; மொத்த இராணுவத்தின் கவுரவத்தையும் குலைக்கும். போர்களை போர்க்களத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் மீது போர் தொடுக்காதீர்கள். பெண்களைக் கவுரவமாக நடத்துங்கள். அவர்களது மத நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுங்கள். குழந்தைகளுக்கும் முதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்” என்று தன் இராணுவத்துக்கு எழுத்து பூர்வமாக ஆணை பிறப்பிக்கிறார் திப்பு. ஆங்கிலேயக் காலனியாதிக்கவாதிகளிடமிருந்து ஒரு பேச்சுக்குக் கூட இத்தகைய நாகரிகமான சிந்தனை அன்று வெளிப்பட்டதில்லை.”

மக்கள் சக்தியை திரட்டியவர்
ஆங்கிலேயனுக்கு எதிரான போரில் படைவீரர்கள் மட்டுமல்ல பொதுமக்களும் கலந்துக் கொள்ள வேண்டும் என விரும்பினார். ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் மக்கள் சக்திப் போராட்டமாக வெடிக்கவேண்டும் என்று திப்பு கனவு கண்டார். இதற்காக ஒரு உத்தரவையும் பிறப்பித்தார் திப்பு. “அனைத்து விவசாயிகளுக்கும் துப்பாக்கி பயிற்சி வழங்கப்பட வேண்டும்.தினமும் ஊருக்கு வெளியே துப்பாக்கிச்சுடும் பயிற்சி அளிக்கப்படவேண்டும்”.என்பதே அந்த ஆணை.

தம் குடிமக்கள் மீது எவ்வளவு நம்பிக்கை இருந்தால் ஒரு ஆட்சியாளரே அவர்களுக்கு ஆயுதம் வழங்க உத்தரவிட முடியும்?.

திப்புவை மாவீரனாக மாற்றியது எது?
இவ்வாறு போர்வீரராக, ஆட்சியாளராக, நிர்வாகியாக, பொருளாதார அறிஞராக, தொழில் நுட்ப வல்லுநராக, சீர்திருத்தவாதியாக, ஒழுக்க சீலராக திகழ்ந்த திப்புசுல்தானின் வாழ்க்கையை பார்க்கும் பொழுது ஒரு மன்னன் இவ்வாறெல்லாம் வாழ இயலுமா என்ற கேள்வி நம் மனதில் எழலாம்.
உலக வரலாற்றை மாற்றியமைத்தவர்கள் ஒரு சிலரே. அந்த வரிசையில் திப்பு சுல்தானும் ஒருவர் என நாம் நம்மை சமாதானப்படுத்திவிட முடியாது, அல்லது பொதுவுடைமைவாதிகள் கூறுவது போல் பிரெஞ்சுப்புரட்சியைப்பார்த்தோ, மாறிவரும் உலமைப்புரிந்துக்கொள்ளும் கண்ணோட்டமோ அல்ல திப்புவை வெற்றிகரமான மனிதராக மாற்றியது. அவ்வாறெனில் எந்தக்கொள்கை அவரை மாற்றியது? அதுதான் இஸ்லாம்.

திப்பு மேற்கூறப்பட்டது போன்ற பண்புகளை மட்டுமன்றி அவர் பிரபஞ்சத்தை படைத்த அல்லாஹ் என்ற இறைவனை நம்பிக்கைக் கொண்டிருந்தார். அவர் கொண்டிருந்த இறை நம்பிக்கையும், அவர் படித்த திருக்குர்ஆனும் அவருக்கு தன்னம்பிக்கையை ஊட்டியது. உத்வேகத்தை அளித்தது. நீதியாளராக மாற்றியது.ஒழுக்க சீலராக பரிணமிக்க வைத்தது. கடைசியில் அச்சுறுத்தலுக்கும், ஆசைவார்த்தைகளுக்கும் அடிபணியாத உயிர்தியாகியாகவும் மாற்றியது. ஆகவே திப்புவின் வெற்றிகளுக்கு பின்னணியில் இஸ்லாம் என்ற இறைக்கொள்கைதான் காரணமே தவிர வேறொன்றுமில்லை.

விடுதலைப்போரின் முன்னோடியாகவும், ஆங்கிலேயனுக்கு சிம்மசொப்பனமாகவும் திகழ்ந்து தனது இந்திய குடிமக்களின் வாழ்வில் வசந்தங்களை வீசச்செய்த மாவீரன் திப்புவின் வாழ்க்கை வரலாற்றை சஞ்சய்கான் என்பவர் தொலைக்காட்சித்தொடராக தயாரிக்க முற்பட்டபொழுது இந்தியாவின் நாசகரசக்திகளான பாசிஸ்டுகள் கொடுத்த இன்னல்கள் கொஞ்சநஞ்சமல்ல. சஞ்சய்கான் ’the sword of tippu’ என்ற தொலைக்காட்சித் தொடரை படமாக்கிய ப்ரீமியர் சினிமா ஸ்டுடியோவுக்கு தீவைக்கப்பட்டதால் 55 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். ஏராளமான பொருள்சேதம் ஏற்பட்டது. சஞ்சய்கான் பலத்தகாயங்களுடன் பலமாத சிகிட்சைக்குப் பின்னர் உயிர் தப்பினார். இந்தியாவை ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு திப்பு சுல்தானின் உண்மையான வீரமிக்க வரலாற்றை ஒளிபரப்ப ஒரு நபர் தணிக்கை குழுவை நியமித்தது. அந்த நபர் பாசிச சிந்தனைக் கொண்ட மல்கானியாவார். அவரோ தீரன் திப்புவின் தியாகவரலாற்றை ’கற்பனைக்கதை’ என்று குறிப்பிடவேண்டும் என்று கூறினார்.

புராணங்களும், நம்ப முடியாத சம்பவங்களெல்லாம் உண்மை நிகழ்வுகளைப்போல் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப படும்பொழுது மாபெரும் வீரனின் வரலாற்றை ‘கற்பனை கதை’ எனக்குறிப்பிட்டதன் மூலம் இந்தியாவை நெடுங்காலம் ஆளும் காங்கிரஸ் அரசு திப்புசுல்தானுக்கு அவமரியாதையை செய்தது.

சமீபத்தில் 200 ஆண்டுகளுக்கு முன்னால் திப்புவிடமிருந்து ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகள் அபகரித்த பொருட்களில் ஒன்றான வாள் 3.5 கோடிக்கு லண்டனில் ஏலமிடப்பட்ட பொழுது அதனை வாங்கி நினைவுச்சின்னமாக பாதுகாக்கக்கூட நமது இந்திய அரசு தயாராக இல்லை.

அந்நிய கரன்சிக்கும், சொகுசு வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு பிறந்த தேசத்தின் ரகசியங்களை அந்நியனுக்கு தாரைவார்க்கும் கும்பல்களுக்கு திப்புவின் தியாக வாழ்க்கையில் பாடம் பெறவேண்டியுள்ளது. ஏகாதிபத்தியத்திற்கும், பயங்கரவாத தேசத்திற்கும் கொடை பிடித்து இந்திய தேசத்தின் இறையாண்மையை காவுக்கொடுக்கும் ஆட்சியாளர்களுக்கு திப்புவின் தியாகத்தில் படிப்பினைகள் உள்ளன. அநீதிக்கெதிராகவும், அக்கிரமத்திற்கெதிராகவும், பாரபட்ச நீதிக்கெதிராகவும், அரச பயங்கரவாதத்திற்கெதிராகவும், மனித உரிமை மீறல்களுக்கெதிராகவும்,வறுமை,லஞ்சம்,ஊழல்,நிர்வாக சீர்கேடுகள்,தேசத்தை அழிக்க காத்திருக்கும் பாசிசம், உலகமயமாக்கல் போன்ற கொள்கைகளுக்கும் எதிராகவும் போராடுபவர்களுக்கு திப்புவின் தியாக வாழ்க்கை உத்வேகமாகவும், உந்துசக்தியாகவும் மாற வேண்டும்.அதுவே இந்நாளில் அந்த மாபெரும் தியாகிக்கு நாம்
செய்யும் மரியாதையாகும்
முத்தமிழ்
சென்னை
துணிச்சல் ஒரு தொற்று நோய், துணிந்துவிடுங்கள் மற்றவர்களிடமும் அது உருவாகும் - சூலியன் அசாஞ்சே - விக்கிலீக்ஸ்
“We who believe in freedom cannot rest” – Ella Baker (An African-American civil rights leaders)

காதல்





ஆயிரம் காலத்துப் பயிரை
ஒரே வாரத்தில் அறுவடை செய்ய
நிகழ்த்தப்படும் திருவிழா,
பெண் பார்க்கும் படலம்...!

சொந்தங்கள் புடைசூழ
சுழிக்கும் உம் புன்னகையும்
வியர்த்த உம் பாதங்களும்
என் வாசலில் வியாபித்திருக்க,
"மாப்பிள்ளை வந்தாராம்"
என்றென் தங்கை ஓடிவர,
தடதடவென்று தடுமாறிப்போனேன் !

அதுவரை இருந்த தைரியம்
அப்போதே கரையத்
தொடங்கிவிட்டது !
இனம்புரியாத நாணம்
இன்றோடு என் கண்களைப்
பூட்டித் திறவுகோலை
உம் கைகளில் திணித்தது !

முதல் முறை புடவை என்
முகத்தையே மாற்றியது ...
நேற்றிருந்த தாவணியும்
சல்வாரும் தலைமறைவாயின ....

உதறிய பாதத்தோடு
உங்களின் முன் உட்காருகையில்
உச்சி வியர்த்து மூச்சுத் திணறிப்
போய்விட்டது....

இருமுறைதான் உரசி இருக்கும்
நம் கண்கள் ,
இருநூறு முறையாயினும்
என் தோழியிடம் பகிர்ந்து
கொண்டிருந்திருப்பேன்
அந்நிகழ்வை ....!

இறைவனின் ஒப்பந்தப்படி
இருமனங்களின் மணத்திற்கான
அஸ்திவாரம்....
நமக்கு நிச்சயதார்த்தம் !

வெகுநாட்களாய் மௌனித்த
என் மகிழ்ச்சித் துணுக்குகள்
உம் வரிசைக்கேள்விகளால்
நிரம்பி கரைபுரண்டு
களித்திருந்தன.....

கேலிப் பேச்சுக்களும்
கிண்டல் ஏச்சுக்களும்
நிறைந்த சபையில்
உங்களின் வெட்கம் ஒரு
மார்க்கமாகவே இருந்தது
எனக்கு.....!

நீங்கள் ஊட்டிய இனிப்பை
இனிப்பை இன்றளவும்
சுவைத்துக்கொண்டிருக்கிறேன்
உங்களின் நினைவுகளோடு
சேர்த்து....!

ஒரே நாளில் என் துக்கங்களோடு
தூக்கத்தையும் களவாடிச்
சென்றவரே....
உங்களுக்காகக் காத்திருந்த
என்னிருபது வருடங்கள்
இம்மூன்று மாத இடைவெளியில்
தோற்று நிற்கின்றன....!

தனியே பேசுகிறேன் என்று
வீட்டில் அனைவரும்
கேலி பேசுகிறார்கள்....
ம்ம்ம் .. அவர்களுக்குத் தெரியாது
நான் உங்களிடம் தான்
பேசிக்கொண்டிருக்கிறேன் என்று....!

செய்வதறியாது என் நினைவுகள்
உங்களின் நினைவுகளைச் சுமந்து
தனியே பயணித்துக்கொண்டிருக்கின்றன ,
நம் மணநாள் காண...!

-யாரோ

தமிழின் பெருமை 1

சங்க இலக்கியங்களில் உள்ள ஊர்கள் எல்லாம் தற்போது உள்ள மக்களான தேவேந்திரர் / மள்ளர் மக்களையே குறிக்கும். எடுத்துக்காட்டாக, ராஜபாளையம் அருகில் உள்ள உர் "முதுகுடி" ஆகும். இங்கு தேவேந்திரர் / மள்ளர் மக்களே ஆதிகாலத்தில் இருந்து இருகின்றார்கள். தற்சமயம் மட்டும் ஒரு சில கள்ளர் இன மக்கள் வந்து குடியேறி இருக்கின்றனர். நான் அந்த உருக்கு பக்கத்துக்கு ஊர்க்காரன். அதே போல் பழனிக்கு பக்கத்தில் உள்ள ஊர்
ஆயக்குடி ஆகும்.இங்கேயும் தேவேந்திரர் / மள்ளர் மக்களே ஆதியில் இருந்து இருக்கின்றார்கள்.

நன்றி.

வீ.பீ.திருமுகம்.

தமிழர்கள் தமிழ் நிலத்தின் பழங்குடிகளே

தமிழின் முதல் நூலான தொல்காப்பியத்தில் மூவேந்தர்களைப் பற்றிய செய்திகள் வருகின்றன. சங்க இலக்கியங்களில் மூவேந்தரைப் பற்றியும், குறுநில மன்னர்கள், சிற்றூர்த் தலைவர்கள், அவர்களுக்கு உட்பட்டு வாழ்ந்த மக்கள் ஆகியோரைப் பற்றியும், அவர்களின் வாழ்வியல் முறைகளைப் பற்றியும் பல அகச் சான்றுகள் காணக்­கிடைக்கின்றன. இவர்கள் அனைவரும் ஒரு மூதாதையரிடமிருந்து வந்தவர் என்பதற்குரிய அகச் சான்றுகளோ சமூகப் புனைகதைகளோ (Social Myth) எவையும் கிடைத்தில. எனினும் ஒவ்வொரு குடிவழி­யினரும் இந்த நாட்டுக்கே உரிய தொல்பழங்குடியைச் சேர்ந்தவர்களே என்பதற்கும், அவர்கள் வாழ்ந்த ஊர், நகரம் ஆகியன தொன்மை வாய்ந்தனவே என்பதற்கும் அகச்சான்றுகள் பல கிடைக்கின்றன.

ஆவினன் குடி முருகு. 178

எவ்வி தொல்குடி புறம்: 202: 14

சீர்மை சிறப்பின் தொல்குடி கலி.105: 2

தென்திசை ஆய்குடி புறம். 132: 8

தொல்குடி முருகு.128

தொல்லிசை நட்டகுடி கலி.104:15

நல்லிசை முதுகுடி புறம் 58:5

பண்பின் முதுகுடி புறம். 391:9

பழங்குடி அகம்: 290:8

பீடுபெறு தொல்குடி புறம்: 289: 4

மன்பதை காக்கும் நீள்குடி புறம்: 335:8

முரசு கெழு முதுகடி கலி.105:2

வாணன் சிறுகுடி அகம்.117:18

எனக் குடிகளின் தொன்மையினையும்,

நியம மூதூர் நற்.45:4

மல்லல் மூதூர் நற்.319:3

அழியா மரபின் மூதூர் நற். 311:5

மணல்மலிமூதூர் நற்.319:3

பெருங்கலி மூதூர் நற்.321:10

ஆதியருமன் மூதூர் குறுந்.293:4

கம்பலை மூதூர் புறம் 4:1

மல்லல் மூதூர் புறம்: 18.12

நனந்தலை மூதூர் புறம் 228:4

என ஊர்களின் தொன்மையின்மையும் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. தமிழகத்துப் பழங்குடிகள் வெளிநாட்டிலிருந்து வந்தவை என்பதற்கு எவ்வித அகச் சான்றுகளும் இல்லை. மாறாக இங்கேயே தோன்றி வாழ்ந்தவை என்பதையே மேற்காட்டிய எடுத்துக்காட்டுகள் உறுதி செய்கின்றன. எனவே, நாடு தழுவிய பொது வரலாறும், பொது மரபும் தமிழ் மண்ணிலிருந்தே உருப்பெறுகின்றன.

முனைவர் ப.கிருட்டிணன்:

தமிழ் நூல்களில் தமிழ் மொழி தமிழ் இனம் தமிழ் நாடு: பக்கம்: 47-48


தமிழே தொன்மையும் வளமையும் சீர்மையும் செம்மையும் உடையது.

திராவிட மொழிகளுள் தமிழ்மொழியே மிகமிகத் தொன்மை வாய்ந்ததும், பெருவளம் பொருந்தியதும், மிகவுஞ் சீர்திருந்தியதுமான உயர்தனிச் செம்மொழியாகும்; சொல்வளம் மிகுந்தது; அளவிட வொண்ணாப் பண்டைக்காலமுதற் பயின்று வருவது. வகையும் தொகையும் தனியுமாகக் கணக்கற்ற இலக்கியங்கள் இம்மொழியில் இலங்குகின்றன. ஆனால், பெரும்பாலும் அவையெல்லாம் மிகவுந் திருந்திய செந்தமிழ் நடையானியன்றவை; வழக்காற்றிற் பேசப்பட்டு வரும் கொடுந்தமிழ் நடையானியன்றவையல்ல.

கிரீயர்சன்; கால்டுவெல் ஒப்பிலக்கணம்: கிரீயர்சன்

மொழியாராய்ச்சிக் குறிப்புகளுடன்: பக். 172

தமிழ் இந்தியா

உலகின் மூத்த குடியான தமிழ்மக்கள் தோன்றி, வாழ்ந்த வாழும் பகுதியான ஆசியாக் கண்டத்தை நாம்தமிழ்க் கண்டம் என்றே அழைக்க வேண்டும். இந்தியா என்பது தமிழ்த் துணைக்கண்டக் கூட்டரசு நாடுகள் என அழைக்கப்பெற வேண்டும்.அல்லது குறைந்தது தமிழ் இந்தியர் என்றாவது அழைக்கப்பட வேண்டும்.

- இலக்குவனார் திருவள்ளுவன்:

தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம்- ஓர் இனிய கனவு. (தமிழ் ஆட்சிமொழி: பக்கம். 88

புதுமை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன வெளியீடு)

நம் பணத்தில் கொழிக்கும் இந்தியை எதிர்ப்போம்

இந்தியை எதிர்க்கவில்லை; இந்தித் திணிப்பைத்தான் எதிர்க்கின்றோம் என்று கூறுவதையும் நேருவின் உறுதிமொழியைச் சட்டமாக்க வேண்டும் என்று கூறுவதையும் நிறுத்த வேண்டும். நேருவின் உறுதிமொழி என்பது இந்தி முழுமையாக நம் மீது ஏறுவதை ஒத்திப் போடுவதுதானே தவிர, நம்மொழிக்குத் தலைமை வாய்ப்புத் தருவது அன்று. அதுபோல் இந்திமொழி இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட மாநிலத்தின் அவர்களின் பணத்தில் வளர்க்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு நாம் யார்? ஆனால், அனைத்து மொழிபேசுவோரின் செல்வத்தைச் சுரண்டிக் கட்டாயம் இல்லை என்ற பெயரில் இந்தி பரப்பப்படுவதும் வளர்க்கப்படுவதும் திணிக்கப்படுவதும் உடனடியாக நிறுத்தப்பட்டாகவேண்டும். அரசு பள்ளிக் கூடங்களில் இருந்து இந்தியை விரட்டி விட்டோம் எனக்கூறித் தனியார் பள்ளிகளிலும் தனிப்பட்ட முறையிலும் இந்தி வளர்ச்சிக்குப் பெருஞ்செலவு செய்யப்படுவது நிறுத்தப்பட்டாக வேண்டும். இந்தி வளர்ச்சிக்காகத் தட்சிண பாரத இந்தி பிரச்சாரசபை மூலம் நமது செல்வம் செலவிடப்படுவதையும் நிறுத்த வேண்டும். இந்தியைப் படிப்போருக்கும் படிப்பிப்போருக்கும் தரப்படும் உதவிகள் நிறுத்தப்பட வேண்டும். இவை மூலமும் நடுவணரசின் பிறதுறை அமைப்புகள் மூலமும் இந்திக்குச் செலவழித்த தொகையை இழப்பீடு போல் தமிழ் வளர்ச்சிக்குச் செலவழிக்க நடுணவரசு தரவேண்டும். தொலைக்காட்சி மூலம் இந்தித் திணிப்பிற்கு இதுவரை செலவழித்தத் தொகையும் தமிழுக்குத் தரப்பட வேண்டும். மேலும் இந்தியை மட்டும் தேசிய மொழி என்றும் பிறவற்றை வட்டார மொழிகள் என்றும் அரசியலமைப்பிற்கு மாறாகக் கூறுவதை எல்லா இடங்களிலும் நிறுத்த வேண்டும். தேசிய ஒளிப்பரப்பு என்று சொல்வதை நடுவண் ஒளிபரப்பு என்றும் மண்டல ஒளிபரப்புஎன்று சொல்வதை தமிழ்நாட்டு ஒளிபரப்பு என்றும் (மாநிலங்களின் பெயர்களில்) குறிக்க வேண்டும். நடுவண் ஒளிபரப்பில் இந்தி நிகழ்ச்சிகள் மட்டும் இடம் பெறுவது நிறுத்தப்பட வேண்டும். அனைத்து மாநில நிகழ்ச்சிகளும் இடம் பெறும் வகையில் இவை அமைய வேண்டும்.

- இலக்குவனார் திருவள்ளுவன்:

தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம்-ஓர் இனிய கனவு.

(தமிழ் ஆட்சிமொழி: பக்கம். 89 புதுமை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன வெளியீடு)


தமிழ்த் தேவை மதிப்பை உயர்த்துக

அறிவிற்காகக் கல்வி என்றில்லாமல் வேலைக்காகக் கல்வி என்று வந்ததால் பெரும்பாலும் எதுவும் படிக்க வாய்ப்பு இல்லாதவர்களே தமிழ் படிக்க முன்வருகிறார்கள். வந்தபின் தமிழ் ஆர்வத்தை வளர்த்துக் கொள்வோரும் குறைவு. இவர்கள் ஆசிரியராக மாறும் பொழுது உருவாக்கப்படும் தமிழ் உணர்வும் குறைவு. எனவே தமிழுக்கான தேவை மதிப்பை உயர்த்த மேற்குறித்த செயற்பாடுகளுடன் தமிழ்நாட்டில் அமையக்கூடிய நடுவணரசு அலுவலகங்களுக்கும் வங்கிகளுக்கும் சார்பு அமைப்புகளுக்கும் ஆடசித் துறைப்­பணிகளுக்கும் தமிழில் உயர்பட்டம் பெறுவதைத் தகுதியாக அறிவிக்க வேண்டும்.

-

- தமிழ்க் கணியன்களை (Software) மிகுதியாக உருவாக்கிக் கணினி வழித் தமிழ் பயன்பாட்டைப் பெருக்குதல், எழுத்துச் சீர்திருத்தம் என்ற பெயரில் தமிழைச் சிதைக்க வரும் முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளியிடுதல், ‘தமிழ்நாடு என்று வேண்டுமென்றே கூறாமல், ‘தமிழ்மாநிலம் என்று பயன்படுத்துவதையும், ‘அர்த்தால், ‘பந்த் போன்ற அயல்மொழிச் சொற்களை வேண்டுமென்றே கலப்பதற்கும் தடை விதித்தல், கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தாமல் இலங்கையில் உள்ளது போல்,தமிழ் வரிவடிவையே பயன்படுத்தச் செய்தல், கல்வி, வேலைவாய்ப்பு இட ஒதுக்கீடுகளைத் தமிழை முதற்பாடமாக எடுத்துப் படித்தவர்களுக்கு மட்டும் வழங்குதல் தமிழ் வழிப் பயில்வோருக்கு மட்டுமே கல்வி உதவித் தொகைகள் அளித்தல் முதலான பல்வேறு நடவடிக்கைகளும் தமிழின் தேவை மதிப்பை உயர்த்தும்.

- இலக்குவனார் திருவள்ளுவன்:

தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் - ஓர் இனிய கனவு.

(தமிழ் ஆட்சிமொழி பக்கம்.91) புதுமை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன வெளியீடு)


அயல் எழுத்தைச் சேர்க்காதீர்

- பழந்தமிழ்க் காலமுதல் வடசொற்களும் திசைச்சொற்களும் தமிழில் இன்றியமையாதவிடத்து, வழங்கி வந்திருக்கின்றன. ஆனால், அவ்வாறு வருகின்றபோது, அவை தமிழியலுக்கு ஏற்ப உருமாறித் தொழில்புரிய வேண்டுமென்பது ஆன்றோர் வகுத்த தமிழ்மரபு. வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ,எழுத்தொடு புணர்ந்த சொல்லே கும்மே என்பது தொல்காப்பிய நூற்பா. வடவெழுத்துகளிற் பல,தமிழியலுக்கு முரண்படுதலின் அவற்றை நீக்கி எழுதுவதே முறையென மூதறிஞர் கண்டனர். வடசொற்கள் பெரிதும் வழங்கத்தலைப்பட்ட பிற்காலத்திலும் இவ்வியலுக்கு மாறுபடா வண்ணம் நன்னூலார் வகுத்தனர். சங்க கால முதல் இதுகாறும் தோன்றி வரும் சிறந்த நூல்கள் யாவும் இம்மொழி மரபு வழுவாமல் பாதுகாத்து வருகின்றன. ஒரு சிலர், தமிழ் எழுத்திலக்கணத்தில் குறைபாடுகள் மலிந்துள்ளனவென்றும் அவற்றை அகற்ற வேண்டுமென்றும் கூறுகின்றனர். இலார்டு கிரேக்கர் என்ற ஆங்கிலப்புலவர், தம் மொழியில் எழுத்திலக்கணத்திற் காணப்­பெறும் சில குறைகளைத் தொகுத்து ஒரு கவியில் விளக்கியுள்ளார். எனினும், ஆங்கில மொழியின் வளர்ச்சி சிறிதும் குறையவில்லை. அச்சுக் கோப்போரின் துன்பத்திற்காகச் சிலர் தமிழ் எழுத்துகளிற் சிலவற்றை அகற்ற விரும்புகின்றனர். சிலர் என்ற ஆங்கில எழுத்தையும் தமிழில் இல்லாத பிறமொழி எழுத்துகளையும் தமிழிற் சேர்க்கக் கருதுகின்றனர். இவை எம்மொழியாளரும் கைக்கொள்ளாத­வை. வீரமாமுனிவர், போப்பையர் போன்ற அயல்நாட்டவர்கூட இவ்வாறு சொல்லத் துணியவில்லை. வடகலை, தென்கலை உணர்ந்த நச்சினார்க்கினியர், பரிமேலழகர் போன்றோர், வடநூலார் கொள்கையில் அடிப்பட்டிருந்தும் தமிழ் மரபு இழுக்காவண்ணம் உரைநூல் இயற்றினார்களே. ஆங்கிலம், வடமொழி ஆகியவற்றில் சீர்திருத்தம் செய்ய நிரம்ப இடமிருந்தும் அவற்றைத் திருத்தத் துணியாது, தமிழ்மொழியைத் திருத்துவோமென்பது பேதமையாகும். கலைநூல்களில் வழங்கும் குறியீட்டுச் சொற்களுக்கு ஏற்ற தமிழ்ச் சொற்கள் நூலிலோ,வழக்கிலோ கிடைத்தால் அவற்றைக் கொள்ள வேண்டும்; இல்லாதபோது, தமிழில் படைத்துக் கொள்ள வேண்டும். இதுவும் இயலாவிடில், தமிழ் மரபிற்கேற்பத் திரித்து அமைக்க வேண்டும். ஆங்கிலேயர் அரிசி, இஞ்சி என்பவற்றைக் குறிப்பதற்கான சொற்களைத் என ஆக்கிக் கொண்டனர். செர்மானியர்,அறிவு­நூற்­பொருள்களைத் தம் தாய்மொழியிலேயே ஆக்கிக் கொண்டனர். எனவே, இம்முறையைத் தமிழர்களும் பின்பற்றலாம்.

- தமிழவேள் த.வே.உமாமகேசுவரனார்:

நெல்லையில் நடைபெற்ற சென்னை மாகாணத் தமிழர் முதலாவது மாநாட்டுத் தலைமையுரை (7.8.32):தரவு: தமிழவேள் த.வே.உமாமகேசுவரனார் வாழ்வும் பணிகளும்: பக்கம். 98-99


தமிழின் பெருமை

வடமொழிக்கும் தமிழ் மொழிக்கும் உள்ள

வேறுபாடு மிகப்பலவாம்.

வடமொழியில் தமிழிற் போலத் திணைபாலுணர்த்தும் வினைவிகுதிகள் இல்லை. பவதி என்னும் வினைமுற்று இருக்கின்றான்இருக்கின்றாள்இருக்கின்றது என ஓர் ஈறே நின்று எழுவாய்க்கேற்றவாறு பொருளுணர்த்தும். தமிழில் வினை முற்றுகளின் ஈறே திணை பால்களை உணர்த்தி நிற்கும. பால் வகுப்புத் தமிழிற் பொருளைப் பற்றியும், வடமொழியிற் சொல்லைப் பற்றியும் உள்ளது. ஆண் மகனைப் பற்றி வருஞ்சொற்களெல்லாம் ஆண்பாலாகவும், பெண்மகளைப் பற்றி வருவனவெல்லாம் பெண்பாலாகவும் தமிழில் உள்ளன. வடமொழியில் இவ்வறையறை இல்லை; மாறுபட்டு வரும், சொல் நோக்கியதாகலின், மனைவியைப் பற்றிய பாரியை என்னுஞ் சொல் பெண்பாலாகவும், “தாரம் ஆண்பாலாகவும், “களத்திரம் என்னுஞ் சொல் நஞ்சகப் பாலாகவும் வருதல் காண்க. வடமொழியில் ஒருமை இருமை பன்மைச் சொற்கள் உள்ளன. தமிழில் ஒருமையல்லாதனவெல்லாம் பன்மையே. திணைப்பாகுபாடு, குறிப்பு வினைமுற்று முதலிய தமிழுக்கே உரியன.

- பண்டிதமணி மு.கதிரேசனார்: உரைநடைக்கோவை : பகுதி 2: பக்கம். 15-16


பார்க்கும் இடமெல்லாம் பைந்தமிழே

உழவும் கலப்பையும் காரும் கயிறும் குண்டையும் நுகமும் சாலும் வயலும் வாய்க்காலும் ஏரியும் மடுவும் ஏற்றமும் பிறவும், பயிரும் களையும் நட்டலும் கட்டலும் முதலாய ஏரெழுபதும் தமிழ் மொழிகளால் இயன்றனவே.

தமிழர்கள் வசித்துவரும் வீடுகளின் கூறுகளாகிய தலைக்கடையும் புழைக்கடையும் கூரையும் வாரையும் கூடமும் மாடமும் தூக்கும் தூணும் கல்லும் கதவும் திண்ணையும் குறமும் தரையும் சுவரும் மண்ணும் மரனும் மற்றவும் தமிழே.

தலையும் காலும் கண்ணும் காதும் மூக்கும் மூஞ்சியும் வயிறும் மார்பும் நகமும் சதையும் நாவும் வாயும் பல்லும் மயிரும் மற்றவும் ஆகிய உடற்கூற்று மொழிகள் தானான தனித்தமிழன்றே!

தமிழ்நாட்டிலுள்ள சிற்றூர் சீறூர் ஆரூர் பேரூர் புற்றூர் சேய்ஞ்ஞலூர் மணலி நெல்லூர் நெல்லை கொன்னூர் குறட்டூர் என்னும் ஊர்கள் பலப்பல தமிழ்மொழியே புனைந்தன.

ஞாயிறும் திங்களும் செவ்வாய் வியாழனும் வெள்ளியும் ஆகின்ற கிழமைகட்குத் தமிழ்ப்பெயரே பெயர்.

தொண்ணூற் றொன்பதினாயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது வரையில் எண்ணப்பட்ட எண்களின் ஒன்றேனும் வடமொழியால் எண்ணப்படுவதில்லை.

ஆழாக்கு உழக்கு நாழி குறுணி பதக்கு தூணி கலன் என்னும் முகத்தலளவையும்.

சாண் அடி முழம் என்னும் நீட்டல் அளவையும்,

பலம் வீசை மணங்கு என்னும் எடுத்தலளவையும்,

இன்னும் கீழ்வாய் இலக்கமும் மேல் வாய் இலக்கமும் அவற்றின் குறியீடுகளும் எல்லாம் தமிழே.

தமிழர்கள் உண்ணும் சோறும் சாறும் காயும் கறியும் பாலும் பழமும் நெய்யும் தயிரும் உப்பு முதல் ஒன்பதும் பருப்பு முதல் பத்தும் தமிழ்ச்சுவையே உடையனவாய்த் தமிழ் மணமே வீசுகின்றன.

தமிழர்கள் செவிக் கொள்ளும் உணவான எழுத்தும் சொல்லும் பொருளும் யாப்பும் அணியும் ஆகிய ஏடும் சுவடியும் எடுத்துப் பார்க்கும் இடமெல்லாம் தமிழாகவே இருக்கின்றன.

இவர்களுடைய துணிவும் அணியும் தமிழே.

இவர்கள் தொழும் கடவுளும் தமிழ் மயமே.

தமிழர்களுடைய வீடும் நாடும் காடும் மேடும் எங்கும் புகுந்து பார்த்த இடமெல்லாம் தமிழ் தமிழாகவே இருக்கின்றன.

- திருமணம் செல்வக் கேசவராயர் (1864-1921)


மக்கள் முதலில் தோன்றிய பகுதி குமரி நாடே!

உலக முதன்மொழி தமிழே!

இக்குமரி நாடு தான் கிழக்கே சந்தாத் தீவுகள் வரையும் மேற்கே மடகாசுகர் தீவு வரையிலும் அகன்று கிடந்ததாகக் கூறப்படும் இலெமூரியா என்ற நிலப்பரப்பாம். இந்நிலப்பரப்பு ஒரு காலத்தெழுந்த பெரு வெள்ளத்தில் ஆழ்ந்து போயிற்றென்றும் அவ்வாறு ஆழ்ந்து போன பெரு நிலம் இவ்வுலக முழுவதற்கும் நடுவிற் கிடந்த பரப்பாகலான் மக்கள் முதன்முதலில் இந்நிலத்தில் இருந்து பின் நாற்றிசையினும் பிரிந்து சென்று வேறுபட்டனர் என்றும் அங்ஙனம் இதிலிருந்து தொல்லோர் வழங்கியது தமிழ் மொழியாமென்றும் பல காரணங்கள் காட்டி விளக்கி நிறுவினார் மேற்புல விஞ்ஞானிகளுள் ஒருவர்.

- பரிதிமாற் கலைஞர் பேரா.வி.கோ. சூரியநாராயணர்

புறநானூறு

செய்யுள் 80

சோழன் கோப் பெருநற்கிள்ளியைச் சாத்தந்தை யார் பாடியது

போர்க்களம் புகும் மல்லனின் நிலை

“இன் கடுங்க கள்ளின் ஆமூர் ஆங்கண்,
மைந்துடை மல்லன் மத வல முருக்கி,
ஒரு கால் மார்பு ஒதுங்கின்றே; ஒரு கால்
வரு தார் தாங்கிப்பின் ஒதுங்கின்றே -
நல்கினும் நல்கான் ஆயினும், வெல் போர்ப்
பொரல் அருந் தித்தன் காண்கதில் அம்ம
பசித்து பணை முயலும் யானை போல,
இரு தலை ஒசிய ஏற்றி,
களம் புகு மல்லற் கடந்து அடு நிலைதயே”

பொருள்

இனிமையான வெறியூட்டும் கள்ளையுடைய ஆமூரை ஆளுகின்ற மள்ளர் குல மன்னன், ஆமூர் மல்லன் தித்தன், தனது மதங்கொண்ட வலிமையைக் காட்டத் தனது மகன் மல்லனைச் சோழன் கோப்பெருநற்கிள்ளியை எதிர்த்துப் போருக்கு அனுப்பினான். கிள்ளி ஒரு காலால் தன் மேல் வீசப்படுகின்ற ஆயுதங்களை விலக்கிக் கொண்டு ஒரு காலைத் தித்தன் மகன் மல்லனின் மார்பில் வைத்துத் தலையும், காலும் முறியும வண்ணம் வளைத்துக் கொன்றான்.

செய்யுள் 81

சோழன் கோப்பெருநற்கிள்ளியை புலவர் சாந்தத்தையார் பாடியது.

வெண்கொற்றக் குடையையுடைய மள்ளன்
கோப்பெருநற்கிள்ளியின் கைபட்டவர் நிலை

“ஆர்ப்பு எழு கடலினும் பெரிது; அவன் களிறே
கார்ப் பெயல் உருமின் முழங்கல் ஆனாவே;
யார்கொல் அளியர்தாமே-ஆர் நார்ச்
செறியத் தொடுத்த கண்ணிக்
கவிகை மள்ளன் கைப்பட்டோரே?”

மள்ளன் கோப்பெருநற் கிள்ளியின் படை மள்ளர்களின் ஆரவார ஒலியானது ஏழு கடல்களும் ஆரவார ஒலியானது ஏழு கடல்களும் கூடி ஆரவாரிக்கும் ஒலியை விடவும் பெரியதாகும். அவனுடைய யானைகள் பிளிரும் ஒலியானது கார்காலத்தில் வரும் இடி முழக்கத்தை விடவும் அதிகமானது. நாரிலே தொடுக்கப்பட்ட அத்திமாலை அணிந்து வெண்கொற்றக் குடையுடன் வரும் மள்ளன் பெருநற்கிள்ளியின் கைவாள் பட்டவர் எவர்தாம் பிழைத்து எழுவர்?

செய்யுள் 84

வெண்கொற்றக்குடையுடைய மள்ளர்ள கோப்பெருநற்கிள்ளி வெற்றி பெற்ற போது நக்கண்ணையார் அவனைப் பாடியது.

ஏமுற்றுக் கிழந்த மள்ளர்

“என்னை, புற்கை உண்டும் பெருந் தோளன்னே
யாமே, புறஞ் சிறை இருந்தும் பொன் அன்னம்மே;
போர் எதிர்ந்து என்னை போர்க களம் புகினே,
கல்லென் பேரூர் விழவுடை ஆங்கண்,
ஏமுற்றுக் கழிந்த மள்ளர்க்கு
உமணர் வெரூஉம் துறையன்னன்னே”

பொருள்

எளிய உணவை உண்டாலும் எம் வேந்தன் பகைவர் அஞ்சும் நல்ல தோள் வலிமையுடையவன். நான் சிறைப்புறத்தில் இருந்தாலும் போர்க்களத்தில் அவனைப் பலமுறை காணப் பெற்றதால் போர் அச்சத்தால் பயந்து பசலையான பொன்னிறம் பெற்றேன். இரத்தினங்கள் நிறையப் பெற்ற பேரூர்த் திருவிழாவில் இருந்து கொண்டு தன்னை யார் வெல்ல முடியும் என்று தோள் வலிமை பேசிக் கொண்டு மகிழ்வுடன் இருக்கும் மள்ளர் பெருநற்கிள்ளி உப்பு விற்கும் உமணர் அஞ்சுவது போல் பகைவர்களைப் பயமுறுத்தும் படைத் துஐறகளை உடையவன்.

செய்யுள் 89

அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது.

சீறி வரும் வேலுக்கும் அஞ்சா மள்ளர்

“இழை அணிப் பொலிந்த ஏந்து கோட்டு அல்குல்,
மடவரல், உண்கண், வாள்நுதல், விறலி!
பொருநரும் உளரோ, நும் அகன் தலை நாட்டு?’ என,
வினவல் ஆனாப் பொருபடை வேந்தே!
ஏறி கோல் அஞ்சா அரவின் அன்ன
சிறு வல் மள்ளரும் உளரே, அதா அன்று,
பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை
வளி பொரு தெண் கண் கேட்பின்,
அது போர்’ என்னும் என்னையும் உளனே”

அதியமானின் பகையரசர் கேலி பேச ஒளவையார் கூறியது: ஆபரணங்களால் இழைக்கப் பெற்ற உடையினை அரையில் கட்டிக் கொண்டும், மைதீட்டிய கண்ணினையும் அழகிய நெற்றியையும் கொண்ட விறலி! என்னோடு போர் செய்து வெற்றி பெறுவாரும் உள்ளாரோ? உன்னுடைய நாட்டில் என என்னைப் பார்த்து (ஒளவையார்) வினவுகின்றான். போர்ப் படையுடைய வேந்தனே, எதிர்த்துப் பாய்ந்து வரும் வேலுக்கும் அஞ்சாத பாம்பு போல் சீறிப் பாயும் வலிமையுள்ள மள்ளர் குலப் போர் மறவரும் உள்ளனர் எம்நாட்டில். அது மட்டும் அல்லாது மன்றத்திலே தூங்கும் போது வீசுகின்ற கூதிர்க் காற்றினால் எழும் ஓசையைப் போர் முரசின் ஒலி என்று எண்ணி உடன் எழுகின்ற போர் எண்ணமும், ஆர்வமும் உள்ள எம் மன்னனுன் உள்ளான். இவற்றையெல்லாம் கண்டும், கேட்டுமா நீ இவ்வாறு கேட்கின்றாய்?

செய்யுள் 219

கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்தானைக் கருவூர் பெருசஞ்சதுக்கத்துப் பூத நாதனார் பாடியது

உண்ணா நோன்பிருந்து உடலை வாட்டும்
மள்ளன் கோப்பெருஞ்சோழன்

“உள் ஆற்றுக் கவலைப் புள்ளி நீழல்,
முழூஉ வள்ளூரம் உணக்கும் மள்ள!
புலவுதி மாதோ நீயே –
பலரால் அத்தை, நின் குறி இருந்தோரே”.

பொருள்

கவலையுள்ள உள்ளத்தோடு, உள் மனத்துக் காயத்தை ஆற்ற வெயிற் புள்ளிபோல் உள்ள மர நிழலில் இருந்து கொண்டு உடம்பில் உள்ள உனது தசைகளை வாட்டுகின்ற மள்ளர் குல மன்னனே, மள்ள! உன் எண்ணத்திற்கேற்ப உன்னோடு வடக்கிருந்தவர்கள் பலராவார். யானும் அவர்கள் போல உன்னோடு வடக்கிருக்க வராமல் காலந்தாழ்ந்து வந்ததை எண்ணி வருந்துகின்றாயோ?

செய்யுள் 251

புலவர் மாற்பித்தியார் பாடியது

அருவியில் நீராடி முடியை உலர்த்தும் மள்ளர்

“ஒவத்து அன்ன இடனுடை வரைப்பில்,
பாவை அன்ன குறுந் தொடி மகளிர்
இழை நிலை நெகிழ்த்த மள்ளற் கண்டிகும்
கழைக் கண்நெடு வரை அருவி ஆடி
கான யானை தந்த விறகின்
கடுந்த தெறல் செந் தீ வேட்டு,
புறம் தாழ் புரி சடை புலர்த்துவோனே!”

பொருள்

ஓவியம் போல ஒளிர்கின்ற அழகான இல்லத்தில் கொல்லிப் பாவை போன்ற வடிவத்தை உடிய வளையல்களணிந்த மகளிரின் ஆபரணங்கள் கழலச் செய்யுமாறு காதற்கனலை மூட்டித் துயர்ப்படுத்தும் மன்னர் குல மன்னனைக் கண்டோம். அவனே மூங்கில் புதர்கள் நிறைந்த உயர்ந்த மலையிலே இருந்து விழும் அருவி நீரில், குளித்து ஆடிக் களைத்து, காட்டு யானை மேல் கொண்டு வந்த விறகால் தீ மூட்டித் தனது முதுகில் புரளும் சடை முடியை உலர்த்திக் கொண்டிருக்கம் மள்ளன் ஆவான்.

செய்யுள் 254

கயமனார் பாடியது

வீழ்ந்து பட்ட மள்ளனின் அன்னை நிலை.

“இளையரும்முதியரும் வேறு புலம் படர,
எடுப்ப எழஅய், மார்பாம் மண் புல்ல,
இடைச் சுரத்து இறுத்த மள்ள! விளைர்த்த
வளை இல் வறுங் கை ஒச்சி, கிளையுள்
‘இன்னன் ஆயினன், இளையோன்’, என்று,
நின் உரை செல்லும் ஆயின், ‘மற்று
முன் ஊர்ப் பழுனிய கோளி ஆலத்து,
புள் ஆர் யாணர்த்தற்றே, என் மகள்
வளனும் செம்மனும் எமக்கு’ என, நாளும்
ஆனாது புகழும் அன்னை”

பொருள்

யாங்கு ஆகுவள்கொல்? அளியள்தானே! இளையோரும், முதியோரும் வேற்று நாட்டுக்குச் செல்லுமாறு, உன் மார்பகம் மண்ணில் பட, உடலை எடுத்தாலும் எழுந்திராமல், விரைத்துப் படுத்திருக்கும் மள்ளர் குலப் போர் மறவனே! வரைகளற்ற வெளுத்துப் போன என் கரங்களை உயர்த்தி, எம் காதலன் மள்ளர் குலத்து இளைஞன், இப்படி ஆகீ விட்டான் என்று நம் சுற்றத்தார்களுக்குக் கூறிட, ஊரில் உள்ள பழுத்த ஆல மரத்தை நோக்கிப் பறவைகள் விரைந்து கூடுவதுபேல் எல்லோரும் விரைந்து இங்கு வந்து விடுவார்கள். என் மகனின் வீரமும், செல்வமும், சிறப்பும் என்னைச் சேர்ந்தது என்று நாளும் அவன் புகழ் பாடிக் கொண்டிருக்கும் மள்ளனது அன்னை இனி என்ன செய்வாள்? அவள் நிலை இரங்கத்தக்கதாகும்.

செய்யுள் 399

தாமான் தோன்றிக் கோவை ஐயூர் முடவனார் பாடியது

மள்ளருள் சிறந்த மள்ளன்

“அடு மகள் முகந்த அளவா வெண்ணெல்
தொடி மாண் உலக்கைப் பரூஉக் குற்று அரிசி
காடி வெள் உலைக் கொளீஇ நீழல்
ஒங்கு சினை மாவின் தீம் கனி நறும் புளி,
மோட்டு இரு வராஅல் கோட்டு மீன் கொழுங்கு குறை
செறுவின் வள்ளை, சிறு கொடிப் பாகல்,
பாதிரி ஊழ் முகை அவிழ் விடுத்தன்ன
மெய் களைந்து, இனனொடு விரைஇ….

மூழ்ப்பப் பெய்த முழு அவிழ்ப் புழுக்கல்
அழிகளின் படுநர் களி அட வைகின்;
பழஞ்சோறு அயினும் முழங்கு நீர்ப் படப்பைக்
காவிரிக் கிழவன், மாயா நல் இசைக்
கிள்ளிவளவன் உள்ளி, அவர் படர்தும்;
செல்லேன் செல்லேன், பிறர் முகம் நோக்கேன்;
நெடுங் கழைத் தூண்டில் விடு மீன் நொடுத்து,
கிணைமகள் அட்ட பாவல் புளிக்கூழ்
பொழுது மறுத்து உண்ணும் உண்டியேன், அழிவு கொண்டு,
ஒரு சிறை இருந்தேன்; என்னே! இனியே
அறவர் அறவன், மறவர் மறவன்,
மள்ளர் மள்ளன் தொல்லோர் மருகன்,
இசையின் கொண்டான், நனக அமுது உண்க என,
மீப் படர்ந்து இறந்து, வன் கோல் மண்ணி
வள் பரிந்து கிடந்த…. மணக்க
விசிப்புறுத்து அமைந்த புதுக் காழ்ப் போர்வை
அலகின் மாலை ஆர்ப்ப ட்டித்து,
கடியும்உணவு என்னக் கடவுட்கும் தொடேன்,
‘கடுந் தேர் அள்ளற்கு அசாவா நோன் சுவற்
பகடே அத்தை யான் வேண்டி வந்தது’ என,
ஒன்று யான் பெட்டாஅளவை, அன்றே
ஆன்று விட்டனன் அத்தை, விசும்பின்
மீன் பூத்தன்ன உருவப் பல் நிரை
ஊர்தியொடு நல்கியோனே; நீர் கொள
இழுமென இழிதரும் அருவி,
வான் நோய் உயர் சிமைத் தோன்றிக் கோவே”.

பொருள்

சோறு சமைக்கும் பெண் தேர்ந்தெடுத்துக் கொண்டு வந்த அளவில்லாத வெண் நெல்லைப் பூண் போட்ட பருத்த உலக்கையால் குத்தி எடுக்கப்பட்ட அரிசி கொண்டு மிளகுநீர் சேர்த்து வெள் உலையில் வைத்துச் சமைத்த சோற்றில் ஓங்கிச் செழித்துக் காய்த்த புளிக் குழம்பு சேர்த்து, நெல் வயல்களில் உள்ள மோட்டுகளில் (குழீ, வளை) இருக்கும் வரால் மீன் கொண்டு சமைத்த கறியும், வரிகளையுடைய ழுவை மீன் கொண்டு சமைத்த இறைச்சியும், வயல்களில் படர்ந்துள்ள வள்ளைக் கீரையும், சிறுகொடிகளில் காய்க்கும் பாகற்காயும், பாதிரிமரத்தின் முதிர்ந்த அரும்பினது இதழை விரித்தாற் போன்ற தோலை நீக்கி மற்ற இனமானவற்றோடு சேர்த்துச் சமைத்த கூட்டைச் சோறு மூழ்கும்படி ஊற்றிப் பிசைந்த முழு அரிசிச் சோறு உண்டு, வயல்களில் பொழுது எல்லாம் உழைக்கும் உழவர் (மள்ளர்), உண்ட மயக்கம் தீர ஓய்வெடுத்திருப்பார்.

பழஞ்சோறும், பாசன நீர் நிறையப் பெற்ற கழனிகளையும், தோட்டங்களையும் உடைய பழியில்லாத நல்ல புகழையுடைய காவிரி நாட்டு மன்னன், மள்ளர் மரபினர் தலைவர், கிள்ளிளவளவனை நினைத்து அவனை நோக்கிச் செல்கின்றோம். பிறரிடம் ஒரு காலத்திலும் செல்லமாட்டேன். பிறருடைய முகத்தை உதவி வேண்டிப் பாரேன். நீண்ட மூங்கிலாலான தூண்டிலால் பிடித்த மீனை விற்று, இணைமகள் சமைத்த புளித்த தண்­ர் கலந்து பிசைந்த சோற்றை நேரமில்லாத நேரத்தில் உண்ணும் நிலையில் உள்ளவன். ஒரு நீர்க்கரையில் கழிமுகம் பார்த்துக் கொண்டிருந்தேன், என்னே! இனியே, நல்லவர்களுக்கு நல்லவனும், கொடியோர்க்குக் கொடியவனும் மள்ளர் வம்சத்தவருள் சிறந்த மள்ளனும், பாண்டியர்களின் வழித் தோன்றலுமான தாமான் தோன்றிக்கோ, நல்ல புகழ் வாய்ந்தவன், நின்பால் அன்பு கொண்டு விட்டான் ஆதலின் நீ விரும்பும் செல்வத்தைப் பெறுவாயாக என அறிந்தோர் கூறினர். இவ்வாறாகப் புறநானூறு மள்ளர் குல மக்களின் ஏர்த் தொழிலையும், போர்த் தொழிலையும், போற்றி, இவர்தம் வரலாற்றுச் சிறப்புகளையும், பண்பாட்டுப் பெருமைகளையும் எழிலுற எடுத்துரைப்பது இத்தமிழ் கூறும் நல்லுலகில் எக்குலத்தோருக்கும் இல்லாத உயர்வு இக்குலத்தோருக்கு இருப்பதைக் காட்டுகிறது.


சோழன் மள்ளர் நெய்தலங்கனால் இளங்சேட் சென்னியை ஊன் பொதி பசுங்குடையார் பாடியது

மள்ளர் மலைத்தல் போகிய மார்பன்
வழிபடுவோலைர வல் அறிதீயே,
பிறர் பழி கூறுவோர் மொழி தேறலையே
நீ மெய் கண்ட தீமை காணின்.
ஒப்படி நா டி, அத் தக ஒறுத்தி;
வந்து, அடி பொருந்தி, முந்தை நிற்பின்,
தண்டமும் தணிதி, நீ பண்டையின் பெரிதே -
அமிழ்து அட்டு ஆனாக் கமழ் குய் அடிசில்
வருநர்க்கு வரையா வசைஇல் வாழ்க்கை
மகளிர் மலைத்தல் அல்லது, மள்ளர்
மலைத்தல் போகிய, சிலைத்தார் மார்ப!
செய்து இரங்கா வினை, சேண் விளங்கும் புகழ்,
நெய்தலங்கானல், நெடியோய்! –
எய்த வந்தனம் யாம்; ஏத்துகம் பலவே!” - புறநானூறு .10

பொருள்

நெய்தலங்கனால் என்ற ஊரை வென்ற புகழ்மிக்க மள்ளர் சோழன் இளஞ்சேட் சென்னியே! உன்னை வழிபடுவோரைத் தீர அறியும் குணமுடையோனே! பிறர் மீது பழி சொல்வோரின் பேச்சை நம்பமாட்டாய், தீயவை செய்தவர் என்று ஆராய்ந்து அறிந்தால் அத்தீயவர்களுக்கு உரிய தண்டை வழங்கத் தவறமாட்டாய். அத்தீயவன் தன் தவற்றை உணர்ந்து உன்னைப் பணிந்து மன்னிப்புக் கேட்டல், அவனை மன்னித்து முன்னை விட அவன் மிது அன்பு செலுத்துவாய். உண்ண, உண்ண மேலும் ஆவல் கொள்ளும் அமிர்தம் போன்ற நல்லுணவை வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாது வழங்கும் வசைச் சொல் கோளாத வாழ்வு உடையவன். நின் தேவியர் மள்ளத்தியரைத் தழுவி இன்பம் அடைதல் அல்லாது பகை மள்ள அரசர் தொடாத மாலையணிந்த வலிமையான மார்பை உடைய மள்ளன் நீ, எந்தக் காரியத்தையும் நிதானமாகத் தவறில்லாமல், செம்மையுடன் செய்து, நின் புகழ் பரவி வாழுகின்ற சோழனே, உன் புகழ் மிக்க பண்புகளை முழுவதும் பாராட்டிப் போன்றுகின்றோம்.

புறநானூறு

செய்யுள் 77

இயற்றிய புலவர் இடைக்குன்றூர் கிழார்

“கூடி எதிர்த்து வந்த வம்ப மள்ளரைப் புகழவோ, இகழவோ இல்லை.

கிண்கிணி களைந்த கால் ஒண் கழல் தொட்டு,
குடுமி களைந்த நுதல் வேம்பின் ஒண் தளிர்
நெடுங் கொடி உழிஞைப் பவரொடு மிலைந்து,
குறுந் தொடி கழித்த கைச் சாபம் பற்றி,
நெடுந் தேர்க் கொடுஞ்சி பொலிய நின்றோன்
யார் கொல்? வாழ்க, அவன் கண்ணி! தார் பூண்டு,
தா‘லி களைந்ததன்றும் இவனே; பால் விட்டு
அயினியும் இன்று அயின்றனனே; வயின்வயின்
உடன்று மேல் வந்த வம்ப
மள்ளரை
வியந்தன்றும், இழிந்தன்றும் இலனே; அவரை
அழுந்தப் பற்றி, அகல் விசும்பு ஆர்ப்பு எழ,
கவிழ்ந்து நிலம் சேர அட்டதை
மகிழ்ந்தன்றும், மலிந்தன்றும் அதனினும் இவனே”.

பொருள்

சலங்கைகள் கழற்றப்பட்டு வீரக் கழல்களை அணிந்த கால்களையும், விரித்து முடியப்பட்ட குடுமியில் வேப்பம் பூங்கொத்தும், உழிஞைக் கொடியும் சூடி, வளையல்கள் இல்லாத கைகளிலே வில்லைப் பிடித்து நெடிய தேரில் விளங்கி நிற்கும் அவன் யாரோ? அவன் கண்ணி வாழ்வதாக. தாமரையணிந்து ஐம்படைத் தாலியைக் களையாமல் இருக்கிறான். பாலை விட்டு இன்று உணவு உண்டான். அலை அலையாய் தன்னை எதிர்த்துப் போர் செய்ய வந்த வம்ப மள்ளரான இருபெரும் வேந்தர்களையும் ஐம்பெரும் வேளிரையும் மதித்ததும் இலன்; அவமதித்ததும் இலன். தன்னை எதிர்த்து வந்த அவரை இறுகப் பிடித்து பரந்த ஆகாயத்தின் கண்ணே ஒலியெழக் கவிழ்ந்து உடலும் நிலத்தின் கண்ணே பொருந்துமாறு வீழ்த்தியதற்கு மகிழ்ந்ததும், இவ்வாறு செய்தோமென்று தற்பெருமை பேசிக் கொண்டதுவும் இலன்.

புறநானூறு

செய்யுள் 78

பாண்டியன் தலையானங்கானத்துச் செரு வென்ற மள்ளன் நெடுஞ்செழியனை இடைக்குன்றூர் கிழார் பாடியது.

“எள்ளி வந்த வம்ப மள்ளர்,
வணங்கு தொடைப் பொலிந்த வலி கெழு நோன் தாடள,
அணங்கு அருங்கடுந் திறல் என்னை முணங்கு
நிமிர்ந்து,
அளைச் செறி உழுவை இரைக்கு வந்தென்ன
மலைப்பு அரும் அகலம் மதியார், சிலைத்து எழுந்து,
விழுமயம், பெரியம், யாமே; நம்மின்
பொருநனும் இளையன்; கொண்டியும் பெரிது என,
எள்ளி வந்த வம்ப மள்ளர்
புல்லென் கண்ணர்; புறத்தில் பெயர,
ஈண்டு அவர் அடுதலும் ஒல்லான், ஆண்டு அவர்
மான் இழை மகளில் மாணினர் கழிய,
தந்தை தம் ஊர் ஆங்கண்,
தெண்கிணை கறங்கச் சென்று, ஆண்டு அட்டனனே”.

பொருள்

தீரமும், வீரமும் உள்ள எம் இறைவன் (மன்னன்) வலிமையும் வேகமும் மிக்க கால்களை உடையவன். நீரைக் கலக்கிக் கொண்டு, உழுவை மீன் தன் இரைரைய மின்னலெனச் சென்று பிடிப்பது போல், இவனது மலைப்பு அறியா மார்பினை மதியாது, மள்ளர் குலப் பகை மன்னர்கள் எழுவர் வீறு கொண்டு எழுந்து, நாம் விழுப்புண் பட்ட வெற்றி மள்ளர்கள் என்றும், புகழ் படைத்தவர்கள் என்றும், செழியன் சின்னப் பையன், போரில் கொள்ளையிடத்தக்க அவன் செல்வங்களும் அதிகம் என்றும் இகழ்ந்து பேசி எதிர்த்து வந்த வம்பு செய்கின்ற மள்ள மன்னர்களைத் தீய நோக்குடைய அவர்களைப் புறமுதுகு காட்டி ஓடச் செய்து, அவர்களைப் போர்க்களத்திலே கொல்லாது அவர்களின் ஊர்வரை விரட்டிச் சென்று அவர்களின் மனைவியர் வெட்கிட எம் இறைவன் நெடுஞ்செழியன் வெற்றி முரசு ஒலிக்கச் செய்து வம்பு செய்த அயல்நாட்டு மள்ள மன்னர்களின் ஆணவத்தைக் கொன்று ஒழித்தான்.

புறநானூறு

செய்யுள் 79

பாண்டியன் தலையாலங்கானத்து செருவென்ற மள்ளன் நெடுஞ் செழியனை இடைக்குன்றூர் கிழார் பாடியது.

“எதிர்த்த வம்ப மள்ளர் பலரே
மூதூர் வாயில் பனிக் கயம் மண்ணி,
மன்ற வேம்பின் ஒண் குழை மலைந்து,
தெண் கிணை முன்னர்க் களிற்றின் இயலி,
வெம் போர்ச் செழியனும் வந்தனன்; எதிர்ந்த
வம்ப
மள்ளரோ பலரே,
எஞ்சுவர் கொல்லோ, பகல் தவச் சிறிதே?”

பொருள்

தனது பெருமை மிக்க பழைய ஊரின் வாயிலிலே உள்ள குளத்திலுள்ள குளிர்ந்த நீரிலே குளித்து வந்து மக்கள் குழுமிப் பேசும் மன்றம் நடக்கும் இடத்தில் உள்ள வேப்ப மரத்தின் பூந்தளிரைப் பறித்துத் தலையில் சூடிக் கொண்டு போர் முரசம் முழங்க, யானை போலப் பெருமிதத்துடனும், வலிமையுடனும் போர்க்களத்திற்குப் பாண்டியன் நெடுஞ்செழியன் வந்தான். அவனை எதிர்த்துபூ போரிட வந்த அயல் நாட்டு மன்னர் குலப் பகையரசர் பலரே ஆயினும் பகல் பொழுது குறைவாக இருப்பினும் அவனிடம் மிஞ்சமாட்டார்கள்.