புதன், 15 ஜூன், 2011

தமிழின் பெருமை

வடமொழிக்கும் தமிழ் மொழிக்கும் உள்ள

வேறுபாடு மிகப்பலவாம்.

வடமொழியில் தமிழிற் போலத் திணைபாலுணர்த்தும் வினைவிகுதிகள் இல்லை. பவதி என்னும் வினைமுற்று இருக்கின்றான்இருக்கின்றாள்இருக்கின்றது என ஓர் ஈறே நின்று எழுவாய்க்கேற்றவாறு பொருளுணர்த்தும். தமிழில் வினை முற்றுகளின் ஈறே திணை பால்களை உணர்த்தி நிற்கும. பால் வகுப்புத் தமிழிற் பொருளைப் பற்றியும், வடமொழியிற் சொல்லைப் பற்றியும் உள்ளது. ஆண் மகனைப் பற்றி வருஞ்சொற்களெல்லாம் ஆண்பாலாகவும், பெண்மகளைப் பற்றி வருவனவெல்லாம் பெண்பாலாகவும் தமிழில் உள்ளன. வடமொழியில் இவ்வறையறை இல்லை; மாறுபட்டு வரும், சொல் நோக்கியதாகலின், மனைவியைப் பற்றிய பாரியை என்னுஞ் சொல் பெண்பாலாகவும், “தாரம் ஆண்பாலாகவும், “களத்திரம் என்னுஞ் சொல் நஞ்சகப் பாலாகவும் வருதல் காண்க. வடமொழியில் ஒருமை இருமை பன்மைச் சொற்கள் உள்ளன. தமிழில் ஒருமையல்லாதனவெல்லாம் பன்மையே. திணைப்பாகுபாடு, குறிப்பு வினைமுற்று முதலிய தமிழுக்கே உரியன.

- பண்டிதமணி மு.கதிரேசனார்: உரைநடைக்கோவை : பகுதி 2: பக்கம். 15-16


பார்க்கும் இடமெல்லாம் பைந்தமிழே

உழவும் கலப்பையும் காரும் கயிறும் குண்டையும் நுகமும் சாலும் வயலும் வாய்க்காலும் ஏரியும் மடுவும் ஏற்றமும் பிறவும், பயிரும் களையும் நட்டலும் கட்டலும் முதலாய ஏரெழுபதும் தமிழ் மொழிகளால் இயன்றனவே.

தமிழர்கள் வசித்துவரும் வீடுகளின் கூறுகளாகிய தலைக்கடையும் புழைக்கடையும் கூரையும் வாரையும் கூடமும் மாடமும் தூக்கும் தூணும் கல்லும் கதவும் திண்ணையும் குறமும் தரையும் சுவரும் மண்ணும் மரனும் மற்றவும் தமிழே.

தலையும் காலும் கண்ணும் காதும் மூக்கும் மூஞ்சியும் வயிறும் மார்பும் நகமும் சதையும் நாவும் வாயும் பல்லும் மயிரும் மற்றவும் ஆகிய உடற்கூற்று மொழிகள் தானான தனித்தமிழன்றே!

தமிழ்நாட்டிலுள்ள சிற்றூர் சீறூர் ஆரூர் பேரூர் புற்றூர் சேய்ஞ்ஞலூர் மணலி நெல்லூர் நெல்லை கொன்னூர் குறட்டூர் என்னும் ஊர்கள் பலப்பல தமிழ்மொழியே புனைந்தன.

ஞாயிறும் திங்களும் செவ்வாய் வியாழனும் வெள்ளியும் ஆகின்ற கிழமைகட்குத் தமிழ்ப்பெயரே பெயர்.

தொண்ணூற் றொன்பதினாயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது வரையில் எண்ணப்பட்ட எண்களின் ஒன்றேனும் வடமொழியால் எண்ணப்படுவதில்லை.

ஆழாக்கு உழக்கு நாழி குறுணி பதக்கு தூணி கலன் என்னும் முகத்தலளவையும்.

சாண் அடி முழம் என்னும் நீட்டல் அளவையும்,

பலம் வீசை மணங்கு என்னும் எடுத்தலளவையும்,

இன்னும் கீழ்வாய் இலக்கமும் மேல் வாய் இலக்கமும் அவற்றின் குறியீடுகளும் எல்லாம் தமிழே.

தமிழர்கள் உண்ணும் சோறும் சாறும் காயும் கறியும் பாலும் பழமும் நெய்யும் தயிரும் உப்பு முதல் ஒன்பதும் பருப்பு முதல் பத்தும் தமிழ்ச்சுவையே உடையனவாய்த் தமிழ் மணமே வீசுகின்றன.

தமிழர்கள் செவிக் கொள்ளும் உணவான எழுத்தும் சொல்லும் பொருளும் யாப்பும் அணியும் ஆகிய ஏடும் சுவடியும் எடுத்துப் பார்க்கும் இடமெல்லாம் தமிழாகவே இருக்கின்றன.

இவர்களுடைய துணிவும் அணியும் தமிழே.

இவர்கள் தொழும் கடவுளும் தமிழ் மயமே.

தமிழர்களுடைய வீடும் நாடும் காடும் மேடும் எங்கும் புகுந்து பார்த்த இடமெல்லாம் தமிழ் தமிழாகவே இருக்கின்றன.

- திருமணம் செல்வக் கேசவராயர் (1864-1921)


மக்கள் முதலில் தோன்றிய பகுதி குமரி நாடே!

உலக முதன்மொழி தமிழே!

இக்குமரி நாடு தான் கிழக்கே சந்தாத் தீவுகள் வரையும் மேற்கே மடகாசுகர் தீவு வரையிலும் அகன்று கிடந்ததாகக் கூறப்படும் இலெமூரியா என்ற நிலப்பரப்பாம். இந்நிலப்பரப்பு ஒரு காலத்தெழுந்த பெரு வெள்ளத்தில் ஆழ்ந்து போயிற்றென்றும் அவ்வாறு ஆழ்ந்து போன பெரு நிலம் இவ்வுலக முழுவதற்கும் நடுவிற் கிடந்த பரப்பாகலான் மக்கள் முதன்முதலில் இந்நிலத்தில் இருந்து பின் நாற்றிசையினும் பிரிந்து சென்று வேறுபட்டனர் என்றும் அங்ஙனம் இதிலிருந்து தொல்லோர் வழங்கியது தமிழ் மொழியாமென்றும் பல காரணங்கள் காட்டி விளக்கி நிறுவினார் மேற்புல விஞ்ஞானிகளுள் ஒருவர்.

- பரிதிமாற் கலைஞர் பேரா.வி.கோ. சூரியநாராயணர்

புறநானூறு

செய்யுள் 80

சோழன் கோப் பெருநற்கிள்ளியைச் சாத்தந்தை யார் பாடியது

போர்க்களம் புகும் மல்லனின் நிலை

“இன் கடுங்க கள்ளின் ஆமூர் ஆங்கண்,
மைந்துடை மல்லன் மத வல முருக்கி,
ஒரு கால் மார்பு ஒதுங்கின்றே; ஒரு கால்
வரு தார் தாங்கிப்பின் ஒதுங்கின்றே -
நல்கினும் நல்கான் ஆயினும், வெல் போர்ப்
பொரல் அருந் தித்தன் காண்கதில் அம்ம
பசித்து பணை முயலும் யானை போல,
இரு தலை ஒசிய ஏற்றி,
களம் புகு மல்லற் கடந்து அடு நிலைதயே”

பொருள்

இனிமையான வெறியூட்டும் கள்ளையுடைய ஆமூரை ஆளுகின்ற மள்ளர் குல மன்னன், ஆமூர் மல்லன் தித்தன், தனது மதங்கொண்ட வலிமையைக் காட்டத் தனது மகன் மல்லனைச் சோழன் கோப்பெருநற்கிள்ளியை எதிர்த்துப் போருக்கு அனுப்பினான். கிள்ளி ஒரு காலால் தன் மேல் வீசப்படுகின்ற ஆயுதங்களை விலக்கிக் கொண்டு ஒரு காலைத் தித்தன் மகன் மல்லனின் மார்பில் வைத்துத் தலையும், காலும் முறியும வண்ணம் வளைத்துக் கொன்றான்.

செய்யுள் 81

சோழன் கோப்பெருநற்கிள்ளியை புலவர் சாந்தத்தையார் பாடியது.

வெண்கொற்றக் குடையையுடைய மள்ளன்
கோப்பெருநற்கிள்ளியின் கைபட்டவர் நிலை

“ஆர்ப்பு எழு கடலினும் பெரிது; அவன் களிறே
கார்ப் பெயல் உருமின் முழங்கல் ஆனாவே;
யார்கொல் அளியர்தாமே-ஆர் நார்ச்
செறியத் தொடுத்த கண்ணிக்
கவிகை மள்ளன் கைப்பட்டோரே?”

மள்ளன் கோப்பெருநற் கிள்ளியின் படை மள்ளர்களின் ஆரவார ஒலியானது ஏழு கடல்களும் ஆரவார ஒலியானது ஏழு கடல்களும் கூடி ஆரவாரிக்கும் ஒலியை விடவும் பெரியதாகும். அவனுடைய யானைகள் பிளிரும் ஒலியானது கார்காலத்தில் வரும் இடி முழக்கத்தை விடவும் அதிகமானது. நாரிலே தொடுக்கப்பட்ட அத்திமாலை அணிந்து வெண்கொற்றக் குடையுடன் வரும் மள்ளன் பெருநற்கிள்ளியின் கைவாள் பட்டவர் எவர்தாம் பிழைத்து எழுவர்?

செய்யுள் 84

வெண்கொற்றக்குடையுடைய மள்ளர்ள கோப்பெருநற்கிள்ளி வெற்றி பெற்ற போது நக்கண்ணையார் அவனைப் பாடியது.

ஏமுற்றுக் கிழந்த மள்ளர்

“என்னை, புற்கை உண்டும் பெருந் தோளன்னே
யாமே, புறஞ் சிறை இருந்தும் பொன் அன்னம்மே;
போர் எதிர்ந்து என்னை போர்க களம் புகினே,
கல்லென் பேரூர் விழவுடை ஆங்கண்,
ஏமுற்றுக் கழிந்த மள்ளர்க்கு
உமணர் வெரூஉம் துறையன்னன்னே”

பொருள்

எளிய உணவை உண்டாலும் எம் வேந்தன் பகைவர் அஞ்சும் நல்ல தோள் வலிமையுடையவன். நான் சிறைப்புறத்தில் இருந்தாலும் போர்க்களத்தில் அவனைப் பலமுறை காணப் பெற்றதால் போர் அச்சத்தால் பயந்து பசலையான பொன்னிறம் பெற்றேன். இரத்தினங்கள் நிறையப் பெற்ற பேரூர்த் திருவிழாவில் இருந்து கொண்டு தன்னை யார் வெல்ல முடியும் என்று தோள் வலிமை பேசிக் கொண்டு மகிழ்வுடன் இருக்கும் மள்ளர் பெருநற்கிள்ளி உப்பு விற்கும் உமணர் அஞ்சுவது போல் பகைவர்களைப் பயமுறுத்தும் படைத் துஐறகளை உடையவன்.

செய்யுள் 89

அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது.

சீறி வரும் வேலுக்கும் அஞ்சா மள்ளர்

“இழை அணிப் பொலிந்த ஏந்து கோட்டு அல்குல்,
மடவரல், உண்கண், வாள்நுதல், விறலி!
பொருநரும் உளரோ, நும் அகன் தலை நாட்டு?’ என,
வினவல் ஆனாப் பொருபடை வேந்தே!
ஏறி கோல் அஞ்சா அரவின் அன்ன
சிறு வல் மள்ளரும் உளரே, அதா அன்று,
பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை
வளி பொரு தெண் கண் கேட்பின்,
அது போர்’ என்னும் என்னையும் உளனே”

அதியமானின் பகையரசர் கேலி பேச ஒளவையார் கூறியது: ஆபரணங்களால் இழைக்கப் பெற்ற உடையினை அரையில் கட்டிக் கொண்டும், மைதீட்டிய கண்ணினையும் அழகிய நெற்றியையும் கொண்ட விறலி! என்னோடு போர் செய்து வெற்றி பெறுவாரும் உள்ளாரோ? உன்னுடைய நாட்டில் என என்னைப் பார்த்து (ஒளவையார்) வினவுகின்றான். போர்ப் படையுடைய வேந்தனே, எதிர்த்துப் பாய்ந்து வரும் வேலுக்கும் அஞ்சாத பாம்பு போல் சீறிப் பாயும் வலிமையுள்ள மள்ளர் குலப் போர் மறவரும் உள்ளனர் எம்நாட்டில். அது மட்டும் அல்லாது மன்றத்திலே தூங்கும் போது வீசுகின்ற கூதிர்க் காற்றினால் எழும் ஓசையைப் போர் முரசின் ஒலி என்று எண்ணி உடன் எழுகின்ற போர் எண்ணமும், ஆர்வமும் உள்ள எம் மன்னனுன் உள்ளான். இவற்றையெல்லாம் கண்டும், கேட்டுமா நீ இவ்வாறு கேட்கின்றாய்?

செய்யுள் 219

கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்தானைக் கருவூர் பெருசஞ்சதுக்கத்துப் பூத நாதனார் பாடியது

உண்ணா நோன்பிருந்து உடலை வாட்டும்
மள்ளன் கோப்பெருஞ்சோழன்

“உள் ஆற்றுக் கவலைப் புள்ளி நீழல்,
முழூஉ வள்ளூரம் உணக்கும் மள்ள!
புலவுதி மாதோ நீயே –
பலரால் அத்தை, நின் குறி இருந்தோரே”.

பொருள்

கவலையுள்ள உள்ளத்தோடு, உள் மனத்துக் காயத்தை ஆற்ற வெயிற் புள்ளிபோல் உள்ள மர நிழலில் இருந்து கொண்டு உடம்பில் உள்ள உனது தசைகளை வாட்டுகின்ற மள்ளர் குல மன்னனே, மள்ள! உன் எண்ணத்திற்கேற்ப உன்னோடு வடக்கிருந்தவர்கள் பலராவார். யானும் அவர்கள் போல உன்னோடு வடக்கிருக்க வராமல் காலந்தாழ்ந்து வந்ததை எண்ணி வருந்துகின்றாயோ?

செய்யுள் 251

புலவர் மாற்பித்தியார் பாடியது

அருவியில் நீராடி முடியை உலர்த்தும் மள்ளர்

“ஒவத்து அன்ன இடனுடை வரைப்பில்,
பாவை அன்ன குறுந் தொடி மகளிர்
இழை நிலை நெகிழ்த்த மள்ளற் கண்டிகும்
கழைக் கண்நெடு வரை அருவி ஆடி
கான யானை தந்த விறகின்
கடுந்த தெறல் செந் தீ வேட்டு,
புறம் தாழ் புரி சடை புலர்த்துவோனே!”

பொருள்

ஓவியம் போல ஒளிர்கின்ற அழகான இல்லத்தில் கொல்லிப் பாவை போன்ற வடிவத்தை உடிய வளையல்களணிந்த மகளிரின் ஆபரணங்கள் கழலச் செய்யுமாறு காதற்கனலை மூட்டித் துயர்ப்படுத்தும் மன்னர் குல மன்னனைக் கண்டோம். அவனே மூங்கில் புதர்கள் நிறைந்த உயர்ந்த மலையிலே இருந்து விழும் அருவி நீரில், குளித்து ஆடிக் களைத்து, காட்டு யானை மேல் கொண்டு வந்த விறகால் தீ மூட்டித் தனது முதுகில் புரளும் சடை முடியை உலர்த்திக் கொண்டிருக்கம் மள்ளன் ஆவான்.

செய்யுள் 254

கயமனார் பாடியது

வீழ்ந்து பட்ட மள்ளனின் அன்னை நிலை.

“இளையரும்முதியரும் வேறு புலம் படர,
எடுப்ப எழஅய், மார்பாம் மண் புல்ல,
இடைச் சுரத்து இறுத்த மள்ள! விளைர்த்த
வளை இல் வறுங் கை ஒச்சி, கிளையுள்
‘இன்னன் ஆயினன், இளையோன்’, என்று,
நின் உரை செல்லும் ஆயின், ‘மற்று
முன் ஊர்ப் பழுனிய கோளி ஆலத்து,
புள் ஆர் யாணர்த்தற்றே, என் மகள்
வளனும் செம்மனும் எமக்கு’ என, நாளும்
ஆனாது புகழும் அன்னை”

பொருள்

யாங்கு ஆகுவள்கொல்? அளியள்தானே! இளையோரும், முதியோரும் வேற்று நாட்டுக்குச் செல்லுமாறு, உன் மார்பகம் மண்ணில் பட, உடலை எடுத்தாலும் எழுந்திராமல், விரைத்துப் படுத்திருக்கும் மள்ளர் குலப் போர் மறவனே! வரைகளற்ற வெளுத்துப் போன என் கரங்களை உயர்த்தி, எம் காதலன் மள்ளர் குலத்து இளைஞன், இப்படி ஆகீ விட்டான் என்று நம் சுற்றத்தார்களுக்குக் கூறிட, ஊரில் உள்ள பழுத்த ஆல மரத்தை நோக்கிப் பறவைகள் விரைந்து கூடுவதுபேல் எல்லோரும் விரைந்து இங்கு வந்து விடுவார்கள். என் மகனின் வீரமும், செல்வமும், சிறப்பும் என்னைச் சேர்ந்தது என்று நாளும் அவன் புகழ் பாடிக் கொண்டிருக்கும் மள்ளனது அன்னை இனி என்ன செய்வாள்? அவள் நிலை இரங்கத்தக்கதாகும்.

செய்யுள் 399

தாமான் தோன்றிக் கோவை ஐயூர் முடவனார் பாடியது

மள்ளருள் சிறந்த மள்ளன்

“அடு மகள் முகந்த அளவா வெண்ணெல்
தொடி மாண் உலக்கைப் பரூஉக் குற்று அரிசி
காடி வெள் உலைக் கொளீஇ நீழல்
ஒங்கு சினை மாவின் தீம் கனி நறும் புளி,
மோட்டு இரு வராஅல் கோட்டு மீன் கொழுங்கு குறை
செறுவின் வள்ளை, சிறு கொடிப் பாகல்,
பாதிரி ஊழ் முகை அவிழ் விடுத்தன்ன
மெய் களைந்து, இனனொடு விரைஇ….

மூழ்ப்பப் பெய்த முழு அவிழ்ப் புழுக்கல்
அழிகளின் படுநர் களி அட வைகின்;
பழஞ்சோறு அயினும் முழங்கு நீர்ப் படப்பைக்
காவிரிக் கிழவன், மாயா நல் இசைக்
கிள்ளிவளவன் உள்ளி, அவர் படர்தும்;
செல்லேன் செல்லேன், பிறர் முகம் நோக்கேன்;
நெடுங் கழைத் தூண்டில் விடு மீன் நொடுத்து,
கிணைமகள் அட்ட பாவல் புளிக்கூழ்
பொழுது மறுத்து உண்ணும் உண்டியேன், அழிவு கொண்டு,
ஒரு சிறை இருந்தேன்; என்னே! இனியே
அறவர் அறவன், மறவர் மறவன்,
மள்ளர் மள்ளன் தொல்லோர் மருகன்,
இசையின் கொண்டான், நனக அமுது உண்க என,
மீப் படர்ந்து இறந்து, வன் கோல் மண்ணி
வள் பரிந்து கிடந்த…. மணக்க
விசிப்புறுத்து அமைந்த புதுக் காழ்ப் போர்வை
அலகின் மாலை ஆர்ப்ப ட்டித்து,
கடியும்உணவு என்னக் கடவுட்கும் தொடேன்,
‘கடுந் தேர் அள்ளற்கு அசாவா நோன் சுவற்
பகடே அத்தை யான் வேண்டி வந்தது’ என,
ஒன்று யான் பெட்டாஅளவை, அன்றே
ஆன்று விட்டனன் அத்தை, விசும்பின்
மீன் பூத்தன்ன உருவப் பல் நிரை
ஊர்தியொடு நல்கியோனே; நீர் கொள
இழுமென இழிதரும் அருவி,
வான் நோய் உயர் சிமைத் தோன்றிக் கோவே”.

பொருள்

சோறு சமைக்கும் பெண் தேர்ந்தெடுத்துக் கொண்டு வந்த அளவில்லாத வெண் நெல்லைப் பூண் போட்ட பருத்த உலக்கையால் குத்தி எடுக்கப்பட்ட அரிசி கொண்டு மிளகுநீர் சேர்த்து வெள் உலையில் வைத்துச் சமைத்த சோற்றில் ஓங்கிச் செழித்துக் காய்த்த புளிக் குழம்பு சேர்த்து, நெல் வயல்களில் உள்ள மோட்டுகளில் (குழீ, வளை) இருக்கும் வரால் மீன் கொண்டு சமைத்த கறியும், வரிகளையுடைய ழுவை மீன் கொண்டு சமைத்த இறைச்சியும், வயல்களில் படர்ந்துள்ள வள்ளைக் கீரையும், சிறுகொடிகளில் காய்க்கும் பாகற்காயும், பாதிரிமரத்தின் முதிர்ந்த அரும்பினது இதழை விரித்தாற் போன்ற தோலை நீக்கி மற்ற இனமானவற்றோடு சேர்த்துச் சமைத்த கூட்டைச் சோறு மூழ்கும்படி ஊற்றிப் பிசைந்த முழு அரிசிச் சோறு உண்டு, வயல்களில் பொழுது எல்லாம் உழைக்கும் உழவர் (மள்ளர்), உண்ட மயக்கம் தீர ஓய்வெடுத்திருப்பார்.

பழஞ்சோறும், பாசன நீர் நிறையப் பெற்ற கழனிகளையும், தோட்டங்களையும் உடைய பழியில்லாத நல்ல புகழையுடைய காவிரி நாட்டு மன்னன், மள்ளர் மரபினர் தலைவர், கிள்ளிளவளவனை நினைத்து அவனை நோக்கிச் செல்கின்றோம். பிறரிடம் ஒரு காலத்திலும் செல்லமாட்டேன். பிறருடைய முகத்தை உதவி வேண்டிப் பாரேன். நீண்ட மூங்கிலாலான தூண்டிலால் பிடித்த மீனை விற்று, இணைமகள் சமைத்த புளித்த தண்­ர் கலந்து பிசைந்த சோற்றை நேரமில்லாத நேரத்தில் உண்ணும் நிலையில் உள்ளவன். ஒரு நீர்க்கரையில் கழிமுகம் பார்த்துக் கொண்டிருந்தேன், என்னே! இனியே, நல்லவர்களுக்கு நல்லவனும், கொடியோர்க்குக் கொடியவனும் மள்ளர் வம்சத்தவருள் சிறந்த மள்ளனும், பாண்டியர்களின் வழித் தோன்றலுமான தாமான் தோன்றிக்கோ, நல்ல புகழ் வாய்ந்தவன், நின்பால் அன்பு கொண்டு விட்டான் ஆதலின் நீ விரும்பும் செல்வத்தைப் பெறுவாயாக என அறிந்தோர் கூறினர். இவ்வாறாகப் புறநானூறு மள்ளர் குல மக்களின் ஏர்த் தொழிலையும், போர்த் தொழிலையும், போற்றி, இவர்தம் வரலாற்றுச் சிறப்புகளையும், பண்பாட்டுப் பெருமைகளையும் எழிலுற எடுத்துரைப்பது இத்தமிழ் கூறும் நல்லுலகில் எக்குலத்தோருக்கும் இல்லாத உயர்வு இக்குலத்தோருக்கு இருப்பதைக் காட்டுகிறது.


சோழன் மள்ளர் நெய்தலங்கனால் இளங்சேட் சென்னியை ஊன் பொதி பசுங்குடையார் பாடியது

மள்ளர் மலைத்தல் போகிய மார்பன்
வழிபடுவோலைர வல் அறிதீயே,
பிறர் பழி கூறுவோர் மொழி தேறலையே
நீ மெய் கண்ட தீமை காணின்.
ஒப்படி நா டி, அத் தக ஒறுத்தி;
வந்து, அடி பொருந்தி, முந்தை நிற்பின்,
தண்டமும் தணிதி, நீ பண்டையின் பெரிதே -
அமிழ்து அட்டு ஆனாக் கமழ் குய் அடிசில்
வருநர்க்கு வரையா வசைஇல் வாழ்க்கை
மகளிர் மலைத்தல் அல்லது, மள்ளர்
மலைத்தல் போகிய, சிலைத்தார் மார்ப!
செய்து இரங்கா வினை, சேண் விளங்கும் புகழ்,
நெய்தலங்கானல், நெடியோய்! –
எய்த வந்தனம் யாம்; ஏத்துகம் பலவே!” - புறநானூறு .10

பொருள்

நெய்தலங்கனால் என்ற ஊரை வென்ற புகழ்மிக்க மள்ளர் சோழன் இளஞ்சேட் சென்னியே! உன்னை வழிபடுவோரைத் தீர அறியும் குணமுடையோனே! பிறர் மீது பழி சொல்வோரின் பேச்சை நம்பமாட்டாய், தீயவை செய்தவர் என்று ஆராய்ந்து அறிந்தால் அத்தீயவர்களுக்கு உரிய தண்டை வழங்கத் தவறமாட்டாய். அத்தீயவன் தன் தவற்றை உணர்ந்து உன்னைப் பணிந்து மன்னிப்புக் கேட்டல், அவனை மன்னித்து முன்னை விட அவன் மிது அன்பு செலுத்துவாய். உண்ண, உண்ண மேலும் ஆவல் கொள்ளும் அமிர்தம் போன்ற நல்லுணவை வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாது வழங்கும் வசைச் சொல் கோளாத வாழ்வு உடையவன். நின் தேவியர் மள்ளத்தியரைத் தழுவி இன்பம் அடைதல் அல்லாது பகை மள்ள அரசர் தொடாத மாலையணிந்த வலிமையான மார்பை உடைய மள்ளன் நீ, எந்தக் காரியத்தையும் நிதானமாகத் தவறில்லாமல், செம்மையுடன் செய்து, நின் புகழ் பரவி வாழுகின்ற சோழனே, உன் புகழ் மிக்க பண்புகளை முழுவதும் பாராட்டிப் போன்றுகின்றோம்.

புறநானூறு

செய்யுள் 77

இயற்றிய புலவர் இடைக்குன்றூர் கிழார்

“கூடி எதிர்த்து வந்த வம்ப மள்ளரைப் புகழவோ, இகழவோ இல்லை.

கிண்கிணி களைந்த கால் ஒண் கழல் தொட்டு,
குடுமி களைந்த நுதல் வேம்பின் ஒண் தளிர்
நெடுங் கொடி உழிஞைப் பவரொடு மிலைந்து,
குறுந் தொடி கழித்த கைச் சாபம் பற்றி,
நெடுந் தேர்க் கொடுஞ்சி பொலிய நின்றோன்
யார் கொல்? வாழ்க, அவன் கண்ணி! தார் பூண்டு,
தா‘லி களைந்ததன்றும் இவனே; பால் விட்டு
அயினியும் இன்று அயின்றனனே; வயின்வயின்
உடன்று மேல் வந்த வம்ப
மள்ளரை
வியந்தன்றும், இழிந்தன்றும் இலனே; அவரை
அழுந்தப் பற்றி, அகல் விசும்பு ஆர்ப்பு எழ,
கவிழ்ந்து நிலம் சேர அட்டதை
மகிழ்ந்தன்றும், மலிந்தன்றும் அதனினும் இவனே”.

பொருள்

சலங்கைகள் கழற்றப்பட்டு வீரக் கழல்களை அணிந்த கால்களையும், விரித்து முடியப்பட்ட குடுமியில் வேப்பம் பூங்கொத்தும், உழிஞைக் கொடியும் சூடி, வளையல்கள் இல்லாத கைகளிலே வில்லைப் பிடித்து நெடிய தேரில் விளங்கி நிற்கும் அவன் யாரோ? அவன் கண்ணி வாழ்வதாக. தாமரையணிந்து ஐம்படைத் தாலியைக் களையாமல் இருக்கிறான். பாலை விட்டு இன்று உணவு உண்டான். அலை அலையாய் தன்னை எதிர்த்துப் போர் செய்ய வந்த வம்ப மள்ளரான இருபெரும் வேந்தர்களையும் ஐம்பெரும் வேளிரையும் மதித்ததும் இலன்; அவமதித்ததும் இலன். தன்னை எதிர்த்து வந்த அவரை இறுகப் பிடித்து பரந்த ஆகாயத்தின் கண்ணே ஒலியெழக் கவிழ்ந்து உடலும் நிலத்தின் கண்ணே பொருந்துமாறு வீழ்த்தியதற்கு மகிழ்ந்ததும், இவ்வாறு செய்தோமென்று தற்பெருமை பேசிக் கொண்டதுவும் இலன்.

புறநானூறு

செய்யுள் 78

பாண்டியன் தலையானங்கானத்துச் செரு வென்ற மள்ளன் நெடுஞ்செழியனை இடைக்குன்றூர் கிழார் பாடியது.

“எள்ளி வந்த வம்ப மள்ளர்,
வணங்கு தொடைப் பொலிந்த வலி கெழு நோன் தாடள,
அணங்கு அருங்கடுந் திறல் என்னை முணங்கு
நிமிர்ந்து,
அளைச் செறி உழுவை இரைக்கு வந்தென்ன
மலைப்பு அரும் அகலம் மதியார், சிலைத்து எழுந்து,
விழுமயம், பெரியம், யாமே; நம்மின்
பொருநனும் இளையன்; கொண்டியும் பெரிது என,
எள்ளி வந்த வம்ப மள்ளர்
புல்லென் கண்ணர்; புறத்தில் பெயர,
ஈண்டு அவர் அடுதலும் ஒல்லான், ஆண்டு அவர்
மான் இழை மகளில் மாணினர் கழிய,
தந்தை தம் ஊர் ஆங்கண்,
தெண்கிணை கறங்கச் சென்று, ஆண்டு அட்டனனே”.

பொருள்

தீரமும், வீரமும் உள்ள எம் இறைவன் (மன்னன்) வலிமையும் வேகமும் மிக்க கால்களை உடையவன். நீரைக் கலக்கிக் கொண்டு, உழுவை மீன் தன் இரைரைய மின்னலெனச் சென்று பிடிப்பது போல், இவனது மலைப்பு அறியா மார்பினை மதியாது, மள்ளர் குலப் பகை மன்னர்கள் எழுவர் வீறு கொண்டு எழுந்து, நாம் விழுப்புண் பட்ட வெற்றி மள்ளர்கள் என்றும், புகழ் படைத்தவர்கள் என்றும், செழியன் சின்னப் பையன், போரில் கொள்ளையிடத்தக்க அவன் செல்வங்களும் அதிகம் என்றும் இகழ்ந்து பேசி எதிர்த்து வந்த வம்பு செய்கின்ற மள்ள மன்னர்களைத் தீய நோக்குடைய அவர்களைப் புறமுதுகு காட்டி ஓடச் செய்து, அவர்களைப் போர்க்களத்திலே கொல்லாது அவர்களின் ஊர்வரை விரட்டிச் சென்று அவர்களின் மனைவியர் வெட்கிட எம் இறைவன் நெடுஞ்செழியன் வெற்றி முரசு ஒலிக்கச் செய்து வம்பு செய்த அயல்நாட்டு மள்ள மன்னர்களின் ஆணவத்தைக் கொன்று ஒழித்தான்.

புறநானூறு

செய்யுள் 79

பாண்டியன் தலையாலங்கானத்து செருவென்ற மள்ளன் நெடுஞ் செழியனை இடைக்குன்றூர் கிழார் பாடியது.

“எதிர்த்த வம்ப மள்ளர் பலரே
மூதூர் வாயில் பனிக் கயம் மண்ணி,
மன்ற வேம்பின் ஒண் குழை மலைந்து,
தெண் கிணை முன்னர்க் களிற்றின் இயலி,
வெம் போர்ச் செழியனும் வந்தனன்; எதிர்ந்த
வம்ப
மள்ளரோ பலரே,
எஞ்சுவர் கொல்லோ, பகல் தவச் சிறிதே?”

பொருள்

தனது பெருமை மிக்க பழைய ஊரின் வாயிலிலே உள்ள குளத்திலுள்ள குளிர்ந்த நீரிலே குளித்து வந்து மக்கள் குழுமிப் பேசும் மன்றம் நடக்கும் இடத்தில் உள்ள வேப்ப மரத்தின் பூந்தளிரைப் பறித்துத் தலையில் சூடிக் கொண்டு போர் முரசம் முழங்க, யானை போலப் பெருமிதத்துடனும், வலிமையுடனும் போர்க்களத்திற்குப் பாண்டியன் நெடுஞ்செழியன் வந்தான். அவனை எதிர்த்துபூ போரிட வந்த அயல் நாட்டு மன்னர் குலப் பகையரசர் பலரே ஆயினும் பகல் பொழுது குறைவாக இருப்பினும் அவனிடம் மிஞ்சமாட்டார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக