திங்கள், 16 ஏப்ரல், 2012

இஸ்லாமிய சர்ச்சைகளுக்கு ஜமாலி ஹஜ்ரத்தின் பதில்கள்


"நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்? ஒரு கணம் சிந்திப்போமாக" என்ற தலைப்பில் வெளி வந்த கட்டுரைக்கும், சகோதரி ரஜீஹா ஷிபான் அவர்களால் இதற்கு கேட்கப்பட்ட விளக்கத்துக்கும் பதில் அளிக்கும் முகமாக உருவான கட்டுரை இது.

முதலில் ஒன்றை கூறிக் கொள்ள விரும்புகின்றேன்:
அல்லாஹுதஆலாவை மனதார ஏற்று, அவனது ஹபீப் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மற்றும் ஸஹாபாக்களின் வழிமுறையான ஸுன்னத்தை முழுமையாக பின் தொடர்ந்து அல் குர்ஆன், அல் ஹதீஸ் அடிப்படையில், மார்க்க சட்டத்திட்டங்களை முறைப்படுத்தி தந்த இமாம்களுக்கு கட்டுப்பட்டு நல்லோர்களையும் பெரியார்களையும் கண்ணியப்படுத்தி வாழ்பவர்களே அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தினர் எனப்படுவர்.எனவே இதற்கு மாற்றமாக எது நடந்தாலும் அது தவறே. ஆனால் இந்த கட்டுரையில் எழுத பட்டு இருக்கும் சில கூற்றுக்கள் வீணான குற்றச்சாட்டுகளை சுமத்துபவையாக உள்ளது. அதில்,

முதலாவது குற்றச்சாட்டு:-

இதோ இஸ்லாத்தின் பெயரால் நாம் செய்யும் பித்அத்துகள்! சடங்குகள்!!
முதன் முதலில் நமக்குக் குழந்தை பிறந்ததும் மதபோதகர் ஒருவரை அழைத்து பொருள் புரிந்தோ புரியாமலோ அழகாகத் தெரியும் ஒருபெயரை தேர்வு செய்து பாத்திஹா, துஆ ஓதி பெயர் சூட்டி மகிழ்கிறோம்.

விளக்கம்:
பாங்கு சொல்லி பெயர் வைக்க வேண்டுமா? –
இதே போன்று தான் பாத்திஹா அது குர்ஆனில் வரும் ஒரு சூரா அதை ஓதுவது பரகத்துக்காக. ஒரு குழந்தையின் நலனுக்காக துஆ கேட்பது ஒரு சுன்னத் முறை.

இரண்டாவது குற்றச்சாட்டு:

பிள்ளைகளுக்கு ஊர்வலம் நடத்தி சுன்னத் வைபவம், புனித நீராட்டு விழா, திருமண வைபவங்கள் போன்றவற்றை சீதனப் பகட்டுகள், மேளதாளங்கள், வாணவேடிக்கைகள், பாட்டுக்கச்சேரிகள் என ஊரே வியக்கும்படி நமது வீட்டு வைபவங்களை குருமார்களின் தலைமையில் ஃபாத்திஹா, துஆ போன்றவற்றை ஓதி கோலாகலமாக அரங்கேற்றி பெருமைப்படுகிறோம்.

விளக்கம்:
இதற்கும் சுன்னத் வல் ஜமாஅத்துக்கும் என்ன சம்பந்தம்? இது அறியா பாமரமக்கள் செய்யும் அறியாமை கூத்துக்கள். இதை பற்றி அவர்களுக்கு எடுத்து சொல்லி அவர்களை திருத்த வேண்டும். அதுவே முறை அதை விட்டு,விட்டு இதை சுன்னத் வல் ஜமாத்துடன் ஒப்பிடுவது கேலிக்குறிய விடயம்.

மூன்றாவது குற்றச்சாட்டு:
நடை மவ்லிது, விடி மவ்லிது
நல்லவை நிகழவும், பயணம் போகவும் நாடியது நடக்கவும் நடை மவ்லிது, விடி மவ்லிது ஓதி 'பரக்கத்தும் பொருளும்' குவிய விடிய விடிய சினிமா மெட்டுகளில் கச்சேரிகள் நடத்தி அமர்க்களப்படுத்துகிறோம்.

விளக்கம்:
மௌலித் ஓதுவது தவறல்ல. அதற்கு குர்ஆன் ஹதீஸ் படி ஆதாரம் இதோ:

மௌலிது நபி S.A.W

சினிமாப் பாட்டு ராகத்தில் மவ்லித் ஓதலாமா?

ஆனால் விடி மௌலித், நடை மௌலித் இப்படியான மௌலிதுகள் எதுவும் இல்லை. இது மக்கள் அவரவர் வசதிக்காக வைத்துருக்கும் பெயராக இருக்கலாம். அதுமட்டும் அல்ல சினிமா மெட்டுக்களில் ஓதுவது கண்டிக்கத்தக்கதாகும். இதை தவிர்க்கும்படி பாமரமக்களுக்கு எடுத்து சொல்லுவது நம் கடமை.


நான்காவது குற்றச்சாட்டு:
ராத்திபு, குத்பிய்யது, ஞானப்பாடல்
இவை போதாது என இறைவனின் விசேச அருளைப்பெற ராத்திபு, குத்பிய்யத்து, தரீக்காக்களின் பல்வேறு செய்குகள் அரங்கேற்றிய திக்ருகள், ஹல்காக்கள், ஞானிகள் இயற்றிய ஞானப்பாடல்கள், 4444 தடவைகள் என்ற எண்ணிக்கையில் ஸலவாத்துந் நாரியாவெனும் நரகத்து ஸலவாத்துகளை ஓதி வருகிறோம்.

விளக்கம்:
ராத்திபு, குத்பிய்யது, ஞானப்பாடல் இவைகளில் எந்த தவறும் இல்லை. இதை குற்றம் சுமத்துவதில் இருந்து தெரிகிறது இதை எழுதியவனின் மடமைதனம். இதில் என்ன
இருக்கிறது என்று கூட ஆராயாமல் வீணான குற்றம் சுமத்தப்பட்டு இருக்கிறது. ராத்திபு இந்த கிதாபில் அல்லாஹ்வின் திருநாமங்கள் அவனை போற்றும் திருகுர்ஆன் வசனங்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மீது ஸலவாத் இது தவிர அதில் எந்த பிழைகளும் இல்லை. அல்லாஹ்வின் திருநாமத்தை திக்ர் செய்வது தவறா?

பள்ளிவாயல்களில் திக்ரு செய்வதைத் தடுப்பவர்களின் நிலை என்ன? அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அவனது பெயர் திக்ரு செய்யப்படுவதை தடுத்து, அவைகளை பாழாக்க முயற்சிப்பவனை விட மகா அநியாயக்காரன் யார்? இத்தகையோர் அச்சமுடையவர்களகவேயன்றி அவைகளில் நுழைய அவர்களுக்குத் தகுதி இல்லை. அவர்களுக்கு இம்மையில் இழிவுண்டு, மறுமையில் கடும் வேதனையுண்டு. " (சூரா பகரா - 114 )

"4444 தடவைகள் என்ற எண்ணிக்கையில் ஸலவாத்துந் நாரியாவெனும் நரகத்து ஸலவாத்துகளை ஓதி வருகிறோம்"
வெவ்வேறு வகையான சலாவத்து ஓதலாமா?


ஐந்தாவது குற்றச்சாட்டு:
பேய் பிசாசுகளை ஓட்ட தாவீசுகள், முடிச்சுக் கயிறுகள், மாய மந்திரங்களை தட்டைப் பீங்கானில் இஸ்முகள் என்ற பெயரில் எழுதிக் கரைத்துக் குடிப்பது, அரபி எழுத்துகளில் அழகாக வடித்து வீட்டுச்சுவர்களில் மாட்டுவது, நோய் நொடிகள் தீர பெண்களுக்கு தனியாக ஓதிப் பர்ப்பது போன்ற ஆயிரமாயிரம் போலிச் சடங்குகளை இஸ்லாத்தின் பெயரால் அரங்கேற்றி அப்பாவி மக்களை ஏமாற்றிவரும் அவலக்காட்சிகளையும் காணுகிறோம்.

விளக்கம்:
அல் குர்ஆனில் இருக்கும் ஆயத்துகளை கொண்டு முறைப்படி ஓதி பார்க்கலாம். என்பதை விளக்கும் ஆதாரம் இதோ,
தாயத்


ஆறாவது குற்றச்சாட்டு:
மரணச்சடங்குகளும் கர்மாதிகளும்
மரணச் சடங்குககளோ இந்துக்களை மிஞ்சுமளவுக்குச் சென்று விட்டது.

விளக்கம்:
கத்தம் ஓதலாமா

வஸீலா மற்றும் பாத்திஹாக்களுக்கு ஆதாரம் உண்டா?

ஏழாவது குற்றச்சாட்டு:

அடுத்து ஊர் பெயர் வரலாறே இல்லாத கப்ருகளுக்கு தெய்வீகப் பெயர்சூட்டி, அவ்லியாக்கள், ஷெய்குமர்ர்கள், நாதாக்கள் என அங்கீகாரமளித்து ஆண்டுதோறும் உற்சவங்கள், சந்தன உரூஸ்கள், கூடு கொடிகள், யானை ஊர்வலங்கள், கரக ஆட்டங்கள் என ஊரே அமர்க்களப்படும்படி விழாக்கள் எடுப்பதையும் கண்டு வருகிறோம். பாட்டுக்கச்சேரியும் நடனமும், இவை போதாதென்று நபிகள் நாயகம் பிறந்த நாள் விழா, கௌதுல் அஃலம் நினைவு விழா, ரிஃபாயி ஆண்டகை விழா, நாகூர் நாயக விழா, காஜா முயீனுத்தீன் ஜிஸ்தி உரூஸ் விழா, மோத்தி பாவா ஆண்டு விழா, குணங்குடி மஸ்தான் விழா, பொட்டல் புதூர் மைதீன்(யானை) ஆண்டகை விழா, ஆத்தங்கரை செய்யிதலி அம்மா விழா, பீமாப்பள்ளி பீஅம்மா விழா, பீடி மஸ்தான் விழா, தக்கலை பீரப்பா விழா, மெய்நிலை கண்ட ஞானிகள் விழா என மிகவும் பக்தியோடு தேசிய விழாக்களாக கரக ஆட்டங்களுடன் யானை ஊர்வலம் சகிதமாக கொண்டாடப்பட்டு வரும் புதுமையான விழாக்களையும் நாடெங்கிலும் பரவலாகக் காண முடிகிறது.

விளக்கம்:

நாங்கள் ஊர் பெயர் தெரியாதவர்களுக்காக கப்ரு கட்டவும் இல்லை, அவர்களுக்கு விழா எடுக்கவும் இல்லை. முழு உலக முஸ்லிம்களாலும், முஜ்தஹிதுகலான உலமாக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சஹாபாக்கள், இமாம்கள், வலிமார்களின் கப்ருகளை ஸியாரத்து செய்கின்றோம்.

ஷாதுலி & ரிபாய் நாயகம்

இஸ்லாத்திற்காக பல தியாகங்களை செய்த நல் அடியார்களுக்காக அவர்களை சிறப்பிக்கும் முகமாக, அவர்களின் நினைவுநாளை கண்ணியப்படுத்துகின்றோம். அது ஒரு சிறந்த செயலாக இருக்கிறது. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் அன்னை கதீஜா ரலியள்ளஹு அன்ஹா அவர்களின் நினைவு நாளில் ஆடு அறுத்து அதை அவர்களின் தோழிகளுக்கு பங்கீடு செய்பவர்களாக இருந்துள்ளார்கள். அவ்லியாக்களுக்காக விழா எடுப்பது, அவர்களுக்காக மௌலித் ஓதுவது இது சம்பந்தமான ஆதாரம் இதோ,

முஹியித்தீன் மௌலிது - ¼

முஹியித்தீன் மௌலிது - 2/4

முஹியித்தீன் மௌலிது - ¾

முஹியித்தீன் மௌலிது - 4/4

பதில்.பாகம் - 01
தொழுகைக்காக பெண்கள் பள்ளிவாசலுக்கு செல்லலாமா?
தர்ஹாவில் கொடியேற்றலாமா?
கப்ரில் சந்தனம் பூசலாமா?
பெண்கள் ஜியாரத் செய்யலாமா?
பித் அத் என்றால் என்ன?

பதில் பாகம் - 02
தொழுகைக்காக பெண்கள் பள்ளிவாசலுக்கு செல்லலாமா?
தர்ஹாவில் கொடியேற்றலாமா?
கப்ரில் சந்தனம் பூசலாமா?
பெண்கள் ஜியாரத் செய்யலாமா?
பித் அத் என்றால் என்ன?

ஆனால் இந்த கச்சேரி, பாட்டு, நடனங்கள் அனைத்தும் கண்டிக்கப்பட வேண்டியவை. இது மார்க்கத்திலும் சரி, சுன்னத் வல் ஜமாத்தின் கொள்கையின்படியும் மிகவும் பிழையான ஒரு விசயம். இது தடுக்கப்பட வேண்டியது. இதை சுன்னத் வல் ஜமாத்தினர்கலான நாங்கள் எதிர்த்து கொண்டுதான் இருக்கிறோம். அதுமட்டும் அல்ல சுன்னத் ஜமாத்தின் பெரியார்களும் இதை வன்மையாக கண்டித்தும் இருக்கிறார்கள். இந்த காரியங்களை செய்யும் பாமரமக்களுக்கு இந்த தவறுகளை எடுத்து கூறி அவர்களை திருத்த வேண்டிய பாரிய பொறுப்பு எல்லோருக்கும் உண்டு. காலில் புண் வந்தால் அந்த புண்ணுக்கு மருந்து போட்டு ஆறவிட வேண்டுமே தவிர காலையே வெட்டி விடுவது முட்டாள்தனம் அல்லவா? எனவே நல்ல விசயங்கள் நடக்கும் இடத்தில் நடக்கும் அனாச்சாரங்களை தடுக்க வேண்டுமே தவிர அந்த நல்ல விசயங்களே நடக்க கூடாது என்று தடுப்பது அறிவார்ந்த செயல் அன்று. இன்று திருமண வீடுகளில் திருமணம் என்ற பெயரில் மார்க்கத்துக்கு முரணான காரியங்கள் நடக்கின்றது அதற்காக திருமணமே செய்ய கூடாது என்பதா? அல்லது அங்கு நடக்கும் அனாச்சாரங்களை தடுப்பதா சிறந்தது? சற்று சிந்தியுங்கள்.

எட்டாவது குற்றச்சாட்டு:
ஞானமர்ர்க்கத்தின் பெயரால் தீட்சைகள்

விளக்கம்:
இது ஒன்றும் மார்க்கத்தில் புதிதான செயல் அல்ல. பைஅத் முறை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் சஹாபா பெருமக்களுக்கும் புதிதாக இஸ்லாத்திற்கு வரும் மனிதர்களுக்கும் வழங்கிய ஒன்றுதான் இந்த பைஅத் (தீட்சை) எனப்படுவது. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் கையை பிடித்து இனி நாங்கள் நல் முஸ்லிம்களாகவும், பொய், புறம் பேசாதவர்களாகவும் , அமானிதங்களை பேணகூடியவர்களாகவும் உண்மை பேசுபவர்களாகவும் இருப்போம் என்று சஹாபாக்கள் பைஅத் செய்து கொண்டார்கள். அது ஒரு தலைவருக்கு கட்டுப்பட்டு நேர்வழியில் நடக்கும் வழிமுறை. அது அல்லாஹ்வை அடைய இலகுவான பாதையாக இருக்கும். அது போலவே ஒரு அல்லாஹ்வை நெருங்கிய சாலிஹான பெரியவரிடம் பைஅத் எடுத்து ஒருவன் அந்த பெரியவர் சொல்லி கொடுக்கும் திக்ர், ஸலவாத், நபிலான தொழுகைகள் இதர வழிப்பாடுகள் மூலம் அல்லாஹ்வை அடைய முடியும். இதுவே பைஅத். இது மார்க்கத்துக்கு முரணான ஒன்று அல்ல. அது நபிவழி என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஆனால் இதில் சில பேர் வயிறு வளர்க்க, ஆதாயம் தேட நாடி செய்கின்றார்கள் என்றால் அது அவர்கள் தவறு. நிச்சயமாக அதற்கான தண்டனையை அவர்கள் அல்லாஹ்விடம் பெற்று கொள்ளுவார்கள். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் ஷைக்காக அல்லாஹ் இருந்தான், சஹாபாக்களின் ஷைக்காக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இருந்தார்கள், தாபியீன்களின் ஷைக்குகளாக சஹாபாக்கள் இருந்தார்கள், தபஅத்தாபீயீன்களின் ஷைக்குகளாக தாபியீன்கள் இருந்தார்கள் இதை போன்று ஒவ்வொரு கால கட்டத்திற்கும் முன்சென்ற சமுதாயத்தின் உலமாக்கள் பின்வரும் சமுதாயத்திற்கு இல்மை கற்றுக் கொடுக்கும் ஷைக்குகளாக இருந்தார்கள். இன்று வரை இந்த வழிமுறை ஸுன்னத் வல் ஜமாஅத்தின் தஃவா அமைப்புகளான தரீக்காக்கள் மூலமாக நடைமுறை படுத்தப்பட்டு வருகின்றது.

ஷைக்கை பின்பற்றுவதற்கு ஆதாரம் உள்ளதா?

எது இஸ்லாத்தின் தஃவா அமைப்புகள்:



ஒன்பதாவது குற்றச்சாட்டு:

இதோ ஒரு கணம் சிந்திப்பீர்! நாம் இந்துக்களா ? முஸ்லிம்களா ?

விளக்கம்:

இந்த தலைப்பில் இருக்கும் அத்தனை விடயத்தையும் பிழை என்று நாங்கள் ஒத்துகொள்ள மாட்டோம். இப்படி எல்லாவற்றுக்கும் ஒப்பீடு செய்தால் அது முட்டாள்தனம், நாங்களும் இப்படி கேட்டால்?......

1. அங்கே காசிக்கு புனித பயணம் : இங்கே ஹஜ்ஜுக்கு புனித பயணம்
2. அங்கே கோயிலைச் சுற்றி வருதல் : இங்கே கஃபாவை சுற்றி வருதல்
3. அங்கே சிலைக்குப்பட்டுப்புடவை : இங்கே கஃபாவுக்கு பட்டுத்துணி
4. அங்கே திருப்பதி மொட்டை : இங்கே ஹஜ்ஜு மொட்டை
5. அங்கே கங்கை நீர் : இங்கே ஸம் ஸம் நீர்
6. அங்கே மலைக்கு காவி உடை : இங்கே ஹஜ்ஜுக்கு இஹ்ராம்
7. அங்கே சிலை முத்தம் : இங்கே ஹஜருல் அஸ்வத் முத்தம்

இப்படி வரிசைப்படுத்தலாமா? நவூதுபில்லாஹா!!! அதுவும் இதுவும் ஒன்றா? இந்த வஹாபிகள் முட்டாள் தனமாக உளரும் இந்த முறைபடி நாங்களும் வரிசைப்படுத்தலாமா? அது முறையா? எதை எதோடு ஒப்பிட்டு இவர்கள் பார்க்கின்றார்கள். காபிர்கள் இதை செய்கின்றார்கள் என்பதற்காக நாங்களும் மார்க்கத்தில் கூடுமான விசயங்களை அதோடு ஒப்பிட்டு செய்யாமல் இருப்பதா? அவர்களின் பட்டியலில் ஒரு சில விஷயங்கள் தவறு அதை நாங்கள் ஏற்று கொள்ளுகின்றோம் முன்னர் சொன்னது போல பாமரமக்கள் செய்யும் அறிவீனம். அதற்காக எல்லா விஷயங்களையும் பிழை என்று இப்படி ஒப்பீடு செய்வது முட்டாள்தனம்.


எனவே, இவற்றையெல்லாம் அசை போட்டு சிந்தித்து சீர்தூக்கி நமது அறிவிற்கேற்ற உயரிய மார்க்கமாம் தூய இஸ்லாத்தை வழுவாது பின்பற்றி குர்ஆன் சுன்னாஹ் சஹாபாக்கள், இமாம்கள், உலமாக்கள் வழியில் உண்மை முஸ்லிம்களாக வாழ்வோமாக!

வாருங்கள்.இன்று நாம் சபதம் ஏற்போம் !
அறிவுக்கேற்ற மார்க்கமாம் இஸ்லாத்தை நோக்கி அகில உலகமும் மிக வேகமாக வரும் இந்த கணினியுகத்தில், முஸ்லிம்களாகிய நாம், இனியும் அறிவுக்கே பொருந்தாத மூட நம்பிக்கைகளுடன் வாழும் பாமரமக்களை திருத்தி அவர்களுக்கு தூய இஸ்லாத்தையும், சத்தியப் பாதையான ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையை சொல்லி கொடுத்து சிறந்த ஒரு சமுதாய மக்களாக வாழ வழி அமைப்போம்.

சடங்கு சம்பிரதாயங்களைச் செய்து மோசம் போக மாட்டோம்! போலி மதவாதிகளால் ஏமாற மாட்டோம்!! போலி தௌஹீத்வாதிகளின் பொய்களை நம்பி ஏமாற மாட்டோம், இன்று நேற்று முளைக்கும் பொய்யர்களை பின்பற்ற மாட்டோம், அவர்களின் பொய்யான பேச்சை கேட்டு வழி கெட்டு போகமாட்டோம், அல்லாஹ்வின் நன் மக்களான சஹாபாக்கள், தாபீயீன்கள், தபதாபியீன்கள், இமாம்கள், வலிமார்களை இழிவுப்படுத்தாமல், அவர்களை கண்ணியம் செய்து வாழுவோம் என சபதம் ஏற்போமாக!

இஸ்லாத்தின் தூய கொள்கையான ஸுன்னத் வல் ஜமாஅத் என்னும் சத்திய பாதையில் உயிருள்ளவரை உறுதியுடன் பின்பற்றி அறநெறி வழுவாது வாழ்வோம்.
என இன்று வீரசபதம் ஏற்போமாக!

'இஹ்தினஸ்ஸராத்தல் முஸ்தகீம்'
இறைவா! எங்களுக்கு நேரான வழியைக் காட்டுவாயாக! (அல்குர்ஆன்: 1:06)

'ஸிராத்தல்லதீன அன்அம்த அலைஹிம்'
எவர்களின் மீது நீ அருள் புரிந்தாயோ, அத்தகையோரின் வழியில் நடத்துவாயாக!
(அவர்கள்தான் நபிமார்கள், ஸித்தீக்கீன்கள், ஸுஹதாக்கள், ஸாலிஹீன்கள் வழியில்)

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَة ً وَفِي الآخِرَةِ حَسَنَة ً وَقِنَا عَذَابَ النَّار

'ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனத்தன் வஃபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வகினா அதாபந்நார்'
எங்கள் இறைவா! எங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நன்மையை நல்கும் நல் வாழ்வை வழங்குவாயாக! (அல்குர்ஆன்: 2:201)

(நன்றி Mail of Islam)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக