ஞாயிறு, 15 டிசம்பர், 2013

கடிதங்களுக்கு ஒரு இணையதளம்

இது இமெயில் யுகம்.என‌வே கடிதங்களுக்கு அதிகம் வேலையில்லை.ஹாய் என் ஆரம்பித்து இரண்டு மூன்று வரிகளில் விஷயத்தை சொல்லி இமெயில் அனுப்பி விடலாம். இலக்கணம் பற்றியோ கடித நாகரீகம் பற்றியோ அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை.

டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் எழுச்சிக்குப்பின் இமெயிலின் நிலையே கவலக்கிடமாக ஆகி வருவதாக ஒரு கருத்து வலுப்பெற்று வருவது ஒரு புறம் இருக்கட்டும்.இன்றைய நிலையிலும் கடிதம் எழுதும் தேவை ஏற்படும் தருணங்கள் இல்லாமல் இல்லை.
வேலை தேடுபவர்கள் விண்ணப்ப படிவத்தோடு அறிமுக கடிதம் எழுத வேண்டும்.வரிச்சலுகை கோர கடிதம் எழுதி தர வேண்டும்.இவ்வள‌வு ஏன் செல்போன் இணைப்பு மாற்றம் அல்லது பில்லிங் தொடர்பான சந்தேகம் எனறால் கூட ஃபார்மலா ஒரு கடிதம் கொடுங்க‌ளேன் என்று கேட்கப்படலாம்.

இப்படி இன்னும் கூட பல நேரங்களில் கடைதம் எழுதும் தேவை இருக்கவே செய்கிறது.கொஞம் ஆர்வம் உள்ளவர் என்றால் அமெரிக்க அதிபருக்கோ அல்லது இங்கிலாந்து மகாராணிக்கோ உலக நடப்பு குறித்து கடிதம் எழுத விரும்பலாம்.

பலருக்கு அலுவல் நிமித்தமாக கடிதம் எழுதும் நிர்பந்தமும் ஏற்படலாம் என்பது மட்டுமல்ல இந்த வகை கடிதங்களை எழுதுவதற்கு என்று ஒரு முறை உள்ளது.ஒரு இலக்கணம் இருக்கிற‌து.அதோடு ஆங்கில புலமையும் தேவவைப்படும்.

ஒரு கடிதத்தை எப்படி துவங்குவதில் இருந்து என்ன மாதிரியான வாசகங்களை போடுவது என்பது வரை பல நுட்பமான அம்சங்கள் ஒரு நல்ல கடிதத்தின் பின்னே இருக்கிறது.அதோடு முகவரியை எங்கே குறிப்பிடுவது ,கடிதம் பெறுபவரை எப்படி விளிப்பது போன்றவற்றையும் கவனிக்க வேண்டும்.

இத்தகைய ஒரு நிலை உங்களுக்கு ஏற்பட்டு நல்ல கடிதத்திற்கான வடிவம் பிடிபடாமல் நீங்கள் தடுமாற நேரிட்டால் உங்களுக்கு வழிகாட்ட ‘நைஸ்லெட்டர்.காம்’ இணையதளம் இருக்கவே இருக்கிறது.

கடிதம் எழுதும் தேவை உள்ளவர்கள் இந்த தளத்தில் நுழைந்துவிடால் போதும் சுலபமாக எல்லா வகையான கடிதங்களையும் எழுதிக்கொள்ளலாம்.

அடிப்படையில் கடிதம் எழுதுவதற்கான செயலி என்று இதனை கொள்ளலாம்.இதன் மூலம் கடிதம் எழுதுவது இமெயில் அனுபவது போல மிகவும் சுலபமானது.

தளத்தின் முக‌ப்பு பக்கத்தில் உள்ள கடித படிவத்தில் பெயர்,நாள்,பெறுபவர் உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி செய்துவீட்டு அதன் கீழே கொடுக்கபடுள்ள இடத்தில் விவரத்தை டைப் செய்தால் போதும் கடிதம் ரெடி.மற்றபடி வடிவம் முறை பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம்.ஒரே கிளிக்கில் கடிதம் அதற்குறிய வடிவில் தயாராகிவிடும்.அப்படியே டவுண்லோடு செய்யாலாம். அல்லது நம் கம்ப்யூட்டரில் மாற்றிக்கொள்ளலாம்.

கடித வடிவம் மட்டுமல்ல எழுதுவதே தகாராறு என்றாலும் கவலை வேண்டாம். இந்த தலத்திலேயே பல மாதிரி கடிதங்கள் உள்ளன. அவற்றை தேர்வு செய்து கொண்டு பெயரை பட்டும் மாற்றி பயன்படுத்திக்கொள்ளலாம்.

ராஜினாமா செய்வது முதல் வேலைக்கான நேர்க்காணலுக்கு பின் அனுப்ப வேண்டிய கடிதம் என பல விதமான கடித மாதிரிகள் உள்ளன.தேவை இருந்தாலோ அல்லது நேரம் இருந்தாலே சென்று பாருங்கள்..எளிமையான அழகான‌ பயனுள்ள‌ சேவை.
—-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக