புதன், 29 ஜூன், 2016

அலி ரலியல்லாஹ் அறிவுக்கூர்மை -5

இரண்டு பிரயாணிகள் ஒருவர் 5 ரொட்டியும் இரண்டாமவர் 3 ரொட்டியும் வைத்திருந்தார்கள்
சாப்பிடும் போது மூன்றாமவர் ஒருவர் சேர்ந்து கொண்டு 8 ரொட்டிகளையும் சமமாக பங்கீட்டு மூன்று பேர்களும் சாப்பிட்டனர் அது வரை எந்த பிரச்சனையும் இல்லை
மூன்றாமவர் சாப்பிட்டு முடித்ததும் 8 திர்ஹம் காசுகள் கொடுத்தார் அவ்வளவுதான் பிரச்சனை வந்துவிட்டது
முதலாமர் 5 திர்ஹம் எடுத்துக் கொண்டு மீதி 3 திர்ஹம்களை இரண்டாமவருக்கு கொடுத்தார்
இரண்டாமவரோ தனக்கு அவர் கொடுத்ததில் பாதி 4 திர்ஹம் கேட்டார்
வழக்கு அலி ரலி அவர்களிடம் வந்தது 3 ரொட்டி கொண்டு வந்த இரண்டாமவரை 3 திர்ஹம் களை பெற்றுக் கொள்வது உனக்கு நல்லது என்றார்கள் அவனோ தனக்கு 4 திர்ஹம்தான் வேண்டும் என்று அடம்பிடித்தான்
அலி ரலி அவர்களிடம் தீர்ப்பு செயயும்படி சொன்னார்கள்
3 ரொட்டி கொண்டு வந்தவனுக்கு ஒரே ஒரு திர்ஹமும் , 5 ரொட்டிகள் கொண்டு வந்தவனுக்கு 7 திர்ஹமும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்கள்
எப்படி என்று இரண்டாமவர் கேட்டார்
மொத்தம் உள்ள 8 ரொட்டிகளை ஒவ்வொரு ரொட்டியும் மூன்று மூன்று துண்டுகளாக சமமாக பிரித்தால் 24 துண்டுகள் வரும் சரிதானே ? சரிதான்
மூவரும் ஆளுக்கு 8 துண்டுகள் சாப்பிட்டுள்ளனர்
3 ரொட்டி வைத்திருந்தவன்
9 துண்டுகளில் 8 துண்டுகளை அவனே சாப்பிட்டுள்ளான் ஒரே ஒரு துண்டுதான் மீதமாகி இருக்கிறது சரிதானே சரிதான்
5 ரொட்டிகளை வைத்திருந்தவன் 15 துண்டுகளாக்கி அவன் 8 துண்டுகள் சாப்பிட்டு போக 7 மீதமாகி இருக்கிறது சரிதானே சரிதான்
மூன்றாமவர் 8 துண்டுகள் 8 திர்ஹம் கொடுத்துள்ளார்
அதாவது இருவரும் மீதப்படுத்திய 1 + 7 = 8 துண்டுகள் அவர் சாப்பிட்டுள்ளார் அதன் பிரகாரம்தான் திர்ஹம்களும் பங்கீடு செய்யப்பட்டது என அலி ரலி அவர்கள் தீர்ப்பு அளித்தார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக