முத்தால் படச்சே ஹயாத்தாய் நிக்கும் நாள்
முவப்பர் முஹ்யித்தீன் காவலில் யேகல்லாஹ்
(பொருள்) உலகில் வாழும் காலமெல்லாம் முஹ்யித்தின் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் காவலை தந்தருள்வாயாக........
காலாமே அஸ்ராஈல் மௌத்து வாங்கும் நாள்
கருத்தர் முஹ்யித்தீன் காவலில் யேகல்லாஹ்
(பொருள்) இஸ்ராஈல் (அலைஹிஸ்ஸலாம்) எங்கள் ரூஹை வாங்கும் நாள் முஹ்யித்தீன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை காவலில் ஏகல்லாஹ்
பேடை பெருத்தே கப்ரகம் போகும் நாள்
பெருபர் முஹ்யித்தீன் காவலில் யேகல்லாஹ்
(பொருள்) அதிகம் பயம் உண்டான கப்ருக்குள் போகும் நாள் இறை நேசர் முஹ்யித்தீன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை காவலில் ஏகல்லாஹ்
ஸுரு பிலி கேட்டு ஒக்கே புறப்பட்டால்
ஸுல்தான் முஹ்யித்தீன் காவலில் யேகல்லாஹ்
(பொருள்) ஸுரு ஊதும் சத்தம் கேட்டு எல்லோரும் புறப்பட்டு சென்றால் ஸுல்தான் முஹ்யித்தீன் காவலை தா யா அல்லாஹ்....
யேழு முகமிட்டு அடுப்பிச்சே உதிக்கும் நாள்
யெங்கள் முஹ்யித்தீன் காவலில் யேகல்லாஹ்
ஏழு முகத்துடன் நெருக்கமாக சுரியன் உதிக்கும் நாள் எங்கயள் முஹ்யித்தீன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை காவலில் ஏகல்லாஹ்
சூடு பெருத்தே தரம்மல் ஞான் நிக்கும் நாள்
சொக்கர் முஹயித்தீன் காவலில் யேகல்லாஹ்
அதிகம் சூடாக்கப் பட்ட மணலில் நான் நிக்கும் நாள் முஹ்யித்தீன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை காவலில் ஏகல்லாஹ்
நரகம் அதேழும் கரூடம் மிகச்சே நாள்
நலவர் முஹ்யித்தீன் காவலில் யேகல்லாஹ்
ஏழு நரகமும் அதிகம் கோபம் நிறைந்த நாள் நல்லவர் முஹ்யித்தீன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை காவலில் ஏகல்லாஹ்
துவக்கம் பிடிச்சு கணக்கெல்லாம் நோக்கும் நாள்
தலவர் முஹ்யித்தீன் காவலில் யேகல்லாஹ்
எங்கள் நன்மை தீமைகளை பட்டியலிட்டு கணக்கெடுக்கும் நேரத்தில் தலைவர் முஹ்யித்தீன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை காவலில் ஏகல்லாஹ்
அறிப்பத்தில் இட்டே ஸிராத்து கடக்கும் நாள்
அறிமா முஹ்யித்தீன் காவலில் யேகல்லாஹ்
மகவும் மெல்லியதான ஸிராதுல் முஸ்தகீம் பாலம் கடக்கும் நாள் முஹ்யித்தீன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை காவலில் ஏகல்லாஹ்
கோஜா ஷபாஅத்தில் முஹ்யித்தீன் தன் கூடே
கூட்டு சுவர்கத்தில் ஆலம் உடயோனே
பெருமானர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் ஷபாஅத்துடன் முஹ்யித்தீன் அப்துல் கபதிர் ஜீலானி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுடன் சுவர்கத்தில் ஒன்று சேர்பாய் ரஹ்மானே......
கோஜா பைதாம்பர் மங்களம் காணுவான்
மங்கள பேளகள் காணுவான் யேகல்லாஹ்
காரூண்யக் கடல் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் கண்கொள்ளா காட்சிசியாம் அவர்களின் திருமணத்தையும் திருமண அலங்கார வேலைகளையும் காணத்தருவாய் ரஹ்மானே.........
யென்னயும் யென்னும்மா பாவயும்
அறிவே படிப்பிச்சே ஒஸ்தாதன் மாரயும்
யென்னயும் மற்றுல்லே முஃமின் யெல்லாரயும்
யெங்கள் நபின்டே ஷபாஅத்தில் கூட்டல்லாஹ்
என்னையும் என் பெற்றோரையும் நல் அறிவை போதித்த ஆசிரியர்களையும் எங்கள் தலைவர் முஹம்மத் முஸ்தாபா (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் ஷபாஅத்தில் ஒன்று சேர்பாயாக.....
ஆமீன் ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்
வெள்ளி, 28 அக்டோபர், 2011
முனாஜாத் கொஸிய்யா
திங்கள், 24 அக்டோபர், 2011
தேசப் பிரிவினைக்கு யார் காரணம்?
இந்து-முஸ்லிம் உறவு கடந்த காலங்களில்….
கி-பி எட்டாம்நூற்றாண்டு முதல் கிபி 18ம் நூற்றாண்டு வரை இந்தியாவை ஆண்ட முஸ்லிம்களின் ஆட்சியை தலை சிறந்த ஆட்சியென போற்ற இயலாவிட்டலும் அந்த 10 நூற்றாண்டுகளில் இந்து முஸ்லிம் கலவரங்கள் நடந்ததாக இந்திய சரித்திரத்தின் எந்த பகுதிலும் காண இயலாது.ஆனால் ஏகாதிபத்திய வெள்ளையர்கள் தங்கள் ஆட்சியை இங்கே நிலை நிறுத்த முயன்ற 19-ம் நூற்றாண்டில் தான் நாம் முதன் முறையாக இந்து-முஸ்லிம் கலவரங்களைப் பற்றி அறிகிறோம்.
பிரிட்டிஷ் ஆட்சியில் இந்துக்களும் -முஸ்லிம்களும் இந்துக்களையும்,முஸ்லிம்களையும் பிரித்தாளுதல் மூலமே தங்களின் ஆட்சியை நிலைபெற வைக்க முடியுமெனத் திட்டமிட்டனர் வெள்ளையர்.அதற்கு இரு வழியினைக் கடைப் பிடித்தனர்.
1)இந்துக்களின் மனதில் முஸ்லிம்களைப் பற்றிய தப்பான எண்ணத்தை ஏற்படுத்தும் வண்ணம் வரலாற்று நிகழ்ச்சிகளை திரித்துக் கூறல்.
2)பொருளாதார ரீதியில் இரண்டு இனங்களுக்குமிடையே ஏற்றத் தாழ்வை ஏற்படுத்துவதின் மூலம் இருவருக்கிடையே போட்டியையும்.பொறாமையையும்,குரோ
பிரிட்டிஷ் சதி
ஒரிஸாவின் முன்னாள் ஆளுனரும் முன்னால் ராஜ்யசபை உறுப்பினருமான பி.என்.பாண்டே அவர்கள் சரித்திரங்கள் எப்படி திருத்தப்பட்டன என்பதைக் குறிப்பிடும்பொழுது தன் கருத்துக்கு ஆதரவாகக் கீழ்கண்டவாறு எழுதுகிறார்:
“பிரிட்டிஷ் தஸ்தாவேஜுகளைப் பார்த்தால் பிரித்தாலும் கொள்கை எப்படி உருவெடுத்தது என்பது புலப்படும்.எல்கின் பிரபுவுக்கு பிரிட்டிஷ் அரசின் செயலாளார் ‘வுட்’எழுதியுள்ள கடிதத்தில்,
”ஒரு பகுதிக்கு எதிராக அடுத்ததைத் தூண்டிவிடும் யுக்தி மூலம் இந்தியாவில் நமது ஆதிக்கத்தை நிலை நாட்டியுள்ளோம்.இதை நாம் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.அனைவருக்குமிடையே பொதுவான உணர்வு ஏதும் ஏற்படவிடாமல் இருக்க உங்களால் இயன்றது அனைத்தையும் செய்யுங்கள்”எனக் குறிப்பிட்டுள்ளனர்.
கவர்னர் ஜெனரல் டfபரினுக்கு கிராஸ் எழுதிய கடிதத்தில்,
“மத உணர்வுகளால் ஏற்படும் பிளவுகள் நமக்கு பொருத்த சாதகமாக உள்ளன.இந்தியாவுக்கான கல்விமுறைப் பற்றி ஆராயத் தாங்கள் நியமித்துள்ள ஆய்வுக்குழு மேலும் பல நல்ல விளைவுகளை நமக்கு ஏற்படுத்தித் தரும் என்று எதிர் பார்க்கிறேன்”என எழுதிய்யுள்ளார்.
கர்ஸன் பிரபுக்கு ஜார்ஜ் பிரான்சிஸ் ஹாமில்டன் பின் கண்டவாறு எழுதியுள்ளார்:
“படித்த இந்தியர்களை வெவ்வேறு கருத்துகளை இரு கூறுகளாகப் பிரித்தால் பரவிவரும் கல்வியறிவு காரணமாக நமது அரசுமீது ஏற்படவிருக்கும் நுட்பமான தாக்குதல்களிலிருந்து நம்மை நம் பாதுகாத்துக்கொள்ள முடியும்.எனவே.இனத்துக்கு இனம் பிளவை அதிகப்படுத்துகிற வகையில் பாடப் புத்தகங்கள் இருக்கும்படி நாம் திட்டமிட வேண்டும்”
(இஸ்லாமும்,இந்தியக்கலாச்சாரமு
இதன் அடிப்படையில் இந்திய சரித்திரப் பாடப் புத்தகங்கள் திட்டமிட்டுத் திருத்தி எழுதப்பட்டன.மத்திய காலத்தில் முஸ்லிம் மன்னர்களில் ஆட்சியில் இந்து மக்கள் கொடுமைப் படுத்தப்பட்டனர் என்பது போன்ற கருத்துக்கள் வலிந்து திணிக்கப்பட்டன.
பொருளாதாரத் தாக்குதல்
இரண்டாவதாக,பொருளாதார ரீதியில் இருவரிடையே விரோதத்தை எற்படுத்த முனைந்தனர்.வங்காளத்தில் நிரந்தரக் குடியேற்றம் என்ற பெயரில் முஸ்லிம்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு அவர்களிடம் ஊழியர்க்ளாக இருந்த இந்துக்களிடம் தரப்பட்டன.டாக்டர்.டபிள்யூ.டபி
நிரந்தரக் குடியேற்றத்தின் இலட்சியமே இந்து அதிகாரிகளை நிலச்சுவாந்தார்களாக் மாற்றுவதே.அன்றுவரை முக்கிய பதவிகளில் இல்லாமல் இருந்த வரி வசூலிப்பவர்களை இக்குடியேற்றம் உயர்த்திவிட்டது.முஸ்லிம்களுக்
(Quote in the meaning of pakistan by F.K.Khan Duarrani).
நிதி நிர்வாக விசயங்களில் முஸ்லிம்கள் புற்க்கணிக்கப்பட்டனர்.இராணுவத்
கல்கத்தாவிலிருந்து வெளிவந்த “டோர்பீன்”என்ற பத்திரிக்கை 1867ம் ஆண்டு ஜூலை 14ந்தேதி இதழில் எழுதியிருந்த ஒரு கட்டுரையின் ஒரு பகுதி அன்றைய முஸ்லிம்களின் அவலநிலையை வெளிப்படுத்தும்.
“பெரியதும் சிறியதுமான எல்லா அலுவல்களும் நாளடைவில் முஸ்லிம்களிடமிருந்து பறிக்கப்பட்டு இதர மதத்தினரிடம் குறிப்பாக இந்துக்களுக்குக் கொடுக்கப்பட்டன.ஆட்சியாளர் தனது குடிமக்களில் எல்லா வகுப்பாளரையும் ஒரே விதமாகப் பாவிக்கக் கடமை ப்பட்டுள்ளனர்.
அவ்வாறிருக்க முஸ்லிம்களை அரசாங்க பதவிகளிலிருந்து அகற்றி விடுவதற்குத் தங்களின் கெஜட்டுகளிலிருந்து முஸ்லிம்களைப் பகிரங்கமாக நீக்கிவிட்டிருந்தது.சமீபத்தில் சுந்தர் பான்ஸ் காரியாலயத்தில் சில இடங்கள் காலியாயின.இதைப்பற்றிக் கமிஷனர்,அரசாங்கக் கெஜட்டில் வெளியிட்ட விளம்பரத்தில் அவ்வேலைகள் இந்துக்களைத் தவிர வேறெவருக்கும் தரபடமாட்டாதென அறிவித்திருந்தனர்.முஸ்லிம்கள் அரசாங்க வேலைகளுக்குத் தகுதியானவர்களாக இருப்பினும் அரசாங்க அறிக்கையில் அவர்களைப் புறக்கணித்தே வைக்கப்பட்டிருந்தது.இவ்வளவு தாழ்ந்த நிலைமைக்கு முஸ்லிம்கள் ஆக்கப்பட்டனர்.”
மேற்கண்டவாறு ஆட்சியாளர்கள் செய்த திட்டமிட்டச் சதியின் விளைவாக இந்துக்களின் மீது முஸ்லிம்களுக்கு ஒரு வகையான பொறாமையும்,முஸ்லிம்களைவிடத் தாங்கள் சக்தி வாய்ந்தவர்கள் என்னும் மனோபாவம் இந்துக்களுக்கும் வளர ஆரம்பித்தன.
சிப்பாய்க் கலகத்திற்குப் பின்
இந்நிலையில்,1857ம் வருடத்தில் பசுமாட்டின் கொழுப்பினால் தயாரிக்கப்பட்ட குண்டுகளைக் காரணம் காட்டி இந்து சிப்பாய்களால் சிப்பாய்க் கலகம் துவக்கப்பட்டது.அதில் முஸ்லிம்களும் பூரணமாகக் கலந்து கொண்டனர்.அக்கலகம் சில மாதங்களிலேயே ஒடுக்கப்பட்டு விட்டது.இந்துக்களில் சிலர் தங்களுடன் தோளோடு தோள் சேர்ந்து ஆயுதந்தாங்கிப் போரிட்ட முஸ்லிம்களுக்குத் துரோகிகளாக மாறி அரசாங்கத்திடம் காட்டிக் கொடுத்தனர்.இதனால் அரசாங்கத்தின் கோபமெல்லாம் முஸ்லிம்கள் மீது விழுந்தது.
சிப்பாய்க் கலகத்திற்குப் பின் முஸ்லிம்களின் மீது நடைபெற்ற கொடுமைகளை நேரில் கண்ட சர்.ஸையித் அஹ்மதுகான்.1887ம் ஆண்டு காங்கிரஸ் மாநாட்டிற்குத் தலைமை வகித்த பம்பாய் பாரிஸ்டர் ஜனாப் பத்ருத்தீன் தையிப்ஜீக்கு எழுதிய கடிதத்தில் ,
“சிப்பாய் கலகத்தின் போது என்ன நடந்தது?இந்துக்கள் அதை ஆரம்பித்தனர்.முஸ்லிம்கள் அதிக தைரியத்துடன் அதில் ஈடுப்பட்டனர்.இறுதியில் இந்துக்கள்,கங்கையில் முழுகித் தங்களின் பாவங்களைப் போக்கிக் கொண்டு முன் போல் நல்ல பிள்ளைகளாகி விட்டனர்.ஆனால்,ஆயிரக்கணக்கான முஸ்லிம் குடும்பங்கள் நசித்து நாசமடைந்தன.”என குறிப்பிட்டுள்ளார். (பாகிஸ்தான் விளக்கம்.by எப்.கே.துர்ரானி)
சொல்லவொணா துன்பங்களை அனுபவித்த முஸ்லிம்கள் தங்களின் எதிர்காலம் குறித்து அச்சம் கொள்ளும் பல நிகழ்ச்சிகள் நடந்தன.
இந்து தீவிரவாதிகளின் போக்கு
1867ல் காசியிலுள்ள இந்துத்தலைவர்கள் உருது மொழிக்கெதிராக கிளர்ச்சியில் ஏடுபட்டனர்.1875ல்’இந்தியா இந்துக்களுக்கே’என்ற கோஷத்துடன் சுவாமி தயானந்த சரஸ்வதி என்பவரால் ஆர்ய சமாஜ் என்ற இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது.இதன் முக்கிய நோக்கம் இஸ்லாத்தையும்.கிறிஸ்துவ மதத்தையும் எதிர்ப்பதே.
1890ல் “முஸ்லிம்கள் அந்நியர்கள்”என்க் கூறிக் கொண்டிருந்த பாலகங்காதர திலகர்.முஸ்லிம்கள் குர்பானி கொடுப்பதை எதிர்த்து பசு பாதுகாப்பு இயக்கத்தைத் துவக்கினர்.
1882ல் பங்கிம் சந்திர சாட்டர்ஜி ‘ஆனந்த மடம்’எனும் பெயரில் ஒரு நாவல் வெளியிட்டார்.அதில்தான் வந்தே மாதரம் என்ற கீதம் வருகிறது.அதில் இந்தியாவை ‘காளி’என்ற கடவுளுக்கு ஒப்பிட்டு அந்த காளி துஷ்டர்களை ஒழிக்கச் சொல்கிறாள் எனும் கருத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட நூல் முஸ்லிம்களுக்கு எதிராக தனது துவேஷத்தை வெளிப்படுத்தியது.
இவையெல்லாம் முஸ்லிம்களின் மனதில் ஒரு வகையான பய உணர்ச்சியை ஏற்படுத்தின.அது பின்னாளில் இரு சாரரிடையே நிரந்தரப் பகையாக மாறியாது.
காங்கிரஸும் முஸ்லிம்லீக்கும்
இந்நிலையில்,1885ல் தேசிய காங்கிரஸ் தோன்றியது.அதன் முன்னோடி தலைவர்களில் பெரும்பாலோர் முஸ்லிம் எதிர்ப்பாளர்களே,அவர்கள் முஸ்லிம்களின் அச்சத்தைப் போக்க எவ்விதநடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆங்கிலேயர் தூவிய வேற்றுமை விஷ வித்துகளுக்கு பலியான இந்துமதத் தலைவர்கள் சுதந்திர போராட்டத்தை இந்து மறுமலர்ச்சி எனும் அடிப்படையில் நடத்த விரும்பினர்.முஸ்லிம்களை அரவணைத்துச் செல்வதற்குப் பதிலாக அவர்களை ஒதுக்கிவிட்டு தங்களின் சுதந்திரப் போராட்டத்தை நடத்த விரும்பினர்.விளைவு?1906ம் ஆண்டு அகில இந்திய முஸ்லிம் லீக்.சர்.ஆகாகான் அவர்கள் முயற்சியால் தோற்றுவிக்கப்பட்டது.
முஸ்லீம் லீக் ஏன் தோன்றியது?என்பதன் காரணத்தை R.P.Dutt இப்படி குறிப்பிடுகிறார்.
“தீவிரவாத தேசிய இந்துத் தலைவர்கள் தங்களின் போராட்டத்தை இந்துமத அடிப்படியில் நடத்த விரும்பினர்.இந்துமத மறுமலர்ச்சி மூலமே தேசிய விழுப்புணர்ச்சி ஏற்படுத்தப்பட்டதாகக் காட்ட விரும்பினர்.எனவே அவர்கள் தேசிய நீரோட்டத்தில் முஸ்லிம்கள் கலந்துவிடாமல் இருக்க முயற்சித்தனர்.அதன் விளைவே 1906ல் முஸ்லிம்லீக் தோன்றியது”.
(Quoted in R.A.Deasai’s social background of Indian Nationalism)
Most members of the congress made a serious error refusing to admit the existence and validity of muslim nationalism.
முஸ்லிம்களின் தேசிய உணர்வுகளின் அவசியத்தையும் நிலைபாட்டையும் மறுத்ததின் மூலம் பெரும்பாலான காங்கிரஸ் உறுப்பினர்கள் மோசமான தவறினைச் செய்தனர்.
(A short History of India and Pakistan by t.Walter Wall Bank)(U.S.A.)1965.
முஸ்லிம்லீக் தோன்றினாலும் முஸ்லிம்களில் பலர் காங்கிரஸிலும் லீக்கிலும் இருந்தனர்.மவ்லானா அலி சகோதரர்கள் காங்கிரஸை பெரிதும் நம்பினர்.
பிரிவினைப் பிரச்சாரம் யார் துவக்கியது?
இந்தியப் பிரிவினை தவிர்க்க முடியாமல் போனதற்கு 1920க்கும் 1940க்குமிடையே நடைபெற்ற பல நிகழ்ச்சிகளே காரணம்.இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் தனித்தனி நாடு எனும் திட்டத்தை முதன் முதலில் கூறியவர்கள் இந்து தீவிரவாதிகள் தாம்.
இன்று இந்திய பிரிவினைக்கு முஸ்லிம்கள் தான் காரணம் எனப் பிரச்சாரம் செய்வோர் 1920க்கும் 1940க்குமிடையே நடைப்பெற்ற நிகழ்ச்சிகளையும் பேச்சுக்களையும் ஒரு முறை ஆராய்ந்து பார்க்கட்டும்.
இந்நாட்டைவிட்டும் வெளியேறிவிடுங்கள்;அல்லது இங்கு இரண்டாம் தர பிரஜையாக இருக்க சம்மதியுங்கள் எனும் கோஷம் முஸ்லிம்களை நோக்கி பகிரங்கமாகப்போடப்பட்டது.
“முஸ்லிம்களுக்கும்.இந்துக்களு
இன்று R.S.S. போற்றிப் புகழும் V.D.சாவர்க்கார்.இந்துக்கள் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்றும் இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எவ்வித எதிர்காலமமும் இல்லை என்றும் 1917ம் ஆண்டிலிருந்து கூறி வந்ததாகR.N.அகர்வால் தனது The National Movement என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
குர்தகி மட சங்கராச்சாரியார்,இந்தியா இந்துக்களுக்கே சொந்தமானது. முஸ்லிம்கள் இங்கு விருந்தினர்களே.அவர்கள் விருந்தாளியைப்போலவே நடந்து கொள்ள வேண்டுமென்று முஸ்லிம்களை எச்சரித்தார்.
அகில இந்திய சிவில் சர்வீஸில் உறுப்பினராக இருந்த ஹர்தயால்,A Joint Hindu-Muslim state is Sheer Nonsense “இந்து-முஸ்லிம் இணைந்த ஒரு நாடு என்பது முழு முட்டாள்தனம்”என உரத்துச் சொன்னார்.
1923ல் வாரணாசியில் பண்டிட் மதன்மோகன் மாளவியா தலைமையில் இந்துமகாசபை புதுப்பிக்கப்பட்டது.இந்தத் தீவிரவாத இயக்கத்தின் கொள்கை முஸ்லிம்களை மீண்டும் இந்துவாக மாற்றல்,இந்துக்களுக்குப் போர் பயிற்சிதரல்.அதன் முக்கிய குறிக்கோள் இந்தியா இந்துக்களுக்கே வேறு யாருக்கும் அதில் உரிமை இல்லை என்பதே.இந்த இயக்கம் தொடங்கப்பட்ட பின் வகுப்புக் கலவரங்கள் அதிகமாயின இஸ்லாத்தையும் முஹம்மது நபி (ஸல்) அவர்களையும் இழிவுபடுத்தும் முயற்சிகள் நடைபெற்றன.1924ல் லாஹூரில் ரங்கிலா ராஜா (கெட்ட நடத்தையுள்ள ராஜா)என்ற நூல் ஒன்று வெளியிடப்பட்டது.அதில் இஸ்லாமியர்கள் போற்றும் முஹம்மது நபி அவர்களைத் தரக்குறைவாக விமர்சிக்கப்பட்டது.
முஸ்லிம்களின் நிலை
இவ்விதம் இந்துமதத் தலைவகளில் பலர் இந்தியாவின் பிரிவினையைப் பற்றி 1917லிருந்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது முஸ்லிம் தலைவர்களின் நிலை என்னவாக இருந்தது?
இன்று இந்தியாவைத் துண்டாடியதாக அதிகம் குறை சொல்லப்படும் முஹம்மது அலி ஜின்னா சாஹிப் அவர்கள் முதலில் இரு நாடு எனும் திட்டத்தைக் கடுமையாக எதிர்த்தார்.1906ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம்லீக்கில் அவர் 1936ல் தான் அதிகாரப் பூர்வமாக இணைந்தார்.அதுவரை அவர் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பாலமாக இருந்தார்.’The Ambassadur Hindu-Muslim Unity’என்று சரோஜினி நாயுடுவால் பாராட்டப்பட்டவர்.1993ல் லண்டனில் மாணவராக இருந்த ரஹ்மத் அலி என்பவர் பாகிஸ்தான் என்ற ஒரு நாட்டைப் பற்றிக் குறிப்பிட்ட பொழுது ‘An Impossible Dream’நடைப்பெற இயலா கனவு’என்றார் ஜின்னா
1906ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம்லீக் 1940ம் ஆண்டுவரை தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தவில்லை.1945,1946ல்தா
ஜின்னா ஏன் கேட்டார் தனி நாடு?
தனி நாடு கோரிக்கையைப் பற்றி சிந்திக்காத ஜின்னா சாஹிப் பின் பிடிவாதமாக தனிநாடு கேட்டது ஏன்?1937க்குப் பின் ஆட்சிப் பொறுப்பை எற்ற காங்கிரஸ்தான் காரணம் என்கிறார் சர்.சிம்மன்லால் சிடால்வாட்.லிபர்ல் பார்டியின் தலைவரும் 1930ம் ஆண்டு நடைபெற்ற வட்டமேஜை “மாநட்டில் கலந்து கொண்டவருமான சிடால்வாட்,தனது Recollection and Reflection என்ற நூலில் ,Congress Parentage of Partition” என்ற தலைப்பின் கீழ் எழுதுகிறார்:
“பாகிஸ்தான் இயக்கத்திற்கு மூலதரம் காங்கிரஸ்தான்.அது 1935-ம் ஆண்டுச் சட்டப்படி ஆட்சிக்கு வந்தபொழுது நடந்துகொண்ட முறைகள் முஸ்லிம் சமுதாயத்தின் மனதில் சந்தேகத்தினை ஏற்படுத்தியது.முஸ்லிம்களின் முறையான கோரிக்கைகளைக் கூட அது நிறைவேற்றவில்லை”என்கிறார்.
வட்டமேசை மாநாட்டில் மாகாண மந்திரிச் சபைகளில் சிறுபான்மைப் பிரதிநிதிகளையும் சேர்த்து கொள்வதென ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தது.ஆனா
(quoted in A Short History of India and Pakistan)
காங்கிரஸ் ஆட்சியில் இருந்த இரண்டு ஆண்டுகால ஆட்சியில் முஸ்லிம்கள் விரும்பாத பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன.அரசாங்க மொழியாக ஹிந்தி மட்டுமே உபயோகிக்கப்பட்டது.உருது புறக்கணிக்கப்பட்டது.முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் அலட்சியம் செய்யப்பட்டன.தங்கள் நபியைப் பற்றியோ கலிபாக்களைப் பற்றியோ மற்றும் இஸ்லாம் சம்பந்தமான விஷயங்களோ பாடத் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை.தங்களின் கலச்சாரம் ஒரே அடியாக அழிந்து விடுமோ என முஸ்லிம்கள் அச்சப்பட்டனர்.(Sir Regined Coupland.The Indiyan Problem)
இவ்வாறு காங்கிரஸ் நடந்து கொண்ட முறைகளைக் கண்ட ஜின்னா சாஹிப் பூரண சுயாட்சி கிடைக்காத ஒரு நாட்டில் இடைக்கால ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் காங்கிரஸ் இவ்வளவு அநீதி இழைத்தால் பரிபூரண சுயாட்சிப் பெற்று ஆட்சிக்கு வந்தால் என்னவாகும் என எண்ணியே தனிநாடு தீர்மானத்தை 1940ல் ஆதரித்தார்.எனினும் அதனைத் தீவிரமாக வற்புறுத்தவில்லை.
நேருவின் பேட்டியால் நிலை மாறியது
ஒன்றுபட்ட இந்தியாவில் மாகாண சுயாட்சி என்ற அடிப்படையில் மாகாணங்களைப் பிரிக்கலாம் என 1946ம் ஆண்டு மே மாதம் 16ந்தேதி வெளியிடப்பட்ட கேபினட் தூதுக்குழுவின் முடிவினை ஜூன் மாதம் 6ந்தேதி கூடிய முஸ்லிம் லீக் கவுன்ஸில் ஜின்னா சாஹிபின் ஆலோசனையின்படி ஏற்றுக்கொண்டது.1940ல் அக்கட்சி இயற்றிய தனி நாடு கோரிக்கையைகைவிட தயாரானது.ஆனால் ஜூலை 10ந்தேதி நேரு அவர்கள் கேபினட் குழுவின் முடிவை மாற்ற காங்கிரஸுக்கு உரிமை உண்டு என்ற ரீதியில் அளித்த பேட்டி நிலைமையை மோசாமாக்கியது.”அடிக்கடி தன் நிலையை மாற்றிக் கொள்ளும் காங்கிரஸை நம்பத் தயாராக இல்லை.தனி நாடுதான் தீர்வு”என முடிவாக ஜின்னா கூறிவிட்டார்.
“நேருவின் பேட்டி இந்தியாவின் சரித்திரத்தையே மாற்றி விட்டது”என மவ்லானா அபுல்கலாம் ஆஜாத் தனது India Wins Freedom என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சிகளிலிருந்து ஜின்னா சாஹிபும் முஸ்லிம்லீக்கும் முஸ்லிம்களும் பிரிவினையை நிர்ப்பந்த சூழ் நிலையில் தான் கேட்டார்கள் என்பது விளங்கும்.
R.S.S.ஐ நோக்கி ஒரு கேள்வி?
இன்று இந்தியாவைத் தூண்டிய பாவிகள் என முஸ்லிம்களைக் குற்றஞ்சாட்டிப் பிரச்சாரம் செய்யும் R.S.S.அன்று என்ன செய்தது?இந்தியாவைப் பிரிக்க வேண்டும் என இந்து மகாசபையினர் பேசினார்களே;பிரிக்கலாம் என இராஜாஜி அவர்கள் ஆலோசனை வழங்கினாரே;பிரிக்கவே கூடாது என பிடிவாதம் செய்த காந்தியை வல்லபாய்படேல் சமாதனாப் படுத்திச் சம்மதிக்க வைத்தாரே;இவ்வளவு நிகழ்ச்சிகள் நடந்த பொழுது R.S.S. என்ன செய்தது?இன்று பாரதமாதாவைத் துண்டாடிய பாவிகள் என நீலிக்கண்ணீர் வடிப்போர் அன்று பிரிவினைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனரா?மாநாடுகள் நடத்திக் கண்டனத் தீர்மானம் போட்டார்களா?இல்லையே!ஏன்?
முஸ்லிம்லீக்கை ஜின்னாசாஹிபை காயிதேமில்லத்தை முஸ்லிம்களைப் பிரிவினை வாதிகள் எனச் சாடுவோர் பிரிவினைக்கு முதலில் வித்திட்ட லஜ்பத்ராயை, பண்டிட் மாளவியாவை, ஆதரித்த இராஜாஜியை, பட்டேலை பிரிவினைவாதிகள் எனச் சொல்லுவது இல்லையே?ஏன்?
இந்தியா பிளவுபட்டாலும் பரவாயில்லை முஸ்லிம்களை இந்நாட்டை விட்டும் விரட்டிவிட வேண்டும் என்ற தணியாத ஆசையால் அதனை ஏற்றுக்கொண்டனர்:விரும்பினர் R.S.S.காரர்கள்.ஆனால் அவர்கள் விரும்பியது போல் இந்திய முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக இந்நாட்டை விட்டும் சென்று விடவில்லை.இந்நாட்டிலே பிறந்து இந்நாட்டிலே வளர்ந்து இந்நாட்டின் வளர்சிக்கும் வளத்திற்கும் பாடுபட்ட முஸ்லிம்கள் எப்படி போவார்கள்?அவர்களை விரட்ட யாருக்கும் எவ்வித குரோத உணர்வே R.S.S.க்காரர்கள் ஒன்றுமே அறியாத அப்பாவிகள் போல் கபட வேடமிட்டு புலம்புகின்றனர்.
சற்று சிந்தியுங்கள்!
மேற்குறிப்பிட்ட ஆதாரப் பூர்வமான நிகழ்ச்சித்தொகுப்புகளிலிருந்து நாம் என்ன புரிகிறோம்?
பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன் முஸ்லிம்களின் ஆட்சியில் வகுப்புக் கலவரம் நடக்கவில்லை.
இந்து-முஸ்லிம் கருத்து வேற்றுமையும்-குரோதமும் பிரிட்டிஷரால் திட்டமிடடு ஏற்படுத்தப்பட்டவை.
முஸ்லிம்கள் இந்நாட்டைப் பிரிக்க முதலில் விரும்பவோ,திட்டமிடவோ இல்லை.
இந்து தீவிரவாதிகளும் அடிக்கடித்தன்நிலையை மாற்றிக் கொண்ட காங்கிரஸுமே இந்தியப் பிரிவினைக்கு முதல் காரணம்.
எனவே இந்தியப் பிரிவினைக்கு முஸ்லிம்கள்தான் காரணம் என்பது திட்டமிட்டு நடத்தப்படும் துர்பிரச்சாரமே தவிர அதில் உண்மை ஏதுமில்லை.மேற்கொண்டு உண்மை நிலையை அறிய விரும்புவோர்.H.M.Sreevai எழுதிய partition of India:Legend and Reality, என்ற நூலையும்,The dialogue Between Hindus and Muslims என்ற நூலையும் படித்து பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்
courtesy: niduronline.com
வாழ்வின் வெற்றிக்கு சில நம்பக வரிகள்
1.பேசும்முன் கேளுங்கள், எழுதும்முன் யோசியுங்கள், செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்
2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்
3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.
4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!
5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம் . அதுதான் என்னை மனிதனாக்கியது.
7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!
8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.
9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.
10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.
11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்
12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்
13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை
15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்
16. யார் சொல்வது சரி என்பதை விட, எது சரி என்பதே முக்கியம்
17. பலமுறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்
18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது.. பயத்தை உதறி எறிவோம்
19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்
20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்
21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்
22. வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.
23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து விடுகிறான்...
24. உலகம் ஒரு நாடக மேடை
25.ஒவ்வொருவரும் தம் பங்கை செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் அப்போது தான் முன்னேற முடியும் ..
26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்
27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன் , இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்
28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.
29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
30.. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்
31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்
32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.
33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்க போதுமானது ...
சிந்திக்க சில...
செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்
2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்
3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர்.கற்றுக்கொடுப்பவரெல்லா
4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும்
தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை.
அதற்கு என் நிழலே போதும்!
5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம்.
அதுதான் என்னை மனிதனாக்கியது.
7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை
ஒப்புக்கொள்கிறோம்!
8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும்
ஒரு கலை.
9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு
ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.
10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும்
பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.
11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்
12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்
13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய்
இருப்பதில்லை
15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்
16. யார் சொல்வது சரி என்பதை விட, எது சரி என்பதே முக்கியம்
17. பலமுறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்
18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதற் எறிவோம்
19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்
20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்
21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்
22. வாழ்வதும் வாழ்விடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.
23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக
ஏமாந்து போகிறான்
24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்
25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்
26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்
27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும்
வென்ற மனிதனாவான்
28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.
29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச்
சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம்
தான் கடினம்
31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க
வேண்டும்
32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான்
கோழைத்தனம்.
33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.
மூன்றுண்டு
1. இரகசியத்தை காப்பது.
2. இழைக்கப்பட்ட தீங்கை மறப்பது.
3. ஓய்வு நேரத்தை உயர்ந்த வழியில் பயன்படுத்துவது.
நன்றி காட்டுவது மூன்று வகையிலாகும்
1. இதயத்தால் உணர்தல்.
2. சொற்களால் தெரிவித்தல்.
3. பதிலுக்கு உதவி செய்தல்.
பெண்மையை காக்க மூன்றுண்டு
1. அடக்கம்.
2. உண்மை.
3. கற்பு.
மகிழ்ச்சியான வாழ்க்கைக்குரியவை மூன்றுண்டு
1. சென்றதை மறப்பது.
2. நிகழ்காலத்தை நேர்வழியில் செலுத்துவது.
3. வருங்காலத்தைப் பற்றிச் சிந்திப்பது.
இழப்பு மூன்று வகையிலுண்டு
1. சமையல் அமையாவிட்டால் ஒருநாள் இழப்பு.
2. அறுவடை சிறக்காவிடில் ஓராண்டு இழப்பு.
3. திருமணம் பொருந்தாவிட்டால் வாழ்நாள் முழுவதும் இழப்பு.
உயர்ந்த மனிதனின் வாழ்வு மூன்று வகையில் இருக்கும்
1. அவன் ஒழுக்கத்தோடிருப்பதால் கவலையற்றிருப்பான்.
2. அவன் அறிவாளியாயிருப்பதால் குழப்பங்களற்றிருப்பான்.
3. அவன் துணிவாக இருப்பதால் அச்சமின்றியிருப்பான்.
ஞாயிறு, 16 அக்டோபர், 2011
மருத நாயகம் கான் சாஹிப்
இவரை நினைக்க நினைக்க நெஞ்சு விம்முகிறது ! விழிகள் கலங்குகின்றன !!ஆம் தொடர்ந்து ஆங்கிலேயர்களை தூங்கவிடாமல் செய்த மாவீரன் மருத நாயகம் கான் சாஹிப் ஷஹீத் ஆக்க பட்ட தினம்!!!
இந்தியாவில் சுதந்திற்கு போராடிய முஸ்லிம் போராளிகள் பலர் இருகின்றனர்.அதிகமான போராளிகள் துரோகிகளின் மூலமே ஆங்கிலேயர்களால் கொல்லபட்டனர் .அப்படிபட்ட போராளிகள் இருக்கும் பொழுது ஆங்கிலேயர்களால் இந்தியாவை கைப்பற்றுவது கேள்வி குறியானது?அப்படி பட்டவர்களின் ஒருவர் தான் இந்த மாவீரன் கான் சாஹிப். ஏன் இப்பொழுது உள்ள மக்கள் இவரது தியாகத்தை நினைப்பதில்லை,மேலும் ஏன் வரலாற்றில் இருந்து இவரை மறைக்க முயல்கின்றனர்.கோழையாக இருந்தவர்கள் ,நாட்டை காட்டி கொடுத்தவர்கள் எல்லாம் இன்று போற்ற படுகின்றனர் ஆனால் உண்மையான போராளிகள் மறைக்க படுகின்றனர். ஏன் இந்த பாகுபாடு.அவர் முஸ்லிம் என்ற ஒரே காரணமோ?இனியாவது விழிக்குமா வரலாறு ?மேலும் இவரை போற்றும் விதமாக மதுரை விமான நிலையதிற்கு இவரது பெயரை வைக்குமா அரசாங்கம் ? இனி இவரது சாதனைகளை பார்ப்போம் .
சிவகங்கை அருகே உள்ள பனையூர் என்ற கிராமத்தில் 1725ம் ஆண்டு மருதநாயகம்பிறந்தார். மதுரை பகுதியை ஆண்டதால் மருதநாயகம் என்று பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. இஸ்லாத்தை ஏற்ற காரணத்தினால் முகம்மது யூசுப்கான் சாஹிப் என்று தன் பெயரை மாற்றிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இவர் மருதுநாயகம்,கான்சாஹிப், மருதநாயகம் முகம்மது கான் சாஹிப் என பல பெயர்களில் குறிப்பிடப்படுகிறார்.
இவர் பிறவி முஸ்லிம். இதை நாட்டுப்புற பாடல்கள் உறுதிப்படுத்துகின்றன என்று பேரா. நத்தர் ஷா தனது ஆய்வு நூலில் வாதிடுகிறார்.
1764ல் வெள்ளைய அதிகாரி ஒருவர் எழுதிய கடிதம் ஒன்று அதற்கு ஆதாரமாக மேற்கோள் காட்டப்படுகிறது.
வளரும் பயிறும், துடிப்பான தொடக்கமும் :
சிறுவராக இருக்கும்போதே கம்பீரமாக தன் வாழ்நாளைத் தொடங்கினார் கான்சாஹிப். விளையாட்டாக இருந்தாலும், வீரதீர சாகஸகங்களாக இருந்தாலும் கான் சாஹிப்தான் அதில் வெற்றி பெறுவார்.மருத்துவர், தையல் தொழிலாளி,படகோட்டி, விளையாட்டு வீரர், வித்தகர் என பல திற மைகள் வெளிப்பட்டாலும் தன்னை போர்க் களத்தில் ஈடு படுத்திக் கொள்வதிலேயே அவரது ஆர்வம் இருந்தது.
தஞ்சாவூரை தலைமையகமாகக் கொண்டு ஆட்சிபுரிந்த மராட்டிய மன்னன் பிரதாப சிம்ஹானின் படையில் கொஞ்ச காலம் பணிபுரிந்தார். இதுதான் முதல் ராணுவ அனுபவம்!
பிரெஞ்சுப் படையின் ஆயுதம் :
பிறகு என்ன காரணத்தினாலோ அவர் புதுச்சேரிக்குச் சென்றார். சென்றவர் அங்கேயும் போர் புலியாகவே தன்னை அடையாளம் காட்டினார். புதுச்சேரியை மையமாகக் கொண்டு ஆட்சி புரிந்த பிரெஞ்சுப் படையில் சாதாரண படைவீரனாக தன்னை இணைத்துக் கொண்டார்.
இவரது அறிவும், தலைமைப் பண்பும், போர் நுட்பமும் பிரெஞ்சு தளபதிகளை வியப்பில் ஆழ்த்திற்று. விளைவு, குறுகிய காலத்தில் முக்கியப் பதவிகளை வென்றார் கான்சாஹிப் மருதநாயகம்.
ஆற்காடு நவாப் |
யார் ஆற்காடு நவாப்?
ஒளரங்கசீப்பின் மரணத்திற்குப் பிறகு முகலாய பேரரசு தென்னிந்தியாவில் பலகீனமடைந்தது. யாரும், யாருக்கும் கட்டுப்படவில்லை. ஒவ்வொருவரும் தங்களை நவாபுகள், நிஜாம்கள் என்று சிற்றரசர்களாக அறிவித்துக் கொண்டனர்.
தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஆற்காட்டை தலைநகராகக் கொண்டு இயங்கிய ஆற்காடு நவாபின் அரசுதான் முதன்மையானதாகவும் , பலமானதாகவும் இருந்தது. இவர்களிடம் அனுமதி பெற்றுத்தான் ராபர்ட் கிளைவின் தலைமையில் கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரில் ஆங்கிலேயே வணிகர்களும், படையினரும் தென்னிந்தியாவில் நுழைந்தனர்.
ஆங்கிலேயப் படையில் கான் சாஹிப் :
ஆற்காடு போருக்குப் பிறகு தென்னிந்தியாவில் பிரெஞ்சுக்காரர்களின் செல்வாக்கும்,ஆதிக்கமும் குறையத் தொடங்கியது. அவர்கள் புதுச்சேரியையும், காரைக்காலையும் மட்டுமே தக்க வைத்துக் கொண்டனர். இந்நிலையில் பிரெஞ்சு படையில் இருந்த தளபதிகளுக்கும், கான் சாஹிபுக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் தோன்றியது.
கோபமுற்ற கான் சாஹிப் ஆங்கிலேயப் படையில் ராபர்ட் கிளைவின் அனுமதியுடன் இணைந்தார். தங்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் தங்களோடு இணைவதில் பெருமகிழச்சி கொண்டனர் ஆங்கிலேயர். ஆனால், அவர்தான் தங்கள் ஆட்சிக்கு பூகம்பமாக மாறப்போகிறார் என்பதை அப்போது அவர்கள் உணரவில்லை.
ஹைதர் அலி |
வீரமும் – பரிசும்
மருதநாயகம் ஆங்கிலேயர் அணியில் இருந்த போது துரதிர்ஷ்டமாக ஒரு போரை சந்திக்க வேண்டி வந்தது. இருவரும் வீரர்கள். மோதிக் கொண்ட அவர்கள் மைசூர் சிங்கம் ஹைதர் அலியும், மருதநாயகமும் தான் என்பது வேதனையான செய்தி!
அந்தப் போர் நடைபெற்றிருக்கக் கூடாது. விதியை என்னவென்பது ? திண்டுக்கல் அருகே போர் நடந்தது. இந்தப் போரில் மருதநாயகம் தோற்றிருக்க வேண்டும் என மனம் நினைக்கிறது. ஆனால் ஹைதர் அலியை தோற்கடித்தார் மருதநாயகம்! ஆங்கிலேயர்கள் பூரித்தனர். தான் யார் என்பதையும், ஹைதர் அலி யாருக்காக போராடுகிறார் என்பதையும் அறியாதகாலத்தில் மருதநாயகம் செய்த போர் அது. இதற்கு ஆற்காட் நவாபின் துரோகம்தான் பின்னணியாக இருந்தது.
நடைபெற்ற தவறுக்கு பிற்காலத்தில் பரிகாரம் தேடினார் மருதநாயகம்! மருந்து தடவினார் ஹைதர் அலி என்ற உணர்ச்சிமிகு செய்திகள் ஆங்கிலேயர்களுக்கு அப்போது தெரிந்திருக்க நியாயமில்லை.
மைசூர் சிங்கம் ஹைதர் அலியையே தோற்கடித்த தால் , புகழின் உச்சிக்குப் போனார் கான் சாஹிபு மருதநாயகம். அதுபோல் திருநெல்வேலி சீமையில் ஆங்கிலேயரை எதிர்த்த பூலித்தேவனுக்கும்,மருதநாயகத்தி
1752 ல் இன்றைய கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப் பாக்கத்தில் பிரெஞ்சுப் படையை மருதநாயகம் வீழ்த்தியது ஆங்கிலேயரையே ஆச்சர்யப்படுத்தியது.
ஒருமுறை 09.11.1757ல் மருதநாயகம் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலருடன் மட்டுமே இருந்தபோது, நூற்றுக்கணக்கான எதிரிகள் அவரை முற்றுகையிட்டனர். அதில் அவர் காட்டிய வீர தீர செயல்களும், அதுபோல் மேலும் பல வெற்றிகளும் அவருக்கு தளபதி தகுதிக்கு மேலே சென்று கவர்னர் பொறுப்பையும் பெற்றுத் தந்தது.
இன்றைய மதுரை, தேனீ, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர்,தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் திருச்சியின் தெற்கு பகுதிகளை போர்கள் மூலம் வென்றெடுத்ததால், ஆங்கிலேயர்கள் 1759ல் அவரை தெற்குச் சீமையின் கவர்னராக நியமித்தனர்.
இது ஆற்காடு நவாப் முகம்மது அலிக்கு பொறாமையை ஏற்படுத்தியது. கான் சாஹிபுக்கும், ஆற்காட் நவாபுக்கும் இடையில் பனிப்போர் தொடங்கியது. இதில் ஆங்கிலேயர் குளிர் காய்ந்தனர்.
மனம் மாறிய மருதநாயகம் :
திறமையற்ற நவாபையும், ஆற்றல் மிக்க தன்னையும் ஒரே தட்டில்வைத்துப் பார்க்கும் ஆங்கிலேயர்களின் சூழ்ச்சிகளை மெல்ல உணரத் தொடங்கினார் மருதநாயகம்! சிங்கமும், சிறு நரியும் சமமாக முடியுமா? உயர உயரப் பறந்தாலும் குருவி பருந்தாக முடியுமா?
இதுவரை ஆற்றல் மிகு தளபதியாய், ஆட்சி நிர்வாகியாய் மட்டுமே இருந்த கான்சாஹிபுக்கு ஏன் நமது நாட்டை நாமே ஆளக் கூடாது-? எதற்கு பிரெஞ்சுக்காரர்களிடமும், ஆங்கிலேயர் களிடமும் அடிமைப்பட்டு கிடக்க வேண்டும்-?இவர்கள் யார்-? அன்னியர்கள்தானே? இந்திய மன்னர்களுக்குள் நடைபெறும் சண்டை,சச்சரவுகளில் அன்னியர்கள் ஏன் லாபமடைய வேண்டும்? இப்படி பல கேள்விகள் அவரிடம் எழுந்தது. அதுவே தேசப் பற்றையும், விடுதலை உணர்வையும் தூண்டியது!
மதுரைப் போர்!
முடியாது! முடியவே முடியாது! ஆற்காடு நவாபிடம் மட்டுமல்ல…உனக்கும் கப்பம் கட்ட முடியாது என்று ஆங்கிலேயர்களுக்கு சவால் விட்டார் மருதநாயகம். புயல் உருவானது! போர் மேகங்கள் சூழ்ந்தன!
1763 ஜனவரி 9 அன்று தனது கோட்டையில் பறந்த ஆங்கிலேயர் கொடியை இறக்கி, அதிகாரப்பூர்வமாக தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். ஆங்கிலேய கொடி எரிக்கப்பட்டது! போர் வீரனாக, சிறந்த ஆட்சியாளனாக திகழ்ந்த மருதநாயகம், தன்னை சிறந்த ராஜ தந்திரியாகவும் காட்ட வேண்டியதை உணர்ந்தார். கோட்டையில் அவரது கொடியான மஞ்சள் கொடியை ஏற்றியதோடு,பிரெஞ்சுக்காரர்களி
தக்காணத்தை ஆட்சி செய்த தக்காண நிஜாம் அலி , தனது கவர்னராக மருதநாயகத்தை அங்கீகரித்தார். இது ஆங்கிலேயர்களையும் ஆற்காடு நவாபையும் திகைப்பில் ஆழ்த்தியது.
ஆற்காடு நவாபின் வேண்டுகோளை ஏற்று, ஆங்கிலேயப்படை திருபுவனம் வந்தது. மருதநாயகத்தின் அதிரடி யுத்தத்திற்கு முன்னால் தாக்குப்பிடிக்க முடியாத அவர்கள் ஓடி ஒளிந்தனர். அடுத்தடுத்து இரண்டு போர்களிலும் மருதநாயகம் வென்று திகிலூட்டினார். நிமிர்ந்து உட்கார்ந்தனர் ஆங்கிலேய தளபதிகள்! விழிகள் மிரள யோசித்தனர்.
ஆங்கிலேயப் படைக்கு தலைமையேற்ற பிரஸ்ட்டன் திணறினார். அவரும்,கான்சாஹிபும் முன்னாள் நண்பர்கள்! அதனால் பயம் அதிகரித்தது! காரணம் மருதநாயகத்தின் குணமும், சினமும் தெரியும்! அவர் பயந்தபடியே நடந்தது! மூலக்கரை கொத்தளம் அருகே நடந்த ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் வாள் முனையில் நூற்றுக்கணக்கானோரை சீவித் தள்ளினார் மருதநாயகம்! உடைந்த வாள்களும் வீரம் பேசின! ரத்தம் கொட்டின! ஆங்கிலேய தளபதி பிரஸ்ட்டன் சுடப்பட்டு படுகாயமடைந்தார். பின்னர் உயிர் துறந்தார்.
பிரஸ்ட்டனை பெரிதாக நம்பியிருந்த ஆற்காடு நவாப் நிலை குலைந்தார். மருதநாயகம் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிடும் செய்தியும், அதன் வெற்றிகளும் மைசூர் மன்னர் ஹைதர் அலிக்கு எட்டியது. அவர் பழைய பகையை மறந்தார். மண்ணுரிமை போரில், தனது நிலைக்கு மருதநாயகம் வந்ததை வரவேற்று வாழ்த்து செய்தி அனுப்பினார்.
தந்திரம்! வஞ்சகம்!
ஆற்காடு நவாபுக்கு அடுத்து என்ன செய்வது புரியவில்லை. பயம் வாட்டியது. சிவகங்கை சீமையின் விஷமியான தாண்டவராயன் “நீங்க ஒன்றும் பயப்படாதீங்க”என்று செயற்கையாக ஆற்காடு நவாபுக்கு தைரியமூட்டினான். இனி, மருதநாயகத்தை போரினால் வெல்ல முடியாது! இனி தந்திரம் தான் தீர்வு என்பதை உணர்ந்து செயல்பட்டான் தாண்டவராயன்! துரோகிகளை விலை பேசினான்!
இறுதியாக மதுரையில் மருதநாயகத்தின் கோட்டை முற்றுகையிடப்பட்டது. தீவிரமான முன்னேற்பாடுகளுடன், நிறைய ஆயுதங்கள், ஆயிரக்கணக்கான வீரர்கள், உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவாசிய தேவைகளுடன் ஆங்கிலேயப்படைகள் திரண்டன.1763 பிப்ரவரி மாதம் மருதநாயகம் ஆங்கிலேயர்களின் கொடியை தனது பீரங்கி வாயிலில் வைத்து வெடித்து சிதற செய்து தன் கோபத்தை வெளிப்படுத்தினார். தொடங்கியது ‘மதுரை போர்’!
மதுரை போர் உக்கிரமடைந்தது! நாட்கள் பல கடந்து, வாரங்களாக நீடித்தது முற்றுகை! மருதநாயகத்தின் கோட்டை, நகரிலிருந்து துண்டிக்கப்பட்டது, உணவு,ஆயுதங்கள், மருந்துகள் என காக்கா, குருவி கூட நுழைய விடாமல் தடுக்கப்பட்டது. மருதநாயகம் சரணடைந்தால் பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்று ஆங்கிலேயர்கள் தூது அனுப்பினர். மண்டியிட மாட்டேன் என்றார் மாவீரன் மருதநாயகம். அப்படி சிந்திப்பதே குற்றம் என கருதுபவராயிற்றே!
நாலாயிரம் வீரர்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆங்கிலேய அதிரடிப்படை,இரண்டாயிரம் குதிரைகள் என மருதநாயகத்துக்கு எதிராக முற்றுகை வலுத்தது. மருதநாயகத்தின் படையினர் பீரங்கிகளால் அதிர வைத்தனர். பின்வாங்கி ஓடிய ஆங்கிலேயர்கள் மதுரை தெப்பக்குளத்துக்கு அருகே பதுங்கினர். ஆங்கிலேயர்கள் அணியில் இருந்த இந்தியப்படையினர் போரில் ஈடுபடுவது குறித்து குழம்பிக் கொட்டிருந்தனர்.
அச்சமயத்தில், இந்திய வீரர்களின் குழப்பத்தை பயன்படுத்தி மருதநாயகம் நடத்திய தாக்குதலில் படு தோல்வியடைந்தது ஆங்கிலேயப்படை. வைகை நதி சிவந்தது! போர் தற்காலிகமாக நின்றது.
போரில் உறுதி
கோட்டையில் மருதநாயத்துக்கு ஆதரவாக பிரெஞ்சுப் படைகளும் தளபதிகளும் உறுதியோடு நின்றார்கள். அவர்களில் ஒருவர் மார்ச்சந்! அவருக்கும் மருதநாயகத்திற்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் இருந்தது. எனினும் அவரே சிறந்த தளபதி என்பதை உணர்ந்த மருதநாயகம் அவருக்கு முன்னுரிமை கொடுத்தார்.
ஒருவாரம் கழித்து 15.09.1763ல் மீண்டும் போரை தொடங்கினர் ஆங்கிலேயர். அப்போதும் தோல்வி. ஆங்கிலேயர்களின் தோல்வியில் கிடைத்த அமைதியில்,தற்காலிக இடைவெளியை சரியாக பயன்படுத்தினார் மருதநாயகம்! கோட்டைக்குள் உணவு, ஆயுதங்கள், மருந்துகள் கொண்டு வரப்பட்டு அடுத்த போருக்கு தயாரானார்கள்.
இறுதி யுத்தம்
ஆங்கிலேயர்கள் தங்கள் படையை பலப்படுத்தி மீண்டும் மதுரைக்கு வந்தனர்.31.01.1764 ல் மும்பையிலிருந்து சிறப்பு ஆங்கிலேய அதிரடிப் படையும் மதுரைக்கு வரவழைக்கப்பட்டது. இவர்கள் தொண்டி துறைமுகத்தில் இறங்கினர். மதுரையை சுற்றியிருந்த குட்டி, குட்டி அரசுகளான பாளையக்காரர்களையெல்லாம் ஆங்கிலேயர்கள் வளைத்தனர்.
ஆங்கிலேயர்களையும், ஆற்காட் நவாபையும் ஆதரிப்பவர்கள் தங்களை தாங்களே அழித்துக் கொள்வதற்கு சமம் என்றும், தனக்கு பாளையக் காரர்கள் அதாவது சிற்றரசர்கள் அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்றும் கடிதம் எழுதினார் மருதநாயகம்.
ஹைதர் அலியின் உதவி
முன்பு ஹைதர் அலியும், மருதநாயகமும் திண்டுக்கல் அருகே போரிட்டதை குறிப்பிட்டிருந் தோம். இப்போது வரலாறு மாறியது. இருவரும் தாய் நாட்டுக்காக ஓரணியில் திரண்டனர். பழைய சம்பவங்களை மறந்த மருதநாயகம், ஹைதர் அலியிடம் ராணுவ உதவியை கோரினார்.
“நானும், நீயும் வேறல்ல. நமது படையும், நாடும் வேறல்ல” என்று சகோதர உணர்வோடு ஹைதர் அலி கடிதம் எழுதி தனது ஆதரவை வழங்கினார். (நன்றி : C. Hayavadana Rao, History of Mysore)
பிப்ரவரி 1764ல் ஹைதர் அலி, சுலைமான் என்ற தளபதியின் கீழ் ஒரு பெரும்படையை மருதநாயகத்துக்காக அனுப்பி வைத்தார். போதாக் குறைக்கு19.02.1764ல் பிரெஞ்சுப் படைகளும் வந்து சேர்ந்தது.
சீறினார்… மோதினார்!
உற்சாகத்தில் சிலிர்த்து எழுந்தார் மருதநாயகம். அவரது நிலப்பரப்பின் முக்கிய எல்லைகளில் படைகள் முன்னிறுத்தப்பட்டது. வடக்கே நத்தம், தெற்கே பாளையங்கோட்டை பகுதிகளில் ராணுவம் பலப்படுத்தப்பட்டது. பாதுகாப்பு அரண்கள், அகழிகள், மணல் மேடுகள் என தற்காப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
மீண்டும், மீண்டும் ஆங்கிலேயர்கள் சளைக்காமல் மதுரையை குறிவைத்து போரிட்டனர். நவீன ஆயுதங்களை இங்கிலாந்திலிருந்து வரவழைத்தனர். 1764 ஜூன் மாதம் தொடர்ந்து நடைபெற்ற போரில் ஆங்கிலப்படை தோல்வியை சந்தித்தது. ஆங்கிலேயர்கள் புறமுதுகிட்டு ஓடியதோடு, சமாதானக் கொடியையும் ஏற்றினர். செய்தி கேட்டு அலறினார் ஆற்காட் நவாப்!
அதே நேரம் மதுரை மற்ற பகுதிகளுடன் துண்டிக்கப்பட்டதாலும், போரினால் ஏற்பட்ட நிர்வாக சீர்குலைவினாலும் பெரும் இழப்பு ஏற்பட்டது. கோட்டையில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டதால், அது மருதநாயகத்திற்கு பெரும் இன்னலை ஏற்படுத்தியது. மருதநாயகம், சரண் அடைய விடுக்கப்பட்ட வேண்டுகோளை நிராகரித்ததுடன் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை தாய் மண்ணை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று கர்ஜித்தார்.
தந்திரம்
போரினால் வெல்ல முடியாது என்பதை உணர்ந்த எதிரிகள் தந்திரங்களையும்,வஞ்சகங்களையும் கையாண்டனர். கான்சாஹிபின் அமைச்சர்களில் ஒருவரான சீனிவாசராவை வலையில் வீழ்த்தினர். இதற்கு பின்னணியில் சிவகங்கை மன்னரின் தளபதியான தாண்டவராயன் இருந்தான். பொன்னுக்கும், பொருளுக்கும் ஆசைப்பட்ட சீனிவாசராவ் மூலம் மெய்க்காவலர்களான பாபாசாஹிப், சேகுகான் உள்ளிட்டோரையும், பிரதான தளபதியும், பிரெஞ்சு அதிகாரியுமான மார்ச்சந்த்தையும் துரோக வலையில் இணைத்தனர்.
மருதநாயகம் தன் குடும்பத்தோடு தப்பி செல்ல விருப்பதாகவும், அதன் பிறகு உங்கள் கதி அதோ கதிதான் என்றும் இவர்களிடம் அவதூறு கூறப்பட்டது. அவர்கள் மருதநாயகத்தின் மீது சந்தேகம் கொண்டனர். இதைத்தான் ஆங்கிலப்படை எதிர்பார்த்தது. அது நடந்தது. கான்சாஹிப் மருதநாய கத்தை பிடித்துக் கொடுத்தால்,பொதுமன்னிப்பும், சலுகைகளும் உங்களுக்கு வழங்கப்படும் என்று பேரம் நடந்தது. திட்டம் தயாரானது.
சூழ்ச்சி வென்றது…
மருதநாயகத்தை யாராலும் அவ்வளவு எளிதில் நெருங்க முடியாது. அடக்க முடியாது. பிடிக்க முடியாது. போர் யானையை எப்படி முடக்க முடியும்? அவரை எப்போதும், கெடுபிடி இன்றி சந்திக்க கூடிய அந்த நால்வரும் இப்போது எதிரிகளின் கையில்! இதை அறியாதவராக மருதநாயகம் இருந்தார்!
அது ரமலான் மாதம் என்று சில வரலாற்று ஆசிரியர்கள் எழுதியிருக்கிறார்கள்.13.10.
அந்த மாவீரன் அப்போது நம்பிக்கை துரோகிகளின் முகத்தை பார்த்து “என்னை கொன்று விடுங்கள், எதிரிகளிடம் ஒப்படைத்து விடாதீர்கள்” என்று கதறியுள்ளார். எதிரிகளிடம் அடிமைப்படுவதை, அவர் அப்போதும் விரும்பவில்லை. ஆம். மாவீரர்கள் மண்டியிடுவதில்லை! 700 வீரர்களின் பாதுகாப்புடன் கண்களை கட்டி,ஆற்காடு நவாபிடம் கொண்டு செல்லப்பட்டார். மருதநாயகம் கைதுக்கு பிறகு மூன்று நாட்கள் பட்டினி! அவரது மகனும், மனைவியும் திருச்சி சிறையில் பூட்டப்பட்டனர். அடுத்தநாள் மதுரை கோட்டையில் ஆற்காடு நவாபின் கொடி ஏற்றப்பட்டது.
விசாரணை
சிறைபிடிக்கப்பட்ட மருதநாயகத்தை சித்ரவதைப் படுத்தினார்கள். ஆற்காடு நவாபை பார்த்து தலை வணங்க சொன்னார்கள். முடியாது என மறுத்தார் மருதநாயகம்! உணவு தட்டுகளை எட்டி உதைத்தார். கைது செய்யப்பட்டதிலிருந்து தொடர்ந்து பட்டினி! ஆனாலும் மானமும், வீரமும் அவருக்கு உரமேற்றின.
மருதநாயகத்துக்கு என்ன தண்டனை? என விவாதிக்கப்பட்டபோது ஆங்கிலேயர்கள் தண்டனை எதுவுமில்லை என்றதும், ஆற்காடு நவாப் கோபமடைந்தார். அவரை தூக்கிலிடுங்கள் அல்லது என்னை கொல்லுங்கள் என அடிமை குரல் கொடுத்தார். ஆங்கிலெயர்களிடம் இருந்த நேர்மை, இரக்கம், கூட ஆற்காடு நவாபிடம் இல்லை. வேறு வழியின்றி ஆங்கிலேயர்கள் வரலாற்று பெருவீரனை தூக்கிலிட ஆணையிட்டனர்.
தூக்குக் கயிறை முத்தமிட்டார்
15.10.1764 இந்திய விடுதலை போராட்ட வரலாற்றில் ஒரு கறுப்பு நாள்!
அன்று மதுரைக்கு மேற்கே உள்ள சம்மட்டிபுரத்தில் உள்ள ஒரு மாமரத்தில் தூக்கிலிட கொண்டுவரப்பட்டார், மருதநாயகம். அவர் அப்போதும் கலங்கவில்லை. தூக்குக் கயிறை (மரணத்தை) முத்தமிட்டார்.
மருதநாயத்தின் முகத்தில் பயம் இல்லை. விழிகளில் கலக்கமில்லை. தாய்நாட்டின் விடுதலைக்காக உயிர்துறக்கிறோம் என்ற பெருமிதம் தெரிந்ததாக வரலாற்றுப் பக்கங்கள் பூரிக்கின்றன.
தூக்கிலிடப்பட்டதும் அவர் மரணிக்கவில்லை. மாறாக கயிறு அறுந்து விழுந்தது! அவர் உடலில் சதையும், எலும்புகளும், ரத்தமும் மட்டுமில்லை. தியாக குணமும்,வீரத்தனமும் அல்லவா கலந்திருந் தது! எனவே, எடை தாங்கவில்லை!
புதிய கயிறு தயாரிக்கப்பட்டு மீண்டும் தூக்கிலிடப்பட்டார், அப்போதும் உயிர் பிரியவில்லை. “நான் யோகாசனம் பயின்றவன். கழுத்தை உப்ப வைத்து, பல மணிநேரம் மூச்சை அடக்கும் ஆற்றல் கொண்டவன்” என்று தூக்கு கயிற்றில் சீறினார் மருதநாயகம். எதிரிகள் குலை நடுங்கினர்.
இறுதியாக, மூன்றாவது முறை நீண்ட நேரம் தூக்கில் தொங்கவிட்ட பிறகுதான் மாவீரனின் உயிர் பிரிந்தது. நாடு துயரில் மூழ்கியது! அன்று இரவு சில ஆங்கிலேய தளபதிகளின் கனவில் மருதநாயகம் வந்து மிரட்டியதாகவும் செய்தி பரவியது. அதன் பிறகு எங்கே; மீண்டும் உயிர் பெற்று எழுந்து விடுவாரோ என பயந்த ஆங்கிலேயர்கள் புதைக்கப்பட்ட அவரது உடலை மீண்டும் தோண்டியெடுத்தனர்.
தலை, கால், கை என பல பாகங்களாக வெட்டி யெடுக்கப்பட்ட அவர் உடல் பல்வேறு ஊர்களுக்கு தனித்தனியாக அனுப்பப்பட்டு அடக்கப்பட்டது. ஆம், செத்த பிறகும் மருதநாயகத்தின் உடலை கண்டு ஆங்கிலேயர்களும், துரோகி ஆற்காடு நவாப் முகம்மது அலியும் நடுங்கியுள்ளனர். வெட்டப்பட்ட உடல்களை பொதுமக்கள் பார்வைக்கும் வைத்துள்ளனர்!
மருதநாயகம் அடக்கஸ்தலம்
அவரது உடலின் ஒரு பாகம் மதுரையருகே அவர் தூக்கிலிடப்பட்ட சம்மட்டி புரத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அங்கே இப்போதும் அவர் நினைவிடம் உள்ளது. அவரது தலை திருச்சியிலும், ஒரு கை தஞ்சாவூரிலும், இன்னொரு கை பெரியகுளத்திலும், ஒரு கால் திருவிதாங்கோட்டிலும், இன்னொரு கால் பாளையங்கோட்டையிலும்,உடல் மதுரையிலும் அடக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து இரண்டாண்டுகள் ஆங்கிலேயர்களை தூங்கவிடாமல் செய்தவன்,ஷஹீதாகி மீள முடியாத உறக்கத்தில் ஆழ்ந்தான்…! தாய் நாட்டிற்காக தன்னுயிர் தந்த, தலைவனின் உடல் சின்னாப்பின்னப்படுத்தப்பட்டதை நினைக்கும் போது நெஞ்சம் பதறுகிறது. விழிகள் கலங்குகின்றன. இந்த தியாகத்தை யாராவது போற்றுகிறார்களா? நினைக்க நினைக்க நெஞ்சு விம்முகிறதே?