வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 12 அக்டோபர், 2016

விசம் கக்கும் பாடநூல்களும் உண்மைகளும்

இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே..
ஒருக்கால் முஸ்லிம்கள் இந்தியாவிற்கு வராமல் இருந்திருந்தால் இந்தியா என்றொரு நாடு உருவாகாமல் இருந்திருக்கலாம்.
வரலாற்றை அறிவோம்…
.
முஸ்லிம்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பு இந்தியா என்று ஒரு நாடு இருக்கவில்லை. அது (இந்தியப் பகுதி) கூர்ஜர – பிரதிஹரர்கள் நாடு, கன்னோசி நாடு, பாலர்கள் நாடு, கலிங்க நாடு, ராஷ்டிர கூடர்கள் நாடு, பாண்டிய நாடு, சேர நாடு, சோழ நாடு என பல நாடுகளாகத் திகழ்ந்தது.
.
இந்தியா முழுமைக்கும் என்று ஒரே மன்னனோ, ஒரே தலைநகரமோ, ஒரே சட்டமோ, ஒரே நிர்வாகமோ, ஒரே நிர்வாக மொழியோ இருக்கவில்லை.
.
இந்தியா முழுமையையும் ஒரே நாடாக இணைத்து, இந்தியா முழுமைக்கும் ஒரே அரசின், ஒரே தலைநகரம், ஒரே சட்டம், ஒரே நிர்வாகம், ஒரே நிர்வாக மொழி என்று வந்தது அலாவுதீன் கில்ஜி காலத்தில் தான்.
.
இதனை அதற்கு பின் வந்த முஸ்லிம் அரசர்கள் சுமார் 500 ஆண்டுக்காலம் கட்டிக்காக்க கூர்ஜர – பிரதீஹர நாட்டினர், கன்னோசி நாட்டினர், பாலர் நாட்டினர், கலிங்க நாட்டினர் என்பது மறைந்து இந்திய நாட்டினர் என்றாயிற்று. அது தான் இன்றுவரை தொடர்கிறது.
.
ஒருக்கால் முஸ்லிம்கள் இந்தியாவிற்கு வராமல் இருந்திருந்தால் இந்தியா என்றொரு நாடு உருவாகாமல் இருந்திருக்கலாம்.
.
இவ்வாறு இந்தியா என்றொரு நாடு உருவாக காரணமாக இருந்த கோரி முகம்மது, குத்பு தீன் ஐபெக், பக்தியார் கில்ஜி, இல்டு மிஷ், பால்பன், அலாவுதீன் கில்ஜி ஆகியோரின் தொண்டு உயரிய சரித்திர ஆசிரியர்களின் மனதிலே பதிந்ததேயல்லால் பாமரர்களிடத்தில் அது சென்றடையவில்லை.
.
நம்முடைய பாடத்திட்டங்கள் அவ்வாறு அமைக்கப் பட்டுள்ளன.
.
முஸ்லிம்கள் படையெடுப்பாளர்களாக போதிக்கப்படுகிறார்கள்.
எனினும் படையெடுப்பென்பது அன்றைய நியதி என்பதையும்,
.
அப்படி படையெடுத்து வந்த முஸ்லிம் அரசர்கள் இந்தியாவையே தங்கள் தாய்நாடாக கொண்டார்கள் என்பதையும்,
.
இவர்களில் பலர் இந்தியாவிலேயே பிறந்து, இந்தியாவிலேயே வளர்ந்தவர்கள் என்பதையும்,
.
இவர்கள் எப்பகுதியிலிருந்து வந்தார்களோ அப்பகுதிகளை இவர்களின் எதிரிகள் கைப்பற்றி விட்டதால் அவை இவர்களின் எதிரி நாடுகள் ஆகிவிட்டன என்பதையும்,
.
இவர்கள் அவற்றோடு போரிட்டார்கள் என்பதையும்,
.
இவர்கள் இங்குள்ள செல்வத்தை (ஆங்கிலேயர் போல) தங்கள் மூதாதையர் நாட்டிற்கு எடுத்துச் செல்லவில்லை என்பதையும்,
.
இங்குள்ள செல்வத்தை இந்நாட்டின் வளத்திற்கே உபயோகித்தார்கள் என்பதையும்,
.
இவர்கள் இங்கிருந்த பிற மன்னர்களை வென்றது தான் நாட்டின் ஒருங்கிணைப்பை கொண்டு வந்தது என்பதும் சொல்லப்படுவதில்லை.
.
ஆம். கோரி முகம்மது கூர்ஜர – பிரதீஹரர்கள் நாட்டை, கன்னோசி நாட்டை வென்றது படையெடுப்பாக சொல்லப்படுகிறதேயல்லால், அதனால் கூர்ஜர பிரதிஹரர்கள் நாடு, கன்னோசி நாடு என்பது மறைந்து டெல்லியை தலைநகராகக் கொண்ட அரசோடு அவை இணைந்து இந்தியா என்றொரு நாடு உருவாக அவர் வித்திட்டார் என சொல்லப் படுவதில்லை.
.
அவ்வாறே இல்டுட்மிஷ் ஒரு படையெடுப்பாளனாக சொல்லப் படுகிறாரேயல்லாமல் டெல்லி பேரரசிற்கு அப்பால் இருந்த பகுதிகளை வென்று இந்திய டெல்லி பேரரசோடு இணைத்து ஒன்றுபட்ட இந்தியா உருவாக காரணமாக இருந்தவர் என்பதும் சொல்லப்படுவதில்லை.
.
அவ்வாறே அலாவுதீன் கில்ஜியும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, ஆப்கானிஸ்தான் முதல் வங்காளம் வரை உள்ள பகுதிகளை ஒவ்வொன்றாக வென்று டெல்லியை தலைநகராகக் கொண்ட இந்திய அரசோடு இணைத்து, தன் ஆட்சியின் கீழ் ஒரே தலைநகரம், ஒரே சட்டம், ஒரே நிர்வாகம், ஒரே நிர்வாக மொழி கொண்ட இந்தியா என்று திகழச் செய்தவர்.
.
எனினும் முஸ்லிம்கள் படையெடுப்பாளர்கள் என்று பாட நூல்கள் கூறுகின்றனவேயல்லால் அவர்கள் தங்கள் ரத்தம் சிந்தி, சிறிதும் பெரிதுமான நாடுகளை வென்று, மத்திய அரசோடு இணைத்து ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கி தங்கள் உதிரத்தால் அது சிந்தாமல் சிதறாமல் கட்டிக்காத்தவர்கள் என்று சொல்லப்படுவதில்லை.
.
ஆனால் உண்மை நீண்ட நாட்களுக்கு உறங்காது. அது விழித்தெழும் போது வீரிட்டு எழும்.
.
எனவே ஒன்றுபட்ட இந்தியா உருவாக காரணமாக இருந்தவர்கள் முஸ்லிம்கள். அவர்கள் வராமல் இருந்திருந்தால் ஒன்றுபட்ட இந்தியா உருவாகாமல் போயிருக்கக் கூடும்.
.
இந்தியாவை ஒன்று படுத்தியதோடு அதனை மிக நீண்டகாலம், சுமார் 500 ஆண்டுகள், ஒன்றாகவே கட்டிக் காத்தது தான் இந்தியன் என்ற உணர்வு வளர காரணமாயிற்று.
.
இது முஸ்லிம்கள் இந்தியாவிற்கு ஆற்றிய மகத்தான தொண்டு.
.
இந்தியாவை பாதுகாத்தல்: ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கியது முஸ்லிம்கள் இந்தியாவிற்கு ஆற்றிய அரும் பெரும்தொண்டென்றால், அவ்விந்தியாவை அவர்கள் மங்கோலியர் படையெடுப்பிலிருந்து பாதுகாத்தது இன்னும் சற்று உயரிய தொண்டாகும்.
.
ஆம் 13-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் டெல்லியில் முஸ்லிம்கள் தங்கள் பேரரசை உருவாக்கி, இந்தியாவை ஒன்றுபடுத்திக் கொண்டிருந்த காலக்கட்டத்தில்
மங்கோலியாவிலிருந்து வெகுண்டெழுந்த முரட்டு இனத்திரான மங்கோலியர்கள் தங்கள் மாபெரும் தலைவன் செங்கிஸ்கான் தலைமையில் டெல்லி பேரரசை போன்று பன்மடங்கு விரிந்த, பன்மடங்கு வலிமை பெற்றிருந்த பேரரசுகளான சீனப் பேரரசு, மத்திய ஆசியா, மேற்கு ஆசியா பகுதிகளை வென்றுக் கொண்டு இந்தியாவிற்கு அருகில் இருந்த மிக வலிமை பெற்ற குவாரசைம் பேரரசை நெருங்கியபோது
.
அதன் வலிமை பொருந்திய மன்னன் அலாவுதீன் (டெல்லியின் அலாவுதீன் கில்ஜி அல்ல) மங்கோலியர் வலிமைக்கு அஞ்சி காஸ்பியன், பகுதிக்கு ஓடிவிட,
.
குவாரசைம் அரசின் வாரிசு ஜலாலுத்தீன் பஞ்சாப் வந்து டெல்லியின் முஸ்லிம் மன்னன் இல்டுமிஷ்ஷிடம் அடைக்கலம் கோரிய போது,
.
இல்டுமிஷ் மதியூகத்துடன் அதை நிராகரித்துவிட, ஜலாலுத்தீனை துரத்தி வந்த செங்கிஸ்கான் டெல்லியை தாக்காமல் திரும்பிச் சென்றார்.
.
இல்லையேல் இந்தியா மங்கோலியர்களால் கைப்பற்றப்பட்டு ஒரு மங்கோலிய காலனியாகியிருக்கும்.
.
இல்டுமிஷ்ஷின் மதியூகம் இந்தியாவை காத்தது.
.
மங்கோலிய படையெடுப்பு இல்டுமிஷ் காலத்தில் மட்டும் நடைபெறவில்லை.
.
அது டெல்லி சுல்தான்கள் பால்பன், அலாவுதீன் கில்ஜி காலத்திலும் தொடர்ந்தது. மங்கோலியரிடமிருந்து இந்தியாவை காக்க பால்பன் எல்லைப்புரத்தில் வலிமையான கோட்டைகளைக் கட்டி அதில் தீரமிக்க படையை நிறுத்தினான்.
.
இவரின் வல்லமை மிக்க ஆளுனன் ஷேர்கான் மங்கோலியர்களுக்கு ஒரு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தான்.
.
ஷேர்கானின் இறப்பிற்கு பின்மங்கோலியரிடமிருந்து இந்தியாவை காக்க பால்பன் தன் மைந்தர்கள் முகம்மது கான் மற்றும் புக்ராகானை எல்லைப்புற கவரனர்களாக நியமித்தான்.
.
வலிமையும் தீரமும்மிக்க முகம்மதுகான் மங்கோலியருடன் நடைபெற்ற யுத்தத்தில் மாண்டான். தன் 80வது வயதில் முதியோனாகிய பால்பனுக்கு இது ஒரு பேரிடியாக அமைந்தது.
.
இந்தியாவை காப்பதில் தன் அன்பு மகனை பறிகொடுத்த பால்பன் தன் பணியில் சற்றும் தளர்ச்சியடையாமல், உடன் மேல் நடவடிக்கை எடுத்து மங்கோலியர்களை வென்று இந்தியாவை காத்தான்,
ஏனோ இந்திய பாடநூல்கள் இத்தியாகத்தை போற்றுவதில்லை.
.
அலாவுதீன் கில்ஜியின் காலத்தில் மங்கோலியர் அடுக்கடுக்காய் இந்தியாவின் மீது படையெடுத்து வந்தனர்.
இரண்டு முறை அவர்கள் டெல்லியையும் கைப்பற்றினர்.
ஆனாலும் அலாவுதீன் கில்ஜி மனம் தளரவில்லை.
தன் உயரிய அதிகாரிகளான ஜாபர் கான், காஜிமாலிக், மாலிக் காபூர் ஆகியோரைக் கொண்டு மங்கோலியர்களை மிரண்டு ஒடச் செய்தான்.
.
மங்கோலியர்களை வீழ்த்தி இந்தியாவை காத்ததில் மேற்சொன்ன மூன்று அதிகாரிகளின் பங்கு மகத்தானது.
இலட்சக்கணக்கில் திரண்டு வந்த வீரமிக்க மங்கோலியர்களை தாக்கி, சின்னாபின்னப்படுத்தி, சிதறி ஓடச்செய்தான் ஜாபர்கான்.
.
அதனால் நீர் நிலைகளில் தாகம் தீர தண்ணீர் பருக குதிரைகள் தயங்கினால். “ஏன் ஜாபர்கானை கண்டு விட்டீர்களா?” என மங்கோலியர் கேட்டதாக ஒரு கூற்று.
.
அது போன்றதே காஜி மாலிக் மற்றும் மாலிக் காபூரின் ஆற்றலும், டெல்லியை கைப்பற்றிய மங்கோலியர்களை தாக்கி, இடுப்பொடிந்து சிதறி ஓடச் செய்தனர்
.
இவர்கள். மங்கோலியர்களைப் போன்றே அலாவுதின் கில்ஜியும் ஒரு போர் விரும்பியாக (War Lord), தீரனாக, அஞ்சாநெஞ்சினனாக, போர் தந்திரம் மிக்கவனாக இருந்ததே மங்கோலியர் தோல்விக்கு மிக முக்கிய காரணம்.
.
இத்தகைய முஸ்லிம் சுல்தான்களும், தளபதிகளும் இல்லாதிருந்தால் இந்தியா மங்கோலியரால் கைப்பற்றப்பட்டு, அது ஒரு மங்கோலியக் காலனியாகியிருக்கும்.
.
அவ்வாறின்றி ஒன்று படுத்திய இந்தியாவை மங்கோலியரிடமிருந்து பாதுகாத்து இந்தியாவாகவே திகழச் செய்தது முஸ்லிம்கள் இந்தியாவிற்கு ஆற்றிய அளவிடற்கரிய பெருந் தொண்டாகும்.
– பேரா. ஏ. தஸ்தகீர் – (முன்னாள் வரலாற்றுத் துறை தலைவர், அரசு கல்லூரி
இந்தியாவின உயர்விற்கும் வளர்ச்சிக்கும் பல்வேறு கால கட்டங்களில் முஸ்லிம்கள் அயாராது உழைத்துள்ளனர்
.
இந்தியா என்ற அகண்ட ஒரு நாட்டை உருவாக்கியவர்களும் அதை கட்டியழுப்பியவர்களும் முஸ்லிம்களே !
.
குமரி முதல் இமயம் வரை இந்தியா ஒரு நாடே என்ற பெருமை நிறைந்த முழக்கத்தை நாம் செவியுறுகிறோம்
.
ஆனால் குமரி முதல் இமயம் வரை மட்டும் இல்லாமல் பாகிஸ்தானையும் வங்காள தேசத்தையும் இணைத்த ஒரு அகண்ட பாரதத்தை உருவாக்கியவர்கள் முஸ்லிம்கள்
.
முஹலாய மன்னர்களின் வருகைக்கு முன்னால் குமரி முதல் இமயம் வரை இந்தியா ஒரு நாடாக இருக்கவில்லை
.
நாம் வாழும் தமிழகமே சேர நாடு சோழ நாடு பல்லவ நாடு பாண்டிய நாடு என ஒரு 50 துண்டுகளாகவாவது இருந்திருக்கும்
.
தமிழகமே இத்தனை துண்டுகளாக இருந்தது என்றால் இந்தியா எத்தனை துண்டுகளாக நொறுங்கி கிடந்திருக்கும் என்பதை நீங்கள் எண்ணி பாருங்கள்
.
இப்படி நங்கி கிடந்த இந்தியாவை ஒருங்கிணைத்து அகண்ட பாரதமாக உருவாக்கியவர்கள் முஸ்லிம்கள்
.
இந்திய முஸ்லிம்களின் செங்குருதியில் இந்திய சுதந்திரம் பெறப்பட்டது .
இன்றைக்கு முஸ்லிம்களை வன்முறையாளர்களாகவும் தீவிரவாதிகளாகவும் சித்தரிக தங்களின் ஊடகங்கள் வாயிலாக முற்சித்து அதில் வெற்றியும் பெற்றுள்ளன.
.
சுதந்திரப் போராட்டத்தில் எவ்வித பங்களிப்பும் செய்யாததோடு சுதந்திரப் போராளிகளை ஆங்கிலேயரிடம் காட்டிக் கொடுத்த ஒரு கூட்டம் இந்தியாவை உரிமை கொண்டாடுகிறது.
.
இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்டு சுதந்திரம் பெற்றுத்தந்த முஸ்லிம்களுக்கு குடியிருக்க வாடகைக்குகூட வீடு கிடைக்காத நிலை இந்தியாவில் ஏற்பட்டிருக்கிறது.
.
சுதந்திரமடைந்து கிட்டத்தட்ட அறுபது வருடங்களாகியும் கல்வி வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு வேண்டி கெஞ்சிக் கொண்டிருக்கும் நிலைமையும் வேதனையளிக்கிறது.
.
ஆட்சியில் இருக்கக்கூடியவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களோ,எந்த கொள்கையை சார்ந்தவர்களோ அவர்களுக்கு சாதகமான வரலாற்றை கல்வியில் புகுத்தியும்,தனக்கு எதிரான கொள்கையுடையவர்களைப் பற்றி தவறான செய்திகளை புகுத்தியும் உண்மையான வரலாற்றை திரித்து வைத்திருக்கின்றனர்.
.
கர்னாடகத்தில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் இருந்த பொழது அங்கே பகவத் கீதையை கல்விகூடங்களில் புகுத்த முயற்சிக்கிறது.
.
பீகாரில் பாரதீய ஜனதா கட்சி கூட்டணியில் ஆட்சி நடத்தியபோது நிதீஷ் குமார் ஆர்.எஸ்.எஸ்.தலைவர் கோவால்கர் உடைய வாழ்க்கை வரலாற்றை பாடத்திட்டத்தில் புகுத்தியுள்ளது. உண்மையான இஸ்லாமியர்களின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகத்தை மறைத்து காந்தியை சுட்டுக்கொன்றவர்களின் தியாகம் போற்றப்படுகிறது.
.
இதுபோன்ற தவறான செய்திகளை மீண்டும் மீண்டும் (கோயபல்ஸ்தத்துவம்) கேள்விப்படும் மக்கள் (இஸ்லாமியர்கள் உள்பட) இந்த வரலாறு உண்மையாக இருக்குமோ? என்று நினைக்கின்றனர்.
.
அவர்களுக்காக,மற்றும் இஸ்லாமியர்களைப்பற்றி தவறாக விளங்கியுள்ள மற்றவர்கக்கும் உண்மையை விளக்கும் விதமாக இக்கட்டுரை தொகுக்கப்பட்டுள்ளது.
.
இந்திய சுதந்திரத்திற்கு பாடுபட்ட இஸ்லாமியர்களைப் பற்றிய ஒரு சில செய்திகளை அறிந்துகொள்வது நல்லது.
.
சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம்களைப்பற்றி 1975ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் தேதி வெளியான ‘இல்லஸ்டிரேட்டட் வீக்லி’ என்னும் பத்திரிக்கையில் அதன் ஆசிரியர் குஷ்வந்த் சிங் பல ஆதாரங்களுடன் எடுத்துக் கூறி உறுதிப்படுத்தியுள்ளார்.
.
இந்திய விடுதலைக்காகச் சிறை சென்றவர்களிலும் உயிர்த் தியாகம் செய்தவர்களிலும் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர்.
.
அவர்களுடைய மக்கள் தொகை விகிதாச்சாரத்தைவிட விடுதலைப்போரில் உயிர் துறந்த முஸ்லிம்களின் விகிதாச்சாரம் அதிகம்’ என்று அந்தப் பத்திரிக்கையில் வெளியான கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

வெள்ளி, 6 மே, 2016

இந்தியா குறித்து நபிகள் நாயகம்

ஹிந்து - ஹிந்துஸ்தான் - ஹிந்துத்துவா என்ற பெயர்கள் இப்பொழுது இந்தியா முழுவதும் பிரச்சினைக்குரிய பெயர்களாக சில அரசியல்வாதிகளாலும்,
சில மதவாதப் பேர்வழிகளாலும் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டு விட்டன.
ஹிந்து என்ற வார்த்தை ஹிந்து மத வேதங்களான எந்த வேதங்களிலும் கிடையாது. அது பகவத்கீதை,  மஹாபாரதம், இராமாயணம், பவிஷ்ய புராணம் அல்லது ரிக், யஜூர், சாமம், அதர்வணம் போன்ற நான்கு வேதங்களிலும் ஹிந்து என்ற மூன்று எழுத்தே இல்லை என்று வாதிடுகிறார்கள். வாதிடுபவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. வரலாற்று ஆய்வாளர்களும், சரித்திர வித்தகர்களும் தான்.

ஹிந்த் என்ற வார்த்தையை தீர்க்கமான ஆதாரமாக இஸ்லாம் தான் நிரூபித்துக் காட்டியுள்ளது. இவற்றிற்கு ஆதாரமாக முஸ்லிம்களின் புனிதமிக்க ஆலயமான 'கஅபா'வின் ஒரு முனைக்கு (ருக்னுல் ஹிந்த்)  ஹிந்த் முனை என்று ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே கூறப்பட்டுள்ளது.
  
நபிகள் நாயகம் அவர்கள் திருக் கபாவின் அருகில் நின்று ஒரு மாலைப்பொழுது தமது ஜூப்பாவைத் திறந்த வண்ணம் இந்தியாவின் திசை நோக்கி நின்று இப்படி கூறியுள்ளார்கள். நான் ஹிந்த்துவிலிருந்து (தவ்ஹீத்) ஏகத்துவ தென்றலை உணர்கின்றேன். என்றும், மேலும் ஒரு முறை கூறியுள்ளார்கள். நான் ஹிந்த்வில் இருக்கிறேன் என்னில் ஹிந்த் இருக்கிறது என்று கூறியுள்ளார்கள்.
மேலும், நபிகளாரின் தோழர்கள் இந்தியாவிற்கு வந்து தமது வணிகத்தை முடித்துக் கொண்டு, இந்தியாவில் இருந்து கொண்டு வந்த புளியை நபிகளாருக்கு முன்னால் வைத்தார்கள்.  நபிகளார் அவர்கள் தமது விரலால் புளியைத் தொட்டு தமது நாக்கில் வைத்துக் கொண்டே இது (தமருல் ஹிந்த்) இந்துஸ்தானத்தின் பேரிச்சம் பழமா? என்று கேட்டுள்ளார்கள்.
  
ஒரு முறை கஃபு இப்னு சுஹைர் என்ற கவிஞர் நாயகத் தோழர் நபிகளாரை வர்ணித்துப்பாடும் போது 'தங்களின் திருவதனம் அல்லாஹ்வினால் உருவாக்கப்ட்ட ஹிந்துஸ்தானத்தின் வாளாகும்' என்றார்கள்.  ஆக 'ஹிந்த்' என்ற வார்த்தை நபிகள் நாயகம் அவர்களின் காலத்திலேயே புழங்கப்பட்டதாக வரலாறு உண்டு.
ஹிஜிரி 10ஆம் ஆண்டு காலித் அவர்கள் நஜ்ரான் நாட்டிலிருந்து வந்த போது அவர்களுடன் 'பனூஹாரிஸ்' கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு குழுவும் வந்திருந்தது. அவர்களைக் கண்டதும் இவர்கள் அல்ஹிந்த்விலிருந்து வந்தவர்கள் போன்றுள்ளதே என்றார்கள்.
இஸ்லாமிய தொடக்க காலத்தில் நபிகளாரின் எதிரியாக இருந்த அபூசுஃப்யான் (பின்னாளில் இவர் இஸ்லாத்தை தழுவினார்) அவர்களின் மனைவியாருக்கு 'ஹிந்தா' என்று தான் பெயர் வைக்கப்பட்டிருந்தது. அரேபிய பாலைவனத்திலிருந்து வணிகக் கூட்டங்கள் அடிக்கடி இந்தியா சென்று வந்ததன் நினைவாக அப்பெண்ணுக்கு 'ஹிந்தா' என பெயரிடப்பட்டதாக கூறப்படுகிறது.
  
இந்தியாவின் தென் கிழக்கே உள்ள இந்தோ-ஏசியா என்ற நாடு பூர்விகத்தில் ஹிந்து நாடாகவே இருந்தது. இஸ்லாத்தின் பக்கம் அநாட்டு மக்கள் ஈர்க்கப்பட்டதன் பின் ஹிந்தோனேசியா என்று மறுவி, தற்பொழுது இந்தோனேசியா என அழைக்கப்படுகிறது. இன்றும் அந்நாட்டில் பூர்விகக் கலை நிகழ்ச்சிகளில் இராமாயணம், மஹாபாரதம் போன்ற நாடகங்கள் நடத்தப்பட்டு  வருகின்றன.
  
உலகில் ஆதி மனிதன் ஆதம் தோன்றிய இடம் இந்தியா தான். கடல்கோள் நிகழ்வுக்கு முன்பு கடலால் பிரிக்கப்படாத நிலப்பகுதியாக இருந்தது தான் தமிழகம் என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை.
  
தற்போது உள்ள இலங்கையில் ஆதம் மலை என்று அழைக்கப்பட்டு வரும் அம்மலையின் மீது தான் மனித குலத்தின் முதல் மனிதன் ஆதம் அவர்களை சுவனத்தில் இருந்து இறைவன் பூமிக்கு இறக்கியதாகவும், அவர்கள் பாதச்சுவடுகள் அங்குள்ள குன்றின் மீது பதிந்துள்ளதாகவும், யூத, கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம்கள் நம்புகின்றனர்.  ஆதம் அவர்கள் தோன்றிய இடமாகக் கருதப்படும் இடத்திலுள்ள பாதச்சுவடுகளை, இந்துக்கள் சிவனொளி பாதம் என்றும், பௌத்தர்கள் ஸ்ரீபுத்த பாதமென்றும் கூறி வழிபடுகின்றனர். அதே போல் ஆதம் மலைக்கு அருகாமையில் கால்கோள் நிகழ்ந்ததால், நிலம் பிரிக்கப்பட்டு தற்போது கடல் தோன்றியுள்ள பகுதியை, ஆதம்பாலம் என்றும், அதனை ஒட்டியுள்ள ராமேஸ்வரம் நிலப்பகுதியில் ஆதம் அவர்களின் வம்சாவழிகளான ஆபில், காபில் ஆகியோர் அடக்கம் செய்யப்பட்ட இடமும் உள்ளது.
அரேபிய வணிகர்கள் இலங்கைக்கு வந்து திரும்பும் பொழுது சேர நாட்டை ஆண்ட மன்னர் சேரமான் பெருமாள் அரபு வணிகர்களுடன் சேர்ந்து அரேபியா சென்று இஸ்லாத்தை ஏற்று, முஸ்லிமான  முதல் இந்து மன்னர் என வரலாறு கூறுகிறது. எனவே இந்தியாவிற்கும் இஸ்லாமியர்களுக்கும் நீண்ட தொடர்பு பண்டைய காலத்தில் இருந்தே இருந்து வருகிறது என்பதனை இத்தகைய வரலாறுகள் மூலம் அறிய கொள்ளலாம்.
ஆதார நூல்கள்:
1. சோழச் சுடரொளி, குந்தவை நாச்சியார், ஏ.கே.ராசன்
2.. சமுதாய வீதியில் சன்மார்க்கப்பித்தன், எஸ்.எம்.கனிசிஷ்தி
3.. மறைக்கப்பட்ட வரலாறும், மறைக்கப்படும் உண்மைகளும், அனிஸ்தீன்
4. .சேரமான் பெருமாள், சி.எம்.என்.சலீம்
5.. விடுதலைப்போரில் முஸ்லீம்கள், வி.என்.சாமி
கட்டுரையாளர் : வைகை அனிஷ் அவர்களுக்கு நன்றி!

செவ்வாய், 9 ஜூன், 2015

கோழை சிவாஜி -வீர சிவாஜி


முகலாயர்களை கலங்கடித்த மராட்டிய சிங்கம்!!
வீரத்தின் பிறப்பிடம்!!
அப்சல்கானை எதிர்கோண்டு வீழ்த்தி --------களின் கதாநாயகனான சக்ரவர்த்தி!
மராட்டிய வழிப்பறி குண்டன் சிவாஜியை பற்றி சங்கபரிவார்கள் புளுகுவதுதான் நீங்கள் மேலே படித்த வரிகள்.

உண்மையை சொல்லப்போனால் சிவாஜியை விட ஒரு கோழை,
நம்பிக்கை துரோகி,
ஏமாற்றுக்காரன்,
நயவஞ்சகன்,
கேடி மொள்ளமாறி பேமானி பக்கா பிராடு இந்திய வரலாற்றில் வேறு யாருமே இல்லை என சத்தியம் செய்து கூறலாம்.
இதோ சில ஆதாரப்பூர்வமான வரலாற்று சிதறல்கள்:

*1636ல் தன் அண்ணன் சாம்பாஜி மற்றும் தந்தை ஷாகாஜியை துணைக்கு வைத்துக்கொண்டு முகலாய சாம்ராஜ்ஜியத்திற்கு எதிராக கலகத்தில் இறங்கி அண்ணனை இழந்து தந்தையை கைதியாக்கி தானும் தலைமறைவானார் சிவாஜி.
பிறகு "எந்த மாதிரியான போர் நடவடிக்கைகளிலும் ஈடுபடமாட்டேன்,என் தந்தையை விடுதலை செய்யுங்கள்,
அவருக்கான பழைய பொறுப்புகளை வழங்கி கருணை புரியுங்கள்" என பேரரசர் அவுரங்கசீப்புக்கு மன்னிப்பு கடிதம் எழுதி மாமன்னரின் கருணையை பெற்றார் வீர(???)சிவாஜி.
*1656ல் மீண்டும் வீரத்தில்(???)இறங்கினார் சிவாஜி.
புனேவுக்கு தெற்கில்முகலாய சாம்ராஜ்ஜியத்தின் கீழ் இருந்த ஜாவ்லியின் மன்னர் சந்திரா ராவிடம் தனது இரண்டு ஆட்களை மரியாதை நிமித்தமாக சந்திக்க வந்துள்ளோம் என அனுப்பி,மன்னர் அயர்ந்தபோது அந்த இருவரும் மன்னரை கொன்று அங்கிருந்து ஓட்டமெடுத்தனர்,
அந்த இருவரும் தகவலோடு வந்து சேர்ந்ததும் மறைந்திருந்த சிவாஜி உடனே ஜாவ்லியை தாக்கி வெற்றி கொண்டார்.
*ஜாவ்லியை அடுத்து அஹமத் நகரை தாக்கினார் சிவாஜி,ஆனால் முகலாய படைகளிடம் வசமாக சிக்கிய சிவாஜி தப்பியோடி தலைமறைவானார்.
"ஏதோ தெரியாமல் நடந்து விட்டது,இனி முகலாய அரசின் எல்லைகளை காக்கும் விசுவாசியாக இருப்பேன்,
எனக்கு உயிர் பிச்சை தாருங்கள்" என மன்றாடியவராக மாமன்னர் அவுரங்கசீபுக்கு மன்னிப்பு கடிதம் எழுதி உயிர் பிழைத்தார் வீர???சிவாஜி.

*பிறகு அவுரங்கசீப் ஆக்ராவுக்கு சென்ற சமயம் பார்த்து அஹமத் நகரை தாக்கி கைப்பற்றினார் சிவாஜி.
*இரண்டாம் ஆதில்ஷா சிவாஜியை அடக்க பிஜப்பூரின் தளபதி அப்சல்கானை அனுப்பினார்.
அப்சல்கான் படைகொண்டு வருவதை அறிந்த சிவாஜி பிரதாப்கடு கோட்டைக்கு சென்று பதுங்கி கொண்டார்.
*நான் அமைதியாக இருந்து தங்களிடம் அடங்கிப்போக விரும்புகிறேன்" என அப்சல்கானுக்கு கடிதம் எழுதினார் சிவாஜி.
*ஆனால் அப்சல்கான் இதை நம்பவில்லை,
தகவலை உண்மைதானா என அறிந்துகொண்டு வர கோபிநாத் எனும் தளபதியை சிவாஜியிடம் தூதுவராக அனுப்பினார்.
*தன்னை சந்திக்க வந்த கோபிநாத்திடம் "நான் நம் நம் மதத்தை காப்பாற்ற வந்தவன்,
அப்சல்கானோ அழிக்கப்பட வேண்டியவன்.
என் லட்சியத்தை நிறைவேற்றிட தாங்கள்தான் எனக்கு உதவி புரியவேண்டும்" எனக்கூறி கோபிநாத்துக்கு ஏகப்பட்ட பரிசு பொருட்களை கொடுத்து மூளைச்சலவை செய்து அப்சல்கானை நம்பவைத்தார்!

*அப்சல்கான் கோபிநாத்தின் வார்த்தைகளை அப்படியே நம்பினார்.
சந்திப்புக்கான அழைப்பு சிவாஜிக்கு சென்றது.
1659 நவம்பர் 20 ஜாவ்லியின் காட்டுப்பகுதியில் சிவாஜியும் அப்சல்கானும் சந்திக்க ஏற்பாடு நடந்தது.
சந்திப்புக்கு முதல்நாள் இரவே மராத்திய வீரர்கள் காட்டுப்பகுதியில் பதுங்கி கொண்டனர்.
அப்சல்கான் தன்னோடு வந்திருந்த 1500 குதிரை வீரர்களை அஹமத் நகரிலேயே நிறுத்தி விட்டு தன் ஆயுதங்களையும் எடுத்துக்கொள்ளாமல்,
கவசமும் அணியாமல்,
இடைவாளையும் சயீத்பாண்டா என்னும் வீரனையும் வைத்துக்கொண்டு முகாமுக்கு வந்து சேர்ந்தார்.
*ஆனால் இங்கே சிவாஜி உடைக்குள் கவசத்தையும் தலைப்பாகைக்குள் தலைக்கவசத்தையும் அணிந்து கொண்டார்.
வலதுகையுரையில் ஒரு மறைக்கப்பட்ட பிச்சுவாக்கத்தி,
இடது கைவிரல் மோதிரங்களில் மறைத்து அமைக்கப்பட்ட இரும்பாலான மிகக்கூர்மையான புலிநகங்கள்,
ஆனால் பார்வைக்கு நிராயுதபாணியாகவே தெரிந்தார் சிவாஜி.
*கூடாரத்திற்குள் நுழைந்த சிவாஜியை கட்டித்தழுவி வரவேற்றார் அப்சல்கான்.
அப்சல்கானை நான்கைந்து முறை குனிந்து குனிந்து வணங்கிய சிவாஜி,
திடீரென புலிநகங்களால் அப்சல்கானின் வயிற்றை கிழித்தார்.
இதைக்கண்ட சயீத்பாண்டா சிவாஜி மீது பாய,
மறைந்திருந்த மராத்திய வீரர்கள் சயீத்பாண்டாவை குத்திக்கிழித்தனர்.
வலியால் துடித்த அப்சல்கான் சிவாஜியோடு மல்லுக்கு நின்றார்.
ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் பின்புறமாக இரண்டு வீரர்கள் அப்சல்கானை வெட்டி சாய்த்தனர்.
அப்சல்கானின் தலையை கொய்துகொண்ட சிவாஜி அங்கிருந்து ஓட்டமெடுத்தார்.

அப்சல்கானை கொன்றவுடன் பிஜப்பூர் பன்ஹாலா ஆகிய இரண்டு கோட்டைகளையும் பிடித்தார் சிவாஜி.
ஆனால் சுல்தான் இரண்டாம் ஆதில்ஷா நாலா திசையில் இருந்தும் பிஜப்பூர் பன்ஹாலாவை சூழ்ந்து தாக்க தொடங்கியவுடன் அஹமத் நகருக்கு சாக்கு கந்தலுக்குள் மறைந்து தப்பியோடினார் சிவாஜி.
*சிவாஜியை அடக்க 1660ல் தக்காணத்திற்கு ஷாயிஸ்தாகானை தளபதியாக நியமித்தார் அவுரங்கசீப்.
புனேவில் உள்ள சிங்கார் கோட்டையில் அமர்ந்தார் ஷாயிஸ்தாகான்.
பிறகு மூன்று ஆண்டுகள் வரை அமைதியாக இருந்த சிவாஜிக்கு ஷாயிஸ்தாகானை தாக்க தக்க சந்தர்ப்பம் ஒன்று கிடைத்தது.
அது 1663ம் ஆண்டு ரமலான் மாதம்.
பகலெல்லாம் நோன்பு இருக்கும் முகலாய வீரர்கள் இரவு முழுவதும் பிரார்த்தனையிலும் களைத்தும் இருப்பர்.
அப்போது மராத்தியர்கள் யாரும் புனேவுக்கு நுழையாத வண்ணம் பாதுகாப்பு பலமாகவே இருந்தது.
200 மராத்தியர்கள் வெவ்வேறு வேடங்களிட்டு புனேவுக்குள் நுழைந்தனர்.
கல்யாண ஊர்வலம் போன்று செட்டப் செய்து அதில் மணப்பெண் வேடத்தில் புனேவுக்குள் நுழைந்தார் சிவாஜி.
அப்போது சில மராத்தியர்களோடு சமையல்றை வாயிலாக கோட்டைக்குள் நுழைந்த சிவாஜி அங்கே இருந்த சுமார் 38 பெண்களை கொன்றுகுவித்து முன்னேறினார்.
பிறகு ஷாயிஸ்தாகானின் அறையில் நுழைந்து தொழுகையில் இருந்த ஷாயிஸ்தாகானை தாக்கியபோது அவரின் மகன் அபுல்ஆலம் கான் சிவாஜியை தாக்கினார்.
உடனே மராத்திய வீரர்கள் அபுல்ஆலம் கானை கொன்றனர்.
ஷாயிஸ்தாகானின் மூன்று விரல்கள் துண்டானது,
ஷாயிஸ்தாகான் சுதாரித்துக்கொண்டு பலமாக சிவாஜியை தாக்கினார்,
உடனே சிவாஜியும் மற்ற மராத்தியர்களும் ஓட்டம் பிடித்து காடுகளுக்குள் ஒளிந்து மறைந்தனர்.

(மூன்று விரல் இழந்தும் எதிர்த்து அடித்து துரத்தியவன் வீரனா? ஓடியவன் வீரனா?)

*இதே நோன்பு மாதத்தில் சூரத் நகரில் முகலாய வீரர்கள் அயர்ந்திருந்தபோது கொள்ளையடித்து கொண்டு தப்பினார் இந்த "வீர" சிவாஜி.
*உடனே அம்பர் ராஜா ஜெய்சிங் தலைமையில் திலாவர்கானை தளபதியாக நியமனம் செய்து பெரும் படை ஒன்றை தக்காணத்திலிருந்து அனுப்பினார் அவுரங்கசீப் .
ஆண்டு 1665 ஜனவரி.
பெரும் படை வந்துகொண்டிருக்கும் தகவலை கேட்ட சிவாஜி தன்வசமிருந்த 19 கோட்டைகளையும் காலி செய்து கொண்டு ராய்கருக்கு தப்பியோடினார்.
திலாவர்கான் சிவாஜிக்கு "ராய்கர் கோட்டையில் உயிரை விடப்போகிறாயா அல்லது ஒழுங்கு மரியாதையோடு அஹமத் நகர் வந்து சரணடைகிறாயா" என ஒரு கடிதம் எழுதினார்.
இதனை படித்து பதறிப்போன சிவாஜி உடனே நிராயுதபாணியாக அஹமத் நகரில் உள்ள கோட்டையில் வந்து சரணடைந்து "சரணடையத்தான் வந்துள்ளேன்.
மரணமோ மன்னிப்போ அல்லது சிறையோ ஏதுவேண்டுமானாலும் தாருங்கள்" எனக்கூறியபடி மண்டியிட்டு அமர்ந்து கொண்டார்.
*பிறகு "இதுவரை நான் பிடித்த 25 கோட்டைகளையும் தந்து விடுகிறேன்.
ஒவ்வொரு ஆண்டும் முகலாய பேரரசுக்கு 2,00000 பொற்க்காசுகளை கப்பம் கட்டுகிறேன்.
2000 யானைகளை தருகிறேன்.
அடுத்த 7 ஆண்டுகள் வாளை ஏந்த மாட்டேன்.
தக்காணம் முதல் கோல்கோண்டா வரை முகலாய பேரரசின் எல்லைகளை காப்பேன்.
பிஜப்பூருக்கு இனி செல்லவே மாட்டேன்.
உங்களின் சேவகனாக என்றும் இருப்பேன்" என மாமன்னர் அவுரங்கசீபுக்கு 23 பக்கத்தில் மன்னிப்பு கடிதம் ஒன்றை அனுப்பினார் சிவாஜி.!!!!

கோழை சிவாஜி கோழைத்தனம் தொடரும்....

ஆதார நூல்கள்:
The mughals by Chop singh verma,prakash books 2004,
the fall of the mughal empire of hindustan by Hg Keene.
oxford 1887,
the maraathas 16001818,series: the new cambridge History of india,
by stewart gordon. university of michigan ann arbor.

புதன், 4 ஜூன், 2014

கஜினி முகமது : கல்வெட்டு உண்மைகள் ! பாடநூல் புரட்டுகள் !

பாபர் மசூதியை இடிக்கத் தனது ரதயாத்திரையை குஜராத்திலுள்ள சோமநாதபுரத்திலிருந்துதான் துவங்கினார் அத்வானி. அயோத்திக்கு பாபர்; சோமநாதபுரத்திற்கு கஜினி. அயோத்தியில் ராமர் கோயில் எதையும் பாபர் இடிக்கவில்லை என்பது பல வரலாற்று ஆசிரியர்களாலும் தொல்பொருள் ஆய்வாளர்களாலும் தெளிவாக நிரூபிக்கப்பட்டுவிட்டது.
ஆனால் சோமநாதபுரத்தின் விசயம் அப்படி அல்ல. சோமநாதபுரம் கோயிலை கஜினி முகமது கொள்ளையிட்ட செய்தி நீண்ட நாட்களாகவே நமது வரலாற்றுப் பாட நூல்களில் இடம் பெற்று வருகிறது.
இந்தியாவில் இந்து – முசுலீம் முரண்பாட்டின் துவக்கமே கஜினியின் இந்தப் படையெடுப்புதான் என இன்று பாரதிய ஜனதா கும்பல் செய்து வரும் பிரச்சாரத்திற்கு உறுதியான அடித்தளத்தை வழங்குகின்றன நமது பாடநூல்கள்.
கஜினி படையெடுப்பு
கஜினி படையெடுப்பு
அப்படியானால் கஜினி முகமது சோமநாதபுரத்தின் மீது படையெடுத்ததும் கொள்ளையடித்ததும் பொய்யா? இல்லை, மறுக்க முடியாத உணமை.
ஆனால் கஜினி படையெடுத்தபோது சோமநாதபுரத்தில் வாழ்ந்துவந்த முசுலீம்களும் அவனை எதிர்த்துப் போரிட்டு மடிந்தார்கள் என்பதும், அதேபோல கஜினி முகமதுவின் தலைநகரமான கஜினியில் பெரும் செல்வந்தர்களாகப் பல இந்து வர்த்தகர்கள் இருந்தனர் என்பதும், ‘இந்துக்’ கோயிலைக் கொள்ளையடித்த அந்த ‘இசுலாமிய’ மன்னன்தனது நாட்டின் ‘இந்து’ வர்த்தகர்களைக் கொள்ளையடிக்கவில்லை என்பதும் நமது பாடநூல்கள் குறிப்பிடாத உணமை.
கத்தியவாரை (குஜராத்) ஆண்டு வந்த சோலங்கி மீது கஜினி முகமது படையெடுத்த அதே கால கட்டத்தில் தான், தெற்கே சோழ நாட்டிலிருந்து இராசேந்திர சோழன் சாளுக்கியர்கள் மீது படையெடுத்தான். இராசேந்திர சோழனின் படையெடுப்பை இந்தியா மீதான படையெடுப்பென்றோ, இந்து மன்னர்களுக்கிடையிலான மோதல் என்றோ குறிப்பிடாத வரலாற்றுப் பாடநூல் கஜினி முகமது எனும் ‘இசுலாமிய’ மன்னன் ‘இந்தியா’ மீது படையெடுத்ததாகக் குறிப்பிடுவதை ஒப்பு நோக்க வேண்டும்.
ஒரு நாடு என்ற பொருளில் இந்தியா என்று நாம் இன்றைக்கு அழைக்கின்ற புவிப்பரப்பு சுமார் 50(தற்போது 65 ஆண்டுகள்) ஆண்டுகளுக்கு முன்னர் உருவானது. கஜினி முகமதுவின் காலத்திலோ, அதற்கு முன்னரோ இந்தப் புவிப்பரப்பு ஒரே ஆட்சியின் கீழ் ஒரு நாடாக எப்போதும் இருந்ததில்லை.
ஏன், 1947 ஆகஸ்டு 15-ம் தேதியன்று காஷ்மீரும், ஆந்திரத்தின் பெரும் பகுதியும், பல வடகிழக்கு மாநிலங்களும் இந்திய யூனியனில் இல்லை. எழுபதுகளுக்கு முன்னர் சிக்கிம் இந்தியாவில் இல்லை. அவ்வாறிருக்கும் போது 20-ம் நூற்றாண்டில் உருவாகவிருக்கும் இந்தியா மீது 11-ம் நூற்றாண்டிலேயே கஜினிமுகமது எப்படிப் படையெடுக்க முடியும்?
இவ்வாறு பேசுவதே தேசத் துரோகம் என்று ஆர்.எஸ்.எஸ். காரர்கள் குமுறுவார்கள். அகண்ட பாரதத்திற்கு அவர்கள் வரைந்துள்ள எல்லைக் கோட்டின்படி ஆப்கானிஸ்தானமும் இந்தியாவில் அடக்கம். அந்தக் கணக்கின்படி பார்த்தால் இராசேந்திர சோழனைப் போல கஜினி முகமதுவும் ஒரு இந்தியன். ஒரு இந்தியன், எப்படி இந்தியாவின் மீது படையெடுக்க முடியும்?
இது வேடிக்கையான வாதமோ, குதர்க்கவாதமோ அல்ல. இந்து தேசியக் கண்ணோட்டத்திலிருந்து நமக்குக் கற்பிக்கப்படும் வரலாற்றை விஞ்ஞான பூர்வமாக ஆராய்ந்து புரிந்து கொள்ளும் முயற்சி.
பிரபல வரலாற்றாய்வாளர் ரோமில்லா தபார் பம்பாய் பல்கலைக் கழகத்தில் இவ்வாண்டு நிகழ்த்திய டி.டி. கோசாம்பி நினைவுச் சொற்பொழிவில் சோமநாதபுரம் படையெடுப்பு குறித்த புதிய வரலாற்றுத் தரவுகளை வெளியிட்டுள்ளார். ‘செமினார்’ ஆங்கில மாத இதழில் வெளியான அந்தக் கட்டுரையை ஆதாரமாகக் கொண்டு இக்கட்டுரை எழுதப்படுகிறது.
***
சோமநாதபுரம் – அரேபியர்களுடன் இருந்த கடல் வர்த்தகத் தொடர்பு காரணமாக செல்வச் செழிப்புடன் விளங்கிய துறைமுக நகரம். இந்த அராபிய வர்த்தகத் தொடர்பு பல நூற்றாண்டுகள் முந்தையது. அரேபிய வர்த்தகர்கள், மாலுமிகளில் பலர் இங்கேயே திருமண உறவு ஏற்படுத்திக் கொண்டு மேற்குக் கடற்கரை ஓரமாக நிரந்தரமாகவே தங்கி விட்டனர். கி.பி 8, 9 நூற்றாண்டைச் சேர்ந்த ராட்டிரகூட ஆட்சியில் கடலோரப் பகுதிகளில் தாஜிக்கிஸ்தானைச் சேர்ந்த முசுலீம்கள் ஆளுநர்களாகக் கூடப் பணியாற்றியிருக்கின்றனர். அதே போல கஜினி நகரத்தில் இந்து வியாபாரிகள் செல்வாக்குடன் இருந்திருக்கின்றனர்.
சோமநாதபுரம் கடற்கரை
சோமநாதபுரம் கடற்கரை (இன்று)
சோமநாதபுரம் கோயில் அத்தனை செல்வச் செழிப்புள்ளதாக விளங்கச் சில காரணங்கள் இருந்தன. கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் யாத்திரை வரி வசூலிக்கப்பட்டது. (ஜஸியா எனும் யாத்திரை வரி முசுலீம் மன்னர்களால் இந்து யாத்தீகர்களிடம் வசூலிக்கப்பட்டதாக மட்டுமே கூறுகிறது பாடநூல்). இதில் கிடைத்த பெரும் வருவாயைக் கொண்டு அரேபியக் குதிரை இறக்குமதி வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தது கோயில் நிர்வாகம்.
கோயில் நிர்வாகத்திற்கும், சோலங்கி ஆட்சிக்கும் அன்றைக்குப் பெரும் சவாலாக இருந்தவர்கள் கோயிலுக்கு வரும் பக்தர்களைக் கொள்ளையடித்த குறுநில மன்னர்கள்தான். யாதவர்கள், சுடாசாமர்கள், அபிரர்கள் என்று அழைக்கப்பட்ட அந்தக் குறுநில மன்னர்கள் வர்த்தகர்களையும் பக்தர்களையும் வழிமறித்து அவர்கள் கொண்டுவரும் காணிக்கைகளை வழிப்பறி செய்தனர். இவர்களைச் சமாளிப்பதுதான் சோலங்கி அரசின் தலையாய பணியாக இருந்தது.
இந்தப் பின்புலத்தில் கி.பி 1025-ம் ஆண்டு நடந்தது கஜினியின் படையெடுப்பு. அது குறித்த வெவ்வேறு வரலாற்று ஆதாரங்களை இனிக் காண்போம்.
துருக்கிய – பாரசீகக் குறிப்புகள்:
ன்னர்களின் வீரபராக்கிரமங்களை மிகைப்படுத்திக் கூறும் எல்லா இலக்கியங்களுக்கும் உள்ள தன்மை இவற்றிலும் உண்டு. கீழை இசுலாமிய உலகின் குறிப்பிடத்தக்க கவிஞரான பரூக்கி சிஸ்தானி என்பவர் கஜினியின் படையெடுப்பைப் பற்றி விவரிக்கிறார்.
சிஸ்தானியின் கூற்றுப்படி சோமநாதபுரத்தில் கஜினியால் உடைப்பக்கட்ட சிலை இந்துக் கடவுள் அல்ல; இசுலாம் தோன்றுவதற்கு முன் அரேபியாவில் வழிப்பட்டு வந்த வாத், உஸ்ஸா, மானத் என்ற பெண் தெய்வங்களில் ஒன்றான மானத் என்ற பெண் கடவுளின் சிலை.
உருவ வழிபாட்டை எதிர்த்த முகமது நபி இச்சிலைகளை உடைத்தெறியுமாறு ஆணையிட்டதாகவும் மற்ற இரண்டு கடவுள்களின் சிலையும் உடைக்கப்பட்டு விட்டதாகவும், மானத்தின் சிலை மட்டும் குஜராத்திற்கு ரகசியமாகக் கடத்தி வரப்பட்டு விட்டதாகவும் கூறுகிறார் சிஸ்தானி.
‘’சு-மானத்’ என்றால் ’’மானத் கடவுளின் உறைவிடம்’’ என்று பொருள். இந்தச் சிலையை உடைத்ததன் மூலம் நிறைவேற்றப்படாமலிருந்த ஒரு இசுலாமியக் கடமையை கஜினி நிறைவேற்றிவிட்டார்’’ என்று அவர் எழுதுகிறார்.
மன்னனைக் ‘குளிப்பாட்டுவதற்கு’ வழக்கமாக அரசவைப் புலவர்கள் புனையும் கதைதான் இது என்றும், பல்வேறு இசுலாமிய மன்னர்களைக் காட்டிலும் தன்னை ஒரு மதக்கடமையை நிறைவேற்றிய மாவீரனாகச் சித்தரித்துக் கொள்ள கஜினி செய்த முயற்சி என்றும் கூறி வரலாற்றாசிரியர்கள் இந்தக் கதையை நிராகரிக்கின்றனர்.
கஜினியின் அரசவையில் இருந்த அல் பரூனி எனும் அறிஞர் இந்தியாவின்பல பகுதிகளிலும் சுற்றுப் பயணம் செய்து கிதாப் உல் ஹிந்த் எனும் வரலாற்று நூலை எழுதியவர். அவர் இத்தகைய கட்டுக் கதைகள் எதையும் எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கஜினி பேரரசு
கஜினி பேரரசு
இவை ஒரு புறமிருக்க சன்னி பிரிவு முசுலீமான கஜினி, ஷியா மற்றும் இசுமாயிலி பிரிவு முசுலீம்கள் 50,000 பேரை இசுலாமிய மார்க்கத்துக்கு விரோதமானவர்கள் என்று கூறிக் கொலை செய்தான் என்றும் துருக்கிய – பாரசீக வரலாற்றுக் குறிப்புகள் கூறிகின்றன.
இன்னொரு சம்பவமும் நடதுள்ளது. மூல்தான் நகரிலிருந்த இந்துக் கோயிலொன்றை இசுமாயிலி முசுலீம்கள் தாக்கியிருக்கின்றனர். அதற்குப் பதிலடியாக இசுமாயிலி முஸ்லீம்களைத் தாக்கியது மட்டுமின்றி அவர்களது மசூதியையும் இழுத்து மூடியிருக்கிறான் கஜினி.
சோமநாதபுரத்தின் மீதான தாக்குதல், ஷியா மற்றும் இசுமாயிலி பிரிவு முசுலீம்கள் மீதான தாக்குதல் ஆகியவற்றை மதக் கடமையை நிறைவேற்றும் செயல்களாக அன்று இசுலாமிய உலகத்திடம் (கலீபாவிடம்) கஜினி சித்தரித்திருக்கலாம். எனினும் அடிப்படை உண்மை அதுவல்ல.
இந்தியாவின் பல்வேறு அரசுகளுடன் நடைபெற்ற குதிரை வர்த்தகத்தில் அரேபியாவுடன் கஜினி (ஆப்கான்) போட்டியிட்டுக் கொண்டிருந்தது. சோமநாதபுரத்தின் போரா முஸ்லீம் மற்றும் இந்து வணிகர்கள் மூலமாகவும், சிந்து மாகாணத்தின் (மூல்தான்) இசுமாயிலி, ஷியா வியாபாரிகள் மூலமாகவும் நடைபெற்ற இந்த வர்த்தகத்தைத் தடுப்பதன் மூலம்தான் கஜினியின் வர்த்தகம் பெருகும் என்பது யதார்த்த நிலையாக இருந்தது.
வர்த்தகத்திற்கான யுத்தம் மதப் போர்வை போர்த்திக் கொண்டது இப்படித்தான் நடந்திருக்க வேண்டும்.
சமண நூல்களின் குறிப்புகள்:
இனி, அக்காலத்தில் நாடெங்கும் செல்வாக்குடன் திகழ்ந்த சமண மத்ததினரின் குறிப்புகளைக் காண்போம். கோயில்களை அழித்து முனிவர்களையும் பார்ப்பனர்களையும் துன்புறுத்துகின்ற ராட்சதர்களுக்கெதிராக சாளுக்கிய மன்னன் போர் தொடுத்ததை 12-ம் நூற்றாண்டின் சமண நூல் குறிப்பிடுகிறது.
ஆனால் ஒரு நூற்றாண்டுக்கு முன் நடந்த கஜினியின் படையெடுப்பு பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
இதே சாளுக்கிய மன்னன் காம்பே பகுதியில் முசுலீம்களுக்கு ஒரு மசூதி கட்டிக் கொடுத்திருக்கிறான் என்பது குறிப்பிடத்தக்கது.
13-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சாளுக்கிய மன்னன் குமாரபாலன் என்பவன் சாகாவரம் பெற விரும்பிய கதையை இன்னொரு சமண நூல் கூறுகிறது:
கஜினி முகமது
கஜினி முகமது
சோமநாதபுரத்திலுள்ள மரத்தினாலான பாழடைந்த கோயிலை கற்கோயிலாக மாற்றிக் கட்டினால் சாகாவரம் பெறலாமென அவனது அமைச்சன் கூறிய யோசனையை மன்னன் அமல்படுத்துகிறான். சமண மதத்தைச் சார்ந்த அந்த அமைச்சன் தனது மதத்தின் வலிமையை மன்னனுக்குப் புரிய வைக்க சமண முனிவர் ஒருவரை அழைத்து வந்தான். சோமநாதபுரம் கோயிலுக்கு வந்த அந்த முனிவர் தனது தவ வலிமையினால் ‘சிவபெருமானை’ அழைத்தவுடனே சிவன் மன்னனுக்குக் காட்சியளித்தாராம். சிவனையே சொடுக்கு போட்டு வரவழைக்கும் அந்த முனிவரின் தவ வலிமையை வியந்த மன்னன், உடனே சைவத்திலிருந்து சமணத்திற்கு மாறினான் எனவும் அந்நூல் குறிப்பிடுகிறது.
கஜினி முகமதுவின் படையெடுப்புக்கு இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின் எழுதப்பட்ட இந்நூலிலும் படையெடுப்பு பற்றி எந்தத் தகவலும் இல்லை.
11-ம் நூற்றாண்டில் (அதாவது கஜினி முகமதுவின் படையெடுப்பின் போது) வாழ்ந்த மால்வா அரசவையின் சமணக் கவிஞர் தனபாலன் என்பவர் சோமநாதபுரம் படையெடுப்பைக் குறிப்பிடுகிறார். ஆனால் சிலை உடைப்பு பற்றி ஏதும் இல்லை. மாறாக மகாவீரரின் சிலைகளை கஜினி முகமதுவால் எதுவும் செய்ய முடியவில்லை என்பதை விரிவாகக் கூறுவதன் மூலம் சைவத்தைக் காட்டிலும் சமணத்தின் மேன்மையை வலியுறுத்துகிறார்.
சைவத்திற்கு எதிராகக் கடுமையாக மோதிக் கொண்டிருந்த சமணர்கள், ‘’தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியாத சிவபெருமானைப்’’ பற்றி எழுதாமல் இருக்க வேண்டிய அவசியம் என்ன?
சோமநாதபுரத்தின் சமஸ்கிருதக் கல்வெட்டுகள்:
12, 13-ம் நூற்றாண்டில் சமஸ்கிருதக் கல்வெட்டுக்கள், கோயிலை உள்ளூர் குறுநில மன்னர்கள் கொள்ளையிட்டதைப் பற்றியே கூறுகின்றன.
ஆனால் 100 ஆண்டுகளுக்கு முந்தைய கஜினி முகமதுவின் படையெடுப்பைப் பற்றி ஒரு கல்வெட்டும் இல்லை.
கல்வெட்டைக் காண்பவர்கள் ‘’சிவனுக்கே இந்தக் கதியா’’ என்று நம்பிக்கையிழந்து விடுவார்கள் என்ற சங்கடமா? அப்படியானால் உள்ளூர் மன்னர்கள் கோயிலைத் தாக்கியதை மட்டும் ஏன் குறிப்பிட வேண்டும்? அல்லது கோயிலைக் கொள்ளையடிப்பது என்பது அடிக்கடி நடக்கக்கூடிய சாதாரண விசயமாக இருந்ததா? – என்ற பல கேள்விகளை இக்கல்வெட்டுகள் கிளப்புகின்றன.
1264-ம் ஆண்டின் இன்னொரு கோயில் கல்வெட்டு மிக முக்கியமானது. சமஸ்கிருதத்திலும் அராபிய மொழியிலும் பொறிக்கப்பட்டுள்ள இந்தக் கல்வெட்டு, ஹார்மூஸ் நகரைச் சேர்ந்த ஒரு முசுலீம் வியாபாரிக்கு மசூதி கட்டுவதற்காக சோமநாதபுரத்திலேயே நிலம் விற்பனை செய்யப்பட்டது பற்றியதாகும்.
கோஜா நூருதீன் பெரூஸ் என்ற வியாபாரிக்கு ஸ்ரீசாதா என்ற உள்ளூர் மன்னன் அனுமதியுடன் செய்த இந்த நிலவிற்பனைக்கு இரண்டு உள்ளூராட்சி அமைப்புகளும் அங்கீகாரம் அளித்துள்ளன.
சோமநாதபுரம் கோயிலின் அர்ச்சகர் வீரபத்ரனின் தலைமையில் வர்த்தகர்கள், அதிகாரிகள், உள்ளூர்ப் பிரமுகர்கள் அடங்கிய ‘பஞ்சகுலா’ என்ற பஞ்சாயத்து ஒரு உள்ளூர் அமைப்பு.
கப்பல் முதலாளிகள், கைவினைஞர்கள், மாலுமிகள், மதகுருமார்கள் ஆகியோரடங்கிய ‘ஜமாதா’ என்ற ஜமாத் இரண்டாவது அமைப்பு. இந்த ஜமாத்தின் உறுப்பினர்களாக வாணிபர்கள், கொத்தனார்கள், முசல்மான் குதிரை லாயக்காரர்கள் ஆகியோரும் அவர்களது சாதியின் பெயரால் குறிப்பிடப்படுகிறார்கள். இவர்கள் இசுலாத்திற்கு மாறிய உள்ளூர் சேவைச் சாதியினராக இருக்கக்கூடும்.
மசூதிக்கான நிலம் யார் யாரிடமிருந்தெல்லாம் விலைக்கு வாங்கப்பட்டது என்ற பட்டியல் தெளிவாக உள்ளது. அதில் பெரும்பகுதி நிலம் சோமநாதபுரம் கோயிலுக்குச் சொந்தமானது என்பதும், அதை விற்பனை செய்தவர் கோயிலின் தலைமை அர்ச்சகரான பார்ப்பனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மொத்தக் கல்வெட்டையும் பரிசீலிக்கும் போது, எவ்வித நிர்jfபந்தமுமின்றி மிகச் சுமுகமாகவே இந்த விற்பனை நடந்துள்ளதென தெரிகிறது.
கஜினி முகமதுவின் படையெடுப்பு நடைபெற்று சுமார் இருநூறே ஆண்டுகளில் அந்தக் கோயில் நிலத்தையே மசூதிக்கு விற்க அர்ச்சகர்களும், ‘இந்து’ வியாபாரிகளும் எப்படிச் சம்மதித்தனர்? 1000 ஆண்டுகளாக இந்தியா முழுவதிலுமுள்ள இந்துக்களின் நினைவில் கல்வெட்டாகப் பதிந்து அவமான உணர்ச்சியை ஏற்படுத்தும் சம்பவம் என்று பாரதீய ஜனதா கூறுகிறதே, அந்த கஜினியின் படையெடுப்பை அதே சோமநாதபுரத்தைச் சேர்ந்த அர்ச்சகர்கள் மறந்தது எப்படி? அதுவும் இருநூறே ஆண்டுகளில்!
ஞாபக மறதியா? அல்லது பலநூறு படையெடுப்புகளில் அதுவும் ஒன்று என்பதால் நினைவில் வைத்துக் கொள்ளும் அளவு முக்கியமானல்ல என்பதாலா?
அல்லது தங்களுடன் “சுமூகமான வர்த்தக உறவு கொண்டிருந்த அரேபியர்கள் வேறு, ஆக்கிரமித்த துருக்கியர்கள் வேறு; இருவரும் இசுலாமிய மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் இவர்களிருவரையும் ‘முசல்மான்கள்’ என்று ஒரே மாதிரியாகக் கருத முடியாது’’ என எண்ணினார்களா – இந்தக் காரணம்தான் அடிப்படையானதாகத் தெரிகிறது.
அதுமட்டுமல்ல, குதிரை வர்த்தகத்திற்குப் பெயர்போன ஹார்மஸ் நகர முசுலீம் வியாபாரிக்குத்தான் நிலம் விற்கப்பட்டிருக்கிறது. எனவே வர்த்தக நலன் இதில் பெரும்பங்கு ஆற்றியிருக்கக் கூடும். கோயில் நிர்வாகிகள் கோயில் பணத்தில் குதிரை வர்த்தகம் செய்து கணிசமாக லாபம் ஈட்டியிருக்கக் கூடும் என்பதும் இந்தப் ‘பெருந்தன்மைக்கு’க் காரணமாக இருந்திருக்கலாம்.
‘அர்ச்சகர்களின் பெருந்தன்மை’
இந்திய மன்னர்களுடன் நடைபெற்ற குதிரை வர்த்தகம் அரேபியா, சிந்து பகுதிகளைச் சேர்ந்த ஷியா, இசுமாயிலி பிரிவு முஸ்லீம் வியாபாரிகள் கையில் இருந்தது. இந்த வர்த்தக வழியைத் தடுத்து, ஆப்கான் மூலம் வர்த்தகம் செய்ய வைப்பதன் மூலம் தனது அரசின் செல்வாக்கை பெருக்குவதே கஜினி முகமதுவின் நோக்கம். வர்த்தகத்திற்கான யுத்தம் மதப் போர்வை அணிந்தது இப்படித்தான்.
அதேபோல கஜினி முகமது சோமநாதபுரதிதன் மீது படையெடுத்து 200 ஆண்டுகளுக்குள், அந்த கோயில் நிலத்தையே மசூதி கட்டுவதற்காக விற்றிருக்கிறார்கள் கோயில் அர்ச்சகர்கள். இவர்களும் குதிரை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்ததுதான் இந்தப் ‘பெருந்தன்மை’க்கு காரணமாக  இருக்கும்.
சோமநாதபுரத்திலேயே காணப்படும் 15-ம் நூற்றாண்டின் கல்வெட்டொன்று இவை அனைத்தையும் புரிந்து கொள்வதற்கான திறவுகோலாகப் பயன்படுகிறது.
சமஸ்கிருத மொழியில் உள்ள அக்கல்வெட்டு ‘’பிஸ்மில்லா ரஹ்மானி ரஹீம்’’ என்ற இசுலாமிய வாழ்த்துச் சொல்லுடன் தொடங்குகிறது. ‘’போராபரீத்’’ என்பவருடைய அராபிய வம்சாவளியை விவரமாகக் கூறி துருக்கியர்களால் (கஜினி) சோமநாதபுரம் தாக்கப் பட்டபோது அதை எதிர்த்து உள்ளூர் மன்னன் பிரம்ம தேவன் சார்பாக போரா பரீத் போரிட்டு மடிந்ததாகவும், அவரது நினைவாக அந்தக் கல்வெட்டு பொறிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
படையெடுப்புக்கு ஆளான சோமநாதபுரம் நகரைச் சேர்ந்தவர்களே கஜினியின் படையெடுப்பைப் பற்றி அப்போதும், அதையடுத்த சில நூற்றாண்டுகளிலும் எத்தகைய கருத்தும் கண்ணோட்டமும் கொண்டிருந்தார்கள் என்பதை நாம் கண்டோம். அப்படியானால் இந்த ‘’ஆயிரம் ஆண்டு அவமானம்’’ என்ற கதை எப்போது உருவானது? இந்தக் கதையின் முதல் ஆசிரியர்கள் வெள்ளையர்கள்.
பிரிட்டிஷ் காமன்ஸ் அவை விவாதம்:
“சோமநாதபுரத்தின் மீது படையெடுத்த கஜினி முகமது அந்தக் கோயிலின் சந்தனமரக் கதவுகளை கொண்டு சென்று விட்டான். ஆப்கானிஸ்தானத்தில் உள்ள பிரிட்டிஷ் ராணுவம் கஜினிக்குச் சென்று அங்கிருந்து அந்தக் கதவைக் கொண்டு வந்து இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று 1842-ல் அறிவித்தார் லார்டு எல்லன்பரோ.
(1857-ல் நடைபெற்ற முதல் சுதந்திரப் போருக்கு 15 ஆண்டுகள் முன்னர்தான் அந்த விவகாரம் தொடங்குகிறது என்பதையும், இந்து-முசுலீம் மன்னர்களையும் மக்களையும் பிளவுபடுத்துவது அன்றைய கிழக்கிந்தியக் கம்பெனியின் வாழ்வுக்கே அவசியமானதாக இருந்தது என்பதையும் வாசகர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.)
ஆப்கானை வெல்ல முடியாத பிரிட்டன் இக்கதவுகளைக் கொண்டு வருவதன் மூலம் ஆப்கான் மீதான தனது மேலாண்மையைக் காட்டலாம்; அதே நேரத்தில் இந்துக்களையும் கவர முடியும் என்பது இந்நடவடிக்கையின் நோக்கம்.
இந்நடவடிக்கையை ஆட்சேபித்த காமன்ஸ் அவையின் எதிர்த் தரப்பினர், “இது முசுலீம்களின் எதிர்ப்பைச் சம்பாதிப்பதில் முடியும்; மேலும் லிங்க வழிபாடு போன்ற காட்டுமிராண்டித்தனமான நம்பிக்கைகளுக்கு நாம் துணை போவதாக அமையும்” என்று கூறினர்.
இந்த எதிர்ப்பை முறியடிக்க எல்லன் பரோவின் ஆதரவாளர்கள் கீழ்க்கண்டவாறு வாதிட்டார்கள்:
“முசுலீம் மன்னர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட அந்த நாடு, அந்தத் துன்புறுத்தும் நினைவுகளால் ஆயிரம் ஆண்டுகளாக அவதிப்பட்டு வருகிறது. இந்துஸ்தானத்தின் மீதான மிக மோசமான ஆக்கிரமிப்பின் சின்னமாக அந்தச் சந்தனக் கதவுகள் இந்துக்களின் நினைவில் பதிந்திருக்கின்றன. எனவே இந்நடவடிக்கை அவர்களுக்குப் பெரும் ஆறுதலாக இருக்கும்” என்றனர்.
கஜினியின் படையெடுப்பு – கொள்ளைக்கு ஆதாரமாக அவர்கள் காட்டிய நூல் பிரிஷ்டா என்ற பாரசீகக் கவிஞன் 17-ம் நூற்றாண்டில் எழுதியது. 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் அது ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டிருந்தது.
11-ம் நூற்றாண்டில் சிஸ்தானி எழுதியதைக் காட்டிலும் பிரிஷ்டாவின் கட்டுக்கதை மிகக் கவர்ச்சிகரமானது. சோமநாதபுரத்தில் மிகப் பிரம்மாண்டமான கடவுள் சிலை இருந்ததாகவும், அதன் வயிற்றைத் தன்னுடைய வாளால் கஜினி முகமது கிழித்தவுடன் அதிலிருந்து தங்கமும் நகையும் கொட்டத் தொடங்கியதாகவும் புராணப் புளுகுகள் கணக்கில் அளக்கிறார் பிரிஷ்டா.
ஒரு வழியாக இந்த ‘’வரலாற்று ஆதாரத்தை’’ வைத்துக் கொண்டு கஜினியிலிருந்து இரண்டு கதவுகளைத் தூக்கிக் கொண்டு வந்தது பிரிட்டிஷ் ராணுவம். வந்தபின் பார்த்தால் அவை எகிப்தியக் கதவுகள். அதற்கும் சோமநாதபுரத்திற்கும் சம்பந்தமில்லை. எனவே அவை ஆக்ரா கோட்டையில் வைக்கப்பட்டன. ‘இந்துக்களின் நினைவில் பதிந்த அந்த சந்தனக் கதவுகளை’ இப்போது கரையான்கள் தின்று கொண்டிருக்கும்.
காங்கிரசும் கஜினி முகமதுவும்:
இந்திய தேசிய விடுதலை இயக்கம் மறைமுகமாக முன்வைத்த இந்து தேசிய அரசியல் சோமநாதபுரம் விவகாரத்தைப் பெரிதாக்குவதில் முக்கிய பங்கு வகித்தது.
குஜராத்தைச் சேரந்த கே.எம்.முன்ஷி சோமநாதபுரம் கோயிலை திரும்பக் கட்டுவதை தேசிய இயக்கத்தின் கடமையாக முன்னிறுத்தினார். இவர் கல்கி பாணியிலான ‘வரலாற்று’ நாவல்கள் எழுதிக் கொண்டிருந்தவர். முசுலீம் எதிர்ப்பு இந்து தேசியத்தை பிரச்சாரம் செய்த பங்கிம் சந்திரரின் ஆனந்தமடம் நாவலைப் படித்து, அதன் தாக்கத்தில் அதே பாணியில் “ஜெய சோமநாதா’’ எனும் நாவலை இவர் 1927-ல் எழுதி வெளியிட்டார். “சோமநாதா – அழிவில்லா ஆலயம்” என்ற இவரது இன்னொரு நூல் 1843-ல் பிரிட்டிஷ் காமன்ஸ் அவையில் நடைபெற்ற விவாதக் குறிப்புகளை ஆதாரமாகக் கொண்டே எழுதப்பட்டுள்ளது.
“இசுலாமிய ஆக்கிரமிப்புக்கு முந்தைய ஆரியப் பெருமிதத்தை மீட்பதே நமது லட்சியம்” என்று பகிரங்கமாகப் பேசி வந்த முன்ஷி மத்திய அமைச்சரும் ஆனார். ஆட்சிக்கு வந்தவுடனே முதல் வேலையாக இந்திய அரசாங்கம் சோமநாதபுரம் கோயிலைக் கட்டி 1951-ல் ஜனாதிபதி ராசேந்திர பிரசாத்தை வைத்துக் குடமுழுக்கு நடத்தியது.
“இந்திய அரசாங்கம் இதுவரை செய்த, செயது கொண்டிருக்கிற அனைத்துப் பணிகளைக் காட்டிலும் இந்தக் கோயிலைக் கட்டியதுதான் முக்கியமானது; ஏனென்றால் இது ஒட்டுமொத்த இந்தியாவையும் மனம் குளிரச் செய்யும்” என்றார் அமைச்சர் முன்ஷி.
இப்படியாக ஒரு வரலாற்றுப் புரட்டு மதரீதியாகப் புனிதப்படுத்தப்பட்டதுடன், “அரசு அங்கீகாரம் பெற்றது” என்ற முத்திரையும் அதன்மீது இடப்பட்டு விட்டது.
பாடநூல் புரட்டு!
மெட்ரிகுலேசன் பாடத்திட்டத்தின் வரலாற்றுப் பாடநூலிலிருந்து சில வரிகளைக் கீழே தருகிறோம். ரோமிலா தபாரின் ஆ்ய்வுடன் இதனைப் பொருத்திப் பார்க்கவும்.
“கஜினி முகமது ஒரு முஸ்லீம் வெறியன். சோமநாதபுரத்தில் அவன் சிவபெருமான் சிலையைத் துண்டு துண்டாக உடைத்தான்; குவியல் குவியலாக வைரங்களையும், நகைகளையும் கொள்ளையடித்தான். ஏராளமான பேரைப் படுகொலை செய்தான்”
“கஜினி முகமதுவிம் படையெடுப்பின் விளைவாக பஞ்சாப், முஸ்லீம்களின் கைக்குப் போய் விட்டது, இந்திய நாடிடன் பொருளாதார, இராணுவ வல்லமைக்கு இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.”
‘மதவெறியன்’, பஞ்சாப் போன கதை இவையெல்லாம் பிரிஷ்டாவின் கட்டுக் கதையையும், முன்ஷியின் நாவலையும் வைத்து எழுதப்பட்டவை. இந்த ‘வரலாற்றை’ப் படித்த படிப்பாளிகள் மதவெறிக்கு ஆளாவதில் என்ன வியப்பு!
***
ராளமான நூல்கள் மற்றும் கல்வெட்டுகளை ஆதாரம் காட்டி இந்த ஆய்வுரையை நிகழ்த்தியிருக்கிறார் ரோமில்லா தபார். ஆனால் எந்தக் கோயிலை பாதுகாப்பதற்காக ஒரு முசுலீம் உயிர் துறந்தாரெனக் கல்வெட்டு இருக்கிறதோ அதே கோயிலிலிருந்து முசுலீம் மக்களுக்கெதிரான நாடு தழுவிய கலவரத்தைத் துவக்கி வைக்கிறார் அத்வானி.
இத்தகைய வரலாற்றுப் புரட்டு என்பது இந்துமத வெறியர்களால் மட்டும் செய்யப்படுவதல்ல. தத்தம் அரசியல் தேவைக்கு ஏற்ப இசுலாமிய, கிறித்தவ மதவெறியர்களும், இன வெறியர்களும், சாதி வெறியர்களும் இதையே தான் செய்கிறார்கள். கட்டபொம்மன் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த மன்னன் அல்ல – கொள்ளைக்காரத் தெலுங்கன் எனகிறது ஒரு தமிழின வெறிப் பத்திரிகை; ஏதோ ஒரு குறுநில மன்னனாக இருந்திருக்கக் கூடிய பெரும் பிடுகு முத்தரையர் சாதி அரசியலின் தேவை காரணமாக சென்னை நகர முச்சந்தியில் உருவிய வாளுடன் நிறுத்தி வைக்கப்படுகிறார்; கான்சாகிபுவா மருதநாயகமா என்ற தகராறு கமலஹாசனுடைய படத்தின் வசூலுக்கு வலிமை சேர்க்கிறது. வரலாற்றின் பெயரால் சாதி, மத, இனவாதிகள் நடத்தும் இந்த மோதலை முறியடிக்க வேண்டுமானால் நமக்குத் தேவை வரலாற்றுப் பொருள் முதல்வாதக் கண்ணோட்டம். அந்தக் கண்ணோட்டமிருந்தால் நாம் கஜினியையும் புரிந்து கொள்ளலாம்; கார்கிலையும் புரிந்து கொள்ளலாம்.
மன்னனின் பெருந்தன்மை
கஜினி முகமதுவால் தோற்கடிக்கப்பட்ட ஆனந்த பாலன் என்றும் மன்னன் கஜினி முகமதுவுக்கு எழுதிய ஒரு கடிதத்தை அல்பரூனி தனது நூலில் மேற்கோள்  காட்டுகிறார்.
“உங்களுக்கெதிராகத் துருக்கியர்கள்  கலகம் செய்வதாக அறிந்தேன். நீங்கள் விரும்பினால் 500 குதிரைப் படையினர், 10,000 காலாட்படையினர், 100 யானைகளுடன் நான் உங்கள் உதவிக்கு வருகிறேன். அல்லது இரண்டு பங்குப் படையுடன் என் மகனை அனுப்புகிறேன்.  ஏனென்றால் நான் உங்களால் தோற்கடிக்கப்பட்டவன், நீங்கள் வேறொருவனால் தோற்கடிக்கப்படுவதை நான் விரும்பவில்லை”
முஸ்லீம் மக்களை ‘பாபரின் வாரிசுகள்’ என்று கூறும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் ஆனந்தபாலனின் வாரிசுகள் யார் என்று நமக்கு அடையாளம் காட்டுவார்களா?
- அஜித்                                                                                                                 Courtosy : வினவு

சனி, 23 நவம்பர், 2013

தொண்டரான தலைவர்!!! - காயல் ஹம்ஸா

எழுதியது ஹிலால் முஸ்தபா

நம்மால் அண்ணாந்து பார்க்கும் பெருமைக்குரியவர்களால் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தன் கிரீடத்தைச் சூட்டிக் கொண்டது உண்மையாக இருக்கலாம். அதே நேரம் தன் அடிமட்டத் தொண்டர்களாலும் வெளிப்புறம் தெரியாத வீரம் செறிந்த உழைப்புத் தோழர்களாலும் தன் தண்டுவடத்தை நிமிர்த்திக் கொண்டிருந்தது என்பதும் பென்னம்பெரிய உண்மையாகும்.


தமிழ்ப் பத்திரிகை உலகின் ஜாம்பவான்களாக இருந்தவர்களில் தனி இடம் பெற்றிருந்தவர் தமிழர்த் தந்தை சி.பா. ஆதித்தனார். ஆதித்தனார் லண்டனில் பார் அட் லா படித்து வந்து தமிழகத்தில் பாமர மக்களுக்கு பத்திரிகை உலகைக் காட்டியவர்.

தமிழகத்தின் டீக்கடைகளில், முடி திருத்தகங்களில், இன்னும் சின்ன சின்ன கடைகளில், கிராமத்து நூல்நிலையங்களில் , படிப்பகங்களில் பாமர மக்களைக் கண்டடைந்து அவர்களை அரசியல் பேச வைத்த மகத்தான பணியை சி.பா. ஆதித்தனார் அவர்கள் தினத்தந்தி நாளிதழ்களின் மூலம் சாதித்துக் காட்டினார்.

நெல்லை மாவட்டத்துக்காரர். திருச்செந்தூருக்கு அருகாமையில் உள்ள காயாமொழியிலும் திருவைகுண்டத்திலும் பிள்ளைப் பருவத்தைக் கழித்தவர்.

சென்னையில் ஓடிய டிராம் வண்டிகள் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த எழும்பூரில் உள்ள குடோன் இடத்தை ஏலத்திற்கு விட்டனர். இரண்டு பெரும் தலைவர்கள் சம பங்காக அந்த இடத்தை ஏலத்தில் எடுத்தனர். ஒருவர் தந்தை பெரியார். அதுதான் இன்று இருக்கும் பெரியார் திடல். மற்றொருவர் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார். அந்த இடம்தான் இன்று இருக்கும் தினத்தந்தி அலுவலக இடம்.

சி.பா.ஆதித்தனார் அவர்கள் தினத்தந்தியைச் சென்னையில் தொடங்கியபோது, அலுவலகத்தில் பணிபுரிய தன்னுடைய மாவட்டத்துக்காரர்களையும் குறிப்பாகத் தன் ஊருக்கு அருகாமையில் உள்ள ஊர்க்காரர்களையும் தேர்ந்தெடுத்து பணியில் அமைத்துக் கொண்டார்.

ஆதித்தனாருக்கு தன் சமுதாயமான நாடார் சமுதாயத்தின் மீது பிடிமானம் அதிகம் உண்டு. அடுத்தபடியாக தன் ஊரிலும் பக்கத்து ஊர்களிலும் வாழ்ந்த முஸ்லிம் மக்களின் மீதும் கூடுதலான பாசம் இருந்தது. தன் அலுவகத்தில் கூடுதலாக நாடார் சமுதாய மக்களுக்கும், அடுத்ததாக முஸ்லிம் சமுதாயத்தினருக்கும் வேலை வாய்ப்பை உருவாக்கித் தந்தார்.

பின்னர், “நாம் தமிழர்” என்ற இயக்கத்தை உருவாக்கினார். இந்த இயக்கத்திலும் மேற்சொன்ன இரு சமுதாயத்தவர்கள் அதிகம் இருந்தனர். நாம் தமிழர் இயக்கம் அரசியல் பணியையும், சமுதாயப் பணியையும் ஆற்றுமென கொள்கை வகுத்திருந்தார்.

இந்த நாம் தமிழர் இயக்கத்தில் காயல்பட்டினத்தைச் சார்ந்த பாமரத் தொழிலாள முஸ்லிம்கள் கணிசமாகப் பங்கு பெற்று இருந்தனர். இந்தப் பாமரத் தொழிலாள முஸ்லிம்கள் தங்கள் பெயருக்கு முன்னால் ‘காயல்’ என்ற தன் ஊர் பெயரைத் தரித்துக் கொள்வார்கள். காயலின் பூர்வீகக் குடி நாங்கள் என்ற அறிவிப்பு போல இது இருக்கும்.

காயல் ஹம்ஸா - இவர் ஒரு அற்புதமான மனிதர். ஆதித்தனாரால் கவரப்பட்டுச் சென்னைக்கு வந்தவர்.

நாம் தமிழர் இயக்கத்தில் சென்னையில் களப்பணி புரிந்தவர். தன் குடும்ப வருவாய்க்காக எலக்ட்ரிக்கல் பணியில் , எலக்ட்ரீஷியனாக அனுபவத்தில் உயர்ந்தவர்.

எலக்ட்ரீஷியனாக வரும் வருமானம் வீட்டிற்கு. களப்பணியும், அரசியல் பணியும் ‘நாம் தமிழர்’ இயக்கதிற்கு என வாழ்வை அமைத்துக் கொண்டவர்.

ஒரு கால கட்டத்தில் அண்ணா ஆட்சி பீடத்தில் அமர்கிறார். அதன்பின்னர் ஆதித்தனாரோடு ஒரு கூட்டுறவு தி.மு.க வைத்துக் கொள்கிறது. இந்தக் கூட்டுறவு இன்னும் நெருக்கமாகி முடிவில் ‘நாம் தமிழர்’ இயக்கம் கலைக்கப் பட்டு தி.மு.க வில் இணைக்கப்பட்டது என சி.பா.ஆதித்தனார் அறிவித்துவிட்டு தி.மு.க வில் இணைந்துவிட்டார்.

இந்த இரு இயக்கங்களும் இணைந்த காலகட்டத்தில், சென்னை மாவட்ட நாம் தமிழர் கட்சிச் செயலாளராகக் காயல் ஹம்ஸா இருந்தார்.

தி.மு.க வோடு, காயல் ஹம்ஸா இணையவில்லை. இதற்கு முக்கிய காரணம் சி.பா.ஆதித்தனார்.

சி.பா. ஆதித்தனார், தன் ‘நாம் தமிழர்’ இயக்கத்தைக் கலைத்தவுடன், அவர் இயக்கத்தில் இருந்த முஸ்லிம்களில் சிலரை ஒன்றுத் திரட்டி , காயல் ஹம்ஸா தலைமையில் சென்னைக் குரோம்பேட்டையில் உள்ள கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் இல்லமான தயா மன்ஸிலுக்குத் தாமே அழைத்து வந்தார்.

“ஐயா , இங்கு வந்திருக்கும் தோழர்கள், நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள். இதோ இவர் காயல் ஹம்ஸா. சென்னை மாவட்ட எங்கள் இயக்கச் செயலாளர். இவரையும், இங்கு வந்திருக்கும் பிறரையும் உங்கள் வசம் ஒப்படைக்கிறேன். என் இயக்கத்தில் முஸ்லிம்கள் இருந்தார்கள். அவர்களுக்கு நான் கண்ணியமான இடம் கொடுத்து இருந்தேன்

நான் இயக்கத்தைக் கலைத்துவிட்டேன். ஆனால் பொறுப்புணர்வுடன் இவர்கள் இருக்க வேண்டிய இடத்திற்குக் கொண்டு வந்து சேர்த்துவிட்டேன்.” என்று கூறி காயிதே மில்லத்திடம் அவர்களை ஒப்படைத்துவிட்டு ஆதித்தனார் தான் போய் தி.மு.க வில் சேர்ந்து கொண்டார்.

அந்த நிமிடத்திலிருந்து, காயல் ஹம்ஸா , கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் தொண்டராக இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகில் பூரணமாகத் தன்னை இணைத்துக் கொண்டார்.

காயல் ஹம்ஸாவிற்கு ஒரு பெரும் ஆற்றலை இறைவன் வழங்கி இருந்தான். இந்திய அரசியல் நிகழ்வுகளையும், தமிழக அரசியல் போக்கினையும் துல்லியமாகவும், விவரமாகவும் அறிந்து வைத்து இருந்தார்.

அவருக்குத் தமிழைத் தவிர எந்த மொழியும் படிக்கத் தெரியாது. சென்னை ராயபுரத்தில் அடிமட்ட மக்களோடு கலந்து வாழ்ந்த வாழ்க்கைக் கொண்டிருந்ததால் உருது நன்றாகப் பேசத் தெரியும்.

நான் இப்போது சொல்லும் செய்தி ஆச்சர்யமாக இருக்கலாம். முஸ்லிம் லீகின் முன்னணித் தலைவர்கள் இந்திய அரசியலின் சில நிகழ்வுகளை மறந்து விடும் பொழுது காயல் ஹம்ஸாவைத் தனியே அழைத்து அந்த நிகழ்வைப் பற்றிக் கேட்பார்கள். தன் நினைவாற்றலிலிருந்து காயல் ஹம்ஸா சரியாக எடுத்துச் சொல்லுவார்.

அப்படிச் சில நேரங்களில் தலைவர் அப்துஸ் ஸமது சாஹிப் கேட்டு இருக்கிறார். A.K. ரிபாய் சாஹிப் கேட்டு இருக்கிறார். M.A. அப்துல் லத்தீப் கேட்டுத் தெரிந்து இருக்கிறார்.

காயல் ஹம்ஸாவிற்குத் தி.மு.க வின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசைத்தம்பி அந்தரங்க நண்பர். ஆதித்தனார் அவரோடு அதிகம் கலந்து நட்புக் கொண்டிருந்தவர். நமது அண்டை கர்நாடக மாநில முஸ்லிம் லீகின் மாநில பொதுச் செயலாளர் கம்ருல் இஸ்லாம் நெருங்கிய தோழர். மேற்கு வங்க முஸ்லிம் லீக் மாநில அமைச்சராக இருந்த ஹஸனுஸ் ஸமான் அணுக்கத் தோழர்.

சுலைமான் சேட் சாஹிப், பனாத்வாலா சாஹிப், முஹம்மது கோயா சாஹிப், அவுக்காதர்குட்டி நஹா சாஹிப் போன்றவர்களுக்கும் காயல் ஹம்ஸா பரீட்சயமானவர்.

காயிதே மில்லத்தின் பூரண நம்பிக்கைக்கும் அன்பிற்கும் உரியவர். சென்னை மாநகராட்சித் துணை மேயராக இருந்த சிலார் மியான் சாஹிபுக்கு அரசியல் ஆலோசகராக இருந்தவர். சிலார் மியானோடு சேர்ந்து பிறைக்கொடி மாத இதழை காயல் ஹம்ஸா தொடங்கினார். அதன் வெளியீட்டாளரும் அவரே.

இத்தனை பட்டியல்களை அவரோடு இணைத்துப் பார்க்க முடியும். ஆனாலும் காயல் ஹம்ஸா ஒரு பீடியைப் பற்ற வைத்துக் கொண்டு , கைலியை மடித்துக் கட்டி, உள் அணிந்து இருக்கும் காக்கி டவுஸர் வெளித்தெரிய எலக்ட்ரீஷியன் பணியைச் செய்து கொண்டிருப்பார்.

என்னோடும் மற்றும் இஜட்.ஜஃபருல்லா, கவிஞர் காசிம் போன்றவர்களோடும் விளையாட்டு மொழிகளில் பேசிக் கொண்டிருப்பார். ஹம்ஸா அன்புமயனாவர்

சென்னைத் துறைமுகத்தின் அருகில் உள்ள காயல் நகரைச் சார்ந்த வாவு குடும்பத்தாருக்கு சொந்தமான பலமாடிக் கட்டிடத்தை அவர்கள் வாடகைக்கு விட்டிருந்தார்கள். அந்தக் கட்டிடத்தினுடைய எலக்ட்ரீஷியனாக வாவு குடும்பத்தார் வேலையில் அமர்த்தி அவரைப் பாதுகாத்து வந்தனர்.

சென்னை ராயபுரம் தொப்ப முதலித் தெருவில் உள்ள அவர் குடியிருந்த ஒரு பொந்து வாடகை வீட்டிற்குத் தமிழக்கத்தில் உள்ள முஸ்லிம் லீகின் மூத்தத் தலைவர்கள் ஏதாவதொரு நிகழ்விற்கு வந்து சென்றிருக்கிறார்கள் என்பது தனிப் பெருமை.

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் மறைந்து விட்டார்கள். அவர்கள் ஜனாஸா புதுக் கல்லூரி வளாகத்தில் வைக்கப் பட்டு இருக்கிறது. ஜனாஸா மீது முஸ்லிம் லீகின் இளம்பச்சைப் பிறைக் கொடி போர்த்தப் பட்டு இருக்கிறது.

தமிழகத்தில், கேரளத்தில், இந்தியத்தில் உள்ள பெரும் தலைவர்கள் அனைவரும் வந்து கலந்துக் கொண்டனர். திருவல்லிக்கேணி வாலாஜா மஸ்ஜிதுக்கு அடக்கம் செய்ய ஊர்வல பவனி செல்கிறது. முடிவில் கபரில் வைத்து மூடப் படுகிறது.

அந்த நேரத்தில் , சற்றுக் கருநிறம் கொண்ட இரு கரங்கள் , காயிதே மில்லத் ஜனாஸாவை மூடியிருந்த இளம்பச்சைக் கொடியைப் பிடித்திழுத்துத் தன் வசமாக்கிக் கொண்டது. அந்தக் கரத்திற்குரியவர் காயல் ஹம்ஸா. அதற்குப் பின்னால் மறைந்த முஸ்லிம் லீக் தலைவர்கள் ஜனாஸாவில் காயிதே மில்லத்தைப் போர்த்திய பிறைக் கொடியைப் போர்த்துவதற்காகக் காயல் ஹம்ஸா அந்தக் கொடியை தன் கழுத்தில் துண்டு போல் போட்டுக் கொண்டு அங்கு வந்து நிற்பார். போர்த்துவார். பின்பு மறக்காமல் எடுத்துச் சென்று விடுவார்.

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகின் உரிமை ஏடான ‘உரிமைக் குரல்’ வார இதழின் வெளியீட்டாளரும், சென்னை மாவட்ட முஸ்லிம் லீக் பொருளாளருமான இளையாங்குடி பி.என்.ஐ. அபுதாலிப் அண்ணன் ஒரு அஸர் தொழுகைக்கு ஒளுச் செய்தார். அந்த நிலையிலேயே இறை நாட்டப்படி இறைவனடிச் சேர்ந்தார்.

அவர் ஜனாஸாவில் போர்த்துவதற்காகக் காயல் ஹம்ஸா, காயிதே மில்லத்திற்குப் போர்த்திய துணியைத் தன் கழுத்தில் தாங்கி வந்தார். போர்த்தினார். அருகில் அமர்ந்து கண்ணீர் சிந்தி அழுதார். காயல் ஹம்ஸா அழுது நான் முதன்முதலில் அப்பொழுதுதான் பார்த்தேன்.

ராமநாதபுர நாடாளுமன்றத் தொகுதியில் இருந்தும் , அடுத்த முறை பெரியகுளம் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்தும் முஸ்லிம் லீக் வேட்பாளராக வெற்றிப் பெற்றுச் சென்ற மதுரை ஷரீப் அண்ணன் மறைந்து விட்ட செய்தி வந்தது.

தலைவர் அப்துஸ் ஸமது சாஹிப், S.A. காஜா முஹைதீன் M.P. , வந்தவாசி வஹாப் சாஹிப், கவிஞர் தா.காசிம், இஜட். ஜபருல்லா, நான் மதுரைக்குச் சென்றோம். எங்களோடு காயல் ஹம்ஸாவும் வந்தார். அப்பொழுதும் அவர் கழுத்தில் , சென்னையில் இருந்து மதுரை வரை காயிதே மில்லத்தைப் போர்த்தி இருந்த முஸ்லிம் லீக் கொடி, அவர் கழுத்தில் துண்டாகத் தவழ்ந்து கிடந்தது.

மதுரையில் ஷரீப் சாஹிப் ஜனாஸா மீது போர்த்தப்பட்டது. அப்பொழுதும் ஜனாஸா அருகில் அமர்ந்து காயல் ஹம்ஸா விக்கல் கலந்து அழுதார். ஹம்ஸா அழுகையை இரண்டாம் முறை அப்பொழுது பார்த்தேன்.

இன்று அந்த ஹம்ஸா இல்லை. அவர் ஜனாஸாவைக் காயிதே மில்லத்தைத் தழுவிய பச்சிளம் பிறைக் கொடி போர்த்தி இருந்தது. அதன்பின் அந்தக் கொடி என்ன ஆனது? எனக்குத் தெரியவில்லை.

ஒரு கொடி வரலாறு முற்றுப் பெற்று விட்டதோ?

வெள்ளி, 15 நவம்பர், 2013

கர்பலா நினைவுகள்


ஹிஜ்ரி 61 ம் ஆண்டு முஹர்ரம் 2 ம் நாள் கர்பலாவில் ஹுசைன் கால் பதித்தார்..... 
கர்பலாவில் தங்கியிருந்த ஹுசைனையும் அவர் குடும்பத்தையும் பணிய வைத்து தன்னிடம் இழுத்து வருவதற்கு உமர் இப்னு சஅத் என்பவன் தலைமையில் 4000 படை வீரர்களை கர்பலாவுக்கு அனுப்பி வைத்தான் கூபாவின் ஆளுநர் இப்னு ஜியாத். இந்த வேலைக்கு கூலியாக இப்னு சஅதுக்கு "ராய்"நகரின் ஆளுநர் பதவி தருவதாக ஆசைக் காட்டப்பட்டது. பதவிக்காக எந்த மாபாதகத்தையும்செய்யத்
துணிந்தவன் சஅத்.

இவன் கர்பலாவுக்கு வந்து "ஏன் கர்பலாவுக்கு புறப்பட்டு வந்தீர்கள்" என்று இமாம் ஹுசைனிடம் கேட்டான் .
"கூபா மக்கள் அழைப்பு விடுத்ததால் வந்தேன்..இப்போது அவர்கள் என் வருகையை விரும்பவில்லை என்று தெரிகிறது.அதனால் நான் திரும்பிச் சென்று விடத் தயாராக இருக்கிறேன்" என்றார் இமாம் ஹுசைன்.

"ஹுசைன் நமது வலையில் வந்து மாட்டிக் கொண்ட பிறகு திரும்பிச் செல்வதற்கோ..தப்பிச் செல்வதற்கோ அனுமதிக்க வேண்டாம்" என்ற கட்டளையை அனுப்பி வைத்தான் இப்னு ஜியாத்.
"முதலில் ஹுசைன் யஜீதுக்கு "பைஅத்" செய்ய வேண்டும். அதன் பிறகு அவரை என்ன செய்வது என்பதைப் பற்றி
தீர்மானித்துக் கொள்ளலாம்" என்ற வஞ்சக அறிவிப்பையும் வெளியிட்டான் இப்னு ஜியாத்.

அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் யஜீதுக்கு பைஅத் செய்ய ஹுசைன் மறுத்து விட்டார். அதனால் புராத் நதியின் தண்ணீர் ஹுசைனுக்கு மறுக்கப்பட்டது.ஹுசைனும் அவரது குடும்பத்தாரும் தாகத்தால் தவித்தார்கள். அவர்களின் வேதனையை தாங்க முடியாத ஹுசைன் இப்னு ஸஅதிடம் மூன்று நிபந்தனைகளை முன் வைத்தார். அதன்படி...

"நான் மக்காவுக்கே திரும்பிச் சென்று விடுகிறேன் அல்லது..நான் யஜீதை சந்திப்பதற்கு அனுமதி கொடுங்கள்..அல்லது பரந்த பூமியின்
ஏதாவது ஒரு மூலையில் சென்று தங்கி இறைப்பணி செய்வதிலேயே என் காலத்தை கழித்து விடுகிறேன்.அதற்காவது அனுமதி கொடுங்கள்."

இதில் எதையும் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டான் இப்னு ஜியாத். அத்துடன்...யஜீதை கலீபாவாக ஏற்றுக்கொள்ள ஹுசைன் மறுத்து விட்டால் தாமதமின்றி அவர்மீது போர் தொடுக்கக் கட்டளையிட்டு "தில் ஜவ்ஷான்" என்ற ஒரு கொலைகாரனையும் கர்பலாவுக்கு அனுப்பி வைத்தான்.மேலும்,

"இப்னு சஅது போரை ஆரம்பம் செய்ய தாமதித்தால் நீயே தளபதியாக இருந்து போரை நடத்து..ஹுசைனின் தலையை வெட்டி எனக்கு அனுப்பு..அவரைச் சார்ந்தவர்கள் அத்தனை போரையும் கொன்று ,அவர்களின் உயிரற்ற சடலங்களின் மீது குதிரைப் படையை ஓடச் செய்து சிதைத்துப்போடு" என ஒரு வெறி நாயைப்போல உத்தரவிட்டு தில்ஜவ்ஷானை ஏவி விட்டான்..

ரத்த வெறிபிடித்த தில் ஜவ்ஷான் கண்களில் கொலை வெறியோடு கர்பலாவை நோக்கி பாய்ந்து சென்றான்.
000
கூபாவாசிகளின் துரோகம்
***********************
முஹர்ரம் மாதம் 9 ம் நாள்.அசர் தொழுகைக்கு பிறகு ஹுசைனின் மீது போர் பிரகடனத்தை அறிவித்தான் இப்னு சஅது.
தனது சகோதரர் அப்பாஸ் மூலம் ஓரிரவு மட்டும் அவகாசம் கேட்டு பெற்றுக் கொண்டார் ஹுசைன்.பிறகு தனது உறவினர்களை எல்லாம் அழைத்து, தனக்காக யாரும் உயிர் துறக்க வேண்டாமென்றும் அனைவரும் இரவோடு இரவாக மதீனாவுக்கு சென்று விடும்படியும் மிக உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.ஆனால் தாங்கள் யாரும் ஹுசைனை விட்டு செல்ல முடியாது என்று அனைவரும் உறுதிபட உரைத்து விட்டனர்.

"இறைவன் மீது ஆணையாக..நான் மரணித்து விட்டால் நபிகள்(ஸல்)அவர்கள் வாக்குக்கு மாற்றமாக யாரும் ஒப்பாரி வைத்து அழக்கூடாது.
முகத்திலும் மார்பிலும் அறயக்கூடாது" என அன்புக் கட்டளையிட்டார் ஹுசைன்.

அன்றைய இரவு ஹுசைனுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் இறுதி இரவாக அமைந்தது.அவர்கள் தங்கியிருந்த கூடாரத்தில் தண்ணீர்
இல்லை.ஆனால் தங்களுக்கு ஏற்பட்ட சோதனையை எண்ணி அவர்கள் வடித்த கண்ணீருக்கு அளவே இல்லை.

முஹர்ரம் 10 ம் நாள் வெள்ளிக் கிழமை அதிகாலை.
இப்னு சஅது தனது 4000 படை வீரர்களை ஹுசைனுக்கு எதிராக அணிவகுத்து நிறுத்தினான்.
ஹுசைனின் அணியில் 32 பேர் குதிரையில் அணிவகுத்து நின்றார்கள்.மற்ற 40 பேர்களில் யாரிடமும் எந்த வாகனமும் இல்லை.
அவர்களில் அதிகமானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள். அவர்கள் அனைவரும் கூடாரத்தில் தங்கி இருந்தனர்.

இப்னு சஅதுடைய படை வீரார்களின் மனதைத் தொடும் வகையில் அவர்களிடையே இமாம் ஹுசைன் உரையாற்றினார்.

" நபிகள் (ஸல்) அவர்கள் என்னையும் என் சகோதரர் ஹசனையும் சொர்க்கத்து இளைஞர்களின் தலைவர்கள் என்று கூறியதை நீங்கள் மறந்து விட்டீர்களா?
என் தாயார் பாத்திமா பெற்றெடுத்த ஆண் மக்களில் நான் மட்டும்தானே மிச்சமிருக்கிறேன்?
நான் உங்களுக்கு என்ன அநியாயம் செய்தேன்?
நீங்கள் அழைத்தீர்கள் என்றுதானே நான் இங்கே புறப்பட்டு வந்தேன்? நீங்கள் விரும்பவில்லை என்றால் என்னை திரும்பிப் போக விடுங்கள் " என்று உருக்கமாகப் பேசினார்.

ஷாம் தேசத்தார்களும் கூபாவாசிகளும் ஹுசைனின் பேச்சுக்கு செவி கொடுக்காமல் அவர்களை கேலி செய்தனர்.
மக்காவிலிருந்த ஹுசைனுக்கு கடிதங்கள் எழுதியும் நேரில் சென்று சந்தித்தும் கூபாவுக்கு வரும்படி வற்புறுத்தி அழைத்த
அந்த கூபாவாசிகள் இப்போது இறைவன் மீது ஆணையாக...நாங்கள் ஹுசைனையும் அவரது குடும்பத்தாரையும் போரில் கொன்று குவிப்போம்" என்று வெறிக் கூச்சலிட்டனர்.

பணத்துக்காகவும் பதவிக்காகவும் யஜீதிடம் விலைபோன கூபாவாசிகளின் படு பயங்கரமான நம்பிக்கை துரோகத்தின் வெளிப்பாட்டை அவர்களின் வாய் வார்த்தைகளின் வழியாக நேரிடையாக கண்டு கொண்ட ஹுசைன் மனம் நொறுங்கிப் போனார்.தனது தந்தையார் அலீக்கும் சகோதரர் ஹசனுக்கும் இந்த கூபா மக்கள் செய்த துரோகம் தன்னிடமும் தொடர்வதைக் கண்டு துவண்டு போனார்.தனது கூபா பயணத்தை தடுத்து நிறுத்த முயன்ற நல்லோர்களின் வார்த்தைகளை தான்
மறுதலித்ததை எண்ணி வருந்தினார்.ஆயினும் காலம்
கடந்து விட்டதை எண்ணி இறைவனிடமே பொறுப்புக்களை ஒப்படைத்தார்.

இந்தத் துயர நேரத்திலும் ஹுசைனை சந்தோசப் படுத்தியது
ஒரு சம்பவம்.
ஆரம்பத்தில் ஹுசைனின் கூட்டத்தாரை பின் தொடர்ந்து முற்றுகையிட்ட ஹூர் இப்னு யஜீது திடீரென ஹுசைனின்
அணியில் வந்து இணைந்து கொண்டார்.அதை எண்ணி ஹுசைன் சந்தோசப்பட்டார்.

ஹூர் இப்னு யஜீதும் சுஹைர் பின் கைன் என்பாரும் கூபா மக்களுக்கு ஹுசைனின் நற்குணங்களையும் அவரது மேன்மையையும் எடுத்துரைத்து, அவரைக் கொல்ல நினைப்பவன் அல்லாஹ்வின் கடுமையான தண்டனையை அனுபவிப்பான் என்றும் எச்சரித்தனர்.அதை யாரும்
பொருட்படுத்தவில்லை.எதிரிகளின் ஒரே நோக்கம் ஹுசைனை கொலை செய்வதிலேயே இருந்தது.

இஸ்லாமியப் பேரரசின் மன்னனாக முடி சூட்டிக்கொண்ட யஜீதின் படைத்தளபதி சஅது முதல் அம்பை எய்து போரைத் தொடக்கி வைத்தான்.

இரு தரப்பிலிருந்தும் தனித்தனி வீரர்கள் களத்தில் மோதிப் பார்த்தனர்.ஹயாத் பின் உமைய்யா, இப்னு யஸ்ஸார் ஆகிய எதிரிகளை ஹுசைனின் அணி வீரர் உமைர் கல்பீ என்பவர் கொன்று போட்டார்.அதன் பிறகும் தனித்தனியாக நடந்த
மோதல்களில் யஜீதின் வீரர்களே கொல்லப்பட்டனர். இந்தத் தோல்வியை எதிர்பார்க்காத தில் ஜவ்ஷான் தனது குதிரைப்படையை ஏவி விட்டு ஹுசைனாரின் அணியின் மீது கடும் தாக்குதலைத்
தொடுத்தான்.சரமாரியாக தொடுக்கப்பட்ட அம்புகள் பாய்ந்துவர, ஹுசைனைச் சேர்ந்தவர்கள் பலர் பரிதாபமாகப் பலியானார்கள்.

ஹுசைனின் மிகச் சிறந்த வீரர்களான முஸ்லிம் பின் அவ்சஜா உமைருல் கல்பீ, அவரது மனைவி ஹபீப் பின் மஷ்ஹர், ஹூர் பின் யஜீது, சுஹைர் பின் கைன் போன்றோர் மிகுந்த வீரத்துடன் போரிட்டு யஜீதின் படை வீரர்கள் பலரை கொன்று போட்டனர். என்றாலும் மலைபோல் திரண்டு நின்ற யஜீதுப் படைத் தாக்குதலை தாக்குப் பிடிக்க முடியாமல் ஒருவர் பின் ஒருவராக வீர மரணமடைந்தனர்.
நிராயுத பாணியாக நின்று கொண்டிருந்த ஹுசைனை கைது செய்து யஜீதிடம் கொண்டு செல்ல யாரும் முன் வரவில்லை. மாறாக , அவரை கொலை செய்வதிலேயே எதிரிகள் குறியாக இருந்தார்கள்...

கண்கள் குளமாகி நெஞ்சம் ரணமாகி....
**********************
........முஹர்ரம் மாதத்தின் பத்தாம் பிறை வெள்ளிக்கிழமை நண்பகல். கடுமையான சூரிய மழையில் நனைந்து
வியர்வை வெள்ளத்தை வடித்துக்கொண்டிருந்தது
இமாம் ஹுசைனின் உடல்.

தாங்கிக்கொள்ள முடியாத உயிரிழப்புகள் எல்லாம் கண்முன்னால்
நிகழ்ந்துவிட்ட கொடூரத்தை எண்ணி
கண்களிலிருந்து கண்ணீரும்
எதிரிகளின் அம்புகள் பாய்ந்த
புண்களிலிருந்து செந்நீரும்
வழிந்து கொண்டிருந்த இமாம் ஹுசைனின்
தலையின்மீது வாளால் வெட்டினான் -
நரகத்திற்கு செல்ல ஆசைப்பட்ட
மாலிக் பின் சபர் என்பவன்.

இமாம் ஹுசைனின் உச்சந்தலையில் ஆழமாக இறங்கியது வாள்.
கொப்பளித்து வந்த ரத்தத்தில்
ஹுசைனின் முகம் ஒழுவெடுத்துக் கொண்டிருந்தது.
உடலெங்கும்
எதிரிகள் வீசிய நூற்றுக்கணக்கான அம்புகள்...
பாய்ந்து வழிந்த ரத்தத்தில் ஹுசைனின் பூவுடல்
குளியல் நடத்திக்கொண்டிருந்தது.

"கொல்லுங்கள் ஹுசைனை" -
குரைத்து, குரைத்து கூப்பாடு போட்டான் வெறியன் ஷிம்ரு.

யஜீதின் படையினர் வேட்டை நாய்களைப்போல இமாம் ஹுசைனின் மீது பாய்ந்து தாக்க ஆரம்பித்தனர்.
ஒரு அம்பு ஹுசைனின் கழுத்தில் பாய்ந்தது.
சிரமப்பட்டு அதனைத் தூக்கி எறிந்தார் ஹுசைன்.

ஜுராப் பின் ஷரீக் தமீமி என்ற தீப்பிடித்தவன் தனது வாளால் ஹுசைனின் வலது
கரத்தை வெட்டினான்.கழுத்திலும் தாக்கினான்.

மாநபி(ஸல்) அவர்களின் மடியில் வளர்ந்த செம்மல்,மரணத்தின் வேதனையோடு மண்ணில்
மல்லாந்து விழுந்தபோது,மாவீரர் மார்பில் வேகத்தோடு வந்து ஈட்டியால் குத்திக் கிழித்தான் சினான் பின் நஜமீ என்ற ஈனன்.

குற்றுயிரும் கொலையுயிருமாக துடித்துக்கொண்டிருந்த பாத்திமா(ரலி) பெற்றெடுத்த பிள்ளை ஹுசைனின்
கழுத்தை, நரியைபோல் நெருங்கிவந்த நாசக்காரன் ஷிம்ரு தனது வாளால் அறுத்தெடுத்து அநியாயத்தின்
உச்சக்கட்டத்தை அரங்கேற்றம் செய்தான்.

மனித உருவத்திலிருந்த யஜீதின் ராணுவ மிருகங்கள் ஹுசைனின் ஆடைகளையெல்லாம் உரிந்து போட்டார்கள்.

பதவி வெறிபிடித்த சஅது பத்து குதிரைப்படை வீரர்களை அனுப்பி தலை அறுக்கப்பட்ட ஹுசைனின் உடல்மீது குதிரைகளை ஏற்றி சிதைக்கச் செய்தான்.

இமாம் ஹுசைனின் அறுத்தெடுக்கப்பட்ட தலையோடு அவரது குடும்பத்துப் பெண்கள் அனைவரும் கூபா ஆளுநர் இப்னு ஜியாதின் முன் இழுத்துச் செல்லப்பட்டனர்.

கீழ்பிறப்பினும் இழிபிறப்பான இப்னு ஜியாத், இமாம் ஹுசைனின் துண்டிக்கப்பட்ட தலையை பார்த்துப் பார்த்து ரசித்தான்.
தட்டின்மீது வைக்கப்பட்டிருந்த ஹுசைனின் இதழ்களை," இதில்தான் நபிகள் முத்தமிட்டார்களா?" எனக்கேட்டுக்கொண்டே தன் கையிலிருந்த பிரம்பால் அடித்து அவமானப்படுத்தினான்.

இதயமே இல்லாத அந்த ஓநாயின் செயலால் ஆத்திரப்பட்ட ஜைத் பின் அர்கம் என்ற பெரியவரை துன்புறுத்தினான்.அப்துல்லாஹ் இப்னு ஹபீப் அஸ்தி என்பவரை கொன்று போட்டான்.

கர்பலா போர் முடிந்து பலநாட்கள்வரை இமாம் ஹுசைனின் உடலையும் அவரைச் சேர்ந்தவர்களது உடலையும் யாரும் அடக்கம் செய்யவில்லை.சில தினங்கள் கழிந்தபிறகே பக்கத்து கிராம மக்கள் ஒன்று சேர்ந்து அந்த உடல்களை நல்லடக்கம் செய்தனர்.

கைதிகளாகி நின்ற பெருமானார் வீட்டுப்பெண்களிடம் இப்னு ஜியாத் மிகக்கேவலமாக நடந்துகொண்டான். சிறுவர் ஜைனுல் ஆப்தீனையும் கொல்லத்துடித்தான். (ஜைனுல் ஆப்தீன்,இமாம் ஹுசைனின் உயிர் தப்பிய ஒரே மகன்.) பின்னர் மனம் மாறி அவர்கள் அனைவரையும் யஜீதிடம் அனுப்பி வைத்தான்.

இமாம் ஹுசைனின் துண்டிக்கப்பட்ட
தலையை ஈட்டியில் சொருகி ஜுகர் பின் கைஸ் என்பவனிடம் கொடுத்து டமாஸ்கசிலிருந்த யஜீதுக்கு அனுப்பி வைத்தான்.

ஈட்டியில் சொருவப்பட்ட இமாம் ஹுசைனின் தலை கூபா வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு
யஜீதுக்கு அனுப்பப்பட்டது.யஜீதின் அரண்மனை வாயிலில் பொதுமக்கள் பார்வைக்காக ஹுசைனின் தலை காட்சிப் பொருளாக்கப்பட்டது.

000000000000000000000

கர்பலா - அது போர்க்களமல்ல! நபிகள்(ஸல்)அவர்களின் வழித்தோன்றல்களை கொன்றுபோட்ட கொலைக்களம்.
முஆவியாவின் மகன் யஜீதின் அடக்குமுறைக்கும் ஆசைகாட்டலுக்கும் அடிபணிந்து அண்ணல்நபி (ஸல்)
அவர்களின் குடும்பத்தாரை நம்பவைத்து,நம்பிக்கை துரோகம் செய்து,நயவஞ்சகமாக,கொடூரமாக,படுகொலை செய்த
கூபாவாசிகளும் ஈராக் மக்களும் நிம்மதியாக வாழ முடியவில்லை - இன்றுவரை!
அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன். அவனுக்கே எல்லாப்புகழும்!
......- அபூஹாஷிமா எழுதிய "உத்தம நபிகளின் உண்மைத் தோழர்கள் " என்ற நூலிலிருந்து... 

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

சட்டமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து – நெய்வேலி அனல் மின் நிலையம் உருவாக காரணமானவர் காயிதெ மில்லத் !

தமிழ்நாட்டில் எத்தனையோ மகத்தான தலைவர்கள் உருவானார்கள். ஆனால், அவர்களில் கண்ணியமிகு காயிதெ மில்லத் இஸ்மாயில் சாஹிப் அவர்களைப் போல் தீர்க்கதரிசனத்துடன் அரசியல் அரங்கில் வலம் வந்தவர்கள் ஒருசிலர் தான்.
  ஒரு தலைவன் என்பவனின் அடையாளம் காலங்களைக் கடந்த பின்னும் சிந்தனையில் உருவான ஒரு கருத்தின் செயல்களால் அதன் பயன்களால் தன் கருத்தை நிலை பெற்றிருக்கச் செய்வதுதான்.
  தன் கருத்தால் தமிழ்நாட்டின் மூலை, முடுக்கு, குக்கிராமம், தொழிற்சாலை, அலுவலகம் என எல்லா இடத்திலும் ஒளியாய் ஒளிர்ந்து நிற்பவர் கண்ணியமிக்கத் தலைவர் ஒருவர்தான்.
  மின்சாரம் இன்றைக்கு அரசுகளின் வளர்ச்சிக்கு உதவும் பெரியதொரு விஷயம். ஒன்றுபட்ட மாகாணமாக இருந்தபோதே அனைவருக்குமாக மின்சாரத் தேவைக்காக தொழிற்துறை வளர்ச்சிக்காக சுரங்கத் தொழில் வளர்ச்சிக்காக ஓங்கிக் குரலெழுப்பியவர் ஒரே ஒருவர் தான். இதைச் சொல்வதற்கு காரணம் உண்டு. இன்றைக்கு மாநிலத்தை ஆளும் தி.மு.க. என்ற கட்சியே உருவாகாத காலத்தில் 1948 ல் மாகாண சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்.
  கட்சியின் தலைவர் என்ற பொறுப்பில் காயிதெ மில்லத் அவர்கள் விளங்கியபோது 1948 மார்ச் மாதம் 22 ம் தேதி சென்னை மாகாண சட்டமன்றத்தில் அன்றைய தொழில் அமைச்சராக கோபால் ரெட்டி அவர்கள் இருந்தபோது கவன ஈர்ப்புத் தீர்மானமான எதிர்க்கட்சித் தலைவரான காயிதெமில்லத் அவர்கள் மாகாணத்தை தொழில்மயப்படுத்த அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. தென்னாற்காடு நெய்வேலியில் நிலக்கரி இருப்பதாக நான் கூறிய பின்னரும் அரசு அது தொடர்பாக என்ன ஆய்வு செய்தது.
  நெய்வேலியில் ஐம்பது டன் லிக்னைட் பூமிக்கடியில் உள்ளது. இதை எடுத்த மாகாண தொழில் வளத்திற்கு பயன்படுத்த அரசு என்ன முயற்சி மேற்கொண்டது? பீஹாரிலுள்ள தான்பாத்தில் சுரங்கம் தொடர்பாக கற்பிப்பிக்கிறார்கள். அங்கு செல்லும் நம் மாணவர்களுக்கு அரசு தர உத்தேசித்துள்ள கல்வி உதவித்தொகை போதுமானதல்ல.
  எனப் பல்வேறு விஷயங்களையும் கூறி பேசுகிறார். அதே ஆண்டு ஆகஸ்டு மாதம் அரசியல் நிர்ணய அவைக்கு தேர்வாகி சென்று விடுகிறார்.
  அந்த ஆண்டு ஒரு சோதனை மிக்க ஆண்டு மட்டுமல்ல. ஒரு சுமையான ஆண்டும் கூட என்றும் சொல்லலாம்.
  1948 காந்தியார் படுகொலை - ஜனவரி
  முஸ்லிம் நேஷனல் கார்டு என்கிற தொண்டர் படை கலைப்பு –பிப்ரவரி
  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடக்கம் – மார்ச்
  அரசியல் நிர்ணய சபையில் பணி – ஆகஸ்ட்
  ஜின்னா சாஹிப் மறைவு – செப்டம்பர்
  ஆயினும் மீண்டும் 1949 ம் ஆண்டு தனக்கு கிடைத்த சென்னை மாகாண சட்டமன்றத்தில் உரை நிகழ்த்தும் வாய்ப்பில் 4.3.1949 மீண்டும் நெய்வேலிக்கு நிலக்கரி தொடர்பாக வினவுகிறார்.
  இவரின் வற்புறுத்தலால் நில ஆய்வு அதிகாரிகள் வேண்டா வெறுப்பாக ஆய்வு செய்து குறைந்த மதிப்பீட்டில் நிலக்கரி இருப்பதாக தகவல் தருகின்றனர்.
  அதே மாதம் 22 ம் தேதி சபையில் மீண்டும் நெய்வேலி தொடர்பாக வினாவை எழுப்பி ஏற்கனவே ஆய்வு செய்த அதிகாரிகள் கூறுவது தவறு. அங்கு அதிக அளவில் லிக்னைட் கனிமவளம் இருப்பதாக வேறு இருவரின் அறிக்கையை அவையில் வைத்து வாதாடுகிறார். அரசு நினைப்பதை விட அங்கு அதிக அளவு நிலக்கரி படிவம் உள்ளது என்கிறார்.
  தொழில் அமைச்சரான கோபால் ரெட்டி காயிதெ மில்லத் அவர்களை புத்திசாலித்தனமாக மடக்குவதாக நினைத்து கனம் உறுப்பினர்க்கு அங்கு அதிகளவு நிலக்கரி படிவம் உள்ளது எப்படி தெரியும் எனக் கேட்கிறார்.
  சற்றும் அசராமல் “எனக்கு இந்தத் துறையில் நீண்ட அனுபவம் உண்டு. அந்த இலாக்காவுடன் தொடர்புண்டு. எனவே, என் கருத்தில் தவறுள்ளது என அரசு நிருபிக்க முன் வருமா? அரசு கூறும் உத்தேச அளவை விட அங்கு புதைந்துள்ள கனிமவளம் அதிகம்” என்கிறார்.
  மீண்டும் 23 ம் தேதி அதே மாதத்தில் அதே ஆண்டில் நெய்வேலி குறித்தும் அதை வெட்டி எடுத்து தொழிற்துறை வளர்ச்சிக்காக அரசை வற்புறுத்தி, வலியுறுத்தி பேசுகிறார்.
  புதிதாக விடுதலை பெற்ற அரசும் மாகாண அரசுகளும் தொழில் வளர்ச்சி விஷயத்தில் மெத்தனமாக இருப்பதை அவ்வப்போது சுட்டிக் காட்டும் நிலையில் 1950 அதே மார்ச் மாதம் 23 ம் நாள் அரசின் நிதி நிலை அறிக்கை மீது கருத்துக் கூறும்போது மீண்டும் நெய்வேலி குறித்து பேசுகிறார்.
  அவர் ஒவ்வொரு தொழில்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின் போதும் தொடர்ந்து 1948 முதல் 49,50,51 ஆண்டுகளில் நெய்வேலி தொடர்பாக பேசும்போதெல்லாம் கேலியாகப் பார்ப்பதும் தேவையற்ற ஒன்றை அவர் பேசுவதாகவும் பலரும் கருதினார்கள். இதை அவரே 28.3.1950 ஆண்டில் கூறியுள்ளார்.
  நாட்டின் மாகாணங்களில் முதல் ஐந்தாண்டு திட்டம் அமுலான போது அந்தத் திட்டத்திலும் நெய்வேலி தொடர்பாக அரசு கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.
  23.10.1951 ம் ஆண்டு முதல் ஐந்தாண்டு திட்டத்தில் தான் கூறும் நெய்வேலித் திட்டம் இல்லாததை சுட்டிக் காட்டிப் பேசுகிறார்.
  1952 ம் ராஜ்ய சபைக்கு தேர்வு பெற்று சென்று விடுகிறார். எனினும், தமிழகத்திற்கு அன்றைய சென்னை மாகாணத்திற்கு ஒளிவிளக்கேற்றப் போகும் தன் நெய்வேலி திட்டம் தொடர்பாக மட்டும் அவர் கடைசி வரை வலியுறுத்தப் பின்வாங்கவில்லை.
  1952 மே மாதம் 20 ம் நாள் ராஜ்ய சபாவில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசும்போது மறக்காமல் நெய்வேலி நிலக்கரி படிவங்கள் அரசின் ஆய்வை விட நிச்சயம் அதிகமாகக் கிடைக்கும். மாகாண தொழிற்துறை வளர்ச்சிக்காக அரசு உடனடியாக இத்திட்டம் தொடங்க வேண்டும் என வற்புறுத்துகிறார்.
  ஒரு வழியாக ஆய்வுகள் நடக்கின்றன. அங்கு காயிதெ மில்லத் அவர்கள் கூறுவது போல் அதிகளவு படிவம் உண்டு என்ற உண்மைகள் வெளியானதும் ஏற்கனவே ஆய்வு செய்த பலமூத்த அதிகாரிகள் தலையைத் தொங்க விட்டனர். அந்தத் திட்டம் தொடங்க தடையாய் இருந்தவர்கள் வெட்கப்படும் அளவுக்கு ஆய்வு முடிவுகள் கண்ணியத் தலைவருக்கு சாதகமாக வந்தன. அரசு திட்டத்தை தொடங்க முடிவு செய்தது. 
  1956 ல் சுரங்கம் தோண்டும் வேலை தொடங்கியது. 1948,49,50,51,52,53,54,55,56,57 முதலான ஆண்டில் தன்னுடைய மகத்தான போராட்ட குணமிக்க வாதத்தினால் அந்தத் திட்டம் வெற்றிகரமாகத் துவங்கிட வைத்த ஒரே தலைவர் கண்ணியமிக்க காயிதெ மில்லத் அவர்கள்.
  இவரைத் தவிர இத்திட்டத்தின் மீது வேறெவரும் அக்கறை கொள்ளவில்லை. அந்தத்துறையுடன் நீண்ட தொடர்பு கொண்டு முழுமையான தகவல்களை சேகரித்தவாறு அரசுக்கு உந்துதலாக இருந்து நெய்வேலி கனிமவள திட்டம் நிறைவேற முழு முதற் காரணமாணவர் இவர் ஒருவர் தான். இன்றும் இங்கு கனிமம் வெட்டப்படுகிறது. மின் உற்பத்தி செய்யப்படுகிறது. அங்கு பெறப்படும் மின்சார வாரியம் முழுவதும் விநியோகமாகிறது. தமிழகம், கேரளம், ஆந்திரா, கர்நாடகா, புதுவை ஆகிய மாநிலங்களும் நெய்வேலி மின்சாரத்தை நுகர்கின்றன.
  1962 ம் ஆண்டு முழுமையாகத்தன் அனல் மின் உற்பத்தியைத் தொடங்கியது. இங்கு மாநில அரசு ஒவ்வொரு டன் கரிக்கும் ராயல்டி எனும் மதிப்புத் தொகை மத்திய அரசிடம் பெறுகிறது. இதற்குக் காரணம் காயிதெ மில்லட், அங்கு மின்சாரம் உற்பத்தி செய்யக் காரணம் காயிதெ மில்லத், தென்னாற்காட்டிலே நெய்வேலி டவுன்ஷிப் என்ற மாபெரும் தொழில் மையம் உருவாகக் காரணம் காயிதெ மில்லத், மக்கள் தொழில் காரணமாக ஒரு நகர்மன்றத்தில் வாசிக்கக் காரணமானவர் காயிதெ மில்லத்.
  அவர் காலத்தில் அவர் குறிப்பிட்டது போல ஆய்வில் தெரியவந்த போது இருப்பை விடவும் கூடுதலாக இன்னும் நிலக்கரி அதிலும் தரமாக கிடைத்து வருகிறது. இத்தனை அற்புதனமான திட்டத்தை வாதாடி, போராடி கொண்டு வந்த அந்த மாமனிதரின் பெயரை உச்சரிக்கவும், நினைவு படுத்தவும் கூட அங்கு எந்த அடையாளமும் இல்லை. தமிழர்கள் நன்றி உடையவர்கள் தான் என்பதை காலம் கடந்தாவது உணர்த்திட காயிதெ மில்லத் நெய்வேலி லிமிடெட் கார்ப்பரேஷன் என பெயர் மாற்றம் செய்ய தமிழக அரசு உரிய முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும்.
  அமெரிக்காவில் ஒளிவிளக்கை கண்டு பிடித்த தாமஸ் ஆல்வா எடிசனுக்காக சில வினாடி விளக்கை அனைத்து நினைவு கூர்கிறார்கள். ஆனால், அந்த விளக்கு தமிழகத்தில் தென்னகத்தில் எரியவைக்க பாடுபட்ட சமூக அறிவியல் மேதை காயிதெ மில்லத் அவர்களுக்காக நாம் விளக்கை அணைக்க வேண்டாம். குறைந்தபட்சம் அவர் பெயரையாவது சூட்டுவது நன்றியுள்ள செயலாகும். ஏனெனில் அவர் தான் தமிழகத்தின் நிஜமான ஒளிவிளக்கு.
                                            -அறிந்தார்க்கினியன்

நன்றி :
பிறைமேடை
ஜுன் 1-15, 2010