தகவல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தகவல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 21 ஜனவரி, 2015

எப்போதும் ஜெயிக்க 25 டிப்ஸ்:-

1. மாதம் ஒரு புத்தகமாவது படியுங்கள்.
2. ஆரோக்கியம் தராத உணவு வகைகள் எவ்வளவு சுவையாக இருந்தாலும் உண்ணாதீர்கள்.
3. உங்களுக்கு என்ன வயதானாலும் பரவாயில்லை. விருப்பமான துறைகளில் நடக்கும் பயிற்சி வகுப்புகளில் பங்கெடுங்கள்.
4. வருமானத்திற்கான வழி மிகவும் முக்கியம். அதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாதீர்கள்.
5. முடிந்தவரை கடன்களைக் கட்டி விடுங்கள். வேண்டாத செலவுகளை நிறுத்தி விடுங்கள்.
6. விடியும் முன்னால் எழுந்து விடுங்கள். ஒருநாளின் அலுவல்களை முன் கூட்டியே திட்டமிடுங்கள்.
7.முப்பதுகளைக் கடக்கும் முன், மற்றவர்கள் சொல்லாமலே சர்க்கரை, உப்பு ஆகியவற்றை கணிசமாகக் குறைத்து விடுங்கள். முடிந்தால் தவிர்த்து விடுங்கள்.
8. எக்காரணம் கொண்டும் காலை உணவைத் தவிர்க்காதீர்கள்.
9. நிற்கையில் நேராக நில்லுங்கள். பேசுகையில் கண்களைப் பார்த்துப் பேசுங்கள்.
10. புன்னகை முகமும் இதமான பேச்சும் உங்கள் இயல்புகளாகவே இருக்கட்டும்.
11. வாரம் மூன்று முறை யாவது உடற்பயிற்சி செய்யுங்கள். முடிந்த வரை நடந்து செல்லுங்கள்.
12.சிறு குறிப்போ, கடிதமோ, கட்டுரையோ, பிழையில்லாமல் எழுதுவதில் கவனம் செலுத்துங்கள்.
13.ஒருவர் இல்லாதபோது அவருடைய சிறப்பம்சங்களையே பேசுங்கள்.
14. அரட்டைப் பேச்சுக்களையும் அபவாதங்களையும் ஊக்குவிக்காதீர்கள்.
15. மற்றவர்களின் தவறுகளை மன்னி யுங்கள். ஒரு போதும் மறக்காதீர்கள்.
16. உங்கள் வாழ்வின் ரகசிய அம்சங்கள் முடிந்தவரை குறைவாகவே இருக்கட்டும்.
17. குடும்பம் என்கிற எல்லையைக் கடந்து, பொது அமைப்பு எதிலாவது ஈடுபடுங்கள்.
18. மாதம் ஒரு முறையாவது உங்கள் தகுதிகளையும் தவறுகளையும் பட்டியல் இடுங்கள்.
19. மற்றவர்களைப் பேச விடுங்கள். அவர்கள் மேல் உங்களுக்கு இருக்கும் அக்கறையை உணர்த்துங்கள்.
20.உங்கள் நேரத் திற்கும், மற்றவர்கள் நேரத்திற்கும் உரிய மரியாதை கொடுங்கள்.
21. உங்களிடம் இல்லாத தகுதிகள் இருப்பதாக நம்பவோ நம்ப வைக்கவோ முயலாதீர்கள்.
22. உங்கள் திறமைகளை நீங்களே விவரித்துக் கொண்டிரா தீர்கள். உரிய நேரத்தில் நிரூபியுங்கள்.
23. மேடைக் கூச்சம், கேமரா கூச்சம் இல்லாமல் இருங்கள்.
24. தண்ணீரையும் மின்சாரத்தையும் சிக்கனமாகப் பயன்படுத்துவதும் எதிர்காலத்திற்காக சேர்க்கும் சொத்துக்கள்தான்.
25. உங்கள் தனிப்பட்ட நம்பிக்கைகளையும் பழக்கங் களையும் மற்றவர்கள் மேல் திணிக்காதீர்கள்.

வியாழன், 16 அக்டோபர், 2014

ஆய கலைகள் 64

ஆய கலைகள் 64 பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோம் . அவ்வாறு கேள்விப்பட்ட 64 கலைகள் எது எது என்று தெரிந்து கொள்வோம்.
1. எழுத்திலக்கணம் (அக்கரவிலக்கணம்)
2. எழுத்தாற்றல் (லிகிதம்)
3. கணிதம்
4. மறைநூல் (வேதம்)
5. தொன்மம் (புராணம்)
6. இலக்கணம் (வியாகரணம்)
7. நயனூல் (நீதி சாத்திரம்)
8. கணியம் (சோதிட சாத்திரம்)
9. அறநூல் (தரும சாத்திரம்)
10. ஓகநூல் (யோக சாத்திரம்)
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்)
12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்)
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்)
14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்)
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்)
16. மறவனப்பு (இதிகாசம்)
17. வனப்பு
18. அணிநூல் (அலங்காரம்)
19. மதுரமொழிவு (மதுரபாடணம்)
20. நாடகம்
21. நடம்
22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்)
23. யாழ் (வீணை)
24. குழல்
25. மதங்கம் (மிருதங்கம்)
26. தாளம்
27. விற்பயிற்சி (அத்திரவித்தை)
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை)
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை)
30. யானையேற்றம் (கச பரீட்சை)
31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை)
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை)
33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை)
34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்)
35. மல்லம் (மல்ல யுத்தம்)
36. கவர்ச்சி (ஆகருடணம்)
37. ஓட்டுகை (உச்சாடணம்)
38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்)
39. காமநூல் (மதன சாத்திரம்)
40. மயக்குநூல் (மோகனம்)
41. வசியம் (வசீகரணம்)
42. இதளியம் (ரசவாதம்)
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்)
44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்)
45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்)
46. நாடிப்பயிற்சி (தாது வாதம்)
47. கலுழம் (காருடம்)
48. இழப்பறிகை (நட்டம்)
49. மறைத்ததையறிதல் (முஷ்டி)
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்)
51. வான்செலவு (ஆகாய கமனம்)
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்)
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்)
54. மாயச்செய்கை (இந்திரசாலம்)
55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்)
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்)
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்)
58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்)
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்)
60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்)
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்)
62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்)
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்)
64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்)

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014

குழந்தைக்கு சிறுவயதிலேயே கற்றுக்கொடுக்க வேண்டியவைகள்....!!

1. பெண் குழந்தைகள் யாருடைய மடியிலும் அமரக்கூடாது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.
2. 2 அல்லது 3 வயதுக்கு மேல் ஆன குழந்தைகள்
முன்னிலையில் உடை மாற்றிக் கொள்ளுவதைத்
தவிர்க்க வேண்டும்.
3. குழந்தைகளுக்கு யாரும் இது உன்னுடைய கணவன் என்றோ,மனைவியென்றோ குறிப்பிடுவதோ, மனதில்
பதிய வைப்பதோ தவறு.
4. குழந்தை விளையாடப் போகும்போது உங்கள் பார்வை அவர்கள் மீது இருந்து கொண்டே இருக்கட்டும். மேலும்
அவர்கள் என்ன விளையாடுகிறார்கள் என்பதையும்
கவனித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால்
குழந்தைகள் தங்களுக்குள்ளாகவே பாலியல்
துன்புறுத்தல்களுக்கு உள்ளாக நேரிடும்.
5. உங்கள் குழந்தையால் சரியாக பொருந்தியிருக்க முடியாத
நபரை ஒருபோதும் சந்திக்க அனுமதிக்காதீர்கள்
அல்லது அவரிடம் அழைத்துச் செல்லாதீர்கள்.
6. சுறுசுறுப்பாக இருக்கக் கூடிய ஒரு குழந்தை திடீரென்று களையிழந்துவிடும்போது பொறுமையாக அவர்களிடம் பல கேள்விகளைக்கேட்டு அவர்களின் பிரச்சனை என்னவென்று கேட்டறிய வேண்டும்.
7. வளரும் பருவத்திலேயே உடலுறவு மற்றும் அதன் நன்மதிப்பீடுகளை பக்குவமாக கற்பியுங்கள்.
இல்லையென்றால், சமுதாயம் அவர்களுக்கு அதைப் பற்றிய தீய மதிப்பீடுகளைக்கற்றுக் கொடுத்துவிடும்.
8.குழந்தைகளுக்கு தேவையானவற்றை அவர்களுக்கு முன்பாக
நாம் அறிந்து கொண்டு அவர்கள் கேட்பதற்கு முன்பாக நாமே வாங்கிக்கொடுத்துவிட வேண்டும்.
9. தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் இணையதளங்களில் குழந்தைகள் பார்க்க அவசியமற்ற சேனல்களை பேரண்டல் கன்ட்ரோல் மூலம் செயலிழக்கச்செய்துவிட்டோமா என்பதை உறுதிப்படுத்திக்கொள்வது நல்லது. மேலும், குழந்தைகள்
அடிக்கடி செல்லும் நம் நண்பர்களின் வீடுகளிலும் இதை செய்து வைக்க அறிவுருத்துவது நல்லது.
10. 3 மூன்று வயது ஆனவுடனேயே குழந்தைகளுக்கு தங்கள்
உடலின் அந்தரங்கப் பகுதிகளை சுத்தம் செய்ய கற்றுக் கொடுக்க வேண்டும். உடலின் அந்தப்பகுதிகளை பிறர் யாரும்
தொடுவதற்கு அனுமதிக்கக் கூடாது என எச்சரிக்கை செய்து வைக்க வேண்டும். நீங்களும் அந்த வேலையை செய்யக் கூடாது. ஏனென்றால்,அவசியமற்ற உதவிகளை செய்யும்
போக்கு வீட்டிலிருந்துதான் தொடங்குகிறது
11. குழந்தையை அச்சுறுத்தக் கூடிய அல்லது அவர்களின் மனநிலையை பாதிக்கக்கூடியவற்றை முற்றாகத் தவிர்க்கவும். இதில் இசை, படங்கள், நண்பர்கள் மற்றும் குடும்பங்களும்
அடங்கும்.
12. மற்றவர்களுடன் ஒப்பிடும்போது உங்கள் குழந்தையின் தனித்துவத்துத்தை அல்லது தனித்திறமையைப் புரிந்து கொள்ளச் செய்யுங்கள்.
13. குழந்தை ஒருவரைப்பற்றி ஒருமுறை குற்றச்சாற்றைக் கூறினாலே,அதை கவனிக்கத் தொடங்குங்கள்.கேட்டுவிட்டு அமைதியாக இருக்க வேண்டாம்.நீங்கள் அதற்காக நடவடிக்கை எடுத்தீர்கள் என்பதை குழந்தைக்கு உணரச் செய்யுங்கள்.
மேலே சொன்னது யாவும் ஞாபகம் இருக்கட்டும்;அது நாம் பெற்றோராக இருந்தாலும் சரி அல்லது பெற்றோராகப் போகிறவராக இருந்தாலும் சரி!

திங்கள், 10 மார்ச், 2014

உளவியல் சொல்லும் உண்மைகள்

1. அதிகம் சிரிப்பவர்கள் அதிகம் தனிமையில் வாடுபவர்கள். 
2. அதிகம் தூங்குபவர்கள், சோகத்தில் இருப்பவர்கள். 
3. வேகமாக அதே நேரம் குறைவாக பேசுபவர்கள், அதிகமாக ரகசியங்களை வைத்திருப்பவர்கள்.
4. அழுகையை அடக்குபவர்கள் மனதால் பலவீனமானவர்கள்.
5. முரட்டுத்தனமாக உண்பவர்கள் மன அழுத்தத்தில் இருப்பவர்கள். 
6. சின்ன சின்ன விஷயங்களுக்கும் அழுபவர்கள் அப்பாவிகள். மனத்தால் மென்மையானவர்கள். 
7. சின்ன சின்ன விஷயங்களுக்கும் கோபப்படுபவர்கள் அன்புக்காக ஏங்குபவர்கள்.

நன்றி: ஆஷிக் முஹைதீன் முஹம்மத் அபூபக்கர்.

வெள்ளி, 3 மே, 2013

மச்சங்களின் பலன் தெரியுமா

உடல் உறுப்புக்களில் ஆங்காங்கே பரவிக்கிடக்கும் மச்சங்களின் பலன் தெரியுமா உங்களுக்கு….?

நெற்றி நடுவே – புகழ், பதவி, அந்தஸ்து

நெற்றி வலதுபுறம் – தைரியம், பணிவு இல்லாத போக்கு

நெற்றி இடதுபுறம் – அற்ப குணம், டென்ஷன், முன்கோபி

மூக்கின் மேல் – செயல்திறன், பொறுமைசாலி

மூக்கின் இடதுபுறம் – கூடா நட்பு, பெண்களால் அவமானம்

மூக்கின் நுனி – வசதியான வாழக்கை, திடீர் ஏற்றங்கள்

மேல், கீழ் உதடுகள் – ஒழுக்கம், உயர்ந்த குணம்

மேல் வாய் பகுதி – அமைதி, அன்பான கணவர்

இடது கன்னம் – வசீகரம், விரும்பியதை அடையும் போக்கு

வலது கன்னம் – படபடப்பு, ஏற்ற, இறக்கமான நிலை

வலது கழுத்து – பிள்ளைகளால் யோகம்

நாக்கு – வாக்கு பலிதம், கலைஞானம்

கண்கள் – கஷ்ட நஷ்டம், ஏற்றம், இறக்கம்

இடது தோள் – சொத்து சேர்க்கை, தயாள குணம்

தலை – பேராசை, பொறாமை குணம்

தொப்புளுக்கு மேல் – யோகமான வாழ்க்கை

தொப்புளுக்கு கீழ் – மன அமைதியின்மை, பொருள் நஷ்டம்

தொப்புள் – ஆடம்பரம், படாடோபம்

வயிறு – நல்ல குணம், நிறைவான வாழ்க்கை

அடிவயிறு – ராஜயோக அம்சம், உயர்பதவிகள்

இடது தொடை – தடுமாற்றம், ஏற்ற இறக்கங்கள்

வலது தொடை – ஆணவம், எடுத்தெறிந்து பேசுதல், தற்பெருமை

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

நன்றி :
உலகம் சுற்றும் பறவை நான்

புதன், 8 ஆகஸ்ட், 2012

"பழந்தமிழர் அளவைகள்"



ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லிட்டர்.
ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லிட்டர்.
ஒரு கலம் = அறுபத்து நாலரை லிட்டர்.
ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லிட்டர்.
ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு.
ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லிட்டர்.
ஒரு பாலாடை = முப்பது மில்லி லிட்டர்.
ஒரு குப்பி = எழுநூற்றுமில்லி லிட்டர்.
ஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம்.

முன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு.
ஐந்து சோடு = ஒரு ஆழாக்கு.
இரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு.
இரண்டு உழக்கு = ஒரு உரி.
இரண்டு உரி = ஒரு நாழி.
எட்டு நாழி = ஒரு குறுணி.
இரண்டு குறுணி = ஒரு பதக்கு.
இரண்டு பதக்கு = ஒரு தூணி.
மூன்று தூணி = ஒரு கலம்.

நிறுத்தல் அளவைகள்

மூன்றே முக்கால் குன்றி மணி எடை = ஒரு பனவெடை.
முப்பத்தி ரெண்டு குன்றி மணி எடை = ஒரு விராகன் எடை.
பத்து விராகன் எடை = ஒரு பலம்.
இரண்டு குன்றி மணி எடை = ஒரு உளுந்து எடை.
ஒரு ரூபாய் எடை = ஒரு தோலா.
மூன்று தோலா = ஒரு பலம்.
எட்டு பலம் = ஒரு சேர்.
நாற்பது பலம் = ஒரு வீசை.
ஐம்பது பலம் = ஒரு தூக்கு.
இரண்டு தூக்கு = ஒரு துலாம்.

ஒரு குன்றி எடை = நூற்றி முப்பது மில்லி கிராம்.
ஒரு பனவெடை = நானூற்றி எண்பத்தெட்டு மில்லி கிராம்.
ஒருதோலா = அண்ணளவாக பன்னிரண்டு கிராம் (துல்லியமாக 11.7 கிராம்)
ஒரு பலம் = முப்பத்தி ஐந்து கிராம்.
ஒரு வீசை = ஆயிரத்தி நானூறு கிராம்.
ஒரு விராகன் = நான்கு கிராம்.

கால அளவுகள்

இருபத்தி நான்கு நிமிடங்கள் = ஒரு நாழிகை.
இரண்டரை நாழிகை = ஒரு மணி.
மூன்றே முக்கால் நாழிகை = ஒரு முகூர்த்தம்.
அறுபது நாழிகை = ஒரு நாள்.
ஏழரை நாழிகை = ஒரு சாமம்.
ஒரு சாமம் = மூன்று மணி.
எட்டு சாமம் = ஒரு நாள்.
நான்கு சாமம் = ஒரு பொழுது.
இரண்டு பொழுது = ஒரு நாள்.
பதினைந்து நாள் = ஒரு பக்கம்.
இரண்டு பக்கம் = ஒரு மாதம்.
ஆறு மாதம் = ஒரு அயனம்.
இரண்டு அயனம் = ஒரு ஆண்டு.
அறுபது ஆண்டு = ஒரு வட்டம்.

புதன், 11 ஜூலை, 2012

பழங்கால பழமொழிகள்

பழங்கால பழமொழிகள் இன்றும் நடை முறையில் !!!

அகத்தினழகு முகத்தில் தெரியும்.
அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்.
அடியாத மாடு படியாது.
அடியைப் போல அண்ணன் தம்பி உதவாது.
அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.
அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்.
அழுதாலும் பிள்ளை அவள்தானே பெறவேண்டும்.
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.
அற்பருக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பர்.

அற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன.
அறுக்க முடியாதவ இடுப்புல ஆயிறத்தெட்டு அறிவாள்.
ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்.
ஆடத் தெரியாதவள் மேடை பிழையென்றாளாம்.
ஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும்.
ஆடுற மாட்டை ஆடிக் கற, பாடுற மாட்டைப் பாடிக் கற.
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.
ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.
ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.
ஆழம் தெரியாமல் காலை விடாதே.
 
ஆற்றிலே கரைத்தாலும் அளந்து கரை.
ஆறிலும் சாவு நூறிலும் சாவு.
ஆனைக்கும் அடிசறுக்கும்.
இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்.
இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.
உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.
உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா?
எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம்.
எறும்பூரக் கல்லும் தேயும்.
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.
 
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
கடுகு சிறிதானாலும் காரம் பெரிது.
கண்களை விற்றுச் சித்திரம் வாங்குதல் போல்.
கரும்பு தின்னக் கைக்கூலி வேண்டுமா?
கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்.
கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பது போல.
கழுதை அறியுமா கற்பூர வாசனை?
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.
காகம் இருக்கப் பனம்பழம் விழுந்தது போல்.
காகம் திட்டி மாடு சாகாது.
 
காய்த்த மரம்தான் கல்லடிபடும்.
காவோலை விழக் குருத்தோலை சிரிப்பது போல்.
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.
கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன்?
குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு.
குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல்.
குரைக்கிற நாய் கடிக்காது.
கெட்டாலும் செட்டி கிழிந்தாலும் பட்டு.
கொல்லன் தெருவில் ஊசி விற்பதுபோல்.
கோழி மிதித்துக் குஞ்சு சாகாது.
 
கைப் புண்ணுக்குக் கண்ணாடி வேண்டாம்.
சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போல.
சிறு பிள்ளை வேளாண்மை விளைஞ்சும் வீடு வந்து சேராது.
சுவரிருந்தால்தான் சித்திரம் வரையலாம்.
தடியெடுத்தவன் தண்டக்காரன்.
தம்பியுள்ளான் படைக்கஞ்சான்.
தன் வினை தன்னைச் சுடும்.
தனிமரம் தோப்பாகாது.
தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு.
தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை.
 
தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன.
நடுக்கடலுக்குப் போனாலும் நாய்க்கு நக்குத் தண்ணீர்தான்.
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு நல்ல பெண்டாட்டிக்கு ஒரு வார்த்தை.
நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்.
நிறைகுடம் தளும்பாது.
பசி வந்தால் பத்தும் பறந்திடும்.
பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும்.
பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.
பனை மரத்தடியில் பால் குடித்தது போல.
பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்.

பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுவது போல்.
புலி பசித்தாலும் புல்லுத் தின்னாது.
பூவோடு சேர்ந்த நாரும் மணம் வீசும்.
பொறுத்தார் அரசாள்வார் பொங்கினார் காடாள்வார்.
போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.
மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம்.
மின்னுவதெல்லாம் பொன்னல்ல.
முடக் குதிரைக்குச் சறுக்கினது சாட்டு.
 
முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போல.
முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும்.
மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல்.
யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்.
யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.
விரலுக்குத் தக்கதே வீக்கம்.
விளையும் பயிரை முளையிலே தெரியும்.
வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்.
வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்.
வெளுத்ததெல்லாம் பாலல்ல.
 
பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்.
பூவிற்றகாசு மணக்குமா?
பூனைக்கு கொண்டாட்டம், எலிக்குத் திண்டாட்டம்.
பேராசை பெருநட்டம்.
பூ மலர்ந்து கெட்டது வாய் விரிந்து கெட்டது

வேலிக்கு ஓணான் சாட்சி.

ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம் இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம்.

கணக்கறிந்த பிள்ளையிருந்தால் வீட்டில் வழக்குக்குக் குறைவில்லை.

சாட்சிக்காரனின் காலில் விழுவதிலும் சண்டைக்காரனின் காலில் விழுவது மேல்

தினை விதைத்தவன் தினையறுப்பான் வினை விதைத்தவன் வினையறுப்பான்.

சொல்லிக் கொடுத்த புத்தியும் கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாளுக்குக் கூட வரும்?

ஞாயிறு, 1 ஜூலை, 2012

வீட்டில் பூச்சித்தொல்லையா

வீட்டில் நாம் குடியிருக்கிறோமோ, இல்லையோ, ஆனால் பூச்சிகள் மட்டும் ஆட்டம் பாட்டத்தோடு சந்தோஷமாக நன்கு வீட்டை உலாவிக் கொண்டிருக்கிறது. அதில் பெரும்பாலும் வருவது எறும்பு, பல்லி, கரப்பான்பூச்சி, கொசு போன்றவையே. அத்தகையவை வீட்டில் இருப்பதால் பெரும் தலைவலி ஏற்படுவதோடு, உண்ணும் உணவுப் பொருட்களில் ஏறி உண்டு, உடலுக்கு பல நோய்களை வர வைக்கின்றன. மேலும் அவற்றை அகற்ற வேண்டும் என்று எண்ணி, அதனை அழிக்க பூச்சி மருந்துகளை வாங்கி அடித்தால், நாம் வீட்டிலேயே இருக்க முடியாத அளவு மருந்து நாற்றமானது இருக்கிறது. இத்தகைய நாற்றத்தை தவிர்க்கவும், பூச்சிகள் வராமல் இருக்கவும் ஒரு சில டிப்ஸ் இருக்கிறது.

1. எறும்புத் தொல்லையை நீக்க...

வீட்டில் கிச்சனில் இருக்கும் சர்க்கரை, சாக்லேட் மற்றும் கழுவ போட்டிருக்கும் டீ கப்பில் எறும்புகளாக இருக்கிறதா? ஏனெனில் எறும்புகளுக்கு இனிப்புகள் மற்றும் மிச்சம் வைத்திருக்கும் பொருட்கள் என்றால் மிகவும் பிடிக்கும். சொல்லப்போனால் அதுவே அதன் சொர்க்கம், உணவு என்றும் கூட சொல்லலாம். அத்தகைய உணவுப் பொருட்களை வெளியிலேயே வைத்தால் போதும், பின் வீடே எறும்பு மயமாகிவிடும். இத்தகைய எறும்பை வராமல் தடுக்க, வீட்டில் இருக்கும் கிச்சனை தினமும் படுக்கும் முன் சுத்தம் செய்து விட்டு தூங்க செல்ல வேண்டும். அவ்வாறு செய்தும் எறும்புத் தொல்லை நீங்கவில்லை என்றால், மாதத்திற்கு ஒரு முறை கிச்சன் முழுவதையும் மண்ணெண்ணெய் வைத்து துடைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் எங்கும் எறும்பு வருவதை தடுக்கலாம்.

2. பல்லி வராமல் தடுக்க...

வீட்டில் எந்த சுவற்றைப் பார்த்தாலும் ஒரு பல்லியாவது இல்லாமல் இருக்காது. அதற்கு நிறைய பேர் முட்டையின் ஓட்டை வீட்டின் மூலைகளில் வைத்தால் பல்லியானது வராது என்று நம்புகின்றனர். உண்மையில் அப்படி வைத்தால் வராது தான், ஏனெனில் அதில் இருந்து வரும் நாற்றத்தினால் பல்லியானது வராமல் தடுக்கலாம்.

3. கொசுக்களை அழிக்க...

கரப்பான்பூச்சிகள் மற்றும் எறும்புகள் உணவைத் தான் உண்ணுகின்றன. ஆனால் கொசுக்களானது நமது உடலில் உள்ள இரத்தத்தை உறிஞ்சி குடிக்கின்றன. பெரும்பாலும் கரப்பான்பூச்சிகள் மற்றும் எறும்புகள் வராமல் கூட கட்டுப்படுத்திவிட முடியும். ஆனால் கொசுக்கள் வராமல் இருப்பதை கட்டுப்படுத்துவது என்பது மிகவும் கடினமான ஒன்று. இதற்காக நிறைய வீட்டுப் பொருட்கள், அதனை அழிக்க இருக்கின்றன. அவை,

- கற்பூரம் மற்றும் மண்ணெண்ணெயை கலந்து கொள்ள வேண்டும். அந்த கலவையை மின்சாரத்தில் இயங்கும் மெசினான ஆல்-அவுட், குட் நைட் பாட்டிலில் ஊற்றி பிளக்கில் மாற்றிவிட வேண்டும். இதனால் கொசுவை வராமல் தடுக்கலாம்.

- தேங்காய் ஓட்டை எரிக்கும் போது வரும் புகையால் கூட கொசுவை வராமல் தடுக்கலாம்.

4. கற்பூரத்தால் பூச்சிகளை தடுக்கலாம்...

கற்பூரமானது ஒரு சிறந்த பூச்சிக் கொல்லிப் பொருள் என்று சொல்லலாம். ஏனெனில் இதில் சல்பர் இருப்பதால், பூச்சிகள் அதன் வாசனையில் இறந்துவிடும். மேலும் கற்பூரமானது ஒரு ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-ஃபங்கல் நிறைந்த பொருள். கொஞ்சம் கற்பூரத்தை எடுத்துக் கொண்டு, அதனை ஏற்றி வீடு முழுவதும் சுற்றி வந்தால், அந்த நாற்றத்திற்கு வீட்டில் இருக்கும் சிறிய பூச்சிகள் அனைத்தும் இறந்துவிடும்.

ஞாயிறு, 11 மார்ச், 2012

பூட்டு உருவான விதம்....

ஆயிரக்கணக்கான வருடங்களாக பூட்டு உபயோகத்தில் இருக்கின்றது. ஆனால், இப்பொழுது நாம் பயன்படுத்தும் பூட்டை 150 வருடங்களுக்கு முன்னர் தான் கண்டுபிடித்தனர். 1817ஆம் ஆண்டு யாராலும் திறக்க முடியாத பூட்டை வடிவமைப்பவருக்கு பரிசு வழங்கப்படும் என்று பிரிட்டிஷ் அரசு அறிவித்தது. இதைக் கேள்விப்பட்ட ஜெரிமயா சப் என்பவர் அது மாதிரி ஒரு பூட்டை உருவாக்கினார். 

பூட்டை உடைத்துத் திருடி சிறையில் இருக்கின்ற ஒரு திருடனைக் கொண்டு அந்தப் பூட்டை உடைத்துத் திறந்து விட்டால் அவனுக்கு விடுதலை வழங்கப்படும் என்று சொன்னார்கள். ஆனால், பத்து நாட்களுக்கு மேல் முயற்சி செய்தும் அவனால் பூட்டை உடைக்க முடியவில்லை. அவனால் மட்டுமல்ல, இதுவரைக்கும் யாராலும் அந்தப் பூட்டை உடைத்துத் திறக்க முடியவில்லை. இருந்தாலும் இது போன்ற பூட்டுக்களை யாரும் பயன்படுத்தவில்லை. காரணம் ஒருவேளை திறப்பு தொலைந்து விட்டால் எப்படித் திறப்பது என்ற பயம் தான்.

நாம் தற்போது பயன்படுத்தும் பூட்டைக் கண்டுபிடித்தவர் அமெரிக்காவைச் சேர்ந்த லினஸ் யேல். 1861ஆம் ஆண்டிலிருந்து இவர் கண்டுபிடித்த பூட்டு மாதிரியைத் தான் இதுவரைக்கும் நாம் உபயோகப்படுத்தி வருகின்றோம்.