இஸ்லாம் - நோன்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இஸ்லாம் - நோன்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 29 ஆகஸ்ட், 2013

ரமளானின் மகிமை

( தொகுப்பு : மவ்லவி அப்துல் காதர் ரஷாதி, புளியங்குடி )
  
  புனிதமிகு ரமளான் மாதம் முஸ்லிம்களின் பரக்கத் என்னும் ரஹ்மத்துடைய அளப்பெரும் பொக்கிஷமாகும்.
  ரமளான் மாதத்தின் முதல் இரவில் ஷைத்தான்களை விலங்கிடப்படுகிறதுநரகத்தின் தாழிட்டு சுவர்க்கம் என்னும் ரஹ்மத்தின் வாசல்களை திறந்து விடப்படுகிறது.
  இப்புனிதமிகு மாதத்தின் மிகமுக்கிய வணக்கம் நோன்பாகும்நோன்பு என்றால் சுபுஹுஸாதிக் (மெய் வெள்ளைஅதிகாலையிலிருந்து சூரியன் மறையும் வரை நோன்பின் நிய்யத்துடன் உண்ணுவதுகுடிப்பதுமனோ இச்சை சேர்க்கை செய்வது ஆகியவற்றிலிருந்து தவிர்த்து கொள்வதாகும்.
  நோன்பு சம்பந்தமான ஹதீஸுகளில் நோன்பிருப்பதால் ஏற்படக்கூடிய பலாபலன்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளனஎடுத்துக்காட்டாக:
’’அல்லாஹ்வுக்காக நோன்பு நோற்போரின் முந்தைய பாவங்களனைத்தையும் அல்லாஹ் மன்னித்து விடுகிறான்’’
’’நோன்பாளியின் வாயிலிருந்து வெளியாகும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரி மணத்தை விடவும் அதிகம் மதிப்புள்ளதாகும்’’
’’நோன்பிருப்போருக்கு அல்லாஹ்வே தனது புறத்திலிருந்து நன்மையை அளிக்கிறான்’’
’’ சுவனலோகத்தில் ‘ரய்யான்’ என்னும் வாசல்வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள்’’
  நோன்பில்லாதவர்களுக்கு உண்டாகும் கடுமையான கொடூரமான வேதனையைப் பற்றியும் ஹதீஸில் கூறப் பட்டுள்ளன.
‘’படைத்தவன் எஜமானனாகிய அல்லாஹுத்தஆலா அவனின்(நோன்பில்லாதவனின்இழிவான இச்செயலால் அவனை கடுமையாக வெறுக்கிறான்’’
 ‘’வானவர்கள் இன்னும் நல்லோர்களின் கூட்டத்தில் அவனின் இச்செயல் இழிவானது தீயது என்று ஞாபிக்கப் படுகிறது’’
‘’ரமளான் மாதத்தில் நோன்பில்லாதவன் உண்ணக் குடிக்கச் சென்ற அவ்விடம் இவன் என்மீது பாவம்புரிந்தான் என்று மறுமையில் சாட்சி பகரும்’’
  எனவே முஸ்லிம்கள் ரமளான் மாதத்தின் மகிமையை உணர்ந்து அதனின் கிரியைகளை ஏற்று நடப்பது மிக அவசியமாகும்மாறாக ரமளான் மாதத்தில் ஆற்றவேண்டிய கடமைகளை நிறைவேற்றாது அசட்டையாகவும் பொழுது போக்காகவும் ரமளான் மாதத்தை கழித்து விட்டால் அதுவே  தமது இம்மை மறுமையின் நஷ்ட வழிகேடாகும்.இதனை முஸ்லிம்களாகிய நாம் உணர்ந்து செயல்படுவோமாக!
           நோன்பு ஃபர்ளு கட்டாயக்கடமை
  நோன்பு நோற்பது ஃபர்ளு – கட்டாயக்கடமை என்பது குர்ஆன்ஹதீஸ்,இஜ்மாயே உம்மத் ஆகியவற்றால் உறுதிப் படுத்தப்பட்டதாகும்.
  நோன்பு நோற்பது ஃபர்ளு – கட்டாயக்கடமை என்பதை மறுப்பவன் காஃபிர் ஆவான்தங்கடமின்றி நோன்பு வைக்காதவன் பெரும்பாவி தீயவனாவான்.
              நோன்பின் நிய்யத்
  நோன்பு வைப்பதற்கு நாவால்தான் நிய்யத் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லைஇன்று நான் நோன்பு வைக்கிறேன் என்று மனத்தால் நிய்யத் செய்தாலே போது மானாதாகும்.
  தமிழில் அல்லது அரபியில் நாவால் நிய்யத்செய்வது ஏற்றமானதாகும்.நோன்பின் நிய்யத்:
  நவைது ஸவ்மகதின் அன் அதாயி ஃபர்ளி ரமளானி ஹாதி ஹிஸ்ஸனதி லில்லாஹிதஆலா
  இந்த வருடத்தின் ரமளான் மாதத்தின் ஃபர்ளான நோன்மை அதாவாக அல்லாஹுத்தஆலாவுக்காக நாளை நோற்க நிய்யத் செய்கிறேன்.
  உண்ணாமல் குடிக்காமல் சேர்க்கை செய்யாமல் இருந்தும் நோன்பின் நிய்யத் இல்லையாகில் நோன்பாகாது.
  நோன்பின் நேரம் சுபுஹு ஸாதிக் (மெய் வெள்ளை)அதிகாலையிலிருந்து ஆரம்பமாகின்றதுரமளான் மாதத்தின் நோன்பின் நிய்யத்தை சுபுஹு ஸாதிக் முன்பாகவே நிய்யத் செய்வது ஏற்றமானதாகும்இருப்பினும் மதியம் உச்சத்திற்கு சிறிது நேரம் முன்பு வரையிலும் நிய்யத் செய்யலாம் கூடும்நிபந்தனையாதெனில் சுபுஹு ஸாதிகிலிருந்து சாப்பிடாமல் குடிக்காமல் உடலுறவு கொள்ளாமல் இருந்திருக்க வேண்டும்.
                ஸஹர் – நோன்புபிடிப்பது
  ஸஹர் சாப்பிடுவது சுன்னத்தாகும்பசி இல்லை என்றாலும் சிறிதளவேனும் சாப்பிடவேண்டும் அல்லது தண்ணீராகிலும் குடித்துக் கொள்ள வேண்டும்.
  ஸஹர் உடைய நேரம் பிற்படுத்திச் சாப்பிடுவது சுன்னத் தாகும் எனினும் ஸஹர் உடைய நேரம் கழிந்து விட்டதோ என்று நேரத்தில் சந்தேகம் கொள்ளும் அளவு பிற்படுத்தக் கூடாது.
             இஃப்தார் – நோன்பு திறப்பது
  சூரியன் மறைந்துவிட்டது என்று உறுதியானதற்குப்பின் உடன் நோன்பைத் திறந்துவிடுவது முஸ்தகப் ஆகும்நேரம் தாழ்த்துவது மக்ருஹ் ஆகும்.
  மேகத்துடைய காலங்களில் இஃப்தார் – நோன்பு திறப்பதைத் தாமதித்தும் ஸஹர் – நோன்பு பிடிப்பதை தீவிர மாக்குவதும் அவசியமாகும்.
  நோன்பு திறக்கும் நேரத்தில் தனது கடுமையான தேவை கம்மியாகும்.அளவுக்கு முடிந்தால் சாப்பிட்டுக் குடித்துக் கொள்ள வேண்டும்அதனால் மக்ரிப் உடைய தொழுகை மனநிம்மதியுடன் பயபக்தியாக தொழுது கொள்வதற்கு வழி வகுக்கும்.
  இமாம் மக்ரிப் உடைய தொழுகைக்கு தீவிரமாக்காமல் முக்ததி –பின்தொடரும் ஜனங்களை கவனத்தில்கொண்டு சிறிது நேரம் தாமதிக்கவும்அதனால் ஜனங்கள் நிம்மதியுடன் வாய் கொப்பளித்து ஜமாஅத்தில் சேர்ந்து கொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.
  இனிப்பான பொருளைக்கொண்டு நோன்பு திறப்பது நல்லதாகும்.பேரீத்தம் பழம்தண்ணீர் அல்லது மற்றவை களைக்கொண்டும் நோன்பு திறக்கலாம்சிலர் உப்பைக் கொண்டு நோன்பு திறப்பது மிகுந்த நன்மையளிக்கும் என விளங்கிக்கொண்டுள்ளனர்அது தவறாகும்.
                நோன்பு திறக்கும் துஆ
  அல்லாஹும்ம லகசும்து வபிக ஆமன்து வஅலைக தவக்கல்து வஅலா ரிஜ்கிக அஃப்தர்து பதகப்பல்மின்னி.
 ’’யா அல்லாஹ்உனக்காகவே நோன்பு வைத்தேன்உன்னைக் கொண்டே விசுவாசம் கொண்டேன்உன் மீதே நம்பிக்கை வைத்தேன்,உன்னுடைய இரணம் கொண்டே நோன்பு திறக்கின்றேன் என்னுடைய நோன்பை ஏற்றுக் கொள்வாயாக!
              நோன்பின் முறித்தல்கள்
1)மூக்கு அல்லது காதில் மருந்து செலுத்துவது. 2) வேண்டு மென்றே வாய்நிரம்ப வாந்தியெடுப்பது. 3)வாய்கொப்பளிக்கும் போது தொண்டையினுள் தண்ணீர் சென்றுவிடுவது. 4) கல்மண்இரும்பு போன்றவற்றை விழுங்குவது. 5) சூரியன் மறைந்துவிட்டது என தவறுதலாக எண்ணிக்கொண்டு நோன்பு திறப்பது. 6) இரவு என தவறுதலாக எண்ணிக் கொண்டு சுபுஹு ஸாதிக்குப்பின் சாப்பிடுவது. 7)பீடிசிகரெட்குடிப்பதுவெற்றிலைப்பாக்கு சுவைப்பது. 8)அதிகம் இரத்தம் கலந்த எச்சிலை விழுங்குவது. 9) மலம் கழிக்கும் துவாரத்தில் மருந்திடுவதுபெண் சிறுநீர் கழிக்கும் இடத்தில் மருந்திட்டால் நோன்பு முறிந்துவிடும் ஆணுக்கு அல்ல.    10) பற்களின் இடரில் அகப்பட்ட மாமிசம் போன்றவைகளை வாயிலிருந்து வெளியாக்கிப் பின்னர் அதை உட்கொண்டால் நோன்பு முறிந்து விடும்வாயினுள்ளே தனது நாவால் அதனை அகற்றி அதுவும் ஒரு சுண்டல் அளவு பருமன் உள்ளதாக இருப்பின் அதை உட்கொள்வதால் நோன்பு முறிந்துவிடும்ஒரு சுண்டல் அளவைவிட சிறியதானால் நோன்பு முறியாது.
  வேண்டுமென்றே நோன்பை முறித்தால் அந்தநோன்பை ‘களாசெய்யவேண்டும்மேலும் கப்பாரா (பரிகாரமும்வாஜிபாகும்.
  நோன்புடைய கப்பாரா - பரிகாரமாகிறது.
  தொடர்ந்து இரண்டு மாதகாலம் வரை 60 நாட்கள் இடைவிடாது நோன்பு நோற்கவேண்டும்இடையில் விடுபட்டுவிட்டால் திரும்பவும் 60 நாட்கள் இடைவிடாது நோன்பிருக்க வேண்டும்.
  நோன்புவைப்பதற்கு சக்தியற்றிருந்தால் அறுபது மிஸ்கீன் களுக்கு காலையிலும் மாலையிலும் வயிறுநிரம்ப உணவளிக்க வேண்டும்.அல்லது அறுபது மிஸ்கீன்களுக்கு ஸதகயே ஃபித்ர் உடைய அளவு அரைமரக்கால் தானியம் அல்லது தானியத்துடைய மதிப்பின் பணத்தை கொடுக்க வேண்டும்.
            நோன்பை முறிக்காதவைகள்
1)மறதியாக சாப்பிடுவதுகுடிப்பதுசேர்க்கை செய்வது.   2)மிஸ்வாக் பல்துலக்குவது. 3) தனது நாட்டமின்றி வாந்தி வருவது. 4) நறுமணம் நுகர்வது. 5) தனது விருப்பமின்றி தூசிபுளுதிகொசு தொண்டையினுள் செல்லுவது.      6) தலை மீசையின் மீது எண்ணெய் தடவுவது. 7) தூக்கத்தில் ஸ்கலிதமாவது. 8) கண்ணில் சுர்மா இடுவது,மருந்து அல்லது தண்ணீர் ஊற்றுவது. 9) எச்சில்சளியை விழுங்குவது. 10) வேண்டுமென்றே வாயநிம்பாமல் சிறிதளவு வாந்தியெடுப்பது. 11)இரவில் உடலுறவுகொண்டு சுபுஹு ஸாதிக்கு முன்பே குளிக்காமலிருப்பது. 12) இன்ஜெக்ஷன் – டாக்டரிடம் ஊசிமருந்து எடுப்பதுஇவைகளினால் நோன்பு முறிந்துவிடாது.
              நோன்பின் மக்ருஹ்கள்
1)அவசியமின்றி ஏதாவது பொருளை வாயில்போட்டு சுவைப்பது அல்லது உப்பு போன்றவைகளை சுவைத்து துப்புவது. 2) புகையிலை கொண்டு பல்துலக்குவது.        3)முழுக்குடன் குளிக்காமல் பகல் முழுவதும் கழிப்பது.        4) இரத்தம் குத்தி வாங்குவது. 5) புறம்பேசுவது அதாவது பிறரின் குறையை மறைமுகமாக பேசுவது இச்செயல் அனைத்துக் காலங்களிலும் ஹராமாகும்அதிலும் ரமளானின் காலத்தில் புறம்பேசுவது குற்றத்தை அதிகரிக்கிறது. 6) நோன்பு வைத்துக்கொண்டு ஏசி பேசி சண்டையிடுவது.
  இவைகள் அனைத்தும் நோன்பின் மக்ருஹ் ஆகும்நோன்பு முறிந்துவிடாது.
            நோன்பு வைக்காமலிருப்பதற்கு  
             அனுமதிக்கப்பட்டவர்கள்
1)வியாதியின் காரணத்தால் நோன்பிருக்க சக்தியற்றிருந்தால் அல்லது வியாதி அதிகரித்துவிடும் என்றிருந்தால் நோன்பில் லாமல் இருப்பதற்கு அனுமதி உண்டுபின்னர் அதனை ‘களா’ செய்வது கட்டாயமும் அவசியமுமாகும்.
2) கற்பஸ்திரி நோன்பிருப்பது தனது அல்லது தன்னுடைய குழந்தையின் உயிருக்கு ஆபத்தாகும் என்றிருப்பின் அச்சமயம் நோன்பு நோற்காமலிருப்பதற்கு அனுமதியுண்டு பின்னர் அதனை ‘களா’ செய்வது கட்டாயமும் அவசியமுமாகும்.
3) தனது அல்லது பிறரின் குழந்தைக்கு பால் குடிப்பாட்டும் பெண் நோன்பு நோற்பதால் குழந்தைக்கு பால் குறைந்து விடும் கஷ்டம் ஏற்படும் என்றிருப்பின் அச்சமயம் நோன்பு நோற்காமல் பின்னர் அதனை ‘களாசெய்வது கட்டாயமும் அவசியமுமாகும்.
4) பிரயாணம் செய்யும் முஃஸாபிர் (சுமார் 48 – மைல் தொலை தூரம் பயணம் செல்பவர்நோன்பு வைக்காமலிருப் பதற்கு அனுமதிக்கப்படுகிறது.
  பிரயாணத்தில் கஷ்டம் இடைஞ்சலில்லாமலிருப்பின் நோன்பு நோற்பதுவே ஏற்றமானதாகும்பிரயாணத்தில் தனக்கு அல்லது தன்னுடனிருக்கும் சஹாக்களுக்கு நோன்பிருப்பதினால் கஷ்டம் ஏற்படும் என்றால் நோன்பில்லாமலிருப்பதுவே நல்லதாகும்.
5) நோன்புடன் பிரயாணத்தைத் தொடர்ந்தால் அந்த நோன்பை பூர்த்திசெய்வது அவசியமாகும்பிரயாணத்தி லிருந்து நோன்பில்லாமல் சாப்பிட்டுகுடித்து ஊர் திரும்பினால் அன்றைய மீதமான நேரங்களை நோன்பைப் போன்றே இருந்து கழிக்க வேண்டும்.
6) நோன்பை விட்டு விடு என்று கொலைமிரட்டலைக் கொண்டு பயமுறுத்தப்பட்டால் நோன்பைவிட்டு விடுவதற்கு அனுமதியுண்டு.பின்னர் அதனை ‘களா’ செய்யவேண்டும்.
7) வியாதிபசிதாகத்தின் அதிகரிப்பால் அவரை நோட்ட மிட்ட தீன்தாரியான முஸ்லிம் வைத்தியர் அல்லது டாக்டர் உயிருக்கு ஆபத்து என குறிப்பிட்டால் நோன்பை விட்டு விடுவதற்கு அனுமதியென்ன!கட்டாயக்கடமையுமாகும்பின்னர் அதனை ‘களா’ செய்வது கட்டாயமுமாகும்.
8) ஹைள் – மாதவிடாய் , நிபாஸ் – பிரசவத்திற்கு பின் ஏற்படும் இரத்தம் இக்காலங்களில் பெண் நோன்பிருக்காமல் விடுபட்ட அந்த நோன்பை பின்னர் ‘களா’ செய்வது கட்டாயமாகும்.
               தராவீஹின் சட்டங்கள்
  புனித ரமளான் மாதத்தின் இரவுகளில் இஷாவுடைய ஃபர்ளு தொழுகைக்குப்பின் 20 ரகஅத் தராவீஹ் தொழுகை தொழுவது சுன்னத்தே முஅக்கதாவாகும்தராவீஹ் தொழுகையில் ஒரு தடவை குர்ஆன்ஷரீப் ஓதுவது அல்லது கேட்பது சுன்னத்தாகும்.  
  எனவே தராவீஹ் 20 ரகஅத் தொழுவது – குர்ஆன்ஷரீப் ஒரு தடவை தராவீஹ் தொழுகையில் ஓதுவது அல்லது கேட்பது ஆக இவ்விரண்டும் தனித்தனியான சுன்னத்தாகும்ஒருசில இரவுகளில் பூராகுர்ஆன்ஷரீபையும் தராவீஹ் தொழுகையில் ஓதக்கேட்டு மீதமான நாட்களில் தராவீஹ் தொழுகையை விட்டு விடுவோருக்கு ஒரு சுன்னத்தை நிறை வேற்றிய நன்மைதான் கிடைக்கும்.
  குர்ஆன்ஷரீப் மனனமான ஹாபிஸ் கிடைக்காவிட்டால் அலம்தரகைப போன்ற சிறு சூராக்களை மட்டும் ஓதி தராவீஹ் தொழுகையை நிறைவேற்றிவிடலாம்.
  இஷா ஃபர்ளு தொழுகைக்கு முன் தராவீஹ் தொழுகை தொழுவது கூடாதுஎனவே பள்ளிவாசலில் இஷா ஃபர்ளு ஜமாஅத் முடிந்ததின் பின் வருவோர்இஷாஉடைய ஃபர்ளு தொழுகையை நிறைவேற்றிய பின்புதான் தராவீஹ் தொழுகையில் சேர வேண்டும்விடுபட்ட தராவீஹ் தொழுகையை தராவீஹ் ஜமாஅத் முடிந்ததற்குப் பின்பு தனிமையாக தொழுது கொள்ள வேண்டும்.
  வித்ரு தொழுகையை தராவீஹ் தொழுகைக்கு முன் அல்லது பின் தொழுது கொள்ளலாம்எனவே தராவீஹ் தொழுகை பாக்கியுள்ளவர் வித்ரு தொழுகையை ஜமா அத்துடன் நிறைவேற்றிவிட்டு பின்னர் விடுபட்ட தராவீஹ் தொழுகையை தனியாக தொழுது கொள்ளலாம்.
  தராவீஹ் தொழுகையில் குர்ஆன் ஷரீப் உடைய எழுத்துக் களின் உச்சரிப்புகள் விடுபடும் விதத்தில் மிகவேகமாக ஓதுவது பெரும்பாவமாகும்அவ்வாறு ஓதுவதால் ஓதக் கூடிய இமாமும்,ஓதுவதைக் கேட்கும் முக்ததிகளுக்கும் எவ்வித நன்மையும் கிட்டாது.
  ஒவ்வொரு நான்கு ரகஅத்திற்குப் பின்பும் சிறிதுநேரம் அமர்ந்திருப்பது முஸ்தஹப்பாகும்தொழுகக்கூடியவர்களின் சவுகரியத்தைக் கருதி இமாம் ருகூவுசுஜூதுஉடைய தஸ்பீஹ்கள்ஸலவாத் போன்றவற்றை ஓதாமல் விட்டு விடுவது கூடாது.
  குர்ஆன்ஷரீப் கத்தம்செய்யும் நாளில் அளவுக்கதிகமான மின் விளக்குகளைக் கொண்டு அலங்கரிப்பது போன்ற இஸ்ராப் –மேல்மிச்சமான செலவுகள் செய்வது தவிர்க்க வேண்டியவைகளாகும்.இனிப்பு வழங்குவதற்கு வலுக் கட்டாயமாக பணம் வசூலிப்பதும் பள்ளியில் இனிப்பு வழங்கும் சமயம் இரைச்சலிட்டுக் கூச்சலிடுவதும் ஒன்றுக் கொன்று ஏசிப்பேசிக்கொள்வதும் மார்க்க முரணான காரியங்களாகும்.
                இஃதிகாப்
  புனித் ரமளான் மாதத்தின் கடைசி பத்து நாட்கள் இஃதிகாப் இருப்பது சுன்னத்தே முஅக்கதா அலல் கிபாயாவாகும்ஊரில் ஒருவர் மட்டும் இஃதிகாப் இருந்தால் அதுவே மற்றெல்லோருடைய பொருப்பிலிருந்தும் கடமை விடுபட்டு விடுகிறதுஒருவர்கூட இஃதிகாபில் இல்லையாகில் எல்லோரும் சுன்னத்தை விட்ட பாவிகளாகி விடுவார்கள்.
  ஆண்கள் பள்ளிவாசலிலும் பெண்கள் தன்னுடைய வீட்டின் குறிப்பான ஒரு பகுதியிலும் இஃதிகாப் இருக்க வேண்டும்இஃதிகாப் உடைய நிய்யத்தும் பெண்கள் ஹைளுநிபாஸை விட்டும் சுத்தமாக இருத்தலும் வேண்டும்இஃதிகாப் இருக்கும் காலங்களில் ஹைளு வந்துவிட்டால் அல்லது குழந்தை பிறந்துவிட்டால் இஃதிகாபை விட்டுவிடவேண்டும்.
  இஃதிகாபின்போது உடலுறவு கொள்வதுமுத்தமிடுவதுகட்டிபிடிப்பது கூடாது.
  இஃதிகாப் இருக்கும் ஆண் தேவையற்று பள்ளிவாசலை விட்டும் பெண் தனது இஃதிகாபின் இடத்தை விட்டும் வெளியாகுவது கூடாது.தேவையில்லாமல் இஃதிகாபின் இடத்தை விட்டும் வெளியாகுவது இஃதிகாபை முறித்து விடும் செயலாகும்இதுவரை எத்தனை நாட்கள் இஃதிகாபில் இருந்தாரோ அதுமட்டும் கூடிவிடும்.
  ஆம்தன்னுடைய அல்லது மார்க்கத்தின் தேவையைக் கருதி வெளிக்கிளம்புவது கூடும்.
  1)தன்னுடைய தேவைக்கு வெளிக்கிளம்புவது உதாரணமாகமலம்,ஜலம்கழிப்பதற்கு வெளியாகுவது.
  2)மார்க்கத்தின் தேவையைக் கருதி வெளியாகுவது உதாரணமாக இஃதிகாப் இருக்கும் பள்ளிவாசலில் ஜும்ஆ நடைபெறவில்லையாகில் ஜும்ஆ தொழுகைக்காக வேண்டி ஜும்ஆ பள்ளிவாசலுக்கு வெளிக்கிழம்பிச் செல்வது.
  அறிந்தோ அல்லது மறதியாகவோ உடலுறவு கொள்வது இஃதிகாபை முறித்துவிடும்இதில் ஞாபக மறதியைக் கவனிக்கப்பட மாட்டாது.இஃதிகாபில் முற்றிலும் வாய்மூடி இருப்பது மக்ரூஹ் ஆகும் வீண்பேச்சில் ஈடுபடாமல்            குர்ஆன் ஷரீப் ஓதுவதிலும் மற்ற வணக்க வழிபாடுகளிலும் ஈடுபட வேண்டும்.

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2013

மறுமலர்ச்சி தரும் ரமளான்

மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஸ். முஹம்மது ரபீக் மிஸ்பாஹி – மலேசியா

  புண்ணியம் பூத்துக் குலுங்கும், நன்மையும் நற்செயலும் செழிக்கும், இறையச்சமும் தியாகமும் வளர்க்கும் புனித ரமளான் வந்துவிட்டது. ஈடு இணையற்ற நன்மைகளை வாரிச் சொரியும் ரமளான் கிடைத்து விட்டது. மனிதருள் ரமளான் தரும் வாழ்க்கை மாற்றங்கள் எண்ணிலடங்காதவை. அல்லாஹ் தந்த அருட்கொடைகளில் ரமளான் மாதம் மறக்க முடியாததாகும். ரமளானின் மேன்மையையும், சிறப்பையும் அறிந்தவர்களெல்லாம் காலம் முழுதும் ரமளானாக இருக்கக் கூடாதா? என ஏங்கித் தவித்தார்கள். ஸஹாபாக்களும், இறை நேசர்களும், ஞானிகளும் ரமளானில் நோன்பு வைப்பத்திலும் திருக்குர்ஆன் ஓதுவதிலும் இரவெல்லாம் நின்று வணங்குவதிலும் அவர்களுக்கிருந்த பேரானந்தமும், பேராசையும் சொல்லில் வடிக்க முடியாதவையாக இருந்தன.
  ரமளான் மனிதனுடைய செயல்பாடுகளையும், அவனுடைய நித்திய வழக்க முறைகளையும் அல்லாஹ்வின் அன்பிற்காக மாற்றி அமைக்கிறது. தினமும் நேரம் தவறாமல் மிகச்சரியாக உண்டு பருகியவன், சாப்பிட்டு மகிழ்ந்தவன்; மற்ற காலங்களில் மறந்தும் சாப்பிடாத, பருகாத ஒரு நேரத்தில் உண்ணுகிறான் பருகுகிறான் என்றால் யாருக்காக – அல்லாஹ்வின் கட்டளைக்காகத் தானே …! ஸஹர் நேரம் என்ற அந்த அதிகாலை வைகறைப் பொழுது என்பது மனிதரெல்லாம் ஆழ்ந்து உறங்குகின்ற அதி அற்புத நேரம். இரவெல்லாம் உறங்காதவர் கூட தன்னை மறந்து மறந்தே உறங்கிப் போகின்ற நேரம். உலகின் எந்த மூலையில் வாழுகின்ற மனிதனும் சாப்பிடாத – சாப்பிடப் பிடிக்காத – மனம் ஒப்பாத ஒரு நேரத்தில் அல்லாஹுவுக்காக – அல்லாஹ்வின் ரஸுலுக்காக – அவர்களின் கட்டளைக்காக தங்களை முழுமையாக அர்பணித்தவனாக சாப்பிடுகிறான்.
  நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
  “அல்லாஹுதஆலாவும், அவன் மலக்குகளும், ஸஹர் சாப்பிடுவோரின் மீது அருள் புரிகின்றனர்”.
                   அறிவிப்பாளர் ஹள்ரத் இப்னு உமர் (ரளி) அவர்கள்
                                                   நூல் : அத்தர்ஙீப்
  ஹள்ரத் ஹாபிஸ் இப்னு ஹஜர் (ரஹ்) புகாரி ஷரீபின் விரிவுரையில் எழுதும் போது; “ஸஹர் சாப்பிடுவதால் பல வகையான பரக்கத்துகள் கிடைக்கின்றன. சுன்னத்தைப் பின்பற்றுதல், வேதக்காரர்களுக்கு மாறு செய்தல் இன்னும் வணக்கங்கள் செய்ய சக்தியற்றவருக்கும், வணக்கத்தால் உற்சாகம் அதிமாகுதல், பசி அதிகமானால், உண்டாகும் தீய குணத்தைத் தடுத்தல், அந்த நேரத்தில் தேவையுள்ள யாசகன் வந்தால் உதவி செய்தல், பக்கத்து வீட்டார் ஏழ்மையுடைவராக இருந்தால் அவருக்கு உதவி செய்தல், அந்த நேரத்தில் து ஆ ஏற்கப்படுதல், ஸஹரின் பரக்கத்தால் துஆ செய்யும் நல்லுதவியும் கிடைத்து விடுதல், அந்நேரத்தில் திக்ரு செய்வதற்குரிய வாய்ப்பு கிடைத்தல் போன்ற பலவகை நன்மைகள் கிடைக்கின்றன” என எழுதுகிறார்கள்.
  ஸஹர் நேர உணவிற்கு அல்லாஹ் தரும் அதி அற்புத ஆற்றல் இது. அன்டைம் எனச் சொல்லப்படும் காலம் கடந்த ஒரு நேரத்தில் சாப்பிடும் உணவிற்கு செரிமானத்தையும் தந்து – குடலின் இயக்கத்தை சீராக்கி நோன்பாளிக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் ஆக்குகிறான் அல்லாஹ்.
  பசி வந்தால் பத்தும் பறந்து விடும், பசித்தால் புலியும் புல்லை திண்ணும் எனச் சொல்லுவார்கள். ஆனால் நோன்பு வைத்திருக்கும் பசியாளிகள் கொஞ்சமும் நிதானம் இழக்காமல் கட்டுப்பாட்டுடன் செயல்படுகிறார்கள். பசி நேரத்தில் மனிதன் எதைக் கொடுத்தாலும் உண்டு விடுவது பழக்கம். நல்லதா? கெட்டதா? ஹலாலா? ஹராமா? ருசியானதா? இல்லையா? என்றெல்லாம் பார்ப்பது கிடையாது. கிடைத்ததும் விழுங்கத்தான் எத்தனிப்பான். அதே சமயம் ஒரு நோன்பாளி நோன்பின் மயக்கம், தாகம் மேலிட்ட போதும் கமகமவென மணக்கும் மிகருசியான அறுசுவை உணவுகளும், மனம் லயிக்கின்ற விருப்பமான பதார்த்தங்களும் பரப்பிவைக்கப்பட்ட போதிலும் நாவும் கரமும் சுவைக்கத் துடிதுடித்த போதிலும், மனதை ஒருநிலைப்படுத்தி நஃப்ஸை அடக்கி அல்லாஹ் தடுத்து விட்ட நேரத்தில் ஹலாலான உணவுகளைக் கூட ஹராமாக்கிக் கொள்கிறான். பசி இல்லாத நேரத்தில் சாப்பிட வைத்து பசிக்கின்ற நேரத்தில் சாப்பிட தடை விதிக்கும் இந்த விந்தையான கட்டளைக்கு முற்றிலும் அடிபணிந்து அல்லாஹ்வை மனமுவந்து ஏற்றுக் கொள்கின்ற நிறைவான தன்மையை உலகில் அல்லாஹ்வைத் தவிர யாரால் ஏற்படுத்திட முடியும்?
  எனவே தான் நோன்பிற்குரிய கூலியை தானே நேரடியாகத் தருவதாகவும், தானே கூலியாக ஆகிவிடுவதாகவும், அல்லாஹ் வாக்களிக்கின்றான். ஆத்மார்த்த ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் மனிதனை மாற்றும் சக்தி நோன்பிற்கு இருக்கிறது. மனிதனின் மனோ இச்சைகளை முறியடிக்கும் சக்தி இறையச்சத்தின் அடிப்படையில் நோற்கும் நோன்பைத் தவிர வேறெதிலும் இருக்க முடியாது. பசியின் கொடுமையால் நல்லவர்கள் கூட திருட முனைவார்கள். நோன்பு என்ற பெயரிலுள்ள பசியாளியான திருடனைக் கூட நல்லவனாக மாற்றும் சக்தி இறையச்சமிக்க நோன்பிற்கு இருக்கிறது.
  “ஷைத்தான் மனிதனின் உடலில் இரத்தம் போன்று ஊடுருவிச் சென்று கொண்டிருக்கின்றான். அவனுடைய வழிகளைப் பசித்திருப்பதின் மூலம் தடை செய்யுங்கள்” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
  அல்லாமா தஹ்தாவீ (ரஹ்) அவர்கள் பசியின் கசப்பைக் கொஞ்சம் உணர வேண்டும். அதுதான் அதிகமான நன்மைகள் கிடைப்பதற்கும் ஏழை, எளியோரின் மீது இரக்கம் ஏற்படுவதற்கும் காரணமாகும் எனக் குறிப்பிடுகிறார்கள். ஸஹாபாக்களும், வலிமார்களும், ஞானிகளும் பசி மூலமாக மனோ பலத்தைப் பெற்றார்கள். பசித்திருந்து தான் இறை ஞானங்களைப் பெற்றார்கள். பசியின் மூலம் தான் ஞானப் பசியை தீர்த்துக் கொண்டார்கள். குடலை நிரப்புவது – ஞானத்தை விட்டும் மனிதனை காலியாக்கி விடும் என்பதை உடலை வளர்ப்பவர்கள் அறிந்திருக்கவில்லை என்று மெளலானா ஸஃதி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
  ரஸுல் (ஸல்) அவர்கள் பல நாட்களாக தொடர்ந்து நோன்பு வைத்திருக்கிறார்கள். இடையில் எதுவுமே சாப்பிட்டதில்லை என ஹதீதுகளில் காண்கிறோம். ஒரு பேரித்தம் பழத்தையும், ஒரு மிடர் தண்ணீரையும் கொண்டு பல நாட்கள் இது போலவே நோன்பு வைத்தார்கள் – நோன்பு திறந்தார்கள் என்று பல வலிமார்களின் வரலாற்றில் பார்க்க முடிகிறது.
  ஒரு பெரியாரிடம், இப்படியே எதுவும் சாப்பிடாமல் நோன்பு வைத்துக் கொண்டிருந்தால் உடல் பலகீனம் அடைந்து விடுமே என சீடர்கள் கேட்டதற்கு; அதில் தான் சொர்க்கத்தின் இன்பம் உண்டாகிறது என பதில் அளித்தார்களாம் என்றால் அல்லாஹுவுக்காக பசித்திருப்பதால் எவ்வளவு பெரிய விசித்திரங்கள் நடக்கின்றன என்பதை நாம் உணர வேண்டும்.
  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-
  “நோன்பு ஒரு கேடயம் அதனை உடைக்காமலிருக்கும் வரை”
                   அறிவிப்பாளர் : ஹள்ரத் உபைதா (ரளி) அவர்கள்.
  கேடயத்தின் மூலம் தன்னை தற்காத்துக் கொள்வது போல நோன்பின் மூலம் மனிதன் ஷைத்தானிய உணர்வுகளிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்கிறான். எனவே தான் நோன்பின் ஆழிய உணர்வுகளைப் பெற்றவர்களெல்லாம் காலமெல்லாம் ரமளானாக இருந்திருக்க வேண்டாமா? என பேராவல் கொண்டார்கள்.
  ஆனால் நாம் காலமெல்லாம் ரமளான் வராமல் இருந்திருக்கக் கூடாதா? என நினைக்கிறோம். நோன்பை ஒரு கடினமான செயலாக நினைத்துக் கொண்டதால் ஆன விளைவு இது. நோன்பு வைப்பது என்றால், ஸஹருக்கு அது செய்ய வேண்டுமே இது செய்ய வேண்டுமே செலவுகள் அதிகமாகுமே, நோன்பு திறக்க பல பதார்த்தங்கள் செய்ய வேண்டுமே என, ஒரு பக்கம் செலவுகளையும் சிரமங்களையும் எண்ணிப் பார்க்கின்றோம். மற்றொரு பக்கம் ரமளான் வந்தால் வியாபாரம், விவசாயம், தொழில் தடைபடுமே என்றெல்லாம் தவறான கற்பனைகளை உண்டாக்கிக் கொண்டு அலைகின்றோம். தேவையில்லாத பயணங்களை காரணம் சொல்லிக் கொண்டும், நோய்களை காரணம் காட்டிக் கொண்டும் தட்டிக் கழிக்க முயற்ச்சிக்கின்றோம். ஸஹாபாக்கள் நோன்பு வைத்துக் கொண்டே வியாபாரம் செய்யவில்லையா? உழைக்கவில்லையா? சம்பாதிக்கவில்லையா? என்பதனை சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
  இஸ்லாத்திம் முதல் போர் களமாம் பத்ர் போர் ரமளானின் 17 ம் நாள் தானே நடைபெற்றது ! உணவில்லாமல் பட்டினியாக பல நாட்கள் நோன்பிருந்து முன்னூறுக்கும் அதிகமான நபித்தோழர்கள் எதிரிகளை திக்கு முக்காடச் செய்யவில்லையா? பசியோடும், தாகத்தோடும், மயக்கத்தோடும் எதிரிகளை பந்தாடி சூறையாடி வெற்றிவாகை சூடினார்களே ! அவர்களுக்கு பசியின் கொடுமையும், தாகத்தின் தன்மையும் எப்படி பறந்தோடியது? அல்லாஹுவுக்காக என்று நாம் இறங்கிவிட்டால் எல்லாவற்றையும் இலகுவாக நமக்கு மாற்றித்தரும் வல்லமை மிக்கவன் அல்லாஹ்.
  ரமளானுடைய நோன்புகளை காரணங்கள் கூறி தட்டிக் கழிப்போமேயானால் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து ஒருக்காலும் தப்பமுடியாது. எந்த மனிதன் தகுந்த காரணமின்றி ரமளான் மாதத்தில் பகிரங்கமாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாரோ அவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என மார்க்க சட்ட விற்பன்னர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.
  ரமளானின் சிறப்புக்களும், மேன்மைகளும், அதற்கு அல்லாஹுவால் அளிக்கப்படும் வெகுமதிகளும் எண்ணிலடங்காதவை. பர்ளான கடமைகளுக்கு எழுபது மடங்கு நன்மைகள் அதிகரிக்கும் போது, மற்ற வணக்கங்களுக்கு அதிகரிக்கும் நன்மையை அல்லாஹ்வே அறிவான். நோன்பு நோற்பதின் மூலம் உங்களில் ஓர் உயர்வான மாற்றத்தை ஏற்படுத்துங்கள். அது உங்களை ஆன்மீக ரீதியான படித்தரங்களை உயர்த்துவதாக இருக்கட்டும். நீயே விரும்பவில்லையானால் சாக்கு போக்குகள் ஆயிரம் இருக்கின்றன என ஓர் உர்துப்பாடல் கூறுவது போல, நாம் விரும்பவில்லையானால் எதுவும் நடைபெறாது.

நன்றி :
குர்ஆனின் குரல்
ஜுலை 2013

அறநெறிகளைத் தூண்டும் ஆன்மீக நோன்பு

நோன்புக் கடமை
  “நிலந்தெளியும் பஜ்ருக்கு சற்று முன்பிருந்து பகல் முழுவதும் – சூரியன் மறையும் வரை உண்ணல், பருகல், உடலுறவு கொள்ளுதல் போன்ற நோன்பை முறிக்கும் எதுவுமின்றி, தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு நோன்பு நோற்றல்” எனும் இக்கடமை ஹள்ரத் ஆதம் நபிக்கு சொர்க்கத்திலிருந்தும் தொடர்ந்து உலகில் எல்லா நபிமார்களுக்கும் கடமையாக்கப்பட்டிருந்ததாக திருக்குர்ஆன் நமக்கு எடுத்தியம்பிக் கொண்டிருக்கிறது.
  “ஈமான் கொண்ட விசுவாசிகளே ! உங்களுக்கு முன்பிருந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது போல, உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது”.
1.   நோன்பின் தத்துவங்கள்
  நோன்பினால் ஜான் நெருங்கினால் முழம் நெருங்கி அருள்புரிகிறான் அல்லாஹ் !
  உலகில் சுதந்திரமாக திரியும் மனிதன் தனது சுய இலாபத்தில் மட்டும் கவனம் செலுத்துபவனாக இருந்திருந்தால், இந்த மனித இனம் என்றோ அழிந்திருக்கும். தேவைகளாலும், உதவிகளாலும் மனிதனுக்கு மனிதன் தொடர்பு வைத்திருப்பதால் தான் இனவிருத்தி பெற்று தியாகிகள் உருவாகுகிறார்கள். மிருக இனத்திற்கு அப்பால் மேலே சென்று அறிவாளியாக – கூட்டுக் குடும்பமாக காட்சியளிக்கின்றனர். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, அடுத்தவர் வாழ்வில் அக்கறை கொள்ளும் எண்ணம், அன்பு பாசங்கொண்ட நற்குணங்கள் இவற்றால் ஒருவருக்கொருவர் பின்னிப் பிணைந்து நல்லிணக்கத்துடன் வாழ்கின்றனர்.
  “இக்கூட்டுத் தத்துவம் வளர்ந்திடக் காரணமாக இருப்பது எது?” இது தான் கேள்வி. “மனிதர்கள் அனைவரும் அல்லாஹ்வின் ஒரே கயிற்றைப் பற்றிக் கொண்டு அல்லாஹ்வுக்குப் பணிந்தவர்களாக இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். கொடுப்பவன் அல்லாஹ், வாங்குபவன் மனிதன். இதை மீறி உலகம் நடந்ததில்லையே? அப்படியானால் இறைவனை நம்பி வாழும் மனிதன் தனக்கும் தன்னைப் படைத்தவனுக்கும் இடைவெளியைக் குறைத்துக் கொண்டு தனது வேண்டுதல்களால் இறைவனிடம் நெருங்கிச் சென்றால், இவனது வாழ்க்கை எவ்வளவு வளமுள்ளதாக இருக்கும்?”
  அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
  “அல்லாஹ் கூறுகிறான். என் அடியான் என் விஷயத்தில் என்ன நினைக்கிறானோ அவனுக்காக நான் அவ்வாறே நினைக்கிறேன். எப்பொழுது அவன் என்னை நினைக்கிறானோ, அப்பொழுது நான் அவனுடனிருக்கிறேன். அவன் தனது உள்ளத்தில் என்னை நினைத்தால் அவனை நானும் எனது உள்ளத்தில் நினைக்கிறேன். அவன் மக்கள் மத்தியில் (மக்கள் நலனுக்காக) நினைத்தால் நானும் அவனை வானவர்கள் மத்தியில் நினைக்கிறேன். அவன் தனது நற்செயலால் என் பக்கம் ஒரு ஜான் நெருங்கினால் நான் அவன் பக்கம் ஒரு முழம் நெருங்கி வருகிறேன். அவன் ஒரு முழம் நெருங்கினால் நான் அவன் பக்கம் இரண்டு முழம் நெருங்கி வருகிறேன். அவன் என் பக்கம் நடந்து வந்தால் நான் அவன் பக்கம் ஓடி வருகிறேன்”.
                                           (நூல் : புகாரீ)
    தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ்ஜு, இந்நான்கு வணக்கங்களில் நோன்பு என்பது பகல் முழுவதும் ஒரு வினாடி கூட இடைவிடாமல் தொடர்ந்து செய்யும் இறைவணக்கமாகும். பகல் முழுவதும் இறைவனுடனே ஒன்றியிருக்கும் ஓர் உணர்வுப் பூர்வமான திக்ராகும். இதனாலேயே இறைவன் “மனிதன் செய்யும் எல்லா அமல்களும் அவனுக்கே உரியவை, நோன்பு மட்டும் எனக்குரியது. அதற்குரிய கூலியை நானே தருகிறேன்” என்பதாகக் கூறுகிறான். மற்றோர் அறிவிப்பில் நோன்பிற்குக் கூலியாக நானே இருக்கிறேன் என வருகிறது. நோன்பின் மூலம் இறைவனின் அருளைப் பெறுவது மிக எளிதானதாகும். ஏற்றத்தாழ்வற்ற சமுதாயமாக மனிதன் கூடி வாழக் கற்றுத்தருவதே நோன்பின் இலக்கணமாகும்.
2. மனக்கட்டுப்பாட்டிற்கு நோன்பு
  வாழ்க்கை முழுவதிலும் தனது நடப்பில் கறைபடியச் செய்யக் காரணம் – அவன் தனது மனப்பேராசைகளுக்கு கரைபோட கற்றுக் கொள்ளாதது தானே? மனம் ஒன்று தான் ! அதன் வாசல்கள் ஒன்பதா? எண்பதா? ஆயிரமாயிரம் எண்ணங்கள் – ஆசைகள். அவ்வாசல்களை அடக்குவதென்பதும், அடைப்பதென்பதும் சாமானியப்பட்ட காரியமா? ஆதமுடைய மகனுக்கு தங்கத்தினாலான இரு ஆறுகள் ஓடிக்கொண்டிருந்தாலும் மூன்றாவதையும் தேடுவான் என்ற பெருமானார் (ஸல்) அவர்களின் சொல்லாழத்தையும், பேராசைகளின் ஆழத்தையும் சிந்தித்துப் பாருங்கள். உள்ளத்தை அடக்கியாளத்தான் எல்லா மனிதர்களும் நினைக்கின்றனர். மனம் போன போக்கில் மனிதன் போக நினைப்பதில்லை. ஆனால் அதை அடக்கியாளத்தான் மனிதன் கற்றுக் கொள்ளவில்லை.
  வருடம் 360 நாட்களும் தின்னவும் பருகவும் கற்றுக் கொண்டிருக்கிறான். இவன் எவ்வாறு மனதை அடக்கியாள முடியும்? தன் மனப்போக்கிற்கு அடிமையாகும் மனிதன், ஆடுகளை மேய்க்க ஓநாயையே இடையனாக்கிய கதையல்லவா இது?
  உண்ணும், பருகும், பெண்ணுடன் கூடும் ஆசைகளை வருடத்தில் 30 நாட்கள் பகலிலாவது அடக்கியாள மனிதன் கற்றுக் கொண்டால் மனதை அடக்கியாள கற்றுக் கொள்வான் என்பது தான் நோன்பின் தத்துவம்.
  360 நாட்களும் இப்பயிற்சியில் ஈடுபட வேண்டாம். திருக்குர்ஆன் அருளப்பட்ட புனித ரமளானில் மட்டுமே இப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். உங்களுக்கு 360 நாட்களின் பலன் கிடைக்கிறது.
  பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் :-
  “எவரொருவர் ரமளான் முழுக்கவும் நோன்பு நோற்று ஷவ்வால் பிறை ஆரம்ப ஆறு நாட்களிலும் தொடர்ந்து நோன்பு நோற்றாறோ அவர் வருடமெல்லாம் நோன்பு நோற்ற பலனைப் பெறுகிறார்”.
                                            (நூல் : முஸ்லிம்)
3. சமயச் சார்பற்ற சமூகநலம் பேணுதல்
  ஹள்ரத் தாவூது (அலை) அவர்கள் ஒருநாள் விட்டு ஒருநாள் நோன்பு நோற்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்களும் கூட ஏறக்குறைய அவ்வாறே நோன்பு நோற்றார்கள். ரமளான் காலங்களில் முழுமாதமும் நோன்பாளியாக இருந்தார்கள். இரவிலும் கூட ஸெளம விஸால் எனும் இரவும் பகலும் தொடர் நோன்பு வைக்கும் வழக்கம் உடையவர்களாயிருந்தார்கள். இது மாதிரியே 1,20,000 நபிமார்களும், அவர்கள் தம் கூட்டத்தார்களும் நோன்பு நோற்றிருக்கிறார்கள்.
  இஸ்லாமிய சமுதாயத்தவர் தங்களின் நபிவழி தொடர்ந்திட ரமளானில் மட்டுமல்லாமல் இதர குறிப்பிட்ட காலங்களிலும் நோன்பு நோற்கின்றனர். இவர்களின் நோக்கமெல்லாம் ஒன்றே ஒன்றுதான். இதன் மூலம் இறைபக்தியை தன்னுள் உண்டாக்கிக் கொள்வதுடன், பசித்திருந்து, மனதைக் கட்டுப்படுத்தி தன் அவயவங்களால் சமுதாயத்தில் பிறர் எல்லாருக்கும் தீங்கு இழைக்கக் கூடாது என்ற சமயச் சார்பற்ற ஒரு சமூக நலனைப் பேணுவது தான் !
4. பொருளாதாரத்தில் சமத்துவ உணர்வைத் தூண்டிடும் நோன்பு
  பல்லாயிரம் ஆண்டுகள் கடந்து வந்து விட்ட வரலாற்றில் 1415 ஆண்டுகளுக்கு முன் ஏற்றத்தாழ்வற்ற பொருளாதார உணர்வை மக்கள் மத்தியில் உருவாக்க முதல் முதலாக உலகளாவிய சட்டம் ஒன்று இஸ்லாமிய சமுதாயத்தவருக்கு பிரகடனமாகிறது. அதுதான் ரமளான் மாதம் முழுதும் நோன்பு வையுங்கள் என்பது. தொடர்ந்து அதேயாண்டில் ஜகாத் எனும் சட்டம் கடமை ரீதியாக அமலுக்கு வருகிறது. இவ்விரண்டும் ஏறக்குறைய ஒரே நோக்கத்திலிருந்ததால் அடுத்தடுத்து கடமையாக்கப்பட்டன. (1415            ) நாட்களாக உண்ணாமல் குடிக்காமல் தீமைகள் புரியாமல் மனதைக் கட்டுப்படுத்தி, பகல் முழுதும் நோன்பிருந்து இரவு காலங்களில் விழித்து வணங்கி, தங்களது பொருட்களை அடுத்த நண்பர்களுக்கு பகிர்ந்தளித்து வரலாறு படைத்துள்ளனர் முஸ்லிம்கள் என்பது இதன் பொருளாகிறது !
  இன்றுள்ள உலக மக்கள் தொகையில் 600 – கோடியில் சுமார் 200 கோடி முஸ்லிம்கள் தங்களது ஒரு மாத உண்ணா நோன்பு மூலம் பல லட்சம் டன் உணவு தானியங்களை மீதப்படுத்துகின்றன என்பது இதன் அர்த்தமாகிறது.
  இந்தியாவின் மக்கள் தொகையான 80 கோடியில் 25 கோடி முஸ்லிம்கள் தங்களது மீத உணவுப் பொருளை அடுத்தவர்களுக்கு விட்டுக் கொடுக்கின்றனர் என்று இதன் பொருள் !
  மாற்றுமத நண்பர்களுக்காக தம் உணவை விட்டுக் கொடுத்து தியாகம் புரிகிறார்கள் என்பது இதன் தத்துவமாகிறது !
தொலைக்காட்சிகள் ஒலிபரப்பிகள்
  ஆடம்பரங்களையும், வீண் விரயங்களையும் நாளொரு மேனியுமாக பொழுதொரு மேனியுமாக ஒலிபரப்பிக் கொண்டிருக்கும் ஒலிபரப்பிகளும், தொலைக்காட்சிகளும், நோன்பின் மாண்புகளையும், பலன்களையும், இஸ்லாமியரின் தியாக உணர்வுகளையும் எடுத்துரைத்தால் எத்துணைப் பலன் தரும்?
நோன்பின் மாண்புகள்
  சமுதாய ரீதியில் மேற்கூறப்பட்ட இத்தனை பலா பலன்கள் நோன்பின் மூலம் கிடைக்கப்பெற்றாலும், நோன்பு நோற்பதினால் நற்பண்புகள் பலவற்றை தன்னுள் உருவாக்க பயிற்சி பெறுகிறான் மனிதன்.
1.அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :-
  “நோன்பு சகிப்புத் தன்மையில் பாதியாகும்.
                                             (நூல் : திர்மிதீ)
  எனவே மனிதனுள் சகிப்புத் தன்மையை உண்டாக்கி போராட்டங்களுக்கு முடிவு கட்டுகிறது நோன்பு.
2. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :-
  “ஒவ்வொன்றுக்கும் ஒரு வாசல் உண்டு. உண்மையான பக்தியின் வாசல் நோன்பாகும்”
                                         (நூல் : ஜாமிஉஸ்ஸகீர்)
  எனவே போலியான பக்திகளை அகற்றி உண்மையான பக்தியினை உண்டாக்குகிறது நோன்பு.
3. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :
  “மனிதனுள் ஷைத்தான் இரத்தம் ஓடுமிடமெல்லாம் ஓடுகிறான். அவனை நோன்பைக் கொண்டு ஒடுக்குங்கள்”
                                           (நூல் : புகாரீ)
  எனவே தீவிர வாதத்தை ஒடுக்குகிறது நோன்பு.
4. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :-
  “இந்த நோன்பு காதல் வயப்பட்டவர்களுக்கு முறிவு மருந்தாகும்”.
                                            (நூல் : புகாரீ)
  எனவே அனைத்து விதமான இச்சைகளையும் அடக்கி விடுகிறது நோன்பு.
5. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :-
  “நிச்சயமாக இந்த நோன்பு காலக்கேடுகளை தடுக்கும் கேடயமாகும்”
                                         (நூல் : ஜாமிஉஸ்ஸகீர்)
  எனவே முஸீபத்துகளை அகற்றுகிறது நோன்பு.
6. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :-
  “நோன்பு நோற்று ஆரோக்கியம் பெறுங்கள்”.  (நூல் : ஹுல்யா)
  எனவே உடல் ஆரோக்கியத்தையும், வலிமையையும் தருகிறது நோன்பு.
7. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :-
  “ஒவ்வொன்றிற்கும் சுத்திகரிக்கும் சாதனம் உண்டு. உடலை சுத்திகரிப்பது நோன்பாகும்”.
                                       (நூல் :பைஹகீ)
  எனவே உடலை சுத்தப்படுத்தும் கருவி தான் நோன்பு.
8. அண்ணம் நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :-
  “நோன்பாளியின் வறட்சியில் வெளியாகும் சதை நாற்றாமாகிறது. இறைவனிடம் அது கஸ்தூரி மணமாகக் கமழ்கிறது”.
                                         (நூல் : தப்ரானீ)
9. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :-
  “நோன்பாகிறது பித்தம் – நஞ்சு சம்பந்தப்பட்ட நோய்களை உடைத்து விடுகிறது”.
                                          (நூல் : தப்ரானீ)
  எனவே பித்தம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு நிவாரணி தான் நோன்பு.
10 அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :-
  “நோன்பாகிறது சதைகளின் கொழுப்பை உருக்கி விடுகிறது”.
11. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :-
  “நோன்பாகிறது உஷ்ணத்தால் வரும் நோய்களை நீக்குகிறது”.
                                            (நூல் : தப்ரானீ)
  எனவே உடற்பருமன் நோய்களை நீக்குகிறது நோன்பு.
12. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :-
  “ஆசை வெறிகள் அடங்கிட எனது உம்மத்தார்கள் நோன்பு வைப்பார்கள்”.
                                           (நூல் தப்ரானீ)
  எனவே வெறித் தனத்தை ஒடுக்குகிறது நோன்பு.
13. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :-
  “நோன்பு நரகத்தின் கேடயமாகும்”.          (நூல் : திர்மிதீ)
  எனவே நரகத்தின் பால் நோன்பாளி செல்ல மாட்டான்.
14. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :-
  “ஆயிஷாவே ! பசியைக் கொண்டு சொர்க்க வாசலைத் தட்டிக் கொண்டிரு”.
                                             (நூல் :இஹ்யா)
  எனவே நோன்பாளியின் நோன்பு அவனுக்காக சொர்க்க வாசலைத் தட்டுகிறது.
  நோன்பின் பூரண நலம் பெற்று வளமாய் வாழ்ந்திட வல்ல நாயன் அனைவருக்கும் தெளஃபீக் செய்வானாக                                

நன்றி :

குர்ஆனின் குரல்
ஜுலை 2013