தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 23 செப்டம்பர், 2018

தமிழ் பெருமை

தமிழ்க்கடமைகள் 30
கொச்சைத்தமிழின் வெவ்வேறு வடிவங்களே பிற மொழிகள்
கொச்சைத் தமிழாகப் பிறந்த மொழிகளில் மிகப் பழமையானவை சுமேரியஎகிப்துமொழிகளாகும். பின்னர் வடமொழிகிரேக்கம்இலத்தீன் என்று சிறப்பான வளம் பெற்ற மொழிகள் தோன்றின. கிரேக்கம்இலத்தீன்வடமொழியாவும் கொச்சைத் தமிழ் என்பதால் அவை மக்கள் வழக்கில் நிற்காமல் மறைந்தன. கொச்சைத் தமிழிலும் மீண்டும் எழுத்து மொழிபேச்சு மொழி எனப் பல்வேறு மொழிகள் இணைந்தன. அவையே இன்றைய ஆங்கிலம், ஃபிரெஞ்சு,ஜெர்மன்மற்றும் அரபிஉருதுஇந்திய மொழிகளாகும். தூய தமிழ் தனித்து வாழ்ந்து இறுதியின் வடமொழியின் கலப்பால் தெலுங்குமலையாளம்கன்னட மொழிகள் பிறந்தன. தூய தமிழும் செந்தமிழ் என்று பின்னர் மாறியது. இது பழந்தமிழிலிருந்து பிறந்தது.
- பொருளியலறிஞர் இரா.வேங்கடகிருட்டிணன் :  தமிழே முதன் மொழி பக். 370-37

ஞாயிறு, 14 மே, 2017

தமிழ் மொழியே உலகின் மூத்த முதன் மொழி

உலகின் முதல் மொழி தமிழ்!
மொழி அறிவு இன சிறப்பு !!!
ஆங்கிலம் கூட தமிழிலிருந்துதான் வந்தது !!!
ஆதாரம் இதோ...........
W.W skeat என்பவர், The Etymological dictionary of the English language இல் உள்ள 14,286 சொற்களில் 12,960 வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை (அதாவது 90% வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை) என்கிறார் ஆய்வின்படி.
எடுத்துகாட்டுகள் :
Cry - ”கரை” என்ற தூயத் தமிழிலிருந்து வந்தது.
கரைதல் என்றால் கத்துதல். காக்கைக் கரையும் என்பர்.
Clay - களி (களிமண்) என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து வந்தது.
Blare - ”பிளிறு” என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து வந்தது.
Culture - கலைச்சாரம் என்பதிலிருந்து வந்தது
இதுமட்டுமல்ல இலத்தின், கிரேக்கம், செர்மன் மொழிகள் போன்ற பலவும் தமிழ் மூலத்திலிருந்து வந்தவை பின் ஒன்றோடொன்று கலந்து பலச் சொற்களை உருவாக்கிக் கொண்டன என்று சொல் ஆய்வாளர்கள் உறுதிசெய்கின்றனர்.
ஆதாரம் : “உலகமொழிகளில் தமிழ்ச்சொற்கள்” - ப.சண்முகசுந்தரம். உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன வெளியீடு.
========================
தமிழ் உலக மொழிக் எல்லாம் தாய் மொழி ,
உலக கலாச்சாரங்களின் தொட்டில் ,
உலக நாகரீகங்களின் ஊற்று ,
உலகத்தில் உள்ள மதங்களின் தொடக்கம் தமிழ் !
The mother of all languages is the TAMIL language ; the cradle of all cultures ; all relegions and all civilizations !
தமிழ் மொழியில் இருந்து வந்த ஒரு மொழியே ஆங்கிலம் .
S + பேசு = speach
S + பஞ்சு = sponge
S + மெது = smooth
S + பரவி = spray
S + உடன் = sudden
S + நாகம் = snake
S + சேர்த்தால் (ஸ் சத்தம் ) 600 க்கு மேட்பட்ட தமிழ் சொற்களுக்கு ஒரே அர்த்தம் உள்ள ஆங்கில சொற்கள் வரும் ..
உருளை = roll
(கல் கவியல் ஆக கணக்கு பார்க்கும் தமிழர் முறை )கற்குவியல் = Calculation ; calculatrice .
கொல் = kill ( தமிழில் "கொ " வரும் இடத்தில் " K " ஆங்கிலத்தில் போட்டால் 100 english word வரும் )
" பொத்தல் " ல இருந்து பொத்தான் = Button
உலகில் உள்ள , இருந்த அனைத்து மொழிகளிலும் தமிழ் மொழி இருக்கின்றது .
ஆங்கிலத்தில் 20 % தமிழ் மொழி உள்ளது .
ஆங்கிலத்தின் தாய் மொழியான :
லத்தீன் , கிரேக்கம் = 50 % தமிழ் மொழி உள்ளது .
2015 ஆய்வுகளின் படி :
( Germany-ல் உள்ள மொழி ஆய்வு பல்கலைக்கழகத்தில் படிப்பிக்கின்றார்கள். Germain மொழியின் தாய் மொழி சமஸ்கிரதம் என்றும் (Europe-ய மொழிகளின் தாய் மொழி சமஸ்கிரதம் என்றும் கூறுகிறார்கள்).
லத்தீன் , கிரேக்கத்தின் தாய் மொழியான சமஸ்கிரதம் ஓரு தமிழர் கண்ட எழுத்து மொழி.
("நிறைமொழி" மாந்தர் ஆணையில் கிளர்ந்த "மறைமொழி" தானே மந்திரம் என்ப) என்கிறது தொல்காப்பியம்.
நிறைமொழி - தமிழ்
மறைமொழி - சமஸ்கிரதம்
- சமஸ்கிரதம் என்றால் அர்த்தம் செய்யப்பட்ட மொழி .
- இயற்கிரதம் ( தமிழ் ) என்றால் அர்த்தம் இயற்கையான மொழி)
சமஸ் + கிரதம் என்றால்: செய்யப்பட்ட மொழி
சம = சமைத்தல் = செய்
கிரதம் = பாஷை = மொழி .
இயற் + கிரதம் என்றால் தமிழ் மொழி ( இறை மொழி , இயற்கையான மொழி )
இயற் = இயற்கை
கிரதம் = பாஷை = மொழி
மண்டரீன் சீனா ; கீபுரு யூதர்களின் ; அரபி = 65 % தமிழ் மொழி உள்ளது .
கீபுருவின் தாய் மொழி அரமைட் ,
அரபு மொழியின் தாய் மொழி zero-அரமைட் .
அரமைட் , zero-அரமைட் = 80 % தமிழ் மொழி உள்ளது .
தமிழ் மொழி பிறந்த இடத்தில் இருந்து : 1000 வருடங்களுக்கு ஒரு முறை மொழி சிதையும் .
1000 Km க்கு தூரத்திற்கு ஒரு முறை மொழி உடையும் !
" ழ " உச்சரிப்பு தமிழ் , மலையாளம் , மண்டரீன் சீனா ஆகிய மூன்று மொழிகளில் மட்டுமே உள்ளது .
1500 வருடங்களுக்கு முன் தெளுகு என்ற ஒரு தனி மொழி இல்லை!
தாய் தமிழகத்தின் ஒரு தமிழ் பகுதியே இன்றைய தெளுகு.
'தெள்ளு தமிழ் பாடி தெளிவோனே" என்று முருகனை புகழ்கிறது திருப்புகழ்.
1000 வருடங்களுக்கு முன் கன்னடம் என்ற ஒரு தனி மொழி இல்லை!
தாய் தமிழகத்தின் ஒரு தமிழ் பகுதியே இன்றைய கன்னடம்.
700 வருடங்களுக்கு முதல் மலையாளம் என்ற ஒரு மொழி இல்லை!
தாய் தமிழகத்தின் ஒரு தமிழ் பகுதியே இன்றைய மலையாளம் .
அம்மா , அப்பா என்ற தமிழ் சொல் இன்று உலகில் உள்ள 200 மொழிகளில் உள்ளது .
தமிழில் மட்டும் தான் சொற்களுக்கு பொருள் வரும் :
கட்டுமரம் என்ற தமிழ் சொல் உலகில் உள்ள அனைத்து ( 7102 ) மொழிகளிலும் கட்டுமரம் தான். மரத்தை கட்டுவதால் கட்டு மரம். இன்று உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் "கட்டு மரம்" தான்.
தமிழ் மொழியில் உள்ள தொன்மையான நூல்கள் போல வேறு எந்த மொழியிலும் இல்லை .
இன்று இருக்கும் பழமையான நூல்களில், யூத இனத்தில் உள்ள தொன்மையான நூல் "தோரா" (கி.முன் 2000 ஆண்டுகள்) ஒன்று மட்டுமே உள்ளது.
தமிழ் மொழியில் உள்ள தொன்மையான பல நூல்கள்:
கி.முன் 1000 ஆண்டுகள் - திருக்குறள்
கி.முன் 2000 ஆண்டுகள் - தொல்காப்பியம்
கி. முன் 3000 ஆண்டுகள் திருமந்திரம்
கி.முன் 5000 பரிபாடல்;
கி. முன் 7000 அகத்தியம் போன்றவற்றின்  நூல்கள் உள்ளன.

சனி, 18 ஜூன், 2016

தமிழ் மொழியும் சோழர்களும்

 தமிழ் மொழிப் பற்று ஒரு சிறுவிழுக்காட்டினரைத் தவிர மற்றவர்களுக்கு இல்லை. தமிழ்மொழி பல நூற்றாண்டுகளாக தமிழர்களது சமூக தளத்தில் இருந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. தஞ்சைப் பெருவுடையார் கோயிலை எழுப்பிய இராஇராச சோழன் (அவனது இயற்பெயர் அருண்மொழித் தேவன்) ஒரு தமிழ்ப் பள்ளிக் கூடம் கட்டவில்லை. மாறாக நூற்றுக் கணக்கான வேத பாடசாலைகளை நிறுவி அவற்றுக்கு நிவந்தங்கள் பல வழங்கினான். ஆசிரியர்களுக்கு அரச கருவூலத்தில் இருந்து ஊதியம கொடுக்கப்பட்டது. இராசஇராசன் அவன் மகன் முதலாவது முதலாவது இராசேந்திரன் காலத்தில் ஆயிரக்கணக்கான பார்ப்பனர்களை கஷ்மீர், வங்காளம் போன்ற நாடுகளில் இருந்து கொண்டுவந்து இறையிலி நிலங்களில் குடியேற்றினான். அவன் காலத்தில் தமிழகம் சமற்கிருத மயமாக்கப்பட்டது. இராசராசனது அரச குரு வடநாட்டு ஈசான பண்டிதர். இராசேந்திரனது அரச குரு சர்வசிவ பண்டிதர். முதலாம் குலோத்துங்க சோழன் சமயம் சார்ந்த அரச நிருவாகத்தை தனது குரு சுவாமி தேவரிடம் ஒப்படைத்திருந்தான். பல்லவர், சோழர் ஆட்சியில் தமிழ் நீச பாசை எனவும் சமற்கிருதம் தேவ பாசை என்றும் கொண்டாடப்பட்டது. இதனால் தமிழ்மொழி ஓரங்கட்டப்பட்டது. சாமிநாத தேசிகர் என்று ஒருவர் 17ஆம் நூற்றாண்டில் திருநெல்வேலி ஈசான மடத்தில் இருந்தார். அதனால் ஈசான தேசிகர் என்றும் அவருக்குப் பெயருண்டு. இலக்கணக் கொத்து என்ற அவருடைய நூலுக்கு, அவரே ஒரு பாயிரமும் எழுதியிருக்கிறார். (இலக்கணக் கொத்தை ஆறுமுக நாவலர் ஓலைச்சுவடியில் இருந்து வெளிக் கொணர்ந்தார்.) அந்தப் பாயிரத்தில் தான் இந்த "ஐந்தெழுத்துப் பாடை" என்ற சொற்றொடர் வருகிறது. வடமொழியில் இல்லாத ழ. ற, ன, எ, ஒ ஆகிய ஐந்தெழுத்துக்கள் தமிழில் உள்ளனவாம்; மற்றவை எல்லாம் வடமொழியில் இருக்கின்றனவாம். எனவே தமிழ் மொழி 5 எழுத்துக்களால் ஆன மொழி என ஈசான தேசிகர் தமிழைப் பழித்தார். 

"அதாவது, "வடநூல் வழி கலவாது, தமிழைத் தனியே தர முடியாது - வேறு வாக்கில் சொன்னால், வடமொழி இன்றி தமிழ் தனித்தியங்காது. தமிழ்நூல் ஒன்றிலும் தனித் தமிழ் கிடையாது; ஐந்தெழுத்தால் ஒரு பாடை என்று சொல்லிக் கொள்ள அறிவுடையோர் நாணுவோர்; நானும் நாணுகிறேன்; வடமொழி, தமிழ்மொழி ஆகிய இரண்டிற்கும் ஒரே இலக்கணம்" என்று சொல்லுகிறார. தமிழர்களது கோயில்களில் தமிழ் இல்லை. தேவார திருவாசகங்கள் உள் வீதியில் இருந்து பூசைகள் எல்லாம் முடிந்த பின்னர் பாடப்படுகிறது. தமிழ் தமிழர்களது திருமணத்தில் இல்லை. யாருக்கும் புரியாத சமற்கிருத மொழியில்செய்யப்படும் திருமணத்தை தமிழர்கள் விரும்பி ஏற்றுக் கொள்கிறார்கள். தமிழ் தமிழர்களது பெயர்களில் இல்லை. இன்றைய பிள்ளைகளுக்கு பெற்றோர் பொருள் இல்லாத வாயில் எளிதாக நுழையாத பெயர்களைச் சூட்டுகிறார்கள். ஆசா, கோசா, யுரேனியா, லக்ஷன், ருக்ஷன், அலக்கா, நிரோஷன் (வெட்கம் இல்லாதவன்) நிரோஷினி (வெட்கம் இல்லாதவள்) அஷ்யா, மகிஷா (எருமைமாடு) யதூஷா, யூவிஸ் போன்ற பெயர்கள் அருவருக்கத்தக்க பெயர்களாகும்.


- வேலுப்பிள்ளை தங்கவேலு (இலங்கை)

சனி, 26 செப்டம்பர், 2015

இந்தியால் ஏன் இரண்டு தேசியமொழி கூடாது! தமிழும் தேசிய மொழியே.




இன்றும் தமிழை தேசிய மொழியாக ஆக்க வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள். அது போன்றவர்களை தமிழ் பைத்தியங்கள் என்று நமது நாட்டில் பலர் கேலி செய்கிறார்கள். என்னை பொறுத்தவரை. தமிழ் தேசிய மொழியாக வேண்டும் என்று சொல்வது எவ்வாறு ஒருவரின் தனிப்பட்ட உரிமையோ. அதே போல் அவ்வாறு சொல்பவர்களை பிறர் விமர்சிப்பதும் அவர்களின் தனிப்பட்ட உரிமை. ஆனால் இந்த மொழி வெறி என்பது. என்னமோ தமிழகத்தில் மட்டும் இருப்பதை போல் பலர் சொல்வது தான் சிறந்த நகைச்சுவை.
தாவுத் இப்ராஹிம் குண்டு வெய்த்து 200 பேரை கொன்றான் என்றால். கலவரங்கள் மூலம் இரண்டாயிரம் பேருக்கு மேல் கொன்ற அதி பயங்கரவாதி பால் தாக்ரே. அவன் இறந்த பொழுது. அரசாங்க மரியாதையுடன் அவன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அவன் இறந்தவுடன் அரசாங்க விடுமுறை விடப்பட்டதை விமர்சித்து ஒரு பெண் மருத்துவர் பதிவு போட்டு இருந்தார். அவ்வாறு பதிவு போட்ட அந்த பெண் மருத்துவரின் வீடு மருத்துவமனை மட்டும் அல்லாமல். அந்த பதிவுக்கு லைக் போட்ட இருவரும் தாக்குதலுக்கு உள்ளானார்கள். இதில் உச்சகட்ட கொடுமை என்னவென்றால். தாக்குதலுக்கு உள்ளானவர்கள் கைது செய்யபட்டார்கள். தாக்கியவர்கள் கைது செய்யப்படவில்லை. இரவோடு இரவாக பத்தாயிரம் வெளி மாநிலத்தவர்கள் உயிரை கையில் பிடித்து கொண்டு மும்பையை விட்டு ஓடியதற்கு காரணம் என்ன? மராத்திய வெறி.
மா சுப்ரமண்யம் சென்னை மேயராக இருந்த பொழுது. கடை பலகைகளின் பெயர்கள். எந்த மொழியில் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் கூடுதலாக தமிழில் இருக்க வேண்டும். அவ்வாறு ஏதேனும் ஒரு கடையில் தமிழில் பெயர் பலகை இல்லையென்றால். அந்த கடையின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்று ஒரு சட்டம் போட்டார். எனக்கு மா சுப்ரமண்யம் பிடித்த அரசியல்வாதி அல்ல. திமுக எனக்கு பிடித்த கட்சியல்ல என்றாலும். மா சுப்ரமண்யத்தின் இந்த சட்டம் பாராட்டுதலுக்கு உரியதே. ஆனால் இதை தமிழ் பாசிசம் என்று சிலர் விமர்சித்தார்கள்.
சென்னையில் கன்னட, தெலுங்கு, மலையாள பெயர்களில் மட்டுமே உள்ள பலகைகள் சில நமது கண்ணில் படுகிறது. மைசூரில் தமிழ் பலகையோடு மட்டும் ஒரு கடை இருந்தால். அந்த கடையின் நிலமை என்ன? ஆகும்.
எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் மைசூர் சென்றார். அவருக்கு கன்னடம் தெரியாது. ஒரு மளிகை கடையில் அவர் சாமான்களை தமிழில் கேட்ட பொழுது அந்த கடைகாரர். கன்னடத்தில் ஏதோ அவரிடம் கோபமாக பேசி அனுப்பி விட்டார். மறுநாள். அந்த தமிழர். கன்னட மொழி தெரிந்த ஒரு நண்பருடன். அதே கடைக்கு சென்றார். அப்பொழுது. நேற்று கோபமாக பேசிய அதே கடைகாரர். மிக சிரித்த முகத்துடன் தமிழில் வாங்க, வணக்கம். உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டார்.
அதை பார்த்து மிக ஆச்சர்யம் அடைந்த என் நண்பர். நேற்று ஏன்? என்னிடம் அவ்ளவு கோபமாக பேசினீர்கள் என்று கேட்க்க. அந்த கடைகாரர். நானும் தமிழன் தாங்க. நான் கோபத்தினால் அவ்வாறு பேசவில்லை. பயத்தினால் தான் பேசினேன். நீங்கள் என் கடைக்கு நேற்று வந்த பொழுது. கன்னட மொழி இயக்கங்கள், வட்டாள் நாகராஜ் போன்ற தரம் கெட்ட அரசியல்வாதிகளின் அடிபொடிகள். உங்கள் அருகில் தான் நின்று கொண்டு இருந்தார்கள். நான் தமிழில் பேசியிருந்தால். அந்த வெறியர்கள் என்னை மட்டுமல்ல. என் கடையையே அடித்து நாசம் செய்து இருப்பார்கள் என்று மரண பீதியோடு அவர் சொன்னார்.
அது மட்டுமா. இங்கு உள்ள தனி மனிதனும் சரி. நமது தமிழ் சினிமா நடிகர்களும் சரி. உங்களுக்கு எந்த நடிகர் பிடிக்கும் என்று கேட்டால். ப்ருச்லீ, ஜெட்லி, ஜாக்கி ஜான் என்று நாம் யாரை வேண்டுமானாலும் சொல்லலாம். அவ்வாறு சொன்னால். நம்மை அடிக்க மாட்டார்கள். ஆனால்? கன்னட நடிகர் சாய்குமாரை ஒருமுறை. கன்னட வெறி மீடியாக்கள் பேட்டி எடுத்த பொழுது உங்களுக்கு எந்த ஹீரோவை பிடிக்கும் என்று கேட்டதற்கு. எனக்கு சிவாஜி கணேசனை ரொம்ப பிடிக்கும் என்று சொன்னார். இதுல என்னங்க தப்பு இருக்கு. உடனே மைக் பிடிச்சி நின்னுண்டு இருந்த சில பயலுங்க. நீ எப்டி சிவாஜி என்கிற தமிழன் பெயரை சொல்லலாம். ராஜ்குமாரை தான் பிடிக்கும்னு சொல்லுனு அந்த மைக்காலயே அவரை அடி, அடினு அடிச்சாங்க. அந்த சாய்குமார் தான். இப்பொழுது வெற்றிகரமாக ஓடி கொண்டு இருக்கும் இன்று, நேற்று, நாளை படத்தில் டெரர் வில்லனாக நடித்தவர்.
இதற்க்கு முன் பிரபு தேவா கன்னடத்தில் ஒரு படம் எடுத்த பொழுது. அதில் 1,2 தமிழ் வார்த்தைகள் இருந்தது என்னும் ஒரே காரணத்திற்க்காக. அந்த படத்துக்கு எதிராக போராடிய போராளி குடும்பம் தான் ராஜ்குமார் குடும்பம். வீரப்பன் ராஜ்குமாரை தூக்கினது தப்பே இல்லை.
அணைத்து மொழிகளிலுமே. நல்லவர்கள், பறந்த மனப்பான்மை உடையவர்கள் பலர் இருக்கிறார்கள். இல்லையென்று சொல்லவில்லை. கன்னட தேசத்தில் கூட. இப்பொழுது வெறி தனம் குறைந்து கொண்டு வருகிறது. ஆனால்? தமிழ்நாட்டில் தான்
இந்தியாவிலேயே அதிக மொழி வெறியர்கள் இருக்கிறார்கள் என்று சொல்வது சிறு புள்ளை தனமான விஷயம். எவ்ளவோ பேர் மற்ற மாநிலங்களில் இருந்து வந்து இங்கு வேலை பார்க்கிறார்கள். ரயில், பஸ் முதலியவற்றில் பயணம் செய்யும் பொழுது. அவர்கள் மொழி பாடல்களை கொரியன் செட்டில் அலற விட்டு அதை கேட்கிறார்கள். இந்த தமிழ் நாட்டில் தமிழர்கள், தமிழர்கள் அல்லாதவர்கள் இருவருக்கும் ஒரே மாதிரியான சுதந்திரம். ஆனால்? வெளி மாநிலங்களில் உள்ள தமிழர்களுக்கு அது இல்லை. சுதந்திரம் கிடைத்ததில் இருந்து. இன்றுவரை. 2,3 பேரை தவிர. நம்மை ஆண்ட அணைத்து முதல்வர்களுமே. தமிழ் அல்லாத வேறு மொழிகளை தாய் மொழியாக கொண்டவர்கள்.
தமிழர்கள் அல்லாதோர் நமது மாநிலத்தை ஆளக் கூடாது என்று சொல்ல வரவில்லை. நான் ஒன்றும் சைமான் குரூப் அல்ல. நல்லவர்கள். பறந்த மனப்பான்மை உடையவர்கள் எந்த மொழியினராக இருந்தாலும். அத்தகைய ஒரு தலைவன், தலைவியின் ஆட்சி தான். அடுத்து தமிழகத்துக்கு தேவை.

சரி. தேசிய மொழி சமாசாரத்துக்கு நாம் வருவோம்.
ஏறத்தாழ நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியா முழுவதும் பேசப்பட்ட மொழி தமிழே. அதனால் மற்ற மொழிகளை விட தமிழுக்கே தேசிய மொழியாகும் அணைத்து தகுதிகளும் இருக்கிறது என்று பாராளுமன்றத்தில் வெடித்தவர். மராத்தியரான அண்ணல் அம்பேத்கர். ஆனால் அவரது சிலைக்கு செருப்பு மாலை போடாத ஆதிக்க ஜாதி கிராமங்களே தமிழகத்தில் இல்லை என்று சொல்லலாம். சரி அது ஒருபக்கம் இருக்கட்டும். நமது நாட்டிற்கு தேசிய ஜாதி, தேசிய மதம் என்று இல்லாத பொழுது. தேசிய மொழி என்று ஒன்று ஏன்? இருக்க வேண்டும்.
ஒரு நாட்டின் தேசிய சின்னங்களாக இருப்பவை. பழமை, பாரம்பர்யத்தின் அடிப்படையிலேயே இருக்க வேண்டும். மயிலை விட நமது நாட்டில் காக்கா அதிகம். ஏன்? நமது நாட்டின் தேசிய பறவையாக காக்கா இல்லை. நமது நாட்டில் ஹிந்தியை அதிக மக்கள் பேசுகிறார்கள் என்பதால் மட்டும். அது நமது தேசிய மொழிக்கு தகுதியான மொழியாகி விடாது. உலகின் மிக பழமையான 6 மொழிகளில் 2 மொழி நமது நாட்டில் தோன்றியது. தமிழ், சமிஸ்கிருதம் இரண்டுமே நமது நாட்டின் தேசிய மொழிகளாகும் தகுதியுடைய செம்மொழிகள். கனடா, அல்ஜீரியா போன்ற நாடுகளில் 2 தேசிய மொழிகள் இல்லையா. பெல்ஜியம், சைனா, ஸ்பெயின் போன்ற நாடுகளில் மூன்று தேசிய மொழிகள் இல்லையா. தமிழும் இந்தியாவின் ஒரு தேசிய மொழியாக ஏன்? ஆக கூடாது.
மைசூர்க்கு சென்ற என் நண்பரை பற்றி சொன்னேன் அல்லவா. அவர் அங்கு ஒரு கோவிலுக்கு சென்றார். கோவில் அர்ச்சகர் பிரசாதத்தை கையில் வெய்த்து கொண்டு அந்த தமிழரை பார்த்து. நீர் பேக்கா என்று கேட்டார். பலர் முன்னிலையில் அவ்வாறு கேட்டவுடன். அந்த நண்பர் முதலில் அதை அவமானமாக கருதினார். அருகில் இருந்த ஒரு அர்ச்சகர். அந்த தமிழர் மனதில் என்ன நினைக்கிறார் என்பதை புரிந்து கொண்டு. கன்னட மொழியில் பேக்கு என்றால். வேணுமா என்று அர்த்தம் என்று சொன்னவுடன் என் நண்பர் சிரித்து விட்டார்.
உலகிலேயே அதிக மொழி வெறி உடையவர்கள் தமிழர்கள் என்று நினைப்போர் தமிழ் பேக்குகள்.

இப்படிக்கு காக்கா& பேக்கா கோ.

************
முகநூல் நண்பர் H V krishnaprasad எழுதி இருக்கும் இந்த கட்டூரையைப் படித்துப்பருங்கள் சிறப்பாக இருக்கிறது. இதன் மூலம் நமது மொழி உணர்வு.. வெறி இவற்றிற்கான வேறுபாட்டை நாம் உணரலாம். நமது தமிழின் சிறப்பு பற்றியும் உணரலாம். பாராட்டுக்கள் கிருஷ்ணப்பிரஷாத்.

விருப்பு வெறுப்பிறகு அப்பாற்பட்டு சொல்ல வேண்டுமானால் அன்றைக்கு நமது பாராளுமன்றத்தில் தமிழின் தொண்மையை உரைத்து தேசிய மொழி ஆகும் தகுதி ஒரு மொழிக்கு உண்டென்றால் அது நமது தமிழ் மொழிக்கு தான் உண்டு என்று யாரும் சொல்வதற்கு முன் முழங்கிய மேதை கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் ஆவார்கள் என்பதையும் இதை இந்திய வரலாறு தன்னகத்தே பதிந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

- முஹையத்தீன் பாட்ஷா

சனி, 26 ஜூலை, 2014

Face Book என்ற பெயர் சொல்லை ஏன் மொழி பெயர்க்க வேண்டும்


  • Senapathy Thirugnanasambandam ஒரு ஐயம் எனக்கு ?

    பெயர்ச்சொல்லை(facebook) ஏன் மொழி பெயர்க்க வேண்டும் ?

    inbox / draft போன்றவைகளுக்கு தேவை உள்ளது...
    9 hrs · Edited · Like
  • இராஜ. தியாகராஜன் ஃபேஸ்புக் என்பது ஒரு வணிகச் சொல். பயன்படுத்தும் தமிழன்பர்கள் மாற்றாக ஒரு தமிழ்ச் சொல் பயன்படுத்தினர். உங்களைப் போல பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் முகநூல் அமைப்பாளர்களே பெரும்பான்மைப் பயன்பாட்டினால் அதனைத் முதன்மைத் தமிழ்மொழி பெயர்ப்பாக ஏற்றுக் கொண்டனர். சஞ்சிகை என்கிற செங்கிருதப் பெயர்ச் சொல்லைக் கூட பத்திரிக்கை என்றும், நாளிதழ் என்றும் மாற்றிய போதில் கூட நிறைய எதிர்ப்புகள். டீ/ சாயா இந்தப் பெயர்ச் சொல்லைக் தேநீர் என்று பயன்படுத்திய போதில் கூட நிறைய எதிர்ப்புகள். 

    ஆப்பிள் என்கிற ஆங்கிலச் சொல்லின் வேர் கூட ape என்கிற வாலில்லா குரங்கின் வாயின் வண்ணத்தால் வந்தது. எனவே குருதியின் (அரத்தம்) வண்ணமாக இருப்பதால் ஆப்பிளை அரத்தி என்று சொல்கிறோம் புதுவையில். பிடித்தவர்கள் பயன்படுத்துகிறார்கள். தமிழிலக்கணப் புணர்ச்சியின் படி கோயில் தான் சரி; கோவில் சரியில்லைதான்; ஆனால் இத்தனை பேர்கள் பயன்படுத்துகையில் அதுவும் சரிதான். தேளின் பன்மை தேட்கள் ஆகாது; ஆனால் நாளின் பன்மை நாட்களாகவும், வாளின் பன்மை வாட்களாகவும், ஆனதை நாம் ஏற்றுக் கொண்டோம். இயன்றவரை புதுப்புனைவுகளை ஏற்பதில் தடையிருப்பது சரியில்லை. 

    மரபியலிலான செய்யுளோத்துகள் மட்டும் கொண்ட தமிழ்க் கவிதை இலக்கியத்தில், இன்று புதுப்பாக்கள், குறும்பாக்கள், துளிப்பாக்கள் இவையும் வந்தன. தமிழை நேசிக்கும் அனைவருமே ஏற்றுக் கொண்டிருக்கிறோம். 

    ஒன்றே ஒன்று மட்டும் எனக்கு ஐயம்: ஆங்கிலேயர் வாயில் வழங்க இயிலாமையால், வைத்துவிட்டார்கள் என்பதற்காக ப்ராப்பர் நவுன்களான தஞ்சாவூரை டாஞ்சுர் என்றும், பறங்கிப்பேட்டையை போர்ட்நோவா என்றும், கன்னியாகுமரியை கேப் கேமரின் என்றும், திருவனந்தபுரத்தை ட்ரிவாண்ட்ரம் என்றும், தரங்கம்பாடியை ட்ரங்க்பார் என்றும் சொன்ன்னதை ஏற்றுக் கொண்டிருந்தோம். பின்னர் முயன்று பழைய பேர்களை வைக்கவில்லையா? முதலில் சைக்கிளை மிதிவண்டி என்றும், பஸ்ஸை பேருந்து என்றும், காரை சீருந்து என்றும், ப்ளேனை ஆகாயவிமானம்/ வானூர்தி என்றும் பயன்படுத்திய போதில் சிரிக்காதவர் எவர்?
    9 hrs · Edited · Unlike · 6
  • இராஜ. தியாகராஜன் இன்னும் கொல்லம், கோழிக்கோடு, சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, மும்பை என்று நிறையச் சொல்லலாம். நான் அதிகம் இப்படிப்பட்ட கருத்தாடல்களில் அதிகம் ஈடுபடுவதில்லை நான் முகநூலி வரும் கொஞ்ச நஞ்ச நேரத்தைக் கூட அஃது வெகுவாகத் தின்றுவிடுகிறது.
    9 hrs · Like

புதன், 18 டிசம்பர், 2013

பல பொருள் ஒரு சொல்

மனிதர்களில் ஒரே பெயரில் பலரைப் பார்த்திருப்போம். அதேபோல ஒரே பெயரில் இரு வேறு பொருட்களோ, உயிரினங்களோகூட இருக்கின்றன. அதாவது ஒரே உச்சரிப்பில் வரும் வார்த்தைகள், இரு வேறு பொருளைத் தரலாம். ஆங்கிலத்தில் இதை ஹோமோபோன் என்று சொல்வார்கள். தமிழிலும் பல பொருள் தரும் சொற்கள் இருக்கின்றன. இதை பல பொருள் ஒரு மொழி என்று சொல்வார்கள். உதாரணத்துக்குச் சிலவற்றைப் பார்ப்போமா?
ஆங்கிலத்தில் கிவி (kiwi) என்னும் சொல் ஒரு பழத்தையும் பறவையையும் குறிக்கும். வார்த்தையோடு அந்தப் பழத்தையும் பறவையையும் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.
நியூசிலாந்தின் தேசியப் பறவை கிவி. இந்தப் பறவைக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. இறக்கைகளே இல்லாத பறவை இது. வீடுகளில் வளர்க்கப்படுகிற கோழியின் அளவுதான் கிவியும் இருக்கும். ஆனால் மற்ற பறவைகளின் முட்டைகளோடு ஒப்பிடும்போது, கிவியின் உடல் அளவுக்கு அதன் முட்டை மிகப் பெரியது. கிவி, ஆந்தையைப் போல பகலில் தூங்கி, இரவில் விழித்திருக்கும். இவை காடுகளில் வாழும் பறவையினம் என்பதால், காடுகள் அழிப்பு இவற்றைப் பெருமளவில் பாதித்து இருக்கிறது.
இத்தாலி, நியூசிலாந்து, சிலி, கிரீஸ், பிரான்ஸ் போன்ற நாடுகளில் பயிரிடப்படும் பழ வகை கிவி. கோழிமுட்டை அளவில் இருக்கும் இது, பார்ப்பதற்கு சப்போட்டா பழம் போலவே இருக்கும். மேல்புறம் இளம்பச்சையும் பழுப்பும் கலந்த நிறமும் உள்ளே அடர்த்தியான பச்சை நிறமோ, பொன்னிறமோ இருக்கும். நடுவே கடுகு போல சின்னச் சின்ன விதைகள் இருக்கும். இனிப்புச் சுவையுடனும் தனித்த மணத்துடனும் இருக்கும்.
தமிழில் வாரணம் என்னும் சொல் யானை, வாழை, சங்கு, கடல், தடை, கவசம், பன்றி, நிவாரணம் ஆகிய பொருட்களைத் தரும்.
வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான்
என்று நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் சொல்லியிருக்கிறார். அதாவது ஆயிரம் யானைகள் சூழ நடந்து வருகிறாராம் நாராயணன்.
தமிழ் இலக்கண நூலான பிங்கல நிகண்டு, ‘வாரணஞ்சூழ் புவி’ என்று குறிப்பிட்டிருக்கிறது. அதாவது கடலால் சூழப்பட்டிருக்கிறது இந்தப் பூமி என்று பொருள்.
அதே பிங்கல நிகண்டுவில் இன்னொரு இடத்தில் ‘வாரணத்து வாயடைப்ப’ என்று வந்திருக்கிறது. இந்த இடத்தில் வாரணம் என்பது சங்கு என்ற பொருளைத் தருகிறது.
உதாரணங்கள் போதும்தானே. புதிதாக ஒரு வார்த்தையைப் பயன்படுத்தும்போதோ, தெரிந்துகொள்ளும்போதோ அதற்கு வேறு அர்த்தமும் இருக்கிறதா என்று தெரிந்து பயன்படுத்துவோம்.
- Courtesy - Tamil Hindu daily 

நியூசிலாந்து மக்களையும் கிவி என்றுதான் அடைமொழியில் அழைப்பதுண்டு ..கிவி பழம் சீன தேசத்திலிருந்து தான் மற்றைய நாடுகளுக்கு பரவியது சீன தேசத்தின் தேசிய பழமாகவும் கிவியை பிரகடனப்படுத்தி இருக்கிறார்கள் கிவி பழம் வைட்டமின் சி அதிகம் கொண்டது

இது போல் விகடகவி என்ற வார்த்தை திருப்பி வாசித்தாலும் அதே பொருள் தரும் !!!

ஞாயிறு, 20 ஜனவரி, 2013

தமிழால் முடியும் மற்ற மொழிகளால் முடியாது

இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் தங்களது பெயரில் ஹிந்தி எனும் வார்த்தையை இணைத்துக்கொள்ள முன்வரவில்லை. முடியவும் முடியாது.

கன்னடா------முடியாது
தெலுங்கு----- முடியாது
மலையாளம்------முடியாது
ஏனைய மொழிகள்----முடியாது

ஏனென்றால் மற்ற மொழிகள் யாவும் மொழியாக மட்டுமே வறையருக்கப்பட்டது. ஆனால் தமிழில்----

தமிழ்,தமிழ்ச்செல்வி, தமிழ்ச்செல்வன் , தமிழரசன், தமிழ்க்கதிர்,தமிழ்க்கனல்,தமிழ்க்கிழான்,தமிழ்ச்சித்தன்,
தமிழ்மணி, தமிழ்மாறன், தமிழ்முடி, தமிழ்வென்றி, தமிழ்மல்லன், தமிழ்வேலன், தமிழ்த்தென்றல், தமிழ்த்தும்பி,தமிழ்த்தம்பி,தமிழ்த்தொண்டன்,தமிழ்த்தேறல், தமிழ்மறை, தமிழ்மறையான், தமிழ்நாவன், தமிழ்நாடன், தமிழ்நிலவன், தமிழ்நெஞ்சன், தமிழ்நேயன், தமிழ்ப்பித்தன், தமிழ்வண்ணன், தமிழ்ப்புனல், தமிழ்எழிலன், தமிழ்நம்பி, தமிழ்த்தேவன், தமிழ்மகன், தமிழ்முதல்வன், தமிழ்முகிலன்.

தமிழன் மட்டுமே, தமிழை மொழி மட்டுமல்லாது
உயிராக நேசிக்கிறான்!

புதன், 8 ஆகஸ்ட், 2012

"பழந்தமிழர் அளவைகள்"



ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லிட்டர்.
ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லிட்டர்.
ஒரு கலம் = அறுபத்து நாலரை லிட்டர்.
ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லிட்டர்.
ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு.
ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லிட்டர்.
ஒரு பாலாடை = முப்பது மில்லி லிட்டர்.
ஒரு குப்பி = எழுநூற்றுமில்லி லிட்டர்.
ஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம்.

முன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு.
ஐந்து சோடு = ஒரு ஆழாக்கு.
இரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு.
இரண்டு உழக்கு = ஒரு உரி.
இரண்டு உரி = ஒரு நாழி.
எட்டு நாழி = ஒரு குறுணி.
இரண்டு குறுணி = ஒரு பதக்கு.
இரண்டு பதக்கு = ஒரு தூணி.
மூன்று தூணி = ஒரு கலம்.

நிறுத்தல் அளவைகள்

மூன்றே முக்கால் குன்றி மணி எடை = ஒரு பனவெடை.
முப்பத்தி ரெண்டு குன்றி மணி எடை = ஒரு விராகன் எடை.
பத்து விராகன் எடை = ஒரு பலம்.
இரண்டு குன்றி மணி எடை = ஒரு உளுந்து எடை.
ஒரு ரூபாய் எடை = ஒரு தோலா.
மூன்று தோலா = ஒரு பலம்.
எட்டு பலம் = ஒரு சேர்.
நாற்பது பலம் = ஒரு வீசை.
ஐம்பது பலம் = ஒரு தூக்கு.
இரண்டு தூக்கு = ஒரு துலாம்.

ஒரு குன்றி எடை = நூற்றி முப்பது மில்லி கிராம்.
ஒரு பனவெடை = நானூற்றி எண்பத்தெட்டு மில்லி கிராம்.
ஒருதோலா = அண்ணளவாக பன்னிரண்டு கிராம் (துல்லியமாக 11.7 கிராம்)
ஒரு பலம் = முப்பத்தி ஐந்து கிராம்.
ஒரு வீசை = ஆயிரத்தி நானூறு கிராம்.
ஒரு விராகன் = நான்கு கிராம்.

கால அளவுகள்

இருபத்தி நான்கு நிமிடங்கள் = ஒரு நாழிகை.
இரண்டரை நாழிகை = ஒரு மணி.
மூன்றே முக்கால் நாழிகை = ஒரு முகூர்த்தம்.
அறுபது நாழிகை = ஒரு நாள்.
ஏழரை நாழிகை = ஒரு சாமம்.
ஒரு சாமம் = மூன்று மணி.
எட்டு சாமம் = ஒரு நாள்.
நான்கு சாமம் = ஒரு பொழுது.
இரண்டு பொழுது = ஒரு நாள்.
பதினைந்து நாள் = ஒரு பக்கம்.
இரண்டு பக்கம் = ஒரு மாதம்.
ஆறு மாதம் = ஒரு அயனம்.
இரண்டு அயனம் = ஒரு ஆண்டு.
அறுபது ஆண்டு = ஒரு வட்டம்.

புதன், 25 ஜனவரி, 2012

பண்டைய தமிழரின் கணித அளவைக் கூறுகள்..


பழம் நூல்களை ஆய்வு செய்யும்போது எம் தமிழர் எவ்வளவு அறிவாளிகளாகவும், நுண்ணிய சிந்தனை உடையவர்களாகவும் திகழ்ந்திருக்கிறார்கள் என்று மலைப்பாக இருக்கிறது. பெருமையாகவும் இருக்கிறது.

ஒன்று என்ற எண்ணும், அதன் பல கூறுகளும்..

1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த் துகள்.

@ நீட்டலளவு..

10 கோன் - 1 நுண்ணணு
10 நுண்ணணு - 1 அணு
8 அணு - 1 கதிர்த்துகள்
8 கதிர்த்துகள் - 1 துசும்பு
8 துசும்பு - 1 மயிர்நுணி
8 மயிர்நுணி - 1 நுண்மணல்
8 நுண்மணல் - 1 சிறுகடுகு
8 சிறுகடுகு - 1 எள்
8 எள் - 1 நெல்
8 நெல் - 1 விரல்
12 விரல் - 1 சாண்
2 சாண் - 1 முழம்
4 முழம் - 1 பாகம்
6000 பாகம் - 1 காதம்(1200 கெசம்)
4 காதம் - 1 யோசனை

@ பொன்நிறுத்தல்..

4 நெல் எடை - 1 குன்றிமணி
2 குன்றிமணி - 1 மஞ்சாடி
2 மஞ்சாடி - 1 பணவெடை
5 பணவெடை - 1 கழஞ்சு
8 பணவெடை - 1 வராகனெடை
4 கழஞ்சு - 1 கஃசு
4 கஃசு - 1 பலம்

@ பண்டங்கள் நிறுத்தல்..

32 குன்றிமணி - 1 வராகனெடை
10 வராகனெடை - 1 பலம்
40 பலம் - 1 வீசை
6 வீசை - 1 தூலாம்
8 வீசை - 1 மணங்கு
20 மணங்கு - 1 பாரம்

@ முகத்தல் அளவு..

5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி

@ பெய்தல் அளவு..

300 நெல் - 1 செவிடு
5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி
5 மரக்கால் - 1 பறை
80 பறை - 1 கரிசை
48 96 படி - 1 கலம்
120 படி - 1 பொதி
__________________
கால அளவு..

2 கண்ணிமை = 1 நொடி

2 கைநொடி = 1 மாத்திரை

2 மாத்திரை = 1 குரு

2 குரு = 1 உயிர்

2 உயிர் = 1 சணிகம்

12 சணிகம் = 1 விநாடி

60 விநாடி = 1 விநாடி-நாழிகை

2 1/2 நாழிகை = 1 ஓரை

3-3 1/2 நாழிகை = 1 முகூர்த்தம்

2 முகூர்த்தம் = 1 சாமம்

4 சாமம் = 1 பொழுது

2 பொழுது = 1 நாள்

15 நாள் = 1 பக்கம்

2 பக்கம்-30 நாள் = 1 மாதம்

6 மாதம் = 1 அயனம்

2 அயனம் -12 மாதம் = 1 ஆண்டு

60 ஆண்டு = 1 வட்டம்

நன்றி - முகமது அலி முகமது முகைதீன்

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

ஆங்கில சொற்களுக்கான தமிழ் சொற்கள்


இண்டர்நெட் என்ற வார்த்தையை இணையம் என தமிழ்படுத்தியதாக முதலில்
ஏதோ ஒரு வலையகத்தில் படித்தபோது சற்று வேடிக்கையாகத்தான் இருந்தது.
இப்போது அந்த வார்த்தையே நம்மிடையே ஒரு சாதாரண தமிழ் வார்த்தையாக
ஒன்றிப்போனது. எல்லாம் எழுதும்போது மட்டும் தான். பேச்சு வழக்கில் இன்னும்
அந்த வார்த்தையை உபயோகிக்க தைரியம் வரவில்லை. இது போலத்தான் ”கணிணி”யும்.
எழுதும் போது மட்டும் ”கணிணி” என எழுத தைரியம் வரும் நமக்கு பேச்சு வழக்கில்
கம்ப்யூட்டர் என்ற வார்த்தைதான் முந்துகிறது. சுத்த தமிழில் பேச தமிழ் வார்த்தைகள்
தெரியவேண்டும் என்பதைவிட தைரியம் வேண்டும் என்பதுதான் உண்மைபோல்
தோன்றுகிறது. என்ன செய்வது சுற்றி இருக்கும் தமிழர்கள் நாம் ”தமிழில்” பேசுவதை
வேடிக்கை பார்ப்பார்களே.

அன்பு நண்பர் V.Subramanian அவர்கள் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பிய சில தமிழ்ப்
பெயர்களின் தொகுப்பு கீழே. நன்றி அய்யா.


வ.எண்பிற மொழிப்பெயர்கள்தமிழ்ப் பெயர்கள்
1டிரேடரஸ்வணிக மையம்
2கார்ப்பரேஷன்நிறுவனம்
3ஏஜென்சிமுகவாண்மை
4சென்டர்மையம், நிலையம்
5எம்போரியம்விற்பனையகம்
6ஸ்டோரஸ்பண்டகசாலை
7ஷாப்கடை, அங்காடி
8அண்கோகுழுமம்
9ஷோரூம்காட்சியகம், எழிலங்காடி
10ஜெனரல் ஸ்டோரஸ்பல்பொருள் அங்காடி
11டிராவல் ஏஜென்சிசுற்றுலா முகவாண்மையகம்
12டிராவலஸ்போக்குவரத்து நிறுவனம் சுற்றுலா நிறுவனம்
13எலக்டிரிகலஸ்மின்பொருள் பண்டகசாலை
14ரிப்பேரிங் சென்டர்சீர்செய் நிலையம்
15ஒர்க் ஷாப்பட்டறை, பணிமனை
16ஜூவல்லரஸ்நகை மாளிகை, நகையகம்
17டிம்பரஸ்மரக்கடை
18பிரிண்டரஸ்அச்சகம்
19பவர் பிரிண்டரஸ்மின் அச்சகம்
20ஆப்செட் பிரிண்டரஸ்மறுதோன்றி அச்சகம்
21லித்தோஸ்வண்ண அச்சகம்
22கூல் டிரிங்கஸ்குளிர் சுவைப்பகம், குளிர் சுவை நிலையம்
23ஸ்வீட் ஸ்டால்இனிப்பகம்
24காபி பார்குளம்பிக் கடை
25ஹோட்டல்உணவகம்
26டெய்லரஸ்தையலகம்
27டெக்ஸ்டைலஸ்துணியகம்
28ரெடிமேடஸ்ஆயத்த ஆடையகம்
29சினிமா தியேட்டர்திரையகம்
30வீடியோ சென்டர்ஒளிநாடா மையம், விற்பனையகம்
31போட்டோ ஸ்டூடியோபுகைப்பட நிலையம், நிழற்பட நிலையம்
32சிட் பண்ட்நிதியகம்
33பேங்க்வைப்பகம்
34லாண்டரிவெளுப்பகம்
35டிரை கிளீனரஸ்உலர் வெளுப்பகம்
36அக்ரோ சென்டர்வேளாண் நடுவம்
37அக்ரோ சர்வீஸ்உழவுப் பணி
38ஏர்-கண்டிஷனர்குளிர் பதனி, சீர்வளி
39ஆர்டஸ்கலையகம், கலைக்கூடம்
40ஆஸ்பெஸ்டரஸ்கல்நார்
41ஆடியோ சென்டர்ஒலியகம், ஒலிநாடா மையம்
42ஆட்டோதானி
43ஆட்டோமொபைலஸ்தானியங்கிகள், தானியங்கியகம்
44ஆட்டோ சர்வீஸ்தானிப் பணியகம்
45பேக்கரிஅடுமனை
46பேட்டரி சர்வீஸ்மின்கலப் பணியகம்
47பசார்கடைத்தெரு, அங்காடி
48பியூட்டி பார்லர்அழகு நிலையம், எழில் புனையகம்
49பீடா ஸ்டால்மடி வெற்றிலைக் கடை
50பெனிஃபிட் பண்ட்நலநிதி
51போர்டிங் லாட்ஜத்ங்உண்டுறை விடுதி
52பாய்லர்கொதிகலன்
53பில்டரஸ்கட்டுநர், கட்டிடக் கலைஞர்
54கேபிள்கம்பிவடம், வடம்
55கேபஸ்வாடகை வண்டி
56கபேஅருந்தகம், உணவகம்
57கேன் ஒர்கஸ்பிரம்புப் பணியகம்
58கேண்டீன்சிற்றுண்டிச்சாலை
59சிமெண்ட்பைஞ்சுதை
60கெமிக்கலஸ்வேதிப்பொருட்கள்
61சிட்ஃபண்ட்சீட்டு நிதி
62கிளப்மன்றம், கழகம்,உணவகம், விடுதி
63கிளினிக்மருத்துவ விடுதி
64காபி ஹவுஸ்குளம்பியகம்
65கலர் லேப்வண்ணக்கூடம், வண்ண ஆய்வம்,
66கம்பெனிகுழுமம், நிறுவனம்
67காம்ப்ளகஸ்வளாகம்
68கம்ப்யூட்டர் சென்டர்கணிப்பொறி நடுவம்
69காங்கிரீட் ஒர்கஸ்திண்காரைப்பணி
70கார்ப்பரேஷன்கூட்டு நிறுவனம்
71கூரியர்துதஞ்சல்
72கட்பீஸ் சென்டர்வெட்டுத் துணியகம்
73சைக்கிள்மிதிவண்டி
74டிப்போகிடங்கு, பணிமனை
75டிரஸ்மேக்கர்ஆடை ஆக்குநர்
76டிரை கிளீனரஸ்உலர் சலவையகம்
77எலக்ட்ரிகலஸ்மின்பொருளகம்
78எலக்ட்ரானிகஸ்மின்னணுப் பொருளகம்
79எம்போரியம்விற்பனையகம்
80எண்டர்பிரைசஸ்முனைவகம்
81சைக்கிள் ஸ்டோரஸ்மிதிவண்டியகம்
82பேக்டரிதொழிலகம்
83பேன்சி ஸ்டோர்புதுமைப் பொருளகம்
84பாஸ்ட் புட்விரை உணா
85பேகஸ்தொலை எழுதி
86பைனானஸ்நிதியகம்
87பர்னிச்சர் மார்ட்அறைகலன் அங்காடி
88கார்மென்டஸ்உடைவகை
89ஹேர் டிரஸ்ஸர்முடி திருத்துபவர்
90ஹார்டு வேரஸ்வன்சரக்கு, இரும்புக்கடை
91ஜூவல்லரிநகை மாளிகை
92லித்தோ பிரஸ்வண்ண அச்சகம்
93லாட்ஜ்தங்குமனை, தங்கும் விடுதி
94மார்க்கெட்சந்தை அங்காடி
95நர்சிங் ஹோம்நலம் பேணகம்
96பேஜர்விளிப்பான், அகவி
97பெயிண்டஸ்வண்ணெய்கள், வண்ணப்பூச்சு
98பேப்பர் ஸ்டோர்தாள்வகைப் பொருளகம்
99பாஸ் போர்ட்கடவுச்சீட்டு
100பார்சல் சர்வீஸ்சிப்பம் செலுத்தகம், சிப்பம் அனுப்பகம்
101பெட்ரோல்கன்னெய், எரிநெய்
102பார்மசிமருந்தகம்
103போட்டோ ஸ்டூடியோஒளிபட நிலையம்
104பிளாஸ்டிக் இன்டஸ்ட்ரிநெகிலி தொழிலகம்
105பிளம்பர்குழாய்ப் பணியாளர்
106பிளைவுடஸ்ஒட்டுப்பலகை
107பாலி கிளினிக்பலதுறை மருத்துவமனை, பலதுறை மருந்தகம்
108பவர்லும்விசைத்தறி
109பவர் பிரஸ்மின் அச்சகம்
110பிரஸ், பிரிண்டரஸ்அச்சகம், அச்சுக்கலையகம்
111ரெஸ்டாரெண்ட்தாவளம், உணவகம்
112ரப்பர்தொய்வை
113சேல்ஸ் சென்டர்விற்பனை நிலையம்
114ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்வணிக வளாகம்
115ஷோரூம்காட்சிக்கூடம்
116சில்க் அவுஸ்பட்டு மாளிகை
117சோடா பேக்டரிவளிரூர்த்தொழில், காலகம்
118ஸ்டேஷனரிமளிகை, எழுதுபொருள்
119சப்ளையரஸ்வங்குநர்,
120ஸ்டேஷனரிதோல் பதனீட்டகம்
121டிரேட்வணிகம்
122டிரேடரஸ்வணிகர்
123டிரேடிங் கார்ப்பரேஷன்வணிகக் கூட்டிணையம்
124டிராவலஸ்பயண ஏற்பாட்டாளர்
125டீ ஸ்டால்தேனீரகம்
126வீடியோவாரொளியம், காணொளி
127ஒர்க் ஷாப்பட்டறை, பயிலரங்கு
128ஜெராகஸ்படிபெருக்கி, நகலகம்
129
130
எக்ஸ்ரே
ரெடிமேட் ஜுவெல்லரரி மார்ட்
ஊடுகதிர்
ஆயத்த அணிகலன் அங்காடி





காண்பது அனைத்தையும்
சந்தேகம் கொண்டு பார்
-லெனின்


"என் சரித்திரம்" டாக்டர் உ.வே.சா-வின் சுய சரித்திர வாழ்க்கை வரலாற்றுக் கதை இங்கே
தமிழில் சிறு மென் புத்தகமாக. En sarithiram Vu.Vea.Sa Life history in Tamil pdf ebook Download. Right click and Save.Download
Source:pkp.blogspot.com Copyright 2008 www.PKP.in;. All rights reserved. Click here to email us


தமிழ் புத்தாண்டு

முன்னுரை - ஆங்கில ஆண்டின் வரலாறு
தமிழ்ப் புத்தாண்டு தொடர்பான விவாதங்கள் கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இவ்வாண்டின் தொடக்கத்தில் தமிழக முதல் 'தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு' என்று அரசாணை பிறப்பித்தார். அதன்பிறகு, காலங்காலமாக சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடிவரும் உலகமெங்கும் உள்ள தமிழ் மக்களிடையே பல்வேறு ஐயங்களும் குழப்பங்களும் சலசலப்புகளும் தோன்றின. சித்திரையை ஒதுக்கவும் முடியாமல் தைத்திங்களை ஏற்கவும் முடியாமல் தமிழ் மக்கள் இன்னும் தினறிக் கொண்டிருக்கின்றனர். உண்மையில், தமிழ்ப் புத்தாண்டு எது? ஏன்? எப்படி? ஆராய்வோம் வாரீர்.

மாந்த நாகரிகம் தொடங்கிய காலம் தொட்டு வெவ்வேறு இன மக்கள் வெவ்வேறு நாட்களைத் தங்கள் புத்தாண்டாகக் கொண்டாடி வருகிறார்கள். இன்று சமய அடிப்படையில் கிறித்தவர்கள் சனவரி முதல் நாளையே புத்தாண்டின் தொடக்கமாகக் கொண்டாடுகிறார்கள். இசுலாமியர்கள் முகமது நபி மெக்காவில் இருந்து மதினாவிற்குப் புலம்பெயர்ந்த நாளில் இருந்தே ஆண்டுகளைக் கணக்கிடுகிறார்கள். இப்படியே புத்த சமயத்தவர் புத்தர் பிறந்த நாளில் இருந்து ஆண்டுகளை எண்ணுகிறார்கள்.

கிறித்தவர்களுக்கு சனவரி முதல்நாள் எப்போதுமே புத்தாண்டின் தொடக்கமாக இருந்ததில்லை. பதினெட்டாம் நூற்றாண்டுவரை யேசுபிறந்த திசம்பர் 25 ஆம் நாளே புத்தாண்டின் தொடக்கமாக இருந்தது. ஆயினும், கிறித்துவ நாட்காட்டியின் அடிப்படையிலேயே சனவரி முதல் நாள் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாட்காட்டி காலத்துக்குக் காலம் திருத்தப்பட்டு ஒழுங்குபடுத்தி வரப்பட்டிருக்கிறது.

உரோம சக்கரவர்த்தி யூலியசு சீசர் அவர்கள் கி.மு. 45 ஆம் ஆண்டு ஒரு புதிய நாட்காட்டியை அறிமுகப்படுத்தினார். அதற்கு யூலியன் நாட்காட்டி என்று பெயர். அதற்கு முந்தி ஒரு ஆண்டில் பத்து மாதங்களும் 304 நாட்கள் மட்டுமே இருந்தன. கிறித்துவ பாதிரிமார்கள் தங்களது அரசியல் நோக்கங்களுக்காக நாட்காட்டியில் உள்ள நாட்களையும் மாதங்களையும் கூட்டியும் குறைத்தும் சமயத்துக்கு ஏற்றவாறு பயன்படுத்தினார்கள். சில சமயங்களில் கையூட்டு வாங்கிக் கொண்டு ஆண்டை நீட்டியும் குறைத்தும் காட்டினார்கள்! யூலியஸ் சீசர் அந்தக் குளறுபடிகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தார். தனது பெயரில் ஒரு மாதத்தைக் கூட்டினார். அவர் கணித்த நாட்குறிப்பு கிபி 1,500 வரை பயன்பாட்டில் இருந்தது. கிமு 45ஆம் ஆண்டில் நாட்காட்டியைத் திருத்தி அமைத்ததால் அந்தக் குழப்ப ஆண்டு மொத்தம் 445 நாட்களைக் கொண்டிருந்தது.

அதன் பின் கிரிகோறியன் (Gregorian) நாட்காட்டி நடைமுறைக்கு வந்தது. ஆனால் கிபி 1900 வரை பழைய நாட்காட்டியை கிரேக்கம், உருசியா போன்ற நாடுகள் கைவிடவில்லை. இன்றும் உருசியாவின் பழைமைவாத தேவாலயங்கள் யூலியன் நாட்காட்டியைத்தான் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றன.

யூலியன் நாட்காட்டி ஒரு ஆண்டில் 365 1/4 நாட்கள் இருப்பதாகக் கணக்கிட்டது. கணக்கைச் சரிசெய்ய நாலாண்டுக்கு ஒருமுறை (Leap Year) ஒரு நாள் பிப்பிரவரி மாதத்துக்குரிய நாட்களோடு கூட்டப்பட்டது. ஆனால் உண்மையில் ஒரு ஆண்டு 365 நாட்கள், 5 மணி, 49 நிமிடம், 12 வினாடியைக் (365.2424) கொண்டது. இதனால் ஒரு புதிய சிக்கல் உருவாகியது. 128 ஆண்டுகளுக்கு ஒருமுறை 1 நாள் வித்தியாசம் ஏற்பட்டது. எனவே 1582இல் போப் கிரிகோறியன் அதைச் சரிசெய்ய 10 நாட்களைக் குறைத்தார். அதன் பின்னர் 400 ஆல் பிரிக்கக்கூடிய நூற்றாண்டுகளில் (1700, 1800, 1900) ஒரு நாள் கூட்டப்பட்டது. ஆனால் 2000இல் கூட்டப்படவில்லை.

அப்படியும் கிபி 4,000 அல்லது 5,000 ஆண்டளவில் 12 நாட்கள் வித்தியாசம் ஏற்பட்டுவிடும் எனத் தெரிய வந்தது. எனவே இந்தத் தொல்லையில் இருந்து விடுபட 1972 ஆம் ஆண்டு அணு மணிப் பொறி ஒன்றினைக் கண்டு பிடித்தார்கள். அது காட்டும் நேரமே உலகத்தின் முறைமைப்பட்ட (official) நேரம் என எல்லா நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளது.

வரலாற்றில் எகிப்தியர்கள்தான் முதன் முதலில் ஒரு ஆண்டில் 365 நாட்களைக் கொண்ட நாட்காட்டியை கிமு 4236இல் கண்டு பிடித்ததாகச் சொல்லப்படுகிறது.


தமிழர் கண்ட கால அளவீடு
பழந் தமிழகத்தில் ஆண்டுத் தொடக்கம் தை மாதமாக இருந்தது. பின்னர் ஆவணி ஆண்டின் முதல் மாதமாகக் கொள்ளப்பட்டது. பின்பு சித்திரை ஆண்டின் முதல் மாதமாக மாற்றப்பட்டது.
ஆனால் தமிழர்கள் ஞாயிறு ஆண்டைக் (365 1/4); கொண்ட நாட்காட்டியை உருவாக்கியதாகத் தெரியவில்லை. உருவாக்கியதற்கான சான்று எதுவும் இல்லை.

திங்களின் வளர்பிறை தேய்பிறை கொண்டே தமிழர்கள்; ஆண்டைக் கணித்தனர். அதனால்தான் மாதத்தை திங்கள் என்று அழைத்தனர். திங்கள் ஞாயிற்றைச் சுற்றிவர எடுக்கும் நேரம் 27 நாட்கள், 7 மணி, 43 மணித்துளிகள்.

பண்டைய நாட்களில் காலத்தைப் பெரும்பொழுது சிறுபொழுது என வகுத்தனர். இளவேனில் (சித்திரை, வைகாசி ) முதுவேனில் (ஆனி, ஆடி), கார் (ஆவணி, புரட்டாதி) கூதிர் (ஐப்பசி, கார்த்திகை) முன்பனி ( மார்கழி, தை, ) பின்பனி ( மாசி, பங்குனி) ஆறு பெரும் பொழுதாகும்.

வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை. யாமம் என்பதே ஒரு நாளில் அடங்கிய ஆறு சிறுபொழுதாகும். மேலும் ஒரு நாள் 60 நாளிகை கொண்டது என்று கணக்கிட்டனர். ஒரு நாளிகை 24 நிமிடங்களாகும்.

சங்க காலத் தமிழ் இலக்கண, இலக்கியங்கள் காலத்தை நொடி, நாழிகை, நாள், கிழமை, திங்கள், ஆண்டு, ஊழி என்று வானியல் அடிப்படையில் வரையறை செய்துள்ளன. முழுமதி நாளில் ஞாயிறும் திங்களும் எதிர் எதிராக நிற்கும் என்ற வானவியல் உண்மையைப் புறநானூற்றுப் பாடல் (65) ஒன்று தெரிவிக்கிறது.

சங்க இலக்கியங்களில் தமிழ் மாதப்பெயர்கள் காணக்கிடைக்கின்றன. தை, மாசி (பதிற்றுப்பத்து) பங்குனி (புறநானூறு) சொல்லப்பட்டுள்ளது. ஆனால் தொல்காப்பிய ஆசிரியர் இகரவீற்றுப் புணர்ச்சி, ஐகாரவீற்றுப் புணர்ச்சியை விளக்கும்போது 'திங்களும் நாளும் முந்து கிளந்தன்ன' எனக் கூறுவதைக் காணலாம். எல்லாத் திங்கள்களின் பெயர்களும் இந்த இரண்டு எழுத்தில் (இ, ஐ) முடிந்தன என்கிறார். "நாள்முன் தோன்றும் தொழில்நிலைக் கிளவி" எனும் பாடல் நாள்மீன்(நட்சத்திரம்) பற்றி பேசுகிறது. "திங்கள் முன்வரின் இக்கே சாரியை" என்ற பாடல்வரி மாதத்தைப் பற்றியது. எனவே இன்றுள்ள 12 மாதங்களும் அவர் காலத்தில் இருந்து வருகின்றன எனத் துணியலாம்.

மேலும் தொல்காப்பியர் அ,இ,உ,எ, ஒ என்னும் ஐந்து உயிர் எழுத்துக்களும் ஒரு மாத்திரை ஒலிக்கும் குறில் எழுத்துக்கள் என்கிறார். ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஒ, ஒள என்னும் ஏழு உயிர் எழுத்துக்களும் இரண்டு மாத்திரை ஒலிக்கும் நெடில் எழுத்துக்கள். மூன்று மாத்திரைகளில் எந்த எழுத்தும் ஒலிக்கப்படுவதில்லை. ஒலி மிகுதல் தேவைப்பட்டால் அந்தளவிற்குத் தேவையான எழுத்து ஒலிகளை எழுப்புதுல் வேண்டும்.

இதே போல் மெய் எழுத்துக்கு ஒலி அரை மாத்திரை. மாத்திரையின் கால அளவைச் சொல்லும்போது இயல்பாகக் கண் இமைத்தலும், விரல் நொடித்தலுமே ஒரு மாத்திரை என்னும் ஒலி அளவு. இது தெளிவாக அறிந்தோர் வழி என்கிறார் தொல்காப்பியர்.

"கண்இமை நொடிஎன அவ்வே மாத்திரை
நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட வாறே" (தொல்)
காலத்தை இவ்வளவு நுணுக்கமாகக் கணக்கிட்ட புலவர்கள், இலக்கண ஆசிரியர்கள், அறிஞர்கள் தமிழர்களுக்கென ஒரு பொதுவான தொடர் ஆண்டை வரையறை செய்யாது போயினர். அதனால் அரசர்கள் புலவர்கள் சான்றோர்கள் பிறப்பு ஆண்டு, மறைவு ஆண்டு இவற்றைத் தொடர் ஆண்டோடு தொடர்பு படுத்தி வரலாற்றைப் பதிவு செய்ய முடியாமல் போய்விட்டது.

தைத்திங்கள் முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு
ஆண்டுகள் வரலாற்றைத் தொடர்ச்சியாக பதிவு செய்யப் பயன்பட வேண்டும். அவை குழப்பத்திற்கு இடமின்றி இருத்தல் வேண்டும். தமிழர் வரலாற்றில் காலக் குழப்பம் இருப்பதற்கு தொடராண்டு முறை இல்லாதது முக்கிய காரணமாகும்.
பழந்தமிழரிடையே வியாழ ஆண்டு என்கிற அறுபதாண்டு கணக்குமுறை இருந்துவந்துள்ளது என்பதை வரலாற்றில் அறிய முடிகிறது. இந்த அறுபதாண்டு கணக்குமுறையை பின்னாளில் ஆரியர்கள் தங்கள் கையகப்படுத்திக் கொண்டு ஆரியமயமாக்கி 60 ஆண்டுகளுக்கும் சமற்கிருதப் பெயர்களைச் சூட்டி, காலப்போக்கில் தமிழரின் ஆண்டு முறையையும் வானியல் கலையையும் ஐந்திற அறிவையும் அழித்து ஒழித்தனர். தமிழரிடையே தொடராண்டு முறை இல்லாமல் போனதால் இன்று நாம் காணுகின்ற பல்வேறு தாக்குறவுகளும் பின்னடைவுகளும் தமிழினத்திற்கு ஏற்பட்டுவிட்டது.

இந்தக் குழப்பத்தை நீக்க ஐந்நூறு தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள் மறைமலை அடிகளார் தலைமையில் 1921 ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஒன்றுகூடி ஆராய்ந்தார்கள். திருவள்ளுவர் பிறந்த ஆண்டை கி.மு 31 எனக் கொண்டு, திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டை ஏற்படுத்துவதென முடிவு செய்தனர். இழந்த தொன்மைச் சிறப்புக்குரிய தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமென அவர்கள் அறிவித்தனர்.

சைவம், வைணவம், புத்தம், சமணம், கிறித்துவம், இசுலாம் என பல்வேறு சமயத்தைத் தழுயிய அந்த ஐந்நூறு சான்றோர்கள் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்ததற்குச் சரியான காரணங்களும் சான்றுகளும் இருக்க்கின்றன.

தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கு ஈராயிரம் அண்டுகளுக்கும் முற்பட்ட கழக இலக்கியன்களில் காணப்பெறும் சான்றுகள் சில:-

1. "தைஇத் திங்கள் தண்கயம் படியும்" – நற்றிணை

2. "தைஇத் திங்கள் தண்ணிய தரினும்" – குறுந்தொகை

3. "தைஇத் திங்கள் தண்கயம் போல்" – புறநாநூறு

4. "தைஇத் திங்கள் தண்கயம் போல" – ஐங்குறுநூறு

5. "தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ" – கலித்தொகை

தைப் பிறந்தால் வழி பிறக்கும், தை மழை நெய் மழை முதலான பழமொழிகள் இன்றும் தமிழ் மக்கள் நாவில் இன்றும் பயின்று வருகின்றன. இவை வாழையடி வாழையாக வாய்மொழிச் சான்றாக அமைந்துள்ளன.

இனி, தை முதல் நாளே புத்தாண்டு என்பதற்குரிய வானவியல் அடிப்படையிலான காரணத்தை காண்போம். பூமி ஒரு முறை கதிரவனைச் சுற்றிவரும் காலமே ஓர் ஆண்டாகும். இச்சுழற்சியில் ஒருபாதிக் காலம் கதிரவன் வடதிசை நோக்கியும் மறுபகுதிக் காலம் தென்திசை நோக்கியும் செல்வதாகக் காணப்படுகிறது. இதனால் ஓராண்டில் சூரியனின் பயணம், வடசெலவு (உத்ராயணம்) என்றும் தென்செலவு (தட்சனாயணம்) என்றும் சொல்லப்படும். தை முதல் ஆனி வரை ஆறு மாதம் வடசெலவும் ஆடி முதல் மார்கழி வரை தென்செலவுமாகும். அந்தவககயில், கதிரவன் வடசெலவைத் தையில்தான் தொடங்குகிறது. இந்த வானியல் உண்மையை அறிந்த பழந்தமிழர் தைத்திங்களைப் புத்தாண்டாக வைத்தது மிகவும் பொருத்தமானதே.

இப்படியும் இன்னும் பல அடிப்படை காரணங்களாலும் தை முதல் நாளை ஐந்நூறு தமிழ்ச் சான்றோர்கள் புத்தாண்டாக அறிவித்தனர். தமிழ்நாடு அரசு அதனை ஏற்றுக் கொண்டு 1972 முதல் அரசுப் பயன்பாட்டிலும் ஆவணங்களிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது.

'பத்தன்று நூறன்று பன்னூ றன்று
பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு, தை முதல் நாள், பொங்கல் நன்னாள்''

என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடலும் தமிழருக்குத் தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாள் என்பதைத் தெளிவாக்குகிறது.

தமிழ் மொழி, இன, சமய, கலை, பண்பாடு, வரலாற்று மீட்பு வரிசையில் பிற இனத்தாரின் தாகுதலால், படையெடுப்பால், மறைப்புகளால், சூழ்ச்சிகளால் இடைக்காலத்தில் சிதைக்கப்பட்ட தமிழரின் வானியல் கலையை – ஐந்திரக்(சோதிடம்) கலையை நாம் மீட்டெடுக்க வேண்டும். அப்போதுதான் தமிழரின் செவ்வியல் நெறியை நிலைப்படுத்த முடியும்.


சித்திரைப் புத்தாண்டு புராண வரலாறு
தமிழரின் ஆண்டு என்ற பெயரில் இன்று இருப்பது 60 ஆண்டுகளைக் கொண்டு சுழன்றுவரும் ஆண்டு முறைதான. இதற்கு, விக்கிரம ஆண்டு, சாலிவாகன ஆண்டு(சாலிவாகன சகம்), கலியாண்டு என்று பல பெயர்கள் விளங்குகின்றன. தமிழரின் வியாழ ஆண்டு முறையாக 60 ஆண்டு சுழற்சி முறை ஆரியமயமாக மாறிப்போன பிறகு அதற்கு தெய்வீகம் கற்பிக்கப்பட்டது. இறைவனால் உருவாக்கப்பட்டது என நம்பவைக்கப்பட்டது. மதச்சார்பு செய்யப்பட்டுப் புராணங்களில் இணைக்கப்பட்டது. மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்த கடவுளர்களின் பெயர்களோடு தொடர்புபடுத்தி மதநூல்களில் ஏற்றப்பட்டது.
அவ்வகையில், புராணக் கதையின்படி ஒரு காலத்தில் நாரத முனிவர் காமம் மேலோங்கி அலைந்தபோது அவருக்கு அறுபதினாயிரம் கோபியரோடு கொஞ்சிக் குலாவும் கிருஷ்ண பகவான் நினைவு வந்ததது. நேராக அவர் முன் போய் "'கிருஷ்ணா, சதா கோபியரோடு கொஞ்சி இன்பம் அனுபவிக்கும் தேவனே, எனக்கு யாராவது ஒரு கோபியைத் தந்து எனது காம இச்சையைத் தீர்த்து வைக்க வேண்டும்''; என வேண்டினார்.

அதற்குக் கிருஷ்ண பரமாத்மா ''நாரதரே, எந்தவொரு பெண்ணின் மனதில் நான் இல்லையோ அந்தப் பெண்ணை நீ அனுபவித்துக்கொள்'' என ஆறுதல் மொழி கூறினார்.

ஆண்டவன் அருள்வாக்கு அருளப்பெற்ற நாரதர் வீடு வீடாய் (நாயாய்) அலைந்தார். அனைத்துப் பெண்கள் மனதிலும் கிருஷ்ணனே நீக்கமறக் குடி கொண்டிருந்தார். ஒரு கோபியும் அதற்கு விதி விலக்கல்ல. ஏக்கமும், ஏமாற்றமும் அடைந்த நாரதர் மானம், வெட்கம் எல்லாவற்றையும் தொலைத்து விட்டு மீண்;டும் கிருஷ்ண பரமாத்மாவிடமே வந்தார்.

'கிருஷ்ணா! எல்லாக் கோபியர் மனதிலும் தாங்களே இருக்கக் கண்டேன். தேவரீர் என்னை இவ்விதம் சோதிக்கலாமா? காம வேட்கை எனை வாட்டுகிறது. என்னைப் பெண்ணாக மாற்றி நீரே என்னை அனுபவித்து என் வேட்கையைப் போக்க வேண்டும்"' என வேண்டி நின்றார்.

பரிதாபப் பட்ட பகவானும் அவ்விதமே நடப்பதாகக் கூறி, நாரதரைப் பெண்ணாக்கி அவரோடு கலந்து அறுபது குழந்தைகளைப் பெற்றார்.

அந்த அறுபது குழந்தைகள் தான் பிரபவ முதல் அட்சய வரையிலான ஆண்டுகள். அந்தப் பெயர்கள் ஒன்றேனும் தமிழ் அல்ல. அறிவுக்கும் அறிவியலுக்கும் ஒவ்வாத இவ்வாண்டு முறை வரலாற்றுக்கு உதவாத வகையில் உள்ளது.

இந்த அறுபது ஆண்டுகளின் பெயர்களை ஆத்திரம் கொள்ளாமல் ஆன்மீகத் தமிழர்கள் ஆர அமர அலசிப் பார்க்க வேண்டும்.

பிரபவ முதல் அட்சய வடமொழிப் பெயர்களாவது தமிழர்கள் பெருமை கொள்ளத் தக்கவாறு உள்ளதா என்றால் அப்படியும் இல்லை. எடுத்துக் காட்டாக மூன்றாவது ஆண்டின் பெயரான ""சுக்கில"" ஆண் விந்தைக் குறிக்கிறது. இருபத்துமூன்றாவது ஆண்டான விரோதி எதிரி என்ற பொருளைத் தருகிறது. முப்பத்தெட்டாவது ஆண்டு குரோதி. இதன் பொருள் பழிவாங்குபவன் என்பதாகும். முப்பத்துமூன்றாவது ஆண்டின் பெயர் விகாரி. பொருள் அழகற்றவன், ஐம்பத்து ஐந்தாவது ஆண்டான துன்மதி கெட்டபுத்தி என்று பொருள்.

இப்படிப்பட்ட அருவருக்கத்தக்க வரலாற்றக் கொண்டுவந்து தமிழனின் தலையில் கட்டிவைத்து இதுதான் தமிழ்ப் புத்தாண்டு என்று பறைசாற்றுவதில் உண்மையும் நேர்மையும் இருப்பதாகத் தோன்றவில்லை. வரலாற்றில் மாபெரும் சருக்கல் ஏற்பட்டிருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாக உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெரிகிறது.

ஆகவே, காலங்காலமாக அறிவாராய்ச்சி இன்றி குருட்டுத்தனமாகத் தமிழர்கள் சித்திரையைப் புத்தாண்டாகக் கொண்டாடி வந்திருக்கின்றனர் என்பது புலப்படுகிறது. இன்று, நிலைமை அவ்வாறு இல்லை. தமிழ்ப் புத்தாண்டு தொடர்பில் பல்வேறு ஆய்வுகளும் ஆராய்ச்சிகளும் நடைபெற்று மறைந்துகிடந்த உண்மைகள் வெளிப்பட்டுவிட்டன. இனியும் தமிழ் மக்களை மடையர்கள் என்று எண்ணிக்கொண்டு ஆதிக்க(ஆரிய)க் கூட்டம் ஆட்டம் போடாமல் அடங்கிப் போவதுதான் நல்லது. ஆரிய வழிசார்ந்தவர்கள் தங்களுக்கு எந்த ஆண்டு வேண்டுமோ வைத்துக்கொள்ளட்டும்; எந்த நம்பிக்கை வேண்டுமோ வைத்துக்கொள்ளட்டும்; சமற்கிருத மொழி வேண்டுமானால் வைத்துக்கொள்ளட்டும்; கிரந்தம் வேண்டுமானால் வைத்துக்கொள்ளட்டும்; ஆரிய வாழ்க்கை முறையை வைத்துக்கொள்ளட்டும். இவை அனைத்தையும் அவர்களுடன் வைத்துக்கொள்ளட்டும்.

ஆரியக் கூட்டத்தின் மூடத்தனங்களை எந்த நிலையிலும் – எந்தச் சூழலிலும் – எந்த வடிவத்திலும் – எந்த முறையிலும் – எந்த ஊடகத்திலும் உலகின் நனிசிறந்த இனமாகிய தமிழ் இனத்தின்மீது திணிக்க வேண்டாம்! தமிழர்மீது திணிக்க வேண்டாம்! காரணம், அவ்வாறு திணிப்பது ஆதிக்க மனப்பான்மை மட்டுமன்று மனித உரிமை மீறல் என்பதையும் எவரும் மறக்கலாகாது.

நன்றி: திருத்தமிழ்
தமிழ்ப் புத்தாண்டு வரலாறு – பாகம் 1
தமிழ்ப் புத்தாண்டு வரலாறு – பாகம் 2
தமிழ்ப் புத்தாண்டு வரலாறு – பாகம் 3
தமிழ்ப் புத்தாண்டு வரலாறு – பாகம் 4

செவ்வாய், 12 ஜூலை, 2011

வள்ளுவரின் மற்ற படைப்புக்கள்

திருவள்ளுவர் திருக்குறளை மட்டும் அருளவில்லை. அய்யன் வள்ளுவப்பெருமான் அருளிய நூல்கள் எண்ணற்றவை. இனி வரும் ஞானச்சித்தர் காலத்தில் இவை மக்கள் பயன்பாட்டிற்குவரும். அய்யன் வள்ளுவப்பெருமான் அருளிய நூல்களில் சில :
1. ஞானவெட்டியான்-1500,
2.திருக்குறள்-1330,
3. ரத்தினசிந்தாமணி-800,
4. பஞ்சரத்தனம்-500,
5.கற்பம்-300, 6.நாதாந்தசாரம்-100,
7.நாதாந்ததிறவுகோல்-100,
8.வைத்திய சூஸ்திரம்-100,
9.கற்ப குருநூல்-50,
10.முப்புசூஸ்திரம்-30,
11.வாத சூஸ்திரம்-16,
12. முப்புக்குரு-11,
13.கவுன மணி-100,
14.ஏணி ஏற்றம்-100,
15.குருநூல்-51.