கலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 6 மார்ச், 2014

அறியவை 33

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்

வாழ்க்கையின் பயனுள்ள 33 குறிப்புகள்.

1. பேசும்முன் கேளுங்கள், எழுதும்
முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன்
சம்பாதியுங்கள்

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.

3. யாரிடம் கற்கிறோமோ அவரே
ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

4. நான் மாறும்போது தானும் மாறியும், நான்
தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை.
அதற்கு என் நிழலே போதும்!

5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம்
முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை
மனிதனாக்கியது.

7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக்
குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை
ஒப்புக்கொள்கிறோம்!

8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை
வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும்
ஒரு கலை.

9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள்
இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு.
திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும்
பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.

11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில்
புறப்படுங்கள்

12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால்
பழகிக்கொள்ளுங்கள்

13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும்
நல்லவனாவாய்

14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை

15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள்
இப்படித்தான் என எண்ணிக்கொள்

16. யார் சொல்வது சரி என்பதல்ல,
எது சரி என்பதே முக்கியம்

17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை
முடிவெடுங்கள்

18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது.
பயத்தை உதறி எறிவோம்

19. நியாயத்தின் பொருட்டு
வெளிப்படையாக ஒருவருடன்
விவாதிப்பது சிறப்பாகும்

20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய்
பாதி உலகத்தை வலம் வந்துவிடும்

21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான்
துணை வேண்டும்

22. வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத்
தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச்
செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக
ஏமாந்து போகிறான்

24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும்
தம் பங்கை நடிக்கிறார்கள்

25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் .
அப்போது தான் முன்னேற முடியும்

26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது
வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன்
பணிபுரிவர்

27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும்
வென்ற மனிதனாவான்

28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக்
கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த
வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

30. கடினமான செயலின் சரியான பெயர்தான்
சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான்
கடினம்

31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால்
எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்

32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச்
செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச்
சிந்திக்க வைக்கிறது.

செவ்வாய், 17 ஏப்ரல், 2012

வர்மம்

ஆதித் தமிழன் படைத்த அற்புதமான கலைகளில் ஒன்று .இன்று உலக நாடுகள் எதிரியை அழிக்க கோடிகளைக் கொட்டி அணுகுண்டு தயாரித்துக் கொண்டிருக்கும் வேலையில், இருக்கும் இடத்தில இருந்து 1000 கிலோமீட்டர் அப்பால் உள்ள எதிரிகளை எந்த ஆயுதமும் இல்லாமல் தாக்கக் கூடிய அபூர்வக் கலைகள் படைத்தவர் நாம் என்பது உங்களுக்கு தெரியுமா ? இந்த வர்மக் கலை ஒரு கடல் இதை பற்றி எழுத ஒரு பக்கம் போதாது..அதனால் சுருக்கமாக சிலவற்றை மட்டும் உங்களுக்கு தெரிவிக்கிறேன். இந்த கலையை உருவாக்கியவர் சித்தர்களில் தலை சிறந்தவரான " அகத்தியர் " . இது உருவான இடம் பொதிகை மலை ( இன்றைய குற்றால மலை ) . "தென் பொதிகை நாதன் துணையால் பாடி வைத்தேன் முறை நன்றமே ". என்ற கி.மு வில் எழுதப்பட்ட ஒரு ஓலைச் சுவடி வரியே இதற்கு சாட்சி !." அகத்தியர் " கற்பித்த சில வர்மக்கலைகளில் "அகஸ்தியர் வர்ம திறவுகோல்","அகஸ்தியர் வர்ம கண்டி ", "அகஸ்தியர் ஊசி முறை வர்மம் ","அகஸ்தியர் வசி வர்மம்", "வர்ம ஒடிவு முறிவு ","அகஸ்தியர் வர்ம கண்ணாடி ","வர்ம வரிசை","அகஸ்தியர் மெய் தீண்டாகலை" ஆகியவை குறிப்பிடத்தக்கவை. "ஜடாவர்மன் பாண்டியன் " என்ற மன்னன் தான் இதில் வல்லவனாக திகழ்ந்தான்.பின்னர் பாண்டிய இனம் அழியத்தொடங்கியதும், இந்த கலையும் அழியத் தொடங்கியது. இதற்கு பின்னர் வந்த " சோழர்கள் " இதனை கற்றனர். பின்னர் இந்த கலை "இலங்கை", "சீனா" போன்ற நாடுகளில் பரவத் தொடங்கியது.காஞ்சியில் வாழ்ந்த போதி தர்மர் என்ற துறவி " புத்த" மதத்தை பரப்ப " சீனா " செல்லும் போது இந்த கலையும் அங்கு பரவியது.“Tenjiku Naranokaku" என்ற சீன வாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் "The fighting techniques to train the body from India " என்ற பொருளை தருகின்றது."ஹு ஷிஹ் " என்ற அமெரிகாவிர்க்கான சீன தூதர் ஒருமுறை கூறும் போது " இந்திய ஒரு சிப்பாயை கூட சீனாவுக்கு அனுப்பாமல் 20 நூற்றாண்டுகள் சீனாவை ஆண்டுள்ளது என கூறி உள்ளார். "1793 " ல் வெள்ளையர்கள் இந்தியா மீது படை எடுக்கும் போது.தாங்கள் இத கலை மூலமாக பாதிக்கப் படக்கூடாது என்பதற்காக தமிழக இளைஞ்சர்கள் இந்த கலை பயில்வதை தடை செய்தனர்.அன்று ஆரம்பமான அழிவு , இந்தியா சுதந்திரம் அடைந்தும் தொடர்கிறது !.இந்த கலையானது அனைவருக்கும் கற்று தர மாட்டாது. இதன் ஆசிரியர் தன் மாணவனை 12 வருடங்கள் அவனுடைய பழக்க வழக்கங்களை கண்காணித்த பிறகே கற்றுத் தருவார்!!.இந்த கலையின் மூலம் ஒருவர் தாக்கப்பட்டால் இதற்கென்று தனியான சிகிச்சை முறை கையாள வேண்டும் என " "அப்பனே வர்மத்தில் அடி பிடி வெட்டு குத்து கற்று பின் வரிசையுடன் பின் வர்ம இலக்கு செய்யே " என்ற வரிகள் தெரியப்படுத்துகின்றன.இதை எந்த வயதினரும் கற்கலாம்! ஆனால் யார் மட்டுமே கற்க முடியும் ? " "கர்ம வினைகள் அவமிருந்து வந்து கூடி விட்ட குறை தொட்ட குறை என விழம்பலச்சே "என்ற வரிகள் தெளிவு படுத்துகின்றது .வர்மக் கலைகளின் வகைகள் " "தொடு வர்மம்", " படு வர்மம்","தட்டு வர்மம் ","நோக்கு வர்மம் " என வகை படுத்தப்பட்டுள்ளது
தொடுவர்மத்தால் தாக்கப்பட்டவர் உடனடியாக இதன் பாதிப்பை உணர மாட்டார் .இதை உணர்வதுக்குள் இவருக்கு சிகிச்சை செய்தாக வேண்டும்.இந்த பாதிப்பானது ஒரு மணி நேரத்திலோ,ஒரு நாளிலோ, ஒரு மாததிலோ,அல்லது வருடக்கணக்கில் கூட இருக்கும் !. படுவர்மத்தால் தாக்கப்பட்டால் சிலமணி நேரத்துக்குள் பதிப்பு உணரப்படும். இதற்கு சிகிச்சையும் இந்த காலத்திற்குள் செய்தாக வேண்டும் !.தட்டு வர்மம் யாருக்கும் கற்று தரப்படமாட்டாது.இது மிகவும் மோசமான பிரிவு .ஆசான் மனது வைத்தால் மட்டுமே இது நடக்கும் .நோக்குவர்மம் தான் அனைத்திலும் உச்சமானது யாரையும் தொடமால் கண் பார்வையாலேயே தாக்கி உயிரிழக்க வைக்க முடியும் ! உதாரனத்திற்க்கு சென்னையில் உட்கார்ந்து கொண்டு மதுரையில் உள்ளவரை தாக்கலாம் ! அதே போல் சென்னையில் இருந்தே மதுரையில் இருப்பவரின் எல்லா நோய்களையும் குணப்படுத்தலாம் !!!.ஒரே சமயத்தில் எந்த ஆயுதமும் இல்லாமல் நூறு பேரை தாக்கும் வல்லமை கொண்டது இந்த கலை, ஆனால் இது யாருக்கும் கற்று தர படமாட்டாது. ஆசான் தன மாணவன் ஒழுக்கமானவன் என முடிவு செய்தால் வேண்டுமானால் இதை கற்கலாம் " தமிழர்களாய் பிறந்ததற்கு ஏதோ ஒரு ஜென்மத்தில் நாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும் " என்று தான் எனக்கு தோன்றுகிறது. " இப்படிப்பட்ட கலைகளை அழிய விடாமல் பாதுகாப்பது, ஒவ்வொரு தமிழனின் கடமை. இனியாவது விழித்துக்கொள்வோம் !!!.