ஷஃபிய்யா காதரிய்யா ஆக்கங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஷஃபிய்யா காதரிய்யா ஆக்கங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 15 நவம்பர், 2015

ஆன்மீகம் அறிவோம் .... - ஷஃபிய்யா காதரிய்யா

ஆன்மாவைப் பற்றி பேசும் கலைக்கு ஆன்மீகம் என்று பெயர்.உடலைவிட ஆன்மா உயர்ந்தது.ஏனென்றால் உடல் அழியும் தன்மையுள்ளது.ஆன்மா அழியாதது.
‘’ உடல் பலத்தைவிட ஆன்ம பலம் மேலானது ஏன் தெரியுமா ? உடல் பலம் கல்லை உடைக்கும் இரும்பை பிளக்கும் ஆனால் , ஆன்மா பலம் சந்திரனையே பிளக்கும் “”
படைப்பின் நோக்கம் :-
இறைவன் அருள் மறையில் கூறுகிறான் :
மனித இனத்தையும் ஜின் இனத்தையும் என்னை வணங்குவத்ற்காகவே தவிற படைக்கவில்லை [ 51=56 ]
ஆனால் குர்ஆனின் விரிவுறையாளர்களின் தலைவர் ஹஜரத் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் இந்த ஆயத்தில் இடம் பெற்றவுள்ள “ லியஃபுதூன் “ [ வணங்குவதற்காக ] என்ற வார்த்தைக்கு “ லியஃரிஃபூன் “ [ என்னை அறிந்து வணங்குவதற்காக ] என்று பொருளாக்கம் செய்துவுள்ளார்கள்
எனவே நம்முடைய அமல்கள் இறைவனிடத்தில் அங்கீிகரிக்க வேண்டுமே ஆனால் இறைஞானம் கலந்த வணக்கம்மாக இருக்க வேண்டுமே தவிர ! ஏதோ சடங்காக ,சம்பிரதாயமாக இருக்க கூடாது .
இறைஞானம் என்பது வெரும் வாய்வார்த்தையால் மட்டும் முழங்குவது அல்ல !
நம்முடைய வாழ்கையின் உயீர் நாடி துடிப்பு என்பதை விளங்கவேண்டும். இதனால் தான்
கல்விகடல் இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறினார்கள் :-
“ ஒரு மனிதன் இவ்வுலகில் எல்லாம் பெற்று இறைஞானம் மட்டும் பெறவில்லையானால் எதையும் பெறாதவனைப் போன்றவனாவான்.அதே நேரத்தில் இறைஞானம் மட்டும் பெற்ற வேறு எதைப் பெறாவிட்டாலும் எல்லாம் பெற்றவனைப் போன்றவனாவான்.
இறைஞானத்தின் முக்கியதுவம் :-
நமது இமாமுன இமாமுல் அஃழம் அபூஹனீஃபா [ ரலியல்லாஹூ அன்ஹூ ] அவர்களிடம் தாங்களு வயது என்ன ? என்று கேட்கப்பட்டது.அதற்கு இமாமவர்கள் :- “ இரண்டு “ என்று பதில் கூறினார்கள்.இந்த பதிலைக் கேட்ட அவர்களின் மாணவர்களான இமாம் அபூ யூசுப், இமாம் முஹம்மது ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ஆச்சரியப்பட்டவர்களாக இமாம் அஃழம் அபூஹனீஃபா ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களிடம் திருப்பவும் கேட்டார்கள். இமாம் அவர்களே ! தலைமுடி தாடியெல்லாம் பஞ்சைப் போன்று நரைத்து முதிர்ந்த நிலையில் இருக்கும் தாங்கள்வயது இரண்டு என்கிறீர்களே அதற்கான விளக்கம் யாது என்றார்கள்.அப்போது இமாமுல் அஃழம் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் அவர்களின் திருப் பேரரான இமாம் ஜஃபார் ஸாதிக் நாயகம் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களின் சமூகத்தில் இரண்டு ஆண்டு தங்கியிருந்து அகமிக ஞானங்களைப் படித்தேன் எனவே அந்த இரண்டு ஆண்டுகளைத்தான் என் வாழ்வில் பொற்காலமாக கருதுவதுடன் அந்த இரண்டு ஆண்டுகளைத்தான் என் வயதாகவும் நினைக்கின்றேன் என்று கூறினார்கள்
சூஃபியாக்கள் சொல்லிக்காட்டுவார்கள் :-
“”என்று நீ பிறந்தாயோ அன்றிலிருந்து உனது வயது தொடங்குவதில்லை.எப்போது இறைவனை அறிய முற்படுகிறாயோ அப்போதிலிருந்து உனது வயது ஆரம்பிக்கிறது.””
முதல் பணி :-
இறைஞானத்தை பெறவேண்டும் என்று பயணம் புறப்பட்ட மனிதன் தனது இலக்கை அடைய வேண்டுமானால் முதன் முதலாக அவன் செய்ய வேண்டிய முதல் பணி உள்ளத்தை தூய்மைப்படுத்துவது தான் இறைவன் அருள் மறையில் பதினோரு சத்தியங்கள் செய்துவிட்டு “” உள்ளத்தை தூய்மைப்படுத்தியவர் வெற்றி கண்டார் ,உள்ளத்தை மாசுபடுத்தியவர் தோல்வி அடைந்தார்”” என்று குறிப்பிடுகிறான்.குர்ஆனில் வேறு எதைச் சொல்வதற்க்கும் இத்தனை சத்தியங்கள் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
இறைவன் 11 சத்தியம் இடுகிறான் என்றால் அந்த செய்தி எவ்வளவு முக்கியமாக இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்.உள்ளத்தை சுத்தப் படுத்துவது மிக முக்கியமான விசையமா என்று பார்த்தால் இறைவன் தன் தூதர்களை அனுப்பிய நோக்கம் பற்றி கூறிகாட்டும் போது இப்படி சொல்லுகிறான்
“ இறைத்தூதர் மக்களுக்கு இறைவனின் வசனங்களை ஓதிக் காட்டுவார்.மேலும் ஞானங்களை கற்றுக் கொடுப்பார் மக்களின் உள்ளங்களை தூய்மைப்படுத்துவார்.
[ 1 ] = ஓதிக்காட்டுவார்
[ 2 ] = ஞானத்தை கற்றுத்தருவார்
[ 3 ] = உள்ளத்தை தூய்மை படுத்துவார்
உள்ளத்தை தூய்மைப்படுத்துதல் என்றால் நெஞ்சைப் பிளந்து இதையத்தை வெளியே எடுத்து சோப்புப் போட்டு சுத்தம் செய்ய வேண்டும் என்பதல்ல பொருள் ‘ நான் – எனது ‘ என்ற ஆணவத்தை அழிப்பது தான் உளத்தூய்மை.
‘’ நான் மறையைக் கற்றவன் ஞானியில்லை தன்னுள் தான் மறைய கற்றக் கொண்டவனே ஞானி என்று தமிழ் கூறும் நல்லுலகம் இயம்பும். நான்கு வேதங்களையும் கரைத்துக் குடித்துவிட்டால் மட்டும் ஞானியாகி விட முடியாது.
‘ நான் ‘ என்ற அகந்தை மமதையை தன்னுள் மறையகற்றுக் கொண்டால்தான் ஞானியாக முடியும்.
தகுதியுள்ள ஆசான் அவசியம் :-
உள்ளத்தூய்மை பெற்று இறைவனை அறிய கல்வி இருவகைப்படும்
[ 1 ] = தாளைப் படித்து பெருவது
[ 2 ] = ஆசானைப் பிடித்து பெருவது
இறைவனைப் பற்றி அறிந்து கொள்ள தாளைப் படிக்கக்கூடாது ஏன் என்றால் ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது.எனவே ஆசானைத்தான் பிடித்து ஆகவேண்டும்.இன்றியமையாத அவசியத் தேவை தகுதியுள்ள ஓர் ஆசானைப் பெருவதுதான் இறைவன் குர்ஆனில் கூறினான்: - [25-59] ‘ ரஹ்மானைப் பற்றி தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் ‘
நல்வழிகாட்டும் இத்தகைய ஆசான் ஒருவருக்கு கிட்டவில்லையானால் அது வழிகேட்டின் அடையாளமென்பதை இறைவன் எச்சரிக்கை விடுக்கிறான்.
இறைவன் யாரை வழிகெடுக்கிறானோ அவருக்கு நேர்வழி காட்டும் ஆசிரியரை [ நபியே ] நீங்கள் நிச்சயம் பெறமாட்டீர்கள். [ 18=17 ]
உலகப்பற்றை துறத்தல் :-
இவ்வுலகில் நாமிருந்தாலும் உலக ஆசை நமது இதயங்களில் நுழைந்து விடாமல் நம்மை நாம் தற்காத்துக் கொள்ள ஆன்மீகப் பாதை அவசியம் “ மறுமை வாழ்வுதான் உண்மையான வாழ்க்கை “ என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் இவ்வுலகில் நாம் இருக்கிறோம் என்று சொல்லலாமே தவிர ,வசிக்கிறோம் என்று கூறக்கூடாது ஏனென்றால் ‘ வசித்தல் ‘ என்பதற்கும் ‘ இருத்தல் ‘ என்பதற்க்கும் வித்தியாசமுண்டு .அதனால் தான் வீட்டில் வசிக்கிறான் என்றும் ஜெயிலிலே இருக்கிறான் என்றும் கூறுகிறோம்.
ஏன் தெரியுமா ?
வீட்டிலே கதவுக்கு தாழ்ப்பாள் உட்புறமிருக்கும்.
ஜெயிலில் கதவுக்கு தாழ்ப்பாள் வெளிப்புறமிருக்கும்
வீட்டில் கதவை நாம் சாத்துவோம்.
ஜெயிலில் கதவை பிறர் சாத்துவார்கள்
வீட்டில் நம்விருப்பப்படி வாழ்கிறோம்
ஜெயிலில் பிறர் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் !
இவ்வுலகில் நாம் தாமரை இலை நீரைப்போல் இருக்க வேண்டும்,நீர் இலையில் இருக்கும் ஆனால் ஒட்டாமல் இருக்கும்.படகு தண்ணீரில் இருந்தால் தவறில்லை.தண்ணீர் படகுகள் வந்தால்தான் ஆபத்து.
இவ்வுலகில் நாமிப்பது தவறில்லை,உலகம் நம் உள்ளத்துக்குள் வருவது தான் ஆபத்து.
இதனால் தான்
முஹையீதீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் கூறினார்கள் :-
பூமியிலே உள்ள [ எனது தோட்டங்கள் மற்றும் ] செல்வங்கள் பூமியில்தான் உள்ளன. எனது உள்ளத்தில் இறைவன் மட்டும் இருக்கிறான்.
வணக்கம் எவ்வாறு அமைய வேண்டும் மென்பதை இறைத்தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் விளக்கினார்கள் :-
இறைவன் நீ பார்ப்பது போன்று வணங்கவேண்டும்.நீ அவனை பார்க்காவிட்டாலும் அவன் உன்னை பார்த்து கொண்டு இருக்கிறான் என்ற உணர்வோடாவது வணங்க வேண்டும்
ராபியத்துல் அதவிய்யா ரழியல்லாஹூ அன்ஹா அவர்கள் இறைவனிடம் அடிக்கடி முறையிடுவார்கள்;-
இறைவனே ! நான் உன்னை வணங்குவது நீ படைத்திருக்கிற சொர்க்கத்தின் மீது ஆசைப்பட்டல்ல.நரகத்தை எண்ணி அஞ்சியுமல்ல நான் உன்னை வணங்குகிறேன் .ஏன் தெரியாது ? உன்னுடைய திருப்பொருத்தம் அடைய வேண்டமென்பதற்காக
வேண்டுகோள் :-
நாம் படைக்கப்பட்டதின் நோக்கமும் மறுமையின் வெற்றியும் நிறைவேற வேண்டுமானால் ஆன்மீகம் அவசியம் என்பதை அறிந்துள்ள சகோதரர்களில் சிலர் இன்றளவும் சொல்கிறார்கள்.
பக்குவம் அடைந்த பிறகு பைஅத் பெருகிறேன்.
நாம் கேட்பது
பக்குவம் அடைந்து விட்டால் பைஅத் எதற்கு ?
பக்குவடைவதற்க்கு தானே பைஅத் .
நோய் நீங்குவதற்குத்தானே மருந்து !
அதை விட்டுவிட்டு நோய் போன பிறகு மருந்துண்ணுகிறேன் என்றால் என்ன அர்த்தம்.
நீச்சல் தெரிந்தபிறகுதான் தண்ணீரில் இறங்குவேன் என்றால் நடக்கிற காரியமா ?
குழந்தை நடைபயில சாதனம் அவசியம்
இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வர விளக்கு அவசியம்
இறைவனை அண்மிக்க ஆன்மீகம் அவசியம் அவசியம் அவசியம்..
வழி கெட்டோர் யார்ராயினும் அவர்களுக்கு நேர் வழி பெற துஆ செய்பவர்களாக நாம்மாக இருப்போம்

பெருமானாரின் பேரொளியிலிருந்து வையகம் பிறந்தது


💓💓💓💓💓💓💓💓💓💓
💠 வையகக் காரணி, அகிலத்தின் அருட்பிளம்பு நபிகள் கோமான் ஈருலக இரட்சகர் ஏந்தல் நபி முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் முதல் படைப்பு என்றும்,அல்லாஹுத்தஆலா அவர்களின் ஒளியையே முதலில் படைத்தான். இந்த ஒளியிலிருந்தே அனைத்துப் படைப்பினங்களையும் வெளியாக்கினான் என்றும்,
சுன்னத் வல் ஜமாஅத்தினர் கூறி வருகின்றனர்.
💠 ஸஹாபாக்கள் காலம் முதல் இதுநாள்வரை இக்கருத்து அறிஞர்களால் உரைக்கப்பட்டும்,வரையப்பட்டும் வந்துள்ளது.
நபிகள் நாயகத்தின் வரலாற்று நூற்களிலும், ஹதீதுப் பெரு நூற்களிலும் திருமறை விரிவுரைகளிலும், மௌலிது நூற்களிலும் இக்கருத்து முக்கியத்துவம் கொடுத்து கூறப்பட்டுள்ளது.
💠 இறைவனின் முதல் படைப்பு தண்ணீர்தான் படைக்கப்பட்டது என்று கூறுபவர்கள் குர்ஆன் ஷரீப், ஹதீஸ்களை, இமாம்களின் கருத்துகளை தெளிவாக விளங்கிக்கொள்ளாததே அடிப்படை காரணமாகும் எனவே முதல் படைப்பு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தான், அல்லாஹ்வின் ஒளியிலிருந்து படைக்கப்பட்ட முதல் ஒளியே நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்.
அவர்களின் ஒளியிலிருந்துதான் எல்லாம் படைக்கப்பட்டன என்பதை தக்க ஆதாரத்துடன் நிறுவியுள்ளோம். கவனமாகப் படியுங்கள்! உண்மையை தெளிவீர்கள்!
💎 அல்லாஹ்வின் தூதரே!
என் தாயும் என் தந்தையும் தங்களுக்குஅர்ப்பணமாகட்டும்!
அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் படைப்பதற்கு முன்னர் முதலில் படைத்தது எது என்று எனக்கு அறிவியுங்கள் என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,ஜாபிரே! அல்லாஹ் அனைத்து பொருட்களையும் படைப்பதற்கு முன்னர் உம்முடைய நபியுன் ஒளியை அவனுடைய ஒளியிலிருந்து படைத்தான்.
அந்த ஒளியை அல்லாஹ் நாடியவாறு வல்லமை கொண்டு சுற்றக் கூடியதாக ஆக்கினான். அந்த நேரத்தில் லவ்ஹ் (ஹுல் மஹ்ஃபூல்) இருக்கவில்லை, பேனா இருக்கவில்லை, சொர்க்கம், நரகம், வானவர்கள்,வானம், பூமி, சூரியன், சந்திரன், ஜின், மனிதன் (என்று யாரும்) இருக்கவில்லை. அல்லாஹ் படைப்பினங்களைப் படைக்க எண்ணிய போது அந்த ஒளியை நான்கு பகுதியாகப் பிரித்தான்.
முதல் பகுதியிலிருந்து பேனாவைப் படைத்தான். இரண்டாம் பகுதியிலிருந்து லவ்ஹ் (ஹுல் மஹ்ஃபூல்) ஐப் படைத்தான். மூன்றாம் பகுதியிலிருந்து அர்ஷைப் படைத்தான். பின்னர் நான்காம் பகுதியை (மீண்டும்) நான்கு பகுதிகளாகப் பிரித்தான்.
அதன் முதல் பகுதியில் அர்ஷைச் சுமப்பவர்களைப் படைத்தான். இரண்டாம் பகுதியிலிருந்து குர்ஷியைப் படைத்தான். மூன்றாம் பகுதியிலிருந்து ஏனைய வானவர்களைப் படைத்தான்.பின்னர் நான்காம் பகுதியை நான்கு பகுதிகளாகப் பிரித்தான்.அதன் முதல் பகுதியிலிருந்து வானங்களைப் படைத்தான். இரண்டாம் பகுதியிலிருந்து பூமிகளைப் படைத்தான். மூன்றாம் பகுதியிலிருந்து சொர்க்கம், நரகத்தைப் படைத்தான்.பின்னர் நான்காம் பகுதியை நான்கு பகுதிகளாகப் பிரித்தான்.
அதன் முதல் பகுதியில் முஃமின்களின் பார்வையின் ஒளியைப் படைத்தான். இரண்டாம் பகுதியிலிருந்து அவர்களின் உள்ளங்களின் ஒளியைப் படைத்தான். அதுதான் அல்லாஹ்வை அறிதலாகும். மூன்றாம் பகுதியிலிருந்து மனிதனின் ஒளியைப் படைத்தான். இதுதான் தவ்ஹீத் என்ற லாயிலாஹ இல்லல்லாஹ், முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் என்பதாகும். (நான்காம் பகுதியைக் கொண்டு ஏனைய படைப்புகளைப் படைத்தான்)
(நூல் : கஷ்புல் கஃபா, பாகம்:1, பக்கம் :265)
1⃣ நிச்சயமாக அல்லாஹ்விடம் இருந்து பேரொளியும்,தெளிவும் உள்ள ஒரு வேதம் (இப்போது) உங்களிடம் வந்திருக்கிறது.
(அல்குர்ஆன் - 5: 15)
2⃣ அல்லாஹ் வானங்கள் பூமியின் பிரகாசமாக இருக்கின்றான். அவனது பிரகாசத்திற்கு உதாரணம் விளக்கு இருக்கும் ஒரு மாடத்திற்கு ஒப்பாகும். அவ்விளக்கு ஒரு பளிங்குக் கிண்ணத்தில் இருக்கின்றது. அந்தக் கிண்ணமோ முத்தாலாகிய ஒரு நட்சத்திரத்தைப்போல் (பிரகாசித்துக் கொண்டிருக்கிறது).
3⃣ நபியே! நிச்சயமாக நாம் உம்மை (மனிதர்களுக்கு) சாட்சியாகவும்,நட்செய்தி கூறுபவராகவும்,அச்சமூட்டி எச்சரிக்கைசெய்பவராகவும் அனுப்பி வைத்திருக்கின்றோம். மேலும் அல்லாஹ்வின் அனுமதியின்படி (ஜனங்களை நீர்) அவன்பால் அழைப்பவராகவும் ஒளி வீசும் (மணி) விளக்காகவும் (இருக்கின்றீர்கள்).
(அல்குர்ஆன் - 33 : 45,46)
4⃣ அல்லாஹ்வுடைய ஒளியை தம் வாய்களால் (ஊதி) அணைத்து விடலாம் என்று இவர்கள் கருதுகின்றனர். அந்நிராகரிப்போர் வெறுத்தபோதிலும் அல்லாஹ் தன்னுடைய பிரகாசத்தை (உலகமெங்கும் ஒளி வீசும்படி) பூர்த்தியாகவே ஆக்கி வைப்பான்.
(அல்குர்ஆன் - 61 : 8)
5⃣ இவர்கள் தங்கள் வாய்களைக்கொண்டே (ஊதி) அல்லாஹ்வுடைய பிரகாசத்தை அணைத்துவிட விரும்புகின்றனர். எனினும், இந்நிராகரிப்போர் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன்னுடைய பிரகாசத்தை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்கப்போவதில்லை
(அல்குர்ஆன் - 9 : 32)
 குறிப்பு : முதல் திருவசனத்தில் “நூர்“ என்ற சொல் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களையே குறிக்கும். வெளிச்சமில்லாமல் புத்தகத்தை படிக்க முடியாதது போன்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வழிகாட்டுதல் இன்றி திருக்குர்ஆனை விளங்க முடியாது.
 இரண்டாவது திருவசனத்தில் அல்லாஹ்வுடைய “நூர்“ என்று சுட்டிக்காட்டப்படும் வாக்கியமும்,பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களையே குறிக்கும். காரணம் அல்லாஹ் ஒப்பு உவமைகளை விட்டும் பரிசுத்தமானவன். ஆனால்,இத்திருவசனத்தில் அல்லாஹ்வின் “நூர்“ - (ஒளி)க்கு உவமை கூறப்பட்டுள்ளது. அதனால் இங்கு குறிக்கப்படும் நூர் - ஒளி - றஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களையே குறிக்கும்.
 மூன்றாவது திருவசனத்தில் ‘சிறாஜுன் முனீர்‘ பிரகாசிக்கும் தீபம் என்று நாயகமவர்களை அல்லாஹ் குறிப்பிடுகின்றான். திருக்குர்ஆனின் மற்றுமொரு இடத்தில் சூரியனையும் “சிறாஜுன் முனீர்“ என்று குறிப்பிட்டுள்ளான். - ஒளி என்பது தானும் வெளியாகி ஏனையவற்றையும் வெளியாக்குவதற்கு கூறப்படும். சூரியன் தானும் பிரகாசித்து சந்திரன், நட்சத்திரங்கள்,உள்ளிட்ட பல்வேறு கிரகங்களையும்,தாரகைகளையும் பிரகாசிக்கச் செய்கின்றது.
இவ்வாறு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பிரகாசிக்கும் பேரொளியாக இருப்பதுடன், நபிமார்கள் ஸஹாபாக்கள்,வலிமார்கள் உள்ளிட்டோரை பிரகாசிக்கச் செய்பவர்களாகவும் விளங்குகின்றார்கள்.
 நான்காவதும், ஐந்தாவதும் திருவசனங்களில் குறிப்பிடப்படுகின்ற “நூர்“ ஒளி என்பது றஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களையே குறிக்கும். காபிர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை அழித்து விட பகீரதப்பிரயத்தனம் செய்தனர். ஆனால் அல்லாஹுத்தஆலா பெருமானாரின் அனைத்துப் பணிகளையும் தடையின்றி பூர்த்தியாக்கினான்.
 முதல் திருவசனத்தில் வரும் “நூர்“ என்பது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைக் குறிக்கும் என்று தப்ஸீர் ஜலாலைன் விளக்கம் சொல்கிறது.
“தப்ஸீர் ஜலாலைன்“ இன் விரிவுரைத் தப்ஸீரான தப்ஸீர் ஸாவியில் “நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை நூர் - ஒளி என்று குறிப்பிடக் காரணம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பார்வைகளை ஒளி பெறச்செய்கிறார்கள். மேலும்,வெற்றியின் பக்கம் அவற்றுக்கு வழிகாட்டுகிறார்கள். மேலும்,புறப்புலன்களால் பார்க்கப்படும் காட்சிக்கும், அகப்புலன்களால் அறியப்படும் அறிவுக்கும்,நபியவர்கள் அஸலாக - மூலமாக விளங்குகின்றார்கள் என்றும் வரைந்துள்ளார்கள்.“
 இதே கருத்தையே தப்ஸீர் பைழாவி, தப்ஸீர் மதாரிக்,தப்ஸீர் காஸின் உள்ளிட்ட அநேக தப்ஸீர்கள் கூறுகின்றன. இவற்றுள் தப்ஸீர் ஜலாலைன், தப்ஸீர் ஸாவி,தப்ஸீர் பைழாவி, தப்ஸீர் மதாரிக் ஆகிய தப்ஸீர்கள் அறபு மத்ரஸாக்களின் பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருப்பது ஈண்டு கவனிக்கத்தக்கது.
💠 நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் எதார்த்தம் “ஒளி“ என்பதை ஹதீது நூற்கள் தெளிவாக பறைசாற்றுகின்றன.