ஞாயிறு, 15 நவம்பர், 2015

ஆன்மீகம் அறிவோம் .... - ஷஃபிய்யா காதரிய்யா

ஆன்மாவைப் பற்றி பேசும் கலைக்கு ஆன்மீகம் என்று பெயர்.உடலைவிட ஆன்மா உயர்ந்தது.ஏனென்றால் உடல் அழியும் தன்மையுள்ளது.ஆன்மா அழியாதது.
‘’ உடல் பலத்தைவிட ஆன்ம பலம் மேலானது ஏன் தெரியுமா ? உடல் பலம் கல்லை உடைக்கும் இரும்பை பிளக்கும் ஆனால் , ஆன்மா பலம் சந்திரனையே பிளக்கும் “”
படைப்பின் நோக்கம் :-
இறைவன் அருள் மறையில் கூறுகிறான் :
மனித இனத்தையும் ஜின் இனத்தையும் என்னை வணங்குவத்ற்காகவே தவிற படைக்கவில்லை [ 51=56 ]
ஆனால் குர்ஆனின் விரிவுறையாளர்களின் தலைவர் ஹஜரத் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் இந்த ஆயத்தில் இடம் பெற்றவுள்ள “ லியஃபுதூன் “ [ வணங்குவதற்காக ] என்ற வார்த்தைக்கு “ லியஃரிஃபூன் “ [ என்னை அறிந்து வணங்குவதற்காக ] என்று பொருளாக்கம் செய்துவுள்ளார்கள்
எனவே நம்முடைய அமல்கள் இறைவனிடத்தில் அங்கீிகரிக்க வேண்டுமே ஆனால் இறைஞானம் கலந்த வணக்கம்மாக இருக்க வேண்டுமே தவிர ! ஏதோ சடங்காக ,சம்பிரதாயமாக இருக்க கூடாது .
இறைஞானம் என்பது வெரும் வாய்வார்த்தையால் மட்டும் முழங்குவது அல்ல !
நம்முடைய வாழ்கையின் உயீர் நாடி துடிப்பு என்பதை விளங்கவேண்டும். இதனால் தான்
கல்விகடல் இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறினார்கள் :-
“ ஒரு மனிதன் இவ்வுலகில் எல்லாம் பெற்று இறைஞானம் மட்டும் பெறவில்லையானால் எதையும் பெறாதவனைப் போன்றவனாவான்.அதே நேரத்தில் இறைஞானம் மட்டும் பெற்ற வேறு எதைப் பெறாவிட்டாலும் எல்லாம் பெற்றவனைப் போன்றவனாவான்.
இறைஞானத்தின் முக்கியதுவம் :-
நமது இமாமுன இமாமுல் அஃழம் அபூஹனீஃபா [ ரலியல்லாஹூ அன்ஹூ ] அவர்களிடம் தாங்களு வயது என்ன ? என்று கேட்கப்பட்டது.அதற்கு இமாமவர்கள் :- “ இரண்டு “ என்று பதில் கூறினார்கள்.இந்த பதிலைக் கேட்ட அவர்களின் மாணவர்களான இமாம் அபூ யூசுப், இமாம் முஹம்மது ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ஆச்சரியப்பட்டவர்களாக இமாம் அஃழம் அபூஹனீஃபா ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களிடம் திருப்பவும் கேட்டார்கள். இமாம் அவர்களே ! தலைமுடி தாடியெல்லாம் பஞ்சைப் போன்று நரைத்து முதிர்ந்த நிலையில் இருக்கும் தாங்கள்வயது இரண்டு என்கிறீர்களே அதற்கான விளக்கம் யாது என்றார்கள்.அப்போது இமாமுல் அஃழம் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் அவர்களின் திருப் பேரரான இமாம் ஜஃபார் ஸாதிக் நாயகம் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களின் சமூகத்தில் இரண்டு ஆண்டு தங்கியிருந்து அகமிக ஞானங்களைப் படித்தேன் எனவே அந்த இரண்டு ஆண்டுகளைத்தான் என் வாழ்வில் பொற்காலமாக கருதுவதுடன் அந்த இரண்டு ஆண்டுகளைத்தான் என் வயதாகவும் நினைக்கின்றேன் என்று கூறினார்கள்
சூஃபியாக்கள் சொல்லிக்காட்டுவார்கள் :-
“”என்று நீ பிறந்தாயோ அன்றிலிருந்து உனது வயது தொடங்குவதில்லை.எப்போது இறைவனை அறிய முற்படுகிறாயோ அப்போதிலிருந்து உனது வயது ஆரம்பிக்கிறது.””
முதல் பணி :-
இறைஞானத்தை பெறவேண்டும் என்று பயணம் புறப்பட்ட மனிதன் தனது இலக்கை அடைய வேண்டுமானால் முதன் முதலாக அவன் செய்ய வேண்டிய முதல் பணி உள்ளத்தை தூய்மைப்படுத்துவது தான் இறைவன் அருள் மறையில் பதினோரு சத்தியங்கள் செய்துவிட்டு “” உள்ளத்தை தூய்மைப்படுத்தியவர் வெற்றி கண்டார் ,உள்ளத்தை மாசுபடுத்தியவர் தோல்வி அடைந்தார்”” என்று குறிப்பிடுகிறான்.குர்ஆனில் வேறு எதைச் சொல்வதற்க்கும் இத்தனை சத்தியங்கள் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
இறைவன் 11 சத்தியம் இடுகிறான் என்றால் அந்த செய்தி எவ்வளவு முக்கியமாக இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்.உள்ளத்தை சுத்தப் படுத்துவது மிக முக்கியமான விசையமா என்று பார்த்தால் இறைவன் தன் தூதர்களை அனுப்பிய நோக்கம் பற்றி கூறிகாட்டும் போது இப்படி சொல்லுகிறான்
“ இறைத்தூதர் மக்களுக்கு இறைவனின் வசனங்களை ஓதிக் காட்டுவார்.மேலும் ஞானங்களை கற்றுக் கொடுப்பார் மக்களின் உள்ளங்களை தூய்மைப்படுத்துவார்.
[ 1 ] = ஓதிக்காட்டுவார்
[ 2 ] = ஞானத்தை கற்றுத்தருவார்
[ 3 ] = உள்ளத்தை தூய்மை படுத்துவார்
உள்ளத்தை தூய்மைப்படுத்துதல் என்றால் நெஞ்சைப் பிளந்து இதையத்தை வெளியே எடுத்து சோப்புப் போட்டு சுத்தம் செய்ய வேண்டும் என்பதல்ல பொருள் ‘ நான் – எனது ‘ என்ற ஆணவத்தை அழிப்பது தான் உளத்தூய்மை.
‘’ நான் மறையைக் கற்றவன் ஞானியில்லை தன்னுள் தான் மறைய கற்றக் கொண்டவனே ஞானி என்று தமிழ் கூறும் நல்லுலகம் இயம்பும். நான்கு வேதங்களையும் கரைத்துக் குடித்துவிட்டால் மட்டும் ஞானியாகி விட முடியாது.
‘ நான் ‘ என்ற அகந்தை மமதையை தன்னுள் மறையகற்றுக் கொண்டால்தான் ஞானியாக முடியும்.
தகுதியுள்ள ஆசான் அவசியம் :-
உள்ளத்தூய்மை பெற்று இறைவனை அறிய கல்வி இருவகைப்படும்
[ 1 ] = தாளைப் படித்து பெருவது
[ 2 ] = ஆசானைப் பிடித்து பெருவது
இறைவனைப் பற்றி அறிந்து கொள்ள தாளைப் படிக்கக்கூடாது ஏன் என்றால் ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது.எனவே ஆசானைத்தான் பிடித்து ஆகவேண்டும்.இன்றியமையாத அவசியத் தேவை தகுதியுள்ள ஓர் ஆசானைப் பெருவதுதான் இறைவன் குர்ஆனில் கூறினான்: - [25-59] ‘ ரஹ்மானைப் பற்றி தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் ‘
நல்வழிகாட்டும் இத்தகைய ஆசான் ஒருவருக்கு கிட்டவில்லையானால் அது வழிகேட்டின் அடையாளமென்பதை இறைவன் எச்சரிக்கை விடுக்கிறான்.
இறைவன் யாரை வழிகெடுக்கிறானோ அவருக்கு நேர்வழி காட்டும் ஆசிரியரை [ நபியே ] நீங்கள் நிச்சயம் பெறமாட்டீர்கள். [ 18=17 ]
உலகப்பற்றை துறத்தல் :-
இவ்வுலகில் நாமிருந்தாலும் உலக ஆசை நமது இதயங்களில் நுழைந்து விடாமல் நம்மை நாம் தற்காத்துக் கொள்ள ஆன்மீகப் பாதை அவசியம் “ மறுமை வாழ்வுதான் உண்மையான வாழ்க்கை “ என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் இவ்வுலகில் நாம் இருக்கிறோம் என்று சொல்லலாமே தவிர ,வசிக்கிறோம் என்று கூறக்கூடாது ஏனென்றால் ‘ வசித்தல் ‘ என்பதற்கும் ‘ இருத்தல் ‘ என்பதற்க்கும் வித்தியாசமுண்டு .அதனால் தான் வீட்டில் வசிக்கிறான் என்றும் ஜெயிலிலே இருக்கிறான் என்றும் கூறுகிறோம்.
ஏன் தெரியுமா ?
வீட்டிலே கதவுக்கு தாழ்ப்பாள் உட்புறமிருக்கும்.
ஜெயிலில் கதவுக்கு தாழ்ப்பாள் வெளிப்புறமிருக்கும்
வீட்டில் கதவை நாம் சாத்துவோம்.
ஜெயிலில் கதவை பிறர் சாத்துவார்கள்
வீட்டில் நம்விருப்பப்படி வாழ்கிறோம்
ஜெயிலில் பிறர் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் !
இவ்வுலகில் நாம் தாமரை இலை நீரைப்போல் இருக்க வேண்டும்,நீர் இலையில் இருக்கும் ஆனால் ஒட்டாமல் இருக்கும்.படகு தண்ணீரில் இருந்தால் தவறில்லை.தண்ணீர் படகுகள் வந்தால்தான் ஆபத்து.
இவ்வுலகில் நாமிப்பது தவறில்லை,உலகம் நம் உள்ளத்துக்குள் வருவது தான் ஆபத்து.
இதனால் தான்
முஹையீதீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் கூறினார்கள் :-
பூமியிலே உள்ள [ எனது தோட்டங்கள் மற்றும் ] செல்வங்கள் பூமியில்தான் உள்ளன. எனது உள்ளத்தில் இறைவன் மட்டும் இருக்கிறான்.
வணக்கம் எவ்வாறு அமைய வேண்டும் மென்பதை இறைத்தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் விளக்கினார்கள் :-
இறைவன் நீ பார்ப்பது போன்று வணங்கவேண்டும்.நீ அவனை பார்க்காவிட்டாலும் அவன் உன்னை பார்த்து கொண்டு இருக்கிறான் என்ற உணர்வோடாவது வணங்க வேண்டும்
ராபியத்துல் அதவிய்யா ரழியல்லாஹூ அன்ஹா அவர்கள் இறைவனிடம் அடிக்கடி முறையிடுவார்கள்;-
இறைவனே ! நான் உன்னை வணங்குவது நீ படைத்திருக்கிற சொர்க்கத்தின் மீது ஆசைப்பட்டல்ல.நரகத்தை எண்ணி அஞ்சியுமல்ல நான் உன்னை வணங்குகிறேன் .ஏன் தெரியாது ? உன்னுடைய திருப்பொருத்தம் அடைய வேண்டமென்பதற்காக
வேண்டுகோள் :-
நாம் படைக்கப்பட்டதின் நோக்கமும் மறுமையின் வெற்றியும் நிறைவேற வேண்டுமானால் ஆன்மீகம் அவசியம் என்பதை அறிந்துள்ள சகோதரர்களில் சிலர் இன்றளவும் சொல்கிறார்கள்.
பக்குவம் அடைந்த பிறகு பைஅத் பெருகிறேன்.
நாம் கேட்பது
பக்குவம் அடைந்து விட்டால் பைஅத் எதற்கு ?
பக்குவடைவதற்க்கு தானே பைஅத் .
நோய் நீங்குவதற்குத்தானே மருந்து !
அதை விட்டுவிட்டு நோய் போன பிறகு மருந்துண்ணுகிறேன் என்றால் என்ன அர்த்தம்.
நீச்சல் தெரிந்தபிறகுதான் தண்ணீரில் இறங்குவேன் என்றால் நடக்கிற காரியமா ?
குழந்தை நடைபயில சாதனம் அவசியம்
இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வர விளக்கு அவசியம்
இறைவனை அண்மிக்க ஆன்மீகம் அவசியம் அவசியம் அவசியம்..
வழி கெட்டோர் யார்ராயினும் அவர்களுக்கு நேர் வழி பெற துஆ செய்பவர்களாக நாம்மாக இருப்போம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக