பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 19 டிசம்பர், 2014

பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்களைப் பற்றி லால்பேட்டை சல்மான்



தலைவரின் கட்டளைக்கு இணங்க தன் ஆவேசப் பேச்சை அமைதி பேச்சாக, அறிவார்ந்த பேச்சாக மாற்றிக் கொண்டவர்.....
ஏழை மாணவர்களின் கல்விக்காக பொருளாதார ரீதியாக உதவிகள் பல புரிந்தவர்.....
சமுதாய நலனுக்காக தன்னுடைய பேராசிரியர் பதவியை ராஜினாமா செய்தவர்.....
கிறிஸ்தவ அறிஞர்களிடத்தில் திருக்குர்ஆனின் சிறப்புக்களை எடுத்துக் கூறி அதை ஒப்புக்கொள்ள வைத்தவர்.....
"தாருல் குர்ஆன் " மூலம் தமிழ் கூறும் முஸ்லிம்களுக்கு மத்தியில் திருக்குர்ஆனின் மாண்புகளை பரப்பியவர்.....
லிபியாவில் நடைபெற்ற முஸ்லிம் அறிஞர்களின் மாநாட்டில் கலந்துக் கொண்டு இந்திய முஸ்லிம்களைப் பற்றி உரையாற்றியவர்.....
பாபர் மஸ்ஜித் இடிப்பைக் கண்டித்து திருச்சியில் திரண்ட முஸ்லிம்கள் மத்தியில் அமைதியாக கலைந்துச் செல்லுங்கள், ஆவேசப்பட வேண்டாம் என்று காவல்துறையின் வாகனத்தில் உள்ள மைக்கிலேயே பேசி அனைவரையும் கலைந்து போகச் செய்ததன் மூலம் தமிழகம் என்றைக்கும் அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது என்பதை நிரூபித்தவர்.....
சமுதாய ஒற்றுமை மாநாட்டின் "ஹீரோ "வாக வலம் வந்தவர்.....
இடிக்கப்பட்ட பாபர் மஸ்ஜித் மீண்டும் கட்டப்பட்டு அதை அத்வானி அவர்களே திறந்து வைக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் அத்வானியின் முகத்திற்க்கு நேராகவே முழங்கியவர்.....
இஸ்லாமிய மதரசாக்கள் தீவிரவாதத்தை போதிக்கின்றது என்று காவி வெறியர்களால் பரப்பப்பட்டபோது.....
இஸ்லாம் ஒருபோதும் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை.....
இஸ்லாமிய மதரசாக்களும் தீவிரவாதத்தை போதிக்கவில்லை.....
அந்த மதரஸாக்களில் இருந்து வந்தவன் தான் நான் என்று கூறியும்.....
இஸ்லாமிய மதரசாக்களில் போதிக்கப்படும் ஒழுக்க மாண்புகளை, பண்பாட்டு நெறிமுறைகளை, வாழ்வியல் தத்துவங்களை நீங்கள் தீவிரவாதம் என்று சொன்னால், அந்த தீவிரவாதத்தை நாங்கள் தொடர்ந்து செய்துக் கொண்டே இருப்போம் என்று பாராளுமன்றத்தில் முழங்கியவர்.....
இந்திய முஸ்லிம்களின் அவல நிலையை இந்த நாட்டிற்க்கு எடுத்துச் சொன்ன.....
நீதியரசர் ராஜேந்திர சச்சார் கமிஷன்
நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் ஆகியவைகள் ஆட்சியாளர்களால் அமைக்கப்படுவதற்க்கு முழுமுதற் காரணமாகத் திகழ்ந்தவர்.....
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
பேரியக்கத்திற்க்கு சொந்தமாக அலுவலகம் கட்டுவதற்க்கு பெருமுயற்சி எடுத்து அதிலே வெற்றியும் கண்டவர்.....
சமுதாயத்தின் ஒரே தமிழ் நாளிதழான மணிச்சுடர் நாளிதழை திறம்பட நடத்துபவர்.....
சிறையில் வாடக்கூடிய அப்பாவி முஸ்லிம் இளைஞர்களின் நன்னடத்தைகளுக்கு நான் முழு பொறுப்பேற்கிறேன் என்று ஆட்சியாளர்கள் முன்னிலையில் மேடையில் முழங்கியவர்.....
கோவையில் நடைபெற்ற
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில்
அரபு மொழிக்கும் தமிழ் மொழிக்கும் உள்ள உறவை ஆய்வு செய்து உரையாற்றியவர்.....
பள்ளிவாசல்களின் திறப்பு விழாக்கள்.....
அரபுக்கல்லூரிகளின் பட்டமளிப்பு விழாக்கள்.....
கல்வி நிலையங்களின் ஆண்டு விழாக்கள்.....
சமுதாய பெருமக்களின் திருமண விழாக்கள்.....
இப்படியாக சமுதாயத்தின் அனைத்து நிகழ்வுகளிலும் கலந்துக்கொண்டு அறிவார்ந்த அழகிய உரையை தருபவர். ....
தன்னுடைய மாணவர்களை சமூக சிந்தனையாளர்களாக உருவாக்கியவர்.....
சங்கைக்குரிய உலமா பெருமக்களிடமிருந்து
"முனீருல்மில்லத் " என்ற பட்டத்தை பெற்றவர்.....
கண்ணியத்திற்குரிய
காயிதேமில்லத் (ரஹ்) அவர்கள் காட்டிய வழியில் தன்னுடைய லட்சியப் பயணத்தை தொடர்பவர்.....
அறிஞர் பெருமக்களால் "பேராசிரியர் " என்று அழைக்கப்படுவர்.....
தாய்ச்சபை முஸ்லிம் லீக் தொண்டர்களால்
"வாழும் காயிதேமில்லத் " என்று போற்றப்படுபவர்.....
இந்திய முஸ்லிம் சமுதாயத்தை
தாய்ச்சபை முஸ்லிம் லீகில் ஒன்றிணைத்திட நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்பவர்.....
சமுதாய மேம்பாட்டிற்க்காக பாடுபடுபவர்.....
சமூக நல்லிணக்க நாயகர்.....
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
தேசியப் பொதுச்செயலாளர்.....
தமிழக தலைவர்.....
தியாகச் சீலர்.....
மதிப்பிற்க்குரிய
கே.எம்.காதர் மொஹித்தீன் சாஹிப் Ex.M.P. அவர்கள் தலைமை வகித்திடும்.....
தாய்ச்சபை
இந்திய யூனியன் முஸ்லிம் லீகில்.....
உங்களை உறுப்பினராக இன்றே இணைத்துக் கொள்ளுங்கள்...

புதன், 2 அக்டோபர், 2013

வகுப்புக் கலவரங்களை தூண்டும் பா.ஜ.க.- பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன்

நத்தர்ஷா வலியுல்லாஹ் தர்கா பகுதியில் உள்ள சகோ தரர் ஜே.கே.வஜீர் என் மீது மிகுந்த அன்பும் பாசமும் கொண் டிருப்பவர்.திருமண நாளில் வர இயலாமல் சேலம் மாநாட்டில் பங்கேற்க வேண்டியதாயிற்று. எப்படியாவது, தனது இல்ல விழாவில் என்னையும் பங்கேற்கச் செய்திட வேண் டும். என்று விடாப்பிடியாக இருந்து, 

27.9.13 வெள்ளிக்கிழமை மாலையில் திருமண வரவேற்பு விழா என்று ஏற்பாடு செய்து, நம்மையெல்லாம் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பை அளித்தி ருக்கிறார்.

இந்த விழாவுக்கு வர வேண்டுமானால் மாநகர் மாவட்டப் பொருளாளர் தம்பி அமீருத்தீன் தொலைபேசியில் தொடர்புகொண்டு அழைத்த போது வேலைப்பளு மற்றும் உடல்நிலை காரணமாக வர இயலாதே என கூறி விழாவுக்கு வாழ்த்து கூறினேன். 


ஆனால், எழுத்தரசு ஏ.எம். ஹனீப் சாஹிப் தொலைபேசி யில் என்னை விழாவுக்கு வந் திட வேண்டும் என்றார். அவரின் அன்பான அழைப்பை ஆணை யாக மதித்து இங்கே உங்கள் முன் நிற்கிறேன்.

காரணம் நான் பேராசிரியர் தான். ஆனால், எனக்கு ஹனீப் சாஹிப் ஆசானாக இருந்து இயக்கத்தில் ஈடுபடச் செய்த பெருமைக்குரியவராவார்.


நத்தர்வலி தர்காவும் முஸ்லிம் லீகும்

இ.யூ.முஸ்லிம் லீக் இயக்க வரலாற்றில் திருச்சிக்கும், தர்கா பகுதிக்கும் சிறப்பான இடம் உண்டு. காயிதே மில்லத் திருச்சிக்கு வரும் போதெல் லாம், அவர்களை திருச்சி ஜங்சனில் இருந்து பாலக்கரை மறுமலர்ச்சி அலுவலகத்துக்கு அழைத்து வருவதற்குச் செல்கிறவர் களில் அதிகம் பேர் தர்கா பகுதியைச் சேர்ந்த வர்களாகவே இருப்பார்கள்.

எழுத்தரசு ஏ.எம். ஹனீப் அவர்கள் இதே தர்கா பகுதியில் எழுபது ஆண்டுகளுக்கு மேலாக முஸ்லிம் லீகின் வளர்ச்சிக்குப் பாடுபட்ட வரலாறு இருக்கிறது. மௌலவி குத் புதீன் ஹஜ்ரத் போன்ற பெரிய வர்களின் வழிக்காட்டு தலில் வளர்ந்த ஹனீப் சாஹிப், முஸ்லிம் லீகை வளர்ப்பதில் பெரும் பங்காற்றியிருக்கிறார். இப்பகுதியில் முஸ்லிம் லீகின் வளர்ச்சிக்கு பெரும் துணை யாக இருந்த சகோதரர் ஷபியுல் லாஹ் போன்றவர்களை இன்றைக்கு காண்பதற்கு வாய்ப்புக் கிடைத்தது.

இங்கே சகோதரர்கள் ஜி.எம். ஹாஸிம், மூசாகோயா வாழ்த் துரை வழங்கினார்கள். 1982-ம் ஆண்டு என்று நினைக்கிறேன். இந்த இருவரும் அப்போது தான் இ.யூ.முஸ்லிம் லீகில் தங்களை இணைத்துக் கொண்டனர். முஸ்லிம் லீகில் இணைந்த வர்கள், கட்சி மாறுவதில்லை. இந்த முப்பது ஆண்டுகளில் பிற கட்சிகளை பார்க்கிறோம். பலப்பல கட்சி களில் தாவிக் கொண்டி ருப்போர் பலரைப் பார்க்கிறோம். ஆனால், முஸ்லிம் லீகில் இணைந்தவர் கள் யாரும் எங்கும் போனதாக வரலாறு இல்லை. இத்தகைய சேவையா ளர்களை இ.யூ. முஸ்லிம் லீகிற்கு தந்த பெருமை தர்கா பகுதிக்கு உண்டு.

ஹஸ்ரத் சுஹர்வதி, ஜமால் முஹம்மது கல்லூரியில் உர்து, பார்சி பேராசிரியராக இருந் தவர். தர்காவுக்கு உரியவர். திருக்குறளை முதன்முதலில் உர்துவில் மொழி பெயர்த்து வெளியிட்டார். சாகித்ய அகாடமி விருது அவருக்கு வழங்கிச் சிறப்பித்தார்கள்.

தப்லே ஆலம் பாதுஷா வலியுல்லாஹ் அவர்களின் மஜாரில் ஜியாரத் செய்து விட்டு இதே வளாகத்தில் இந்த சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

இந்தியாவில் இஸ்லாம் பரவியது இரண்டு வகைகளில் என்று வரலாறு கூறுகிறது. நாம் முஸ்லிம்களாக இருக்கிறோம். நமது முன்னோர்கள் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றார்கள். வாள் எடுத்து போர் புரிந்து வாகை சூடிய பாதுஷாகள், ஷகின் ஷாகள், நிஜாம்கள், நவாபுகள், பரப்பிய இஸ்லாம் மார்க்கத்தை நமது முன்னோர்கள் ஏற்க

வில்லை, நமது முன்னோர்கள் வார்த்தைகள் மூலம் - நபிமார் களும், ஸஹாபாகளும், வலிமார் களும் அவர்களின் வழியில் வந்த - வாழ்ந்து வழி காட்டிய ஆன்மீக மேதைகளின் வார்த் தைகளைக் கேட்டு, அவர்கள் வாழ்ந்து காட்டிய வாழ்வு முறையைப் பார்த்து நம்முன்னோர் இஸ்லாத்தை ஏற்றார் கள். இஸ்லாம் மார்க்கத்தின் அமைதித்தன்மை, சாந்தி சமாதான போக்கு, எதையும் இதய சுத்தியோடு நோக்கும், பண்பு நமது முன்னோர்களிடம் இருந்து நாம் பெற்றிருக்கிறோம்.

வாளின் வலிமையைப் பேசாமல், சுத்தசத்திய நித்திய வார்த்தையின் வலிமையை போற்றும் முஸ்லிம்களாக, இந்தியாவின் தென் கோடியான தமிழகம், கேரளம், இலங்கை, மாலத்தீவு, மலேசியா, இந்தோ னேஷியா போன்ற பகுதிகளில் இன்றைக்கும் வாழுகின் றோம். அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் அஞ்சாத சிங்கங்கள் போலவும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழியில் அணி வகுத்து செல்லும் தீரர்கள் போலவும், தென்கிழக்கு ஆசிய முஸ்லிம்களாக நாம் இருக்கிறோம் என்பதில் பெருமைப்படுகிறோம். நம்மை உண்மையான முஸ்லிம்களாக வாழச் செய்துள்ள வலிமார் களின் வளாகங்களில் இன் றைக்கு இத்தகைய நிகழ்ச்சி கள் நடப்பது மிகுந்த பாராட் டுக்குரியதாகும். 
அன்பியாகளும், வலிமார் களும், இமாம்களும் காட்டிய பாதையில் திருக்குர்ஆன் ஒளியில் - திருநபி (ஸல்) அவர் களின் வழியில் செல்லும் இந்திய முஸ்லிம்களாகிய நமக்கு உண்மையான இஸ்லாமிய அடையாளங்கள் எவை? நாம் அணிந்திருக்கும் ஆடைகளா? போட்டிருக்கும் தொப்பியா? வைத்திருக்கும் தாடியா? என்றால் இவையெல்லாம் முஸ்லிம்களின் உண்மையான அடையாளங்கள் ஆகிவிடுவது இல்லை.

மஸ்ஜிதுகள், மதரஸாக்கள், வக்ஃபுகள், கப்ருஸ்தான்கள், தர்காகள், ஷரீஅத் சட்டங்கள், நமது வணக்க வழிபாட்டு முறைகள் போன்றவைகள்தாம் முஸ்லிம்களின் உண்மையான அடையாளங் கள் ஆகும்.

இந்திய முஸ்லிம்களாகிய நாம் நமது உண்மையான அடையாளங்களை பாதுகாப் பதற்குதான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்னும் இந்த பேரியக்கத்தை நமது முன் னோர்கள் உருவாக்கி தந்தி ருக்கிறார்கள்.

முஸ்லிம் லீகின் எழுச்சி

இன்றைக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேரளா, தமிழகத்தில் மட்டுமின்றி எல்லா மாநிலங்களிலும் எழுச்சி பெற்ற இயக்கமாக வளர்ந்து கொண்டி ருக்கிறது.

இளைஞர்கள், தொழிலாளி கள், மகளிர், மாணவர் என்று எல்லா தரப்பினர்களும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொள்கையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வருகி றார்கள். வரும் அக்டோபர் 5-ம் தேதி சென்னை பெரியார் திடலில் காலையில் மாநில முஸ்லிம் லீகின் பொதுக்குழு கூட்டமும், மாலை 3 மணி முதல் 8 மணி வரை எம்.எஸ். எஃப். - முஸ்லிம் மாணவர் பேரவை மாநில மாநாடு - குற்றாலத்தில் நடந்த மாநாட் டுக்குப் பிறகு -நடக்கிற மாநாடாக ஏற்பாடாகியிருக்கிறது. 

தமிழகம் முழுவதிலுமி ருந்து 5 ஆயிரத்திற்கும் மேற் பட்ட மாணவர்கள் இதில் பங் கேற்கிறார்கள். திருச்சி மாவட் டத்திலிருந்து பன்னூற்றுக் கணக்கில் பங்கேற்க உள்ளார் கள் என அறியும் போது மிகுந்த மகிழ்ச் சியை தருகி றது. 

இந்திய முஸ்லிம்களாகிய நாம் நமது உண்மையான அடையாளங்களை பாதுகாப்ப தற்கே, இத்தகைய நிகழ்ச்சிகள் - மாநாடுகளையெல்லாம் நடத் துகிறோம்.

சிறுபான்மையாக உள்ள முஸ்லிம்கள் தங்களின் கலாசார தனித்தன்மையை பாதுகாக்கும் முயற்சியாகவே முதலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகை வலுப்படுத்த வேண்டும் - பலப்படுத்த வேண்டும். முஸ்லிம் லீகை பலப்படுத்துவதோடு தேசிய அளவிலும், மாநில அளவிலும் அரசியலில் முக்கியத்துவம் பெற்று செயல் பட்டுக் கொண்டிருக்கிற பிற முஸ்லிம் இயக்கங்களையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமையில் ஒரு குறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்ப டையில் ஒன்று சேர்க்க வேண்டும் என்ற கருத்து இப்போது பிறந்திருக்கிறது. இத்தகையதொரு ஐக்கி யத்தை உருவாக்கிக் கொண்டு, தேசிய அளவில் உள்ள ஜன நாயக, சமயசார்பற்ற, சமூக நீதிக் கொள்கைகளை நிலை நிறுத்துகிற அரசியல் சக்திக ளுடன் இணைந்து பாடு படுதல் வருங்கால இந்தியா விற்கு வலிமையும், வளமும் சேர்ப்பதாகும் என்னும் எண்ணம் சமுதாய மக்களிடம் பரவலாகி வருகிறது.

வகுப்புக் கலவரங்களை தூண்டும் பா.ஜ.க.
இத்தகைய சிந்தனை ஏற் படுவதற்கு 26-9-2013 அன்று இதே திருச்சியில் பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நரேந்திரமோடி அவர்களின் பேசிய கூட்டம் மட்டுமல்ல, தேசத்தின் பல்வேறு பகுதிகளில் பா.ஜ.க. கூட்டங்களும் அதில் பேசப்படும் கருத்துக்களும் முக்கிய காரணங்களாக அமைந்திருக்கின்றன.

இந்திய நாடு அதன் அரசியல் சாசனப்படி ஜன நாயக நாடு - சமயசார் பற்ற நாடு - சமூக நீதியை நிலை நிறுத்தும் மக்கள் ஆட்சியில் உள்ள நாடு. இந்த நாட்டை பாரதீய ஜனதா கட்சி இந்து ராஷ்ட்ரம் என்னும் இந்துக்கள் நாடாக்க முயற்சிக்கிறது. இந்தியாவில் வாழும் முஸ்லிம் கள் இந்த நாட்டின் பிரஜைகள் என்று அழைக்கப்பட வேண் டும் என்றால் முஸ்லிம்கள் எல் லோரும் தங்களுடைய மூதாதைகள் இந்துக்கள் என்று அறிவிக்க வேண்டும் என்கிறார் கள்.

முஸ்லிம்களின் அடையாள மாக உள்ள முஸ்லிம் தனியார் சட்டம் இருக்கக் கூடாது. எல்லோருக்கும் ஒரேவிதமான சிவில் சட்டம் - பொது சிவில் சட்டம் ஒன்று தான் இருக்க வேண்டும் என்கிறார்கள்.

கஷ்மீருக்குள்ள தனி அந்தஸ்து ஒழிக்கப்பட வேண் டும் என்று பிரச்சாரம் செய்கிறார் கள். இவற்றிற்கெல்லாம் மேலாக குஜராத்தில் வகுப்பு கலவ ரத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல் லப்பட்டதிலும், அஸ்ஸாமில் 5 லட்சம் முஸ்லிம்களை அகதி முகாம்களில் தங்க வைத்து வேடிக்கை பார்ப்பதிலும், இப் போது உ.பி.மாநிலம் முசாபர் நகர் கலவரத்தில் பல்லா யிரக்கணக்கான முஸ்லிம் களை ஊரை விட்டும் வெளி யேற்றி கொடுமைப் படுத்தி வருவதிலும் பி.ஜே.பி. யை சேர்ந்தவர்கள் மகிழ்ச்சிய டைந்து கொண்டிருக்கிறார் கள்.

முஸ்லிம்களை அடையா ளங்களே இல்லாமல் ஆக்க நினைப்பதோடு அவர்களை அழிக்கவும் முடிவு செய்திருப் பதைப் போல தொடர்ச்சியாக கலவரங்கள் தூண்டப்பட்டு வருகின்றன. கலவரத்தில் மாண்டு போன முஸ்லிம்கள், அவர்களின் பார்வையில் நாய்க் குட்டிகளாக தெரிகிறார்கள்.

சுதந்திர இந்தியாவில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வகுப்பு கலவரங்கள் நடந்துள்ளன என பத்திரிகைகள் செய்தி தருகின்றன. சென்ற வாரம் டெல்லியில் நடந்த ஒருமைப் பாட்டு கவுன்சில் கூட்டத்தில் 2013 ஜனவரி முதல் செப்டம்பர் வரையில் நடந்து வகுப்புக் கலவரங்களின் பட்டியல் வெளி யிடப்பட்டது. அதில் பாதிக்கப் பட்டவர்களில் முஸ்லிம்கள் அதிகம் என்னும் தகவலும் தரப்பட்டிருக்கிறது.

இதேபோலத்தான் 13 ஆயிரம் வகுப்பு கலவரங்களி லும் பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்கள் - சொத்து இழந்த வர்கள் முஸ்லிம்கள் - எல்லா விதமான சோதனைகளுக்கும், வேதனைகளுக்கும் ஆளான வர்கள் முஸ்லிம்கள். ஆனால், இவ்வளவு காலமும் இவ்வாறாக பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம் சமுதாயம் அமைதி யாகவே இருந்து அரசியல் ரீதியான தீர்வுகளுக்கு குரல் கொடுத்து வருகிறது.

இன்னல்லாஹ் மகஸ் ஸாபிரீன் - நிச்சயமாக பொறு மையாளர்களுடன் இறைவன் இருக்கிறான் - என்பதில் நம் பிக்கை கொண்டவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் கள். 

தங்களுக்கு தொடர்ந்து இழைக்கப்பட்டு வரும் கொடு மைகளை பற்றி உலகிலுள்ள 57 முஸ்லிம் நாடுகளுக்கு புகார் மனுக்கள் அனுப்பிய தில்லை. ஐ.நா. சபையின் மனித உரிமை கமிஷனுக்கு பெட்டிஷன் போட்ட தில்லை. 

ஆனால், சுதந்திர இந்தியா வில் 1984-ல் திருமதி இந்திரா காந்தி அம்மையாரை ஒரு சீக்கியர் கொன்றார் என்பதற் காக 2 ஆயிரத்திற் கும் மேற் பட்ட சீக்கியர்கள் கொல்லப்பட் டனர். அந்த ஒரே ஒரு கலவரத் திற்காக நிவாரணங்கள் தரப்பட்டன. சீக்கியரான மன் மோகன்சிங் இருமுறை நாட்டின் பிரதமராக ஆக்கப்பட்டிருக் கிறார். பலரும் குற்றவாளிகள் என தண்டிக்கப்பட்டிருக்கி றார்கள். இவை மூலம் சீக்கிய சமுதாயம் இன்னமும் திருப் தியடையவில்லை. சர்வதேச நீதி மன்றத்தில் வழக்கு தொடுப்போம் என்கிறார்கள். அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக் கிறார்கள். 

திருமதி சோனியாகாந்தி மருத்துவம் செய்ய அமெ ரிக்கா சென்ற போது அவரிடம் கோர்ட் சம்மன் தரப்படுகிறது. இப்போது ஐ.நா. சபை கூட்டத் தில் பங்கேற்கச் சென்றுள்ள இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களுக் கும் கோர்ட் சம்மன் காத்தி ருக்கிறது. 

சீக்கியருக்கு எதிராக நடந்த ஒரே ஒரு கலவரத்திற்கு நியாயம் கோரி சர்வதேச அளவில் சீக்கிய சமுதாயம் வழக்கு தொடுக்கிறது. ஆனால், 13 ஆயிரத்திற் கும் மேற்பட்ட வகுப்பு கலவ ரங்களால் பாதிக்கப்பட்டும், இந்திய முஸ்லிம் சமுதாயம் அமைதி வழியில் - அறவழி யில் - அரசியல் ரீதியில் - நாட்டுக்கு உள்ளேயே நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக் கையில் வாழ்ந்து கொண்டி ருக்கிறார்கள். 

இதைப்பற்றி நாட்டிலுள்ள நல்லவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்ற வேண்டு கோளைத்தான்நாம் முன் வைக்கிறோம்.

நாட்டுப் பிரிவினையின் போது காயிதெ மில்லத் முஹம் மது இஸ்மாயில் சாஹிப் அவர் கள் கராச்சியில் பாகிஸ்தான் பிரதமர் நவாப் லியாகத் அலிகான் அவர்களிடம் விடை பெற்றார். அப்போது லியாகத் அலிகான் சொன்னார்:

இந்தியாவில் முஸ்லிம்க ளுக்கு எதிராக இந்துக்கள் செயல்பட்டால் எங்களின் உதவிகளை நீங்கள் உடனே பெற்றுக் கொள்ளலாம். என்றார். 

அதற்கு காயிதெ மில்லத் சொன்ன பதில் இதுதான்:

`நவாப் அவர்களே! பாகிஸ் தானில் உள்ள சிறுபான்மை மக்களாகிய இந்துக்களை பாதுகாப்பாக வைத்திருப்பது உங்கள் கடமையாகும். இந்தியா எங்கள் நாடு. அதில் முஸ்லிம் களுக்கு எதிராக யார் எதை செய்தாலும் தடுக்கவும், எங்க ளைக் காப்பாற்றி கொள்ளவும் எங்களுக்கு அல்லாஹ் உதவி புரிவான். அதைப் பற்றிய கவலை உங்களுக்குத் தேவை யில்லை’’ என்றார்கள்.

அதனால்தான் காயிதெ மில்லத் அவர்களை ஜிந்தா வலியுல்லாஹ் என்று சமுதாயம் போற்றியது.

அல்லாஹ்வின் பேரருள் கொண்டு இந்திய முஸ்லிம்க ளாகிய நாம் நமது அடையாளங் களை பாதுகாப்போம் - நமது கலாசார தனித்தன்மையை நிலை நிறுத்துவோம்.

இதற்கு உகந்த ஒரே ஒரு வழி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எனும் இந்த பேரியக்கத்தை கட்டிக் காப்பதுதான். இந்தியா வின் பெருமையை உலக அரங் கில் உயர்த்தவும், இந்திய முஸ்லிம்களின் தனித்தன் மையை பாதுகாக்கவும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செல்லும் பாதைதான் என்றும் வெல்லும் பாதை. -இதை வரலாறு நிச்சய மாக சொல்லும்.

இவ்வாறு தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேசினார்கள். 

வார்டு தலைவர் ஷேக் பாவாதீன் நன்றி கூறினார். மவ்லானா உமர் பாரூக் மஹலரி துஆ ஓதினார். வஜீர் குடும்பத் தினர் எல்லோருக்கும் விருந்து உபசரிப்பு செய்தனர்.

சனி, 23 பிப்ரவரி, 2013

உண்மையான எளியவர்


1.திருச்சி , விமான நிலையம் அருகில் தங்களுக்கு இருந்த சொந்த இடத்தை ஏழை மக்களுக்கு இலவசமாக வழங்கிய குடும்பத்தின் வாரிசு !

2. 14 ஆண்டுகள் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் வரலாற்றுத்துறை தலைவர்

3.நூற்றுக்கணக்கான ஏழை மாணவர்களுக்கு தன் சொந்த செலவில் இலவசமாக உண்ண உணவும் , இருக்க இருப்பிடமும் அளித்து ,கல்வி கற்கச் செய்து அவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றி,இன்று உலகெங்கிலும் பெரும் மேதைகளாக , பெரும் பணக்காரர்களாக , பெரும் தொழில் அதிபர்களாக பரவி வாழ்வதற்கு தன் வாழ்க்கையை அர்பணித்துக் கொண்டவர் .

4.சென்னை பல்கலைகழக முன்னாள் செனட் சபை உறுப்பினர் .

5.பாரதிதாசன் பல்கலைகழக முன்னாள் நிலைக்குழு உறுப்பினர்

6. எல்லா மாநில மாணவர்களும் , டெல்லி சென்று தங்கள் கல்விச் சான்றிதழ்களை அட்டஸ்டேசன் பண்ணனும் என்று நிலையில் ,ஏழை மாணவர்கள் படும் கஷ்டத்தை கண்டு வருந்தி ; அந்ததந்த மாநில அரசுகளுக்கு அந்த அதிகாரத்தை மத்திய அரசு வழங்க காரணமாகத் திகழ்ந்தவர் .

7. சச்சார் கமிஷன் , ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அமைய காரணமாக இருந்தவர் .

8.வேலூர் பாரளுமன்ற உறுப்பினராக இருந்தவர் .

9.இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாணவர் அணி தலைவர் , மாநில இளைஞர் அணி அமைப்பாளர் ,மாநில கலாச்சாரப் பிரிவு செயலாளர் , மாநில அமைப்புச் செயலாளர் ,மாநில பொதுச்செயலாளர் , இன்று மாநில தலைவர் மற்றும் அகில இந்திய பொதுச்செயலாளர் என்று தன் உழைப்பால் படிபடியாக உயர்ந்தவர்

நம் இனமானப் பெருந்தலைவர் , முனிருல் மில்லத் ,பேராசிரியர் கே.எம்.காதிர் மொஹிதீன் !

ஸ்டார் விடுதிகளில் தங்கிக்குக் கொண்டு , சின்னத் திரை பேட்டிகளுக்கு ஆள்கள் மூலம் தங்களை வரவழைக்கச் செய்து , மேக்கப் பண்ணிக் கொண்டு சமுதாயத் தலைவர்கள் என்று பவனி வருபவர்கள் மத்தியில் , எம்பெருமானார் காட்டிய வழியில் அரசியல் நடத்திய கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் (ரஹ்) அவர்களை தன் அரசியல் தலைவராக ஏற்றுக் கொண்டு இஸ்லாமிய சமுதாயத்தின் மானம் ,மரியாதையை ,இச்ஷத்தை காப்பாற்ற பாடுபட்டுக் கொண்டிருக்கும் தலைமகன் பேராசிரியர் கே.எம்.காதிர் மொஹிதீன் அவர்கள்

நட்சத்திர ஹோட்டல் இல்லை..படுக்க பஞ்சு மெத்தை இல்லை ...தலைக்கு ஒரு தலைகாணி இல்லை காப்புக்கு காவலர்கள் இல்லை ....அத்தோடு A.K.47 துப்பாக்கி இல்லை ...தொண்டர்கள் புடை சூழவில்லை (அது வெறும் பந்தா )...மாணவர் கண்மணிகளின் பயிற்சி பாசறை நடக்கும் பயிலரங்கிற்கு தானே முன் நின்று உற்சாகப்படுத்தி கொண்டிருக்கும் மதிய வேளையில் சற்று துயிலும் சங்கைக்குரிய , சமுதாய வழி காட்டி , நம்மோடு வாழும் இறை நேசர் , எங்கள் அரசியல் ஆசான்,தேசிய செயலாளர் , தமிழ் மாநில தகைசால் தலைவர் , பேராசிரியர் K.M.காதிர் முஹ்யிதீன் M.A.Ex.M.P.

அல்ஹம்துலில்லாஹ் ! அல்லாஹு அக்பர் !

யா அல்லாஹ் ! பேராசிரியர் கே. எம்.காதிர் மொஹிதீன் அவர்களுக்கு நல்ல உள்ளவளமும், உடல் வளமும் கொடுத்து சமுதாயத்தை தலைமை தாங்கி நடத்திட அருள்புரிவாயாக !

சனி, 5 ஜனவரி, 2013

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு பெருமை சேர்க்கும் பேராசிரியரின் பிறந்த நாள்


அரசியலில்......! சந்தனத்தை விட சாக்கடை மணம்தான்
அதிகம் என்பது சுதந்திரத்துக்கு முன்பே உறுதி செய்யப்பட்ட விஷயம். அப்படிப்பட்ட புழுதிபடிந்த, முட்கள் நிறைந்த அரசியல் பாதையில் கறைபடியாத தன் காலடிச் சுவடுகளால் கண்ணி யத்தை பேணிய புண்ணியத் தலைவர் காயிதெ மில்லத் (ரஹ்) அவர்களின் தலைமையில் தூய்மையான அரசியல் நடத்தி வெற்றி பல கண்டு நூற்றாண்டு வரலாறு கொண்ட பேரியக்கம் நம் தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.  விடுதலை பெற்ற இந்தியா வில் வாழ்ந்து வரக்கூடிய இஸ்லாமியர்கள் யாருக்கும் கொத்த டிமைகளாக, அனாதைகளாக ஆக்கப்படாமல், புறந்தள்ளி விடாமல், பாதுகாப்பு குரல் கொடுத்து எல்லா உரிமைகளை யும் பெற்ற குடிமக்களாக வாழ மட்டுமல்ல, ஆளவும் உரிமை யுண்டு என்ற உணர்வை ஊட்டி முஸ்லிம்கள் தலைநிமிர்ந்து வீர நடைபோட வைத்த இயக்கம் இந்திய யூனியன்முஸ்லிம் லீக்.

இன்று தமிழகத்தில் வாழும் ஆறு கோடி மக்களில், அறுபது லட்சம் முஸ்லிம்களின் தாய்ச் சபையாக விளங்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகீன் அற்புதத் தலைவராக அமர்ந் துள்ள முனீருல் மில்லத்
பேரா சிரியர் மூன்றாவது பெருந்தகை யின் எழுபத்தி மூன்றாவது பிறந்த நாள் ஜனவரி 5-ஆம் நாள். 1940 ஆம் ஆண்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள
திருநல்லூர் கிராமத்தில் பிறந்து  திருச்சிக்கு 1949-ல் பெற்றோருடன் குடியேறினார். சாதாரண எளிய குடும்பத்தில் பிறந்து தமிழகத்தின் தாய்ச்சபை தலைவராகவும், தேசிய பொதுச்செயலாளராகவும் பொறுப்பு ஏற்றுள்ள பேராசிரியரின் வாழ்வோடு இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் வரலாறும் இணைந்திருக்கிறதுஎன்று கூறுவது பொருந்தும்.

தீன் புகழ் மணக்கும் திருச்சி மாநகர பள்ளியில் படித்துக் கொண்டிருந்த பால பருவத் திலேயே தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொள்கையால் ஈர்க்கப்பட்டு காயிதெ மில்லத் (ரஹ்) தலைமையை ஏற்றவர். 1956-ம் ஆண்டு திருச்சியில் காயிதெ மில்லத் கலந்து கொண்ட முஸ்லிம் லீகின் கொள்கை விளக்க பொதுக் கூட்டம் நடந்தபோது விழா nடையில் நாடறிந்த நாவலர் ஏ.எம். யூசுப் சாஹிப், மூத்த தலைவர் கே.எஸ். அப்துல் வஹாப் ஜானி சாஹிப் உள்பட முன்னோடி தலைவர்கள் வீற்றிருக்க, புரட்சி எழுத்தாள ரும், கவிஞருமான அறிஞர் மதனீ அவர்களால் அழைத்து வரப்பட்ட எளிய  தோற்றமும்,ஒல்லியான உருவமும் கொண்ட இளைஞர் மேடையேறி காயிதெமில்லத் அவர்களுக்கு மாலை அணிவித்துவிட்டு அற்புதமான வரவேற்புரையாற்றினார். அன்று முதல் மேடை அரங்கேற்றம் செய்தஅந்த இளைஞர்தான் இன்றைய நம் தாய்ச்சபையின் தங்கத்தலைவர் முனீருல் மில்லத் அவர்கள் என்று எண்ணும் போது இதயம்மகிழ்ச்சியால் பொங்கி பூரிக் கிறது. அல்ஹம்துலில்லா ஹ்

பிறப்பும் - சிறப்பும்

இன்று எழுபத்தி மூன்று வயதை தொட்டு நிற்கும் தலைவரின்பெற்றோர் பெயர் முஹம்மது ஹனீப் - காசிம் பீவி தம்பதியின் 6-வது பிள்ளையாக பிறந்தார். உடன்பிறப்புக்கள் 11 பேர்கள். 2சகோதரிகள் - பேராசிரியரைத் தவிர அனைவரும் வணிகத்துறையில் ஈடு பாடு கொண்டவர்கள்.  திருச்சியில் முதல் வகுப்பிலிருந்து உயர்நிலைப் பள்ளி வரை பின்னர் ஜமால் முஹம்மது கல்லூரி, புனித சூசையப்பர் கல்லூரிகளில் பயின்று பி.ஏ. பட்டம் பெற்றார். சென்னை சட்டக்கல்லூரி யில் பி.எல். பட்டப்படிப்பை மேற்கொண்டு, மாநில கல்லூரி யில் வரலாறு பாடத்தில் எம்.ஏ. பட்டம் பெற்ற அவர், அதில் முதல் மாணவராக தேர்வு பெற்று தங்கப்பதக்கம் பெற்றார். பிறகு சென்னை பல்கலைக் கழகத்தில் டாக்டர் கே.கே. பிள்ளை அவர்களிடம் ஆராய்ச்சி மாணவராக சேர்ந்து பி.எச்.டி. ஆய்வு படிப்பை மேற்கொண் டார். 1966-ஆம் ஆண்டில் லதீபா பேகம் அவர்களை வாழ்க்கை துணைவியாக திருமணம் செய்து கொண்டார். இவர்க ளுக்கு கலீலுர் ரஹ்மான் - ஹபிபுர் ரஹ்மான், பைஸுர் ரஹ்மான் ஆகிய மூன்று ஆண் மக்கள் உள்ளனர். 1965-ஆம் ஆண்டில் திருச்சி ஜமால் முஹம்மது கல் லூரியில் பேராசிரியர் பணியில் சேர்ந்து 1974 முதல் 1980 வரை வரலாற்றுத்துறை தலைமை பேராசிரியராகவும் பணியாற் றினார். 1977 முதல் 1980 வரை சென்னை பல்கலைக்கழக செனட் சபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக கமிட்டி உறுப்பினராகவும் கல்வி பணியாற்றினார்.

ஒரு சிறந்த கல்வியாளர் மட்டுமல்ல, ஏழை மாணவர்க ளுக்கு கல்வி உதவிசெய்வதில் கருணை உள்ளமும் கொண்டவர். அவர்களின் ஏற்றத்தை குறிக்கோளாக கொண்ட ‘’ஞடீடீசு ளுகூருனுநுசூகூளு ழடீளுகூநுடு”என்ற மாணவர் விடுதியை நிறுவி 15 ஆண்டுகள் பலரும் பாராட்டும் வண்ணம் நடத்தி உணவு, உறைவிடம், கல்வி உதவி அனைத்தும் இலவசமாக வழங்கி, இயலாமையில் உழலும் ஏழை மாணவர்களுக்கு தந்தையாக இருந்து, தன் சொந்த பணத்தை பெரு மளவில் செலவிட்டு ஏழை மாணவர்கள் வாழ்க்கையில் ஒளிவிளக்கு ஏற்றி வைத்தவர் நம் தலைவர்  பேராசிரியர் முனீருல் மில்லத் பெருந்தகை. மாணவர்களிடையே நல் ஒழுக்கமும், நற்பண்புகளும் நிலவிட மார்க்க ஞானமே மனிதனை நேர்வழியில் செலுத்த முடியும் என்ற நம் பிக்கை கொண்ட பேராசிரியர் அவர்கள், கல்லூரியில் `குர் ஆன் மஜ்லிஸ்’ என்ற அமைப்பை துவக்கி நடத்தி திருக்குர்ஆன் மாநாடுகளை சிறப்பாக நடத்தி அல்லாஹ்வின் அருள்மறையை அனைவரும் அறிந்து வாழ்க்கை நடத்த பணி யாற்றினார்.

ஆசிரியர்களுக்காக சிறை சென்ற சிங்கம்

எம்.ஜி.ஆர். முதலமைச் சராக இருந்த காலத்தில் கல்லூரி ஆசிரியர்களின் போராட்டத்தில் கலந்து கொண்டு கைதாகி 15 நாட்கள் சிறையில் இருந்த சிங்கம் பேராசிரியர் அவர்கள். திருச்சி ஜமால் முஹம்மத் கல்லூரி வரலாற்றுத் துறை தலைமைப்பேராசிரியராக ஏற்றம் பெற்று, அக்கல்லூரியின் அடுத்த முதல்வர் என்ற எதிர்பார்ப்பு இருந்த அருமை யான நேரத்தில் – அதிகமான சம்பளம் கிடைக்க வாய்ப்பு இருந்த பணியை நம் இதயம் கவர்ந்த இனிய தலைவர் சிராஜுல் மில்லத் அழைப்பை ஏற்று பேராசிரியர் பணியை துறந்து சமுதாயத்திற்காக தியாகம் செய்த செம்மல் ஆன நம் தலைவரை பாராட்ட வார்த்தைகள் இல்லை.

தேர்தல் களத்தில் தோல்விகளும் வெற்றியும்

தாய்ச்சபையின் மாநில செயற்குழுவின் கட்டளையை ஏற்று 1980-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக திருச்சி -2 தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். தொடர்ந்து மீண்டும் 1989-ஆம் ஆண்டு தேர்தலில் இதே தொகுதியில் மூன்று முறை போட்டியிட்டும் வெற்றி வாய்ப்பை இழந்தார். அதன் பிறகு, 1996-ஆம் ஆண்டு பெரியகுளம் சட்டமன்ற தொகுதியிலும், அதன்பிறகு 2001-ம் ஆண்டு மீண்டும் திருச்சி சட்டமன்ற தொகுதி யிலும் போட்டியிட்டு அனைத்து தேர்தல்களிலும் மிக குறை வான ஓட்டு வித்தியாசத் தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். ஐந்து முறை தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும், வாழ்க்கையிலும் பல சோதனைகள், பல வேதனைகள், பொருளாதார இழப்புகள், மிகப் பெரும் அளவில் எதிர்நோக்கியபோதும், வேறுயாராக இருந்தாலும் நிலைகுலைந்து போயிருப்பார் கள். ஆனால், நம் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் அவர்கள் கொள்கையில் அசையாத மலையாக நின்று, பொறுமையை மேற்கொண்டு சமுதாயஇயக்கப் பணிகளை கவனித்தார். வல்ல அல்லாஹ், அருமைத் தலைவரின் பொறுமைக்கு தொடர் வெற்றிகளை தந்து அருள்புரிந்துள்ளான். அல்ஹம் துலில்லாஹ்.

ஆம்! 2004-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற பொது தேர்தலில் வேலூர் தொகுதியில் போட்டியிட்டு 1,78,810 வாக்கு கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றார். நாடாளுமன் றத்தில் நம் சமுதாயத்தின் சங்கநாத முழக்கம் நம் தலைவர் மூலம் எதிரொலிக்கச் செய்தான் வல்லோன் அல்லாஹ்.  இறைவ னின் நாட்டத்தை நாம் அறிவோமா? நம் தலைவரின் அடக்கமான பொறுமைக்கு அல்லாஹ் தந்த அழகான சன்மானம் இது என்று சொன்னால் அது மிகையாகாது. 1981-ம் ஆண்டு ஜனவரி 2-ம் தேதியில் `தாருல் குர்ஆன்’மாதமிருமுறை இதழ் தொடங்கி சுமார் 10 ஆண்டுகள் அதன் ஆசிரியராக இருந்து நடத்தி னார். பிறகு 1996-ம் ஆண்டு `மணிச்சுடர்’ நாளிதழ் நிர்வாக ஆசிரியராக பணியாற்றினார். தலைவர் சிராஜுல் மில்லத் மறைவுக்குப் பிறகு 27-4-1999 தேதி முதல் மணிச்சுடர் ஆசிரியர் பொறுப்பை ஏற்று இன்று வரை சிறப்பாக நடத்தி, அதன் வெள்ளி விழா மற்றும் வெள்ளி விழா மலரையும் வெளியிட்டு சாதனை படைத்து, இதழியல் வரலாற்றில் இடம் பெற்றுள்ள இதழியல் மாமணி பேராசிரியர். 1960 முதல் 62 வரை மாணவர் அணி அமைப்பாள ராகவும், பிறகு சில ஆண்டுகள் மாநில, இளைஞர் அணி பொருப்பாளராகவும், 1988 ஆம் ஆண்டு மாநில முஸ்லிம் லீக் அமைப்புச் செயலாளராகவும், 1994 ஆம் ஆண்டு மாநில முஸ்லிம் லீக் பொதுச் செயலாளராகவும், 1999 ஆம் ஆண்டு முதல் இன்று வரை தமிழ்நாடு மாநிலத்தலைவராக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டு சிறப்பான முறை யில்பணியாற்றி சாதனை படைத்து வருகிறார்.

இன்று தமிழகத்தின் தலைநகராம் சென்னையில் மண்ணடி மரைக்காயர் லெப்பை தெருவில் இயங்கி வரும் தாய்ச்சபையின் தலைமைச் செயலகம் - 1960-ம் ஆண்டு நடந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டுக்காக திரட்டப்பட்ட நிதிகளில் இருந்து மிகவும் சிக்கனமாக செயல்பட்டு இறுதியில் ரூ.35,000/- மிச்சப்படுத்திக் கொடுத்தார். அதற் காக அவரைப் பலரும் வியந்து பாராட்டினர். இந்த பணத்தில் வாங்கப்பட்ட கட்டிடம். அன்று காயிதெமில்லத் காலத்தில் தலைமைச் செயலகமாகவும், முஸ்லிம் லீகின்அதிகாரப்பூர்வ மான வார இதழ் உரிமைக்குரல்  அலுவலகமாகவும் செயல் பட்டது.
தலைவர் சிராஜுல் மில்லத் மறைவுக்கு பிறகு தலைவராக பொறுப்பு ஏற்ற அருமைத் தலைவர் முனீருல் மில்லத் ஆற்றல் மிக்க தலைமையில் சென்னை மாவட்டத் தலைவ ராக செயல்பட்ட ஏ.கே. அப்துல் ஹலீம் ஹாஜியார்  அவர்களின் ஒத்துழைப்பால்  புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இன்று காயிதெ மில்லத் மன்ஸில் என்ற பெயரில் புத்துருப் பெற்று விளங்குகிறது. இதில் மணிச் சுடர் நாளிதழ் அலுவலகமும், முஸ்லிம் லீக் பதிப்பக அறக் கட்டளை அலுவலகமும் செயல் பட்டு வருகிறது என்றால் இந்த சாதனையை படைத்த பெருமை பேராசிரியரையே சாரும்.

தாய்ச்சபைக்கு பெருமை சேர்த்த தலைவர் 1999 மார்ச் 9, 10 தேதிகளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொன்விழா  மாநாட்டை மாநில பொதுச் செயலாளர் என்ற முறையில் சிறப்பாக நடத்திட தலைவர் சிராஜுல் மில்லத் துடன் இணைந்து பாடுபட்டு, அந்த தலைவரால் மாநாட்டின் `ஹீரோ’  எனவர்ணிக்கப்பட் டார். அதன் பின்னர் மாநில தலைவராக பொறுப்பு ஏற்ற பின்னர் ஜுன் 21, 2008 ஆம் ஆண்டில் மணிவிழா மாநாடும், 2010 டிசம்பர் 11-ல் மீண்டும் ஒரு மாநில மாநாடும் சிறப்பாக நடத்தி வரலாறு படைத்தார்.
1-02-2009 ஆம் ஆண்டு சென்னையில் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு உல மாக்கள், உமராக்கள் மாநாடு நடத்தி அதன் விளைவாக உலமாக்கள் - பணியாளர்கள் நலவாரியம் அமைவதற்கு காரணமாக இருந்தார். அதே ஆண்டில் மண்டல மாநாடுகளும்,கல்வி விழிப்புணர்வு மாநாடுகள் பள்ளபட்டி மற்றும் கும்பகோணம் ஆகிய ஊர்களில் 2010-2012 ஆண்டு களில் சிறப்பாக நடத்தச்செய்தார்.  திருமண கட்டாய பதிவு சட்டம் திருத்தி அமைக்கவும், முஸ்லிம்களுக்கு 10 சதவீதம் தனி இடஒதுக்கீடு கிடைக்க வும், அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் சிறையிலிருந்து விடுதலை பெறவும், முஸ்லிம் களின் உரிமைகள் பாதுகாக்கப் படவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். பல்வேறு முயற்சிகளை எடுத்து மத்திய - மாநில அரசுகளின் கவனத் திற்கு கொண்டு வந்துள்ளார்.

2004 ஆம் ஆண்டு வேலூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக தேர்வு பெற்று டெல்லி சென்றதும் அனைத்துக் கட்சி முஸ்லிம் நாடாளுமன்ற  உறுப்பினர்களையும் ஒருங்கி ணைத்து ஒரு குழுவாக சென்று பிரதமர் மன்மோகன்சிங், சோனியாகாந்தி அம்மையார் ஆகியோரை சந்தித்து முறை யிட்டதன் மூலமாக நீதிபதி ராஜேந்திர சச்சார் கமிஷன் மற்றும் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் போன்றவை அமைக்கப்பட்டன.  இதன் மூலம் முஸ்லிம்களின் கல்வி, பொருளாதார,வேலைவாய்ப்புகளின் பின்னடைவுகள் குறித்தும், சிறுபான்மை மக்களின் உண் மையான நிலைமை உலகிற்கும், இந்திய ஆட்சியாளர்களுக்கும் , நாட்டு மக்களுக்கும் வெளிச்சம் போட்டு காட்ட வழிவகுத்தவர் நம் தாய்ச்சபையின் தானைத் தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத் அவர்கள்தான் என்றால் அது மிகையாகாது.

தலைவரின் எளிமையும், தூய்மையும், தியாகமும் அவரைத் தேடி தேசிய துணைத் தலைவர், தேசிய பொதுச் செயலாளர் பொறுப்புகள் வர காரணமாக அமைந்தன. தியாகத்தின் தழும்புகள் பல பெற்று இயல்பாக அமைந்துள்ள அறிவால், ஆற்றலால் இன்று தமிழக தலைவர்களில் ஒரு சிறப்பான இடத்தை பெற்றுள்ளார். சிந்தனைச் செம்மல், அறிஞர் பெருந்தகை சிராஜுல் மில்லத் அவர்களால்  தாய்ச்சபையின் தலைவராக அன்றே கணிக் கப்பட்டு
இனங்காட்டப்பட்ட முனீருல் மில்லத் பேராசிரியர் அவர்கள். தம் அரிய உழைப்பால், எடுப்பான பேச்சால், எந்த டாம்பீகமும் இல்லாமல் இயக்க கண்மணி தன் தோழர்களாக காண  இனிப்பவர். தேசிய அளவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒரே பெயரில் பதிவு செய்யப்பட்டு தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக ஆக்கிய பெருமை அவருடைய தனித் திறமையாகும்.

தாய்ச்சபைக்கு `ஏணி’ சின்னத்தை பெற்றுத் தந்து புகழேணியின் உச்சத்தில் உள்ள அவரை பொறாமைத் தீ, தீண்டாமல் விடவில்லை.  என்றாவது கருத்து வேறுபாடு கொண்டு முரண்பட்டு நில்லா மல் அனைவரும் தாய்ச்சபையில் இணையுமாறு தாய் உள்ளத்துடன் அழைப்பு விடுத்துக் கொண்டு இருப்பது அவரின் மிகஉயர்ந்த அரசியல் பண்பாக அனைவருடைய பாராட்டுதல்களையும் பெற்றே உள்ளது.

``முஹ்யீத்தீன்’ என்பதற்குப் பொருள் `தீனை உயிர்ப்பித்தவர்’என்பது பொருள்.  ஆம், தீன்குலத்தின் தாய்ச்சபையாம் முஸ்லிம் லீகை, உயிர்ப்பித்து அதை புகழின் உச்சத்திற்கு கொண்டு வந்து - கொண்டி ருப்பவர். அதற்கு முஸ்லிம் லீகின் வரலாற்று சாதனைகளே சாட்சி. கனிவை காயிதெமில்லத்திடமும், செயலை சிராஜுல் மில்லத்திடமும் பெற்றுள்ள முனீருல் மில்லத் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். இந்த இனிய நாளில் தலைவரின் ஆயுள் நீள -நலம் சூழ - வளமுடன் வாழ - இருகரமேந்தி இறைஞ்சுவோம். ஏக இறைவன் வல்ல அல்லாஹ்விடம்! ஆமீன்!

2012 டிசம்பர் 2ம் தேதி கோழிக்கோட்டில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் தேசிய பொதுச்செயலாளராக பேராசிரியப் பெருந்தகை கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் மீண்டும் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்ட போது வாழ்த்து முழக்கம் பலமாக ஒலித்தது. அதற்கு காரணம் 14.09.2008ல் புதுடெல்லியில் நடைபெற்ற தேசிய செயற்குழு கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச்செயலாளராக தேர்வு பெற்ற போது பேராசிரியர் தெரிவித்த உறுதியான அறிவிப்பு , “ இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்ற ஒரே பெயரில் செயல்பட வேண்டும்” என்பதுதான் அவரது ஆசையும் முயற்சியும் நிறைவேறி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 03.03.2012 ல் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டது.

11.04.1999ல் சிராஜுல் மில்லத் கால மானதும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழகத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் சென்னை மண்ணடி மரைக்கயார் லெப்பை தெருவில் உள்ள மாநில தலைமையகத்தை புதுப்பித்து எழுப்பும் முழு முயற்சியில் ஈடுபட்டார். 1960 செப்டம்பர் 17,18 தேதிகளில் காயிதே மில்லத் தலைமையில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டில் மீத மிருந்த பணத்தில் இந்த கட்டிடம் வாங்கப்பட இளையான்குடி பி.என்.ஐ. அபூதாலிப், காயல்பட்டினம் பி.எச்.எம்.அப்துல்காதர் ஆகியோரும் மூலகாரண கர்த்தாக்களாக இருந்தது இங்கே நினைவு கூரத்தக்கது. இந்த கட்டிடத்தை அடித்தளத்திலிருந்து முற்றிலும் புதிதாக எழுப்பி காயிதேமில்லத் பெயர் சூட்டி 14.03.2004ல் திறப்பு விழா நடத்தி இன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைமையாக மிளிரச் செய்துள்ளார் பேராசிரியர் முனீருல் மில்லத். அந்த சாதனையாளரின் 73 வது பிறந்த நாளையொட்டி இச்சிறப்பு கட்டுரை வெளியிடுவதில் மணிச்சுடர் பெருமையடைகிறது.

-செய்தி ஆசிரியர்
- கவிஞர் வி.எஸ். முஹம்மத்  ஃபஸ்லுல்லாஹ்


திங்கள், 11 ஜூன், 2012

இல்லாத ஊருக்கு செல்லாத வழியைக் காட்டுவதால் என்ன பயன்? - கே.எம்.கே.


நடுவண் அரசின் உள்துறைச் செயலாளர் ஆர்.கே. சிங், எல்லா மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதியுள்ளார். முஸ்லிம்கள் பெருகிவாழும் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் ஒரு முஸ்லிம் சப் இன்ஸ்பெக்டர் அல்லது ஒரு முஸ்லிம் இன்ஸ்பெக்டர் நியமிக்கப்பட வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் குறிபிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்தச் செய்தி 7/8-6-2012 மணிச்சுடரில் பிரசுரமாயிருக் கிறது. 8.6.2012 தினகரனில் இதே செய்தி வந்திருக்கிறது. செய்தியைப் படிக்கும்போது இனிப்பாகத்தான் இருக்கிறது. ஆனால், இதனை எந்த மாநில அரசு நடைமுறைப்படுத்துகிறது? என்ற வினாதான் பெரிதாக எழும்புகிறது.

கேரளாவில் 12 சதவீத இட ஒதுக்கீடு முஸ்லிம் பிற்பட்ட வகுப்பினருக்கு இருக்கிறது. தமிழகத்தில் 3.5 சதவீதம் உள்ளது. ஆந்திராவில் 4 சதவீதம், கர்நாடகாவில் 5 சதவீதம், மணிப்பூரில் 4 சதவீதம் என்று இட ஒதுக்கீடு இருக்கிறது.

கேரளம், தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், மணிப்பூர் ஆகிய இந்த ஐந்து மாநிலங்களில் மட்டுமே முஸ்லிம்கள் தங்களுக்குள்ள இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்திக் காவல்துறையில் சேர முடியும். இந்த மாநிலங்களில் மட்டுமே முஸ்லிம்கள் பெருகிவாழும் பகுதிக் காவல் நிலையங்களில் முஸ்லிம் சப் இன்ஸ்பெக்டர் அல்லது இன்ஸ்பெக்டர் என்று நியமனம் செய்யப்படுவதற்குச் சாத்தியம் இருக்கிறது. இட ஒதுக்கீடு இல்லாத மற்ற மாநிலங்களில் முஸ்லிம்கள் வேலை-வாய்ப்பு பெற வழியே இல்லை. பொது பட்டியலில் மிக மிக உயர்ந்த மதிப்பெண்கள் பெறுகிறவர்கள் தேர்வு பெறுகிறார்கள். அந்தப் பட்டியலில் முஸ்லிம்கள் இடம் பெறுவது அபூர்வத்திலும் அபூர்வமாகும். இந்த நிலையில் இட ஒதுக்கீடு இல்லாத மாநிலங்களில் முஸ்லிம் இன்ஸ்பெக்டர் எப்படி நியமிக்கப்பட முடியும்?

மத்திய உள்துறையின் கடிதம் ஓர் அறிவுரையே தவிர, ஆணை அல்ல. உண்மையில், முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் முஸ்லிம் காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டுமானால், அந்த மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு இருந்தாக வேண்டும். மத்திய உள்துறை மாநிலங்களுக்கு எழுத வேண்டிய கடிதம், முஸ்லிம்களுக்கு உரிய இட ஒதுக்கீடு அளிப்பதற்கு ஒவ்வொரு மாநில அரசும் விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதைக் குறித்தாக இருப்பது உசிதமானதாகும்.

மாநில அரசுகளின் கொள்கை சம்பந்தப்பட்ட விவகாரங்களில் மத்திய அரசு தலையிடலாமா? என்று சிலர் வினா எழுப்புவர். மத்திய அரசு நியமித்த நீதியரசர் சச்சார் குழு பரிந்துரையை மத்திய அரசு ஏற்றிருக்கிறது. அந்தப் பரிந்துரைகளை அமுலாக்க மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் துரிதப்படுத்தக் கடமைப்பட்டிருக்கிறது.

அதேபோல் நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையும் வெளிவந்திருக்கிறது. இந்தக் குழுக்களின் பரிந்துரைகளை நடைமுறைக்கு கொண்டுவரும் முயற்சியாகவே மத்திய அரசு எல்லா சிறுபான்மையினருக்கும் என்று 4.5 சதவீதம் இடஒதுக்கீடு மத்திய வேலை வாய்ப்பு மற்றும் உயர் கல்வி சேர்ப்புக்கு வழி கண்டிருக் கிறது. இன்று அது நீதிமன்றத்தில் இருந்தாலும், இட ஒதுக்கீட்டுக் கொள்கையை மத்திய அரசு ஏற்று செயல்படுத்தவும் முன்வந்திருக்கிறது.

இதையே மாநில அரசுகளும் பின்பற்றி, முஸ்லிம்களுக்கு உரிய இட ஒதுக்கீடு அளிப்பதற்கு முன்வரவேண்டும் என்பதை மத்திய உள்துறை வலியுறுத்த வேண்டும்.

இட ஒதுக்கீடு இல்லாத மாநிலங்களில் முஸ்லிம் பகுதிகளில் முஸ்லிம் இன்ஸ்பெக்டர் நியமிக்க வேண்டும் என்று கடிதம் எழுது வது, `கொம்பை விட்டு விட்டு வாலைப் பிடிப்பது� என்று சொல்லும் பழமொழிக்கு ஒப்பானதாகும்.

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் முஸ்லிம் களுக்குரிய இட ஒதுக்கீடு விரைவாக அறிவிக்கப்பட்டால்தான், மத்திய உள்துறை செயலாளரின் ஆசை நிறைவேறும்.

இல்லாத ஊருக்குச் செல்லா வழியைக் காட்டுவதால் எவ்விதப் பயனும் இல்லை!

சனி, 19 மே, 2012

சமத்துவம்��- அங்கும் இங்கும்

``ஏழுமலையான் கோயிலில் பணக்காரர்களுக்கும், நடிகை, நடிகர்களுக்கும் முக்கியத்துவம்��- இந்தத் தலைப்பில் `தினகரன் (17-5-2012) சென்னை பதிப்பு ஒரு செய்தி தந்திருக்கிறது. ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியை அவர் தங்கியிருந்த விடுதிக்குச் சென்று திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரதான அர்ச்சகர் ரமண தீட்சிதர் நேரில் சந்தித்து பிரசாதம் வழங்கி ஆசீர்வாதம் செய் தாராம் என்றும், இதனால் பக்தர்கள் அதிர்ச்சிய டைந்துள்ளனர் என்றும், சாதாரண ஏழை மக்களை தேவஸ்தானம் கண்டு கொள் வதில்லை; ஆனால், தொழில் அதிபர்களுக்கும், நடிகை நடிகர் களுக்கும் தாம் தேவஸ்தானம் மரியாதை கொடுக்கிறது என்றும் குற்றம் சாட்டினர் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டிருக்கிறது. இது பற்றிய வாதப் பிரதிவாதங்கள் பற்றியும் அச் செய்தியில் கூறப்பட்டிருக்கிறது.

``இறைவன் எல்லோருக்கும் பொதுவானவன்; எல்லாரும் இறைவன் சந்நிதானத்தில் சமமானவர்களே; ஏழை பணக்காரன் என்று வித்தியாசப் படுத்துவது இல்லாத ஒரே இடம் இறைவனின் சந்திதானம்தான்�� என்று எல்லா மதங்களிலும் கூறப் பட்டுள்ளது.

இதற்கு மாற்றமான ஒரு புதிய நடைமுறையை திருப்பதி தேவஸ்தானத்தில் பார்த்தவுடன் பக்தர்கள் கொதித்துக் குமுறியிருக்கிறார்கள். இந்தச் செய்தியைப் படித்த போது இரண்டு மூன்று தினங்களுக்கு முன்பு தஞ்சாவூர் மாவட்டத்தில் சுற்றுப் பயணம் செய்தபோது முஸ்லிம் லீகர்களின் மத்தியில் நடைபெற்ற ஓர் உரையாடல்தான் பளீரென்று நினைவுக்கு வந்தது.

மாவட்டத் தலைவர் பி.எஸ். ஹமீது ஹாஜியார், மாவட்டச் செயலாளர் லயன் பஷீர் அஹமது, வழுத்தூர் நகர செயலாளர் கமர்தீன், மாநில துணைத் தலைவர் அதிரை எஸ்.எஸ்.பி. நஸீருத்தீன், எம்.எஸ்.எஃப் மாநில துணைச் செயலாளர் ஷாநவாஸ் ஆகியோருடன் நானும் பயணம் செய்யும் வாய்ப்பு வந்தது.

பயணத்தின் போது சமுதாயம் பற்றியும், மார்க்கம் பற்றியும், அந்தக் காலத்துப் பெரியவர்கள் எப்படி கை கால் முகம் எலலாவற்றையும் கசக்கிப் பிழிந்து `ஒலு� செய்யும் போது செய்தார்கள் என்பது பற்றியும், தொழுகைக்கு `ஒலு� செய்வதிலேயே `அக்குபஞ்சர்�, `அக்குபிரஷர்� வைத்திய முறைகள் எல்லாம் உள்ளன என்பது பற்றியும் நீண்டு கொண்டிருந்தது.

அப் பேச்சுக்கிடையில் தி.மு.க.வின் முந்திய காலத்துப் பெரியவர் மன்னை நாராயணசாமி அவர்கள் பற்றிய பேச்சு வந்தது. அதிரை நஸீருத்தீன் சொன்னார்: மன்னையார் இஸ்லாம் பற்றி நிரம்பவும் தெரிந்து வைத்திருந்தார். காயிதெ ஆஜம் ஜின்னா சாஹிபை முதன் முதலில் தமிழகத்துக்கு அழைத்து வந்தவர் பெரியார்தான் என்று மன்னை ஒரு முறை கூறியுள்ளார். அதோடு, தொழுகை பற்றிய அற்புதமான செய்தி ஒன்றையும் அவர் கூறினார். `தி இல்லஸ்ட்ரேட்டு வீக்லி ஆஃப் இண்டியா� ஏட்டில் வந்த படத்தை என்னிடம் காட்டி, இப்படிப்பட்ட இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றும் நீங்கள் உண்மையில் கொடுத்து வைத்தவர்கள் என்று கூறுவார்.

திருமதி இந்திரா அம்மையார் பிரதமராக இருந்த போது, சவூதி அரேபிய மன்னர் காலிது டெல்லி வந்தார். பிரதமருடன் பேச்சுவார்த்தை நடந்து முடிந்து -அன்று வெள்ளிக்கிழமை - டெல்லி ஜும்ஆ மஸ்ஜிதுக்கு விரைந்து சென்றார். மன்னர் பள்ளிவாசலை நெருங்கிய போது ஜும்ஆ தொழுகை ஆரம்பமாகி விட்டது. காரில் இருந்து இறங்கிய மன்னர் காலிது, வேகமாகச் சென்று தொழுகையில் சேர்ந்தார். அவர் நின்று தொழுவதற்குக் கிடைத்த இடம் எது தெரியுமா? ஜும்ஆ மஸ்ஜிது மேலே ஏறுகின்ற படிக்கட்டுகள்தாம். அந்தப் படிக்கட்டுகளில் தெருவில் செருப்பு தைக்கும் முஸ்லிம் தொழிலாளிகள் கடைசி நேரத்தில் தொழுகையில் சேர்ந்துள்ளனர். அவர்கள் நின்று தொழுத இடத்தில் மன்னர் காலிதும் நின்று தொழுதார். அவர் ஸஜ்தா செய்தபோது, அந்த அரபக மன்னரின் தலை, முன்வரிசையில் அவருக்கு முன்னே நின்று தொழுத செருப்புத் தொழிலாளி ஒருவரின் இரண்டு கால் பாதங்களுக்கு இடையில் இருந்தது.

- இதைக் காட்டும் தத்ருபமான படத்தை அந்த `வீக்லி� ஏடு பிரசுரித்திருந்தது. அதை பாதுகாப்பாக வைத்துக் கொண்டிருந்த மன்னை நாராயணசாமி அவர்கள் வருவோர் போவோர் எல்லாரிடமும் அந்த படத்தைக் காட்டி, இஸ்லாமிய மார்க்கத்தின் பெருமையை - சிறப்பை - மகத்துவத்தைப் பற்றியே பல காலம் பேசி வந்தார். நானே பல முறை அவர் சொல்லக் கேட்டிருக்கிறேன் என்று அதிரை நஸீருத்தீன் உணர்ச்சி மேலிட்டவாறு நினைவு கூர்ந்தார்.

திருப்பதி கோயிலில் நடந்த சம்பவத்தை தினகரனில் படித்தபோது, மன்னை நாராயணசாமி அவர்கள் கூறியதுதான் நினைவுக்கு வந்தது; முஸ்லிம்கள் எவ்வளவு கொடுத்து வைத்தவர்களாக இருக்கிறார்கள் என்னும் சிந்தனை மனதுக்கு பேரின்பம் தந்தது! -கே.எம்.கே.

சமுதாய மரபுகளில் குழப்பம் ஏற்படுத்தக் கூடாது முஸ்லிம் லீக் வேண்டுகோள்


ஈதுப் பெருநாள் அறி விப்பு செய்வது தலைமை காஜிதான். அதை பின் பற்றித்தான் முஸ்லிம்கள் பெருநாள் கொண்டாடுவர். தமிழக முஸ்லிம் சமுதா யத்தில் தொன்று தொட்டு நீடித்து வரும் சமுதாய முறைகள், சன்மார்க்க மரபு கள் எத்தகைய குழப்பங் களும் இல்லாமல் தொடர வேண்டும். அதற்கு சமுதாய மக்கள் தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழகத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை எருக்கஞ்சேரி யில் நடைபெற்ற வட சென்னை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயல் வீரர்கள் கூட் டத்தை தொடர்ந்து செய்தி யாளர்களிடம் பேசுகை யில் அவர் குறிப்பிட்ட தாவது-

முஸ்லிம் சமுதா யத்தைப் பொறுத்தவரை பக்ரீத், ரமளான் பெரு நாட்கள் எப்போது வரு கிறது? எந்த நாளில் இதைக் கொண்டாட வேண்டும்? என்பதை அறிவிப்புச் செய்யும் அதிகாரம் தமிழக அரசால் அங்கீகரிக்கப் பட்ட தலைமை காஜியி டம் மட்டுமே உள்ளது. மஹல்லா ஜமாஅத் நிர்வாகிகளோ, சங்கைக் குரிய உலமாக்களோ, நம் பத்தகுந்த நபர்களோ அவர் கள் வசிக்கும் பகுதிகளின் தலைப்பிறையை பார்த்தா லும் அந்தத் தகவலை முறைப்படி தலைமை காஜிக்கு தெரிவித்து அதை அவர் ஊர்ஜிதம் செய்து அதன் பின்பே பெரு நாட் களை பற்றிய தகவலை அல்லது ரமளான் முதல் நோன்பை அறிவிப்புச் செய்கிறார்.

பக்ரீத் பெருநாள் வரும் 17-ம் தேதிதான்
இந்த அடிப்படையில் இந்த வருடம் பக்ரீத் பண்டிகை என்னும் புனித ஹஜ்ஜுப் பெருநாள் வரும் 17-ம் தேதி புதன்கிழமை என்று தலைமை காஜி டாக்டர் முஃப்தி ஸலா ஹுத்தீன் முஹம்மது அய்யூப் அறிவித்துள்ளார்.

இதனை ஏற்றுக் கொண்டு ஒட்டு மொத்த சமுதாயமும் பெருநாள் கொண்டாட ஆயத்தமாக உள்ள நிலையில், சிலர் தங்களை விளம்பரப் படுத்திக் கொண்டு சமு தாயத்தில் குழப்பம் விளை வித்து ஆதாயம் தேட வேண்டும் என்ற நோக் கோடு பக்ரீத் பெருநாள் 16-ம் தேதி என்றும், 18-ம் தேதி என்றும் அறிவிப்பு களை வெளியிட்டு பெரு நாள் தொழுகை நடத்து வதற்கான ஆயத்தங்களை யும் செய்து வருகின்றனர்.

சமுதாயத்தின் ஒற்றுமையை மஹல்லா ஜமாஅத் கட்டுப்பாட்டை அடியோடு தகர்ப்பதற்கு செய்யப்படும் இந்த விஷமத்தனத்தை சமுதாயம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. இத்தகைய போக்கை தடுத்து நிறுத்துவது சமுதாயத்தின் கட்டாய கடமையாகும். எனவே தலைமை காஜி அறிவித்த 17-ம் தேதிக்கு முன்போ அல்லது பின்போ பக்ரீத் பெருநாள் என்று பொது இடத்தில் தொழுகை நடத்த யாரா வது அனுமதி கேட்பார் களேயானால் தமிழக அரசு மாவட்ட நிர்வாகங்கள், காவல் துறை அதனை ஏற்காமல் அனுமதி மறுக்க வேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கி றோம்.

தீபாவளி இன்னொரு நாள் என்று, இந்துவோ கிறிஸ்துமஸ் மறுநாள் என்று கிறிஸ் தவரோ அறிவித்து விட்டு அவர்கள் நடமாட முடியாது. அந் தந்த மதங்களைச் சார்ந்த வர்கள் அதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆனால், முஸ்லிம்களில் மட்டும் யார் வேண்டு மானாலும் எத்தகைய அறிவிப்பையும் செய்து விட்டு சமுதாயத்தை கேலிப் பொருளாக் குகிறார்கள். இதனால் சமுதாய ஒற் றுமை கேள்விக்குரிய தாகின்றது.

ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள், சிவசேனா போன்ற இந் துத்துவ அமைப்புகள் செய்ய முடியாத ஒன்றை இஸ்லாத்தின் பெயரால் முஸ்லிம்கள் சிலரே செய்யத் துணிகிறார்கள் என்றால் அதை பொறுத் துக் கொண்டிருக்க முடி யாது. சமுதாய கண்ணியத்தை காப்பாற்றுவோம்
முஸ்லிம் சமுதாயத்தின் கண்ணியத்தை காப் பாற்றுவதும், மஹல்லா ஜமாஅத்தின் ஐக்கியத்தை நிலை நாட்டுவதும் இப் போது நமது தலையாய கடமையாகி விட்டது.

எனவேதான், டிசம்பர் 11-ம் தேதி சென்னை தாம்பரத்தில் நடத்துகின்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டின் காலை அமர்வை மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சியாக நடத்தி அதிலே சமுதாயப் புரவ லர்கள், சன்மார்க்க அறிஞர் கள், மஹல்லா ஜமாஅத் நிர்வாகிகளையெல்லாம் பங்கேற்கச் செய்து மஹல்லா ஜமாஅத் கட்டுப் பாடு, ஷரீஅத் பஞ்சாயத்து, பைத்துல்மால், கவி அபி விருத்தி போன்ற தலைப்பு களில் கருத்தரங்கமும் நடத்தவிருக்கிறோம்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு விளம் பரம் தேடுவதற்கு இந்த மாநாடு அல்ல. சமுதாய ஒற்றுமை மூலமே சமுதா யத்தின் மானம் மரியாதை காப்பாற்ற முடியும். சமு தாய ஒற்றுமை நிலைக்க வேண்டுமானால் மஹல்லா ஜமாஅத் கட்டுப்பாடு என்பது பலம் பொருந் தியதாக அமைய வேண் டும்.

எனவே, ஒவ்வொரு மஹல்லாவைச் சார்ந்த வர்களும் குடும்பத்தோடு இந்த மாநாட்டில் பங் கேற்க வேண்டும்.

இவ்வாறு தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் குறிப்பிட்டார்.

புதன், 3 ஆகஸ்ட், 2011

நோன்பு! தமிழக மக்களிடம் நடைமுறையாவது எப்போது?- கே.எம்.கே.

நோன்பு, மனித உடலுக்குப் புனிதத் தன்மையைத் தருகிறது.


நோன்பு, மனித உள்ளத்துக்குத் தூய்மையைத் தருகிறது.

பொதுவாக, நோன்பு உடலுக்கும், உள்ளத்துக்கும் நன்மை பயக்கிறது.

அதற்கும் மேலாக, நோன்பு, மனித ஆன்மாவின் அகமியத்தை உணரச் செய்கிறது.

மனித ஆன்மா, முதல் மனிதர் ஆதம் அவர்களுக்கு இறைவன் தன்புறத்திலிருந்துதந்தது; மண்ணால் படைத்து, அம் மனிதனுக்கு இறைவன் தன் ரூஹ் - ஆன்மாவிலிருந்து ஊதினான். மண்ணுடம்பு, உயிர்பெற்று எழுந்தது; இறைவனுக்குப் புகழ்பா நன்றி செலுத்தியது.

முதல் மனிதரில் ஊதப்பெற்று, அவருள்ளே இருந்த ஆத்மா, அம்முதல் மனிதரில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட ஹவ்வா என்னும் முதல் மனுஷியிடத்திலும் வந்தது என்பதுதானே சாத்தியம்! முதல் மனிதனுக்கும், முதல் மனுஷிக்கும் பிறந்த ஒவ்வொரு மனிதப் பிறவியிடத்திலும் அந்த ஆத்மா தொடர்கிறது என்பதுதானே சத்தியம்! மூலப் பெற்றோரான ஆதம் - ஹவ்வா இருவரின் வழித் தோன்றல்களாக உலகில் இன்றைக்குப் பல கோடியாகப் பல்கிப் பெருகியுள்ள மனிட உயிர்கள் அனைத்திலும் அந்த மூலமனிதரின் ஆத்மாதன் தொடர்கிறது என்பதுதானே தத்துவம்!

அதனால்தான் நோன்பின் மாண்பைக் குறித்து வந்துள்ள இறைவாக்கு கூறுகிறது:

`அஸ் ஸௌமு லீ; வஅந அஜ்ஜா பிஹி�

நோன்பு எனக்காக; அதன் சன்மானம் நானே�

ஆம்! இறைவனின் அருளைப் புரிந்து, அறிந்து, அதனுடன் ஒன்றிக்கும் அற்புதத்தை நோன்பு மூலமே பெற முடியும்! நோன்பின் மகத்துவத்துக்கு ஈடு எதுவும் இல்லை எனலாம்! அதனால்தான் போலும் திருவள்ளுவர் கூறினார்:

இலர் பலர் ஆகிய காரணம் நோற்பார்

சிலர்; பலர் நோலா தவர்��.

உலகத்தில் நோன்பு நோற்பவர் சிலராகவும், நோன்பை நோற்காதவர் பலராகவும் இருக்கின்ற காரணத்தினால்தான் வறுமையில் வாடுவோர் கூட்டம் பெருகியிருக்கிறது என்று திருவள்ளுவர் கூறியதை நேற்றைய கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது! படித்திருப்பீர்கள்! நோன்பின் மாட்சிமை பற்றிச் சங்க இலக்கியமும் பேசுகிறது. இன்றையத் தமிழக முஸ்லிம் சமுதாயத்தில் பேச்சு வழக்கிலும், எழுத்து வழக்கிலும் உள்ள சொற்கள்:

தொழுகை, பள்ளிவாசல், நோன்பு போன்றவை சங்க காலத்துக்குச் சொந்தமானவை.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வழக்கத்தில் உள்ள தமிழ்ச் சொற்கள், இன்றைக்கு முஸ்லிம்களின் வாழ்க்கையில் பழக்கத்தில் உள்ளவையாக மாறியுள்ளன.

நோன்பு என்னும் அழகிய சொல் பல சங்க இலக்கிய நூற்களில் இடம் பெற்றதாக இருக்கிறது.

நோன்பு இருப்பவர் ஆணாக இருப்பினும், பெண்ணாக இருப்பினும் நோன்பி என்று அழைக்கப் பெற்றுள்ளனர்.

நற்றிணை என்னும் சங்க நூலில், `மழை பெய்தலால் நனைந்த நோன்பிகள் தைத் திங்கள் பிறப்பில் நீராடி நோன்பு முடித்து உணவு உண்ண குந்தியிருப்பது போலத் தினையை அடக்கிய மந்திக்குரங்கு குந்தியிருந்தது� என்று பேசப்படுகிறது.

நோன்பு திறப்பதற்கு நோன்பிகள் பள்ளிவாசலில் வரிசையாகக் குந்தியிருப்பதுபோல, அந்தக் காலத்து நோன்பிகளும் குந்தியிருந்தார்கள் என்பதையே இந்த நற்றிணைப் பாடல் அறிவிக்கிறது.

நோன்பு, தமிழ்ச்சொல்! நோன்பிருந்தவர்கள் அன்றையத் தமிழர்கள்! ஆனால், இன்றைக்கு அதே தமிழ்ச்சொல் முஸ்லிம்களிடத்தில் மட்டுமே இருக்கிறது! அந்தச் சொல்லுக்குரிய செயல்பாடும் முஸ்லிம்களிடத்தில் மட்டுமே இருக்கிறது! முஸ்லிம் தமிழர்களிடத்தில் தொடர்கின்ற நோன்பு முழுத் தமிழ்ச்சமுதாயத்திலும் எப்பொழுது தோன்றும்? என்று தொடரும்? இதுதான் இன்றைக்குள்ள கேள்வி!