சனி, 23 பிப்ரவரி, 2013

உண்மையான எளியவர்


1.திருச்சி , விமான நிலையம் அருகில் தங்களுக்கு இருந்த சொந்த இடத்தை ஏழை மக்களுக்கு இலவசமாக வழங்கிய குடும்பத்தின் வாரிசு !

2. 14 ஆண்டுகள் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் வரலாற்றுத்துறை தலைவர்

3.நூற்றுக்கணக்கான ஏழை மாணவர்களுக்கு தன் சொந்த செலவில் இலவசமாக உண்ண உணவும் , இருக்க இருப்பிடமும் அளித்து ,கல்வி கற்கச் செய்து அவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றி,இன்று உலகெங்கிலும் பெரும் மேதைகளாக , பெரும் பணக்காரர்களாக , பெரும் தொழில் அதிபர்களாக பரவி வாழ்வதற்கு தன் வாழ்க்கையை அர்பணித்துக் கொண்டவர் .

4.சென்னை பல்கலைகழக முன்னாள் செனட் சபை உறுப்பினர் .

5.பாரதிதாசன் பல்கலைகழக முன்னாள் நிலைக்குழு உறுப்பினர்

6. எல்லா மாநில மாணவர்களும் , டெல்லி சென்று தங்கள் கல்விச் சான்றிதழ்களை அட்டஸ்டேசன் பண்ணனும் என்று நிலையில் ,ஏழை மாணவர்கள் படும் கஷ்டத்தை கண்டு வருந்தி ; அந்ததந்த மாநில அரசுகளுக்கு அந்த அதிகாரத்தை மத்திய அரசு வழங்க காரணமாகத் திகழ்ந்தவர் .

7. சச்சார் கமிஷன் , ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அமைய காரணமாக இருந்தவர் .

8.வேலூர் பாரளுமன்ற உறுப்பினராக இருந்தவர் .

9.இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாணவர் அணி தலைவர் , மாநில இளைஞர் அணி அமைப்பாளர் ,மாநில கலாச்சாரப் பிரிவு செயலாளர் , மாநில அமைப்புச் செயலாளர் ,மாநில பொதுச்செயலாளர் , இன்று மாநில தலைவர் மற்றும் அகில இந்திய பொதுச்செயலாளர் என்று தன் உழைப்பால் படிபடியாக உயர்ந்தவர்

நம் இனமானப் பெருந்தலைவர் , முனிருல் மில்லத் ,பேராசிரியர் கே.எம்.காதிர் மொஹிதீன் !

ஸ்டார் விடுதிகளில் தங்கிக்குக் கொண்டு , சின்னத் திரை பேட்டிகளுக்கு ஆள்கள் மூலம் தங்களை வரவழைக்கச் செய்து , மேக்கப் பண்ணிக் கொண்டு சமுதாயத் தலைவர்கள் என்று பவனி வருபவர்கள் மத்தியில் , எம்பெருமானார் காட்டிய வழியில் அரசியல் நடத்திய கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் (ரஹ்) அவர்களை தன் அரசியல் தலைவராக ஏற்றுக் கொண்டு இஸ்லாமிய சமுதாயத்தின் மானம் ,மரியாதையை ,இச்ஷத்தை காப்பாற்ற பாடுபட்டுக் கொண்டிருக்கும் தலைமகன் பேராசிரியர் கே.எம்.காதிர் மொஹிதீன் அவர்கள்

நட்சத்திர ஹோட்டல் இல்லை..படுக்க பஞ்சு மெத்தை இல்லை ...தலைக்கு ஒரு தலைகாணி இல்லை காப்புக்கு காவலர்கள் இல்லை ....அத்தோடு A.K.47 துப்பாக்கி இல்லை ...தொண்டர்கள் புடை சூழவில்லை (அது வெறும் பந்தா )...மாணவர் கண்மணிகளின் பயிற்சி பாசறை நடக்கும் பயிலரங்கிற்கு தானே முன் நின்று உற்சாகப்படுத்தி கொண்டிருக்கும் மதிய வேளையில் சற்று துயிலும் சங்கைக்குரிய , சமுதாய வழி காட்டி , நம்மோடு வாழும் இறை நேசர் , எங்கள் அரசியல் ஆசான்,தேசிய செயலாளர் , தமிழ் மாநில தகைசால் தலைவர் , பேராசிரியர் K.M.காதிர் முஹ்யிதீன் M.A.Ex.M.P.

அல்ஹம்துலில்லாஹ் ! அல்லாஹு அக்பர் !

யா அல்லாஹ் ! பேராசிரியர் கே. எம்.காதிர் மொஹிதீன் அவர்களுக்கு நல்ல உள்ளவளமும், உடல் வளமும் கொடுத்து சமுதாயத்தை தலைமை தாங்கி நடத்திட அருள்புரிவாயாக !

1 கருத்து:

  1. மாஷா அல்லாஹ் ! அல்லாஹ் அருள் புரியட்டும்.இப்படிபட்ட ஒருவரை தலைவராக ஏற்றுக்கொள்ளும் பாக்கியத்தை நாம் பெற்று இருக்கிறோம். அப்பாக்கியம் கிடைக்காதவர்கள் , நபிகள் நாயகம் ஸல்லல்லாகுஅலைகிவஸல்லம் அவர்கள் காலத்தில் நபியை ஏற்றுக் கொள்ளாமல் ,அபுஜஹ்லையும்,அபுலஹபுகளையும் தலைவர்களாக ஏற்றுக்கொண்ட துர்பாக்கியவான்களைப் போன்றவர்கள்.அல்லாஹ் நம்மை காப்பாற்றுவானாக.

    பதிலளிநீக்கு