ஓஷோ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஓஷோ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 6 அக்டோபர், 2014

வார்த்தைகள்

ஓஷோ தன் சீடர்களுக்கு எழுதிய கடிதங்களில்
ஒன்றை உங்களுக்காக தருகிறேன் ...
அன்பே ,
வார்த்தை அது குறிக்கும் பொருளாகாது .
கடவுள் என்ற வார்த்தை கடவுளல்ல,
ஆனால் மனம் வார்த்தைகளை,
வார்த்தைகளை, மேலும் வார்த்தைகளைச்
சேர்த்துக் கொண்டே போகிறது
பிறகு இந்த வார்த்தைகளே தடையாக ஆகிவிடுகிறது
உனக்குள் நான் சொல்வதை கவனமாக உணர்ந்து பார் .
நீ வார்த்தையில்லாமல் எதையாவது பார்க்க முடிகிறதா ?
நீ வார்த்தையில்லாமல் எதையாவது உணர முடிகிறதா ?
ஒரு கணமாவது நீ வார்த்தையில்லாமல்
வாழ முடியுமா ?
ஆக,
நான் சொல்வதை முயற்சித்து பார்
எதாவது ஒரு பொருளை பார்
எந்த சிந்தனையையும் நினைக்காதே ஆனால் பார் .
எந்த கருத்தையும் எண்ணாதே
ஆனால் வெறுமனே பார் .
பிறகு நீ உன்னத உணர்வு தியானத்தில் இருப்பாய் .
வார்த்தைகள் இல்லாமல் வாழ்ந்து பார் .
தியானத்தின் உண்மையான இயல்பை உணர்வாய் .
இந்த உலகில் நிறைய தத்துவவாதிகள் தியானத்தின் அசல்
பொருளை திரித்து தந்து கொண்டு உள்ளனர் .
தியானம் என்கிற தன்மையை தவறான பொருளில் தந்து
அதன் உண்மை இயல்பை சாகடிக்கின்றனர் .
அவர்களாகவே புத்தம் புது விளக்கத்தை தருகின்றனர்
ஆகையால் நீ விழித்திரு ..
வார்த்தைகள் இல்லாமல் வாழ்வதே தியானத்தில் வாழ்வது .
---ஓஷோ ---

திங்கள், 18 ஆகஸ்ட், 2014

ஓஷோ துளிகள்

1. உட்காருகையில் வெறுமனே உட்கார், நடக்கையில்
வெறுமனே நட, எல்லாவற்றிற்கும் மேலே நடுங்காதே.
2. ஈடுபாடில்லாமல் ஈடுபடு.
3. கோபமும், சோகமும் ஒரே சக்திதான், வன்முறையின்
வெளிப்பாடு.
4. செயலில் எண்ணங்களுக்கு பதிலாக விழிப்புணர்வை
வை.
5. தனிப்பட்ட குறிக்கோள்கள் பக்குவமடையாமையைக்
காட்டுகிறது.
6. குளிர்ந்த அன்பே கருணை
7. சமுகம் ஆணவத்தை ஊட்டுகிறது.
8. பொய்மைக்கும் நிதர்சனத்திற்கும் இடைப்பட்டது
மாயை.
9. உண்மையான சுதந்திரம் உன்னிடமிருந்து
சுதந்திரமடைவதுதான்.
10. மனமே காலம்.

சனி, 26 ஜூலை, 2014

பொறுமை

பொறுமை ஆன்மீக குணங்களில் மிகச் சிறந்தது.
உன்னால் பொறுமையாக இருக்க முடிந்தால் வேறு எதுவும் தேவையில்லை.
பொறுமை மட்டுமே போதுமானது, அது மட்டுமே போதும்.
. பொறுமை என்றால் இணைப்புணர்வு.
எந்த வித அவசரமும் இல்லாமல், எந்த வித அவசரமும் இன்றி இணைப்புணர்வோடு இருத்தல்.
நேசம் மிகவும் மெதுவாக வளரும், அதற்கு பொறுமை தேவை.
பொறுமை மிகவும் கவனமானது, பொறுமை சக்தியானது, பொறுமை விரிவடையக்கூடியது.
காத்திருத்தல் என்பது மிகவும் சிறப்பான குணம், அதற்கு ஆழ்ந்த பொறுமை தேவை. அது ஆழமான இணைப்புணர்வு.
உன் உள்ளிருப்பு குணப்பட தேவை ஒரு ஆழ்ந்த பொறுமை தேவை .
பயணகாலம் அளவிட முடியாதது. எனவே அளவற்ற பொறுமை தேவை.
பொறுமையான மனிதன் தியானிப்பவனாக மாறுவான், ஏனெனில் அவன் உள் வாங்குபவனாக மாறுகிறான்.
நீ வாழ்வை உள் வாங்குபவனாக மாறும் அந்த கணத்தில் உனக்கு யாரும் போதனை தர தேவை இருக்காது .
நீயே ஒரு புத்தாவாக மாறி இருப்பாய் .
--- ஓஷோ ---

வெள்ளி, 4 ஜூலை, 2014

தியானம்

தியானம் செய்யுங்கள் தியானம் என்பது சும்மா இருப்பது அன்று .

தியானம் என்பது நீ தினமும் செய்யும் 

ஒவ்வொரு வேலையையும் இன்னும் அழகாக , 

இன்னும் கவனமாக , இன்னும் நேர்த்தியாக , செய்வது. 

எதையும் உணர்வுடன் செய்யும்போது

ஒரு விருப்ப அனுமதித்தல் அங்கே நிகழும்; 

உணர்வுடன் பணி புரியும் போது 

தொடர்ந்து உயிரோட்டத்துடன் இருப்பாய்.

இப்போதே ஆரம்பி. 

நடக்கும்போது உணர்வுடன் நட. 

பேசும்போது உணர்வுடன் பேசு. 

பணிபுரியும் போது உணர்வுடன் பணி புரி ..

உண்ணும் போது உணர்வோடு உண் ..

இப்படி நீ ஒவ்வொரு கணத்திலும் 

எந்த ஒரு வேலை செய்தலும் முழு உணர்வுடன் செய் .

ஆனந்தம் அருவியாய் உன்னுள் பாயும் ஒவ்வொரு கணத்திலும் ..

--- ஓஷோ ---

வெள்ளி, 27 ஜூன், 2014

தேடுதல்

யாத்திரை கேள்வி கேட்டு, தேடி, துழாவுவதில்தான்
ஆரம்பமாகிறது. ஆரம்பிக்க வேறு எந்த வழியும் இல்லை. வாழ்வின்
பொருள் என்ன என்று கேள்வி கேட்காத வரை, இந்த பிரபஞ்சத்தின் அடி ஆழ
மையத்தை தேடாத வரை, நீ துளி கூட நகர்வதேயில்லை. ஒரு அடி கூட
எடுத்து வைப்பதேயில்லை. அப்போதுதான் அந்த தேடுதல் துவங்குகிறது.
நீ பணத்தை தேடுகிறாய் என்றாலே பதவியை,
அதிகாரத்தை, கௌரவத்தை தேடுகிறாய் என்றுதான் பொருள்.
தேடுதலும் ஒரு வகையான மெலிதான ஆசைதான்.
உன்னிடம் எல்லாமும் உள்ளது, ஆனாலும் நீ எல்லா
இடத்திலும் தேடுகிறாய் என்பது வேடிக்கையான ஒன்றுதான்.
நீ எதையாவது செய்ய முயற்சிக்கும்போது, நீ உனது
அகம்பாவத்திற்கு தீனி தேடுகிறாய் என்று அர்த்தம்.
உன்னால் எங்கு உருவாக்க முடிகிறதோ அந்த திசையில்
தேட துவங்கு.
---ஓஷோ ---

காலை நேர உலா

உனது வாழ்வை ஒரு காலை நேர உலாவலாக மாற்றிக் கொள்.
அதிக விளையாட்டுத்தன்மையுள்ளவனாக மாறு. வாழ்க்கை ஒரு விளையாட்டு. வாழ்வை விளையாட்டாக கடுகடுப்பின்றி பார். வித்தியாசம் மிகவும் பிரமாண்டமானதாக இருக்கும்.
உனது அலுவலகத்திற்கு செல்லும் போது முற்றிலும் வேறுபட்ட மனோநிலை இருக்கும். பதட்டமாக, குறிக்கோளுடையதாக, கவலையோடு கூடியதாக, மனஅழுத்தம் தருவதாக இருக்கும். அதே வழியில் நீ காலைநேர உலாவல் செல்லும் போது – தெரு அதே தெருதான், மரங்கள் அதே மரங்கள்தான், பறவைகள் அதே பறவைகள்தான், வானம் அதே வானம்தான், நீயும் அதே ஆள்தான், கடந்து செல்லும் மக்களும் அதே. ஆனால் நீ காலைநேர உலாவலுக்கு செல்லும்போது உன்னிடம் எந்த பதட்டமும் இல்லை, எந்த அழுத்தமும் இல்லை. ஏனெனில் நீ குறிப்பாக எங்கும் செல்வதில்லை. அது ஒரு காலைநேர நடை – நீ அதை அனுபவித்து செய்கிறாய், நீ விளையாட்டுத்தன்மையோடு இருக்கிறாய்.
முயன்று பார், மாறுபட்ட தன்மையை உணர்வாய்.
--- ஓஷோ ---