- Senapathy Thirugnanasambandam ஒரு ஐயம் எனக்கு ?
பெயர்ச்சொல்லை(facebook) ஏன் மொழி பெயர்க்க வேண்டும் ?
inbox / draft போன்றவைகளுக்கு தேவை உள்ளது... - இராஜ. தியாகராஜன் ஃபேஸ்புக் என்பது ஒரு வணிகச் சொல். பயன்படுத்தும் தமிழன்பர்கள் மாற்றாக ஒரு தமிழ்ச் சொல் பயன்படுத்தினர். உங்களைப் போல பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் முகநூல் அமைப்பாளர்களே பெரும்பான்மைப் பயன்பாட்டினால் அதனைத் முதன்மைத் தமிழ்மொழி பெயர்ப்பாக ஏற்றுக் கொண்டனர். சஞ்சிகை என்கிற செங்கிருதப் பெயர்ச் சொல்லைக் கூட பத்திரிக்கை என்றும், நாளிதழ் என்றும் மாற்றிய போதில் கூட நிறைய எதிர்ப்புகள். டீ/ சாயா இந்தப் பெயர்ச் சொல்லைக் தேநீர் என்று பயன்படுத்திய போதில் கூட நிறைய எதிர்ப்புகள்.
ஆப்பிள் என்கிற ஆங்கிலச் சொல்லின் வேர் கூட ape என்கிற வாலில்லா குரங்கின் வாயின் வண்ணத்தால் வந்தது. எனவே குருதியின் (அரத்தம்) வண்ணமாக இருப்பதால் ஆப்பிளை அரத்தி என்று சொல்கிறோம் புதுவையில். பிடித்தவர்கள் பயன்படுத்துகிறார்கள். தமிழிலக்கணப் புணர்ச்சியின் படி கோயில் தான் சரி; கோவில் சரியில்லைதான்; ஆனால் இத்தனை பேர்கள் பயன்படுத்துகையில் அதுவும் சரிதான். தேளின் பன்மை தேட்கள் ஆகாது; ஆனால் நாளின் பன்மை நாட்களாகவும், வாளின் பன்மை வாட்களாகவும், ஆனதை நாம் ஏற்றுக் கொண்டோம். இயன்றவரை புதுப்புனைவுகளை ஏற்பதில் தடையிருப்பது சரியில்லை.
மரபியலிலான செய்யுளோத்துகள் மட்டும் கொண்ட தமிழ்க் கவிதை இலக்கியத்தில், இன்று புதுப்பாக்கள், குறும்பாக்கள், துளிப்பாக்கள் இவையும் வந்தன. தமிழை நேசிக்கும் அனைவருமே ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.
ஒன்றே ஒன்று மட்டும் எனக்கு ஐயம்: ஆங்கிலேயர் வாயில் வழங்க இயிலாமையால், வைத்துவிட்டார்கள் என்பதற்காக ப்ராப்பர் நவுன்களான தஞ்சாவூரை டாஞ்சுர் என்றும், பறங்கிப்பேட்டையை போர்ட்நோவா என்றும், கன்னியாகுமரியை கேப் கேமரின் என்றும், திருவனந்தபுரத்தை ட்ரிவாண்ட்ரம் என்றும், தரங்கம்பாடியை ட்ரங்க்பார் என்றும் சொன்ன்னதை ஏற்றுக் கொண்டிருந்தோம். பின்னர் முயன்று பழைய பேர்களை வைக்கவில்லையா? முதலில் சைக்கிளை மிதிவண்டி என்றும், பஸ்ஸை பேருந்து என்றும், காரை சீருந்து என்றும், ப்ளேனை ஆகாயவிமானம்/ வானூர்தி என்றும் பயன்படுத்திய போதில் சிரிக்காதவர் எவர்? - இராஜ. தியாகராஜன் இன்னும் கொல்லம், கோழிக்கோடு, சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, மும்பை என்று நிறையச் சொல்லலாம். நான் அதிகம் இப்படிப்பட்ட கருத்தாடல்களில் அதிகம் ஈடுபடுவதில்லை நான் முகநூலி வரும் கொஞ்ச நஞ்ச நேரத்தைக் கூட அஃது வெகுவாகத் தின்றுவிடுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக