Monday,
29 June 2009
|
“ஊருக்குதானே உபதேசம் உனக்கும் எனக்கும் என்னடி” என்று ஒரு பழமொழி வழக்கத்தில் உண்டு என்பதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினருக்கு ஒரு முறை நினைவூட்டிவிட்டு இதை எழுதலாம் என நினைக்கிறேன். தனக்கு வக்பு பதவி கிடைக்கவேண்டும் என்பதற்காக தான், திமுகவிற்கு நாங்கள் கொடுத்த வாக்குறுதியின் படி இந்த பாராளுமன்ற தேர்தலில் திமுகவை ஆதரிக்கிறோம் என்று கைத்தேர்ந்த அடிவருடிகளாக தூதுவிட்டு பார்த்தும் திமுக தலைமை தங்களை கண்டுக் கொள்ளாதது மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக முஸ்லீம்களே தங்களை ஓரம் கட்டியதோடில்லாமல், தங்களுக்கு கிடைக்கவேண்டிய வக்பு வாரிய தலைமையிடமும் பரிதாபமாக பரிபோய்விட்டதை செரிக்கமாட்டாமல் எங்கள் தாய் கவிஞர் கவிக்கோவை நோக்கி ஒரு தனிமனித தாக்குதலை தொடுத்திருக்கிறது தவ்ஹீத் ஜமாத் என்கிற போலி மதவாத அரசியல் கட்சி..
இதிலிருந்தே இவர்களின் அழகும், சமூக அக்கறையும் தெரிந்துவிட்டது. "எங்கேயோ அடிச்சானாம் எங்கேயோ இருக்கிற பல்லு கொட்டுச்சாம்" என்று சொல்லுவார்கள். கவிக்கோவிற்கு வக்பு வாரிய பதவியை கொடுத்தது திமுக என்கிற இவர்களின் பாட்டன் அதை ஒருவார்த்தைக்கூட பேசவில்லை எதிர்காலத்தில் அங்குதானே போய் அடைக்கலமாக வேண்டும் என்பதற்காகவோ என்னவோ! அல்லது கவிக்கோவை தேர்வுசெய்ய ஆதரவு அளித்தவர்களையாவது பேசியிருக்கலாம் அதுவும் இல்லை அல்லது முடியாது, சரி வாய்க்கு இளைச்சது யார் என்கிற தனது தீவிர ஆய்வில் இவர்களுக்கு கிடைத்தது கவிக்கோ. அவர்போன்ற ஒரு தொலைநோக்கு சிந்தனாவாதி இவர்கள் போன்ற அடிப்படை மதவியாதிக்களுக்கு பதில் சொல்லிக்கொண்டுருந்தால் நமக்கு நல்ல நூல்கள் கிடைக்காது.. இவன்களுக்கு நாமே பதில் சொல்லிவிடலாம் என்று ஒரு சாதாரண பார்வையாளனாக இந்த பதிவை வைக்கும் தகுதி எனக்கிருக்கிறது ஏனெனில் நான் கவிக்கோவை பார்க்கிறேன் இவர்கள் போன்ற சாதி வெறிபிடித்த அடிப்படைவாதிகளையும் பார்க்கிறேன். கவிஞரும் இஸ்லாமும்.... ஒரு சின்ன விளக்கம் தவ்ஹீத் ஜமாத்தின் கருத்து என்று இருப்பதால் தவ்ஹீத் ஜமாத்தில் இப்படிபட்ட அறிவுசார்ந்த! கருத்துக்களை சொல்ல யாருக்கு மட்டும் உரிமையிருக்கிறதோ!!! அந்த அறிவு ஜீவியையும் அவரை நம்பி இன்னும் பின்னால் சென்றுக்கொண்டிருக்கும் பல அப்பாவி இளைஞர்களையும் நோக்கியே இந்த என் கருத்தும் செல்லட்டும்.. ஒரு கவிஞரை வாரியத் தலைவராக நியமிக்கவேண்டாம் என்று இஸ்லாத்தில் எந்த இடத்திலும் இருப்பதாக தெரியவில்லை. இந்த சமுதாயத்திற்காக ஏற்கனவே உங்களுடன் சேர்ந்து அடி உதை வாங்கியவர்களை நினைவிருக்கா அவர்களுக்கு தவ்ஹீத் ஜமாத்திலாவது தலைமை பதவிகொடுத்து அழகு பார்த்தீர்களா? அல்லது கேள்விகேட்ட உங்களைவிட காவல்துறையில் அடி, உதை கூடுதலாக வாங்கிய, தங்களின் குடும்பங்க்ளை பிரிந்து வாடும் இளைஞர்களை கழட்டிவிட்டது (மிக சமீபத்தில் எஸ்.எம்.பாக்கர்) மட்டுமல்லாமல் காட்டியும் கொடுத்ததாவது நினைவிருக்கிறதா? எப்படியிருக்கும்? இஸ்லாத்தின் பெயர் சொல்லி இதுவரை வருமானத்தை மட்டுமே குறிவைத்து காலந்தள்ளிக்கொண்டிருக்கும் நீங்களா, சமுதாயம் என்றால் மனிதன் மனிதம் என்று பொது இலக்கியம் படைக்கும் கவிக்கோவை சொல்வது. தன் மீது முஸ்லீம்களில் பெரும்பான்மையோர் வைத்திருக்கும் விமர்சனங்களை புறம் தள்ளிவிட்டு, ஒட்டு மொத்த தமிழகத்தில் எல்லா மதத்தவராலும் பொதுவவன இலக்கியவாதி என்றும் தமிழறிஞர் என்றும் ஏற்றுக்கொள்ள்ப்பட்ட ஒருவரை நோக்கி இப்படி கயமைமிகுந்த வார்த்தைகளால் சம்மந்தமில்லாமல் உளருவதற்கு முன் குறைந்த அளவு சக உறுப்பினரிடமாவது கலந்து ஆலோசிக்க வேண்டாமா? வக்பு வாரியத்திற்கு இதுவரை எந்த முஸ்லிம் அமைப்புகளின் பிடியிலும் இல்லாத நடுநிலையான ஒருவரை தேர்வு செய்திருப்பதை பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை, விமர்சனத்தை வக்பு வாரிய சட்டதிட்டங்களோடு ஒப்பிட்டாவது கருத்து தெரிவித்திருக்காலாமே. இப்படியா சக முஸ்லீம் சகோதரரை வாய்க்கு வந்த படி வசைப்பாடி வழக்கமாக மல்லாக்க படுத்துக்கொண்டு எச்சில் துப்பும் வேலையை இந்த விசயத்திலும் காட்டி மேலும் மேலும் தமிழக முஸ்லீம்களிடையே தங்களின் பொய்முகத்தை தாங்களே கிழித்துக்கொள்வது. உங்கள் கருத்துப்படி கவிதை என்ற போர்வையில் இஸ்லாத்திற்கு எதிரான விஷக் கருத்துக்களை உதிர்த்தவர் என்று கவிக்கோவை நேற்றுவரை தவ்ஹீத் ஜமாத் உள்பட எந்த இஸ்லாமியனும் சொல்லவில்லையே, இன்று உங்கள் வாயால் மட்டும் வருகிறதென்றால் எந்த கடுப்பில் என்பதை இங்கு விளக்கவேண்டியதில்லை. இஸ்லாமும் இந்துமதமும் ஒன்றுதான் என்று கவிக்கோவின் எந்த கவிதையில் வாசித்தீர்கள், குறைந்த அளவு அவரின் படைப்புகள் எதையாவது வாசித்தீர்களா? அப்படியே இருந்தாலும் அது நீங்கள் போதிக்கும் மத நல்லிணக்கம்தானே. போகட்டும். கவிதை இஸ்லாத்தில் வெறுக்கத்தக்கது என்றால் நபிகள் நாயகம் இணைவைத்தல் தவிர்த்த கவிதைகளையும், கவிஞர்களையும் பாராட்டியிருக்கிறார்களே. அந்த கால அராபியர்கள் கவிதையிலும், பாட்டுக்களிலும் மிகுந்த நாட்டம் கொண்டவர்கள் என்பதாலேயே தானே கவிதை நடையில் குரான் இறக்கப்படிருக்கிறது என்பதாக ஒப்புக்கொண்டவர்களில் நீங்களும் ஒருவர்தானே. அடடே மலையை மடுவாக்குவது கவிஞர்களின் கைவந்த கலையென்றால், பல மூடநம்பிக்கைகளை மலையாக்கி மாயாஜாலம் காட்டுவது உங்களைப்போன்ற மதவியாதிகளின் கலையெல்லவா. காசுக்காக கவிதை பாடுகிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் ஒப்புக்கொள்ளுகிறோம். அதற்கும் இந்த வக்பு பதவிக்கும் இந்த இடத்தில் என்ன சம்மந்தம் இருக்கிறது? காசுக்காக இரண்டு மதங்களையும் ஒன்று என்றார் என்றால் நல்ல விசயம்தானே அப்படியாவது மதவெறி ஒழியட்டுமே. இதுவரை நீங்கள் நடத்திய மத நல்லிணக்க கூட்டங்களால் எத்தனை மதங்களை ஒன்றிணைத்தீர்கள்? நீங்கள் எதையும் காசுக்காக நடத்தவில்லையெனில் துபாய் உள்பட ஏனையை நாடுகளில் வசூலித்தது என்னவாம்? ஹஜ் பயணிகளை அனுப்பும் நிறுவனம் தொடங்கியது காசுக்காக இல்லையென்றால் இதுவரை எத்தனை ஏழை எளிய மக்களை இலவசமாக மக்காவுக்கு அனுப்பியுள்ளீர்கள் என்று சொல்ல முடியுமா? ஹஜ் வருமானத்தை கணக்கு கேட்டதால் தானே உங்களுக்கும் எஸ்.எம். பார்க்கருக்கும் பிரிவு வந்து, இன்று அவர் தலைமையில் புதிய தவ்ஹீத் ஜமாத் செயல்பட்டு வருகிறது? கவிஞர்களை ஷைத்தான்கள் என்று சொல்வதிருக்கட்டும், தமிழக இந்து, முஸ்லீம் மற்றும் ஏனைய மக்களிடையே நீங்கள் பரப்பிக்கொண்டிருக்கும் இஸ்லாம் என்பது இட்டுக்கட்டப்பட்டது என்று நாங்கள் சொல்லவில்லை அந்த புரட்டுக்களை கண்டுபிடித்து கேள்விக்கேட்ட தொண்டி முஜிபுர்ரஹ்மானுக்கு பதில் சொல்லிவிட்டீர்களா? இல்லையென்றால் உங்களை பின்பற்றுபவர்கள் வீணர்கள் என்று நீங்களே வாக்குமூலம் தந்துவிட்டதாக நாங்கள் சொல்லலாமா? கவிக்கோவின் சூபியிசமும், அத்வைத கொள்கையும்... கவிக்கோவை பொறுத்தவரை அவர் சூபியிசத்தையும் அத்வைத கொள்கையையும் தீவிரமாக பின்பற்றக் கூடியவர் என்றால் அவர் உங்களைப்போன்ற உண்மையான!!! மதகுருவாகத்தானே ஆகியிருக்கவேண்டும், ஆனால் எழுத்தாளராகி நீங்கள் தீவிரமாக பின்பற்றுவதாக சொல்லும் அத்வைதவாதிகளுக்கும் கடுப்பேத்திக்கொண்டிருக்கிறாரே. பல மேடைகளில் சூபியிசத்தையும், அத்வைத கோட்பாடுகளையும் முழங்கியவர் என்றால் அதுசார்ந்து அந்த மேடைகளில் கேள்வி எழும்பியிருக்கக்கூடும் அதற்கு ஒரு அறிஞர் என்பதால் தன் கருத்தாக அவர் பதில் சொல்லியிருக்க கூடும். இதுதான் இஸ்லாத்தின் அடிப்படைக்கு வேட்டு வைக்கும் என்றால் தாங்கள் மாற்று மத நிகழ்வு நடத்துவதால் அடுத்தவரின் மத கொள்கைகளுக்கு வேட்டுவைப்பது எந்த விதத்தில் நேர்மை. அடுத்தவரின் மதங்களை அழித்து வளரவேண்டும் என்று இஸ்லாம் எந்த இடத்தில் சொல்லியிக்கிறது. இத்தகைய கொள்கையுடையவரை வக்பு வாரியத்திற்கு தலைவராக நியமித்தால் ஒட்டு மொத்த சமுதாயத்தின் எதிர்ப்பையும் பெற வேண்டியிருக்கும் என்றால் ஏன் ஓர் இறை கொள்கையினை சொல்லும் உங்களை எந்த முஸ்லீம் அமைப்புகளும் வக்பு வாரிய தலைவராக பரிந்துரைக்கவில்லை என்பதிலேயே தெரிகிறதே உங்களின் மக்கள் செல்வாக்கு. மேலும் வக்பு வாரியம் எத்தனை கோடி ரூபாய் மதிப்புள்ளது அதை யார் பொருப்பில் கொடுக்கவேண்டும் என்பது ஒட்டு மொத்த தமிழக முஸ்லீம்களுக்கும், தமிழக முதல்வருக்கும் தெரிந்திருக்கிறது. அதனால்தான் தெளிவாக உங்களை ஓரம்கட்டியிருக்கிறார்கள். ஏனென்றால் கலைஞருக்கு தமிழக முஸ்லீம்களின் மனநிலை தெரியாதா என்ன? இந்த வக்பு வாரிய சொத்தில் தர்கா, தரீகா, தப்லீக், தவ்ஹீத் என்று பலதரப்பட்ட நம்பிக்கைகள் கொண்டவர்களும் இருக்கிறார்கள் ஆனால் யாரும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காத நிலையில் தவ்ஹீத் ஜமாத் மட்டும் குதிப்பதிலேயே விளங்குகிறது உங்கள் பதவி ஆசை. கவிக்கோ தான் எந்த நிலைப்பாட்டில் இருக்கிறார் என்றோ தன்நிலைப்பாடே சிறந்ததது மற்றவரெல்லாம் இணைவைக்கிறார்கள் என்றோ, தன்னை பின்பற்றாதவர் எல்லாம் நரகத்திற்குதான் செல்வர் என்றோ இதுவரை மேடை போட்டு கத்தியதில்லை, குறுந்தகடுகள் விட்டதில்லை, மாற்றுமத சகோதரர்களுக்கு மூளை சலவை செய்ததில்லை, சக முஸ்லீம்களை நக்கிப்பிழைப்பபவர்கள் என்றெல்லாம் திட்டியதில்லை. எவருக்கு சொந்தமான பள்ளிவாசல்களிலும் வலுக்கட்டாயமாக நுழைந்து அத்வைதமோ, சூபியிசமோ பேசியதில்லை, தேவையான மேடைகளில்கூட தேவையற்றவிதமான கேள்விகளுக்கு பதில் அளித்து அடுத்தவருக்கு கடுப்பேத்தவில்லை, இவரை நியமிப்பதன் மூலம் தன்னுடைய கோட்பாட்டுக்கு எதிராக இருக்கக் கூடிய இன்னபிற பிரிவுகளில் உள்ளவர்களுக்கு இவரால் பல இடையூறு ஏற்பட்டது என்று இதுவரை யாரும் வழக்குக்கூட பதியவில்லை. கவிக்கோ சூபியிசக்கொள்கையினை ஓரம் கட்டுவது இருக்கட்டும் வக்பு வாரியத்திற்கு உங்களை தலைவராக ஆக்கியிருந்த்தால் நீங்கள் உங்களின் போலி தவ்ஹீத் (ஏகத்துவம்) கொள்கையினை ஓரம் கட்டிவைத்துவிட்டு நடுநிலமையோடு இருப்பேன் என்று முடிந்தால் வாக்குறுதி கொடுங்கள் கலைஞரிடம் மன்றாடியாவது உங்களை தலைவராக்குகிறோம், ஏ... அப்பா அஸ்கு புஸ்கு மாட்டேன் என்றால் பொத்திக்கொண்டு உங்களின் போலி மதவாதம் மூலம் ஏமாறுபவர்கள் தலையில் மிளகாய் அரைத்து பணம் சம்பாதித்துக் கொண்டிருங்கள் எதுக்கு யாரை தேர்ந்தெடுப்பது என்று நாங்கள் முடிவு செய்துக்கொள்கிறோம். கடைசியாக ஒன்று... நீங்கள் குறிப்பிட்டதுதான்... "வக்பு வாரியத்தின் கீழ் தவ்ஹீத் ஜமா அத்திற்கும் சொந்தமான பள்ளி வாசல்களும் சில உள்ளன" அடப்பாவிகளா அப்ப இவ்வளவு நாள் பள்ளிவாசல்கள் அல்லாவுடை சொத்துன்னு சொன்னதெல்லாம் பொய்யா? |
தவ்ஹீத் ஜமாத்தின் எதிர்வினை
கவிதைக்கு பரிசு, வக்ஃபு வாரியம்: தவ்ஹித் ஜமாஅத் கருத்து
|