செவ்வாய், 31 மே, 2011

பள்ளி என்றும் கொள்ளலாம்...



ஒரு வழியாய் அவரது மகளுக்கு அந்தப் பேர் போன பள்ளியில் எல்.கே.ஜி
> சேர்க்கைக்கான நேர்காணலுக்கு கடிதம் வந்திருந்தது. ஏதோ ஜெயிக்கப் போகும்
> கட்சியில் வெற்றி வாய்ப்பு நிச்சயமாய் உறுதி செய்யப்பட்ட தொகுதியில்
> டிக்கட் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியோடு அந்தக் கடிதத்தைத் தூக்கிக் கொண்டு
> வீட்டிற்கு வந்து விட்டார்.
>
> அவரது பதட்டம் தனித்து, அவரை ஒரு நிலைக்கு கொண்டு வரவே கொஞ்ச நேரம் ஆனது.
> ஆற அமர அவர் ஒரு வழியாய் நாற்காலியில் அமர்ந்ததும் அவரது கையிலிருந்த
> அழைப்புக் கடிதத்தை வாங்கிப் பார்த்தேன். அப்படியே வெல வெலத்துப்
> போனேன்.
>
> அடுத்த நாள் நடக்கும் தேர்வில் தங்கள் மகள் தேர்ச்சி பெற்றால் உடனடியாக
> பள்ளிக் கட்டணம் , சீருடை, புத்தகங்கள், நோட்டுகள், டை, வில்லை , ஷூ ,
> சாக்ஸ் , புத்தகப் பை, மற்றும் நன்கொடை என்கிற வகையில் 48000 ரூபாயை
> உடனே கட்டிவிட வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் சேர்க்கை ரத்து
> செய்யப் படும் என்றும் சொல்லப் பட்டிருந்தது. இது போக இரண்டாம்
> பருவத்திற்கு வேறு சில ஆயிரங்களை கொட்டவேண்டும் என்று நண்பர் சொன்னார்.
>
> "ஏம்ப்பா, இவ்வளவு பெரிய தொகைய வட்டிக்கு வாங்கி அழுது இங்க கொண்டு போய்
> சேர்க்கனுமா?. தம்பிய எல்லாம் நம்ம பள்ளிக் கூடத்துலதான சேர்த்தேன்.
> நல்லாதானே படிக்கிறான்,"
>
> "அடப் போப்பா உனக்கு இருக்கிற மன வலிமையோ, பக்குவமோ நமக்கு இல்லப்பா.
> மட்டுமல்ல, இந்தப் பள்ளிகூடத்துல சேக்கலன்னா அவ வீம்புக்குன்னு
> நாண்டுக்கிட்டே செத்தாலும் செத்துடுவா"
>
> இதற்குமேல் பேசிப் பயனில்லை என்று தோன்றவே அதற்குமேல் அதற்குள் நான் போகவில்லை.
>
> "நீ வந்தாதான் நாளைக்கு வருவாளாமாம். அம்மா வேணாமாம் , அப்பாவும்
> வேணாமாம் , மாமாதான் வரணுமாம் . இண்டர்வியூக்கு வார புள்ளைங்களையும்
> ,பெற்றோரையும் கூட்டிட்டுப் போக எல்லா இடத்துக்கும் பள்ளி பேருந்து
> வருதாமாம். தேர்முட்டிக்கு சரியா எட்டு மணிக்கெல்லாம் வந்துடுப்பா "
> படபடன்னு சொல்லிட்டு கிளம்பினார்.
>
> அவளுக்கு என்மேல் அவ்வளவு பிரியம் வருவதற்கு வே று ஒன்றும் காரணமில்லை.
> அவள் கேட்பதை காது கொடுத்துக் கேட்டு பதில் சொல்லும் எனது கோமாளித் தனமான
> அணுகுமுறைதான்.
>
> முன்னூறு ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து வானுயர்ந்து நிற்கும்
> கட்டிடங்களாய் பள்ளிகள், பாலிடெக்னிக்குகள், கல்லூரிகள், ஆசிரிய பயிற்சி
> நிறுவனங்கள் , பொறியியல் கல்லூரிகள், செவிலியர் பயிற்சி நிறுவனங்கள்
> நம்மை பிரமிக்க வைக்கும். இருநூறு பேருந்துகளுக்கும் மேல் அவர்களால்
> இயக்கப் படுவதாகவும் கேள்விப் பட்டிருக்கிறேன்.
>
> அடுத்த நாள் அவர்களுக்கும் முன்னமே தேர்முட்டியில் காத்திருந்தேன்.
> வந்ததும் ஓடி வந்து தொத்திக் கொண்டாள். பேருந்திலும் இருக்கையில் அமராமல்
> என் மடியில் அமர்ந்துகொண்டாள்.
>
> கேள்வி மேல் கேள்வி . இப்படிக் கேள்வி மேல் கேள்வியாகக் கேட்கும் ஞானக்
> குழந்தைகளைத்தான் இது மாதிரி பிரமாண்டக் இருட்டுக் குகைகளில் தள்ளப்
> போகிறோமே என்றிருந்தது.
>
> பேருந்து வளாகத்துக்குள் நுழைந்ததுதான் தாமதம் , குழந்தை துள்ளிக்
> குதித்து மடியை விட்டு இறங்கினாள்.
>
> எல்லோரும் இறங்கினோம். அழகான புல்தரை, ஆர்ப்பாட்டமான கட்டடங்கள்,
> நேர்த்தியான வரிசையில் நிறுத்தப் பட்டிருந்த பேருந்துகள் என்று அசத்தலான
> சூழல்.
>
> துள்ளிக் குதித்து ஒரு சுற்று சுற்றிப் பார்த்தபின் குழந்தை
> குதூகலித்தாள், " ஐ! எவ்ளோ பெரிய பஸ் ஸ்டாண்டு"

ஞாயிறு, 29 மே, 2011

ஊடக வலையில் முஸ்லிம்கள்




பெரும்பாலான மக்களை ஒரே நேரத்தில் சென்றடைவதிலும் மேலும் அதன் தாக்கத்தை உடன் ஏற்படுத்துவதிலும் ஊடகங்கள் இன்று பெரும் பங்கை வகிக்கிறது. இன்று உலகம் அறிவியலில் வெற்றி இலக்கை நோக்கி வெகுவாக முன்னேறிகொண்டுருக்கிறது. செய்தி ஊடகங்கள் என்பது இணையத்தில் மட்டுமில்லை. வானொலி, தொலைக்காட்சி, தினசரி, வாரம், மாதப்பத்திரிகை களாகவும், பல துறைகளைப் பற்றிய செய்தித் தொகுப்பாகவும் மற்றும் தனி மனிதர்களின் புத்தக வெளியீடாகவும் விரிவடைந்து ஆழமாக தன் வேர்களைப் பாய்ச்சியுள்ளது. தகவல் தொழில் நுட்ப முன்னேற்றம், அச்சு ஊடகத்துறை மற்றும் மின்னணு ஊடகத்துறை என்று எல்லாத் துறைகளிலும் விஞ்ஞானம் கொடிகட்டிப் பறக்கும் சாதனை உலகில் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உலகத்தையே சுற்றி வளைத்து உங்கள் விரல் நுனியில் தந்துள்ளது ஊடகத்தின் உச்சானி கொம்பாக இருக்கின்ற இணைய தளம். கல்வி, வியாபாரம், வர்த்தகம், விளம்பரம், தகவல் தொடர்பு, வேலைவாய்ப்பு, மருத்துவம், இராணுவம் மற்றும் ஆராய்சி என பல்வேறு துறைகளில் தனது ஆதிக்கத்தை முழுவீச்சுடன் செலுத்தியுள்ளது.

இன்று ஊடகத்தின் வளர்ச்சி எல்லோருக்கும் கிடைக்கும்படியும் அமைந்துவிட்டது, சிறிது தொழில்நுட்பம் தெரிந்தால் கூட நமது கருத்துக்களை உலகத்தின் பலபாகங்களுக்கும் கொண்டுபோய் சேர்க்க முடியும். ஆனால் இஸ்லாமிய சமுதாயம் ஊடகவலையில் இன்னும் உறங்கி கொண்டுதான் இருக்கிறது. இதனால இஸ்லாம் பல கோணங்களில் தவறாக பரப்பப் படுகிறது, மேலும் கலங்கப் படுத்தபடுகிறது, காரணம் இன்று ஊடகம் ஆதிக்க சக்திகளாலும் பாசிசத்தாலும் ஆக்கிரகிக்கப்பட்டுள்ளது.

ஊடகத் துறையில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் குறித்து இதுவரை வெளியிடப்பட்ட அறிக்கையில் ஊடகத் துறையின் முக்கியப் பொறுப்புகளில் வெறும் 3 சதவிகிதம் முஸ்லிம்களே உள்ளனர். ஆனால், மக்கள் தொகையில் 3 சதவிகிதம் இருக்கும் பார்ப்பனர்களோ இத்துறையில் 49 சதவிகிதம் இருக்கின்றனர். ஆதிக்கவாதிகள் நிரம்பி வழியும் ஊடகங்கள் தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிரான செய்திகளை வெளியிடுவதை ஒரு பிரச்சாரமாகவே மேற்கொண்டு வருகின்றன. ‘முஸ்லிம்கள் அழித்தொழிக்கப்பட வேண்டிய தீவிரவாதிகள்' என்ற மதவெறிக் கருத்தை இவை வெளிப்படையாக மக்களிடையே பரப்புகின்றன. உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பங்கு மக்கள் தொகையாக முஸ்லிம்கள் இருந்தும் சொல்லிக் கொள்கிற மாதிரி செய்தி ஊடகங்களில் முஸ்லிம்கள் முன்னேற முடியாமல் மூலையில் முடங்கிக்கிடக்கிறார்கள். கல்வியில் முன்னேறாத சமுதாய மக்களாக முஸ்லிம்கள் இருக்கும் போது, ஊடகங்களில் எப்படி முன்னேற முடியும்? மாற்றார்களால் முஸ்லிம்கள் தவறாக சித்தரிக்கப்படும் போது அதே மீடியாவைக் கொண்டு பதில் தாக்குதல் எப்படிக் கொடுக்கமுடியும்.

இஸ்லாத்திற்கு எதிரான பனிப்போர் மிகவும் உச்சக்கட்டத்தில் நடந்து கொண்டிருக்கிறது, குறிப்பாக மேற்கத்தியர்களும் மற்றும் அறிவுஜீவியாக தன்னைக் காட்டிக் கொள்பவர்களும் இஸ்லாத்திற்கெதிரான கருத்துப்போரில் முழுவீச்சுடன் செயல்படுகின்றனர். அதிகமாக தொலைக்காட்சி பார்ப்பவர்களையும் செய்தி படிப்பவர்களையும் இந்த மீடியா முஸ்லிம்கள் தீவிரவாதிகள்தான் என நம்ப வைத்திருக்கிறது. நாளொரு வண்ணமும் பொழுதொரு செய்தியுமாக முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டுக் கொண்டிருப்பதால் தொலைகாட்சி பார்ப்பவர்களையும் செய்திப்படிப்பவர்களையும் இவ்வலைக்குள் சுலபமாக விழ வைத்திருக்கிறார்கள்.

ஒரு புள்ளிவிபரத்தின் படி ஒரு அமெரிக்கக் குடிமகன் ஒவ்வொரு நாளும் சராசரியாக மூன்றே முக்கால் மணி நேரம் தொலைக்காட்சியைப் பார்க்கிறான். 65 ஆண்டு கால உலக வாழ்க்கையில் ஒரு மனிதன் ஒன்பது ஆண்டுகாலம் தன் வாழ்க்கையை தொலைக்காட்சியை பார்ப்பதில் கழிக்கிறான். அமெரிக்காவில் கணிசமான குழந்தைகள் சராசரியாக வாரம் ஒன்றிற்கு 25 மணிநேரம் தொலைக்காட்சி பார்ப்பதாக சி.என்.என் ஹெல்த் நியூஸ் குறிப்பிடுகிறது.

ஒரு பக்கம் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கின்ற ஊடகம், இன்னொரு பக்கம் தீவிரவாதிகளை சமூக சேவகர்களாக அங்கீகாரம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் முஸ்லிம்கள் அனைவரும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்றும், தீவிரவாதிகள், பிற்போக்கு வாதிகள் என்றும் பாசிசவாதிகளால் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இதனையே உலக அளவில் அமெரிக்காவும், பிரிட்டனும் சி.என்.என், பி.பி.சி போன்றவற்றின் உதவியுடன் முன்வைக்கிறது.

மாற்றான் தவறு செய்தால் அத்தவறுகளை அவனளவிலும், ஒரு முஸ்லிம் தவறு செய்துவிட்டால் இஸ்லாம் அவ்வாறு பயிற்சிவிக்கிறது போன்ற பிம்பத்தை உண்டாக்க "முஸ்லிம் தீவிரவாதிகள்", "இஸ்லாமிய அடிப்படைவாதிகள்" என்று போற்றுவது இவர்களுக்கு கைவந்த கலை. ஆங்கில ஏகாதிபத்தியத்தைத் திணற அடித்து, 'சரணடைய மாட்டேன்' சாவை சலனமின்றி ஏற்றுக் கொள்வேன்' என்று நெஞ்சுயர்த்தி நின்று தன் உயிரைத் தந்த உண்மை வீரன் தியாகி திப்பு சுல்தானின் பெயர் இந்திய இளைய தலைமுறையினருக்குத் தெரியாமல் போய்விடும்படி செய்கிறார்கள்.ஆங்கிலேயனுக்கு அடிமை சேவகம் செய்து இந்தியர்களைக் காட்டிக்கொடுத்த துரோகிகள் தியாகிகள் எனப்போற்றப் படுகிறார்கள் ஊடகங்களால்.

திரைப்படங்கள் என்று எடுத்துக்கொள்ளுங்கள் முஸ்லிமா.. எல்லா இடத்திலேயும் கலவரங்களைத் தூண்டுபவன், பாகிஸ்தானுக்கு உளவாளி, தீவிரவாதி என்று இரண்டரை மணிநேரத்தில் எப்படியெல்லாம் முஸ்லிம் சமுதாயத்தின் மேல்அவதூறான களங்கத்தைச் சுமத்திச் சென்றுவிடுகிறார்கள். இதையெல்லாம் கண்டிக்க மாற்று வழியைத் தேர்ந்தெடுத்திருக்கின்றோமா?

பர்தா பாதுகாப்பு என்கிறது இஸ்லாம். இல்லை பழமைவாதம் என்கிறார்கள் எதிரிகள். நாம் உண்டு நமது வேலை உண்டு என்றிருந்தால் ஊடகத்துறையில் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துப்போரில் வாள் வீசுவது யார்? சற்று சிந்தனை செய்யவேண்டாமா? இன்று ஊடகத்துறையில் முஸ்லிம்களுக்கெதிரான அவர்கள் செய்யும் பனிப்போரில் உச்சகட்டத்தை அடைந்துயிருக்கின்றார்கள் என்றால் யார் காரணம்? நாமல்லவா சகோதரர்களே! இப்போதெல்லாம் இஸ்லாமிய தீவிரவாதம், முஸ்லீம் பயங்கரவாதம் தொடர்பான செய்திகள் அடிக்கடி வந்துகொண்டு இருக்கின்றன. 9/11 நிகழ்வுகளுக்கு பின்பு இஸ்லாம் பயங்கரவாதம் என்கின்ற ஒரு தவறுதலான கருத்தாக்கம் ஊடகங்கள் மூலமாகப் பரப்பப்பட்டு வருகின்றது. இந்த விஷமத்தனமான பிரச்சாரத்தைப் பரப்புவதில் யூத, அமெரிக்க அமைப்புகளும் இந்தியாவில் மதவெறியர்களின் கைப்பாவையாகச் செயல்படும் சில ஊடகங்களும் முழு மூச்சாக இயங்குகின்றன. தற்கொலைத் தாக்குதல்கள், குண்டு வெடிப்புகள், பணயக் கைதிகள் கொல்லப்படுவது போன்ற வெறிச்செயல்களை மத அடிப்படையிலும், மனிதாபிமானத்தின் அடிப்படையிலும் எந்த முஸ்லீமும் ஏற்றுக்கொள்வதில்லை. உலக வர்த்தகமையக் கட்டடத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களாகட்டும், இஸ்ரேலின் இயந்திரத் துப்பாக்கிக்கு பலியாகும் பாலஸ்தீனர்களாகட்டும், பாதுகாப்புப் படைகளால் கொல்லப்படும் காஷ்மீரியாகட்டும், வான் தாக்குதல்களில் கொல்லப்படும் ஈராக் முஸ்லிம் ஆகட்டும், வேதனையும் மரணமும் எல்லோருக்கும் ஒன்றுதான். ஊடகங்களும் இது போன்ற செய்திகளை பெரிய அளவில் பிரபலப் படுத்துவதும் இந்த வழக்குகளில் ஊடகங்கள் இருட்டடிப்பு செய்வதும் நாம் கண்கூடாகக் காணக்கூடிய நிகழ்வுகளாக உள்ளன.

இன்று நம் நாட்டில் மட்டுமல்ல, உலகளாவிய நாடுகளில் நடக்கும் வன்செயல்கள், அராஜகங்கள், தீவிரவாத செயல்கள், மனித நேயத்திற்கு முரணான செயல்கள் இவை அனைத்தையும் உன்னிப்பாகக் கவனியுங்கள். முஸ்லிம்கள் மட்டும்தான் அச்செயல்களில் ஈடுபடுகிறார்களா? இல்லையே! ஜாதி, மத வேறுபாடின்றி அனைத்து இன, மத மக்களிலும் இப்படியொரு அராஜாக - மிருகவெறி கொண்ட கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. இஸ்லாமிய மார்க்கத்தை அறிந்த, ஒரு உண்மை முஸ்லிம் இப்படிப்பட்ட அராஜக செயல்களில் ஒரு போதும் ஈடுபடமாட்டார். தற்கொலை செய்து கொண்டு தன்னை மீளா நரகில் கொண்டு சேர்க்க ஒரு போதும் முற்படமாட்டார். தீமையை தீமையைக் கொண்டு தடுக்க முடியும் என்று அல்குர்ஆன் சொல்லவில்லை. தீமைகளை நன்மைகளைக் கொண்டே முறியடியுங்கள் என்றே குர்ஆன் போதிக்கிறது.

சோவியத் கம்யூனிஸத்தின் வீழ்ச்சிக்குப்பிறகு, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு இஸ்லாமே பெரிய எதிரியாகத் தெரிகிறது. காரணம் அங்கெல்லாம் இஸ்லாம் மிக வேகமாக பரவி வருகிறது. இஸ்லாம் தங்கள் நாடுகளை ஆட்கொண்டு விடுமோ என அஞ்சுகிறார்கள். எனவே இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டைப் போட வேண்டும் என்ற தீய நோக்கோடு, அனைத்து ஊடகங்களும் அமெரிக்க, யூத பணத்திற்கு அடிமையாகி அவர்கள் கொடுக்கும் செய்திகளை அப்படியே மாறி மாறி ஊடகத்தின் மூலமாக பரப்பி வருகின்றன.

ஆனால் என்ன செய்வது, அறிவின் பிறப்பிடமான இஸ்லாமிய மக்களுக்கு கல்வியே இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளது. அதற்கு வறுமையும் மிகப்பெரிய எதிரியாக உள்ளது, இந்த வறுமையை போக்கக்கூடிய இடஒதுக்கீடும் பாசிசத்திற்கு எதிராக உள்ளது. நகர்ப்புறங்களில் வசிக்கும் முஸ்லிம்களில் 44 விழுக்காட்டினர் வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிக்கின்றனர். மற்ற சமூகங்களை சார்ந்தவர்களில் 28 விழுக்காட்டினர் மட்டுமே இந்த நிலையில் உள்ளனர்.

மனித சமூகத்தை நாகரிகப்படுத்துவதும் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு இட்டுச் செல்வதுமான கல்வித் தகுதியில், முஸ்லிம்கள் மிக மிகப் பின் தங்கியுள்ளனர். 1965 இல் 72 சதவிகிதமாக இருந்த நகர்ப்புற முஸ்லிம் மாணவர் சேர்க்கை 2001 இல் 80 சதவிகிதமாகியிருக்கிறது. ஆனால், நகர்ப்புற தலித் மாணவர்களின் எண்ணிக்கையோ 90 சதமாக உயர்ந்திருக்கிறது. 36 ஆண்டுகளில், கிராமப்புற, நகர்ப்புற, ஆண்-பெண் என எந்தப் பிரிவை எடுத்துப் பார்த்தாலும் முஸ்லிம்களிடையே கல்விப் புரட்சி என எதுவும் ஏற்படவில்லை. கல்வி மறுக்கப்பட்ட ஒரு சமூகம், மற்ற துறைகளில் எப்படி வளர்ச்சி அடையும்? பள்ளிகளில் முஸ்லிம் மாணவர்களுக்கெதிரான பாரபட்சங்கள் ஒருபுறமும், வறுமையில் உழலும் குடும்பச் சூழல் மறுபுறமும் சேர்ந்து பள்ளிக் கல்வியைக்கூட முடிக்க முடியாத அவல நிலைக்கு முஸ்லிம்களைத் தள்ளிவிட்டது. பள்ளியில் எழுபது சதவிகிதம் மாணவர் சேர்க்கையில், 11.6 சதவிகிதம்பேர் பாதியிலேயே படிப்பைக் கைவிடுகின்றனர். 3 சதவிகித பட்டதாரிகளையும், 1.2 சதவிகிதம் மட்டுமே பட்ட மேற்படிப்பை முடித்தவர்களையும் கொண்டிருக்கிறது, இந்தியாவின் மிகப் பெரிய சிறுபான்மைச் சமூகம் அடிப்படைக் கல்வியில் இத்தகைய சரிவு ஏற்படுவதாலேயே அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் உள்ள 50 சதவிகிதம் இடஒதுக்கீட்டைக் கூட நிரப்ப முடியவில்லை. 94.9 சதவிகித முஸ்லிம்கள் அன்றாடம் உணவுக்கே அல்லல்படுகின்றனர். படிப்புதான் இல்லை, சுயதொழில் செய்யலாம் என வங்கிகளில் கடன் கேட்டால், முஸ்லிம்களுக்கு கடன் கொடுக்க அவை முன் வருவதில்லை. இதுவரை வெறும் 3.2 சதவிகிதம் பேருக்குதான் வங்கிக் கடன் வழங்கப்பட்டிருக்கிறது. கிராமப்புறங்களில் 60.2 சதவிகிதம் பேருக்கு நிலங்கள் இல்லை. நிலமற்றவர்கள் கூலிகளாக இருப்பதும், கூலிகள் வறுமையில் உழல்வதும், வறுமை கல்வியைத் தடுப்பதும், கல்வித் தடை மற்ற எல்லா வளர்ச்சிகளையும் முடக்கிப் போடுவதும்தானே இயற்கை! எமக்கும் அதுவே நேர்ந்திருக்கிறது.

மற்ற மாநிலங்களைவிட மிகக் குறைந்த சதவிகிதமே அரசுப் பணிகளில் முஸ்லிம்கள் அமர்த்தப்பட்டிருக்கின்றனர். அதாவது, வெறும் 4.2 சதவிகிதம்தான். பீகாரிலும் உத்திரப்பிரதேசத்திலும் முஸ்லிம்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப மூன்றில் ஒரு பங்குகூட, அவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு அளிக்கப்படவில்லை. கர்நாடகத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 12.2 சதவிகிதமாக இருப்பினும், அரசு வேலைகளில் அவர்களுக்கான பிரதிநிதித்துவம் 8.5 சதவிகிதம்தான் உள்ளது. குஜராத்தில் 9.1 சதவிகிதம் மக்கள் தொகைக்கு அளிக்கப்பட்டுள்ள பங்கு 5.4 சதவிகிதம் மட்டுமே. சிறுபான்மையினச் சகோதரர்கள் என வாயாற அழைத்தே ஆட்சியை மாறி மாறிப் பிடிக்கும் தமிழகத்திலோ 5.6 சதவிகிதம் முஸ்லிம்கள் இருக்கிறார்கள். ஆனால் வெறும் 3.2 சதவிகிதம் பிரதிநிதித்துவமே உள்ளது. எல்லா மாநிலங்களிலும் நிலைமை இதேதான்.

முஸ்லிம்கள் உயர் பதவிகளில், மேற்கு வங்கத்தில் பூஜ்யம். மற்ற மாநிலங்களில் பாதிக்குப் பாதி என்ற அடிப்படையில்கூட முஸ்லிம்களின் பங்களிப்பில்லை முஸ்லிம்கள் அதிகமுள்ள 12 மாநிலங்களில் நீதித்துறையில் வெறும் 7.8 சதவிகிதம்தான் உள்ளனர். மக்கள் தொகையில் 66.97 சதவிகித முஸ்லிம்களைக் கொண்ட ஜம்மு காஷ்மீரில்கூட, 48.3 சதவிகித பிரதிநிதித்துவமே நீதித்துறையில் அளிக்கப்பட்டிருக்கிறது. ஒரு முஸ்லிம் நீதிபதியையோ, வழக்கறிஞரையோ அவர்களின் பதவியைக் கொண்டு பார்க்காமல் முஸ்லிமாகப் பார்க்கவே இச்சமூகம் தலைபடுகிறது. மதக்கலவரங்களை விசாரிக்க இதுவரை ஒரு முஸ்லிம் நீதிபதிகூட நியமிக்கப்பட்டதில்லை. காரணம், ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமைத்தான் ஆதரிப்பார் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கை. இதுதான் பாரபட்சத்தின் ஆணிவேர். வகுப்புவாதிகள் எல்லோரும் நீதிமான்கள் என்பது போலவும், முஸ்லிம்கள் மட்டும் மதவெறியர்கள் என்பது போலவும் ஒரு மோசமான கருத்து இங்கு விதைத்து வளர்க்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் அதிகளவில் முஸ்லிம்கள் ‘குற்றவாளி'களாகவும், பாசிசவாதிகள் ‘நீதிமான்'களாகவும் உள்ளனர்.

இவ்வாறு இஸ்லாமிய மக்கள் வறுமையிலும் கல்வியிலும் மிகவும் தாழ்வு நிலைமையில் இருக்க இதற்கு மருந்தாக இருக்கக்கூடிய இடஒதுக்கீட்டையும் கிடைக்கவிடாமல் எதிர்க்கிறது மனித வடிவில் மிருகமாக இருக்கிற பாசிசம். அவ்வாறுயிருக்கையில் எவ்வாறு இஸ்லாமிய சமூகம் ஊடகத்துறையிலும், மற்ற ஏனய துறையிலும் முன்னேற முடியும். ஆனால் முஸ்லிம்கள் அனைவரும் பணக்காரர்களாக இருக்கிறார்கள் என்கின்ற மாயத்தோற்றத்தை பாசிச சக்திகள் மக்கள் மத்தியில் பரப்பிவருகிறார்கள்.

ஒரு நாட்டின் இறையாண்மை நிலைநாட்டப்பட வேண்டும் என்றால், அந்த நாட்டின் அரசு, அரசு அதிகாரிகள், நீதித்துறை, ஊடகங்கள் இந்த நான்கும் நீதியாகவும் நேர்மையாகவும் நடுநிலையோடும் செயல்பட வேண்டும். இந்த நான்கும் நிலைகுழைந்தால் நாட்டில் கற்பழிப்பு, திருட்டு, கொள்ளை, கொலை, வன்முறை, தீவிரவாதம் என அனைத்து அராஜகங்களும், பஞ்சமா பாவங்களும் தலைதூக்கும் என்பதில் ஐயமில்லை. இன்று இந்த நான்கு தூண்களும் லஞ்சத்திற்கும், ஊழலுக்கும் அடிமையாகிக் கிடக்கின்றன.

இல்லாததைத் திரும்ப திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தால் அதை இருப்பதாக மக்கள் நம்பி விடுவார்கள். இஸ்லாம் ஒரு தீவிரவாத மதம், முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகள் என திரும்பத் திரும்ப எதிரிகள் செய்தி ஊடகங்கள் வழியாக மக்கள் முன் வைக்கிறார்கள். துரதிஷ்டம், இதை எதிர்த்து தக்கப் பதிலடி கொடுப்பதற்கு சொல்லிக் கொள்கிற மாதிரி பிரபல்யமான மீடியா என்று முஸ்லிம்களிடம் எதுவுமில்லை. யானைப்பசிக்கு சோளப்பொறி மாதிரி அங்கொன்று, இங்கொன்றாக பத்திரிகை மீடியா, அதுவும் முஸ்லிம்களுக்குள்ளேயே தான் செய்தி ஊடுருகிறதே தவிர, மீடியா வழியாக இஸ்லாத்தின் மீது எதிரிகள் விதைக்கும் விஷக் கருத்துக்குத் தக்க பதிலாக, இஸ்லாத்தைப் பற்றிய அவதூறைத் துடைக்கும் நோக்கில் முஸ்லிம் அல்லாத மக்களுக்கு செய்திகளைச் சேர்க்கும் பரந்த, வலுவான மீடியா என்பது இல்லை. இஸ்லாத்தை படித்தவர்கள் மீடியாவுக்கு வருவதில்லை. இஸ்லாத்தைப்பற்றி வாய்வழியாக பிறருக்கு சொன்னால் போதும் என்கின்ற மனநிலையில் பெரும்பான்மையினர் ஒதுங்கிவிடுகின்றனர்.

இப்படியிருக்கையில் இன்னும் நாம் உறங்கி கொண்டிருந்தால் நம் சமூகத்தை இந்த அழிவு பாதையிலிருந்து பாதுகாப்பது மிகவும் கஷ்டமாகவே இருக்கும். ஆகவே நாம் இதிலிருந்து விரைவில் விழித்துக்கொண்டு விழிப்புணர்வுடன் செயல்படக்கூடிய மிகக் கட்டாய காலகட்டத்தில் இருக்கிறோம்.இதற்கு எல்லாம் வல்ல இறைவன் உதவி புரிவனாக!

திங்கள், 23 மே, 2011

ஆளுமையின் அடிப்படை







ஆளுமை என்பது பல நல்ல நடத்தைகளைக் கொண்டிருப்பது. நெப்போலியன் ஹில் இவற்றைப் பட்டியலிட்டுத் தருகிறார்.

1.
வெகுஜன கவர்ச்சி : மற்றவர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு அவர்கள் ஆசை அபிலாஷையை நிறைவேற்ற முன்வரும் தன்மை.

2.
மனோலயம் : தன் மனத்தை வசப்படுத்துபவனே பிறரை வசப்படுத்த முடியும்.

3.
திடக்குறிக்கோள் : தனக்கெனக் கொண்டுள்ள குறிக்கோள்.

4.
நல்ல உடை : இடத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ற உடை.

5.
உடல் அசைவு, இருக்கை பாவனை : நடை, உடை, பாவனையில் ஒரு தனித்துவம்.

6.
குரல் : தொனி, கம்பீரம், ஏற்ற இறக்கம், தெளிவான உணர்ச்சி கொண்ட குரல்வளம்.

7.
கொள்கையில் தீவிர பற்று : இது இல்லாமல் யாரும் நம்பிக்கை வைக்க மாட்டார்கள்.

8.
மொழியை இடம் அறிந்து பயன்படுத்தல் : தகுந்த பொருத்தமான சொற்களை இனிய நடையில் பயன்படுத்துதல்.

9.
நிதானம் : தன்னம்பிக்கை, தன்னடக்கம் இவற்றுடன் கூடிய நிதானம்.

10.
நகைச்சுவை உணர்வு : முக்கியத் தேவையானை இது இல்லாவிடில் வாழ்க்கை தாழ்ந்து கொண்டே இருக்கும்.

11.
சுயநலமின்மை : சுயநலமும் இனிய ஆளுமையும் நேர் எதிரானவை, ஒத்துவராதவை.

12.
முகபாவம் : அகத்தின் அழகு முகத்திலே! தெளிவான சிந்தனையைக் குறிக்கும் முகபாவம்.

13.
ஆக்கப்பூர்வமான சிந்தனை : நல்லதே நடக்கும் என்னும் ஆக்கப்பூர்வமான சிந்தனை.

14.
உற்சாகம் : இது இல்லவிடில் மற்றவரை எப்படி உற்சாகப் படுத்தமுடியும்?

15.
நல்ல உடல்நலம் : சுவரை வைத்தே சித்திரம் எழுத வேண்டும். நல்ல உடல்நலமே நினைத்ததை முடிக்க அடிப்படைத் தேவை.

16.
கற்பனை வளம் : இனிய ஆளுமைக்கான முக்கிய குணங்களுள் ஒன்று.

17.
தந்திரம் : நாசுக்காக பல இடங்களில் நடக்காவிட்டால் வீண் சச்சரவு தோன்றும்.

18.
பல்துறை ஞானம் : நாட்டு நடப்புகளை அறிவதோடு, பல துறைகளில் ஆர்வமும், அறிவும், அக்கறையும் கொண்டிருத்தல்.

19.
கேட்கும் செவியைக் கொண்டிருப்பது : அனைவர் சொல்வதையும் பொறுமையுடன் கேட்கும் செவி. அதற்கான மனோபக்குவம்.

20.
பேச்சுக்கலை : தன் மனதில் உள்ளதை ஆற்றலுடன் சரியாக வெளிப்படுத்தும் பேச்சுத்திறன்.

21.
தனிப்பட்ட கவர்ச்சி : கட்டுப்படுத்தப்பட்ட "செக்ஸ்" சக்தி. இயல்பாகப் பிறப்புடன் வரும் குணம் இது ஒன்றுதான். மற்ற அனைத்து குணங்களும் பயிற்சி மூலம் பெற்று விடலாம்.

புற அழகு இல்லாது அக அழகு வளர வளர ஆளுமையின் இனிமையும், கவர்ச்சியும் அதிகரிக்கும்.

வெள்ளி, 20 மே, 2011

அழிவின் விளிம்பில் மொழிகள்



உலகில் தொன்மையான மொழிகளான கிரேக்கம், லத்தீன், ஹீப்ரு, சம்ஸ்கிருத மொழிகள் காலத்துக்கும், பல வரலாற்றுப் போக்குகளுக்கும் ஈடுகொடுக்க இயலாமல் போய்விட்டன. கன்னித்தமிழ் மட்டும் எவ்விதப் பாதிப்புக்கும் உள்படாமல் தழைத்து நிற்கிறது என்பது



சற்று ஆறுதல் அளிக்கும் விஷயம். மானுடத்தை மற்ற ஜீவராசிகளிடம் இருந்து வேறுபடுத்துவதே,சிரிப்பாலும், பேச்சாலும்தான் என்பார்கள். மனிதன் குகைகளில் வாழ்ந்தபோது, வெறும் சப்தங்கள் மூலம் தன் உணர்வுகளை வெளிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

காலப்போக்கில், சப்தங்கள் மொழியாக வளர்ச்சியடைந்தன. மொழி என்பது கலாசாரத்தை வெளிப்படுத்துகிற முக்கிய அடையாளமாகக் கருதப்படுவதால்தான் மொழியின் தனித்தன்மையைப் பாதுகாக்கப் போராட்டங்கள் நடைபெறுவதை நாம் காண்கிறோம். அழிந்துவிடும் மொழிகள் பற்றி 2009-ல் யுனெஸ்கோ வெளியிட்டுள்ள வரைபடத்தில் சுமார் 2,473 மொழிகள் அழிவின் எல்லையில் உள்ளன என்றும், 1950-க்குப் பின் இந்தியாவில் ஐந்து மொழிகள் அழிந்துவிட்டன என்றும் கூறியுள்ளது. மேலும், 42 மொழிகள் அழியும் நிலையில் உள்ளன.

உலகளாவிய அளவில், 63 மொழிகள் நிச்சயம் மறைந்துவிடும். 82 மொழிகள் அழியும் நிலையில் உள்ளன என்று பட்டியலிட்டுள்ளது. 1894-லிருந்து 1928-வரை இந்தியாவில் பழக்கத்திலிருந்த மொழிகள் குறித்து ஜி.ஏ.க்ரியர்சன் ஆய்வு செய்து முழுமையான விவரங்களை வழங்கியிருக்கிறார். மக்கள் தங்கள் வாழ்க்கை முறைகளை, பாரம்பரியத்தை மறக்கும்போது கலாசாரமும் மறையத் தொடங்குகிறது. அப்போது அதற்கு அடிப்படை என்று கருதப்படும் மொழி மட்டும் எப்படி நீடித்து நிலைக்கும்? துருக்கியின் வடமேற்குப் பகுதிகளில் பேசப்பட்ட மொழி உபிக். இந்த மொழியைப் பேசத் தெரிந்த நபர் டெப்விக் எசன்ச் என்பர்.

துருக்கியிலுள்ள மொழியியலாளர்கள் அவரைக்காண அவரது கிராமத்துக்குச் சென்றனர். எசன்ச்சின் மூன்று மகன்களில் ஒருவருக்குக்கூட உபிக் மொழி தெரியாது. மாறாக, அவர்கள் துருக்கி மொழியில் பேசுவதையே விரும்புகின்றனர். 1992-ம் ஆண்டு எசன்ச் இறந்து போனார். அவரது கல்லறையில், "இது டெப்விக் எசன்ச்சின் கல்லறை. உபிக் என்ற மொழியைப் பேசிய கடைசி மனிதர் இவர்தான்" என்று எழுதப்பட்டுள்ளது. அவர் மறைந்தவுடன் உபிக் மொழியும் மறைந்துவிட்டது. "மறையும் மொழிகள்' என்ற பிரிட்டனைச் சார்ந்த ஒரு கலாசார அமைப்பு, அதிகமான ஆய்வுகளைச் செய்துள்ளது.

இதில் பணியாற்றும் மொழியியலாளர் ப்ரூஸ் கானல் என்பவர், 1994-95-ல் மாம்பிலா என்ற பகுதியில் களஆய்வு மேற்கொண்டார். அப்போது நிறைய மொழிகள் மறையும் அபாயத்தில் இருந்ததைக் கண்டார்.

கசாபே என்ற மொழி போகோன் என்ற ஒரே ஒருவர் மட்டுமே பேசக் கூடியதாக இருக்கிறது என்று கண்டுபிடித்திருக்கிறார். அவரது சகோதரிக்கு கசாபே மொழி புரியும். ஆனால், பேசத் தெரியாது. அவரது குழந்தை


கள், பேரக் குழந்தைகள் யாருக்குமே கசாபே மொழி தெரியாது. போகோன் மறைந்தவுடன் கசாபே மொழியும் மறைந்துவிடும். உலகில் கிட்டத்தட்ட 7,000 மொழிகள் வழக்கத்தில் உள்ளதாக ஆய்வாளர்கள் சொல்கின்றனர். சில பகுதிகளில் அதிகமான மொழிகள் வழக்கில் உள்ளன. ஆனால், பல எழுத்து வடிவத்தில் இல்லை. உலகில் பயன்படும் அனைத்து மொழிகளும் இன்னும் கண்டுபிடிக்கப்பட்டு பட்டியலிடப்படவில்லை. சில பூர்வகுடிகள் வித்தியாசமாக ஒரு மொழியைப் பேசும் வழக்கம்

கொண்டுள்ளனர். உதாரணமாக, 1998-ம் ஆண்டு ஜகார்த்தாவுக்குக் கிழக்கே மாம்பரமோ நதிக்கருகே வஹீததே, ஆகேததே என்ற குழுக்கள் வசித்தனர். மொத்தமே இவை இரண்டையும் சேர்த்தே 50 குடும்பங்கள்தானிருக்கும்.

இவர்கள் பேச்சு வித்தியாசமாக இருந்ததால், அவர்கள் பேசியது புதிய மொழிகள் என்றே கணக்கிலெடுத்துக்கொள்ளப்பட்டன டேவிட் கிறிஸ்டல் என்ற மொழி ஆய்வாளர் தெரிவிக்கிறார். உலகில் வழக்கத்தில் உள்ள மொழிகளில் 90 சதவீதம் வரை இந்த நூற்றாண்டில் இல்லாமல் போய்விடும் என்று அச்சம் தெரிவிக்கப்படுகிறது. 11 நாள்களுக்கு ஒரு மொழி புழக்கத்திலிருந்து அழிந்துவிடுகிறது. பிப்ரவரி 21-ம் நாள் பன்னாட்டுத் தாய்மொழி தினமாக அறிவிக்கப்பட்டாலும், மொழிகளைப் பேணிக் காக்கவேண்டிய சிந்தனை உலக அளவில் இல்லாமல் போய்விட்டது. உலகில் சராசரியாக 5,000 பேர்வரை ஒரு மொழியைப் பேசுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கிட்டத்தட்ட 4,000 மொழிகளைப் பேசுபவர்கள் ஆதிவாசிகள் எனக் கணக்கிடப்படுகிறது. 83-84 சதம் மொழிகள் ஒரே ஒருநாட்டில் மட்டுமே பேசப்படுபவையாக உள்ளன. சில மொழிகள் மிகச் சிலரால் மட்டுமே பேசப்படுகின்றன. பப்புவா நியூகினியாவில் உள்ள குருமுலும் என்ற இனத்தில் 10 பேர் மட்டுமே ஒரு மொழியைப் பேசுகின்றனர். மொழிகளின் பட்டியலில் முதல் 10 இடங்களிலுள்ள மொழிகள் மொத்த உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 50 சதம் மக்கள் பேசும் மொழிகளாக உள்ளன. சில மொழிகளின் எண்ணிக்கை வருமாறு:

அமெரிக்கா 1,013

மொழிகள் (15சதம்), ஆப்பிரிக்கா 2,058 மொழிகள் (30 சதம்), ஐரோப்பா 230 மொழிகள் (3 சதம்), ஸ்திரேலியா 250 மொழிகள் (1 சதம்), ஆ சியா 2,197 மொழிகள் (32 சதம்), பசிபிக் 1,311 மொழிகள் (19 சதம்). பப்வா நியூகினியா 850 மொழிகள். இந்தோனேஷியா 670 மொழிகள். நைஜீரியா 400 மொழிகள். இந்தியா 380 மொழிகள். கேமரூன் 270 மொழிகள். மெக்சிகோ 240 மொழிகள். பிரேசில் 210 மொழிகள். ஸர் 210 மொழிகள். ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த மொழியியலாளர் டோவ் ஸ்கட்நாப் கங்காஸ் என்பவர் மொழி ஆய்வுகள் பல நடத்தப்பட்டபோதிலும், புள்ளிவிவரங்கள் துல்லியமானதாக இல்லையென்றே கருதுகிறார். மொழிகளுக்கும், சீதோஷ்ண நிலைக்கும் தொடர்பு உண்டு என்கிறார் நிதின் சேத்தி என்கிற ஆய்வாளர்.

மொழி உலகம் என்ற வரைபடம் மூலம் வெப்பம் மிகுதியாக உள்ள நாடுகளில் அதிகமான மொழிகள் பேசப்படுகின்றன என்கின்றனர். மேற்கு ஆப்பிரிக்கக் கடற்கரை மற்றும் இந்தியாவிலிருந்து தொடங்கி, தென் கிழக்காசிய பகுதிகளிலுள்ள இந்தோனேஷியத் தீவுகள் பசிபிக் வரையுள்ள பகுதிகளிலுள்ள இந்தியா உள்ளிட்ட 17 மிகப்பெரிய நாடுகளில் உள்ள மொழிகளில் 60 சதவீதம் பேசப்படுகின்றன. அமெரிக்கா மற்றும் கனடாவில் பழங்குடி மக்களால் பேசப்படும் சுமார் 80 சதவீத மொழிகள் அவர்களுடைய குழந்தைகளுக்குச் சொல்லித் தரப்படுவதில்லை. இதனால் கனடாவில் 60 மொழிகள் பேசப்பட்டு இன்றைக்கு 4 மொழிகளே நிலைத்து நிற்கின்றன. ஆஸ்திரேலியாவில் அங்குள்ள பழங்குடிகள் பேசிய 250 மொழிகள் மறைந்தே விட்டன என்று மொழியியல் அறிஞர் நெட்டல் கூறுகிறார். இப்போது ஆஸ்திரேலியாவில் 250 மொழிகளில் இரண்டு மொழிகள் மட்டுமே பேசப்படுகின்றன. ஆப்பிரிக்காவில் 54 மொழிகள் படிப்படியாக அழிந்துவிட்டன.

116 மொழிகள் மறையும் சூழலில் உள்ளன என்று மொழியியல் அறிஞர்கள் கவலை தெரிவித்துள்ளனர். பூர்வகுடி இன மக்கள் பேசுகிற மொழிகள்தான் படிப்படியாக அழிந்து வருகின்றன என்றும், நகர்ப்புற வளர்ச்சி, உலகமயமாக்கல் போன்றவை மொழிகளின் அழிவுக்குக் காரணங்கள் என்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். மொழிகள் அழிவது குறித்து தடுக்கக்கூடிய முயற்சிகள் எவை எவை என்று மைசூரில் உள்ள இந்திய மொழியியல் கழகம் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. மொழிகளைப் பாதுகாப்பதன் மூலமாக ஓர் இனத்தின் கலாசாரம், பாரம்பரியம், பழக்கவழக்கங்கள் போன்றவற்றைப் பாதுகாக்க முடியும். 65 ஆயிரம் ஆண்டுகளாக அந்தமான் நிக்கோபர் தீவில் பேசப்பட்ட போ என்ற மொழி அழிந்துவிட்டது. அந்தமான் மொழிகளில் சிறப்பு வாய்ந்த போ மொழி பேசிய 80 வயதான பெண் இறந்தவுடன் அந்த மொழி முடிவுக்கு வந்துவிட்டது. 2004-ல் ஏற்பட்ட சுனாமி கோரத்தின்போதுகூட துக்கத்தில் பாடப்பட்ட போ மொழி பாடல் விடியோவில் பதிவு செய்யப்பட்டது

.இதுதான் உலகிலேயே பழமையான மொழி என ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக மொழியியல் ஆய்வாளர் அன்விதா அபி கூறுகிறார். அந்தமானில் மறைந்த போ மொழியில் அரிய மருத்துவச் செய்திகள் இருந்தன. செடி, கொடிகளிலிருந்து மருந்து தயாரிக்கக்கூடிய நடவடிக்கைகள் அந்த மொழியில் இருந்தன. ஆனால், அந்த மொழியின் மறைவால் நமக்கு மருத்துவத் தகவல்கள் கிடைக்காமலேயே போய்விட்டன. குரா என்ற அந்தமான் மொழியும் புழக்கத்தில் இல்லாமல் போய்விட்டது. அங்கு ஜிரா என்ற மொழியை 50 பேர் மட்டுமே இப்பொழுது பேசி வருகின்றனர். 150 ஆண்டுகளுக்கு முன்னால் இந்தத் தீவில் 10 மொழிகள் புழக்கத்தில் இருந்தன. அவற்றில் பெரும்பாலான மொழிகள் இப்பொழுது பேச்சு வழக்கில் இல்லை. கேரளத்தின் கொச்சியைச் சேர்ந்த வில்லியம் ரொசாரியோ கடந்த 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் 20-ல் மரணமடைந்தவுடன் அப்பகுதியில் பேசப்பட்ட மலையாள போர்ச்சுகீஸ் கிரியோல் என்ற மொழி மறைந்தது. 400 ஆண்டுகளாக கேரள கத்தோலிக்கர்களின் அடையாளமாக இந்த மொழி திகழ்ந்தது.

ரெமோ என்ற ஒரிய மொழி போண்டா என்ற ஆதிவாசிகளால் பேசப்பட்டு, இந்த ஆதிவாசிகள் மக்கள்தொகை குறைந்து இம்மொழியும் அழிந்துவிடும். 20 லட்சம் மக்கள் பேசும் கோந்தி மொழி சத்தீஸ்கர் மாநிலத்தில் எந்தப் பள்ளியிலும் பாட நூலாகவே இருக்கவில்லை. அதன்பின் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கத்தால் அந்த கோந்தி மொழியில் பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு ஆரம்பப் பள்ளிகளில் பாடங்களாகக் கற்பிக்கப்படுகின்றன. தென்னிந்தியப் பகுதிகள் டெக்கான் என்று அழைக்கப்பட்ட காலத்தில் அங்கு மராட்டி, கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகள் பேசப்பட்டன. வட இந்தியப் படையெடுப்புக்குப் பின் அவர்களது மொழியான அவதியும் இங்கு பேசப்பட்டது. இவையாவும் ஒன்றுசேர்ந்து தக்கனி மொழி உருவாயிற்று.

பாமினி மற்றும் ஹைதராபாத் பகுதிகளில் தக்கனி மொழிதான் ஒருகாலத்தில் பேசப்பட்டு வந்ததாகத் தெரிகிறது. உலகமயமாதலின் காரணமாக மூன்றில் ஒரு பங்கு மொழிகள் மறைந்துள்ளன என்று அழுத்தமாகக் கூறும் கிறிஸ்டல், தொழில் நுணுக்கத்தின் ஊடுருவலால், உலகின் மூலை முடுக்குகளில்கூட பேசும் மொழிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்கிறார். ஒரு குறிப்பிட்ட மொழி ஆதிக்கம் செலுத்துவதைக் காண முடிகிறது. எடுத்துக்காட்டாக, கனடாவில் ஆங்கில மொழியும், தென் அமெரிக்காவில் ஸ்பானிஷ், போர்ச்சுகீஸ் மொழிகளும் ஆதிக்கம் செலுத்துகின்றன.

ஜவாஹர்லால் நேரு பல்கலைக் கழக மொழியியல் துறைப் பேராசிரியர் அன்விதா அப்பி, இந்தியாவில் ஆங்கிலத்தின் ஆதிக்கம் கடந்த பதினைந்து ஆண்டுகளில் அதிகரித்துள்ளது என்று குறிப்பிடுகிறார். குறிப்பிட்ட ஒரு மொழியின் ஆதிக்கம் காரணமாக காலங்காலமாகப் பேசப்பட்டு வந்த மொழிகள் மறைவதைப் பற்றி டோவ் கூறுகையில், மொழிகளின் மரணம் என்பதை என்னால் ஏற்க இயலவில்லை. மாறாக, படுகொலை என்ற சொல்லைப் பயன்படுத்த நான் விரும்புகிறேன். மொழி உரிமை என்பது மனித உரிமையாகும் என்கிறார் டோவ். இந்தியாவையே எடுத்துக் கொண்டால் 300-க்கும் மேற்பட்ட மொழிகள் இருந்தபோதிலும், 16 மொழிகள் மாநில மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அனைத்து மொழிகளும் முக்கியமானவை என்பதை அங்கீகாரம் செய்வதே மொழிப் பாதுகாப்பின் முதல் படியாகும்.

இந்திய அரசியல் சாசனத்தில் 8-வது பட்டியலில் சொல்லப்பட்டுள்ள 22 மொழிகள் சேர்க்கப்பட வேண்டுமென்று வைக்கப்பட்ட கோரிக்கை மீது, அரசுத் தரப்பில், ஒரு மொழியை குறைந்தபட்சம் 10,000 பேர்களாவது பேசினால்தான் மொழி என்ற வரையறைக்கு உள்படும். அரசியல் சாசனத்தில் பட்டியலிடப்படாத 100 மொழிகளை மூன்று விழுக்காடு இந்திய மக்களே பேசுகின்றனர். குஜராத்தில் அழிவின் விளிம்பில் உள்ள பிலி என்ற மொழியைப் பாதுகாக்கும் காஞ்சிபடேல் கூறுவது என்னவென்றால், "ஒரு மொழியைப் பாதுகாக்க வேண்டுமென்றால் அந்த மொழி பயிற்றுவிக்கப்பட வேண்டும். அதன் இலக்கியங்கள் வெளியிடப்பட வேண்டும். அப்படிச் செய்தால்தான் ஒரு மொழியைப் பாதுகாக்க முடியும்' என்கிறார்.

இம்மாதிரி மொழிகளைப் பாதுகாக்க பாஷா என்ற அமைப்பை ஏற்படுத்தி கணேஷ் டெவ்லி என்பவர் நடத்தி வருகிறார். இமாலயப் பகுதியில் ஹிம்லோக் அமைப்பு, ஜார்க்கண்ட் மாநிலத்தில் மண்டர், ஹோ, அகர், க்ரியா, குருக்ஸ் போன்ற மொழிகளைப் பாதுகாக்க ஜார்கண்டி பாஷா சாகித்திய சனஸ்க்ருதி அகரா என்ற அமைப்பு பாடுபட்டு வருகிறது. ஜோகர் நிகம் கபர் என்ற மாத இதழ் மூலமாக மொழிகள் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பேராசிரியர் பிரசன்னஸ்ரீ குர்ரு இன மக்களின் மொழிக்கு எழுத்து வடிவம் கொடுத்துள்ளார். ஆந்திரம் மற்றும் ஒரிசாவில் கொண்டா டொரா மொழி பேசப்பட்டு வந்தது. ஆனால், பழங்குடி மக்கள் தற்சமயம் ஒரிய மொழியைப் பேச ஆரம்பித்துவிட்டதால், இந்த மொழியைக் காக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

மேற்கு வங்கத்தில் சந்தால் மக்களின் மொழியான ஒல்சிக்கி பேச ஊக்குவிக்கப்படுகிறது. லிவிங் டங்க்ஸ், சர்வைவல் இன்டர்நேஷனல், சொரோ சொரோ போன்ற அமைப்புகள் அழிந்து வரும் இந்திய மொழிகளைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. யுனெஸ்கோ வெளியிட்டுள்ள அழியும் மொழிகள் பட்டியலில், தமிழ் இடம் பெறவில்லை. தமிழின் உயிர்த்தன்மை அந்த நிலைக்குச் செல்கிற வாய்ப்பில்லை என யுனெஸ்கோ தெரிவித்துள்ளது. அந்நிய கலாசாரம் பற்றிக் கூறும்போது, ""எனது வீடு சுவர்களால் அடைத்து இருப்பதை நான் விரும்பவில்லை.

எனது வீட்டின் ஜன்னல்கள் திறந்தே இருக்க வேண்டும். உலகின் அனைத்துப் பகுதி கலாசாரமும் எந்தத் தடையுமின்றி வீட்டுக்குள் வருவதை விரும்புகிறேன். ஆனால், அந்த அலை என்னை அடித்துச் சென்றுவிடவும் விடமாட்டேன்" என்று அண்ணல் காந்தி கூறினார். இன்றைய உலகமயமாக்கல் முறையில் பன்னாட்டு உறவால் சிலருக்குத் தாய்மொழி மீது உள்ள பற்று குறைந்து வருகிறது. இது ஆபத்தான நிலைக்குத் தள்ளிவிடும். தான் பிறந்த மண், தாய் தந்தை, தாய் மொழி, தனது கலாசாரத்தைப் பாதுகாக்க ஒவ்வொருவரும் உறுதி எடுக்க வேண்டும். தாய்மொழி என்பதில் ஒவ்வொருவரின் தன்மானமும், பெருமையும் அடங்கியுள்ளது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது






கட்டூரையாளர் இராதாகிருட்டிணன்.


ஞாயிறு, 15 மே, 2011

அல்லாஹ்வின் உதவி நீங்காமல் இருக்க அழகிய வழிகள்

என் அன்புச் சகோதர, சகோதரிகளே நாம் மனிதர்கள் நம் அல்லாஹ்வோ கருணை
வள்ளலாக இருக்கின்றான்! வாருங்கள் அந்த கருணை வள்ளல், ரஹ்மத்துல் ஆலமீன்!
ரப்புல் ஆலமீன் எவ்வாறு மக்கள் மீது கருணைகாட்ட தன் திருமறையின்
வாயிலாகவும் நபிகளார் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளாலும் சொல்கிறான் என்பதை
அறிந்துக் கொள்வோம்! மேலும் அல்லாஹ்வின் உதவி நீங்காமல் இருக்க அழகிய
வழிகளை படித்து நல்லுணர்வு பெறுவோமாக!


நம்மை 10 மாதம் வயிற்றில் சிரமத்துடன் சிரமமாக பெற்ற தாய்க்கு முதல் இடம்
பிறகுதான் தந்தை!

“அல்லாஹ்வின் தூதரே! மனிதர்களிலேயே நான் தோழமை கொள்ள அதிக உரிமை
படைத்தவர் யார்?” என்று நான் கேட்டேன். அதற்கு நபி(ஸல்)அவர்கள் “உன்
தாய்” என்றார்கள். “அடுத்ததாக யார்?” எனக் கேட்டேன். “உன் தாய்”
என்றார்கள். “அடுத்ததாக யார்?” எனக் கேட்டேன். “உன் தாய்” என்றார்கள்.
“அடுத்ததாக யார்?” எனக் கேட்டேன். “உன் தந்தை” என்றார்கள். அபூஹுரைரா
(ரலி) : புகாரி, முஸ்லிம்


பெற்ற தாய்க்கும், உடன் பிறந்த சகோதரிகளுக்கும் பரிவு காட்ட வேண்டும்!

ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! நான் மிகப்
பெரிய பாவம் செய்து விட்டேன் மன்னிப்பு உண்டா?” என்று கேட்டார். அதற்கு
நபி(ஸல்) அவர்கள் “உனக்குத் தாய் இருக்கிறாரா?” என்று கேட்டார்கள். அவர்
“இல்லை” என்றார். “உன் தாயின் சகோதரி இருக்கிறாரா?” என்று கேட்டார்கள்.
அவர் “ஆம்” என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “அவருக்கு உதவிகள்
செய்வீராக” என்றனர். இப்னு உமர்(ரலி) : திர்மிதீ.


முதியவயதை அடைந்த பெற்றோரை உதாசீணப்படுத்தக்கூடாது!

“அவன் நாசமாகட்டும்! அவன் நாசமாகட்டும்! அவன் நாசமாகட்டும்!” என்று நபி
(ஸல்) கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! யார்?” எனக் கேட்டேன்.
“முதுமையான வயதில் பெற்றோர்கள் இருவரையோ, அல்லது அவர்களில் ஒரு வரையோ
அடைந்தும் சுவர்க்கம் செல்லாதவன்” என விடையளித்தார்கள். அபூஹுரைரா(ரலி) :
முஸ்லிம், திர்மிதீ



இஸ்லாத்தை ஏற்காத தாய்க்கும் அடைக்கலம் தரவேண்டும்!

“நபி(ஸல்) காலத்தில் என் தாயார் இஸ்லாத்தை ஏற்காத நிலையில் என்னை நாடி
வந்தார். என் தாய் என்னிடம் (எதிர் பார்த்து) ஆர்வத்துடன் வந்துள்ளார்,
அவரைச் சேர்த்துக் கொள்ளலாமா? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன்”
அதற்கு நபி(ஸல்) அவர்கள் உன் தாயாரைச் சேர்த்துக் கொள் என்றனர். அஸ்மா
பின் அபீபக்கர்(ரலி) : புகாரி, முஸ்லிம், அபூதாவூத்.


மனைவிக்கும் பரிவு காட்ட வேண்டும்

நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து
உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது
சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள்
உள்ளன. (அல்குர்ஆன் 30:21)


'மக்களே! பெண்களுடன் நியாயமான முறையில் நடந்து கொள்ளுங்கள்! அவர்கள்
உங்களிடம் சிறைக்கைதிகள் நிலையிலுள்ளனர். அவர்கள் உங்களிடம் தப்பாக
நடந்து கொள்ளும்பொழுது மட்டும்தான் நீங்கள் அவர்களிடம் கண்டிப்புக்
காட்டலாம். அவர்கள் உங்கள் சொல்லைக் கேட்டு நடந்தால், அவர்களை இம்சிக்க
நீங்கள் எந்த வழியும் தேடவேண்டாம்.தெரிந்து கொள்ளுங்கள்! உங்கள்மீது
உங்கள் மனைவியர்க்கு நியாயமான பல உரிமைகள் உண்டு-அதனைக் காப்பாற்றுங்கள்!
முக்கியமாக அவர்களுக்கு நீங்கள் சரிவர உணவும், உடையும் அளிக்க
வேண்டும்.' (ஆதாரம்-புகாரி)

ஆண் மக(னான குடும்பத் தலைவ)னும் தன் குடும்பத்துக்குப் பொறுப்பாளியே.
அவன் தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி விசாரிக்கப்படுவான். பெண்
(மனைவி), தன் கணவரது வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். அவளுடைய
பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள்.
(அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: ஸஹீஹுல் புஹாரி 893)

பெண்களை சீர்திருத்த வேண்டும்

"நம்பிக்கையுள்ள பெண்களுக்கும் நீங்கள் கூறுங்கள், அவர்களும் தங்கள்
பார்வையை கீழ் நோக்கியே வைத்துத் தங்கள் கற்பையும் பாதுகாத்துக்
கொள்ளவும் அன்றி, தங்கள் தேகத்தில் வெளியில் இருக்கக் கூடியவைகளைத் தவிர.
தங்கள் (ஆடை, ஆபரணம் போன்ற) அலங்காரத்தை வெளிக்காட்டாது மறைத்துக்
கொள்ளவும் தங்கள் முந்தானைகளால் மார்பையும் மறைத்துக்
கொள்ளவும்." (திருக்குர்ஆன் 24:31)


பெண்களும் உயர்ந்த பண்புகளை பெற்றிருக்க வேண்டும்

பெண்களிடையே மிக உயர்ந்தவள் யார் எனக் கேட்கப்பட்டது. அவன் (கணவன்)
அவளைப் பார்த்தாள் அவனை மகிழ்வுறச் செய்வாள். அவன் ஒன்றை ஏவினால்
அவனுக்கு வழிப்படுவாள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: நஸயி 8686)


உறவினர்களை, இரத்த பந்தங்களை மதிக்க வேண்டும்

இந்த இரத்த பந்தம், "உபகாரம் செய்தல்' என்ற நீர் உற்றப் படும்போது
அன்பு, தூய்மையெனும் கனியை அது தருகிறது, துண்டித்து வாழ்வதால் அது
காய்ந்து கோபத்தையும் வெறுப்பையும் வளரச் செய்கிறது. உண்மை முஸ்லிம்
பிறரை நேசிப்பவரும் மற்றவர்களால் நேசிக்கத் தகுந்தவருமாவார். அவரிடம்
குடிகொண்டுள்ள நற்பண்புகளின் காரணமாக அனைத்து மக்களும் அவரை மிகவும்
நேசிப்பார்கள். இதனால்தான் உமர் (ரழி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள்
தங்களுக்குக் கொடுத்த ஆடையைத் தனது தாய் வழி சகோதரர் முஷ்ரிக்காக
இருந்தும் அவருக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார்கள். (ஸஹீஹுல் புகாரி)


உறவினர்களிடம் உறவை துண்டிக்கக்கூடாது

நபி (ஸல்) அவர்கள் இக்கருத்தை உறுதிப்படுத்திக் கூறியுள்ளார்கள்.
""பதிலுக்குப் பதில் உறவாடுகின்றவர் (உண்மையில்) உறவைப் பேணுகிறவர்
அல்லர். மாறாக, உறவினர்கள் உறவை துண்டித்து வாழ்ந்தாலும் அவர்களுடன்
இணைகின்றவரே உறவைப் பேணுபவர் அவார்.'' (ஹீஹுல் புகாரி)


எனெனில், ""இரத்த பந்தம் என்பது அர்ஷுடன் இணைத்துக்
கட்டப்பட்டதாயிருக்கும். "எவர் என்னைச் சேர்த்துக் கொள்கிறாரோ அல்லாஹ்
அவரைச் சேர்த்துக் கொள்கிறான். எவர் என்னைத் துண்டிக்கிறாரோ அல்லாஹ்
அவரைத் துண்டித்து விடுகிறான்' என்று அது கூறுகிறது'' (ஹீஹுல் புகாரி,
ஸஹீஹ் முஸ்லிம்)


அல்லாஹ்வின் உதவி நீங்காமல் இருக்க அழகிய வழி

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்: ""அல்லாஹ்வின் தூதரே! எனக்கு
சில உறவினர்கள் இருக்கின்றனர். நான் அவர்களுடன் இணைந்திருக்கின்றேன்.
அவர்கள் என்னைத் துண்டித்து வாழ்கின்றனர். நான் அவர்களுக்கு உபகாரம்
செய்கிறேன், அவர்கள் எனக்கு தீங்கிழைக்கின்றனர். அவர்களுடன் அறிவார்ந்த
முறையில் நடந்து கொள்கிறேன், அவர்கள் என்னுடன் மூடத்தனமாக நடந்து
கொள்கின்றனர்'' என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) கூறினார்கள்: ""நீ
சொல்வது போலவே நீ நடந்து கொண்டிருந்தால் அவர்களைச் சுடும் சாம்பலை
சாப்பிட வைத்தவனாவாய். நீர் அதே நிலையில் இருக்கும் காலமெல்லாம்
அவர்களுக்கு எதிராக அல்லாஹ்வின் உதவி உமக்கு நீங்காதிருக்கும்'' என்று
கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)


அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்குரியவன்

நான் எனது இறைவனையே பிரார்த்திக்கின்றேன். அவனுக்கு யாரையும்
இணையாக்கமாட்டேன் என (முஹம்மதே) கூறுவீராக!’ (அல்குர்ஆன் 72:20)


என்னை அழையுங்கள்! உங்களுக்கு பதிலளிக்கின்றேன். எனது வணக்கத்தை விட்டும்
பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள் என்று உங்கள் இறைவன்
கூறுகின்றான்.’(அல்குர்ஆன் 40:60)


என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் நான் அருகில்
இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது
பிரார்த்தனைக்குப் பதிலளிக்கின்றேன். எனவே என்னிடமே பிரார்த்தனை
செய்யட்டும்! என்னையே நம்பட்டும்!’ (அல்குர்ஆன் 2:186)


சகோதர, சகோதரிகளே உறவுகளைப் பேணுவோம், உரிமைகளை கொடுப்போம் உண்ணதமான
சுவனத்திற்கு செல்ல ஏகத்துவத்தை உயிர் மூச்சாக கருதி அதில் என்றென்றும்
நிலையாக இருப்போமாக! அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!

அல்ஹம்துலில்லாஹ்!

திப்பு சுல்தானும் இஸ்லாத்தை ஏற்ற நெப்போலியனும்!

565 சமஸ்தானங்களாக சிதறுண்டு நம்மவர்களிடையே ஒற்றுமையின்மை யால் ந­வடைந்து ஆங்கில ஏகாதிபத் தியத்திடம் அடிபணிந்து அத்தனை சமஸ்தானங்களுமே சுயநலத்திற்காகத் தன்மானத்தையும் நாட்டின் மண்,மானத்தையும் இழந்து நின்ற வேளையில்தான் சுதந்திர வேட்கையின் உதய ஞாயிறாக கி.பி. 1761ல் நவாப் ஹைதர் அ­லிகான் பகதூர் மைசூரின் ஆட்சியைக் கைப் பற்றினார். அதன்பின் ஸ்ரீரங்கபட்டினம் என்னும் சிறு தீவுகள் இருந்த மைசூரின் புகழ் தென்னகமெங்கும் விரியத் தொடங்கியது.
கி.பி.1782ல் ஹைதர் அலி­யின் மரணத்திற்குப் பின் திப்புசுல்தான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபின் அவரது 18 ஆண்டுகால இறையாட்சியில் அகண்ட இந்த பாரத கண்டம் அதற் குமுன் கண்டிராத ஒரு புதிய பொ­லிவு டன் இம்மண்ணின் மைந்தரின் தலைமை யில் ஆங்கில ஏகாதிபத்தியத்தைக் காலூன்ற விடாமல் விரட்டியடித்தது. திப்புசுல்தானின் ஆட்சி கிருஷ்ணா நதியி­ருந்து திண்டுக்கல் வரை தெற்கு வடக்காக நானூறு மைல்களும், மலபாரி­ருந்து கிழக்குத் தெடார்ச்சி மலை வரை மேற்கு கிழக்காக முந்நூறு மைல்களும் பரந்து விரிந்திருந்தது. இந்த நல்லவேளையில் தான் ஆங்கில எதேச்சதிகாரத்தை இம்மண்ணி­ருந்து அடியோடு ஒழிக்க மாவீரன் திப்புசுல் தான் ஐரோப்பிய மாவீரன் நெப்போ­ய னுடன் உறவு கொண்டார். அதுதான இன்றைய கூட்டணிகளுக்கெல்லாம் முன்னோடியாக விளங்கிய முதல் சர்வதேச கூட்டணி.

பிரெஞ்சுப் புரட்சி முடிவும் நெப்போலி­யனின் தலைமையும்
கி.பி.1787­லும், கி.பி.1792லும் பிரான்ஸ் நாட்டில் பெரும் புரட்சி வெடித்து மன்னர் 16ம் லூயி ஆட்சி முடிந்து பி.பி.1796க்குள் மாவீரன் நெப்போ­யன் பிரெஞ்சுப் படைகளின் தலைமைத் தளபதியாக உயர்ந்து விட் டான். சுதந்திரம், சமத்துவம், சகோதரத் துவம் என்னும் கோஷங்கள் பிரெஞ்சு மண்ணில் எழுப்பப்பட்டன. அதன் எதிரொ­ உலகின் பல பாகங்களிலும் கேட்க ஆரம்பித்தது.
இந்தப் புரட்சி கோஷத்தை வரவேற்ற முதல் இந்திய மன்னன் திப்புசுல்தான் மட்டுமே. அன்றே ஸ்ரீரங்கப்பட்டண வீதிகளில் இப்புரட்சி முழக்கங்களைக் கூறிக்கொண்டு மக்கள் ஊர்வலத்தை நடத்திக் காட்டினார் திப்புசுல்தான். பிரான்ஸில் ஜனநாயகக் குடியரசு ஏற்பட்டதும், மைசூரின் தலைநகரில் 108 பீரங்கிக் குண்டுகள் முழங்க அதனை வரவேற்றார். புரட்சிக் கழகம் என்ற ஓர் அமைப்பை ஸ்ரீரங்கப்பட்டணத்தில் திப்புசுல்தான் ஆரம்பித்தார். பிரெஞ்சுக் கடற்படை அதிகாரி ரிப்பாடு அக்கழகத்தின் தலைவராக செயலாற்றினார்.
முடி மன்னன் அல்ல - குடிமகன்
திப்புசுல்தான அக்கழகத்தில் தன்னை ஒரு உறுப்பினராக இணைத்துக் கொண் டார். குடியரசின் குடிமகன் என்ற பட்டத்தை அப்புரட்சிக்கழகம் மன்னர் திப்புசுல்தானுக்கு வழங்கியது. கி.பி.1797ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் தேதி பிரெஞ்சுக் குடியரசின் தேசியக் கொடி ஸ்ரீரங்கப்பட்டணத்தில் பொதுமக்கள் முன்னிலையில் ஏற்றிவைக்கப்பட்டது.
7.6.1985ல் பிரான்சின் தலைநகர் பாரீஸில் நமது முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி அவர்கள் உரையாற்றும் போது கி.பி.1792ல் பிரான்சின் தலை நகரம் பாரீஸில் மக்கள் புரட்சி ஆரம் பமாகி சுதந்திரம் மனிதனின் பிறப்புரிமை என்ற சங்கநாதம் எழுந்தது. எழுந்ததும் அதனுடைய எதிரொ­ இந்தியத் திருநாட்டிலும் கேட்டது. திப்புசுல்தானின் தலைநகரான ஸ்ரீரங்கப்பட்டணத்தில் அன்றைய தினமே இப்புரட்சிக் குரல் எதிரொ­த்திருக்கிறது என்பதனை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கி றேன் என்றார்.
மக்களாட்சி மலர்ந்ததன் சிறப்பை அங்கு கூடியிருந்த மக்களுக்கு திப்புசுல் தான் எடுத்து விளக்கினார். முற்போக்கு சிந்தனைகளை மனமுவந்து ஏற்று மக்கள் முன்பு அதை செய்துகாட்டிய இந்திய மன்னர் திப்புசுல்தான் ஒருவர் மட்டுமே.

நெப்போ­லியனின் வெற்றிகள்
நெப்போ­லியன் ஜெர்மனி, ஆஸ் திரியா இவற்றை வென்று ரஷ்யாவில் மாஸ்கோ வரை வென்றுவிட்டார். பல போர்களில் ஆங்கிலேயர் நெப்போ­ யனிடம் தோல்வி கண்டனர். அதேபோல் இந்தியாவில் தென்னகத்தில் பரவலான பல இடங்களில் திப்புசுல்தானிடம் தோல்வி கண்டனர்.
அல்லாமா இக்பால் அவர்கள் திப்புவைப் பற்றிக் குறிப்பிடும்போது, அன்று கிழக்கு தூங்கிக் கொணடிருந்த போது அவன் மட்டும்தான் விழித்திருந் தான் என சிறப்பிப்பார். நெப்போ­ய னின் வெற்றிகள் தொடர்ந்த வேளை இந்தியாவில் திப்புவுக்கும் நெப்போலி­யனுக்கும் கடிதத் தொடர்புகள் ஆரம்பித்தன.
மாவீரன் நெப்போ­ யன் நைல் நதிப் பகுதியை வென்றபின் இந்தியா மீது படை யெடுக்கத் திட்டமிட்டி ருந்தார். இதனையே திப்புசுல்தான் ஆவ லோடு எதிர்பார்த்தார். கி.பி.1798 ஜனவரியில் பெரும் படையுடன் மத்திய தரைக்கடலைக் கடந்து அரபிக் கடலைக் கடந்து கி.பி.1798 மத்தியில் இந்தியக் கரையை அடைவதே மாவீரன் நெப்போ­யனின் திட்டம். இத்திட்டம் திப்புசுல்தானுக்குத் தெரிவிக்கப்பட்டதும் ஆங்கிலேயரின் எதிர்ப்பை மீறி பாண்டிச் சேரியிலுள்ள பிரெஞ்சு கவர்னரிடம் கி.பி. 1798 ஜனவரியில் செய்து கொண்ட ஒப்பந்தப்படி மாவீரன் நெப்போ­யன் 1798 ஜூன் மாதம் 8ஆம் தேதி அலெக்ஸாந்திரியா துறைமுகத்தில் படையிறங்கினார். இருபதே நாட்களில் கெய்ரோ வீழ்ந்தது. எகிப்தை ஆண்ட துருக்கி சுல்தானின் பிரதிநிதி நெப்போ­ யனிடம் சரணடைந்தார்.

திப்புவின் தூதரும் நெப்போலி­யனும்
நெப்போலி­யன் கெய்ரோவில் முகாமிட்டிருக்கும் வேளையில் திப்பு சுல்தானின் பிரதிநிதி மீர் அ­கான் அவரை சந்தித்தார். திப்புவின் கருத்துக் களை நெப்போ­லியன் நன்கு கேட்டறிந் தார். ஆங்கிலேயரை விரட்டியடிக்க இது நல்ல தருணம் என்றும், அப்போதுதான் ஐரோப்பாவிற்குப் பாதுகாப்பு என்றும், இந்த வாய்ப்பைத் தவறவிட்டால் உலக சரித்திரமே மாறிவிடும் என்றும் தெரிவிக் கப்பட்ட திப்புசுல்தானின் சீரிய கருத்துச் சரியென நெலிப்போ­யன் ஏற்றுக் கொண்டார்.

கடிதம் பிரிட்டிஷார் வசம்
திப்புசுல்தானுக்கு நெப்போ­லியன் கடிதம் ஒன்றைத் திப்புவின் தூதர் மீர் அ­கானிடம் தருகிறார். கடிதத்தைப் பெற்றுக்கொண்டு அவர் வரும் வழியில் ஹஜ் கடமை நிறைவேற்றும் பொருட்டு மக்காவில் தங்கிய சமயம் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் சிக்கிக் கொண்டார். நெப்போ­லியனின் கடிதம் பறிக்கப்படு கிறது. இக்கடிதத்தால் நெப்போ­யன் லி திப்புசுல்தான் உறவு ஆதாரத்துடன் ஆங்கிலேயருக்குத் தெரிந்தவுடன் முத­ல் திப்புசுல்தானை வீழ்த்த வேண்டும் என்று முடிவெடுத்து கி.பி.1798 ஏப்ரல் 26ஆம் தேதி வெல்லெஸ்­ பிரபுவை பிரிட்டிஷ் அரசு இந்தியக் கரையில் இறக்கியது.

போப்பாண்டவருடன் நெப்போ­லியன் மோதல்
ஜோஸப்பைன் என்ற மனைவி மூலம் நெப்போ­லியனுக்கு குழந்தைகள் இல்லை. அதனால் மறுமணம் செய்ய எண்ணி போப்பாண்டவரிடம் அனுமதி வேண்டினார்.
போப்பாண்டவருக்கு அனைவரும் கட்டுப்பட்டே ஆகவேண்டும் என்பது சட்டம். அரசர்கூட அவர் கட்டளையை மீறக்கூடாது. ரோமில் உள்ள போப்பின் அதிகாரத்தை மீறினால் மத பிரஷ்டம் செய்யவும் போப்புக்கு அதிகாரம் உண்டு.
இரண்டாம் திருமணத்திற்கு நெப்போ­லியனுக்கு அனுமதி மறுத்ததோடு அவரை மதத்தி­ருந்தும் விலக்கிவிடுவேன் என் போப் பயம் காட்டியதால், பி.பி.1798ஆம் ஆண்டு போப்பின் மேலாதிக்கத்தை நெப்போ­யன் பிரான்ஸி­ருந்து அகற்றி விட்டார்.
இம்மோத­ன் உச்சக்கட்டத்தில்தான் எகிப்தின் மீது படையுடன் வந்தார் நெப்போலி­யன்.

நெப்போலி­யனும் இஸ்லாமும்
கெய்ரோ நகரில் முஸ்­ம் மார்க்க அறிஞர்களை அழைத்து அவர்களிடம் இஸ்லாத்தைப் பற்றி அறியும் வாய்ப்பைப் பெற்றார் நெப்போ­லியன். ஏற்கெனவே பிரெஞ்சு மொழியில் திருக்குர்ஆன் மொழிபெயர்க்கப்பட்டு இருந்தது. இஸ்லாம் பற்றி வேறு பல நூல்களும் பிரெஞ்சு மொழியில் வெளியிடப்பட்டிருந் தன. இஸ்லாமிய மார்க்க அறிஞர்களுடன் கெய்ரோவில் அடிக்கடி உரையாடல்கள் நடத்தி இஸ்லாம் பற்றி நன்கு தெளிவா னார் நெப்போலி­யன்.
இஸ்லாமியக் கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்ட நெப்போ­லியன்
இஸ்லாமியத் திருமணம், தலாக், பலதாரமணம் போன்றவைக் குறித்தும், நடைமுறையில் இவை எவ்வாறு கையாளப்படுகின்றன என்பதையும் நெப்போ­லியன் தெரிந்து கொண்டபின் நிஜமான நடைமுறை வாழ்க்கைக்கு இஸ்லாமியக் கருத்துக்கள் எவ்வளவு தூரம் ஒத்துப் போகின்றன என்று மனதார மிகவும் பாராட்டியதோடு கெய்ரோவி லுள்ள இஸ்லாமிய மார்க்க அறிஞர் களிடம் இஸ்லாம் மார்க்கம் பற்றிய தம் கருத்தையும் வெளியிட்டார்.

திப்புவின் தூதர் முன்னிலையில் இஸ்லாத்தை ஏற்ற நெப்போ­லியன்
இஸ்லாம் ஒரு நல்ல மார்க்கம் என்று பகிரங்கமாகக் கூறியதோடு, இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் முன்னிலையில் திப்புசுல்தானின் தூதர் மீர் அ­கான் (எகிப்தில்) அங்கிருந்தபோதே க­மாச் சொல்­ இஸ்லாத்தில் தம்மை இணைத் துக் கொண்டார் நெப்போ­லியன். இறை வனுக்கே புகழனைத்தும்.
இவ்விபரங்களை மீர்அ­கான் திப்பு சுல்தானிடம் தெரிவித்தபொழுது, இறை வனுக்கு நன்றி செலுத்தினார் திப்புசுல் தான். நெப்போ­யன் தமக்கு எழுதிய கடிதம் பறிபோனதைக்கூட மறந்து மீர் அ­கானிடம் இந்த விபரம் பற்றியே அதிகம் விசாரித்தாராம் திப்புசுல்தான்.
எதிர்பாராத ஏமாற்றம்
எகிப்தில் பிரெஞ்சுப் படைகள் நைல் நதியில் நடைபெற்ற போரில் எதிர்பாராத விதமாக தோல்வி முகம் காண ஆரம் பித்ததும் மாவீன் நெப்போ­யலின் இந்தியா வரும் எண்ணத்தைக் கைவிட்டு சிரியாவின் பக்கம் திரும்பி, பின்னர் ஐரோப்பாவுக் குத் திரும்பிவிட்டார். இந்நிகழ்வு திப்புசுல்தானுக்கு மிகப்பெரும் ஏமாற்றம் அளித்தது.
நெப்போ­லியன் தோல்வி
கி.பி.1810ல் நெப்போலி­யன் தம் இரண்டாம் திருமணத்தை முடித்தார். கி.பி.1811ல் அவருக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. பின்பு கி.பி.1815ல் வாட்டர் லூ என்னு மிடத்தில் நடைபெற்ற வரலாற்று முக்கியத் துவம் வாய்ந்த போரில் ஆங்கிலேயர் வென்றனர். மாவீரன் நெப்போ­யன் செயின்ட் ஹெ­னா தீவில் சிறை வைக்கப்பட்டார்.
இஸ்லாத்தில் நெப்போ­லியனின் முழு ஈடுபாடும் இறையடி சேர்தலும்
சிறையில் இருந்த காலக்கட்டத்தில் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் மாவீரன் நெப்போ­யன் இஸ்லாம் பற்றி ஆராய்ந்து அறிந்து எப்பொழுதும் குர்ஆனின் பிரெஞ்சு மொழிபெயர்ப்பை படித்தபடியே இருந்தாராம். அவர் தவறாமல் தொழு கையைக் கடைப்பிடித்து நோன்பும் நோற்றிருக்கிறார்.
வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி கெய்ரோவில் நெப்போ­யன் க­மாச் சொல்­ இஸ்லாத்தில் இணைந்தது உண்மை என்பதும், முழுமையான முஸ்­லிமாகவே அவர் இறுதிவரை வாழ்ந்தார் என்பதும் புலனாகிறது.
இறுதியாக, சிறைச்சாலையில் நெப்போ­லியன் தங்கியிருந்த அறையில் தொழுகை விரிப்புடன் திருக்குர்ஆன் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு ஒன்று மட்டுமே இருந்தது என்ற உண்மையை அவரது மறைவிற்குப் பின் அங்கு சென்று குறிப் பெடுத்த சிறை அதிகாரியின் அறிக்கை கூறுகிறது.

ஹிந்து பத்திரிகையில் 19.12.1982 அன்று வெளிவந்த ஒரு பெட்டிச் செய்தி விபரம்:
1932ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹைதராபாத் நகரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அன்றைய ஹைதராபாத் நிஜாமின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள கா­த்ஷெல் டிரேக் என்ற ஆங்கில முஸ்­ம், இந்தியா வந்திருந்தார். அக்கூட்டத் தில் அவா நெப்போ­யன் தம் இறுதிக் காலத்தில் முழு முஸ்­மாகவே வாழ்ந்தார் என்றும், நெப்போ­யன் வாழ்ந்த சிறை அறையில் திருக்குர்ஆனின் பிரெஞ்சு மொழி பெயர்ப்பு மட்டுமே இருந்தது என்பது பல நூல்களிலும் குறிப்பிடப் பட்டுள்ளது என்றும் அந்த ஆதார நூல்களை மேற்கோள் காட்டியும் விளக் கம் தந்துள்ளார். முக்கியமாக கி.பி.1815லில் நெப்போ­யனை செயின்ட் ஹெ­னா தீவுக்கு அழைத்துச் சென்ற அட்மிரல் காக்பர்ன் என்ற ஆங்கிலத் தளபதியின் செயலாளர் ஆர். குளோவர் என்பவர் எழுதி வெளியிட்ட டைரியில் இதுபற்றிய உண்மைகள் புலனாகின்றன.
இறுதியாக மாவீரன் திப்புசுல்தான், கி.பி.1799 மே மாதம் 4ஆம் தேதி தம் இன்னுயிர் நீத்ததுபோல் உள்ளத்தால், திடத்தால் ஆங்கிலேயரை விரட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தால் ஒன்று பட்ட மாவீரன் நெப்போ­யனும் கி.பி. 1821ல் மே மாதம் 5ஆம் தேதி இறையடி எய்தினார் உண்மை முஸ்­லிமாக!
(எம்।கே। ஜமால் முஹம்மது அவர்களின் தியாகச் சுடர் திப்பு சுல்தான் நூ­­லிருந்து...)