565 சமஸ்தானங்களாக சிதறுண்டு நம்மவர்களிடையே ஒற்றுமையின்மை யால் நவடைந்து ஆங்கில ஏகாதிபத் தியத்திடம் அடிபணிந்து அத்தனை சமஸ்தானங்களுமே சுயநலத்திற்காகத் தன்மானத்தையும் நாட்டின் மண்,மானத்தையும் இழந்து நின்ற வேளையில்தான் சுதந்திர வேட்கையின் உதய ஞாயிறாக கி.பி. 1761ல் நவாப் ஹைதர் அலிகான் பகதூர் மைசூரின் ஆட்சியைக் கைப் பற்றினார். அதன்பின் ஸ்ரீரங்கபட்டினம் என்னும் சிறு தீவுகள் இருந்த மைசூரின் புகழ் தென்னகமெங்கும் விரியத் தொடங்கியது.
கி.பி.1782ல் ஹைதர் அலியின் மரணத்திற்குப் பின் திப்புசுல்தான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபின் அவரது 18 ஆண்டுகால இறையாட்சியில் அகண்ட இந்த பாரத கண்டம் அதற் குமுன் கண்டிராத ஒரு புதிய பொலிவு டன் இம்மண்ணின் மைந்தரின் தலைமை யில் ஆங்கில ஏகாதிபத்தியத்தைக் காலூன்ற விடாமல் விரட்டியடித்தது. திப்புசுல்தானின் ஆட்சி கிருஷ்ணா நதியிருந்து திண்டுக்கல் வரை தெற்கு வடக்காக நானூறு மைல்களும், மலபாரிருந்து கிழக்குத் தெடார்ச்சி மலை வரை மேற்கு கிழக்காக முந்நூறு மைல்களும் பரந்து விரிந்திருந்தது. இந்த நல்லவேளையில் தான் ஆங்கில எதேச்சதிகாரத்தை இம்மண்ணிருந்து அடியோடு ஒழிக்க மாவீரன் திப்புசுல் தான் ஐரோப்பிய மாவீரன் நெப்போய னுடன் உறவு கொண்டார். அதுதான இன்றைய கூட்டணிகளுக்கெல்லாம் முன்னோடியாக விளங்கிய முதல் சர்வதேச கூட்டணி.
பிரெஞ்சுப் புரட்சி முடிவும் நெப்போலியனின் தலைமையும்
கி.பி.1787லும், கி.பி.1792லும் பிரான்ஸ் நாட்டில் பெரும் புரட்சி வெடித்து மன்னர் 16ம் லூயி ஆட்சி முடிந்து பி.பி.1796க்குள் மாவீரன் நெப்போயன் பிரெஞ்சுப் படைகளின் தலைமைத் தளபதியாக உயர்ந்து விட் டான். சுதந்திரம், சமத்துவம், சகோதரத் துவம் என்னும் கோஷங்கள் பிரெஞ்சு மண்ணில் எழுப்பப்பட்டன. அதன் எதிரொ உலகின் பல பாகங்களிலும் கேட்க ஆரம்பித்தது.
இந்தப் புரட்சி கோஷத்தை வரவேற்ற முதல் இந்திய மன்னன் திப்புசுல்தான் மட்டுமே. அன்றே ஸ்ரீரங்கப்பட்டண வீதிகளில் இப்புரட்சி முழக்கங்களைக் கூறிக்கொண்டு மக்கள் ஊர்வலத்தை நடத்திக் காட்டினார் திப்புசுல்தான். பிரான்ஸில் ஜனநாயகக் குடியரசு ஏற்பட்டதும், மைசூரின் தலைநகரில் 108 பீரங்கிக் குண்டுகள் முழங்க அதனை வரவேற்றார். புரட்சிக் கழகம் என்ற ஓர் அமைப்பை ஸ்ரீரங்கப்பட்டணத்தில் திப்புசுல்தான் ஆரம்பித்தார். பிரெஞ்சுக் கடற்படை அதிகாரி ரிப்பாடு அக்கழகத்தின் தலைவராக செயலாற்றினார்.
முடி மன்னன் அல்ல - குடிமகன்
திப்புசுல்தான அக்கழகத்தில் தன்னை ஒரு உறுப்பினராக இணைத்துக் கொண் டார். குடியரசின் குடிமகன் என்ற பட்டத்தை அப்புரட்சிக்கழகம் மன்னர் திப்புசுல்தானுக்கு வழங்கியது. கி.பி.1797ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் தேதி பிரெஞ்சுக் குடியரசின் தேசியக் கொடி ஸ்ரீரங்கப்பட்டணத்தில் பொதுமக்கள் முன்னிலையில் ஏற்றிவைக்கப்பட்டது.
7.6.1985ல் பிரான்சின் தலைநகர் பாரீஸில் நமது முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி அவர்கள் உரையாற்றும் போது கி.பி.1792ல் பிரான்சின் தலை நகரம் பாரீஸில் மக்கள் புரட்சி ஆரம் பமாகி சுதந்திரம் மனிதனின் பிறப்புரிமை என்ற சங்கநாதம் எழுந்தது. எழுந்ததும் அதனுடைய எதிரொ இந்தியத் திருநாட்டிலும் கேட்டது. திப்புசுல்தானின் தலைநகரான ஸ்ரீரங்கப்பட்டணத்தில் அன்றைய தினமே இப்புரட்சிக் குரல் எதிரொத்திருக்கிறது என்பதனை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கி றேன் என்றார்.
மக்களாட்சி மலர்ந்ததன் சிறப்பை அங்கு கூடியிருந்த மக்களுக்கு திப்புசுல் தான் எடுத்து விளக்கினார். முற்போக்கு சிந்தனைகளை மனமுவந்து ஏற்று மக்கள் முன்பு அதை செய்துகாட்டிய இந்திய மன்னர் திப்புசுல்தான் ஒருவர் மட்டுமே.
நெப்போலியனின் வெற்றிகள்
நெப்போலியன் ஜெர்மனி, ஆஸ் திரியா இவற்றை வென்று ரஷ்யாவில் மாஸ்கோ வரை வென்றுவிட்டார். பல போர்களில் ஆங்கிலேயர் நெப்போ யனிடம் தோல்வி கண்டனர். அதேபோல் இந்தியாவில் தென்னகத்தில் பரவலான பல இடங்களில் திப்புசுல்தானிடம் தோல்வி கண்டனர்.
அல்லாமா இக்பால் அவர்கள் திப்புவைப் பற்றிக் குறிப்பிடும்போது, அன்று கிழக்கு தூங்கிக் கொணடிருந்த போது அவன் மட்டும்தான் விழித்திருந் தான் என சிறப்பிப்பார். நெப்போய னின் வெற்றிகள் தொடர்ந்த வேளை இந்தியாவில் திப்புவுக்கும் நெப்போலியனுக்கும் கடிதத் தொடர்புகள் ஆரம்பித்தன.
மாவீரன் நெப்போ யன் நைல் நதிப் பகுதியை வென்றபின் இந்தியா மீது படை யெடுக்கத் திட்டமிட்டி ருந்தார். இதனையே திப்புசுல்தான் ஆவ லோடு எதிர்பார்த்தார். கி.பி.1798 ஜனவரியில் பெரும் படையுடன் மத்திய தரைக்கடலைக் கடந்து அரபிக் கடலைக் கடந்து கி.பி.1798 மத்தியில் இந்தியக் கரையை அடைவதே மாவீரன் நெப்போயனின் திட்டம். இத்திட்டம் திப்புசுல்தானுக்குத் தெரிவிக்கப்பட்டதும் ஆங்கிலேயரின் எதிர்ப்பை மீறி பாண்டிச் சேரியிலுள்ள பிரெஞ்சு கவர்னரிடம் கி.பி. 1798 ஜனவரியில் செய்து கொண்ட ஒப்பந்தப்படி மாவீரன் நெப்போயன் 1798 ஜூன் மாதம் 8ஆம் தேதி அலெக்ஸாந்திரியா துறைமுகத்தில் படையிறங்கினார். இருபதே நாட்களில் கெய்ரோ வீழ்ந்தது. எகிப்தை ஆண்ட துருக்கி சுல்தானின் பிரதிநிதி நெப்போ யனிடம் சரணடைந்தார்.
திப்புவின் தூதரும் நெப்போலியனும்
நெப்போலியன் கெய்ரோவில் முகாமிட்டிருக்கும் வேளையில் திப்பு சுல்தானின் பிரதிநிதி மீர் அகான் அவரை சந்தித்தார். திப்புவின் கருத்துக் களை நெப்போலியன் நன்கு கேட்டறிந் தார். ஆங்கிலேயரை விரட்டியடிக்க இது நல்ல தருணம் என்றும், அப்போதுதான் ஐரோப்பாவிற்குப் பாதுகாப்பு என்றும், இந்த வாய்ப்பைத் தவறவிட்டால் உலக சரித்திரமே மாறிவிடும் என்றும் தெரிவிக் கப்பட்ட திப்புசுல்தானின் சீரிய கருத்துச் சரியென நெலிப்போயன் ஏற்றுக் கொண்டார்.
கடிதம் பிரிட்டிஷார் வசம்
திப்புசுல்தானுக்கு நெப்போலியன் கடிதம் ஒன்றைத் திப்புவின் தூதர் மீர் அகானிடம் தருகிறார். கடிதத்தைப் பெற்றுக்கொண்டு அவர் வரும் வழியில் ஹஜ் கடமை நிறைவேற்றும் பொருட்டு மக்காவில் தங்கிய சமயம் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் சிக்கிக் கொண்டார். நெப்போலியனின் கடிதம் பறிக்கப்படு கிறது. இக்கடிதத்தால் நெப்போயன் லி திப்புசுல்தான் உறவு ஆதாரத்துடன் ஆங்கிலேயருக்குத் தெரிந்தவுடன் முதல் திப்புசுல்தானை வீழ்த்த வேண்டும் என்று முடிவெடுத்து கி.பி.1798 ஏப்ரல் 26ஆம் தேதி வெல்லெஸ் பிரபுவை பிரிட்டிஷ் அரசு இந்தியக் கரையில் இறக்கியது.
போப்பாண்டவருடன் நெப்போலியன் மோதல்
ஜோஸப்பைன் என்ற மனைவி மூலம் நெப்போலியனுக்கு குழந்தைகள் இல்லை. அதனால் மறுமணம் செய்ய எண்ணி போப்பாண்டவரிடம் அனுமதி வேண்டினார்.
போப்பாண்டவருக்கு அனைவரும் கட்டுப்பட்டே ஆகவேண்டும் என்பது சட்டம். அரசர்கூட அவர் கட்டளையை மீறக்கூடாது. ரோமில் உள்ள போப்பின் அதிகாரத்தை மீறினால் மத பிரஷ்டம் செய்யவும் போப்புக்கு அதிகாரம் உண்டு.
இரண்டாம் திருமணத்திற்கு நெப்போலியனுக்கு அனுமதி மறுத்ததோடு அவரை மதத்திருந்தும் விலக்கிவிடுவேன் என் போப் பயம் காட்டியதால், பி.பி.1798ஆம் ஆண்டு போப்பின் மேலாதிக்கத்தை நெப்போயன் பிரான்ஸிருந்து அகற்றி விட்டார்.
இம்மோதன் உச்சக்கட்டத்தில்தான் எகிப்தின் மீது படையுடன் வந்தார் நெப்போலியன்.
நெப்போலியனும் இஸ்லாமும்
கெய்ரோ நகரில் முஸ்ம் மார்க்க அறிஞர்களை அழைத்து அவர்களிடம் இஸ்லாத்தைப் பற்றி அறியும் வாய்ப்பைப் பெற்றார் நெப்போலியன். ஏற்கெனவே பிரெஞ்சு மொழியில் திருக்குர்ஆன் மொழிபெயர்க்கப்பட்டு இருந்தது. இஸ்லாம் பற்றி வேறு பல நூல்களும் பிரெஞ்சு மொழியில் வெளியிடப்பட்டிருந் தன. இஸ்லாமிய மார்க்க அறிஞர்களுடன் கெய்ரோவில் அடிக்கடி உரையாடல்கள் நடத்தி இஸ்லாம் பற்றி நன்கு தெளிவா னார் நெப்போலியன்.
இஸ்லாமியக் கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்ட நெப்போலியன்
இஸ்லாமியத் திருமணம், தலாக், பலதாரமணம் போன்றவைக் குறித்தும், நடைமுறையில் இவை எவ்வாறு கையாளப்படுகின்றன என்பதையும் நெப்போலியன் தெரிந்து கொண்டபின் நிஜமான நடைமுறை வாழ்க்கைக்கு இஸ்லாமியக் கருத்துக்கள் எவ்வளவு தூரம் ஒத்துப் போகின்றன என்று மனதார மிகவும் பாராட்டியதோடு கெய்ரோவி லுள்ள இஸ்லாமிய மார்க்க அறிஞர் களிடம் இஸ்லாம் மார்க்கம் பற்றிய தம் கருத்தையும் வெளியிட்டார்.
திப்புவின் தூதர் முன்னிலையில் இஸ்லாத்தை ஏற்ற நெப்போலியன்
இஸ்லாம் ஒரு நல்ல மார்க்கம் என்று பகிரங்கமாகக் கூறியதோடு, இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் முன்னிலையில் திப்புசுல்தானின் தூதர் மீர் அகான் (எகிப்தில்) அங்கிருந்தபோதே கமாச் சொல் இஸ்லாத்தில் தம்மை இணைத் துக் கொண்டார் நெப்போலியன். இறை வனுக்கே புகழனைத்தும்.
இவ்விபரங்களை மீர்அகான் திப்பு சுல்தானிடம் தெரிவித்தபொழுது, இறை வனுக்கு நன்றி செலுத்தினார் திப்புசுல் தான். நெப்போயன் தமக்கு எழுதிய கடிதம் பறிபோனதைக்கூட மறந்து மீர் அகானிடம் இந்த விபரம் பற்றியே அதிகம் விசாரித்தாராம் திப்புசுல்தான்.
எதிர்பாராத ஏமாற்றம்
எகிப்தில் பிரெஞ்சுப் படைகள் நைல் நதியில் நடைபெற்ற போரில் எதிர்பாராத விதமாக தோல்வி முகம் காண ஆரம் பித்ததும் மாவீன் நெப்போயலின் இந்தியா வரும் எண்ணத்தைக் கைவிட்டு சிரியாவின் பக்கம் திரும்பி, பின்னர் ஐரோப்பாவுக் குத் திரும்பிவிட்டார். இந்நிகழ்வு திப்புசுல்தானுக்கு மிகப்பெரும் ஏமாற்றம் அளித்தது.
நெப்போலியன் தோல்வி
கி.பி.1810ல் நெப்போலியன் தம் இரண்டாம் திருமணத்தை முடித்தார். கி.பி.1811ல் அவருக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. பின்பு கி.பி.1815ல் வாட்டர் லூ என்னு மிடத்தில் நடைபெற்ற வரலாற்று முக்கியத் துவம் வாய்ந்த போரில் ஆங்கிலேயர் வென்றனர். மாவீரன் நெப்போயன் செயின்ட் ஹெனா தீவில் சிறை வைக்கப்பட்டார்.
இஸ்லாத்தில் நெப்போலியனின் முழு ஈடுபாடும் இறையடி சேர்தலும்
சிறையில் இருந்த காலக்கட்டத்தில் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் மாவீரன் நெப்போயன் இஸ்லாம் பற்றி ஆராய்ந்து அறிந்து எப்பொழுதும் குர்ஆனின் பிரெஞ்சு மொழிபெயர்ப்பை படித்தபடியே இருந்தாராம். அவர் தவறாமல் தொழு கையைக் கடைப்பிடித்து நோன்பும் நோற்றிருக்கிறார்.
வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி கெய்ரோவில் நெப்போயன் கமாச் சொல் இஸ்லாத்தில் இணைந்தது உண்மை என்பதும், முழுமையான முஸ்லிமாகவே அவர் இறுதிவரை வாழ்ந்தார் என்பதும் புலனாகிறது.
இறுதியாக, சிறைச்சாலையில் நெப்போலியன் தங்கியிருந்த அறையில் தொழுகை விரிப்புடன் திருக்குர்ஆன் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு ஒன்று மட்டுமே இருந்தது என்ற உண்மையை அவரது மறைவிற்குப் பின் அங்கு சென்று குறிப் பெடுத்த சிறை அதிகாரியின் அறிக்கை கூறுகிறது.
ஹிந்து பத்திரிகையில் 19.12.1982 அன்று வெளிவந்த ஒரு பெட்டிச் செய்தி விபரம்:
1932ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹைதராபாத் நகரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அன்றைய ஹைதராபாத் நிஜாமின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள காத்ஷெல் டிரேக் என்ற ஆங்கில முஸ்ம், இந்தியா வந்திருந்தார். அக்கூட்டத் தில் அவா நெப்போயன் தம் இறுதிக் காலத்தில் முழு முஸ்மாகவே வாழ்ந்தார் என்றும், நெப்போயன் வாழ்ந்த சிறை அறையில் திருக்குர்ஆனின் பிரெஞ்சு மொழி பெயர்ப்பு மட்டுமே இருந்தது என்பது பல நூல்களிலும் குறிப்பிடப் பட்டுள்ளது என்றும் அந்த ஆதார நூல்களை மேற்கோள் காட்டியும் விளக் கம் தந்துள்ளார். முக்கியமாக கி.பி.1815லில் நெப்போயனை செயின்ட் ஹெனா தீவுக்கு அழைத்துச் சென்ற அட்மிரல் காக்பர்ன் என்ற ஆங்கிலத் தளபதியின் செயலாளர் ஆர். குளோவர் என்பவர் எழுதி வெளியிட்ட டைரியில் இதுபற்றிய உண்மைகள் புலனாகின்றன.
இறுதியாக மாவீரன் திப்புசுல்தான், கி.பி.1799 மே மாதம் 4ஆம் தேதி தம் இன்னுயிர் நீத்ததுபோல் உள்ளத்தால், திடத்தால் ஆங்கிலேயரை விரட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தால் ஒன்று பட்ட மாவீரன் நெப்போயனும் கி.பி. 1821ல் மே மாதம் 5ஆம் தேதி இறையடி எய்தினார் உண்மை முஸ்லிமாக!
(எம்।கே। ஜமால் முஹம்மது அவர்களின் தியாகச் சுடர் திப்பு சுல்தான் நூலிருந்து...)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக