அஸ்ஸலாமு அலைக்கும்!
சகோதரர்களே!
சமீப காலமாக "அல்லாஹ்விற்கு உருவம் உண்டு"என்று பி.ஜே. கூறி வருகிறார். அவர், முன் வைக்கும் வாதங்களுக்கு வலு சேர்க்கும் வகையில் பல உதாரணங்களை சொல்கிறார். ஆழ்ந்து சிந்தித்து பார்த்தால் அவர் சொன்னது உண்மை என்று தான் தோன்றுகிறது.
--- (விசுவாசிகளே! போர் புரிந்த) அதுசமயம் நீங்கள்அவர்களை வெட்டிவிடவில்லை; எனினும், அல்லாஹ்தான் அவர்களை வெட்டினான். (நபியே! விரோதிகளின் மீது) நீர் (மண்ணை) எறிந்தபோது (அதனை) நீர் எறியவில்லை; அல்லாஹ்தான் (அதனை) எறிந்தான்.விசுவாசிகளை அழகான முறையில் சோதிப்பதற்காகவே (இவ்வாறு செய்தான்) நிச்சயமாக அல்லாஹ் செவியுறுவோனும், மிக்க அறிந்தோனுமாயிருக்கின்றான். (குர்-ஆன் 8:17)
- (நபியே!) நிச்சயமாக எவர்கள் (தம்முடைய உடல், பொருள், ஆவியை தத்தம் செய்து உமக்கு உதவி புரிவதாக உம்மிடம் கை கொடுத்து) உம்மிடம் வாக்குறுதி செய்கின்றார்களோ அவர்கள் அல்லாஹ்விடமே வாக்குறுதி செய்கின்றனர். அவர்கள் கை மீது (உம்முடைய கையன்று;) அல்லாஹ்வுடைய கைதான் இருக்கின்றது. ஆகவே எவன் (அவ்வாக்குறுதியை) முறித்து விடுகின்றனரோ, அவன் தனக்குக் கேடாகவே (அதனை) முறிக்கின்றான். எவன் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியைப் பூர்த்தியாக்கி வைக்கின்றானோ, அவனுக்கு அல்லாஹ் மகத்தான கூலியை அதிசீக்கிரத்தில் (நிச்சயமாக) கொடுப்பான். (குர்-ஆன் 48:10)
கேள்வி - பதில்:
கேள்வி: போர் புரிந்த சமயம் எதிரிகளை வெட்டியது யார்?
பதில்: அல்லாஹ்
கேள்வி: விரோதிகளின் மீது மண்ணை எறிந்தது யார்?
பதில்: அல்லாஹ்
கேள்வி: சகாபாக்கள் யாரிடம் வாக்குறுதி செய்தார்கள்?
பதில்: அல்லாஹ்விடம்
கேள்வி: சகாபாக்களின் கை மீது யாருடைய கை இருந்தது?
பதில்: அல்லாஹ்வின் கை
இதுபோன்று ரசூல் (ஸல்) அவர்கள் செய்ததை தான் செய்ததாகவும், ரசூல் (ஸல்) அவர்களிடம் வாக்குறுதி செய்தவர்கள் தன்னிடம் செய்ததாகவும், அவர்கள் கை மீது தன்னுடைய கை இருப்பதாகவும் அல்லாஹ் தன்னுடைய திருமறையிலே தெளிவாக சொல்லிக் காட்டுகிறான். இதையெல்லாம் அல்லாஹ் செய்தான் என்றால் ரசூல் (ஸல்) அவர்கள் எங்கே சென்றார்கள்? இல்லை, இல்லை அதனை செய்தது கண்மணி நாயகம் தான் என்று வாதிட்டால் அல்லாஹ் சொன்னது பொய்யா? குர்-ஆனுடைய வசனத்திற்கு வெளிப்படையான கருத்தை தவிர வேறு மறைமுக கருத்து எதுவும் இல்லை என்று பி.ஜே. சொல்லியது நினைவிருக்கலாம். இதையெல்லாம் ஆய்வு செய்து பார்க்கும்போது "அல்லாஹ்விற்கு உருவம் உண்டு" என்று பி.ஜே. ஆணி அடிப்பது போல அடித்து சொல்வது சரிதான் என தெரிகிறது. இவ்வளவு தூரம் ஆராய்ச்சி செய்து அல்லாஹ்விற்கு உருவம் உண்டு என்று சொன்ன பி.ஜேக்கு அந்த உருவம் எப்படி இருக்கும்; அந்த உருவம் யாராக இருக்கும் என்பது கூடவா தெரியாமல் இருந்திருக்கும். அப்படி தெரியவில்லை என்று சொன்னால் அவர் செய்த ஆய்வும் பொய், அல்லாஹ் சொன்னதும் பொய் என்பதை அவரே ஒத்துக்கொள்கிறார் என்றுதானே அர்த்தம். தெரிந்திருந்தும் அதை சொல்லாமல் மறைத்துவிட்டார் என்பது தான் உண்மை.
மேலே சொல்லப்பட்ட இறை வசனங்களை கவனித்தால் ஒரு உண்மை விளங்கும். அதாவது அல்லாஹ், தன்னை ரசூல் (ஸல்) அவர்களோடு தான் ஒவ்வொரு முறையும் ஒப்பிட்டு சொல்லிக் காட்டுகிறான். அப்படி ஒப்பிட்டு சொல்லிக் கொள்வதை அவன் விருகிபுகிறான். அப்படி அல்லாஹ், தன்னோடு ஒப்பிட்டு சொல்லிக் கொள்ள தகுதியான ரசூல் (ஸல்) அவர்கள்தான் "அல்லாஹ்வின் உருவம்"என்று சொல்ல வந்த பி.ஜே., வெளிப்படையாக சொல்லாமல் மறைத்து சொல்லியிருக்கிறார்; நாமெல்லாம் சிந்தித்துப் பார்த்து உண்மையை தெரிந்து கொள்வோம் என்ற நம்பிக்கையில். அவர் நம்பிக்கை வீண் போகவில்லை. வெண்ணையை கையில் கொடுத்து விட்டார்; நெய்க்கு அலைய நாம் என்ன விபரம் தெரியாதவர்களா? சிந்திக்கும் திறன் இல்லாதவர்களா? ஆக; "இரண்டும் (அல்லாஹ், முஹம்மது) ஒன்றல்ல; என்றாலும் வேறல்ல" என்றுசிந்திக்க வைத்த பி.ஜேக்கு நன்றி!
Regards
Mohamed Jaffer Sadique
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக