ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011

பாலஸ்தீனம்: ஒரு விதவைத் தாயின் வீரக்கதை!

தனது படுக்கையில் அமர்ந்து சுபையா மூசா அபு ரஹ்மே அவரது சமீபத்திய இழப்பைப் பற்றி புலம்பிக் கொண்டிருக்கிறார். இறந்து போன அவரது மகனை நினைவுபடுத்தும் விளம்பர அட்டைப்படங்கள் அவரைச் சூழ்ந்திருக்கின்றன. புத்தாண்டு தினத்தன்று அவரது சொந்த கிராமத்தில் நடந்த‌ இஸ்ரேல் தடுப்புச் சுவருக்கெதிரான ஆர்ப்பாட்டத்தில் அவரது 35 வயது மகள், ஜவஹர் இறந்து போனார். இஸ்ரேல் ராணுவம் உறுதியாக மறுத்தாலும், கண்ணீர் புகையை அளவுக்கதிகமாக சுவாசித்ததாலேயே அவர் இறந்து போனதாக ஜவஹரின் குடும்பத்தினர் உறுதிபட‌க் கூறுகிறார்கள்.

“எனக்கு எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?” என்கிறார் வலுவற்ற குரலில் அபு ரஹ்மே. தலையில் ஒரு வெண்ணிறத் துணியை சுற்றியிருக்கிறார். கண்களில் வெறுமை படர்ந்திருக்கிறது.அவரது குடும்பத்திற்கு இழைக்கப்பட்டிருப்பதை,அவரது குடும்பத்தின் மீது தொடர்ந்து நிகழ்ந்துவரும் பயங்கரங்களை அவரால் முழுமையாகக் கிரகித்துக்கொள்ள முடியவில்லை. மேற்குக்கரை ஆக்கிரமிப்புக்கு எதிரான பாலஸ்தீன போராட்டத்திற்கான உருவகமாக அமைந்து விட்டது.

கடந்த ஆண்டு நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது அபு ரஹ்மேவின் மகன் பாசாம்,கேஸ் குண்டுவெடிப்பில் இறந்து போனார். அவர் “வன்முறையற்ற எதிர்ப்பு” ஒன்றை ஒருங்கமைத்திருந்த கமிட்டிகளில் ஒரு துடிப்புமிக்க உறுப்பினராக இருந்தார். எஞ்சியிருப்பது அவரது அடுத்த மகன், அஷ்ரப். ஒரு இஸ்ரேல் ராணுவ வீரன் இரும்புத் தோட்டாக்களால் சுட்டதால் அவரும் காலில் காய‌த்துடன் தப்பியிருக்கிறார்.

இப்போது, ஜவஹர்.

“அவள் மிகவும் அருமையான பெண். இங்கிருக்கும் அனைவருக்கும் பிடித்தமானவள். இந்த தடுப்புச் சுவர் எங்கள் நிலங்களைப் பறித்துக் கொண்டது. இப்போது,எனது பிள்ளைகளும் என்னை விட்டு போய் விட்டனர்.என்னிடம் இப்போது எதுவும் மீதமில்லை.” என்கிறார் 55 வயதான விதவை, அபு ரஹ்மே.

“ஆனால், எங்கள் பிரியத்துக்குரியவரை இழக்கும் ஒவ்வொரு தடவையும் ஆக்கிரமிப்புக்கெதிராக போரிடும் பலத்தைத்தான் பெறுகிறோம்.” மேலும் கூறுகிறார் “இது எங்கள் நிலம். அதற்காக எதிர்த்துப் போராடுவோம். அந்தச் சுவரை தகர்த்தெறியும் வரை ஓயமாட்டோம்”.

ஜவஹருக்கு துக்கம் கொண்டாட வீட்டிற்கு வெளியே தாழ்வாரத்தில்,ஆண்கள் கூடியிருக்கிறார்கள்.பேரிச்சம் பழத்தை சாப்பிடுகிறார்கள். மசாலா காபியை அருந்துகிறார்கள்.தொடர்ந்து புகை பிடிக்கிறார்கள் – ஆனால், யாரும் பேசவில்லை. அவ‌ர்க‌ளது ம‌ர‌புப்ப‌டி பெண்க‌ள் த‌னிய‌றையில் அம‌ர்ந்திருக்கிறார்க‌ள். அருகிலிருந்த‌ ர‌ம‌ல்லாவைச் சேர்ந்த‌ இரு மாற்றுத்திற‌னாளிக‌ளுக்கு உத‌வி செய்துக கொண்டிருந்த‌ இர‌க்கம் வாய்ந்த‌‌ ஒரு இள‌ம்பெண்ணுக்கு த‌ங்க‌ள் அனுதாபத்தைத் தெரிவிக்க‌ அர‌சு அதிகாரிக‌ள்,ந‌ண்ப‌ர்க‌ள்,உற‌வின‌ர்க‌ள் ம‌ற்றும் ப‌ள்ளிச்சிறார்க‌ள் என்று அனைவ‌ரும் வந்து செல்கிறார்க‌ள்.

இஸ்ரேலிலிருந்து பால‌ஸ்தீனப் ப‌குதிக‌ளைப் பிரிக்கும் த‌டுப்புச் சுவ‌ர் அபு ர‌ஹ்மேவின் வீட்டிற்கு வெளிப்புறத்திலிருந்து பார்த்தால் தெளிவாக‌த் தெரிகின்ற‌து. இந்த‌ த‌டுப்புச் சுவ‌ர் எழுப்ப‌ப்ப‌டுவ‌த‌‌ற்கெதிராக‌ அக்க‌ம்ப‌க்க‌த்து வீட்டாருட‌ன் சேர்ந்து அவர்கள் ஐந்து ஆண்டுக‌ளுக்கும் மேலாக‌ போராட்ட‌த்தில் ஈடுப‌ட்டு வ‌ருகின்ற‌ன‌ர். ஆனால், இந்த‌ப் போராட்டம் அந்த‌ கிராம‌த்திலேயே வேறெந்த‌க் குடும்ப‌த்தையும் விட‌ அதிக‌மான‌ இழ‌ப்பை இக்குடும்பத்திற்கு கொண்டு வ‌ந்திருக்கிற‌து. மேலும், க‌ட‌ந்த‌ வார‌த்தில் ஜ‌வ‌ஹ‌ரின் ம‌ர‌ணம் அவ‌ர்கள் குடும்பத்தை மீண்டும் த‌லைப்புச் செய்திக‌ளுக்குக் கொண்டு வ‌ந்திருக்கிற‌து.

பில்லிங்கில் ந‌ட‌ந்த‌ ஆர்ப்பாட்ட‌த்தின்போது இஸ்ரேல் ராணுவ‌ வீர‌ர்க‌ள் போட்ட‌ கண்ணீர்ப் புகை குண்டுக‌ளை சுவாசித்த‌தாலேயே அவ‌ர் உயிரிழ‌ந்தார் என்று அவ‌ர‌து குடும்ப‌த்தின‌ர் உறுதியாக‌ச் சொல்கிறார்க‌ள். ராணுவ‌ம் ம‌ருத்துவ‌ம‌னை அறிக்கைக‌ள் உட்பட, பால‌ஸ்தீன‌ அறிக்கைக‌ளின் ந‌ம்ப‌க‌த்த‌ன்மையை இது கேள்விக்குள்ளாக்குகின்ற‌து. ராணுவ‌ விசார‌ணை இன்னும் முடிவுக்கு வ‌ர‌வில்லையென்றாலும், “இது போன்ற‌ ஒரு சில‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் உண்மையென்று ஏற்றுக்கொண்டாலும், ஜவஹரின் ம‌ர‌ண‌ம் க‌ட‌ந்த‌ வெள்ளிக்கிழ‌மை ந‌ட‌ந்த‌ ஆர்ப்பாட்ட‌த்தோடு முற்றிலும் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌டாத‌ ஒன்று” என்றும் கூறுகிற‌து.

ஆனால், முற்றிலும் சோர்வடைந்த நிலையிலிருக்கும் சுபையா முசா அபு ரஹ்மேவுக்கு எந்த‌ ச‌ந்தேக‌மும் இல்லை. “ராணுவ‌ வீர‌ர்க‌ள் புகைக் குண்டுக‌ளை போட ஆர‌ம்பித்த‌போது, மோத‌ல் ந‌ட‌ந்த‌ ப‌குதிக்கு ச‌ற்றுத்த‌ள்ளி நான் என் ம‌க‌ளுட‌ன் இருந்தேன்.” என்று நினைவு கூர்கிறார்.”காற்றில் வ‌ந்த‌ புகையினால் நாங்க‌ள் அவ‌திக்குள்ளானோம். இத‌ற்குமேல் என்னால் தாங்க‌ முடிய‌வில்லை என்று எனது ம‌க‌ள் சொன்ன‌தோடு வாந்தியெடுக்க‌வும் ஆர‌ம்பித்தாள்”. ச‌மீர் இப்ராஹிம், 34 வ‌ய‌தான‌ ஜ‌வ‌ஹ‌ரின் ம‌ற்றொரு ச‌கோத‌ர‌ர் ஆம்புல‌ன்சை அழைத்த‌தையும், ம‌ருத்துவ‌மனைக்குச் செல்லும் வ‌ழியிலேயே த‌ன‌து ச‌கோத‌ரி மரணமடைந்த‌‌தையும் நினைவு கூர்கிறார்.

“அவ‌ள் மிக‌வும் மோசமான‌ நிலையில் இருந்தாள்” என்கிறார். “அவ‌ர்க‌ள் அவ‌ளை ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றார்க‌ள்.அவ‌ள் வாயிலிருந்து நுரைநுரையாக‌ வாந்தியெடுத்துக் கொண்டிருந்தாள். நான்கைந்து நிமிட‌ங்க‌ளில் ஒரு ஆம்புல‌ன்சு வ‌ந்த‌து. புகைமூட்டம் காரணமாக‌ அவ‌ளுக்கு போதுமான ஆக்சிஜ‌ன் கிடைக்க‌வில்லை என்று ம‌ருத்துவ‌ர்க‌ள் கூறினார்கள்”

ச‌மீர், த‌டுப்புச்சுவ‌ருக்கெதிராக‌ ந‌டைபெறும் ஆர்ப்பாட்ட‌த்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழ‌மையும் க‌ல‌ந்துகொள்கிறார். தொடர்ச்சியாக பாலஸ்தீனிய‌ர்க‌ள் க‌ற்க‌ளை வீசுவ‌து,ராணுவ‌ம் க‌ண்ணீர் புகைக்குண்டுக‌ளை வீசுவ‌து என போராட்ட‌த்தில் மோத‌ல்க‌ள் நிக‌ழ்வ‌து சாதார‌ணமான‌துதான். அருகாமையில் உள்ள‌ கிராம‌ங்களுக்குக் கூட சில நொடிக‌ளில் அட‌ர்புகை ப‌ரவிவிடுகிற‌து. க‌ண்ணீர் புகையினால் க‌ண்க‌ளில் எரிச்ச‌ல் ஏற்ப‌டுவ‌தும், வீதிக‌ளில் ம‌க்க‌ள் வாந்தியெடுப்ப‌தும் சாதார‌ண‌மான‌துதான். ஆயினும் ச‌மீர், அவ‌ர‌து குடும்பம் ம‌ற்றும் ந‌ண்ப‌ர்கள் இதற்கு ப‌ணிய‌ ம‌றுத்து தங்களது எதிர்ப்பைத் தொடர்ந்து தெரிவிக்கிறார்க‌ள்.

“நாங்க‌ள் எங்க‌ள் பாதிப்பை அவர்களுக்கு காண்பிக்க‌ச் செல்கிறோம்” என்கிறார்.” எங்க‌ளது நில‌ங்களை அவ‌ர்கள் வ‌ன்கொடுமைக்குள்ளாக்குகின்றார்க‌ள் என்ப‌தை முடிவு வ‌ரை சொல்வ‌த‌ற்கான‌ எங்களுடைய‌ வ‌ழி இது.” அவ‌ர‌து குடும்ப‌ம் க‌ட‌ந்து வ‌ந்த துயரம் மிகுந்த பாதையினால் அவ‌ர்க‌ள் சிற‌ப்பான‌ இட‌த்தைப் பெற்ற‌வ‌ர்க‌ளாகிறார்க‌ளா என்ற‌ கேள்விக்கு இல்லையென்று ப‌தில‌ளிக்கிறார். “நாங்க‌ளும் ம‌ற்ற‌வ‌ர்க‌ளைப் போன்றவர்களே. க‌ட‌வுள் எங்க‌ளுக்கு வைக்கும் சோத‌னைதான் இது.”

பில்லிங், ஒரு விவ‌சாய‌ கிராம‌ம். ஆனால், அந்த‌ த‌டுப்புச்சுவ‌ரினால் 50 ச‌த‌வீத‌ம் நில‌த்தை பெறுவ‌திலிருந்து இக்கிராம‌த்த‌வ‌ர்க‌ள் த‌டுக்க‌ப்ப‌ட்டிருக்கிறார்க‌ள். இது, அவ‌ர்க‌ளுக்காக‌ வாதாடும் மைக்கேல் ஸ்ஃபார்ட் எனும் வ‌க்கீலின் கூற்று.பாதிக்க‌ப்ப‌ட்ட‌ அபு ர‌ஹ்மே குடும்ப‌த்தாரும் நில‌மிழ‌ந்த‌வ‌ர்க‌ளுள் அட‌க்க‌ம்.

தினசரி குறிப்பிட்ட நேரம் ராணுவம் திற‌ந்துவைத்துள்ள ஒரு வாயிலை அவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் தோட்ட‌த்துக்குச் செல்ல உப‌யோகித்துக் கொள்ள‌ முடியும். ஆனால், மைக்கேல் ஸ்பார்டு சொல்வது போல‌ ராணுவ‌ம் எப்போதும் இசைந்து கொடுக்காது.

இர‌ண்டு ஆண்டுக‌ளுக்கு முன்பு துப்பாக்கிச்சூட்டில் அடிப‌ட்ட அஷ்ர‌ப், க‌ழுத்தில் சிவ‌ப்பு வெள்ளை பாலஸ்தீனிய அங்கியை அணிந்த‌ப‌டி த‌ன‌து தாயாரையும் ச‌மீரையும் கூர்ந்து க‌வனிக்கிறார். இஸ்ரேலை சேர்ந்த மனித உரிமை அமைப்பொன்று அவர் சுட‌ப்ப‌ட்டதை ப‌ட‌மாக்கிய‌து.அந்தப் ப‌ட‌ங்க‌ள் உல‌கையே வ‌ல‌ம் வ‌ந்த‌ன‌. அவ‌ர் த‌ன்னை அதிர்ஷ்ட‌ம் வாய்ந்த‌வ‌ராக‌க் க‌ருதிக்கொள்கிறார். சிறு காய‌ங்க‌ளுட‌ன் த‌ப்பிய‌த‌ற்காக‌ ம‌ட்டும‌ல்ல, அவ‌ரை சுடுவ‌த‌ற்கு உத்த‌ர‌வ‌ளித்த‌ உய‌ர‌திகாரி த‌ற்போது ராணுவ‌ நீதிம‌ன்ற‌த்தால் த‌ண்டிக்க‌ப்ப‌ட்டுள்ளதாலும். ஆனால், க‌ட‌ந்த‌ வார‌ம் ம‌கிழ்ச்சிக்குரிய ஒன்றாக‌ இல்லை. “எங்க‌ள் குடும்ப‌ம் சித‌ற‌டிக்க‌ப்ப‌ட்டு விட்ட‌து” என்ற‌தோடு “எங்க‌ள் குடும்ப‌த்தில் இந்த‌ச் சோக‌ம் நிர‌ந்த‌ர‌மாக தங்கியிருக்கும்.” என்றார்.
நன்றி: கார்டியன்,
தமிழாக்கம்: சந்தனமுல்லை

காணாமல் போனவைகள்

காணாமல் போனவைகள்

இந்த நவீன யுகத்தில் பல பழக்க வழக்கங்கள்,பொருட்கள் மறைந்து காண்பதற்கு அரிதாகி விட்டது.பெரியம்மா,பெரியப்பா,சித்தி,சித்தப்பா,மாமா,மாமி,என்ற முறைகள் எல்லாம் மறைந்து பொதுவில் ஆண்ட்டி,அங்கிள் என்று தங்களின் பாசத்தினைப்போன்று உறவு முறைகளையும் சுருக்கிக்கொள்கின்றனர்.

சகோதரி மாதேவி(சின்னு ரேஸ்ரி ) அரிதாகிப்போன பொருட்கள் ,சாதனங்கள் என்று அந்தக்காலத்தில் புழக்கத்தில் இருந்தபொருட்களை அழகாக படம் எடுத்து போட்டு கருத்தை கவர்ந்து இருந்தார்.நான் சிறிய வயதில் கண்டு,அனுபவித்து களித்த பொருட்களை இப்பொழுது காண்பது அரிதாகிவிட்டது.அப்படி அரிதாகிப்போன பொருட்கள்,ஜீவன்களை கூகுளில் தேடிப்பிடித்து உங்கள் முன் படைக்கிறேன்.https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiyl8L7wDoYCShBd4n3pW1I76v3QtkHryW_tUiww9CncQity7v6jdwCxDLz4QVG7mBkl9IMfcXLzS0Fep9et3Z7SBlNtshXLATleGS3-PKDpIcYrgD-Du5bcX04RsNo3xfKQpGFwM5mQ_n9/s320/210px-Betel_leaf_betel_nuts_and_lime.jpg
வெற்றிலை தட்டு

அந்தகாலத்தில் உறவினர்,நண்பர்கள் இல்லங்களுக்கு சென்றால் உபச்சாரங்களுக்கு பிறகு இறுதியில் வரும் தட்டு.பாக்கு,வெற்றிலை,சுண்ணாம்பு,இதர வாசனைபொருட்கள் நிரப்பி வைத்திருக்கும் தாம்பூலத்தட்டு.கூடச்செல்லும் சிறார்களுக்கு அதிலேயே கண்ணாக இருக்கும்.சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது எடுத்து வாயில் அதக்கிகொள்ளும் சிறியவர்களில் கொண்டாட்டத்தை எப்படி வர்ணிப்பது?தட்டு வடிவில் மட்டுமில்லாமல் அன்னம்,மயில் சேவல் பூ வடிவங்களில் கூட இருக்கும்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEguQd4TBmJrZZmwPPSqmZSaBnlwo-jdsnQAUnwRg5dGftZKkZ_54yfe4KL8bjroBorHJbdXe0xl5k6-SXZ2vqwZ_5hqipKl5E_mp9qeWxsbu15kAdbrRVPu_t-hQIM23wKPcqLNRzZTLWz3/s320/boom+boom+maadu.jpg
பூம் பூம் மாடு

மாடுகளை கன்னா பின்னா வென்று துணிகளால் அலங்கரித்து உடுக்கை ஒலியுடன் வருவார் மாட்டுக்காரர்.உடுக்கையை ஒலிக்கச் செய்து கேள்வி கேட்டால மாடு தலையை தலையை ஆட்டும் .இதனை வேடிக்கைப்பார்ப்பதற்காக ஒரு கூட்டமே பின்னால் திரியும்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglcYkY5Ekt9DjVap36sn8_6eFm0OCbIJXLwrIzLc1DBjaRXsoRBmGufU3aQzpcHpOVOxGCykIXIvXM1Oucbjb6APm4eLiukCSWElt9D35bu9icmd048Vkx1mbbh5qVOk0V-brollScsqXD/s320/bullock-cart.jpgபொட்டு வண்டி

"
மாப்பிள்ளை வர்றார் மாப்பிள்ளை மாட்டு வண்டியிலே.பொண்ணு வர்றா பொண்ணு வர்றா பொட்டு வண்டியிலே"என்று ஒரு சினிமா பாடல் கூட உண்டு.மாட்டுவண்டியில் அழகாக வேயபட்ட கூடாரத்துக்குள் திண்டுகள் அமைத்து,அழகாய் அலங்கரித்து மாட்டின் கழுத்தில் கட்டப்பட்டு இருக்கும் சலங்கை சல் சல் என்ற ஒலியின் பின்னனியில் திண்டில் படுத்துக்கொண்டே இடமும் வலமுமாக ஆடிக்கொண்டே பயணிக்கும் சுகத்திற்கு பிசினஸ் கிளாஸ் விமானப்பயணம் கூட ஈடாகாது

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEie9PTEZbeIr6ucm4FFDfDhIa6DjzmJU5jLRRvBogMQmZvla3UaFBmns4apbRZ6pfWALkLn5NtrTIzOWxhR23jth942rctb1u3e0pp13SrkMerKK0arUz9BGV_Dv026-u1pkctEes7eDrMI/s320/goli+soda.jpgகோலி சோடா

பெப்சி கோக் என்று வெளிநாட்டு சமாச்சாரங்கள் வந்த பின் காணாமல் போன வஸ்து.அப்பொழுதிருந்தே இந்த கோலியைஎப்படி பாட்டிலுக்குள் அடைக்கிறார்கள் என்பது புரியாத புதிர்.கோலிசோடா உடைப்பானை வைத்து கோலியில் அழுத்தினால் புஸ் என்று வரும் சப்தத்திற்கு பயமாக இருக்கும்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiEMR_V8tpo2PkaMFN3odeAE-zojrxHwoRSCjI_1QM1n6M1jcEqzOpEi7-c4lub0tSkfj9ft4T-7TGHabcMVKLWXu1p0tEXt72Lx3OPvBduR5wUR4ESPp27Agmf67qbZOSXDpsi5llV2_aM/s320/koozi.jpg
தெருக்கோழி

க்ஹும்..க்ஹும் என்று குரல் கொடுத்துக்கொண்டு தெருவில் குடு குடு வென்று ஓடும் கோழி.கோழியின் உரிமையாளர்கள்அந்தி சாயும் நேரம் தங்கள் கோழிகளை அடைப்பதற்காக தேடி பிடிப்பார்கள்.என்னுடைய போந்தா கோழியை பார்த்தியா?செவலைக்கோழியைப்பார்த்தியா?நாட்டுககோழியைப் பார்த்தியா? என்று தேடும் குரல்களாகவே ஒலிக்கும்
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgCbIYyEFznOE4KDSqf_gNb3HOikravsyq_LV6nV4n37ppRpqEhGkEpJ-FHsyF3YUVPNmwJNHw5MuBNVoY9Mf1uin18agD1YUAfLJELYre_j-DgHuzONINnNciJ2w9ORq1LRyngwgw2VQL-/s320/nungu+vandi.jpg
நுங்கு வண்டி

உபயோகித்த நுங்கு கோந்தைகளில் கம்பை வைத்து வண்டியாக செய்து தெருவில் இழுத்து செல்வார்கள்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgAnBJ7HCq5j6HJ8yGYk7bLzC8HhTT2c4HD6FzXmt01EfHBwff5d_ayLmPsat5xUAHWTI-wgf0WQfLsIDUezT_j8dWoaN9BRWKGl2I2GAqK7m7L7LyS8E4ZCByp8BSG1lP1opMPIIHd_8pY/s320/Nut+seller.JPG
கடலைக்காரர்

"
கல்லே கல்லே வற்த்த கல்லே கல்லே" கூவும் கடலைக்காரர்கள் இப்பொழுது எங்கே போனார்கள்?எப்படித்தான் பக்குவமாகவறுத்தாலும் அந்த டேஸ்ட் வரவே செய்யாது.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfm147SFnK-P1UKi3uUIqNLUozDCOBBXeg5LngsIwLDwYE74Ch__IZG08e97gpIBR5y2Nsw4C2qgbVELXAKLDsNvZKZpCWXm4nKavBVdIFjVE9BQYE0vp3Y2-nJgE6lzWEaQbn7PxE3FJ8/s320/Pallanguli.jpg
பல்லாங்குழி

14
குழிகள் அமைந்த அந்தகால இண்டோர் கேம்.சோழிகளை போட்டு விளையாடுவார்கள்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi5eUvDugfV08kRYaRnqVVUhac7T5o1ifODuMz0UGivCrlhzR5jFSEGUZ1tfLjaC3biRfveXVeIIRFckEx_p0aI592RBnOT3jhOMusRhTMpO9evTjULD6gAUyoi8BREtog74JsDwn_SS55Z/s320/pattu+puusi.jpgபட்டுப்பூச்சி
மழைகாலங்களில் வரும் ஒரு அழகான பூச்சி.அழகிய சிகப்பு நிறத்தில் சிலந்தி வடிவில் பட்டுப்போன்ற மெனமையுடன்கரங்களில் குடு குடு என்று ஓடும் பொழுது மயிற்கால்களெல்லாம் சிலிர்த்துப்போகும்.இந்த பூச்சிகளை சேகரித்து தீப்பெட்டிகளில் வீடு அமைத்து மகிழ்வார்கள்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgTLV68qNxiykncoIdKlCqmxQeTF4sBI8Upc09QPI7FQujFxCY5_d-A3ri19SqQle4uu4RY7xqPK8Xiwwgamik-dSepbekM9T5TI-Dt69Epc9Jvc_Ti7H3HO276gaThIAUZk_CPwvI9EfJa/s320/school+bell.jpgஸ்கூல் பெல்

எப்போதடா நாண்கு மணியாகும் என்று காத்திருந்து பல சிறார் உள்ளங்களை துடிப்புடன் எதிபார்க்க வைக்கும்சஞ்சீவி.காண்டா மணி போன்று பெரிய மணியை வைத்து கைகளால்,அல்லது கயிற்றினால் ஆட்டுவார்கள்.சில பள்ளிகளில் பெரிய இரும்பு தகட்டை தொங்க விட்டு சுத்தியலால் அடிப்பார்கள்.பள்ளி பியூன் அடித்து முடியும் வரை காத்திருந்து சுத்தியலை கெஞ்சி கேட்டு வாங்கி ஓங்கி ஒரு அடி கொடுத்து வரும் ஒலியில் பூரித்து நிற்பார்கள் மாணவர்கள்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgS7ubmI3Chrbbr8AzEmIYZyZkce2J4OPKw2A8KCHRhIYDUCUNHBWYefDKFV1zQksMxsxJSkRQiyb-5eVvdTKYPuXJXe0HplStTmHsOcu-Q76cGltQSjb4chLVYkvk-bELy7wbOLI-jlvDW/s320/%25E0%25AE%2585%25E0%25AE%25AE%25E0%25AF%258D%25E0%25AE%25AE%25E0%25AE%25BF.jpgஅம்மி கொத்துபவர்

அம்மி கொத்தலையோ அம்மி என்று தெருவில் கூவார்கள்.அரைத்து அரைத்து தேய்ந்து போன அம்மியை உளியை வைத்து கொத்தினால் நன்றாக அரைபடும் என்று பெரியவர்கள் கூறுவார்கள்.அம்மியில் தாமரைப்பூ,சூரியன்,ரோஜாப்பூ சூரியகாந்தி போன்ற வடிவில் நம் விருப்பத்துக்கேற்ப கலைநயத்துடன் அம்மி கொத்தும் அழகே தனிதான்.இப்பொழுது அம்மி கொத்துபவர் மட்டுமல்ல அம்மியுமே காணாமல் போய் விட்டது.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhsHKgRx-1UHPtqzVZC1JcJ-tzJnEirNWHO1FQRn-KqGqqWHnWEcklgDcvPpPMjjgzu2kH5LRpjw9lAOFIbQrFMUXGkGXWz6TsZoz_hyphenhyphenhcacbVDn0ZY8bxSUTpMupAO17KS-D2nhBxv9JPf/s320/%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%259A%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AE%25BF+%25E0%25AE%2590%25E0%25AE%25B8%25E0%25AF%258D.JPG
ஐஸ் வண்டி

சைக்கிள் கேரியரில் சதுர வடிவ மரப்பெட்டியை கட்டி வைத்துக்கொண்டு ஆரஞ்ச் கலர் குச்சி ஐஸை ஆரஞ்சு ஐஸ்என்றும்,ஊதா நிற குச்சி ஐஸை திராட்சை ஐஸ் என்றும்,வெள்ளை நிற குச்சி ஐசை சேமியா ஐஸ் என்று நாமகரணம் வைத்து விற்பார்கள்.ஐஸை சாப்பிட்டு விட்டு நாக்கை நீட்டி கலர் நன்றாக ஏறி இருக்கின்றதா என்று சிறுவர்கள் பார்த்துக்கொள்வதே அழகுதான்.

_1_~1.PNG
குடுகுடுப்பைக்காரர்

நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது என்று கூவிக்கொண்டே வருபவர்.இவரைக்கண்டால் சிறுவர்களுக்கு கிலி.மை போட்டு மயக்கம் கொடுத்து சுடுகாட்டுக்கு அழைத்து சென்று விடுவார்கள் என்று பெரியவர்கள் எச்சரித்ததின் விளைவு.குடு குடுப்பை ஓசையை அநேகமாக ஒளிந்திருந்தே கேட்பார்கள்.

_1_~1.JPG
டூரிங் டாக்கீஸ்

டெண்டு கொட்டகை,சினிமா கொட்டகை என்று அழைக்கப்படும்.அநேகமாக ஆஸ்பெடாஸ் ஷீட்களை கூரையாககொண்டது.தரை டிக்கட் என்பது மணலில் அமர்ந்து படம் பார்ப்பது.இருப்பதிலேயே ஒசத்தியான டிக்கட் பால்கனி,திரைக்கு முன்பாக சிகப்பு நிற பெயிண்ட் பூசப்பட்ட வாளிகளில் மணலை நிரப்பி இருப்பார்கள்.தீப்பிடித்தால் மணலை வீசி தீயைஅணைப்பதற்காகவாம்.தியேட்டருக்குள்ளேயே முறுக்கு,வடை,பூரி போன்ற தின்பண்டங்களை பாடல் காட்சிகளின் போது தட்டில் வைத்து கூவி கூவி விற்பார்கள்.திரையில் எம் ஜி ஆர் தொட்டால பூ மலரும் என்று ஆடிக்கொண்டே பாடிக்கொண்டு இருப்பார்.அலுமினிய தட்டுகளில் பண்டங்களை வைத்துக்கொண்டு வடே,முருக்கூகூ,பூரீஈஈஈ கூவலும் கூடவே வரும்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhiVKm-qkZR2topJ-0ji6CG3KJC61AFbH5MQ8OgGeUdq38AAsCRUw8jT5M-EcXGsBRDfH5YPFFJeVhd2SOMaHmeViXQzmOg46tqipC7yCZiXhHdo6j1oE74Npdqctc9W5WFfrthMbiCDFDR/s320/%25E0%25AE%25AA%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AF%2588%25E0%25AE%259A%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AF%258B%25E0%25AE%25B1%25E0%25AF%2581.jpgபட்டை சோறு

தென்னந்தோப்புகளுக்கு,தூரத்து ீவுகளுக்கு பிக்னிக் செல்லுவார்கள்.சாப்பிடுவதற்கு தட்டோ,டிஸ்போசபிள் தட்டோஇருக்காது.பனை ஓலையில் அழகாக செய்யப்பட்ட தொன்னையில் சூடான சாதத்தின் மேல் களறிக்கறியும்,தாளிச்சாவும் பச்சை ஓலை மனத்துடன் கூடிய பட்டை சாப்பாடு..ஆஹா..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqr5u9udi-f8_Xg2WYk92NgGwCPuPHpGlSpH4Df5VoNQnWKegLT2ezzIgrTnd14PCg-2YdsQO5Jz37PUDCav4rGb7ACbgSQAEzcqv4vwFJgYf3sObUkN2-uJnLcxW8c9pHlB47pvO3v3nZ/s320/%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25AE%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%259F%25E0%25AE%25AE%25E0%25AF%258D.JPG
பாம்படம்

அந்த காலத்து மாற்றுமத பாட்டிகள் காதில் அணிந்து இருந்த ஒரு பயங்கரமான ஐட்டம்.காது ஓட்டையை பார்த்தாலேகிலியாக இருக்கும்.பாம்படம் தொங்க அம்மியில் உட்கார்ந்து மசாலா அரைக்கும் பொழுது பாம்படங்கள் ஆடும் ஆட்டம் இருக்கிறதே சொல்லி மாளாது.அதை ரசிக்கவென்றே ஒரு சிறார் கூட்டம் நிற்கும்.

222.jpg

பொம்மலாட்டம்

திருவிழா,பெருநாள் திடல்,மற்றும் தர்ஹாக்களில் நடக்கும் விழாக்கள் போன்றவற்றில் இந்த பொம்மலாட்டாக்காரர்கள் கண்டிப்பாக ஆஜர் ஆகிவிடுவார்கள்.பொம்மைகள் நடனத்தை கண் கொட்டாமல் உட்கார்ந்து ரசிப்பது மட்டுமல்லாமல் ஆட்டம் முடிந்ததும் மெதுவாக திரைக்கு அருகில் போய் எப்படி இப்படி பொம்மைகள் இந்த ஆட்டம் போடுகின்றது என்று ஆராயும் நிமித்தமாக அங்கும் இங்கும் சுற்றித்திரிந்ததை இப்பொழுது நினைத்தாலும் சிரிப்பு வரும்.

333
மிக்சர் வண்டி

இரவானால் டொடய்ங்..டொடய்ங் என்று மணி சப்தம் கேட்டாலே மிக்சர் வண்டிக்காரர் வந்து விட்டார் என்று அர்த்தம்.ஓமப்பொடி,காராபூந்தி,றுத்த கடலைவகைகள்,சிப்ஸ்,காராச்சேவ்,இனிப்புசேவ் ,ரிப்பன் பகோடா,பகோடா,வேர்க்கடலைமுறுக்கு என்று அடுக்கிக்கொண்டு கலர் கலர் கண்ணாடி போட்டு அடைத்த தள்ளுவண்டியில் பெட்ரோமாக்ஸ் விளக்கு வெளிச்சத்தில் விற்பனை செய்யப்படும் வணடியை சுற்றி சிறுவர் பட்டாளம் மட்டுமின்றி பெரியவர்களும் வாடிக்கையாளர்கள்.பெட்ரோமாக்ஸ் சூட்டில் பட்சணங்கள் சூடாக அப்பொழுது செய்த பட்சணங்கள் போல் இருக்கும்.

44
ஜவ்வு மிட்டாய்

மூங்கில் களியின் உச்சியில் ஒரு பொம்மையைக்கட்டிக்கொண்டு அடியில் தொங்கும் கயிற்றை பிடித்து இழுத்தால் பொம்மையின் இருகரங்களிலும் இணைத்து இருக்கும் சலங்கை ஜல் ஜல் என்று ஒலி எழுப்பினாலே போதும்.வாண்டுகள் சிட்டாய் பறந்து வீதிக்கு வந்து வந்து விடுவார்கள் சில்லரைகாசுகளுடன்.பொம்மைக்கு அடியில் சுற்றப்பட்ட ஜவ்வுமிட்டாயை சுற்றிலும் பிளாஸ்டிக் கவர் போட்டு ஈ மொய்க்காத வண்ணம் மூடி இருக்கும் ஜவ்வு மிட்டாயை எடுத்து வளையல்,வாட்ச்,பிரேஸ்லெட்,மோதிரம்,கொசுராக நெற்றியில் ஒரு பொட்டு,கன்னத்தில் ஒருதிருஷ்டி பொட்டு ஒட்டி விடும் மிட்டாய்க்காரரின் கை லாவகத்தையே கண் சிமிட்டாமல் பார்க்கும் சிறார்கள் ஆபரணம் அணிந்து முடிந்ததும்ஜவ்வுமிட்டாயின் இனிப்புடன் சேர்த்து கை வியர்வையின் உப்புகரிப்பையும் சாப்பிடும் சுவை மறக்கவே முடியாது

இந்தியா உருவானது எப்படி?


ஆங்கிலேயர்கள் இந்தியா வருவதற்கு முன், இப்போது இருக்கும் இந்தியா என்ற நாடு இருந்ததா என்ற கேள்விக்கு, இல்லை என்பதே எல்லோருக்கும் தெரிந்த பதில். வட இந்தியாவை எடுத்துக் கொணடால், அதன் 1800 ஆண்டு வரலாற்றில், ஒரே பகுதியாக இருந்ததாக வரலாறு கிடையாது. மவுரியர், கனிஷ்கர், குப்தர், அர்ஷவர்த்தனர், சுல்தான்கள், பல்வேறு பகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி செய்தனர். தனித்தனி நிலப் பகுதிகளில், தனித்தனி ஆட்சிகளே நடந்தன. ஒரே குடையின் கீழ் பெரும் நிலப்பகுதி கொண்டு வரப்பட்டபோது கூட, தன்னாட்சிகளை அழித்து விடவில்லை.


மராத்தியை மய்யமாகக் கொண்ட மத்திய இந்திய பகுதி, தக்காணிப் பிரதேசம் என்று அழைக்கப்படுவ தாகும். இங்கும், தனித்தனிப் பிரதேசங்களும், தனித்தனி ஆட்சிகளுமே நடந்திருக் கின்றன. மராத்தி, ஒரிசா, கன்னடம் மற்றும் ஆந்திரப் பகுதி களைக் கொண்ட இந்தத் தக்காணப் பிரதேசத்தில் சாத வாகணர் என்ற ஆந்திரர்கள், சாளுக்கி யர், ராஷ்டிரகூடர், கங்கர், கடம்பர் என்று பல் வேறு வம்சத்தினரின் ஆட்சி கள், தனித்தனிப் பகுதிகளில் நடந்தன.


13 ஆம் நூற்றாண்டில், வட இந்தியாவி லிருந்து, மொகலாயர்கள் படை எடுத்து வந்து, தக்காணத்தின் வடபகுதியைக் கைப்பற்றினர். அப்போது தக்காணத் தென்பகுதியில் விஜயநகரப் பேரரசு இருந்தது. இது, மத்திய இந்தியாவின் நிலை என்றால், தென்னிந்தியாவின் வர லாறு என்ன? சேரர், சோழர், பாண்டியர், களப்பிரர், பல்லவர் மற்றும் குறுநில மன்னர்களின் ஆட்சிகளுக்குட்பட்ட, தனித் தனிப் பிரதேசங்கள்தான் இருந்தன. இந்திய வரலாற்றில், பெரும் நிலப் பகுதியைக் கைப்பற்றி, பல தனி யாட்சிகளை ஒழித்து - ஒரு முக ஆட்சியை உருவாக்கியவர்கள் மொக லாயர்கள் தான்!


மொகலாயர்கள் பேரரசு நடந்த காலத்தில்தான் பார்ப்பனர்கள் நாடு முழுவதும், சமூக அரங்கில் தங்கள் ஆதிக்கத்தை நிலைப்படுத்திக் கொண் டார்கள். இந்தியாவில் வாழ்ந்த முஸ்லிம் அல்லாத பல்வேறு இனக் குழுக்களை, பார்ப்பனர்கள் தங்கள் மேலாதிக்கத்தின் கீழ் கொண்டு வந்ததும் இந்தக் காலத்தில் தான். முஸ்லிம் அல்லாத எல்லோரையும், மொகலாய மன்னர்கள் இந்துஎன்று கூறியதும், ‘இந்துஎன்ற பெயர் வழக்கில் வந்ததும், அக்காலத்தில் தான். சமஸ் கிருத சுலோகங்களையும், வேதங்களை யும் பார்ப்பனர்கள், தங்கள் சுயநலச் சுரண்டலுக்கு ஏற்ப திருத்தி அமைத்துக் கொண்டதும் அப்போதுதான்.

அப்போதும் தமிழ்நாடு மொக லாயர்கள் ஆட்சியின் கீழ் வரவில்லை. அத்தகைய மொகலாயப் பேரரசுகூட, அவுரங்கசீப்புக்குப் பிறகு வீழ்ந்து விட்டது. அதன் பிறகு 66 ஆண்டு களுக்கு, இந்தியத் துணைக் கண்டத்தைக் கட்டி ஆளும் ஒரே மய்ய அரசு எதுவும் உருவாகியதில்லை. ஆங்கிலேயரின் கிழக்கிந்திய வர்த்தகக் கம்பெனிதான் இங்கே குறி வைத்தது. இந்த வர்த்தகக் கம்பெனி உருவாக்கப் பட்ட நாள் 1.12.1600. இந்திய அரசர் களிடம் உரிமை வாங்கிக் கொண்டு, கடற்கரை ஓரமாக தங்களது வர்த்தகக் குடியேற்றங்களை இவர்கள் ஏற் படுத்திக் கொண்டனர். கி.பி. 1612 இல் முதன்முதலாக சூரத்திலும் தொடர்ந்து மசூலிப்பட்டிணம் (1616), அரிகர்பூர் (1633), சென்னை (1640), பம்பாய் (1669), கல்கத்தாவிலும் (1686) வர்த்தகக் குடியேற்றங்களை நிறுவினர்.


வர்த்தகம் செய்ய வந்தவர்கள், நாடு பிடிக்கும் ஆசையை விட்டு விடுவார் களா? இந்தக் கம்பெனி வெறும் கை யுடன் வந்துவிடவில்லை. தனக் காக ஒரு கடற்படையை வைத்துக் கொள்ளவும், தேவையான சட்டங்களை இயற்றிக் கொள்ளவும் பிரிட்டிஷ் ராணியிடம் உரிமை பெற்றிருந்தது. முதலில் மேற்கு வங்கத்தில் உள்ள சிட்டகாங் பகுதியைத் தாக்கி தோல்வி கண்டார்கள். பிரிட்டிஷ் கம்பெனி நாட்டை விட்டே வெளி யேற வேண்டும் என்று உத்தரவு போட்ட அவுரகசீப் மரணமடைந் தார். (கி.பி.1707) பேரரசு சிதைந்து, தனித்தனி ஆட்சிகள் உருவானது. தனது அதிகாரத்தை உறுதிப் படுத்த நேரம் பார்த்துக் கொண்டிருந்த ஆங்கிலேயர்களுக்கு நல்ல வாய்ப்பாகி விட்டது.


ராபர்ட் கிளைவ், ஆற்காடு பகுதியைப் பிடித்தார் (கி.பி.1749) தொடர்ந்து 12 ஆண்டுகள் போர் நடத்தி தென்னிந்தி யாவின் பல பகுதிகளைப் பிடித்தனர். கருநாடகப் போர்கள் மூலம் ஆந்திரத் தின் பெரும் பகுதியைக் கைப்பற்றினர். வெற்றி களைக் குவித்த ராபர்ட் கிளைவ் வடக்கே போனார். பிளாசி யுத்தம் நடத்தினார்; அதில் வங்கம் வீழ்ந்தது. அதைத் தொடர்ந்து ஒரு நூற்றாண்டில், படிப்படியாக ஆங்கிலேயர்கள் கைப் பற்றிய பல்வேறு பகுதிகள்தான் இந்தியா. ஆங்கிலேயர் ஆட்சி செய்த இந்தியாவில், இன்றைய ஆப்கானிஸ்தான் நாட்டின் பெரும் பகுதியும், பர்மாவும் (இன்றைய மியான்மர் நாடு) இலங்கையும் அடங்கி இருந்தது.

அப்போது இலங்கை ஒரு மாவட்ட மாகக் கூட அங்கீகரிக்கப்படவில்லை; ஒரு வட்டமாகவே கருதப்பட்டு, அதன் நிர் வாக அலுவலகமே தமிழநாட்டில் தான் இருந்தது. இன்றைய பாகிஸ் தானும் பங்களாதேசும் அன்றைய இந்தியாதான். இப்போதுள்ள வட கிழக்கு மாநிலங்களோ, காஷ்மீரோ அன்றைய இந்தியாவில் இல்லை. ஆக, 3000 ஆண்டு கால வரலாற்றில் - தனித் தனிப் பகுதி களாக நிலவிய தேசங்களை - துப்பாக்கி முனையில் மிரட்டி, ஆங்கிலே யர்களால் உருவாக்கப்பட்ட நாடுதான் இந்தியா’.


விடுதலை இராசேந்திரன்

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

இறை அறிவில் தெளிந்தால் இஸ்லாம் விளங்கும்



நபிகள் திலகம் முஹம்மது (ஸல்) நாடிய அறிவு எது?
புகஹாக்கள் எனப்படும் ஷரீஅத் சட்ட நிபுணர்கள் அல்இல்முஎன்றசொல்லில் நபிகள் நாடிய அறிவு இல்முஷ்ஷரீஅத் எனப்படும் மார்க்கச்சட்ட அறிவு என்றுசொல்கின்றனர்.

அதேபோல்முஹக்கிகீன் எனப்படும் இறைகொள்கை வல்லுனர்கள் அல்இல்மு என்றசொல்லில் நபிகள் நாடிய அறிவு இல்முத்தௌஹீத், இல்முல்மஃரிபஹ் எனப்படும் இறையறிவு என்று சொல்கின்றனர் இதன்படி ஒரு முஸ்லீம் கலிமத்துத் தௌஹீத் இறை கொள்கை பற்றிய அறிவையும் ஷரீஅத் போந்தும் தொழுகை,ஸகாத், நோன்பு, ஹஜ் ஆகிய கடமைகள் பற்றிய அறிவு ஞானங்களையும் கற்றிருக்க வேண்டும்.

இவ்வறிவு எவரிடமில்லையோ அவர் இறைவனைப் பற்றி அறியாதவராகவும் ஏனைய கடமைகளை சரிவரச் செய்ய முடியாதவராகவும் ஆகி விடுகின்றார்.
காரணம் அமல்கள் எனப்படும் வணக்கங்களைச் செய்வதற்கு முதல் அவ்வமல்களைச் செய்வது பற்றிய அறிவைப் பெற்றிருக்க வேண்டும் அறிவு இருந்தால்தான் அமல் நிறைவேறும். இன்றேல் அமலால் பயனடைய முடியாது. அமல்களும் நிறைவேறாது.

எனவே ஒரு முஸ்லீம் கொள்கை பற்றிய அறிவையும் இஸ்லாத்தின் கடமைகள் பற்றிய அறிவையும் கற்றிருப்பது கடமையாகின்றது.

ஈமானுடைய பர்ளுகள், ஆறாக இருப்பினும் இஸ்லாத்தின் கடமைகள் ஐந்தாக இருப்பினும் இவ்விரண்டிலும் முதற்கடமை அல்லாஹ் பற்றி அறிந்திருப்பதும் முதற்கடமையாகின்றது.

ஈமானையும் இஸ்லாத்தையும் இணைத்தே ஷரீஅத் ஆகும்.

இவ்விரண்டில் ஒன்றையெடுத்து மற்றதை விடுவது எவ்வகையிலும் ஷரீஅத் ஆகாது. தீனுல் இஸ்லாம் என்பது அகீதஹ் (கொள்கை) அஃமால்/ இபாதாத் (செயல்கள்/வணக்கங்கள்) இக்லாஸ் (கலப்பற்ற-இரண்டற்ற நிலை) ஆகிய மூன்றையும் உள்ளடக்கி நிற்கிறது. இவை ஷரீஅத், தரீகத்,ஹகீகத், மஃரிபத் ஆகிய நான்கையும் கொண்டுள்ளது.

இதனையே அல் குர்ஆன் லிகுல்லின் ஜஅல்னா மின்கும் ஷிர்அதன் வமின்ஹாஜன்உங்களில் ஒவ்வொறுவருக்கும் ஷரீஅத்தையும், மின்ஹாஜ் எனும் தரீகத், ஹகீகத், மஃரிபத் ஆகியவற்றையும் ஆக்கியுள்ளோம். என்று சொல்கிறது. எனவே ஒரு முஸ்லீம் இம்மூன்றையும் அறிந்து செயற்படுவது அவசியமாகின்றது.

காரணம் இம்மூன்று அம்சங்களையும் கொண்ட தீன் சன்மார்க்க அறிவுதான் ஒரு முஸ்லிமின் இவ்வுலக மறுவுல வாழ்வுக்கு மிக அவசியமானது அதனாற்றான் நபிகள் திலகம் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல் இல்மு எனும் அறிவை தேடுவது ஒவ்வொரு முஸ்லீமுக்கும் கடமை என்று நவின்றார்கள்.

இங்கே நபீகள் அல் இல்மு என்று குறிப்பிட்டது மார்க்க அறிவையேயன்றி வேறு எவ்வறிவையும் அல்ல. எல்லா அறிவுகளையும் என்று நபிகள் நாடியிருந்தால் விஞ்ஞானம், கணிதம், பூமி, வானசாஸ்திரம் போன்ற அறிவுகளையும் எல்லாரும் கற்பது பர்ழாக ஆகிவிடும். இது அசாத்தியம்.

எனவே நபீகள் இம்மொழியில் தலபுல் இல்மி ஒரு அறிவை தேடுதல் என்று குறிப்பிட்டிருப்பதால் அது இல்முத்தீன் எனும் சன்மார்க்க அறிவு என்றும் குறிப்பாக சன்மார்க்கத்தின் அடிப்படையான இல்முத்தௌஹீத் ஏகத்துவ கொள்கை அறிவு என்றும் மார்க்க மேதைகள் சொல்கின்றனர்.

மேற்குறித்த விபரத்தின் படி ஈமான் இஸ்லாத்தின் முதல் அம்சமான இறை கொள்கை பற்றிய அறிவை விரிவாகக் கற்பதும் தொழுகை ஸக்காத், நோன்பு, ஹஜ் கிரியைகளின் அறிவை விரிவாகக் கற்பதும் இறைவணக்கத்தின் உயிரோட்டமான இக்லாஸ் பற்றி விரிவாகக் கற்பதும் மிக அவசியமும் கடமையும் ஆகும்.

சுருங்கக் கூறின் இம்மூன்றையும் ஏற்றுக் கற்றவரே முஸ்லிம் முஃமின் என்றும் இதை மறுத்தவர் காபிர் என்றும் கணிக்கப்படுகின்றார்.

தீனும் தீன்தாரிகளும்

இன்றைய முஸ்லீம்களில் அனேகர் தீனின் முக்கியத்துவத்தை உணராது தொழுகை போன்ற செயற்பாட்டு அறிவுகளை மட்டும் கற்பதில் அதை மட்டும் போதிப்பதிலும் சிலர் அதைக்கூடக் கற்காது பின்பற்றல் வாதிகளாகவும் காலத்தைக் கழிக்கின்றனர்.

ஈமானின் இஸ்லாத்தின் முதற்கடமையான கொள்கை பற்றிய அறிவையும் இபாதத்தின் உயிர் நாடியான இக்லாஸ் பற்றிய அறிவையும் அவசியம் கற்காமலும் அதை தெரிந்தோர் போதிக்காமலும் அதை கூறுபவரை மார்க்கத்திற்கு முரணானவர் எனக் கருதியும் உலக வாழ்வை முடித்துக் கொள்கின்றனர்.

ஒரு வருவருக்கு ஏழு வயதிலிருந்த இறை கொள்கையறிவே எழுபதிலும் இருக்கிறது. முதற்கடமையான அல்லாஹ் பற்றி ஐந்து நிமிடம் சொல் என்றால் ஏழுவயது சிறுவனின் இறையறிவே அவரில் காணப்படுகிறதேயன்றி அல்லாஹ் பற்றி அவரால் சொல்ல முடியாது இதனை நபி (ஸல்) அவர்களின் திருச்சபையில் ஒளியினால் படைக்கப்பட்ட ஜிப்ரீல் (அலை) மனித உருவில் தோன்றி இம்மூன்றையும் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டறிந்து சென்றார்கள். அவர்கள் சென்றபின் நபிகள் (ஸல்) அவர்கள்தோழர்களை விழித்து வந்தவர் ஜிப்ரீல் என்றும் அவர் அதாகும் லியு அல்லிமகும் தீனகும்உங்களது தீன் சன்மார்க்கத்தை உங்களுக்கு கற்றுத்தர வந்து சென்றார் என்றும் கூறினார்கள். இவ்வரலாறு தீன் எனும் சொல் ஈமான் இஸ்லாம் இக்லாஸ் ஆகிய மூன்றையும் வலியுறுத்துகிறது.

காகம் அன்று கூடு கட்டியது போன்றே இன்றும் கூடு கட்டுகின்றது. எல்லா விடயங்களிலும் உச்சநிலையை அடைந்து மாளிகையில் வாழும் மனிதன் இன்று கொள்கையறிவில் காகத்தின் தறஜஹ் படித்தரத்தில்தான் வாழ்கிறான்.

ஒரு முஸ்லீமுக்கு கொள்கையறிவு அவனது தலையைப் போன்றது செயற்பாட்டறிவு அவனது கை, கால் போன்றது மனிதன் தலை இன்றேல் உயிர் வாழ முடியாது. எனவே மார்க்கத்தின் தலையான கொள்கையறிவைப் புறக்கணித்து கை,கால்போன்ற கிரியை அறிவை மட்டும் கற்பதில் என்ன பயனுன்டு? தலையில்லாதவனுக்கு எது இருந்தும் என்ன பயன்? கொள்கை தெரிந்த ஒருவன் அமல் செய்யாது போனாலும் அவன் அவனது உறுதியான இறைகொள்கையினால்சொர்க்கம் புகுந்துவிடுவான். ஆனால்கொள்கை என்ன வென்று தெரியாமலும் தெரிந்தவனிடம் சென்று கற்காமலும் அமல் எனும் செயற்பாட்டு வணக்கத்தில் மட்டும் ஈடுபட்டவன் எவ்வாறு விசுவாசியாவான்? எப்படி சுவர்க்கதில் நுழைவான்?

கொள்கையறிவை உரியவாறு அறிந்து உறுதிபெற்றவன் அமல்களை நிராகரிக்காது அவற்றை செய்ய முடியாது போனால் அதை விட்ட காரணத்தால் ஆஸீபாவியாகிவிடுவானேயன்றி அவன் காபிராகிவிடான். இறைவன் நாடின் அவனது கருணையினால் பாவியின் பாவத்தை மன்னித்து அவனை சொர்க்கத்தில் நுழைத்துவிடுவான்.

ஆனால் கொள்கையை அறியாதவன் சொர்க்கத்தில் நுழைய முடியாது அவன் மறுமையில் இறைசமூகம் சேரமாட்டான்.

மேற்குறித்த விபரங்களில் இருந்து முஸ்லீம் மிக அவசியம் கற்கவேண்டிய அறிவு இல்முத்தீன் எனும் இல்முத் தௌஹீத் ஆகும் இல்முத் தௌஹீத் எனும் ஏகத்துவ அறிவுதான் வஹ்ததுல் வுஜுத் (உள்ளமை ஒன்று) என்றும் இல்முல் ஹிக்மத் (யதார்தத்தை அறியும் மெஞ்ஞான இறை தத்துவ அறிவு) என்றும் அழைக்கப்படுகிறது. பெயரில்தான் வித்தியாசமேயன்றி யதார்த்ததில் அல்ல.

இவ்வறிவின் மூலம் இரு உள்ளமைகள் இல்லையென்றும் அல்லாஹ் எனப்படும் ஒரேயொரு வுஜுத்\தாத் என்ற உள்ளமைதான் சர்வ பிரபஞ்சமாகவும் பலதாகவும் உள்ளது என்றும் பிரபஞ்சமென்பது அந்த ஒரேயொரு மூலத்தின் கோலமேயன்றி அது தனியான சுயமான உள்மையல்ல என்றும் ஒரு மூலப்பொருளைக் குறிக்கும் இரு சொற்களே வுஜுதும் தாத்தும் என்பதும் அவ்விரண்டும் ஒன்றென்பதும் தெளிவாகிறது.

கடலின்மேல் நடனமிடும் குமுழி சுயமானதல்ல ஐஸ்கட்டி சுயமானதல்ல நீரே அவற்றின் மூலமாகும்.

நீர்தான் தன்னை கொண்டு நிலை பெற்றுள்ளது. குமுழியும் ஐஸும் தன்னைக் கொண்டு நிலைபெற்றிருக்க வில்லை. அவ்விரண்டையும் நீரைக் கொண்டே நிலை பெற்றுள்ளன. ஐஸ், குமுழி என்பவை பார்வையிலும் புத்தியிலும்தான் உள்ளவை யதார்தத்தில் இல்லாதவை ஐஸ் குமுழி என்று பார்வையும் அறிவும் சென்னாலும் கையில் படும்போது நீரையே உணர்கிறோம். இதேபோல் பிரபஞ்சம் (சிருஷ்டி) என்பது ஆதேயமானதேயன்றி ஆதாரமானதல்ல. ஆதேயம் தன்னைக் கொண்டு சுயமாக தனியாக இருக்காது. ஆதாரத்தைக் கொண்டே அது நிலைபெற்றிருக்கும்.

உதாரணத்திற்கு பன் என்பது ஆதாரமானது. பாய் என்பது ஆதேயமானது. பாய் என்பது தன்னைக் கொண்டு சுயமாக நிற்பது அசாத்தியமாகையால் பன்னைக் கொண்டே நிலைபெற்றிருக்கிறது. பாய் என்பது அறிவிலும் பார்வையிலுமே உள்ளது. அமரும்போது நமது உடல் பன்னில்தான் படுகிறது பாயில் அல்ல காரணம் பாய் என்பதே யதார்த்தத்தில் இல்லை. இதேபோல் பிரபஞ்சம் எனும் சிருஷ்டி அல்லாஹ் எனும் உள்ளமையை கொண்டே நிலை பெற்றுள்ளது. பிரபஞ்சத்தின் கோலத்தில் இருப்பது அல்லாஹ் என்ற மூலப்பொருளேயாகும்.

இதனாற்றான், தன்னைப்பற்றி இறைவன் சொல்கையில் ஏகன் (அஹதுன்) என்று சொல்கின்றான் ஏகமாக-எல்லாமாக இருப்பது தானே! வேறல்ல என்பதை நிறுவுவதுடன் தான் அனைத்துமாக இருப்பதால் தான் பலதல்ல. எல்லாமாக இருக்கும் ஒருவனாகிய என்னை ஒன்று படுத்தி தவ்ஹீத் செய்யுங்கள் என்கிறான்.

இறைவன் உள்ளமையில் ஒருவனேயன்றி எண் கணிப்பின்படி ஒருவனல்லன் இதுதான் இஸ்லாத்தின் கொள்கை.

இவ்வுண்மையை உணராது இவ்விறை தத்துவத்தை அறியாது இன்று முஸ்லீம்கள் பிறந்து மடிகின்றனர்.

இறை கொள்கை பற்றி தெரியாமலும் இறை கொள்கைதான் எல்லாமவன் எனும் வஹ்ததுல் வுஜுத் கொள்கையை மறுத்தும் எதிர்த்தும் அக் கொள்கையை சொல்வோரை மதம் மாறியவர் என்றும் கருதி தமது அறியாமையால் அமல்களில் மட்டும் காலூன்றி அமல்களின் அடிப்படை அறிவின்றி வாழ்வை முடிக்கின்றனர். இன்னும் அதிகமானோர் இறைவன் ஒருவன் என்பதால் அவன் எண் இலக்கத்திற்கு உட்பட்ட ஒருவன் அவன் எங்கோ ஒருஇடத்தில் இருந்துகொண்டு சிருஷ்டிகளை படைத்துக் கொண்டிருக்கின்றான் என்றும் நம்பியுள்ளனர்.

இதுவும் வழிகெட்ட கொள்கையேயாகும். வழி கெட்ட அனைத்துக் கொள்கையையும் மறுத்தே அல்குர்ஆன் இறை கொள்கை பற்றி பின்வருமாறு அறைகிறது.

அவனே முதலானோன்!
அவனே இறுதியானோன்,
அவனே (பிரபஞ்சங்களாக) வெளியானோன்,
அவனே உள்ளானோன்,
அவனே அனைத்தைக் கொண்டே,
அறியப்பட்டோன்.

எல்லாம் அவனே எனும் ஏகத்துவ ஞானம் இல்முத் தவ்ஹீத் இவ்வசனத்தில் எடுத்தோதப்படுகிறது.

இல்முத் தவ்ஹீத் என்பதற்கு ஏகத்துவ அறிவு என்று பொருள் சொல்லப்படுகிறது.

ஏகத்துவம் என்பது ஏகம் + தத்துவம் ஏகமாகவிருப்பது அஹதுன் ஏகன் என்ற அல்லாஹ்தான் என்பது தெளிவாகிறது.

தெளஹீத் என்பதற்கு ஏகத்துவம் என்று பொருள் கொண்டாலும் அச்சொல் வஹ்ஹத என்ற சொல்லிருந்து பிறந்துள்ளது வஹ்ஹத, யுவஹ்ஹிது, தௌஹீதன் என்பது அச்சொல் தோன்றிய முறையாகும்.

வஹ்ஹத என்றால் ஒன்று படுத்தினான் என்பது பொருள் தவ்ஹீத் என்றால் ஒன்று படுத்துதல் என்பது பொருள் .

இறைவன் ஒருவனாக இருக்கையில் அவனை ஒன்றுபடுத்து என்று சொல்ல முடியாது. ஒன்றை ஒன்றுபடுத்தல் அசாத்தியமாகும். ஒரு பேனையை சுட்டி அதை ஒன்றுபடுத்துமாறு அதை ஒன்று என்று சொல்லுமாறும் பணிப்பது முஹால் அசாத்தியமானதாகும். இதனையே தவ்ஹீதுல் வாஹிதி முஹாலுன் ஒன்றை ஒன்று படுத்துதல் அசாத்தியம் என்று இறை கொள்கைச் சட்டம் சொல்கிறது.

எனவே தவ்ஹீத் ஒன்று படுத்துதல் என்பது ஒரேயொரு வுஜுத் உள்ளமை தான் இருந்து பிரபஞ்ச உடையில் பலதாக தோற்றுகிறது. யதார்த்தத்தில் அனைத்தும் ஒன்றே அன்றி பலதல்ல. அலை,நுரை, குமுழி, துளி ஒவ்வொன்றும் சுயமானது போல் தெரிந்தாலும் நீரேயன்றி எதுவுமில்லை என்பதுபோல் அவையனைத்தும் நீர்தான் என்று ஒன்று படுத்துவதுபோல் எல்லாமாக இருப்பது அல்லாஹ் எனும் உள்ளமையே அன்றி இன்னொன்றல்ல. அதுதானே தான் என்று ஒன்று படுத்துவதே தவ்ஹீத் ஆகும். இவ்வறிவே இல்முத்தவ்ஹீத் ஏகத்துவ அறிவாகும் இதனையே இல்முல் ஹிக்மத் என்றும் அழைக்கப்படுகின்றது.

இல்முல் ஹிக்மத் என்பதற்கு இல்முன் யுப்ஹது பீஹி அன் ஹகீகதி குல்லி ஷையின் ஒவ்வொரு வஸ்துவின் யாதார்த்தம் பற்றியும் ஆராய்ந்து அனைத்திற்கும் அல்லாஹ்வின் வுஜுதே யதார்த்தமான மூலம் என்று அதன் வரைவிலக்கணம் சொல்கிறது. உடையின் மூலம் நூல் என்றும் அதன் மூலம் பஞ்சுதான் என்றும் பஞ்சுக்கு வேறான உடையில்லை என்றும் நூலையும் சீலையையும் பஞ்சுதான் என்று தெரிந்து ஒன்று படுத்துவதுபோல் பிரபஞ்சத்தின் கோலம் பலதாக தெரிந்தாலும் அக்கோலங்களாக யதார்த்தத்தில் உள்ளவன் அல்லாஹ்தான் என்று ஒன்று படுத்தி ஆராயப்படும் அறிவே இல்முல் ஹிக்மத் எனப்படும். எனவே மேற்கண்ட விபரத்தின்படி இல்முத் தவ்ஹீத், இல்முல் ஹிக்மத் கல்வியைக் கற்பதும் அதை கற்பிப்பதும் பர்ழு ஐன் ஒவ்வொருவருக்கும் பிரதான கடமையும் அத்தியாவசியமும் ஆகும். இக் கல்வியினாற்றான் ஈருலகப் பயன் கிடைப்பதுடன் படைக்கப்பட்ட நோக்கத்தையும் நிறைவு செய்ய முடியும்.

இவ்வறிவையே நபிகள் (ஸல்) தலபுல் இல்மி ஒரு அறிவைத் தேடு என்றும் அதை தேடுதல் கடமை என்றும் சீனா சென்றேனும் தேடிப்படி என்றும் நவின்று அவ்வறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள்.

இவ்வறிவு வழங்கப்பட்டவனே அதிக நன்மை வழங்கப்பட்டவன் என்று அல்குர் ஆனும் சொல்கிறது.

உண்மை இப்படியிருக்க அவசியம் அறிய வேண்டிய தவ்ஹீதுடைய அறிவை அறியாமல் தீனின் ஒரு பகுதியான இஸ்லாத்தின் கிரியையான அமல்களை மட்டும் தெரிந்தும், சட்டம் தெரியாமலும் செய்துவருவது ஆச்சரியமும் அறியாமையுமாகும்!

எனவே அல்லாஹ் பற்றி அறியாமலும், அவனே எல்லாம் எனும் தத்துவத்தை ஏற்காமலும் எதிர்ப்போர் இறைவனிடம் தப்பவே முடியாது!!!.

(
அல்மிஷ்காத் மாத இதழ் 2002 ஆம் வருட இதழில் அதன் ஆசிரியர் மெளலவி இப்றாஹிம் நத்வியால் எழுதப்பட்டது)

நன்றி: முஹைய்யித்தீன் டிவி