عن سهل بن عمرو رضي الله عنه قال مر رسول الله ببعير و قد لحق ظهره ببطنه فقال اتقوا الله فى هذه البهائم المعجمة اركبوها صالحة و كلوها صالحة
நபித்தோழர் சஹல் இப்னு அம்ரு அவர்கள் அறிவிக்கிறார்கள் உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் ஒரு
ஒட்டகத்தை கடந்து சென்றார்கள் அந்த ஒட்டகத்தின் வயிறு முதுகுடன் ஒட்டிய நிலையில் இருந்தது. இதை கண்ட
நபியவர்கள் இந்த வாயில்லா பிராணிகளின் விஷயத்தில் அல்லாஹ்வை பயந்துகொள்ளுங்கள், நல்ல முறையில்
அவற்றில் பயணம் செய்யுங்கள் இன்னும் அவற்றிலிருந்து நல்ல முறையில் சாப்பிடுங்கள்.
திருக்குர்ஆனில் நபியவர்களை இறைவன் அறிமுகப்படுத்தும்போது இப்படி கூறுவான் “ உங்களை உலகத்தாருக்கு ஓர்
அருட்கொடையாக அனுப்பியுள்ளோம்”.
அந்த காருண்ய நபி தன் தோழர்களையும், உலக அழிவு நாள் வர இருக்கிற மக்களையும் எப்படி பக்குவப்படுத்தினார்கள்
என்பதே ஒரு அழகிய வரலாறு.
அநீதி என்பதற்கு இமாம்களின் விளக்கம் இவ்வாறு உள்ளது “ ஒரு பொருளை அதன் இடத்தில் அல்லாது வேறொரு இடத்தில்
வைப்பது.எத்துணை அற்புதமான அகண்ட பொருளிது.
கல்வியை தேவையுள்ள இடத்தில் கொடுக்காமல் இருப்பதும், தேவையில்லாத இடத்தில் கொடுப்பது அநீதம்.
பொருளுக்கும், கண்ணியத்திற்கு இது போன்றே விளக்கங்கள் நீள்கிறது.
இது ஒரு அழகிய விதி.
படித்த பண்டிதரிலிருந்து பாமரன் வரை விளங்குவதற்கு எளிதாக.
இன்னும் தங்களின் செயல்களை தாங்களே சீர்செய்து கொள்வதற்கு தோதுவாக,
இது எளிது படுத்தி அமைத்து தரப்பட்ட ஒரு செய்தி.
ஒவ்வொரு செயலையும் அதை எப்படி செய்யவேண்டும் என்ற அணுகுமுறை உள்ளது.
அவற்றை அனைத்தையும் போதிக்க வந்தவர்கள் தான் முஹம்மதுர்ரஸுலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்.
அந்த காலத்து எதிர்மறை சிந்தனையுடையவர்கள் ஸஹாபக்களை பார்த்து
“ முஹம்மது உங்களுக்கு சிறுநீர் கழிப்பது எப்படி? என்றெல்லாம் சொல்லித்தருகிறாராமே”
என்று கிண்டல் நிறைந்த வார்த்தைகளை உதிர்த்தபோதெல்லாம்.
நபித்தோழர்கள் உதிரம் சூடேராமல் அவர்களுக்கு அழித்த நேர்மறை சிந்தனைக்குரிய வார்த்தைகள் இதுவே
“ எங்கள் தூதர் எங்களுக்கு எப்படி சிறுநீர் கழிப்பதென்று கூட கற்றுக்கொடுக்கிறார்”.
அந்த காலத்தின் சூழ்நிலை ஒரு அழகிய உதாரணம் இதோ.
பெரிய மனிதர்கள் கூட கூட்டமாக நின்று கொண்டு சிறுநீர் கழித்து யாரின் சிறுநீர் அதிக தூரம் செல்கிறது என்று போட்டிகள்
நடத்திக்கொண்டிருந்த காலம்.
இந்த காலத்தில் சிறுநீர் கழிக்கும் ஒழுக்கத்தை சொல்லிக்கொடுத்து ஒரு உயர்ந்த அறிவியல் அன்றோ.
அப்படி தான் நபியவர்கள் ஒவ்வொரு நிலையாக பார்த்து தனது உம்மத்தை சரிசெய்தார்கள்.
ஆகையால் தான் தன்னைக்குறித்து இவ்வாறு கூறினார்கள்
انما بعثت معلما
”நான் அனுப்பப்பட்டதெல்லாம் ஒரு ஆசானகத்தான்”.
வாய் உள்ள பொருடகளிடம் எப்படி நடக்கவேண்டும் என்று சொன்ன பெருமானார் அவர்கள்.
வாயில்லா உயிர்களின் ஜீவகாருண்ய விஷயத்தில் மிக எச்சரிக்கையாக தனது உம்மத்திற்கு பாடம் நடத்திவிட்டு
சென்றார்கள்.
எந்த ஒரு உயிரை அறுத்து பலியிடுவதற்கு முன் கத்தியை தீட்டு என்று புத்தியை தீட்டினார்கள்.
அது போன்று மற்ற உயிர்களையும் அதை ஒரு உயிர் என்று மதித்து அதனிடம் நடந்துகொள்ளுங்கள்.
அந்த உயிர்களிடம் அல்லாஹ்வை அஞ்சுங்கள் என்று கூறினார்கள்.
ஜீவகாருண்ய விஷயத்தில் அதை அருத்து பழியிடுவதே தவறு, அத்துணை பொருடகளிடம் அன்பு கொள்ளவேண்டும்.
சீறி வரும் பாம்பை கூட அன்புக்கண்கொண்டுதான் பார்க்கவேண்டும் என்று அதற்கு பால் உற்றும் மக்கள் மத்தியில்.
எதை எந்த இடத்தில் வைக்கவேண்டும் என்று நீதமான முறையைப்பயிற்றுவித்தார்கள்.
ஒரு பூனையை கட்டிவைத்து அதற்க்கு உணவு தராத பெண் நரகம் சென்றால் என்று சொல்லும் போதே.
உயிர்களிடம் காட்டவேண்டிய நிலையை சுட்டிக்காட்டினார்கள்.
ஒரு உயிருள்ள பொருளோ அல்லது ஒரு உயிரற்ற பொருளோ அதோடு ஒரு முஃமின் நடந்துகொள்ளும் விதம் அழகானது.
இன்று கூட வீட்டில், அலுவலகத்தில் பொருடகளை, கோப்புகளை, டைரிலகளை வேகமாக நம்மில் பலர் போடுவதை
பார்த்திரும்போம்.
அது போன்று கார், பைக் சாவிகளை முதல் நாள் இரவு தூக்கி விசிய இடம் தெரியாம், தேடுவதில் நேரம் செலவழித்து
டென்ஷனோடு அலுவலகம் செல்பவர்களை பார்த்திருப்போம்.
இது ஒரு முஃமினின் குணமாக இருக்க முடியாது என்பதையே நபியவர்கள் அநீதத்தை விவரிக்கும் போது கூறினார்கள்
“ ஒரு பொருளை அது அல்லாத வேறு இடத்தில் வைப்பது” ( மீண்டும் நினைவு படுத்த எழுதுகிறேன்).
தமிழிலே சொல்வார்கள் “ பெரிய மனிதர்கள் என்பவர்கள் பெரிய பெரிய செயலை மட்டும் செய்பவர்கள் அல்ல மாறாக
தங்களின் சின்ன சின்ன விஷயத்திலும் கவனமாக இருப்பர்கள்.”
அதை தான் நபியவர்கள் தன் உம்மத்துக்கு போதித்து சென்றார்கள்.
என் தந்தையார் அடிக்கடி சொல்லுவார்கள் “ எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைத்தால் மீண்டும் தேடவேண்டியதில்லை”
இன்று நம் அன்றாடம் உபயோகப்படுத்தும் பொருட்களை தொலைத்து விட்டு அதை தேடுவதிலே அதில் நேரம்
செலவிடுகிறோம்.
அது போன்றே நபியவர்கள் தங்கள் பயன்படுத்தும் வாகனங்களுக்கு பெயர் வைத்து அழைக்கும் பழக்கம் கொண்டவர்கள்.
நபியவர்களின் ஒட்டகத்திற்கு பெயர் கஸ்வா
அவர்களின் கழுதைக்கு பெயர் உபைர்
நம் இன்று பொதுவாக நம் வாகனங்களில் நம் பிள்ளைகளின் பெயர்களை எழுதி வைக்கிறோம்.
ஆனால், நபியவர்கள் அதைக்கென்றே தனியான பெயர்வைத்து அன்போடு அதன் பெயரை செல்வார்கள்.
இப்படி செய்வது ஒரு ஸுன்னா தான்.
எத்துணை அற்புதமான நபி எங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
நபியவர்களின் வரலாறுகள் முழங்கப்படும் இந்த ரபியுல் அவ்வல் மாதத்தில் நபியவர்களின் சுன்னத்துக்களை
நமதாக்குவோம்.
இம்மை, மறுமை வெற்றிகளை எளிதாக்குவோம்.
அல்லாஹும்ம ஸல்லி அலா சைய்யிதினா முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா சைய்யிதினா இப்ராஹிம வ அலா அலி
இப்ராஹிம இன்னக ஹமீதுன் மஜீத்.
- அபூ புஷ்ரா ஹஸனீ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக