திங்கள், 30 ஏப்ரல், 2012

26-ம் ஆண்டில் மணிச்சுடர் நாளிதழ்!

26-ம் ஆண்டில் மணிச்சுடர் நாளிதழ்! வெள்ளி விழா சிறப்பு மலர் தயாராகிறது

1987 ஏப்ரல் 29, புதன்கிழமை, ஹிஜ்ரி 1407 

ரமளான் பிறை 1.

அந்த புனித நந்நாளில் `மணிச்சுடர்� நாளிதழின் முதல் இதழ் தமிழ் கூறும் நல்லுலகில் வெளி வந்தது.

முதல் இதழில் `மணிச்சுடர் சுடர் வீசுகிறது!� என்ற தலைப்பில் சிந்தனைச் செம்மல் சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ் ஸமத் அவர்கள் எழுதிய தலையங்கத்தில், 

``தமிழரின் நலன் நாடும் நாளேடுகள் ஐம்பதுக்கு மேல் வெளியிடப்படுகின்றன. அறிவுச்சுடர் கொளுத்தும் அந்தப் பணியில் `மணிச்சுடர்� தன் பங்களிக்க முன்வந்திருக்கிறது.

மணிச்சுடருக்கு ஏதும் தனித்தன்மை உண்டா, என்றால் உண்டு; இதுவரை வெளியில் காட்டப்படாத தமிழ் முஸ்லிம் கலாசார, பண்பாட்டு வாழ்விலும் அது சுடரேற்றி காட்டும்

செய்திகள் புனிதமானவை; கருத்துக்கள் சுதந்திர மானவை என்ற சொற்றொடரில் அதற்கு ஆழமான நம்பிக்கை உண்டு; வாழும் சமுதாயங்களுக்கிடையே சமத்துவ சகவாழ்வை நிலை நாட்ட அது அயராது பாடுபடும்.�� என குறிப்பிட்டிருந்தார்கள். அதன்பின், 1-6-1987 இதழில் `மக்களின் மணிச்சுடர்� என்ற தலைப்பில் எழுதிய தலையங்கத்தில்,

`இதுவரை குறிப்பிட்ட வட்டாரத்தில் மட்டும் வழங்கப்பட்டு வந்த `மணிச்சுடர்� தமிழ்நாட்டு பொதுமக்கள் அனைவருக் கும் வழங்கும் முயற்சியை இன்று முதல் தொடங்கியுள்ளோம்.

நிறைந்த மூலதனத்துடனும், மூளை பலத்துடனும் நடந்து வரும் நாளேடுகள் தமிழ்நாட்டில் பல இருக்கின்றன. `மணிச்சுடர்� எந்தப் பத்திரிகைக்கும் போட்டியாக வெளிவரவில்லை; தமிழ் நாளேடுகள் அதிகமாக காண முடியாத முஸ்லிம் சமுதாய நிகழ்ச்சிகளுக்கு `மணிச்சுடர்� ஒலிகூட்டும்.

பத்திரிகை தொழில் எதிர் நீச்சலை போன்றது என்பார்கள். நம்மைப் பொறுத்தவரை அது கிடுகிடு பள்ளத்தாக்கிலிருந்து இமயமலையின் கொடுமுடியில் ஏறுவதுபோல் சிரமமாகப்படு கிறது.

என்றாலும் இந்தப் பணியில் சமுதாயம் எங்களை உற்சாகப்படுத்துகிறது. வாசகர்கள் ஊக்குவிக்கிறார்கள். வணிகப் பிரமுகர்கள் விளம்பரம் என்ற ஊன்றுகோலை தரமுன் வந்திருக்கிறார்கள்.

எல்லாம் வல்ல இறைவனின் பெருங்கருணையை துணை கொண்டு எங்கள் பணியை மேற்கொண்டு விட்டோம்�� என்றும் குறிப்பிட்டிருந்தார்கள்.

சமுதாயத்தின் நீண்ட கால கனவான `தினத்தாள்� தொடங்கும் முயற்சியில் 1987-ல் சிராஜுல் மில்லத் ஈடுபட்ட போது, அவர்களுக்கு உறுதுணையாக இருந்து உதவிய வர்கள் ஆப்பனூர் ஜனாப் காஜா முகைதீன், ஏ.எஸ். அலியார், எஸ்.கே. முஹம்மது ஜபருல்லாஹ் ஆகியோர் ஆவர். இவர்களின் ஒத்துழைப்பு 1992 வரை நீடித்தது.

அதன்பின், ஆலிம் முஹம்மதுசாலிஹ் பொறியியல் கல்லூரி நிறுவனர் எஸ்.எம். ஷேக் நூருத்தீன் காகா, எஸ்.என்.எம். ஹுசைன் அப்துல் காதர், எஸ்.என்.எம். அஹமது சம்சுதீன் ஆகியோரை இயக்குநராகக் கொண்டு `மெட்ராஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்� சார்பில் மணிச்சுடர் வெளிவந்தது. தொடர்ந்து சிராஜுல் மில்லத்அவர்கள் ஆசிரியராக பணியாற்றி வந்தார்கள்.

சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் ரோட்டில் இயங்கி வந்த மணிச்சுடர் 14-2-1992 முதல் வாலஸ் தோட்டம் 3-ம் தெரு கட்டிடத்தில் வெளிவரத் தொடங்கியது. சிராஜுல் மில்லத் அவர்களோடு அவரது புதல்வர் ஏ. அப்துல் ஹக்கீம் அவர்கள் வெளியீட்டாளராக பொறுப்பேற்று கடமையாற்றினார்கள். 

25 ஆண்டுகளுக்கு முன் தலையங்கத்தில் சிராஜுல் மில்லத் குறிப்பிட்டதைப் போல், `கிடுகிடு பள்ளத்தாக்கி லிருந்து மலை உச்சிக்கு ஏறும் பயணமாகத்தான்� மணிச்சுடர் பணி தொடர்ந்தது.

புயலும், சூறாவளியும் நிலை கொண்டு தத்தளித்த நேரத்தில் தான் 1996-ல் திருச்சியில் இருந்த பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களை சென்னைக்கு அழைத்து மணிச்சுடரை நடத்தும் பொறுப்பை சிராஜுல் மில்லத் அவர்கள் ஒப்படைத்தார்கள். மணிச்சுடருக்கு மட்டுமல்ல; தாய்ச்சபைக்கும் அது சோதனையான கால கட்டம்! எனவே, நெருப்பாற்றில் எதிர்நீச்சல் போடும் பணியாகவே பேராசிரியருக்கு அப் பொறுப்பு அமைந்தது.

மணிச்சுடரின் அலுவலகமும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைமையகமும் வாலஸ் தோட்டத்தில் வாடகை கட்டிடத்திலேயே இயங்கி வந்தது. 

பேராசிரியரின் கடின உழைப்பால் இன்று `மணிச்சுடர்� தடையின்றி வருகிறது. சென்னை மண்ணடி மரைக்காயர் லெப்பை தெருவில் நின்று நிமிர்ந்து பார்க்கும் வகையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமையகத்தை புதுப்பித்து உருவாக்கி காயிதெ மில்லத் மன்ஸில் என பெயர் சூட்டி அதில் `மணிச்சுடர்� அலுவலகத்தையும், அச்சகத்தையும் அமைத்தார் பேராசிரியர்.

`மணிச்சுடர்� இடையில் சில மாத காலம் வெளி வராமல் தடைப்பட்டது. அது கணக்கிடப்பட்டு `` மணி��, ``சுடர்�� குறிப்பிடப்பட்டு வந்தது. ஆனால் மணிச்சுடர் வெளிவந்த 1987 ஏப்ரல் 29 ஐ கணக்கிட்டால் 25 ஆண்டுகள் முடிந்து 26-வது ஆண்டு இன்று தொடங்குகிறது. எனவே, இன்று முதல் மணி 26; சுடர் 1 என்ற கணக்கு தொடங்கும்.

வெள்ளி விழா ஆண்டில் `மணிச்சுடரின்� இன்றைய நிர்வாக இயக்குநர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் அவர்கள் முயற்சியில் `மணிச்சுடர்� இ.பேப்பராக வெளிவருவது அனைவருக்கும் மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தருகிறது. 

எல்லோருடைய அவாவையும் பூர்த்தி செய்யும் வகையில் கூடுதல் பக்கங்களுடன் கலரில் `மணிச்சுடரை� கொண்டு வரும் முயற்சியில் பேராசிரிய ரின் ஆலோசனையில் முஸ்லிம் லீக் பதிப்பக அறக் கட்டளை நிர்வாகிகளான எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., மில்லத் எஸ்.பி. முஹம்மது இஸ்மாயில் ஆகியோர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். 

மணிச்சுடர் சமுதாயத்தின் காலக் கண்ணாடி! அதில் இடம் பெறும் உலகளாவிய இஸ்லாமிய செய்திகளும், அன்றாட அரசியல் நடவடிக்கைகளுக்கான விமர்சனங் களும் சமுதாயம் அறிந்து கொள்ள வேண்டியவை. 

எனவே, மணிச்சுடரை பரப்ப வேண்டிய கடமை சமுதா யத்தைச்சார்ந்தது. ஊர்கள்தோறும் - பள்ளிவாசல்கள், கல்வி நிறுவனங்கள், நூலகங்கள் என முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் மணிச்சுடரை வரவழைக்கச் செய்ய வேண்டிய கடமை இந்திய யூனியன் முஸ்லிம் லீகர்களுக்கு உண்டு.

வெள்ளி விழா கண்ட மணிச்சுடரின் 25 ஆண்டுகள் இடம் பெற்ற செய்திகளின் முக்கியத்துவம்வாய்ந்தவை தொகுக்கப்பட்டு காலச்சுவடுகளாக உங்களுக்கு தரும் வகையில் `வெள்ளி விழா சிறப்பு மலர்� உருவாகி வருகிறது. இதற்காக அனைவரின் ஒத்துழைப்பையும் பேராசிரியப் பெருந்தகை கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் நாடி வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

பேராசிரியரின் தலைமையின் கீழ் மணிச்சுடரில் நாங்கள் பணியாற்றுவதில் பெருமிதம் கொள்கிறோம்.

மணிச்சுடரை இன்னும் சிறப்பாக்க இந் நாளில் நாங்கள் உறுதி ஏற்கிறோம்.

சனி, 28 ஏப்ரல், 2012

நிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?

ஆண் பெண்ணை மணமுடித்த பிறகு தான் அவள் அவனுக்கு சொந்தமாகிறாள். திருமணம் தான் இவர்கள் இருவரையும் இணைக்கும் பந்தமாக உள்ளது. இதைப் பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறினார்கள் : ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, தன்னை மணந்து கொள்ளுமாறு வேண்டினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "இப்போது எனக்கு (மணப்) பெண் தேவையில்லை' எனக் கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! இவளை எனக்கு மணமுடித்து வையுங்கள்'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "உம்மிடம் (மஹ்ர் செலுத்த) என்ன உள்ளது?'' என்று கேட்டார்கள். அவர், "என்னிடம் எதுவுமில்லை'' என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், "இரும்பாலான மோதிரத்தையேனும் இவளுக்கு (மஹ்ராகக்) கொடு!'' என்று சொன்னார்கள். அவர், "என்னிடம் ஏதுமில்லை'' என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், "சரி, குர்ஆனில் ஏதேனும் உம்மிடம் (மனனமாய்) உள்ளதா?'' என்று கேட்டார்கள். அவர், "இன்னது இன்னது (மனனமாய்) உள்ளது'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "உம்முடனுள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக இவளை உமக்கு உரியவளாக்கி விட்டேன்'' என்று சொன்னார்கள். புகாரி (5141) எனவே திருமணத்துக்குப் பிறகு தான் பெண் ஆணுக்கு உரியவளாகிறாள். மேலும் ஆணுடைய காதலுக்கும் அவனுடைய கொஞ்சலுக்கும் உரியவள் மனைவி தான் என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான். நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன. அல்குர்ஆன் (30 : 21) எனவே நாம் பெண் பேசியிருந்தாலும் அப்பெண்ணை மணந்து கொள்ளாதவரை அவள் நமக்கு அந்நியப் பெண் தான். ஒரு அந்நியப் பெண்ணிடம் நாம் எந்த ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டுமோ அதே போன்று தான் நமக்கு பேசி முடிக்கப்பட்ட பெண்ணிடமும் நடந்து கொள்ள வேண்டும். ஆணும் பெண்ணும் தனித்திருக்கக் கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: "ஒரு பெண்ணுடன் எந்த (அந்நிய) ஆடவனும் தனிமையில் இருக்க வேண்டாம்; (மண முடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் அவள் இருக்கும் போது தவிர; ஒரு பெண் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய ஆணுடன் தவிர பயணம் மேற்கொள்ள வேண்டாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் (தமது) சொற் பொழிவில் குறிப்பிட்டார்கள். (ஹதீஸின் சுருக்கம்) முஸ்லிம் 2611 தனிமை என்பது இருவரும் நேரடியாகச் சந்திப்பதை மட்டும் குறிக்காது. தொலைபேசியில் இருவர் மட்டும் உரையாடினாலும் அதுவும் தனிமை தான். தனிமையில் இருப்பதை இஸ்லாம் தடை செய்யக் காரணம், இருவரும் தனிமையில் இருக்கும் போது ஷைத்தானிய செயல்களில் ஈடுபட்டு விடக்கூடும் என்பதற்காகத் தான். திருமணம் பேசிவைக்கப்பட்ட ஒரு பெண்ணுடன் ஒருவர் தொலைபேசியில் தனிமையில் உரையாடும் போது அதற்கான வாசல்கள் இன்னும் அதிகமாகத் திறந்து விடப்படுகின்றன என்பதையும் நாம் கூடுதலாக கவனத்தில் கொள்ள வேண்டும் தீய பேச்சுக்களை பேசுவது நாவு செய்யும் விபச்சாரம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : விபசாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். (மர்ம உறுப்பின் விபசாரம் மட்டுமல்ல; கண்ணும் நாவும்கூட விபசாரம் செய்கின்றன.) கண் செய்யும் விபசாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபசாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது; இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல் : புகாரி (6612 நிச்சயம் செய்யப்பட்ட எத்தனையோ திருமணங்கள் பல காரணங்களால் இடையில் முறிந்து விடுகின்றது. இந்நேரங்களில் ஆணையும் பெண்ணையும் பிரித்து வைப்பதற்கு தலாக் குலாஃ போன்ற மணவிலக்குச் சட்டங்களை நாம் இங்கே கடைபிடிப்பதில்லை. இவர்களுக்கிடையே கணவன் மனைவி உறவு ஏற்படவில்லை என்பதே இதற்குக் காரணம். அதேப் போல் ஒரு பெண்ணுக்கு பேசப்பட்ட ஆண் திருமணத்துக்கு முன்பு இறந்துவிட்டால் இப்போது அப்பெண் இத்தா இருக்க வேண்டுமா என்று கேட்டால் தேவையில்லை என்று கூறுவோம். இவர்களுக்கிடையே கணவன் மனைவி உறவு ஏற்படவில்லை என்பதே இதற்குக் காரணம். எனவே இந்த பிரச்சனைகளில் எல்லாம் இவ்விருவருக்கும் இடையே கணவன் மனைவி உறவு இருக்கின்றதா? என நாம் பார்ப்பது போல தனக்குப் பேசப்பட்ட பெண்ணிடம் நெருங்கி பழகுவதற்கும் அவளிடம் ஃபோனில் கொஞ்சி குலாவுவதற்கும் இந்த உறவு உள்ளதா? என்று பார்க்க வேண்டும். நிச்சயிக்கப்பட்டவனுடன் எல்லை மீறி பழகி இருந்த நிலையில் திருமணம் தடைப்பட்டால் அந்தப் பெண்ணின் எதிர்காலம் பெரிதும் பாதிக்கப்படும். திருமணத்துக்கு முன்பே இவள் எப்படி நடந்து கொண்டால் என்ற விமர்சனம் எழும். இதனால் அவளுக்கு வேறு திருமணம் நடைபெறுவது பாதிக்கப்படும் என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஆண் தனக்கு பேசிமுடிக்கப்பட்ட பெண்ணிடம் மணிக்கணக்கில் பேசுவதை இன்றைய சமுதாயம் தவறாக நினைப்பதில்லை. இதை ஒரு பிரச்சனையாக எடுத்துக் கொள்வதில்லை. அதே நேரத்தில் திருமணத்துக்கு முன்பு ஆண் அப்பெண்ணுடன் ஒட்டி உறவாடினால் அவளுடன் உடலுறவு கொண்டால் அதைப் பாரதூரமான விஷயமாகக் கருதுகிறார்கள். சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால் ஒரு அந்நியப் பெண்ணிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என ஆண்களுக்கு இஸ்லாம் வழிகாட்டி இருக்கின்றதோ அதே ஒழுங்கு முறைகளை தனக்கு பேசிமுடிக்கப்பட்ட பெண்ணிடமும் கடைப்பிடிக்க வேண்டும். வீட்டைக் கட்டிப்பார். திருமணத்தை நடத்திப்பார் என்ற பழமொழிக்கு ஏற்ப திருமணத்தை பாரதூரமான விஷயமாக சமுதாயம் ஆக்கிவிட்ட காரணத்தால் பெண் பேசப்பட்டு திருமணத்துக்காக பல வருடங்கள் ஆண்கள் காத்திருக்க வேண்டியிருக்கின்றது. இஸ்லாம் காட்டாத விதிமுறைகளை நம்மீது நாமே விதித்துக் கொள்வதால் தான் இவ்வாறு மார்க்க வரம்புகளை மீறக்கூடிய சூழ்நிலை நமக்கு ஏற்படுகிறது. நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண் பேசுதல் என்றால் அதன் பொருள் திருமணத்துக்கு பெண்ணிடம் அனுமதி வேண்டுதல் என்பது தான் அர்த்தம். பெண் அனுமதி கொடுத்து விட்டால் பெண் பேசச் சென்ற அதே இடத்தில் கூட சாட்சிகளுடன் பெண்ணுடைய பொறுப்பாளர் முன்னிலையில் திருமணத்தை முடித்து விடலாம். இதைத் தான் நாம் முன்பு சுட்டிக் காட்டிய ஹதீஸ் கூறுகிறது. இதைச் சமுதாயம் புரிந்து கொண்டால் பெண் பேசிவிட்டு ஆணையும் பெண்ணையும் நீண்ட காலம் பிரித்து வைக்கும் நிலை ஏற்படாது.

சனி, 21 ஏப்ரல், 2012

நேர்மறையாக நினை

நீ 
மேற்கொண்ட செயல் 
நிறைவேறாதபோழுது 
அதைத் தோல்வி
என்று கூறாதே !
இன்னும்
ஜெயிக்கவில்லை என்று கூறு !

சுதந்திர போராட்ட வீரர் தளபதி திருப்பூர் மொய்தீன்





பதவி பேறுகள் எதுவும் இல்லாமலே முப்பத்தைந்து ஆண்டுகள் தன்னலமற்ற அரசியற் பணி புரிவது என்பது அரசியல் உலகில் ஒரு அற்புத விந்தையாகும்.அந்த விந்தையை காரிய சாதனையாக இயற்றி நம் மத்தியில் வாழ்ந்து மறைந்தவர் திருப்பூர் மொய்தீன். அவர் தமிழ்நாடு முஸ்லீம் லீக் துணை தலைவராகவும், சிறந்த பேச்சாளராகவும், வீர வாள் பரிசு பெற்ற தளபதியாகவும் விளங்கினார்.

தளபதி மொய்தீன் அவர்களுடைய அரசியல் வாழ்வு முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக பரந்துபட்டதாகும். "கொடி காத்த குமரன்" என்று இந்திய சுதந்திர போராட்டத்தில் தமிழரின் வீரத்திற்கு இலக்கணமாக விளைந்த திருப்பூர் குமரனும், திருப்பூர் மொய்தீன் அவர்களும் ஒரே ஊரவர்கள் மட்டும் அல்ல. ஒன்றாக அரசியல் என்னும் வேள்வி குண்டத்திலே குதித்தவர்கள். அந்நிய நாட்டு துணி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கு கொண்டு இருவரும் அரசியல் அரங்கில் அடியெடுத்து வைத்தார்கள். இந்த எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு அங்கமாக கிளைத்த ரயில் வண்டி மறியலிலும் இருவரும் ஒன்றாகவே செயலில் இறங்கினர்.

மறியல் போராட்டம் அன்று விடியற் காலை 8.30 மணிக்கு ரயில் வண்டியின் முன்னர் படுத்து திருப்பூர் மொய்தீன் அவர்கள் மறியல் செய்தார்கள். இதுவே மறியல் இயக்கத்தின் தொடக்கம். உடனேயே அவர் போலீஸ் சாரால் கைது செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து சரியாக காலை 8.45 மணிக்கு திருப்பூர் குமரனும் ரயில் முன் படுத்து மறியல் செய்தார். காவல் துறையினரின் தடியடிக்கு மத்தியிலும் சுதந்திர கொடியின் மானத்தை காத்தார். அமரரானார்.

சுதந்திர போராட்ட காலத்தில், தமிழ்நாட்டு அரசியலில் மூத்த தளபதி என அழைக்கப்பட்ட பட்டுகோட்டை சிங்கம் அழகிரிசாமி அவர்கள் அன்று நடைபெற்ற அரசியற் கூட்டத்தில் ஒரு திருப்பூர் குமரனுக்கு ஈடாக எமக்கு ஒரு திருப்பூர் மொய்தீன் கிடைத்து இருக்கின்றார். குமரனின் பணியை மொய்தீன் தொடருவார். என குறிப்பிட்டார். அழகிரிசாமி அவர்களின் கணிப்பு சற்றும் பிசகவில்லை. மொய்தீன் அவர்களின் பணி அவ்வாறே அமைந்து இருந்தது.

மொய்தீன் அவர்கள் நாவன்மை மிக்க பேச்சாளர் ஆவார். முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் எல்லாம் தம் சிம்ம குரலால் இயக்க எழுச்சியை ஊட்டினார். ஆங்கில கல்வி மூலம் பட்டம் பெற்றவர்களும் தெளிவுபடுத்த முடியாத சிக்கலான அரசியற் பிரச்சினைகளை எல்லாம் தமக்கே உரிய கம்பீர தொனியில் கேட்போர் நெஞ்சை ஈர்க்கும் வகையில் விளக்க வல்ல ஆற்றல் பெற்று விளங்கினார். தான் தோன்றி தலைமை தனத்தை வெறுத்தவர். இயக்க ரீதியான கட்டுபாடுகளுக்கு பணியும் பண்பு உடையவர். சமுதாய பணியையே வாழ்கையின் லட்சியமாக வரித்து கொண்டவர்.

தேசிய போராட்ட காலங்களிலும் சரி, முஸ்லீம் லீகின் அரசியற் பணிகளிலும் சரி மொய்தீன் அவர்களின் தொண்டு தனித்துவ முத்திரை பெற்று திகழ்ந்தது. லீகிற்குள் மிதவாத கொள்கைக்கு மாறுபட்ட தீவிர செயற் போக்கினை ஆதரித்தவர். மக்களுடன் மக்களாக வாழ்ந்து, மக்களுடைய துன்பங்களையும் துயரங்களையும் தெளிவாக உணர்ந்து இருந்தார். இதனால் மொய்தீன் அவர்கள் இடதுசாரி அரசியல்வாதி என்றும் அழைக்கபட்டார்.

மொய்தீன் அவர்களுடைய இந்த தனித்துவ போக்கு 1941 ஆம் ஆண்டிலேயே தூலமாக தெரிந்தது. அவ்வாண்டில் முஸ்லீம் லீகின் தலைமை பதவிக்கு ஜனாப் அப்துல் ஹமீது அவர்களும், கா ஈ தே மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாஹிப் அவர்களும் போட்டியிட்டனர். அப்துல் ஹமிது இடதுசாரி மனப்பான்மை உள்ளவர் அல்ல. எனினும் மிதவாதி அல்லர். இதன் காரணமாக மொய்தீன் அவர்கள் அப்துல் ஹமீது அவர்களை ஆதரித்தார். அதன் விளைவாக தான் இன்று மொய்தீன் அனுபவிக்கிறார் என்று அவருடைய அரசியல் வாழ்வை கூர்ந்து கவனித்தவர்கள் அபிபிராயபட்டதாகும்.

மொய்தீன் அவர்கள் பணி பயன் பற்றட்டது. பிரிக்கப்பட்ட இந்தியாவில் முஸ்லிம் லீக் சிறிது காலம் செயற் படாமல் இருந்தது. அப்பொழுது கூட மொய்தீன் அவர்களின் பணி பட்டி தொட்டி எல்லாம் தொட்டு பரவியது.

அவருடைய கலப்பற்ற தொண்டு மனப்பான்மையும் , சீரிய நாவன்மையும், பிரிக்கப்பட்ட இந்தியாவில் முஸ்லிம் லீக் முறையாக செயற்படத் தொடங்குவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே, காயல்பட்டினம் தொல்குடியில் உள்ள மக்கள் மொய்தீன் அவர்களின் சமுதாய பணிகளை பாராட்டி கவுரவித்தனர் என்பது குறிப்பிடத்தகது. 1954 ஆம் ஆண்டில் இதற்காக காயல்பட்டிணத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட விழாவிலே அவருக்கு வீரவாள் வழங்கபெற்றது. தளபதி என்ற பெயரும் சூட்ட பெற்றது

தஞ்சைப் பெரிய கோயில்

கங்கைகொண்ட சோழபுரம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள அரியலூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமம் ஆகும். பதினொன்றாம் நூற்றாண்டின் நடுவில் இதனை முதலாம் ராஜேந்திர சோழன் தனது தலைநகரமாக ஆக்கினார். இது பதிமூன்றாம் நூற்றாண்டு வரை சோழர்களின் தலைநகரமாக விளங்கியது. அங்கு ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பிரம்மாண்டமான சிவன் கோவில் ஒன்றும் உள்ளது.

தஞ்சைப் பெரிய கோயில் கட்டி முடிக்கப்பட்டு இருபது ஆண்டுகளில் கட்டப்பட...்ட கங்கை கொண்ட சோழபுரம் கோயில் தஞ்சைக் கோயில் பிரதானமான அல்லது மிக முக்கியமான இயல்புகளை ஆனால் அந்த இயல்புகளை வேறு ஒரு வகை உணர்ச்சியுடன் வெளிப்படுத்துகிறது. தஞ்சைப் பெரிய கோயிலில் ஆண்மையின் மிடுக்கும் வீரமும் பொங்கி வழிகிறது.

திருவாலங்காட்டுச் செப்பேடுகள் இந்த இராஜேந்திரனின் கங்கை நோக்கிய படையெடுப்பு ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் நீடித்தன என்று சொல்கின்றன. இந்த இரண்டு ஆண்டுக் காலத்தில், வட இந்தியாவின் அரசுகள் சோழர்களின் பெரும்படைக்கு முன் தோல்வியுற்றன; ரனசுராவின் படைகளை வென்று தர்மபாலாவின் நாட்டிற்குள் நுழைந்தன என்றும், அங்கே அம்மன்னனை வென்று கங்கை வரை சென்றதாகவும், தோல்வியுற்ற மன்னர்கள் மூலமாகவே கங்கை நதியின்நீரைச் சோழநாட்டுக்கு எடுத்து வந்தான் என்றும் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியமுடிகிறது.

இராஜேந்திரனுடைய மெய்க்கீர்த்தியில் ஸ்ரீவிஜயத்திற்குப் பிறகு பண்ணை என்ற இடம் குறிக்கப்படுகிறது. பண்ணை என்பது சுமத்திராவின் கீழ்க்கரையில் உள்ள பனி அல்லது பன்னெய் என்ற ஊராகும். மலையூர் என்பது மலேயா தீபகற்பத்தின் தென்கோடியில் பழைய சிங்கப்பூர் ஜலசந்திக்கு வடக்கே மலாயூர் ஆற்றுக்கு அருகில் உள்ளது.

இந்த இடத்தை சுற்றியுள்ள பகுதிகள் அப்படியே சோழறின் வாழ்வை பிரதிபலிப்பதாக உள்ளது. அப்படிப்பட்ட ஒரு அரசன் செய்த சாதனைகள் தந்தையின் புகழில் மறைந்துவிட்டது.

தந்தையைவிட அதிகம் சாதிக்கவேண்டும் என்ற எண்ணம் அவன் கட்டிய கோவிலில் தெரிகின்றது...!!

சிக்கனம் வேண்டாம் இரு விசயங்களில்

எப்போதும் சிக்கனத்தை வலியுறுத்திய தமிழறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதம் ,இரண்டு பொருள்கள் விசயத்தில் சிக்கனம் கூடாது என்றார் ,ஒருவருடைய படுக்கையும் ,கால் செருப்பும் எப்போதும் புதுசாகவே இருக்கவேண்டும் என்பார் அவர்

செவ்வாய், 17 ஏப்ரல், 2012

இனியவை நாற்பது -”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்


1.ஆழ்மனத் துள்ளேயே ஆழமாய் எண்ணமதை
பாழின்றி வைத்துப் பழகு.         .
2. அடுத்தவ ரெண்ண மழகெனப் பட்டு
கடுத்தலின்றி பேசுதல் நன்று.
3.உதவிட்ட நல்லவ ருள்ள மகிழ
உதவிகள் செய்து விடல்.
4. எறும்பினைப் போலவே என்றுமுன் வாழ்வில்
சுறுசுறுப்பை காணல் சிறப்பு.
5. உற்சாக மென்னு முயிரணுக்க ளுள்ளத்தில்
நிற்காம லோடட்டும் நாள்.
6. மகிழ்ச்சியைக் காட்டி மகிழ்ச்சியை யூட்டி
மகிழ்ச்சியைக் கண்ணாலேக்  காண்.
7. நல்ல எதிர்பார்ப்பு   நம்மில் வளர்ப்பதுவே
வல்லவனாய் மாற்றும் வழி.
8. நம்பிக்கை ஒன்றே நமக்குள்ள மூன்றாம்கை;
நம்பி யிறங்கு களம்.
9. வேட்கை யுணர்வுகள் வேகமாய்ப் பீறிடும்
யாக்கைதான் வேண்டுமே ஈண்டு.
10. வாய்மட் டுமன்று வசீகரக் கண்களும்
நோய்விட் டகலச் சிரிப்பு.
11. உள்ளத் தினுள்ளே உருவானப் புன்னகை
கள்ளமின்றி காட்டு மிதழ்.
12. உன்னையே உள்நோக்கி உன்னையே நீகண்டால்
உன்னையே மாற்றும் மனம்.
13. உன்வாழ்வு உன்றன் உளப்பூர்வ எண்ணமெனில்
உன்வாழ்வே நீயே உணர்.
14. அடாதிழப்பு வந்தாலும் அங்கேயே நிற்காமல்
விடாதுழைப்பு செய்து விடல்.
15. எவரின் உதவியும் எப்போதும் வேண்டும்
எவருடனும் நட்புடனே பேசு.
16.  மற்றவரின் ஆசை கவனம் மகிழ்ச்சி
பற்றியேப் பற்றுடன் கேள்
17.   குற்றங்களை ஏற்கும் குணம்தான் பிறரிடம்
பற்று வளர்த்திடும் பண்பு
18.  சரளமாய்ப் பேசிடும் சங்கீதம் போல
கரவோசை காணும் இசை.
19. மனச்சுமை போக்க மனம்விட்டு பேச
தினம்சுரக்கும் புத்துணர்வு பார்.
20. உரையா டலில்கண்ணை உற்றுநீ பார்த்தால்
திரையில்லா அன்பே தெரிவு
21.  எண்ணித் துணிந்தால் எவரும் வியந்திடும்
வண்ணம் செயலும் நிகழ்வு.
22. சிரித்த முகமே சிறந்த முகமாம்
விரிந்த மலரின் மணம்.
23. ஆபத்தை நோக்கி ஆர்வமாய்ப் போற்று
கோபத்தை விலக்கி விடல்.
24. தீர்வுகள் காணத் தெரியும் புதியவைகள்
ஆர்வமுடன் செய்யப் பழகு.
25. மனமும் செயலும் மொழியும் கலந்த
தினப்பயிற்சி என்றும் சிறப்பு.
26. ”உன்னால் முடியும்” உளமதில் சொல்லிவை
பின்னால் தெரியும் விளைவு.
27. உன்னை விடவும் உலகில் நலிந்தவரை
தன்னுயிராய்க் காத்தல் நலம்.
28.  எல்லா உலகும் இயக்கும் இறையிடம்
எல்லாமும் விட்டு விடு.
29. வெற்றி கனியினை வெல்லும் வரையிலே
பற்றிய பாதையில் செல்.
30. எல்லா செயல்களும் ஏற்கப் படவேண்டி
நல்லெண்ண உள்ளமே கொள்.
31. இறந்தகாலம் விட்டு இனிவரும் காலம்
ம்றந்து நினைக்கவே இன்று.
32.  இன்பமும் துன்பமும் இங்கொன் றெனயெண்ணி
அன்பினைப் பற்றியே வாழ்.
33. கட்டுப்பாடு கண்ணியம் கட்டுடல் காட்டுமே
விட்டு விடாது ஒழுகு.
34. தேடலொன்றே வாழ்வினைத் தேடிடும் காரணம்
ஓடவோடத் தேடி உழை.
35. வாழ்க்கைப் புயலை வரவேற்று கொண்டால்
வாழ்க்கைப் பழகிடும் பார்.
36. சிடுசிடுப்பு கோபம் சிதைத்திடும் உன்னை
அடுத்தடுத் தென்றும் அழிவு
37. ஆசை வளர்த்திடு ஆங்கே முயற்சியின்
ஓசை விளையும் உளம்.
38. நன்றி மறவாமை நன்றெனக் கொண்டாலே
என்றும் வருமாம் உதவி.
39. பாரமாய் வாழ்வை பயத்துடன் பார்த்தால்
தூரமாய் நிற்கு முலகு.
40. எண்ண மெதுவோ இயக்கமு மதுவேயாம்
திண்ணம் உளவியல் சொல்.
நன்றி :
”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்
எனது வலைப்பூ முகவரி: http://www.kalaamkathir.blogspot.com/

வர்மம்

ஆதித் தமிழன் படைத்த அற்புதமான கலைகளில் ஒன்று .இன்று உலக நாடுகள் எதிரியை அழிக்க கோடிகளைக் கொட்டி அணுகுண்டு தயாரித்துக் கொண்டிருக்கும் வேலையில், இருக்கும் இடத்தில இருந்து 1000 கிலோமீட்டர் அப்பால் உள்ள எதிரிகளை எந்த ஆயுதமும் இல்லாமல் தாக்கக் கூடிய அபூர்வக் கலைகள் படைத்தவர் நாம் என்பது உங்களுக்கு தெரியுமா ? இந்த வர்மக் கலை ஒரு கடல் இதை பற்றி எழுத ஒரு பக்கம் போதாது..அதனால் சுருக்கமாக சிலவற்றை மட்டும் உங்களுக்கு தெரிவிக்கிறேன். இந்த கலையை உருவாக்கியவர் சித்தர்களில் தலை சிறந்தவரான " அகத்தியர் " . இது உருவான இடம் பொதிகை மலை ( இன்றைய குற்றால மலை ) . "தென் பொதிகை நாதன் துணையால் பாடி வைத்தேன் முறை நன்றமே ". என்ற கி.மு வில் எழுதப்பட்ட ஒரு ஓலைச் சுவடி வரியே இதற்கு சாட்சி !." அகத்தியர் " கற்பித்த சில வர்மக்கலைகளில் "அகஸ்தியர் வர்ம திறவுகோல்","அகஸ்தியர் வர்ம கண்டி ", "அகஸ்தியர் ஊசி முறை வர்மம் ","அகஸ்தியர் வசி வர்மம்", "வர்ம ஒடிவு முறிவு ","அகஸ்தியர் வர்ம கண்ணாடி ","வர்ம வரிசை","அகஸ்தியர் மெய் தீண்டாகலை" ஆகியவை குறிப்பிடத்தக்கவை. "ஜடாவர்மன் பாண்டியன் " என்ற மன்னன் தான் இதில் வல்லவனாக திகழ்ந்தான்.பின்னர் பாண்டிய இனம் அழியத்தொடங்கியதும், இந்த கலையும் அழியத் தொடங்கியது. இதற்கு பின்னர் வந்த " சோழர்கள் " இதனை கற்றனர். பின்னர் இந்த கலை "இலங்கை", "சீனா" போன்ற நாடுகளில் பரவத் தொடங்கியது.காஞ்சியில் வாழ்ந்த போதி தர்மர் என்ற துறவி " புத்த" மதத்தை பரப்ப " சீனா " செல்லும் போது இந்த கலையும் அங்கு பரவியது.“Tenjiku Naranokaku" என்ற சீன வாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் "The fighting techniques to train the body from India " என்ற பொருளை தருகின்றது."ஹு ஷிஹ் " என்ற அமெரிகாவிர்க்கான சீன தூதர் ஒருமுறை கூறும் போது " இந்திய ஒரு சிப்பாயை கூட சீனாவுக்கு அனுப்பாமல் 20 நூற்றாண்டுகள் சீனாவை ஆண்டுள்ளது என கூறி உள்ளார். "1793 " ல் வெள்ளையர்கள் இந்தியா மீது படை எடுக்கும் போது.தாங்கள் இத கலை மூலமாக பாதிக்கப் படக்கூடாது என்பதற்காக தமிழக இளைஞ்சர்கள் இந்த கலை பயில்வதை தடை செய்தனர்.அன்று ஆரம்பமான அழிவு , இந்தியா சுதந்திரம் அடைந்தும் தொடர்கிறது !.இந்த கலையானது அனைவருக்கும் கற்று தர மாட்டாது. இதன் ஆசிரியர் தன் மாணவனை 12 வருடங்கள் அவனுடைய பழக்க வழக்கங்களை கண்காணித்த பிறகே கற்றுத் தருவார்!!.இந்த கலையின் மூலம் ஒருவர் தாக்கப்பட்டால் இதற்கென்று தனியான சிகிச்சை முறை கையாள வேண்டும் என " "அப்பனே வர்மத்தில் அடி பிடி வெட்டு குத்து கற்று பின் வரிசையுடன் பின் வர்ம இலக்கு செய்யே " என்ற வரிகள் தெரியப்படுத்துகின்றன.இதை எந்த வயதினரும் கற்கலாம்! ஆனால் யார் மட்டுமே கற்க முடியும் ? " "கர்ம வினைகள் அவமிருந்து வந்து கூடி விட்ட குறை தொட்ட குறை என விழம்பலச்சே "என்ற வரிகள் தெளிவு படுத்துகின்றது .வர்மக் கலைகளின் வகைகள் " "தொடு வர்மம்", " படு வர்மம்","தட்டு வர்மம் ","நோக்கு வர்மம் " என வகை படுத்தப்பட்டுள்ளது
தொடுவர்மத்தால் தாக்கப்பட்டவர் உடனடியாக இதன் பாதிப்பை உணர மாட்டார் .இதை உணர்வதுக்குள் இவருக்கு சிகிச்சை செய்தாக வேண்டும்.இந்த பாதிப்பானது ஒரு மணி நேரத்திலோ,ஒரு நாளிலோ, ஒரு மாததிலோ,அல்லது வருடக்கணக்கில் கூட இருக்கும் !. படுவர்மத்தால் தாக்கப்பட்டால் சிலமணி நேரத்துக்குள் பதிப்பு உணரப்படும். இதற்கு சிகிச்சையும் இந்த காலத்திற்குள் செய்தாக வேண்டும் !.தட்டு வர்மம் யாருக்கும் கற்று தரப்படமாட்டாது.இது மிகவும் மோசமான பிரிவு .ஆசான் மனது வைத்தால் மட்டுமே இது நடக்கும் .நோக்குவர்மம் தான் அனைத்திலும் உச்சமானது யாரையும் தொடமால் கண் பார்வையாலேயே தாக்கி உயிரிழக்க வைக்க முடியும் ! உதாரனத்திற்க்கு சென்னையில் உட்கார்ந்து கொண்டு மதுரையில் உள்ளவரை தாக்கலாம் ! அதே போல் சென்னையில் இருந்தே மதுரையில் இருப்பவரின் எல்லா நோய்களையும் குணப்படுத்தலாம் !!!.ஒரே சமயத்தில் எந்த ஆயுதமும் இல்லாமல் நூறு பேரை தாக்கும் வல்லமை கொண்டது இந்த கலை, ஆனால் இது யாருக்கும் கற்று தர படமாட்டாது. ஆசான் தன மாணவன் ஒழுக்கமானவன் என முடிவு செய்தால் வேண்டுமானால் இதை கற்கலாம் " தமிழர்களாய் பிறந்ததற்கு ஏதோ ஒரு ஜென்மத்தில் நாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும் " என்று தான் எனக்கு தோன்றுகிறது. " இப்படிப்பட்ட கலைகளை அழிய விடாமல் பாதுகாப்பது, ஒவ்வொரு தமிழனின் கடமை. இனியாவது விழித்துக்கொள்வோம் !!!.

திங்கள், 16 ஏப்ரல், 2012

அழகி ஒருத்தி ஆற்றில்

அழகி ஒருத்தி ஆற்றில் அடித்துச் செல்லப்படும் போது
''நமக்கென்ன''என்று பாராமல் இருப்பவன் மனித மிருகம்.
''ஆபத்து,ஆபத்து!''என்று அலறுபவன் பொது ஜனம்.
''ஐயோ பாவம்''என்று முணுமுணுப்பவன் அனுதாபி
''ஆண்டவனே, அவளைக் காப்பாற்று'' என்பவன் பக்தன்.
''அற்புதமான அழகு''என்று அந்த நிலையிலும் ரசிப்பவன் கவிஞன்.
''பெண்களும் நீச்சல் கற்க வேண்டும்''என்பவன் சீர்திருத்தவாதி.
''ஆற்றில் குளிக்கக்கூடப் பாதுகாப்பில்லை''என்பவன் எதிக்கட்சிக்காரன்.
''எவ்வளவு இழப்பீடு வழங்கலாம்''என யோசிப்பவன் ஆளும் கட்சிக்காரன்.
காப்பாற்றும் முயற்சியில் உயிர் துறப்பவன் தியாகி.
ஆற்றில் இறங்கி,காப்பாற்றி,தன வழியே செல்பவன் கர்மயோகி.

மன நோயாளியும் ,சர்ச்சிலும்

சர்ச்சில், இங்கிலாந்து பிரதமராக இருந்த நேரம். மனநல மருத்துவமனை ஒன்றை பார்வையிட சென்றார். அப்போது மனநோயாளி ஒருவர், நீங்கள் யார் என்று சர்ச்சிலை பார்த்து கேட்டார். ''நான் பிரதமர்'' என்றார் சர்ச்சில். அதைக்கேட்டதும் அந்த மனநோயாளி பலமாக சிரித்தார். ''இங்கே வந்த புதிதில் நானும் இப்படித்தான் பிரதமர், ஜனாதிபதி என்று சொல்லிக்கொண்டிருந்தேன். போகப்போக குணமாகிவிடும்'' என்றார். அதைக் கேட்டு அதிர்ச்சியாகி விட்டார் சர்ச்சில்.

இஸ்லாமிய சர்ச்சைகளுக்கு ஜமாலி ஹஜ்ரத்தின் பதில்கள்


"நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்? ஒரு கணம் சிந்திப்போமாக" என்ற தலைப்பில் வெளி வந்த கட்டுரைக்கும், சகோதரி ரஜீஹா ஷிபான் அவர்களால் இதற்கு கேட்கப்பட்ட விளக்கத்துக்கும் பதில் அளிக்கும் முகமாக உருவான கட்டுரை இது.

முதலில் ஒன்றை கூறிக் கொள்ள விரும்புகின்றேன்:
அல்லாஹுதஆலாவை மனதார ஏற்று, அவனது ஹபீப் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மற்றும் ஸஹாபாக்களின் வழிமுறையான ஸுன்னத்தை முழுமையாக பின் தொடர்ந்து அல் குர்ஆன், அல் ஹதீஸ் அடிப்படையில், மார்க்க சட்டத்திட்டங்களை முறைப்படுத்தி தந்த இமாம்களுக்கு கட்டுப்பட்டு நல்லோர்களையும் பெரியார்களையும் கண்ணியப்படுத்தி வாழ்பவர்களே அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தினர் எனப்படுவர்.எனவே இதற்கு மாற்றமாக எது நடந்தாலும் அது தவறே. ஆனால் இந்த கட்டுரையில் எழுத பட்டு இருக்கும் சில கூற்றுக்கள் வீணான குற்றச்சாட்டுகளை சுமத்துபவையாக உள்ளது. அதில்,

முதலாவது குற்றச்சாட்டு:-

இதோ இஸ்லாத்தின் பெயரால் நாம் செய்யும் பித்அத்துகள்! சடங்குகள்!!
முதன் முதலில் நமக்குக் குழந்தை பிறந்ததும் மதபோதகர் ஒருவரை அழைத்து பொருள் புரிந்தோ புரியாமலோ அழகாகத் தெரியும் ஒருபெயரை தேர்வு செய்து பாத்திஹா, துஆ ஓதி பெயர் சூட்டி மகிழ்கிறோம்.

விளக்கம்:
பாங்கு சொல்லி பெயர் வைக்க வேண்டுமா? –
இதே போன்று தான் பாத்திஹா அது குர்ஆனில் வரும் ஒரு சூரா அதை ஓதுவது பரகத்துக்காக. ஒரு குழந்தையின் நலனுக்காக துஆ கேட்பது ஒரு சுன்னத் முறை.

இரண்டாவது குற்றச்சாட்டு:

பிள்ளைகளுக்கு ஊர்வலம் நடத்தி சுன்னத் வைபவம், புனித நீராட்டு விழா, திருமண வைபவங்கள் போன்றவற்றை சீதனப் பகட்டுகள், மேளதாளங்கள், வாணவேடிக்கைகள், பாட்டுக்கச்சேரிகள் என ஊரே வியக்கும்படி நமது வீட்டு வைபவங்களை குருமார்களின் தலைமையில் ஃபாத்திஹா, துஆ போன்றவற்றை ஓதி கோலாகலமாக அரங்கேற்றி பெருமைப்படுகிறோம்.

விளக்கம்:
இதற்கும் சுன்னத் வல் ஜமாஅத்துக்கும் என்ன சம்பந்தம்? இது அறியா பாமரமக்கள் செய்யும் அறியாமை கூத்துக்கள். இதை பற்றி அவர்களுக்கு எடுத்து சொல்லி அவர்களை திருத்த வேண்டும். அதுவே முறை அதை விட்டு,விட்டு இதை சுன்னத் வல் ஜமாத்துடன் ஒப்பிடுவது கேலிக்குறிய விடயம்.

மூன்றாவது குற்றச்சாட்டு:
நடை மவ்லிது, விடி மவ்லிது
நல்லவை நிகழவும், பயணம் போகவும் நாடியது நடக்கவும் நடை மவ்லிது, விடி மவ்லிது ஓதி 'பரக்கத்தும் பொருளும்' குவிய விடிய விடிய சினிமா மெட்டுகளில் கச்சேரிகள் நடத்தி அமர்க்களப்படுத்துகிறோம்.

விளக்கம்:
மௌலித் ஓதுவது தவறல்ல. அதற்கு குர்ஆன் ஹதீஸ் படி ஆதாரம் இதோ:

மௌலிது நபி S.A.W

சினிமாப் பாட்டு ராகத்தில் மவ்லித் ஓதலாமா?

ஆனால் விடி மௌலித், நடை மௌலித் இப்படியான மௌலிதுகள் எதுவும் இல்லை. இது மக்கள் அவரவர் வசதிக்காக வைத்துருக்கும் பெயராக இருக்கலாம். அதுமட்டும் அல்ல சினிமா மெட்டுக்களில் ஓதுவது கண்டிக்கத்தக்கதாகும். இதை தவிர்க்கும்படி பாமரமக்களுக்கு எடுத்து சொல்லுவது நம் கடமை.


நான்காவது குற்றச்சாட்டு:
ராத்திபு, குத்பிய்யது, ஞானப்பாடல்
இவை போதாது என இறைவனின் விசேச அருளைப்பெற ராத்திபு, குத்பிய்யத்து, தரீக்காக்களின் பல்வேறு செய்குகள் அரங்கேற்றிய திக்ருகள், ஹல்காக்கள், ஞானிகள் இயற்றிய ஞானப்பாடல்கள், 4444 தடவைகள் என்ற எண்ணிக்கையில் ஸலவாத்துந் நாரியாவெனும் நரகத்து ஸலவாத்துகளை ஓதி வருகிறோம்.

விளக்கம்:
ராத்திபு, குத்பிய்யது, ஞானப்பாடல் இவைகளில் எந்த தவறும் இல்லை. இதை குற்றம் சுமத்துவதில் இருந்து தெரிகிறது இதை எழுதியவனின் மடமைதனம். இதில் என்ன
இருக்கிறது என்று கூட ஆராயாமல் வீணான குற்றம் சுமத்தப்பட்டு இருக்கிறது. ராத்திபு இந்த கிதாபில் அல்லாஹ்வின் திருநாமங்கள் அவனை போற்றும் திருகுர்ஆன் வசனங்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மீது ஸலவாத் இது தவிர அதில் எந்த பிழைகளும் இல்லை. அல்லாஹ்வின் திருநாமத்தை திக்ர் செய்வது தவறா?

பள்ளிவாயல்களில் திக்ரு செய்வதைத் தடுப்பவர்களின் நிலை என்ன? அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அவனது பெயர் திக்ரு செய்யப்படுவதை தடுத்து, அவைகளை பாழாக்க முயற்சிப்பவனை விட மகா அநியாயக்காரன் யார்? இத்தகையோர் அச்சமுடையவர்களகவேயன்றி அவைகளில் நுழைய அவர்களுக்குத் தகுதி இல்லை. அவர்களுக்கு இம்மையில் இழிவுண்டு, மறுமையில் கடும் வேதனையுண்டு. " (சூரா பகரா - 114 )

"4444 தடவைகள் என்ற எண்ணிக்கையில் ஸலவாத்துந் நாரியாவெனும் நரகத்து ஸலவாத்துகளை ஓதி வருகிறோம்"
வெவ்வேறு வகையான சலாவத்து ஓதலாமா?


ஐந்தாவது குற்றச்சாட்டு:
பேய் பிசாசுகளை ஓட்ட தாவீசுகள், முடிச்சுக் கயிறுகள், மாய மந்திரங்களை தட்டைப் பீங்கானில் இஸ்முகள் என்ற பெயரில் எழுதிக் கரைத்துக் குடிப்பது, அரபி எழுத்துகளில் அழகாக வடித்து வீட்டுச்சுவர்களில் மாட்டுவது, நோய் நொடிகள் தீர பெண்களுக்கு தனியாக ஓதிப் பர்ப்பது போன்ற ஆயிரமாயிரம் போலிச் சடங்குகளை இஸ்லாத்தின் பெயரால் அரங்கேற்றி அப்பாவி மக்களை ஏமாற்றிவரும் அவலக்காட்சிகளையும் காணுகிறோம்.

விளக்கம்:
அல் குர்ஆனில் இருக்கும் ஆயத்துகளை கொண்டு முறைப்படி ஓதி பார்க்கலாம். என்பதை விளக்கும் ஆதாரம் இதோ,
தாயத்


ஆறாவது குற்றச்சாட்டு:
மரணச்சடங்குகளும் கர்மாதிகளும்
மரணச் சடங்குககளோ இந்துக்களை மிஞ்சுமளவுக்குச் சென்று விட்டது.

விளக்கம்:
கத்தம் ஓதலாமா

வஸீலா மற்றும் பாத்திஹாக்களுக்கு ஆதாரம் உண்டா?

ஏழாவது குற்றச்சாட்டு:

அடுத்து ஊர் பெயர் வரலாறே இல்லாத கப்ருகளுக்கு தெய்வீகப் பெயர்சூட்டி, அவ்லியாக்கள், ஷெய்குமர்ர்கள், நாதாக்கள் என அங்கீகாரமளித்து ஆண்டுதோறும் உற்சவங்கள், சந்தன உரூஸ்கள், கூடு கொடிகள், யானை ஊர்வலங்கள், கரக ஆட்டங்கள் என ஊரே அமர்க்களப்படும்படி விழாக்கள் எடுப்பதையும் கண்டு வருகிறோம். பாட்டுக்கச்சேரியும் நடனமும், இவை போதாதென்று நபிகள் நாயகம் பிறந்த நாள் விழா, கௌதுல் அஃலம் நினைவு விழா, ரிஃபாயி ஆண்டகை விழா, நாகூர் நாயக விழா, காஜா முயீனுத்தீன் ஜிஸ்தி உரூஸ் விழா, மோத்தி பாவா ஆண்டு விழா, குணங்குடி மஸ்தான் விழா, பொட்டல் புதூர் மைதீன்(யானை) ஆண்டகை விழா, ஆத்தங்கரை செய்யிதலி அம்மா விழா, பீமாப்பள்ளி பீஅம்மா விழா, பீடி மஸ்தான் விழா, தக்கலை பீரப்பா விழா, மெய்நிலை கண்ட ஞானிகள் விழா என மிகவும் பக்தியோடு தேசிய விழாக்களாக கரக ஆட்டங்களுடன் யானை ஊர்வலம் சகிதமாக கொண்டாடப்பட்டு வரும் புதுமையான விழாக்களையும் நாடெங்கிலும் பரவலாகக் காண முடிகிறது.

விளக்கம்:

நாங்கள் ஊர் பெயர் தெரியாதவர்களுக்காக கப்ரு கட்டவும் இல்லை, அவர்களுக்கு விழா எடுக்கவும் இல்லை. முழு உலக முஸ்லிம்களாலும், முஜ்தஹிதுகலான உலமாக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சஹாபாக்கள், இமாம்கள், வலிமார்களின் கப்ருகளை ஸியாரத்து செய்கின்றோம்.

ஷாதுலி & ரிபாய் நாயகம்

இஸ்லாத்திற்காக பல தியாகங்களை செய்த நல் அடியார்களுக்காக அவர்களை சிறப்பிக்கும் முகமாக, அவர்களின் நினைவுநாளை கண்ணியப்படுத்துகின்றோம். அது ஒரு சிறந்த செயலாக இருக்கிறது. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் அன்னை கதீஜா ரலியள்ளஹு அன்ஹா அவர்களின் நினைவு நாளில் ஆடு அறுத்து அதை அவர்களின் தோழிகளுக்கு பங்கீடு செய்பவர்களாக இருந்துள்ளார்கள். அவ்லியாக்களுக்காக விழா எடுப்பது, அவர்களுக்காக மௌலித் ஓதுவது இது சம்பந்தமான ஆதாரம் இதோ,

முஹியித்தீன் மௌலிது - ¼

முஹியித்தீன் மௌலிது - 2/4

முஹியித்தீன் மௌலிது - ¾

முஹியித்தீன் மௌலிது - 4/4

பதில்.பாகம் - 01
தொழுகைக்காக பெண்கள் பள்ளிவாசலுக்கு செல்லலாமா?
தர்ஹாவில் கொடியேற்றலாமா?
கப்ரில் சந்தனம் பூசலாமா?
பெண்கள் ஜியாரத் செய்யலாமா?
பித் அத் என்றால் என்ன?

பதில் பாகம் - 02
தொழுகைக்காக பெண்கள் பள்ளிவாசலுக்கு செல்லலாமா?
தர்ஹாவில் கொடியேற்றலாமா?
கப்ரில் சந்தனம் பூசலாமா?
பெண்கள் ஜியாரத் செய்யலாமா?
பித் அத் என்றால் என்ன?

ஆனால் இந்த கச்சேரி, பாட்டு, நடனங்கள் அனைத்தும் கண்டிக்கப்பட வேண்டியவை. இது மார்க்கத்திலும் சரி, சுன்னத் வல் ஜமாத்தின் கொள்கையின்படியும் மிகவும் பிழையான ஒரு விசயம். இது தடுக்கப்பட வேண்டியது. இதை சுன்னத் வல் ஜமாத்தினர்கலான நாங்கள் எதிர்த்து கொண்டுதான் இருக்கிறோம். அதுமட்டும் அல்ல சுன்னத் ஜமாத்தின் பெரியார்களும் இதை வன்மையாக கண்டித்தும் இருக்கிறார்கள். இந்த காரியங்களை செய்யும் பாமரமக்களுக்கு இந்த தவறுகளை எடுத்து கூறி அவர்களை திருத்த வேண்டிய பாரிய பொறுப்பு எல்லோருக்கும் உண்டு. காலில் புண் வந்தால் அந்த புண்ணுக்கு மருந்து போட்டு ஆறவிட வேண்டுமே தவிர காலையே வெட்டி விடுவது முட்டாள்தனம் அல்லவா? எனவே நல்ல விசயங்கள் நடக்கும் இடத்தில் நடக்கும் அனாச்சாரங்களை தடுக்க வேண்டுமே தவிர அந்த நல்ல விசயங்களே நடக்க கூடாது என்று தடுப்பது அறிவார்ந்த செயல் அன்று. இன்று திருமண வீடுகளில் திருமணம் என்ற பெயரில் மார்க்கத்துக்கு முரணான காரியங்கள் நடக்கின்றது அதற்காக திருமணமே செய்ய கூடாது என்பதா? அல்லது அங்கு நடக்கும் அனாச்சாரங்களை தடுப்பதா சிறந்தது? சற்று சிந்தியுங்கள்.

எட்டாவது குற்றச்சாட்டு:
ஞானமர்ர்க்கத்தின் பெயரால் தீட்சைகள்

விளக்கம்:
இது ஒன்றும் மார்க்கத்தில் புதிதான செயல் அல்ல. பைஅத் முறை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் சஹாபா பெருமக்களுக்கும் புதிதாக இஸ்லாத்திற்கு வரும் மனிதர்களுக்கும் வழங்கிய ஒன்றுதான் இந்த பைஅத் (தீட்சை) எனப்படுவது. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் கையை பிடித்து இனி நாங்கள் நல் முஸ்லிம்களாகவும், பொய், புறம் பேசாதவர்களாகவும் , அமானிதங்களை பேணகூடியவர்களாகவும் உண்மை பேசுபவர்களாகவும் இருப்போம் என்று சஹாபாக்கள் பைஅத் செய்து கொண்டார்கள். அது ஒரு தலைவருக்கு கட்டுப்பட்டு நேர்வழியில் நடக்கும் வழிமுறை. அது அல்லாஹ்வை அடைய இலகுவான பாதையாக இருக்கும். அது போலவே ஒரு அல்லாஹ்வை நெருங்கிய சாலிஹான பெரியவரிடம் பைஅத் எடுத்து ஒருவன் அந்த பெரியவர் சொல்லி கொடுக்கும் திக்ர், ஸலவாத், நபிலான தொழுகைகள் இதர வழிப்பாடுகள் மூலம் அல்லாஹ்வை அடைய முடியும். இதுவே பைஅத். இது மார்க்கத்துக்கு முரணான ஒன்று அல்ல. அது நபிவழி என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஆனால் இதில் சில பேர் வயிறு வளர்க்க, ஆதாயம் தேட நாடி செய்கின்றார்கள் என்றால் அது அவர்கள் தவறு. நிச்சயமாக அதற்கான தண்டனையை அவர்கள் அல்லாஹ்விடம் பெற்று கொள்ளுவார்கள். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் ஷைக்காக அல்லாஹ் இருந்தான், சஹாபாக்களின் ஷைக்காக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இருந்தார்கள், தாபியீன்களின் ஷைக்குகளாக சஹாபாக்கள் இருந்தார்கள், தபஅத்தாபீயீன்களின் ஷைக்குகளாக தாபியீன்கள் இருந்தார்கள் இதை போன்று ஒவ்வொரு கால கட்டத்திற்கும் முன்சென்ற சமுதாயத்தின் உலமாக்கள் பின்வரும் சமுதாயத்திற்கு இல்மை கற்றுக் கொடுக்கும் ஷைக்குகளாக இருந்தார்கள். இன்று வரை இந்த வழிமுறை ஸுன்னத் வல் ஜமாஅத்தின் தஃவா அமைப்புகளான தரீக்காக்கள் மூலமாக நடைமுறை படுத்தப்பட்டு வருகின்றது.

ஷைக்கை பின்பற்றுவதற்கு ஆதாரம் உள்ளதா?

எது இஸ்லாத்தின் தஃவா அமைப்புகள்:



ஒன்பதாவது குற்றச்சாட்டு:

இதோ ஒரு கணம் சிந்திப்பீர்! நாம் இந்துக்களா ? முஸ்லிம்களா ?

விளக்கம்:

இந்த தலைப்பில் இருக்கும் அத்தனை விடயத்தையும் பிழை என்று நாங்கள் ஒத்துகொள்ள மாட்டோம். இப்படி எல்லாவற்றுக்கும் ஒப்பீடு செய்தால் அது முட்டாள்தனம், நாங்களும் இப்படி கேட்டால்?......

1. அங்கே காசிக்கு புனித பயணம் : இங்கே ஹஜ்ஜுக்கு புனித பயணம்
2. அங்கே கோயிலைச் சுற்றி வருதல் : இங்கே கஃபாவை சுற்றி வருதல்
3. அங்கே சிலைக்குப்பட்டுப்புடவை : இங்கே கஃபாவுக்கு பட்டுத்துணி
4. அங்கே திருப்பதி மொட்டை : இங்கே ஹஜ்ஜு மொட்டை
5. அங்கே கங்கை நீர் : இங்கே ஸம் ஸம் நீர்
6. அங்கே மலைக்கு காவி உடை : இங்கே ஹஜ்ஜுக்கு இஹ்ராம்
7. அங்கே சிலை முத்தம் : இங்கே ஹஜருல் அஸ்வத் முத்தம்

இப்படி வரிசைப்படுத்தலாமா? நவூதுபில்லாஹா!!! அதுவும் இதுவும் ஒன்றா? இந்த வஹாபிகள் முட்டாள் தனமாக உளரும் இந்த முறைபடி நாங்களும் வரிசைப்படுத்தலாமா? அது முறையா? எதை எதோடு ஒப்பிட்டு இவர்கள் பார்க்கின்றார்கள். காபிர்கள் இதை செய்கின்றார்கள் என்பதற்காக நாங்களும் மார்க்கத்தில் கூடுமான விசயங்களை அதோடு ஒப்பிட்டு செய்யாமல் இருப்பதா? அவர்களின் பட்டியலில் ஒரு சில விஷயங்கள் தவறு அதை நாங்கள் ஏற்று கொள்ளுகின்றோம் முன்னர் சொன்னது போல பாமரமக்கள் செய்யும் அறிவீனம். அதற்காக எல்லா விஷயங்களையும் பிழை என்று இப்படி ஒப்பீடு செய்வது முட்டாள்தனம்.


எனவே, இவற்றையெல்லாம் அசை போட்டு சிந்தித்து சீர்தூக்கி நமது அறிவிற்கேற்ற உயரிய மார்க்கமாம் தூய இஸ்லாத்தை வழுவாது பின்பற்றி குர்ஆன் சுன்னாஹ் சஹாபாக்கள், இமாம்கள், உலமாக்கள் வழியில் உண்மை முஸ்லிம்களாக வாழ்வோமாக!

வாருங்கள்.இன்று நாம் சபதம் ஏற்போம் !
அறிவுக்கேற்ற மார்க்கமாம் இஸ்லாத்தை நோக்கி அகில உலகமும் மிக வேகமாக வரும் இந்த கணினியுகத்தில், முஸ்லிம்களாகிய நாம், இனியும் அறிவுக்கே பொருந்தாத மூட நம்பிக்கைகளுடன் வாழும் பாமரமக்களை திருத்தி அவர்களுக்கு தூய இஸ்லாத்தையும், சத்தியப் பாதையான ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையை சொல்லி கொடுத்து சிறந்த ஒரு சமுதாய மக்களாக வாழ வழி அமைப்போம்.

சடங்கு சம்பிரதாயங்களைச் செய்து மோசம் போக மாட்டோம்! போலி மதவாதிகளால் ஏமாற மாட்டோம்!! போலி தௌஹீத்வாதிகளின் பொய்களை நம்பி ஏமாற மாட்டோம், இன்று நேற்று முளைக்கும் பொய்யர்களை பின்பற்ற மாட்டோம், அவர்களின் பொய்யான பேச்சை கேட்டு வழி கெட்டு போகமாட்டோம், அல்லாஹ்வின் நன் மக்களான சஹாபாக்கள், தாபீயீன்கள், தபதாபியீன்கள், இமாம்கள், வலிமார்களை இழிவுப்படுத்தாமல், அவர்களை கண்ணியம் செய்து வாழுவோம் என சபதம் ஏற்போமாக!

இஸ்லாத்தின் தூய கொள்கையான ஸுன்னத் வல் ஜமாஅத் என்னும் சத்திய பாதையில் உயிருள்ளவரை உறுதியுடன் பின்பற்றி அறநெறி வழுவாது வாழ்வோம்.
என இன்று வீரசபதம் ஏற்போமாக!

'இஹ்தினஸ்ஸராத்தல் முஸ்தகீம்'
இறைவா! எங்களுக்கு நேரான வழியைக் காட்டுவாயாக! (அல்குர்ஆன்: 1:06)

'ஸிராத்தல்லதீன அன்அம்த அலைஹிம்'
எவர்களின் மீது நீ அருள் புரிந்தாயோ, அத்தகையோரின் வழியில் நடத்துவாயாக!
(அவர்கள்தான் நபிமார்கள், ஸித்தீக்கீன்கள், ஸுஹதாக்கள், ஸாலிஹீன்கள் வழியில்)

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَة ً وَفِي الآخِرَةِ حَسَنَة ً وَقِنَا عَذَابَ النَّار

'ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனத்தன் வஃபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வகினா அதாபந்நார்'
எங்கள் இறைவா! எங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நன்மையை நல்கும் நல் வாழ்வை வழங்குவாயாக! (அல்குர்ஆன்: 2:201)

(நன்றி Mail of Islam)