சனி, 23 பிப்ரவரி, 2013

உண்மையான எளியவர்


1.திருச்சி , விமான நிலையம் அருகில் தங்களுக்கு இருந்த சொந்த இடத்தை ஏழை மக்களுக்கு இலவசமாக வழங்கிய குடும்பத்தின் வாரிசு !

2. 14 ஆண்டுகள் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் வரலாற்றுத்துறை தலைவர்

3.நூற்றுக்கணக்கான ஏழை மாணவர்களுக்கு தன் சொந்த செலவில் இலவசமாக உண்ண உணவும் , இருக்க இருப்பிடமும் அளித்து ,கல்வி கற்கச் செய்து அவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றி,இன்று உலகெங்கிலும் பெரும் மேதைகளாக , பெரும் பணக்காரர்களாக , பெரும் தொழில் அதிபர்களாக பரவி வாழ்வதற்கு தன் வாழ்க்கையை அர்பணித்துக் கொண்டவர் .

4.சென்னை பல்கலைகழக முன்னாள் செனட் சபை உறுப்பினர் .

5.பாரதிதாசன் பல்கலைகழக முன்னாள் நிலைக்குழு உறுப்பினர்

6. எல்லா மாநில மாணவர்களும் , டெல்லி சென்று தங்கள் கல்விச் சான்றிதழ்களை அட்டஸ்டேசன் பண்ணனும் என்று நிலையில் ,ஏழை மாணவர்கள் படும் கஷ்டத்தை கண்டு வருந்தி ; அந்ததந்த மாநில அரசுகளுக்கு அந்த அதிகாரத்தை மத்திய அரசு வழங்க காரணமாகத் திகழ்ந்தவர் .

7. சச்சார் கமிஷன் , ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அமைய காரணமாக இருந்தவர் .

8.வேலூர் பாரளுமன்ற உறுப்பினராக இருந்தவர் .

9.இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாணவர் அணி தலைவர் , மாநில இளைஞர் அணி அமைப்பாளர் ,மாநில கலாச்சாரப் பிரிவு செயலாளர் , மாநில அமைப்புச் செயலாளர் ,மாநில பொதுச்செயலாளர் , இன்று மாநில தலைவர் மற்றும் அகில இந்திய பொதுச்செயலாளர் என்று தன் உழைப்பால் படிபடியாக உயர்ந்தவர்

நம் இனமானப் பெருந்தலைவர் , முனிருல் மில்லத் ,பேராசிரியர் கே.எம்.காதிர் மொஹிதீன் !

ஸ்டார் விடுதிகளில் தங்கிக்குக் கொண்டு , சின்னத் திரை பேட்டிகளுக்கு ஆள்கள் மூலம் தங்களை வரவழைக்கச் செய்து , மேக்கப் பண்ணிக் கொண்டு சமுதாயத் தலைவர்கள் என்று பவனி வருபவர்கள் மத்தியில் , எம்பெருமானார் காட்டிய வழியில் அரசியல் நடத்திய கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் (ரஹ்) அவர்களை தன் அரசியல் தலைவராக ஏற்றுக் கொண்டு இஸ்லாமிய சமுதாயத்தின் மானம் ,மரியாதையை ,இச்ஷத்தை காப்பாற்ற பாடுபட்டுக் கொண்டிருக்கும் தலைமகன் பேராசிரியர் கே.எம்.காதிர் மொஹிதீன் அவர்கள்

நட்சத்திர ஹோட்டல் இல்லை..படுக்க பஞ்சு மெத்தை இல்லை ...தலைக்கு ஒரு தலைகாணி இல்லை காப்புக்கு காவலர்கள் இல்லை ....அத்தோடு A.K.47 துப்பாக்கி இல்லை ...தொண்டர்கள் புடை சூழவில்லை (அது வெறும் பந்தா )...மாணவர் கண்மணிகளின் பயிற்சி பாசறை நடக்கும் பயிலரங்கிற்கு தானே முன் நின்று உற்சாகப்படுத்தி கொண்டிருக்கும் மதிய வேளையில் சற்று துயிலும் சங்கைக்குரிய , சமுதாய வழி காட்டி , நம்மோடு வாழும் இறை நேசர் , எங்கள் அரசியல் ஆசான்,தேசிய செயலாளர் , தமிழ் மாநில தகைசால் தலைவர் , பேராசிரியர் K.M.காதிர் முஹ்யிதீன் M.A.Ex.M.P.

அல்ஹம்துலில்லாஹ் ! அல்லாஹு அக்பர் !

யா அல்லாஹ் ! பேராசிரியர் கே. எம்.காதிர் மொஹிதீன் அவர்களுக்கு நல்ல உள்ளவளமும், உடல் வளமும் கொடுத்து சமுதாயத்தை தலைமை தாங்கி நடத்திட அருள்புரிவாயாக !

செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

'அந்த' நாட்கள் மீண்டும் வந்திடாதோ?

1930- 1980 வரை பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன் மக்கள நம்மைபற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே 

WE ARE AWESOME !!!! OUR LIFE IS A LIVING PROOF

· தனி படுக்கையில் அல்ல அம்மா அப்பாக்கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான்

· எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.

· கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை.

· புத்தகங்களை பொதிமாடுகளாகஇருந்ததில்லை.

· சைக்கிள் ஒட்டும் போது ஹெல்மேட் மாட்டி ஒட்டி விளையாண்டது இல்லை.

· பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான் ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்ப்பதில்லை.

· நாங்கள் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான் நெட் நண்பர்களிடம் இல்லை.

· தாகம் எடுத்தால் தெரு குழாய்க்களில் தண்ணிர் குடிப்போம் ஆனால் பாட்டில் வாட்டர் தேடியதில்லை.

· ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி குடித்தாலும் நோய்கள் எங்களை வந்தடைந்ததில்லை.

· அதிக அளவு இனிப்பு பண்டங்களையும் தட்டு நிறைய சாதம் சாப்பிட்டுவந்த போதிலும் ஒவர் குண்டாக இருந்ததில்லை.

· காலில் ஏதும் அணியாமல் இருந்து நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை.

· சிறு விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தாலும் கண்ணாடி அணிந்ததில்லை.

· உடல் வலிமை பெறஊட்டசத்து பானங்கள்அருந்தியதில்லை .மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே உடல் வலிமை பெற்றவர்கள்.

· எங்களுக்கு வேண்டிய வீளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம்

· எங்கள் பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல ஆனாலும் அவர்கள் பணம் பணம் என்று அதன் பின்னால் ஒடுபவர்கள் அல்லர். அவர்கள் தேடுவதும் கொடுப்பதும் அன்பை மட்டுமே பொருட்களை அல்ல

· அவர்கள் தொடர்பு கொள்ளும் அருகாமையில்தான் நாங்கள் இருந்து வந்தோம் அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள ஏலேய்ய்ய் என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது அதனால் தொடர்பு கொள்ள செல்போனை தேட அவசியமில்லை.

· உடல் நலம் சரியில்லை என்றால் டாக்டர் வீடு தேடி வருவார் டாக்டரை தேடி ஒடியதில்லை

· எங்களது உணர்வுகளை போலியான உதட்டசைப்பினால் செல்போன் மூலம் பறிமாறவில்லைஉள்ளத்தில் இருந்து வரும் உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக எழுதி தெரிவித்து வந்தோம். அதனால் சொன்ன சொல்லில் இருந்து என்றும் மாறியதில்லை.

· எங்களிடம் செல்போன் டிவிடி, ப்ளை ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம் பெர்சனல் கம்பியூட்டர், நெட், சாட் போன்றவகள் இல்லை ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர்

· வேண்டும் பொழுது நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை.

· எங்கள் காலங்களில் திறமை மிக்க தலைவர்கள் இருந்தனர். அவர்கள் சமுகத்திற்காக தங்கள் செல்வங்களை செலவிட்டனர் இந்த காலம் போல சமுக செல்வங்களை கொள்ளை அடித்தவர்கள் அல்லர்.

· உறவுகள் அருகில் இருந்தது உள்ளம் நன்றாக இருந்ததால் உடல் நலம் காக்க இன்சூரன்ஸ் எடுத்தத்தில்லை

· நாங்கள் எடுத்த புகைபடங்கள் கருப்பு வெள்ளையாக இருந்தாலும் அதில் உள்ளவர்களிடம் வண்ணமயமான நல்ல எண்ணங்கள் இருப்பதை உணரலாம். ஆனால் இப்போது எடுக்கப்படும் படங்கள் கலராக இருக்கலாம் ஆனால் அதில் உள்ளவ்ர்களின் எண்ணங்கள் கருப்பாகவே இருக்கின்றன.

· இலவசம் பெறும் பிச்சைகாரர்களாக இருந்ததில்லை.

· இந்த காலங்களில் பிறந்து வளர்ந்த வந்த நாங்கள் அதிர்ஷ்ட சாலிகளா இல்லையா என்பதை இப்ப சொல்லுங்கள்

நன்றி : நண்பர் பாஸ்கரன்.

ஞாயிறு, 10 பிப்ரவரி, 2013

இன்று ஒரு தகவல் 1

ஒரு ஊருல ஒரு முனிவர் இருந்தாரு. ஒரு நாளு அவரப் பாக்க 4 பேரு வந்திருந்தாங்க. முனிவர்கிட்ட அந்த 4 பேரும்,"சாமி ஒலகத்த புரிஞ்சிக்கவே முடியலயே அதுக்கு என்ன வழின்னு" கேட்டாங்க. அதுக்கு அந்த முனிவர் "தெரியலயப்பான்னு" ஒத்த வரில பதில் சொல்லிட்டாரு. ஆனாலும் வந்தவங்க விடாம."என்ன சாமி நீங்க எவ்ளோ பெரிய முனிவர் இதுகூடத் தெரியலைன்னு சொல்லுறிங்களே!" அப்டின்னு கேட்டாங்க. அதுக்கு முனிவர் அவங்ககிட்ட "சரி இப்ப நான்உங்கள ஒரு புஷ்பக விமானத்துல அழைச்சிகிட்டுப் போவேன். போற வழியில ஒரு காட்சிய உங்களுக்கு காட்டுறேன். அது பத்தி உங்களோட கருத்த நீங்க சொல்லனும், கருத்து தப்பா இருந்திச்சின்னா இந்த விமானம் உங்கள கீழ தள்ளிவிட்டுடும்" அப்டின்னாரு. சரின்னு அந்த 4 பேரும் முனிவரோட சேந்து புஷ்பக விமானத்துல ஏறினாங்க.

கொஞ்ச தூரம் போனபிறகு ஒரு எடத்துல ஒரு புலி , குட்டிபோட்டுக்கிட்டு இருந்திச்சி. குட்டி போட்ட பெறகு தனக்கும் தன் குட்டிகளுக்கும் பசிக்கு எற தேடி அந்தப் பக்கமா வர ஆரம்பிச்சிச்சி. இந்தப் பக்கமா ஒரு மான், அதுவும் குட்டி போட்டுட்டு பசிக்கு தண்ணீர் குடிக்கிறதுக்கு அந்தப் பக்கமா வந்திச்சி. மானப் பாத்த அந்தப் புலி சட்டுன்னு அது மேல பாஞ்சி அதக் கொன்னு தானும் சாப்புட்டு தன்னோட குட்டிகளுக்கும் குடுத்திச்சி. அத சாப்புட்ட அந்தப் புலிக் குட்டிங்களுக்கு சந்தோசம். இந்தப் பக்கமா தன் அம்மாவ பரிகுடுத்த மான் குட்டிகளுக்கு வருத்தம். இந்தக் காட்சிய அவங்கிட்ட காட்டின முனிவர் இதப் பத்தி உங்க கருத்து என்னன்னு கேட்டாரு.

அதுக்கு அந்த 4 பேருல ஒருத்தர் “இது ரொம்ப தப்பு. மான் குட்டிகளுக்கு இப்ப தாய் இல்லாம போச்சேன்னு சொன்னாரு”. ஒடனே அவர அந்த விமானம் கீழ தள்ளிவிட்டுடுச்சு. அடுத்த ஆளப்பாத்து முனிவர் கேட்டாரு,"ஏம்பா உன் கருத்து என்னன்னு?", ஏற்கனவே ஒருத்தன் கீழ விழுந்தத பாத்த ஆளு," இல்ல இது சரிதான், ஏன்னா புலிகளுக்கு இ இரையாகத் தானே மான்கள் இருக்குது அப்படின்னு சொன்னாரு. ஒடனே அவரையும் விமானம் கீழ தள்ளி விட்டுடுச்சு. இதையெல்லாம் பாத்துக்கிட்டு இருந்த அடுத்த ஆளு ரொம்ப உசாரா சொன்னான், “ இது தப்பும் இல்ல சரியும் இல்லன்னு". ஒடனே அவனையும் அந்த விமானம் கீழ தள்ளிடிச்சி. கடைசியா விமானத்தில இருந்தவனைப் பாத்து கேட்டாரு முனிவர்,"ஏம்பா உன் கருத்து என்னன்னு", அதுக்கு அவன் ,"தெரியலயே சாமின்னு", சொன்னான். இந்த மொற அவன அந்த விமானம் கீழ தள்ளல. இரண்டு பேரையும் சொமந்துகிட்டு பயணம் செய்ய ஆரம்பிச்சிச்சி.

இந்தக் கதைய வர்ற நீதி என்னன்னா நம்ம வாழ்க்கைக்கு எது தேவையோ அதை மட்டும் நாம் புரிஞ்சிக்கிட்டா போதும் தேவையில்லாத விசயங்கள தெரிஞ்சிக்க முயற்சி செய்றது அனாவசியம், அது போல தனக்கு அறிவில்லாத விசயங்கள் குறித்து தனக்கு தெரிஞ்சமாதிரி பேசுறதும் அனாவசியம். தெரியாத விசயங்களை தெரியாதுன்னு ஒத்துக்கிறது தான் உத்தமம்.

வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

ஆய கலைகள் அறுபத்து நான்கு !!

1. அக்கர இலக்கணம் (எழுத்திலக்கணம்)
2. லிகிதம் (இலிகிதம்) (எழுத்தாற்றல்)
3. கணிதம் (கணிதவியல்)
4. வேதம் (மறை நூல்)
5. புராணம் (தொன்மம்)
6. வியாகரணம் (இலக்கணவியல்)
7. நீதி சாஸ்திரம் (நய நூல்)
8. சோதிடம் (கணியக் கலை)
9. தரும சாஸ்திரம் (அறத்து பால்)
10. யோகம் (ஓகக் கலை)
11. மந்திரம் (மந்திரக் கலை)
12. சகுனம் (நிமித்தக் கலை)
13. சிற்பம் (கம்மியக் கலை)
14. வைத்தியம் (மருத்துவக் கலை)
15. உருவ சாஸ்திரம் (உருப்பமைவு)
16. இதிகாசம் (மறவனப்பு)
17. காவியம் (வனப்பு)
18. அலங்காரம் (அணி இயல்)
19. மதுர பாடனம் (இனிது மொழிதல்)
20. நாடகம் (நாடகக் கலை)
21. நிருத்தம் (ஆடற் கலை)
22. சத்த பிரமம் (ஒலிநுட்ப அறிவு)
23. வீணை (யாழ் இயல்)
24. வேனு (குழலிசை)
25. மிருதங்கம் (மத்தள நூல்)
26. தாளம் (தாள இயல்)
27. அகத்திர பரீட்சை (வில்லாற்றல்)
28. கனக பரீட்சை (பொன் நோட்டம்)
29. இரத பரீட்சை (தேர் பயிற்சி)
30. கஜ பரீட்சை (யானையேற்றம்)
31. அசுவ பரீட்சை ( குதிரையேற்றம்)
32. இரத்தின பரீட்சை ( மணி நோட்டம்)
33. பூ பரீட்சை (மண்ணியல்)
34. சங்கிராம இலக்கணம் (போர்ப் பயிற்சி)
35. மல்யுத்தம் (கைகலப்பு)
36. ஆகர்ஷணம் (கவிர்ச்சியல்)
37. உச்சாடணம் (ஓட்டுகை)
38. வித்து வேஷணம் (நட்பு பிரிக்கை)
39. மதன சாஸ்திரம் (மயக்குக் கலை)
40. மோகனம் புணருங் கலை (காம சாத்திரம்)
41. வசீகரணம் (வசியக் கலை)
42. இரசவாதம் (இதளியக் கலை)
43. காந்தர்வ விவாதம் (இன்னிசைப் பயிற்சி)
44. பைபீல வாதம் (பிறவுயிர் மொழி)
45. தாது வாதம் (நாடிப் பயிற்சி)
46. கெளுத்துக வாதம் (மகிழுறுத்தம்)
47. காருடம் (கலுழம்)
48. நட்டம் (இழப்பறிகை)
49. முட்டி (மறைத்ததையறிதல்)
50. ஆகாய பிரவேசம் (வான்புகுதல்)
51. ஆகாய கமனம் (வான் செல்கை)
52. பரகாயப் பிரவேசம் (கூடுவிட்டு கூடுபாய்தல்)
53. அதிரிச்யம் (தன்னுறு கரத்தல்)
54. இந்திர ஜாலம் (மாயம்)
55. மகேந்திர ஜாலம் (பெருமாயம்)
56. அக்னி ஸ்தம்பம் (அழற் கட்டு)
57. ஜல ஸ்தம்பம் (நீர்க் கட்டு)
58. வாயு ஸ்தம்பம் (வளிக் கட்டு)
59. திட்டி ஸ்தம்பம் (கண் கட்டு)
60. வாக்கு ஸ்தம்பம் (நாவுக் கட்டு)
61. சுக்கில ஸ்தம்பம் (விந்துக் கட்டு)
62. கன்ன ஸ்தம்பம் (புதையற் கட்டு)
63. கட்க ஸ்தம்பம் (வாட் கட்டு)
64. அவத்தை பிரயோகம் (சூனியம்)

திங்கள், 4 பிப்ரவரி, 2013

இந்தியாவில் நமது முக்கிய ஆவணங்கள் தொலைந்தால் எப்படித் திரும்பப் பெறுவது?


இது ஒரு பயனுள்ள தகவல் மறக்காமல் படித்துவிட்டு நண்பர்களுடன் பகிரவும். 

1.இன்ஷூரன்ஸ் பாலிசி!
யாரை அணுகுவது..?
பாலிசியை விநியோகம் செய்த கிளையை.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின் நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல்.

எவ்வளவு கட்டணம்?
ஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்டவேண்டும். இது தவிர, கவரேஜ் தொகையில் 1,000 ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

கால வரையறை:
விண்ணப்பம் அளித்த 15 நாட்களுக்குள்
நகல் ஆவணம் கிடைக்கக்கூடும்.

நடைமுறை:
நகல் பாலிசி கோரும் விண்ணப்பக் கடிதம் அளித்தால் அதற்குரிய இரண்டு ஆவணங்கள் தருவார்கள். அதில் ஒரு ஆவணத்தை 80 ரூபாய் பத்திரத்தில் டைப் செய்துகொள்ள வேண்டும். இன்னொரு ஆவணத்தில் பாலிசி தொலைந்து போன விவரங்கள் கேள்வி பதில் வடிவில் கேட்கப்பட்டிருக்கும்; அதை பூர்த்தி செய்து நோட்டரி பப்ளிக் ஒப்புதலோடு, ஆவணங்களை இணைத்து தரவேண்டும்.

2.மதிப்பெண் பட்டியல்! (பள்ளி
மற்றும்கல்லூரி)


யாரை அணுகுவது..?
பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், கட்டணம் செலுத்திய ரசீது.

எவ்வளவு கட்டணம்?
உயர்நிலைப் பொதுத்தேர்வு (10-ம் வகுப்பு) ரூ.105. மேல்நிலை பொதுத்தேர்வு ( 2) பட்டியல் ரூ.505.

கால வரையறை:
விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்கள்.

நடைமுறை:
காவல் துறையில் புகார் அளித்து 'கண்டுபிடிக்க முடியவில்லை’ என சான்றிதழ் வாங்கியபிறகு, முன்பு படித்த பள்ளி/நிறுவனத்தின் மூலம் விண்ணப்பம் வாங்கி அதை பூர்த்தி செய்து தாசில்தாரிடம் கையப்பம் வாங்க வேண்டும். அந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம் மற்றும் இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார். தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.

3.ரேஷன் கார்டு!
யாரை அணுகுவது..?
கிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கு அலுவலர்; நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்கு துறை மண்டல உதவி ஆணையர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காணாமல் போன குடும்ப அட்டையின் நகல் அல்லது
ஏதாவது ஒரு அடையாள அட்டை

எவ்வளவு கட்டணம்?
புதிய ரேஷன் கார்டு வாங்கும்போது ரூ.10 கட்ட
வேண்டும்.

கால வரையறை:
விண்ணப்பம் அளித்த 45 நாட்களுக்குள் கிடைத்துவிடும்.

நடைமுறை:
சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் காணாமல் போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தரவேண்டும். அவர்களின் விசாரணைக்குப் பிறகு புது குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும்.

4.டிரைவிங் லைசென்ஸ்!
யாரை அணுகுவது?
மாவட்டப் போக்குவரத்து அதிகாரி.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
பழைய லைசென்ஸ் நகல் அல்லது எண்.

எவ்வளவு கட்டணம்?
கட்டணம் ரூ.315 (இலகுரக மற்றும் கனரக வாகனம்).

கால வரையறை:
விண்ணப்பம் செய்தபிறகு அதிகபட்சமாக ஒரு வாரம்.

நடைமுறை:
காவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம் FIR ( NON TRACEABLE ) சான்றிதழ் வாங்கியபிறகு மாவட்டப் போக்குவரத்து அதிகாரிக்கு விண்ணப்பமனு கொடுக்கவேண்டும்.

5.பான் கார்டு!

யாரை அணுகுவது?
பான் கார்டு பெற்றுத் தரும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகள் அல்லது வருமான வரித்துறை.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டு, அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று நகல்கள்.

எவ்வளவு கட்டணம்?
அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.96 ரூபாய். கால வரையறை: விண்ணப்பித்தப் பிறகு 45 நாட்கள்.

நடைமுறை:
பான் கார்டு கரெக்ஷன் விண்ணப்பம் வாங்கி அதில் தேவையான விவரங் களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.

6.பங்குச் சந்தை ஆவணம்!
யாரை அணுகுவது?

சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பதிவாளர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறை சான்றிதழ், பங்கு ஆவணத்தின் நகல் அல்லது ஃபோலியோ எண்.

எவ்வளவு கட்டணம்?
தனியாக கட்டணம் கட்டத் தேவையில்லை; ஆனால், பங்குகளின் சந்தை மதிப்பிற்கு ஏற்ப முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும்.

கால வரையறை:
விண்ணப்பித்த 45 நாட்களிலிருந்து 90 நாட்களுக்குள்.

நடைமுறை:
முதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கடிதம் எழுதவும். இதன் அடிப்படையில் காவல் துறையில் புகார் அளித்து சான்றிதழ் வாங்க வேண்டும். பங்குகள் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனம் குறிப்பிடும் தொகைக்கு
முத்திரைத்தாளில் ஒப்புதல் கடிதம் தர வேண்டும். சில நிறுவனங்கள் செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிட வலியுறுத்தும்.

7.கிரயப் பத்திரம்!
யாரை அணுகுவது..?
பத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறை கடிதம், பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பரம், யாரிடமும் இருந்து ஆட்சேபனை வரவில்லை என்பதற்கான நோட்டரி பப்ளிக் ஒருவரின் உறுதிமொழி, சர்வே எண் விவரங்கள்.

எவ்வளவு கட்டணம்?
ஆவணக் கட்டணம் 100 ரூபாய். இது தவிர, கூடுதலாக ஒவ்வொரு பக்கத்திற்கும் 20ரூபாய்.

கால வரையறை:
ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.

நடைமுறை:
கிரயப் பத்திரம் தொலைந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து அவர்களிடமிருந்து சான்றிதழ் வாங்க வேண்டும். தொலைந்த விவரம் குறிப்பிட்டு பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும். இதற்குபிறகு சார்பு பதிவாளர் அலுவலம் செல்ல வேண்டும்.

8.டெபிட் கார்டு!
யாரை அணுகுவது..?

சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
கணக்குத் தொடர்பான விவரங்கள்.
எவ்வளவு கட்டணம்?
ரூ.100.

கால வரையறை:
வங்கியைப் பொறுத்து ஓரிரு நாட்கள் அல்லது
அதிகபட்சம் 15 நாட்கள்.

நடைமுறை:
டெபிட் கார்டு தொலைந்தவுடன் அந்த வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தகவல் தெரிவித்து, அதன் மூலம் மோசடியான பரிவர்த்தனைகள் நடக்காதவாறு தடுக்க வேண்டும். அதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட கிளைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி புது டெபிட் கார்டு வழங்குமாறு கோர வேண்டும்.

9 மனைப் பட்டா!

யாரை அணுகுவது..?
வட்டாட்சியர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்.?
நகல் பட்டா கோரும் விண்ணப்பம்.
எவ்வளவு கட்டணம்?
ரூ.20.

கால வரையறை:
ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.

நடைமுறை:
முதலில் தாசில்தாரிடம் மனு தர வேண்டும். அவர் பரிந்துரையின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.), வருவாய் ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும். இதன் அடிப்படையில் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தால் நகல் பட்டா கிடைத்துவிடும்.

9.பாஸ்போர்ட்!

யாரை அணுகுவது..?
மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறை சான்றிதழ், பழைய பாஸ்போர்ட் நகல், 20ரூபாய் முத்திரைத்தாளில் விண்ணப்பம்.

எவ்வளவு கட்டணம்?
ரூ.4,000.

கால வரையறை:
இந்தியாவில் தொலைத் திருந்தால் 35-லிருந்து 40 நாட்கள்; வெளிநாட்டில் தொலைத்திருந்தால் அதிக காலம் எடுக்கும்.

நடைமுறை:
பாஸ்போர்ட் தொலைத்த பகுதியில் உள்ள காவல் துறையில் புகார் அளித்து கண்டுபிடிக்கப்படவில்லை என்கிற சான்றிதழ் வாங்க வேண்டும். 20 ரூபாய் முத்திரைத்தாளில் தொலைந்த விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். இவற்றில் நோட்டரி பப்ளிக் ஒருவரின் கையெழுத்து பெற்று மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்கள் விசாரணை மேற்கொண்ட
பிறகு நகல் பாஸ்போர்ட் அனுப்பி வைத்துவிடுவார்கள்.

10.கிரெடிட் கார்டு!

கிரெடிட் கார்டு தொலைந்ததும் உடனடியாக
வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தகவல் அளித்து
பரிவர்த்தனைகளை நிறுத்த வேண்டும்.

யாரை அணுகுவது?
நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையம்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
தொலைந்துபோன கிரெடிட் கார்டு தொடர்பான விவரங்கள்.

எவ்வளவு கட்டணம்?
ரூ.100 (நிறுவனத்துக்கேற்ப வேறுபடும்).

கால வரையறை:
15 வேலை நாட்கள்.

நடைமுறை:
தொலைந்த கார்டுக்கு மாற்றாக வேறு கார்டு அளிக்கக் கோரினால் பதினைந்து வேலை நாட்களுக்குள் உங்களுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். அடையாளச்சான்று காண்பித்து வாங்க வேண்டும்.