உங்களை கேரள முதல்வர் வந்து சந்தித்துள்ளாரே?''
''ஆமாம்! கேரளாவில் உள்ள அனைத்து ஊடகங்களுக்கும் என்னைத் தெரியும். ஆளும் முதல்வர் முதல், எதிர்க் கட்சித் தலைவர் வரை அனைவரும் என்னை வந்து சந்திக்கின்றனர். இந்து சுவாமிகள் முதல் கிறிஸ்தவ பிஷப்கள் வரை என்னை ஆதரிக்கின்றனர். நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் முதல் பாடகர் ஜேசுதாஸ் வரை ஏராளமான ஆளுமைகள் எனக்காகக் குரல் எழுப்புகின்றனர். என்னுடைய விடுதலைக்காக வேண்டி கேரள சட்டப்பேரவையில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நான் தீவிரவாதியாக இருந்தால், என் மீது ஒரு சிறிய அளவில் அவர்களுக்குச் சந்தேகம் இருந்தால்கூட அவர்கள் யாரும் இங்கே வர மாட்டார்கள். ஆனால், அனைவரும் வருகிறார்கள். அதுவும் தீவிர அரசியல் செய்யும் என் சொந்த மண்ணில் எல்லோரும் என்னை ஆதரிக்கிறார்கள் என்றால் என் நிலையை எளிதில் புரிந்துகொள்ளலாம்.
அதனால்தான், கேரளாவுக்கு வெளியே, என்னைப் பற்றி அறியாத மாநிலங்களில் திட்டமிட்டு என்னைச் சிக்கவைக்கின்றனர். கேரளாவில் என்மீது எந்தத் தீவிரவாத வழக்கும் இல்லை. கோவை வழக்கில் ஒன்பதரை ஆண்டுகள் சிறைவைத்து பின்னர் விடுவித்தனர். இப்போது பெங்களூரில் சிறைவைத்துள்ளனர். என் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாது என்பதால், வழக்கை இழுத்தடித்து என்னைச் சிறையில் வைப்பதே அவர்களின் திட்டம். 15 ஆண்டுகள் இப்படியே போய்விட்டது.
சஞ்சய் தத் மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்றவர். நானோ, கோவை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படாமல் விடுவிக்கப்பட்டவன். இப்போதும் குற்றம் நிரூபிக்கப்படாமலேயே பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் விசாரணைக் கைதியாக சிறையில் வாடுபவன். தண்டனை பெற்றவராக இருந்தாலும்
சஞ்சய் தத் ஒரு முஸ்லிம் அல்லாதவர். விசாரணைக் கைதிதான் என்றாலும் நான் ஒரு முஸ்லிம். இது ஒன்று போதாதா நான் சிறையில் வாடுவதற்கு.?''

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கின் தற்போதைய நிலை என்ன?''
''பெங்களூரு வழக்கு முறையாக நடைபெற்றால் ஆறு மாதங்களுக்குள் தீர்ப்பு வந்துவிடும். ஆனால், நான் கைதாகி நான்கு ஆண்டுகள் கடந்த பின்பும் வழக்கு நடந்து கொண்டேயிருக்கிறது. இப்போது உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிய பிறகு சற்று வேகம் பிடித்துள்ளது. நீதிமன்றமும் அரசுத்தரப்பு வழக்கறிஞர்களும் இதை விரைவாக முடிக்க ஆர்வமுடன் உள்ளனர். ஆனால், விசாரணை அதிகாரிகள் காலம் தாழ்த்துகின்றனர். சாட்சிகளை உரிய நேரத்தில் கொண்டுவந்து நிறுத்துவது இல்லை. சாட்சி சொல்ல வருபவர்களைத் தடுக்கும் வேலையிலும் ஈடுபடுகின்றனர். வழக்கு முடிந்துவிட்டால் நான் விடுதலை ஆகிவிடுவேன் என்பதால், வழக்கை இழுத்தடித்து என்னை விசாரணைக் கைதியாகவே சிறையில் வைக்க முயற்சிக்கின்றனர்.''

கேள்வி...
''ஒன்பது ஆண்டுகள் சிறையில் இருந்தீர்கள். இறுதியில் விடுவிக்கப்பட்டீர்கள். நீங்கள் இழந்த வாழ்வுக்கு யார் பொறுப்பு? நீதிமன்றத்தில் இந்தக் கேள்வியை எழுப்பினீர்களா?''
பதில்...
''ஒன்பதரை ஆண்டுகளுக்குப் பின் அப்பாவியாக கோவை சிறையிலிருந்து நான் விடுதலையானபோது, ஐ.நா மன்றம் போன்ற மனித உரிமை அமைப்புகளிடம் முறையிட்டு உரிய இழப்பீட்டை பெறும்படி பலரும் வலியுறுத்தினர். அப்போது திருவனந்தபுரத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய கேரள அரசியல் தலைவர்கள்கூட அதை வலியுறுத்தினர். அப்போது, 'ஒன்பதரை ஆண்டுகால இளமை வாழ்வை நான் இழந்ததற்கு எந்த இழப்பீட்டையும் யாராலும் தரமுடியாது. எனது மனைவி ஒரு விதவையைப் போல் வாழ்ந்துள்ளார். எனது பிள்ளைகள் அனாதைகளைப் போல் வளர்ந்துள்ளனர். எனது பெற்றோரும் பெரும் துன்பத்துக்கு ஆளாயினர். 110 கிலோ எடையுடன் சென்ற நான் திரும்ப வரும்போது 48 கிலோ எடையுடன் உடல் மெலிந்து நோய்வாய்ப்பட்டு திரும்பினேன். அதற்கு எல்லாம் என்ன இழப்பீடு தரமுடியும்? எனவே, வழக்கிலிருந்து விடுபட்டதேபோதும். நஷ்டஈடு என்ற பெயரில் மீண்டும் நீதிமன்றம் செல்ல விரும்பவில்லை’ எனக் கூறினேன்.
அப்போது நான் கனவிலும் நினைக்கவில்லை மீண்டும் அதுபோல் பொய் வழக்கில் சிறைப்படுத்தப்படுவோம் என்று. ஏனெனில், கோவை சிறையிலிருந்து மீண்ட பின்னர், கேரளாவில் மிகவும் அமைதியான முறையில் எனது அரசியல் பணிகளை மேற்கொண்டிருந்தேன். முலாயம் சிங் யாதவ் போன்ற பல்வேறு தலைவர்களை அழைத்து வந்து சமூகநீதி மாநாடு நடத்தினேன். பிராமண சமூகப் பிரதிநிதி முதல், பழங்குடியின பிரதிநிதி வரை கேரளாவின் அனைத்து சமூகப் பிரிவினரும் அந்த மாநாட்டில் பங்கேற்றனர். கேரள வரலாற்றில் அப்படி ஒரு நிகழ்வு அதற்குமுன் நடந்தது இல்லை. அத்தகைய நிலையில்தான் பெங்களூரு குண்டுவெடிப்புக்காக கர்நாடகாவின் குடகு பகுதிக்குச் சென்று சதி செய்ததாக என்னைக் கைதுசெய்தனர்.
கோவை சிறையிலிருந்து குற்றமற்றவனாக வெளியே வந்த பின்பும் மத்திய மாநில உளவுப் பிரிவினர் 24 மணி நேரமும் என்னைக் கண்காணித்தபடி இருந்தனர். என்னோடு இரண்டு காவலர்கள் எப்போதும் இருந்தனர். நான் எங்கே போகிறேன், எங்கே வருகிறேன் எனும் விவரம் முழுவதும் காவல் துறைக்குத் தெரியும். அப்படி கண்காணிப்பு வளையத்தில் உள்ள நான் எப்படி குடகுக்குச் சென்று சதி செய்ய முடியும்? அதுவும் பிறர் துணை இல்லாமல் ஓர் அடிகூட நகர முடியாத நான், எப்படி குடகு மலைப் பகுதிக்கு கேரளாவிலிருந்து பயணித்திருக்க முடியும்?
ஆக, ஏற்கெனவே கோவை வழக்கில் ஆதாரமே இல்லாமல் என்னைச் சிக்கவைத்தது போலவே, இப்போதும் சிக்க வைத்துள்ளனர். இதற்கு யார் பதில் சொல்வது? காலம் பதில் சொல்லும்.''

கேள்வி;
தீவிரவாதம் சம்பந்தமான வழக்கு என்பதால் உங்களுக்கு ஜாமீன் கிடைக்கவில்லையா?''
பதில்;
''என் மீது போடப்பட்டிருப்பது தீவிரவாத வழக்கு. தீவிரவாத வழக்கில் சிக்கியவர்கள் குறித்து இங்கு அனைவருக்குமே ஒரு முன்முடிவு வந்துவிடுகிறது. அவர்கள் உண்மையிலேயே குற்றவாளிகளா அல்லது அப்பாவிகளா எனும் கோணத்தில் யாரும் பார்ப்பது இல்லை. தீவிரவாதம் என்றாலே கைதானவர்கள் அனைவரும் குற்றவாளிகள்தான் என்ற பார்வையே இங்கு உள்ளது. அரசும் காவல் துறையும் நீதிமன்றமும் ஊடகங்களும் அப்படித்தான் பார்க்கின்றன. என் பக்கம் எவ்வளவுதான் நியாயம் இருந்தாலும் என் மீதான குற்றச்சாட்டுக்கு வலுவான ஆதாரங்களே இல்லாவிட்டாலும் ஆண்டுக்கணக்கில் நான் சிறையில் வாடுவதற்குக் காரணம், நீதிமன்றங்களுக்கும் அந்தப் பார்வை இருப்பதனால்தான். தண்டனைக் கைதிகளுக்கே ஓரிரு நாளில் பிணை வழங்கும் நீதிமன்றம், விசாரணைக் கைதியான எனக்குப் பிணைதர மறுப்பது அதைத்தான் காட்டுகிறது.
நான் எந்தக் காலத்திலும் தீவிரவாதத்தை ஆதரித்தது இல்லை. 100 சதவிகிதம் தீவிரவாத எதிர்ப்புக் கொள்கை உடையவன். ஏனெனில், உண்மையான ஒரு முஸ்லிம் தீவிரவாதத்தை ஆதரிக்க மாட்டான். என்னைப் பற்றி அறிந்தவர்களுக்கு அது தெரியும்.''
கேள்வி ...
''தண்டனைக் கைதியான சஞ்சய் தத்துக்கு சினிமாவில் நடிக்க ஜாமீன் கிடைக்கிறது, ஜெயலலிதாவுக்கும் 20 நாட்களிலேயே ஜாமீன் கிடைத்துள்ளது. உங்களுக்கு மட்டும் ஏன் ஜாமீன் எளிதில் கிடைக்கவில்லை?''
பதில்...
''நிறைய வழக்குகளில் இப்படி நடக்கிறது. நான் கோவை சிறையில் இருக்கும்போது கடும் நோய்வாய்ப்பட்டு தூக்கமே இல்லாமல் சிகிச்சையும் கிடைக்காமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தேன். அப்போது நான் கழிவறைக்குச் செல்லும்போது அங்கு வயது முதிர்ந்த ஒரு கைதி வாந்தி எடுத்தவாறு மயங்கி கீழே விழுந்து கிடந்தார். அதைப் பார்த்த நான் அவரைத் தூக்க முயன்றேன். என்னாலேயே இன்னொருவரின் துணை இல்லாமல் எதுவும் செய்ய இயலாது. ஆனாலும் கஷ்டப்பட்டு அவரைத் தூக்கி அமரவைத்து, என்னிடம் இருந்த ஆயுர்வேத மருந்தை அறையில்போய் எடுத்துவந்து அவருக்குக் கொடுத்தேன். அப்போது அவரிடம் எதற்காக சிறைக்கு வந்தீர்கள் என்று கேட்டேன். பசியின் கொடுமை தாங்க முடியாமல் ஒரு கடையிலிருந்து வாழைப்பழம் ஒன்றை எடுத்து சாப்பிட்டுள்ளார். அதற்காக, கடை உரிமையாளர் அவரைப் பிடித்து காவல் துறையில் ஒப்படைத்துள்ளார். வழக்கறிஞர் வைத்து வழக்கை நடத்த முடியாமல், அனாதையாக அவர் பரிதவித்துக் கொண்டிருந்தார். ஒரு வாழைப்பழம் திருடியதற்காக எத்தனையோ மாதங்கள் சிறையில் ஒருவர் வாடும் சூழலை என் கண்ணாலேயே பார்த்தேன். பின்னர் நான் கொஞ்சம் பணம் கொடுத்து அவருக்கு ஒரு வழக்கறிஞர் வைக்க ஏற்பாடு செய்தேன். இப்படி நிறையப் பேர் பல்வேறு சிறைகளில் இருக்கிறார்கள்.
இப்போது ஜெயலலிதா 20 நாட்களாவது சிறையில் இருந்துள்ளார். ஆனால், கர்நாடகாவில் ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ஒரு எம்.எல்.ஏ ஓரிரு நாட்களிலேயே வெளியே வந்துவிட்டார். வெள்ளிக்கிழமை அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டது. சனி, ஞாயிறு இரு நாட்களும் நீதிமன்றத்துக்கு விடுமுறை. வழக்கு ஆவணங்களைத் தயார் செய்யவே திங்கட்கிழமைக்கு மேல் ஆகிவிடும். ஆனால், திங்கள் காலையிலேயே அவர் பிணையில் விடுதலை ஆகிவிட்டார்.
ஆக, ஒரு வாழைப்பழம் திருடியதற்காக ஒருவர் மாதக்கணக்கில் சிறையில் வாடியதையும் ஊழல் வழக்கில் தண்டனை பெற்றவர் ஓரிரு நாட்களிலேயே விடுவிக்கப்பட்டதையும் நான் கண்டேன். இது நம் சட்ட நடைமுறையில் உள்ள குறைபாடு.''
கேள்வி....
நிறைவாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?''
''சாதி, மத, இன, மொழி, தேச எல்லைகளைக் கடந்து மனித உரிமைக்காகப் போராடும் மனிதர்கள் உலகில் உள்ளனர். எந்த இனமும் எந்த மதமும் நமக்கு எதிரி அல்ல. தொடக்கத்தில் முஸ்லிம்களுக்காக மட்டுமே நான் பேசினேன். பின்னர் அம்பேத்கரைப் படித்த பிறகு, தலித்களுக்காகப் பேசினேன். அதன்பின்னர் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகப் பேசினேன். உயர் வகுப்பினர் அனைவருமே நம் எதிரிகள்தான் என்று நினைத்திருந்தேன். ஆனால், நான் கோவை சிறையில் அடைக்கப்பட்டபோது, என்னுடைய விடுதலைக்காக முதல் குரல் எழுப்பியவர் வி.ஆர்.கிருஷ்ணய்யர். அவர் பிராமண வகுப்பைச் சார்ந்தவர். அதுபோல, முகுந்தன் சி மேனன் உயர் வகுப்பைச் சார்ந்தவர்தான். அதன் பிறகே என்னுடைய பார்வை மாறியது.
இஸ்ரேலை எதிர்க்கும் யூதர்கள் உள்ளதுபோல், ஈராக்கை ஆதரித்து வெள்ளை மாளிகையை முற்றுகையிடும் அமெரிக்கர்கள் போல் உலகம் முழுவதும் மனித நேயக்குரல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இஸ்லாமும் அதையே வலியுறுத்துகிறது. ஒரு முஸ்லிமுக்கும் முஸ்லிம் அல்லாதவருக்கும் பிரச்னை என்றால், நியாயம் முஸ்லிம் அல்லாதவரின் பக்கம் இருந்தால் அவருக்காகக் குரல் எழுப்பவே இஸ்லாம் வழிகாட்டுகிறது. அதை மனதில் நிறுத்தி, நல்லிணக்க சமுதாயம் அமைய அனைவரும் பாடுபடுவோம்.''

- ஆளூர் ஷாநவாஸ்
ஜீனியர்
விகடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக