ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

வாரன் பஃபெட் வாழ்க்கைத்தரும் பாடம்

CNBC தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, உலகின் இரண்டாவது பணக்காரரான வாரன் பஃபெட் அவர்களின் நேர்காணலிலிருந்து சில சுவாரசியமான விவரங்கள் இங்கே:

* தன்னுடைய 11வது வயதில் முதல் வணிக பங்கை வாங்கியுள்ளார். இன்னும் முன்னதாகவே தொடங்காததை எண்ணி வருந்துகிறார்.
* தன்னுடைய 14வது வயதில், வீடுகளில் செய்திதாள்களிட்டு கிடைத்த சேமிப்பில் சிறிய பண்ணை ஒன்றை வாங்கியுள்ளார்.
* 50 ஆண்டுகளுக்கு முன், தன்னுடைய திருமணத்திற்குப் பிறகு ஓமாஹா நகரில் அவர் வாங்கிய 3 படுக்கையறைகளைக் கொண்ட வீட்டிலேயே இன்றளவும் வசிக்கின்றார். அவ்வீடு தன் தேவைகளனைத்தையும் பூர்த்தி செய்வதாகவே கருதுகிறார். அவ்வீட்டைச் சுற்றி முள் வேலியோ, மதில் சுவரோ எழுப்பப்படாதது குறிப்பிடத்தக்கது.
* தான் செல்ல வேண்டிய இடங்களுக்கு காரை தானே ஓட்டிச் செல்கிறார். ஓட்டுனரையோ, பாதுகாவலரையோ அவருடன் கூட்டிச் செல்லாதது கவனிக்கத்தக்கது.
* மிகப் பெரிய தனியார் விமான நிலையத்தின் உரிமையாளராக இருந்தும் தன்னுடைய பயணத்திற்காக தன் விமானத்தை பயன்படுத்துவதில்லை.
* அவருடைய பெர்க்க்ஷைர் ஹாத்வே நிறுவனத்தின் கீழ் 63 நிறுவனங்கள் செயல்படுகின்றன.
வருடத்திற்கொருமுறை ஓவ்வொரு நிறுவனத்தின் முதன்மை அதிகாரிக்கும் அந்த வருடத்தில் அடைய வேண்டிய இலக்குகளைக் குறிப்பிட்டு கடிதம் எழுதுவார். அவர்களை அதிகமாக சந்திப்பதுமில்லை, தொலைபேசியில் அழைத்துப் பேசுவதுமில்லை.
அவர் அதிகாரிகளுக்கு அளித்துள்ள இரண்டு முக்கிய விதிமுறைகளானது :
1) எந்த ஓரு காரணத்திற்காகவும் உங்களுடைய பங்குதாரர்களின் பணத்தை இழக்காதீர்கள்.
2) மேலே குறிப்பிட்டுள்ள விதிமுறையை மறந்துவிடாதீர்கள்.
* அவர் மேல்தட்டு மக்களுடன் பழகுவதை விரும்புவதில்லை. ஓய்வு நேரத்தில் தன்னுடைய இல்லத்தில் சிறிதளவு பாப் கார்ன் (Pop Corn) செய்வது, தொலைக்காட்சி பார்ப்பதையே மிகவும் விரும்புகிறார்.
* உலகின் மிகப்பெரிய பணக்காரரான பில் கேட்ஸ் இவரை முதன்முதலாக 5 ஆண்டுகளுக்கு முன்பு தான் சந்தித்துள்ளார்.
பில்கேட்ஸ் தனக்கும் வாரன் பபெட் அவர்களுக்கும் பொதுவில் பேசுவதற்கு எதுவுமில்லை என்ற எண்ணத்தில் அவருடனான சந்திப்பிற்கு அரை மணி நேரம் ஒதுக்கினார். ஆனால் சந்தித்தபின் 10 மணி நேரம் அவருடன் உரையாடினார். அந்த சந்திப்பிற்குப் பிறகு பில்கேட்ஸ் வாரன் பபெட்டிடம் மிகுந்த பக்தியும், மரியாதையும் கொண்டுள்ளார்.
*அவரிடம் அலைபேசியோ (Cellphone), கணினியோ (Computer) கிடையாது.
* இளைஞர்களுக்கு அவர் கூறவிரும்புவது :
கடன் அட்டை (Credit card) உபயோகிப்பதைத் தவிர்த்திடுங்கள்.
கீழ்வருவனவற்றை நினைவில் கொள்ளுங்கள் :
1) பணம் மனிதனைப் படைக்கவில்லை. மனிதனால் படைக்கப்பட்டதுதான் பணம்.
2) முடிந்தவரை எளிமையாக வாழப் பழகுங்கள்.
3) மற்றவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக எதுவும் செய்யாதீர்கள். அவர்கள் கூறுவதை கவனத்தில் கொள்ளுங்கள். ஆனால் உங்களுக்கு சரியெனத் தோன்றுவதை செயல்படுத்துங்கள்.
4) விலை மிகுந்த ஆடைகளை அணிவதை விட நீங்கள் விரும்பும் ஆடைகளை அணிந்திடுங்கள்.
5) அவசியமற்றவைகளுக்காக செலவிடுதலைத் தவிர்த்து அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே செலவிடுங்கள்.
6) உங்களுடைய வாழ்க்கையை மற்றவர்களுக்காக வாழ்வதை விடுத்து உங்களுக்காக வாழுங்கள்.
இன்று வாரேன் ப்ஹபெட் ...அவரகளின் பிறந்த நாள் ...சில குறிப்புகள் ...வணக்கம் நட்பூஸ் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக