செவ்வாய், 24 மே, 2016

சீரிய பண்பாடே சிறப்பான வாழ்வு -ஓர் வாழ்வியல் கட்டுரை!

(டாக்டர் ஏ.பீ.முகமது அலி, பீ எச்.டி ஐ.பீ.எஸ்.(ஓ)
முகம்மது அலி ஐ.பி.எஸ் (ஓய்வு)

பணம், பதவி, புகழ்  இருந்தால் சுகத்தோடு வாழலாம் என்ற தவறான எண்ணம் நம்மிடையே இருக்கிறது. ஆனால் பணம், புகழ், பதவி  இருந்தால் மட்டும் வாழ்க்கைக்குப் போதுமானதல்ல. ஒரு மனிதன் தன் நிலை தவறாது, தனித்தன்மையுடனும், சிந்திக்கும் ஆற்றலுடன் இருந்தால் மட்டுமே சிறப்பாக வாழ முடியும். அதற்கு உதாரணமாக ஒரு பட்டு வியாபாரியும் அவனுடைய சக நான்கு வியாபாரிகளின் கதையினை  இங்கே சொல்லுவதுப் பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன். ஒரு பட்டு வியாபாரி நல்ல தொழில் செய்து நாலு காசு சம்பாதித்தார். ஆனால் அவர் போல தனது நான்கு வியாபாரிகளுக்கும் வருமானமில்லை. அந்த பட்டு வியாபாரி மீது பொறாமைப் பட்ட மற்ற வியாபாரிகள் அவரை குழப்பத்தில் ஆழ்த்த முடிவு செய்தார்கள். ஒரு நாள் காலை பட்டு வியாபாரி தனது வீட்டிலிருந்து வெள்ளை பைஜாமா மற்றும் குர்த்தா அணிந்தும் தலையில் வெள்ளைத் தொப்பியுடனும் புறப் பட்டார் அவர் கடைக்கு. வழியில் அவர் மீது பொறாமைப் பட்ட சக வியாபாரி முதாலமவர் அவரை வழிமறித்து உங்கள் ஆடை பிரமாதம் ஆனால் சிகப்புத் தொப்பிதான் சரியில்லை என்று சொல்லி விட்டுச் சென்று விட்டார். பாட்டு வியாபாரிக்கு தொப்பியின் நிறம் பற்றி சந்தேகம் வந்து எடுத்துப் பார்த்து உறுதி செய்து விட்டு கொஞ்ச தூரம் நகன்றார். இரண்டாவது வியாபாரி அவரைப் பார்த்து உங்கள் உடை நேர்த்தியாக உள்ளது ஆனால் பச்சைத் தொப்பிதான் சரியில்லை என்று சொல்லி விட்டுச் சென்றார். மறுபடியும் பட்டு வியாபாரி தொப்பியினை எடுத்துப் பார்த்தார். அவர் சொன்னது சரியில்லை என்று தெரிந்து தன் நடையினைக் கட்டினார். மூன்றாம் வியாபாரி அவரைப் பார்த்து உங்கள் உடை அழகாக உள்ளது ஆனால் மஞ்சள் தொப்பிதான் சரியில்லை என்றார். பட்டு வியாபாரி குழம்பி கடைப் பக்கத்தில் சென்றதும் நான்காம் வியாபாரி அவரை பார்த்து  உங்கள் வெள்ளை டிரஸ் மிகவும் நேர்த்தியாக உள்ளது ஆனால் மஞ்சள் தொப்பிதான் பொருத்தமாக இல்லை என்று  சொன்னாரேப் பார்க்கலாம் தன் தொப்பியினை கீழே தூக்கி எரிந்து விட்டுக் கடைக்குச் சென்று குழம்பிக் கொண்டு இருந்ததால் அன்று வியாபாரம் சரியாக செய்ய முடியவில்லை. அதன் பின்பும் வீட்டுக்கு போன பின்பும் சரியாக சாப்பிடாமல்   தன் மனதினை குழப்பத்தில் ஆழ்த்தி விட்டார். கடைக்கும்சரியாக போகவில்லை. அவர் வியாபாரம் நொடித்து மற்ற வியாபாரிகளின் வியாபாரம் மிக விமரிசையாக நடந்ததால் அவர்களுக்கு எல்லாம் சந்தோஷம். ஆகவே மனிதன் எப்போதும் சுய சிந்தனையோடும் தன் நிலை தடு மாறாமலும் இருந்தால் சிறப்பாக வாழலாம் என்ற கருத்தினை வலியுறுத்தி எழுதப் பட்டுள்ளது இந்த கட்டுரை.

எதிலும் தனித்தன்மையுடன் விளங்குங்கள் :

ஒரு கருத்தினை இருவர் சொல்லும்போது ஒருவருடைய பேச்சில் சுவை இருக்காது, மற்றொருவர் பேச்சில் கவரும் தன்மை இருக்கும்.  ஒரு கருத்தருங்கில் ஒரு கருத்தினை இருவர் சொல்லும் விதத்தில் மாறுதலினைப் பார்க்கலாம். ஒருவர் கருத்தை நாம் ஏற்க முடியாது அடுத்தவர் கருத்து ஏற்கும்படி இருக்கும். ஒரு பள்ளிகூடத்தில்  இரு ஆசிரியரிடையே வேற்றுமை இருக்கும். ஒரு ஆசிரியரை மாணவர்கள்  மொய்ப்பார்கள், இன்னொருவரைப் பார்த்தால் மாணவர் ஒதிங்கிச் செல்வர்.  வீட்டில் ஒரு தந்தை நுழையும்போது அவருடைய மகன்கள் சிங்கம் புலியினைப் பார்ப்பதுபோல் ஓடி ஓளிவார்கள். இன்னொரு தந்தையினைப் பார்த்தல்  பாசத்துடன் குழந்தைகள் வந்து கழுத்தைக் கட்டிக்கொள்ளும். ஆகவே நீங்கள் ஓடி ஓடி உழைப்பதுடன் பாசத்துடனும் இருங்கள். "செல்வத்தினை பெருவதிர்க்காக பாசத்தினை இழந்து விடாதீர்கள்".

அன்புடன் பழகுங்கள்:

நீங்கள் உங்கள் தாயாரின் அன்பு மழையில் நனையும் பொது உங்களுக்கு எவ்வளவு சந்தோஷம் இருந்திருக்கும். அதே பாசத்தினை நீங்கள் உங்கள் குடும்பத்தில் காட்டினால் நீங்கள் சிறந்த குடும்பத் தலைவனாக கருதப் படுவீர்கள்.
நீங்கள் ஒருவரை ஒரு இடத்தில் பார்க்க நேரிடுகிறது. அந்த ஒரு தடவையிலும் அவர் நேசிக்கும் நபராக இருக்க வேண்டும். வெளியில் அன்புடன் பழகும் நீங்கள் வீட்டில் கடுகடுப்பாக இருக்கக் கூடாது. மின்சார தட்டுப்பாட்டில் கரண்ட் போய் விட்டால் யாரையும் திட்டுவதினை தவிர்த்து மண்ணெண்ணெய் விளக்கினை பொறுத்த தயாராக விட வேண்டும்.

ஏழைகளிடம் அன்புக் காட்டுங்கள்:

"ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறேன் என்றார் சான்றோர்" ஆனால் சிலர் ஏழைகளைக் கண்டால் காத தூரம் விலகிச் செல்வர். சிலர் ஒரு கூட்டத்தில் ஏழை ஒரு சிரிப்புச் சொனனால் சிரிக்க மாட்டார்கள். அனால் ஒரு பணக்காரர் ஒரு செய்தியினைச் சொனனால் விழுந்து விழுந்து சிரிப்பர். சிலர் ஏழைகள் சிறு தவறு செய்தாலும் பூதக் கண்ணாடி கொண்டு பெரிதாக்குவர். ஆனால் அதே தவறை தன் உற்றார் உறவினர் செய்தால் அமுக்கப் பார்ப்பர். நீங்கள் ஏழையிடம் அன்பு செலுத்தினால் உங்கள் தரம்  உயரும் அல்லவா ?
வீட்டுப் பெண்களைக் கண்ணியமாக நடத்துங்கள்:
ஒரு கிராமப் பழமொழியுண்டு. "ஒரு பெண் ஆட்டினைப் புறக்கணித்தால் ஒரு ஆண் ஆட்டின் துணையினை அது நாடும் என்று". இன்று பெண்கள் வழி தவறும் பெரும்பாலான குடும்பங்களில் அவர்களுக்கு அன்பும் பாசமும் பரிவும் கிடைப்பதில்லை என்றக் குற்றச் சாட்டினை சொல்கிறார்கள். வீட்டில் கணவன் மனவியினைப் புறக்கணித்தால் மனைவி தடம் புரள வைப்புக் கொடுதவர்கலாவோமல்லவா? ஆண்கள் கட்டு மஸ்தான உடல்கள் கொண்டவர்கள் தான். ஆனால் பெண்கள் மென்மையான இதயம் கொண்டவர்கள். ஒரு குடும்பத்தில் ஒரு பெண் தன் கணவனுடைய வறுமை, அழகின்மை,ஓய்வற்ற வேலை, அல்லது வேலையின்மை ஆகிய கஷ்ட  நஷ்ட காலங்களில் உறு துணையாக இருக்கும்போது, ஆண்கள் ஏன் பணமும், புகழும் பெற்றால் பெண்களை கொடுமைப் படுத்துவதும், புறக்கணிப்பதும் எந்த வகையில் நியாயம்? பெண்கள் ஆண்களுக்கு ஆடையாகவும், ஆண்கள் பெண்களுக்கு ஆடையாகவும் இருக்கக் கூடாதா?

குழந்தைகளின் செயல்களுக்கு உங்களின் முன் மாதிரியாக எடுத்துக் கொள்ளுங்கள்:

உங்களது குழந்தை வீட்டில் சுட்டி செய்யும்போது, பள்ளியில் சண்டையிட்டு புகார் வரும்போது நீங்கள் அடிக்கப் பாய்வீர்கள். ஆனால் நீங்கள் பள்ளியில் படிக்கும் பொது செய்த சுட்டிகளையும் வீட்டில் பிடித்த  அடத்தினையும் எண்ணி சாந்தம் அடையுங்கள். குழந்தை களிமண் போன்றவர்கள். ஒரு குயவன் எவ்வாறு களிமண்ணைப் பிடித்து உருளையில் வைத்துச் சுற்றுகிறானோ அது போன்றுதான் நீங்கள் உங்கள் குழந்தைகளை எவ்வாறு உருவாக நினைக்கின்றீர்களோ அதேபோன்று தான் அவன் உருவாவான்.

மக்கள் மனதினைக் கவரும் விதம்:

மனிதர்கள் ஒரு விதம் ஆனால் மக்கள் மனதினை கவருவது பல விதம்'. ஒரு வியாபாரி தன் பொருளை விற்பனை செய்வதிற்கு பல விதத்தில் விளம்பரம் செய்வார். ஓர் டி.வீ. சானெல் பிரதானமாக்க பல்வேறு நிகழ்ச்சிகளை புகுத்துவார். அதேபோன்றுதான் மனிதர்களின் மனதினைக் கவருவதும் ஒரு கலையென்றால் மிகையாகாது. நீங்கள் ஒரு சபைக்குள் நுழையும்போது தெரிந்த முதலாமவருக்குக் கை கொடுக்கிறீர்கள்.அவர் விருப்பமில்லாமல் கை கொடுக்கிறார். இரண்டாமவருக்கு  கை கொடுக்கும்போது அவர் செல் போனில் பேசிக்கொண்டே கை கொடுக்கிறார், மூன்றார்மவர் அடுத்தவரிடம் பேசிக் கொண்டே கை கொடுப்பார். ஆனால் நான்காமவர் உங்களுக்குத் தெரியாத நபராக இருந்தாலும் தனது இருக்கையிலிருந்து எழுந்து உங்களுக்கு கைகொடுத்து நீங்கள் உட்கார இடம் கொடுக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மனதில் யார் இடம் பிடிப்பார். உங்களுக்கு அறிமுகமில்லாத நபரினைதான் பிடிக்குமல்லாவா. ஆகவே அடுத்தவர் உள்ளத்தில் இடம் பிடிக்க உங்கள் செல்வத்தாலோ, பதவியாலோ அல்லது அதிகாரத்தாலோ முடியாது. மாறாக அன்பினாலேதான் முடியும். ஒரு செலவந்தர் தனது செல்வத்தின் மூலம் மனைவி, மக்களுக்கு நல்ல உணவினைக் கொடுத்ததின் மூலம் அவர்களுடைய வயிற்றினை நிரப்பலாம். ஆனால் அவர்களை கீழ்த்தரமாக நடத்தினால் அவர்களின் அன்பைப் பெற முடியுமா?

பொருத்தமான விஷயங்கள் தெரிந்து பேசுங்கள்:

பேசும் பொது சரியான தலைப்பினை எடுத்துப் பேசுங்கள். ஒருவரிடம் பேசும்போது அவருக்குப் பொருத்தமான விஷயம் அறிந்து பேசுங்கள்.ஒரு அறிஞரிடம் பேசுவதை போல மனைவியிடம் பேசாதீர்கள். மனைவியிடம் பேசும் தகவல்களை சகோதரிகளிடம் பேசாதீர்கள். இளைஞர்களுக்குச் சொல்ல வேண்டிய கருத்துக்களை வயதானவர்களிடம் சொல்லாதீர்கள். அதேபோல் குழந்தைகளிடம் சிரிப்பான செய்திகள் சொன்னால் அவர்களை சந்தோசப் படுத்தலாம். ஒரு விதவைத் தாய்க்கு நன்கு மகன்கள். நால்வரும் திருமணமாகி தனித்தனியே வசிக்கிறார்கள். வாரத்தில் ஒரு நாள் அவர்கள் வந்து தாயைப் பார்த்துச் செல்வது வழக்கம்.  மூன்று பேர் தாயைப் பார்க்க வந்த கொஞ்ச நேரத்தில் திரும்பி விடுவார்கள். ஆனால் ஒரு மகன் மட்டும் தாயிடம் வெகு நேரம் பேசிவிட்டுச் செல்வாராம். அதனைக் கவனித்த பக்கத்து வீட்டுக்காரர் ஒரு நாள் அவரை அழைத்து 'ஏன் தம்பி உங்கள் உடன் பிறப்புகளில் நீங்கள் மட்டும் வெகு நேரம் உங்கள் தாயிடம் பேசிக் கொடு உள்ளீர்களே அப்படி என்ன பேசுவீர்கள்' என்றுக் கேட்டார். அதற்கு மகன் 'என் தாய் எங்கள் அப்பாவினை இழந்து தனியே இருக்கிறார். அவர் பேச்சைக் கேட்பதிற்கு யாருமில்லை. ஒவ்வொரு தடவை நான் அவரைப் பார்க்க வரும்போதெல்லாம் புதுப் புது உலக,கிரமாத்தின் மற்றும் குடும்பத்தின் பழங்காலத் தகவல்களைச் சோவார். அதனை நான் காது கொடுத்துக் கேட்டால் அவர் மனது சந்தோசப் படும் அவரும் தந்தையும் எப்படியெல்லாம் சோகங்கள், துக்கங்கள், தழும்புகளினைத் தாங்கிக் கொண்டு எங்களை வளர்த்தார்கள் என்ற விபரத்தினை அறிந்து வியப்படைந்தேன். ஆகவேதான் நாம் அதிக நேரம் அவர் பேச்சினைக் கேட்டு விட்டுச் செல்கிறேன்' என்றார். ஆகவே  சிலர் நம்மை மதித்து பேசும் பொது அவரைப் புறக்கணிக்காதீர்கள்.

கலந்துரையாடலில் அன்பாக இருங்கள்:

உங்களில்  பலர் நிறுவன மேலாளராக இருப்பீர்கள். அல்லது கல்வி நிலையங்களில் ஆசிரியராக இருப்பீர்கள். உங்களிடம் இருக்கும் பணியாளர்கள் மற்றும் மாணவர்களிடம் அன்பாக இருங்கள். இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தினை   இங்கே சொல்வது பொருத்தமாக இருக்கும். ஒரு தொழிச்சாலையில் பல்வேறு இடங்களில் வேலைப் பார்க்கும் தொழிலார்களுக்கான ஒரு கருத்தரங்கிற்கு நடத்தினார்கள். அதில் பேசுவதிற்காக மேலாளர் வருமுன் கருத்தரங்கில் உள்ள தொழிலாளர்கள் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டிருந்தார்கள். அங்கே இரச்ச்சலாக இருந்தது. மேலாளர் உள்ளே நுழைந்ததும் ஒருவரைப் பார்த்து ஏன் இறைந்து பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். வெளியே போங்கள் என்று அனுப்பி விட்டார். அதன் பின்பு ஒவ்வொருவராக அங்கு வந்தவர்களிடம் தங்களை அறிமுகப் படுத்திக் கொள்ளுங்கள் என்றார். தனது பேச்சினைத் துவங்குமுன் அங்கிருந்த தொழிலாளர்களிடம் ஒவ்வொரு தாளிணைக் கொடுத்து தனது பேச்சின் தன்மையினை எவ்வாறு இருந்தது என எழுதுங்கள் என்றார். ஆனால் அந்த தாள்களில் உங்கள் பெயர் இருக்கக் கூடாது என்றார். அதன் பின்பு தனது பேச்சினைத் துவங்கி முடித்தார். தான் கொடுத்த தாள்களில் கருத்துக்களை எழுதித் தாங்கள் என்றார். அதன் பின்பு அங்கிருந்தவர்களிடம் நீங்கள் இந்தக் கருத்தரங்கிற்கு பல இடங்களில் இருந்து குடும்பத்தினை விட்டு வந்துள்ளீர்கள். நான் வெளியே அனுப்பிய நபர் மட்டும் ஏன் வெளியே நிற்க வேண்டும் ஆகவே அவரை உள்ளே அழைக்கலாம் என்று அவரை அழைத்து அறிவுரை சொல்லி உள்ளே உட்கார வைத்து விட்டு தனது பேச்சினை மேலும் தொடர்ந்து முடித்தார். இப்போது வேறொரு தாள்களை அவரிகளிடம் கொடுத்து இப்போது தான் ஆற்றிய உரையின் மதிப்பினை எழுதித் தாருங்கள் என்றார். எல்லாத் தொழிலாளியும் பெயர் போடாது எழுதித் தந்தார்கள். அப்போது மேலாளர் தான் ஒரு தொழிலாளரை வெளியே அனுப்பி விட்டு கருத்துக் கேட்ட்தினையும் அதன் பின்பு வெளியே நின்ற தொழிலாளியினை உள்ளே அழைத்து தனது உரைக்க கருத்து வித்தியாசத்தினை தொழிலாளர்களுக்கு படித்துக் காண்பித்தார். முதலில் எழுதிய கருத்துக்களில் தொழிலாளர்கள் பெரும்பாலும் மேலாளரை கொஞ்சம் கூட இரக்கமில்லாதவர் என்றும் ஆனால் மறு கருத்துக்களில் அவர் மனிதாபமானவர் என்றும் எழுதி இருந்தது. அப்போது மேலாளர் சொன்னார் இதேபோன்று தான் நீங்கள் உங்கள் சக தொழிலாளர்களிடமும்,  வீட்டிலும் மற்றும் வாடிக்கையாளர்களிடமும் அன்பாக பழக வேண்டும் என அறிஉரை சொன்னார்.

மனிதன் பலவிதம், அவர் ஒவ்வொருவரும் ஒரு விதம்:

பூமியில் இருக்கும் தாதுப் பொருள்கள் பல விதமாக இருப்பதுபோல மனிதர்களும் பல விதமாக இருப்பார். அவர்களுடைய குணாதிசயங்களை அறிந்து அவர்களுடன் நட்பினை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு மனிதனிடம் தீய செயல்கள் குறைவாக இருந்து நல்ல செயல்கள் அதிகமாக இருந்தால் நல்ல செயலுக்காக அவருடன் பழகுங்கள். மறைந்த முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த பக்கரி முகம்மது கோவையில் நீதிபதியாக இருந்தபோது நான் டி.எஸ்.பீ யாக இருந்தேன். அவர் ஒரு தீர்ப்பு எழுதுமுன் இரண்டு இரக்காது தொழுது விட்டு தனது தீர்ப்பு நேர்மையாக இருக்க வேண்டும் என்று எழுதுவாகச் சொல்லுவார். அதுபோன்றே உங்களிடம் ஒரு பஞ்சாயத் சம்பந்தமாக ஒரு வழக்கு வந்தால் பசியுடனோ அல்லது தாகத்துடனோ அல்லது கோபத்துடன் இருக்கும்போதோ அல்லது இயற்கை உபாதை ஏற்படும்போதோ  தீர்ப்புக் கூறாதீர்கள். மன அமைதியுடன் இருக்கும்போதே எந்த தீர்ப்பும் சொல்ல வேண்டும்.


தீயை தீயால் அணைக்க முற்படாதீர்கள்:

தீயினை தீயால் அணைக்க முற்ப்பட்டால் அது தீயின் வேகத்தினை அதிகரிக்குமல்லவா?
இதற்கு உதாரணமாக இரண்டு ஆசிரியர்களின் வழிமுறைகளின் வேறுபாடுகளைச் சொல்லி விளக்கலாம் என நினைக்கின்றேன். ஒரு ஆசிரியர் தனது வகுப்பில் நுழைந்து மாணவர்களைப் பார்த்து ஆளுக்கு ஒரு பேப்பரை எடுத்துக் கொள்ளுங்கள் நான் ஒரு பாடம் சம்பந்தமாக உங்களிடம் டெஸ்ட் வைக்கப் போகிறேன் என்றார். மற்ற மாணவர்கள் பேப்பரை எடுத்து எழுத தயாராக இருக்கும்போது ஒரு முரட்டு மாணவன் மட்டும் திடீர் என்று  சொன்னால் எப்படி எழுதுவது என்றான். உடனே அந்த ஆசிரியர் அந்த மாணவனை 'மடையா, முட்டாள், நீ மாடு மேய்க்கத தான் லாயக்கு என்று திட்டினார். வெட்கப்பட்ட அந்த மாணவனும் ஆசிரியரை பதிலுக்குத் திட்ட ஆரம்பித்தான். புகார் பள்ளி நிர்வாகத்திற்குப் பொய் அந்த மாணவனுக்கு அபராதம் விதிக்கப் பட்டது. ஆனால் அந்த ஆசிரியர் ஒரு மாணவனிடம் திட்டு வாங்கிய செய்தி காட்டுத் தீபோல் மாணவர் மற்றும் ஆசிரியர்களிடையே பரவி அந்த ஆசிரியரை பள்ளியில் எல்லோரும் ஒரு மாதிரியாக பேச ஆரம்பித்தால் வெட்கப் பட்ட அந்த ஆசிரியர் பள்ளியினை விட்டு வேறு பள்ளிக்குச்  சென்று விட்டார். அதே வேலைக்கு இன்னொரு ஆசிரியார் வந்தார். அவரும் ஒரு திடீர் டெஸ்ட் வைத்தார். முரட்டு மாணவனும் முன்பு நடந்ததுபோல் மறுத்தான். ஆனால் ஆசிரியர் உன்னால் எழுத முடியா விட்டால் வகுப்பினை விட்டுப் பொய் விடலாம். விருப்பமுள்ள மாணர்கள் எழுதட்டும் என்றார். எல்லா மாணவர்களும் பேப்பரினை எடுத்து எழுதும் பொது அந்த மாணவனும் வேறு வழியில்லாமல் எழுத ஆரம்பித்தான். ஆகவே ஒரு முரம்பாடான முரண்பட்ட நடத்தையினை தவிர்ப்பது நல்லதல்லவா?
ஒரு கொலையாளி சிறு கோபத்திற்குக் கூட தன் சொந்த பந்தங்களை நண்பர்களை கொலை செய்வார்கள். ஒரு மனிதன் பலசாலி என்பது ஒருவரை தரையில் வீழ்த்துவதில்லை. மாறாக ஒருவடைரு கோபத்தினை அடக்குவதுதான்.

நெஞ்சம் திறக்கும் சாவிகள்:

ஒவ்வொரு வீட்டின் கதவிற்கும் ஒரு சாவி உள்ளது. அதேபோன்று மனிதர்களின் மனதினைத் திறக்க அவர்களின் குணாதிசயங்கள் அறிந்தும்,அவர்களுடைய பிரச்சனைகள் தீர்க்க வழி செய்வதின் மூலம் அவர்கள் அன்பினைப் பெற முடியும். உதாரனத்திற்க்கு ஒரு மகனுக்கும், தகப்பனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மகனை தந்தை வீட்டிற்கு வரக்கூடாது என்று சொல்லி விட்டார். அதனை அறிந்த அவருடைய நண்பர் தந்தையிடம் சென்று அவர் மகனை வளர்க்க எவ்வாறெல்லாம் பாடுபட்டார் என்பதினையும், அவர் மகன் தற்போது படும் துன்பத்தினையும் அவர் மனதினைத் தொடும் அளவிற்கு எடுத்துச் சொன்னதின் மூலம் அவர்  மனம் இலக வைத்து விட்டார். உடனே அவரிடமே சொல்லி மகனை அழைத்து வரச் சொல்லிவிட்டார். .

மனநிலை அறிந்து செயலாற்றுங்கள்:

ஒரு மனிதனுடைய மனநிலை அவனுடைய இன்பம், துன்பம், செல்வம், வறுமை ஆகியவையினைப் பொறுத்தே அமையும். ஒரு மனிதன் ஒரு ஜோக்கினைக் கேட்டால் அவன் சிரிப்பது அவன் மன நிலையினைப் பொறுத்தே அமையும். அவன் வருத்தத்தில் இருந்தால் சிரிக்க மாட்டான். அவன் சந்தோசத்தில் இருந்தால் சிரிப்பான். நாம் மனிதர்களின் இதயங்களுடன் பேச வேண்டுமே ஒழிய அவர்களின் உடல்களிடம் பேசக் கூடாது.

மற்றவர்களின் நலனில் அக்கறைக் காட்டுங்கள்:

ஒரு தந்தைக்கு நான்கு மகன்கள். அவர் வேலைக்குச் சென்று விட்டு களைப்புடன் வீட்டுக்குள் நுழைகிறார். முதல் மகன் டி.வி. பார்த்துக் கொண்டு இருந்தான். இரண்டாவது மகன் ஹோம் ஓர்க்கு செய்து கொண்டு இருந்தான்.  மூன்றாமவன் பொம்மை வைத்து விளையாடிக் கொண்டிருந்தான். கடைப் பையன் தந்தையுனைப் பார்த்தும் அவரிடம் ஓடி வந்து கழுத்தைக் கட்டிக் கொண்டான். இப்போது செல்லுங்கள் தந்தை யார் மீது பிரியமாக இருப்பாரென்று?  நீங்கள் அன்பினை யாரிடம் காட்டுகிண்றீர்களோ அதேபோன்று நாம் அவர்களிடமிருந்து அன்பினைத் திரும்பப் பெரமுடுமல்லவா?

உங்களுடைய தகப்பனார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக இருக்கிறார்.அவரை நீங்கள் அருகில் இருந்து கவனித்துக் கொண்டு இருக்கின்றீர்கள். உங்கள் நண்பர் அதனை அறிந்து உங்களுக்குப் போன் செய்து 'நான் உனக்கு  அல்லது உன் குடும்பத்திற்கு எதாவது உதவி செய்யவா? என்று கேட்கின்றார். தன் நண்பன் கஷ்ட காலத்தில் உதவ முன் வந்ததினைக் கண்டு நீங்கள் உண்மையிலே சந்தோசப் படுவீர்கல்லவா? இன்னொரு நண்பர் உங்களுக்கு போன் செய்து வார விடுமுறையில் சந்தோசமாக கழிக்க வெளியே செல்லலாமா? எனக் கேட்கின்றார். நீங்கள் உங்கள் தந்தையின் நிலைமையினை சொல்லியும் கூட விடாது உங்களை வற்புறுத்துகிறார் இப்போது சொல்லுங்கள் யார் உங்களின் உண்மையான நண்பர் என்று! ஆகவே நீங்கள் மற்றவர்களின் நலனில் அக்கறை செலுத்துவதின் மூலம் அவர்களின் அன்பினை பெறமுடியும்.

ஒரு சில மருத்துவமனைகளில் உள்ள டாக்டர்கள் வெறும் எம்.பி.பி.எஸ். மட்டும் படித்திருப்பார்கள் ஆனால் அவர்களின் மருத்துவ மனைகளில் கூட்டம் அலைமோதும். அனால் சில மேல்படிப்பு படித்த மருத்துவ மனைகளில் ஈ ஓட்டிக்கொண்டு இருப்பார்கள். காரணம் டாக்டர்கள் வைத்தியம் செய்வதில் பாதி குணம் அன்பாக பேசுவதில் பாதி குணம் நோயாளிகள் அடைவரில்லையா?
  
பெயர்களை ஞாபகபடுத்திக் கொள்ளுங்கள்:

நீங்கள் பலரை ரயில், பஸ், விமானங்கள், நடைப் பயிற்சியின்போது, கூட்டங்களில் பார்த்து பேசி விட்டு அவரி பெயரினை கேட்டுத் தெரிந்து ஞாபகப் படுத்திக் கொள்ளுங்கள். அடுத்த தடவை அவரைப் பார்க்கும்போதோ அல்லது தொலை பேசியில் பேசும்போதோ அவர் பெயரினைச் சொல்லி அழைத்தால் உங்களுடன் அவர் நெருக்கத்தினை ஏற்படுத்திக் கொள்வார்.அதற்காக தேவை இல்லாதவர் பெயரினை ஞாபகப்படுத்த வேண்டிய அவசியமில்லை.

விழிப்போடு கவனிப்பவராகவும், மற்றவர்களை பாராட்டுவராகவும் இருங்கள்:

உங்களை மற்றவர் எப்படி நடத்த வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களோ அதேபோன்று நீங்களும் அடுத்தவர்களை நடத்த வேண்டும் என எதிர்பார்ப்பது இயற்கைதானே! உங்களை ஒருவர் சாப்பாட்டுக்காக அழைக்கின்றார். அந்த சாப்பாட்டில் உள்ள குறைகளை பொறுத்துக் கொண்டு நிறைவினை பாராட்டினால் உங்களுக்காக கால் கடுக்க அடுக்களையில் நின்று சமைத்த அவரது தாய்க்கோ, அல்லது மனைவிக்கோ அல்லது சகோதரிக்கோ  மனம் சந்தோசப்படுத்துமல்லவா? சில துர்மனங்கொண்ட பூக்களில் கூட நீங்கள் தேந்துளிகளை சேகரிக்கும் தேனீக்களாக இருக்க ஆசைப் படுங்கள். நீங்கள் புண்களில் மொய்க்கும்  ஈக்களாக இருக்காதீர்கள்.
 ஒரு சொர்ப்பழிவிற்க்குச் செல்லுகிறீர்கள், பேச்சாளர் தான் தயார் செய்து வந்த பேச்சினை ஒரு மணி நேரம் பேசுகிறார். அவர் பேச்சில் நீங்கள் விரும்பினால் அவரை நேரில் பாராட்டுங்கள். அவர் ஒரு மணி நேரம் தயார் செய்த பேச்சின் பலனை அடைவார். அதே நேரத்தில் அளவோடு பாராட்டுங்கள். நீங்கள் ஒரு நோயாளியினைப் பார்க்க மருத்துவமனை  செல்லுகிறீர்கள், அவருக்கு மகிழ்ச்சியாக சில வார்த்தைகளை செல்லுவதினை விட்டு விட்டு நீங்கள் மிகவும் மெலிந்து உள்ளீர்கள், உங்கள் முகம் வெளிரியிருக்கிறது என்று சொல்லி அவரை மேலும் கலவரப் படுத்தார்தீர்கள்.

குடும்பத்தில் சர்வாதிகாரியாக மாறாதீர்கள்:

ஒரு பள்ளி செல்லும் மாணவன் டி.வி. வீட்டில் பார்த்துக் கொண்டிருப்பான். அதனை மூன்று தகப்பனார்கள் எவ்வாறு அணுகுகிறார்கள் என்றுப் பாப்போம். ஒரு தந்தை அதிகாரத்துடன், 'டி.வியினை ஆப் செய்து விட்டு படத்தினை திருப்பிப் பார் என்று அதிகாரத் தோரணையில் சொல்லுவார்.

இரண்டாவது தந்தை, 'நீ பாடத்தினை திருப்பிப் பார்க்கவிட்டால் உன்னை அடிப்பதோடு, உன் பாக்கெட் செலவிற்கு ஒரு காசு தரமாட்டேன் என மிரட்டுகிறார்.

மூன்றாமவர் சொல்வார், 'பாடத்தினை திருப்பிப் பார்ப்பது உனக்கு உசிதமாக தெரியவில்லையா?' என கேள்வி எழுப்புகிறார். இந்த மூவரில் மூன்றாமவரின் அணுகுமுறை பலனைக் கொடுக்கும். நீங்கள் தேன்கூட்டைக் கலைக்காமல் தேனைப் பருக முயலுங்கள்

அனாவசிய சம்பவங்களில் உங்கள் மூக்கை நுழைக்காதீர்கள் ஒரு சபையில் நீங்கள் இருக்கின்றீர்கள். உங்கள் நண்பருக்கு ஒரு போன் வருகிறது. அவர் பேசி முடித்ததும் அது யார் போன், என்ன விஷயம் என்று கேள்விக்குமேல் கேள்விக் கேட்டுத் துளைக்காதிஈர்கள். ஒரு நபர் அடுத்தவருடைய பொருள்களை அனுமதியில்லாமல் எடுத்து உபயோகிப்பாது நல்ல பண்பாடு இல்லை?

குச்சியினை நடுவில் பிடியுங்கள்

ஒருவரின் குறைகளை சுட்டிக் காட்டும்போது அவரின் நிறைகளைப் புகழ்ந்து குறைகளைச் சொன்னால் அவர் குறைகளைத் திருத்திக் கொள்வார். ஒரு பெட்டிக் கடைக்கு நீங்கள் செல்கிறீர்கள். கடைக்கு முன் வாழைப் பழத் தோல், சிகரெட் அட்டை, பாதி எறிந்த சிகரெட் போன்றவை அசுத்தமாக கிடந்தன. அந்தப் பெட்டிக்கடைக்காரரிடம் உங்கள் கடையில் மிகவும் பிசியாக வியாபாரம் நடக்கிறது. ஆனால் மற்ற கடைகளெல்லாம் அப்படியில்லை என்று சொல்லுங்கள் அவர் மிகவும் சந்தோசப் படுவார். இப்போது அவரிடம் சொல்லுங்கள் உங்கள் வாடிக்கையாளர்கள் கழிவுப் பொருளைப் போடுவதிற்கு ஒரு அட்டைப் பேட்டியினை வைத்தால் நலமாக இருக்கும் என்று சொல்லுங்கள். உடனே உங்கள் பேச்சுக்கு மதிப்பு அளித்து ஒரு அட்டைப் பெட்டி வைத்து விடுவார். ஆகவே குறைகளைச் சொல்ல நேர்ந்தால் நிறைகளை முதலில் சொல்லுங்கள். அவர் திருத்திக் கொள்வார்.

தவறினை திருத்த முயலுங்கள்:

மனிதனின் உருவப் படைப்பில் பல வேறுபாடுகளைப் பார்க்கலாம். அதேபோன்று தான் அவர்களின் கருத்தும் வேறுபடும். முடிந்தவரை அடுத்தவரின் தவறினைத் திருத்த முயலுங்கள். அவ்வாறு முடியாவிட்டால் அவரை உங்களின் எதிரியாகக் கருத வேண்டாம். ஆனால் அவரின் தவறை திருத்தும் நம்பிக்கையிலிருந்து தழன்று விடாதீர்கள்.

உங்களை மட்டமாக நினைத்தவர்களிடமும்  கருணைக் காட்டுங்கள்:

மென்மையான அணுகுமுறை உங்களுக்குப் பெருமை சேர்க்கும். கடுமையான அணுகுமுறை உங்கள் புகழைக் கெடுக்கும்.
சிலர் பலனை அனுபவிக்க மட்டும் வருவார்கள். ஆனால் உடல்,பொருள் பங்களிப்பில் அவர்கள் ஈடுபடமாட்டார்கள். அதற்காகக அவர்களை கடிந்து கொண்டால் நீங்கள் அவர்களுக்கு விரோதியாக மாறுவீர்கள்.
ஒரு காட்டில் இரு வழிப் போக்கர்கள் ஒரு வார பயணம் கொண்டார்கள். முதல் வழிப் போக்கர் தனது உடமைகளுடன் தனக்கு வேண்டிய உணவு தயாரிக்கத் தேவையான பொருக்களையும் சுமந்து சென்றார். அனால் இரண்டாம் வழிபோக்கர் உணவுப் பொருள் எதனையும் எடுத்துச் செல்லவில்லை.  இரண்டு நாட்கள் நடந்த களைப்பில். இருவரும் ஒரு மர நிழலில் தங்கினார்கள். முதலாமவர் தான் கொண்டு வந்த உணவுப் பொருளை வெளியே எடுத்து வைத்தார். இரண்டாமவரிடம் நீங்கள் இதனை சூடு செய்ய சில  காய்ந்த விறகுகளை எடுத்து வரச்  சொன்னார். அதற்கு இரண்டாம் வழிப் போக்கர் தான் மிகவும் களைப்பாக இருப்பதாகவும், நீங்கள் போய் எடுத்து வாருங்கள் என்றார். முதலாமர் சிரமம் பார்க்காது விறகு சேகரித்து வந்து அடுப்பினை பற்ற வைத்து சமைத்து முடித்தார். அதன் பின்பு இரண்டாமவரிடம் நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன் நீங்கள் குடிக்க கொஞ்சம் தண்ணீர் எடுத்து வாருங்கள் என்றார். இரண்டாமவரோ மறுபடியும் களைப்பாக இருக்கிறது என்றார். சிரமம் பார்க்காது முதலாமவர் தண்ணீர் கொண்டுவர  கிளம்பி விட்டார். இந்த சந்தர்ப்பத்தினை சாதகமாக எடுத்துக் கொண்ட இரண்டாமவர் சமைத்திருந்ததினை சாப்பிட ஆரம்பித்து விட்டார். முதலாமவர் தண்ணீர் எடுத்து வந்ததினையும் வாங்கிக் குடித்து தூங்கச் சென்று விட்டார். இரண்டாமவர் போன்று வேட்டிகுமேல் சொரியும் கனத்த தோளினைக் கொண்டவர்களை அடித்தா திருத்த முடியும். ஆகவே உங்கள் மென்மையான அணுகுமுறையின் மூலமே திருத்த முடியும்.

அடுத்தவரை குறை சொல்லாதீர்கள்:

ஒருவரின் குறைகளை திரும்ப, திரும்ப குத்திகாட்டாதீர்கள். அதுவும் பலர் முன்னிலையில் குறை சொல்லுவது பிறருக்குப் பிடிக்காது. ஆனால் தனியாகச் சொன்னாள் ஏற்றுக் கொள்வார்கள். ஒரு லாரி டிரைவர் தன் குடும்பத்தினைக் காப்பாற்ற இரவில் பல நாட்கள் கண்விழித்து ஓட்டுகிறார். ஒரு நாள் அவ்வாறு ஓட்டும்போது கண் திறந்து கண் திறப்பதிற்குள் ஒரு சைக்கிள் ஒட்டி மீதி மோதி லாரியும் விபத்துக்குள்ளானது. பாத சாரிகள் காயம் பட்ட சைக்கிள் ஒட்டியினையும் லாரி டிரைவரையும் மருத்துவமனையில் சேர்க்காது லாரி டிரைவரை ஏக வசனத்தில் பேசி விட்டுச் சென்றார்கள். ஒரு சிலர்தான் உதவ முன் வந்தனர். வசை பாடுவர்கள் அந்த லாரி டிரைவர் நிலையில் இருந்து பார்த்தால் அவரை திட்ட மாட்டீர்கள்.
குரங்கு தனக்கு ஒரு புண் வந்தால் அதனை சொரிந்து சொரிந்து பெரிதாக்குமாம். அதேபோன்று அடுத்தவர் குறையினை ஊதி பெரிதாக்காதீர்கள்
அதேபோன்று ஒரு மனிதரைப் பற்றி தவறான செய்தி உங்கள் கவனத்திற்கு வந்தால் அதன் நண்பகத்தன்மையினை ஆராயுங்கள். காதில் விலும் செய்தி எல்லாம் உண்மையில்லை.

 காலத்திற்கு கட்டுப் படுங்கள்:

நீங்கள் எதிரியின் கையை முருக்க முடியவில்லையா, அவரின் கையைப் பற்றி வாழ்த்து தெரிவியுங்கள்.
உங்கள் மனைவி பல நல்ல குணங்களைக் கொண்டவராக இருக்கலாம். ஆனால் அவரின் சில நடத்தைகள் உங்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். அவரின் நல்ல குணங்களுக்காக அவரை நேசியுங்கள். அவரின் மறைவான குறைகளையும் வலை போட்டு அலசாதீர்கள். பழம் பழமொழி ஒன்று இங்கே சொல்லுவதுப் பொருத்தமாக இருக்கும், 'அமுங்கிக் கிடக்கின்ற தூசியினை கிளப்பாதீர்கள். அப்படி தூசி மேலே கிளம்பினாலும் உங்கள் கைகுட்டையால் மூக்கை மூடிக் கொள்ளுங்கள்'.
இன்னொரு பழமொழி, 'உங்களுக்குக் காலம் கட்டுப்படட்டும், அல்லது காலத்திற்கு நீங்கள் கட்டுபடுங்கள்'

குடும்ப பாங்கானவராக இருங்கள்:

ஒரு கணவன் தன் மனைவியிடம், 'பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சீக்கரம் சாப்பாடு செய், அவர்களுக்கு சீருடை அணிந்து விடு, வீட்டினை சுத்தமாக வை, ஆபீஸ் துணிகளை துவை'  போன்ற உத்தரவுகளை அடுக்கடுக்காக சொல்லிக்கொண்டே போவார். ஆனால் அவர் மட்டும் ஆபீஸ் முடிந்து சீக்கிரமாக வராமல் நண்பர்களுடன் அரட்டை அடித்து விட்டு வீட்டுக்கு கால தாமதமாக வருவார்.
ஒரு பள்ளி விடுமுறை நாளில் மனைவி, அவரிடம் ஏங்க இன்று பிள்ளைகளுக்கு விடுமுறை தெரியுமுள்ள, நீங்கள் ஆபீஸ் முடிந்ததும் உங்கள் நண்பர்களுடன் வழக்கம்போல் அரட்டை அடித்துவிட்டு லேட்டாக வராதீர்கள் என்றால் அது எனக்குத் தெரியும் என்று ஒரு முறைப்புடன் பார்த்து விட்டுச் செல்லாதீர்கள்.  குடும்ப பாங்கானவராக இருங்கள்.

சோகத்தில் உங்களை இழந்து விடாதீர்கள்:

ஒருவருடைய தந்தையோ, தாயோ,மனைவியோ, குழந்தையோ இறந்து விட்டால் விழுந்து விழுந்து அழுது அதனால் நீங்கள் மயக்கமுற்று அல்லது நெஞ்சு வலித்து அதனால் ஏற்கனவே துக்கத்தில் இருக்கும் வீட்டில் மேலும் சோகத்தினை ஏற்படுத்தாதீர்கள். ஆகவே  சோகத்திலும் உங்களைத் தேற்றிக்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும்.

1980 ஆம் ஆண்டு சஞ்சய் காந்தி விமான விபத்தில் இறந்ததும் அதனைக் கேள்விப்பட்ட உலகத் தலைவர்கள் புது டெல்லி அன்னை இந்திரா இல்லத்தில் துக்கம் விசாரிக்க வந்து விட்டனர். சோகத்திலும் இந்திரா அனைவரையும் வாசலில் நின்று வரவேற்ற காட்சியினை தொலைக்காட்சியில் காட்டினார்கள். அந்த நிகழ்ச்சி அனைவரின் உள்ளத்தினையும் தொட்டது. ஆகவே சோகத்தில் உங்களை இழந்து விடாதீர்கள்.

இறைவன் கொடுத்ததை வைத்து நிறைவோடு வாழுங்கள்:

ஒரு சிலர் பணக்காரர்களாக இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு மன நோய் ஏற்பட்டால் அவர்களை மற்ற மன நோயாளிகளுடன் தான் தங்க வைப்பர். ஆகவே மன தைரியத்தினை தவற விடாதீர்கள். நாம் மன தைரியத்துடன் இருப்பதினை அறிந்து சந்தோசப் படுங்கள். ஒருவருக்கு பல கோடி சொத்து இருக்கலாம். ஆனால் அவருக்கு இனிப்பு நீர் இருந்தால் எந்த பொருளும் ஆசையுடன் சாப்பிட முடியுமா? ஆகவே நீங்கள் வாழ்க்கையின் பிரகாசத்தினை எண்ணி எங்காது உங்கள் வாழ்வின் இருண்ட காலத்தினை எண்ணி மகிழ்ச்சியோடு வாழுங்கள்
  
மலைபோல் எதிர்ப்பில் எழுந்து நில்லுங்கள்:

உங்களுடைய நல்ல முயற்சியினை தொடரவிடாமல் எதிர்ப்பு ஏற்பட்டால் மலைபோல் நின்று சமாலியுங்கள். காற்று மணல், தூசிகளைதன் இடம் பெயர்க்கச் செய்ய முடியும். ஆனால் மலையினை அசைக்க முடியுமா? நீங்கள் ஒரு சபையிலோ, வீட்டிலோ, விரிவுரையாற்றும்போதோ, டி.வி. நிகழ்ச்சியிலோ பங்கேற்கும்போது ஒருவர் வேண்டும் என்றே சீண்டினால் அதற்காக கோபம் அடையாதீர்கள். உங்கள் கருத்தினை பொறுமையாக எடுத்து வையுங்கள். 'பொறுத்தவர் பூமியாழ்வார் என்ற பழமொழி என்றும் பொய்த்ததில்லை'

இருக்கின்றதினை வைத்து சிறப்புடன் வாழுங்கள்

உங்கள் கார் பழையது, ஏர் கண்டிஷன் பழுதாகிவிட்டது, சீட் கவர் பழுதாகிவிட்டது. தற்போது அதனை சீர் செய்ய போதிய பண வசதியில்லை. கார் ரிப்பேராக இருக்கிறதே என்று வருந்துவதி விட, குறைந்த பட்சம் அந்த பழைய காராவது இருக்கிறதே என எண்ணி மகிழ்ச்சி அடையுங்கள். ஒருவர் சக்கரை நோயாளியாக இருப்பதினால் டீயில் சக்கரை இல்லாமல் குடிக்கலாம். ஆனால் அந்த டீகூட குடிக்க காசு இல்லாதவர் எத்தனையோ பேர் உள்ளனர் என்று எண்ணி சந்தோசப்படுங்கள்.
நீங்கள் ஒரு கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கச் செல்கிறீர்கள். ஆனால் அந்தப் பாடத்தில் இடம் கிடைக்கவில்லை. மாறாக ஆங்கில இலக்கியத்தில் இடம் கிடைத்து சேர்ந்து விட்டீர்கள். அதன் பின்பு மூன்று வருடமும் விருப்பப் பாடமான கம்ப்யூட்டர் சயன்ஸ் கிடைக்க வில்லையே என வருத்தப் பட்டே ஆங்கில இலக்கியத்தினை படிக்காமல் இருந்து விடப் போகிறீர்களா என்ன.

கருத்து வேருபாடுகளிடையே நல்ல நண்பர்களாக இருக்க முடியும்

சில டி.வி. நிகழ்சிகளில் பங்கேற்பவர் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வதினை பார்க்கலாம். ஒருவருடைய கருத்து அடுத்தவருக்கு ஏற்புடையதில்லாது இருக்கலாம். அதற்காக அவரை எதிரியாக கருதாது நிகழ்ச்சியின் முடிவில் ஒருவருக்கொருவர் சிரித்த முகத்துடன் கைகுலுக்கிக் கொண்டு இனியும் நண்பர்களாக இருப்போம் என்று சொல்லி விடை கொடுங்கள்.அவர் உங்களை என்றும் மதிக்கும் நண்பராக இருப்பார்.

மென்மையாக இருத்தல் உங்களை அழகுப் படுத்தும்:

ஒருவரை மிகவும் அமைதியானார், பண்பாளர்:என்று பாராட்டுவதுடன், இன்னொருவரை அவசரப் படுபவர், குரோதம் நிறைந்தவர் என்றும் தூற்றுகிறோம். ஒருவரின் குறையினைச் சொல்லும்போது அவரை பகைத்துக் கொள்ளாமல் சொல்லுங்கள். திருமணமான தம்பதிகள், பொற்றோர், ஒரு நிறுவன நிர்வாகிகள், ஆட்சியாளர்கள்  மென்மையாக நடந்து கொண்டால் பெரும்பாலான குழப்பங்கள் தவிர்க்கலாம்.. ஒரு கிராமிய பழமொழி, 'மென்ன்மை அழகு படுத்தும், கடுமை அதனை சிதைக்கும்'

சுவையுடன் வாழுங்கள், உயிரில்லாதவர் போல் வாழாதீர்கள்:

ஒரு மனிதர் தன வீட்டரிடமோ, பக்கத்து வீட்டரிடமோ, உடன்  பிறந்தவர்களிடமோ, நண்பர்களிடமோ, குழண்டைகளிடமோ பாச பிடிப்பில்லாமல் வாழ்வார். ஒரு கல்லூரியில் பி.ஏ முதலாண்டு படிக்கும் மகன் தந்தையிடம் வந்து தனது லெக்சரர் வைத்த மாடல் பரிச்சையில் ஒரு திருத்தம் இல்லாமல் வினா எழுதியிருப்பதினைக் காட்டுவான். ஆனால் தந்தையோ அவனை பாராட்டாது 'ஆமாம் இவர் பி.எச்.டி. பரிச்சையில் மார்க் வாங்கிவிட்டது போன்றமகிழ்ச்சியாக்கும்' என்று பாரா முகமாக இருந்தால் மகனுக்கு எப்படி இருக்கும்., ஒருவர்  தன உறவினர்  வீட்டுக்குச் செல்கிறார். அந்த உறவினரும் அவரை வரவேற்று டீ கொடுக்குறார். அதன் பின்பு வீட்டுக்குள் சென்று சமீபத்தில் பிறந்த தனது பேரனை ஒரு போர்வையில் வைத்து எடுத்து வந்து உறவினருக்குக் காட்டுகிறார். உறவினர் குழந்தையினை வாங்கி ஒரு முத்தம் கொடுத்து திரும்ப டீ. குடிப்பதிற்குப்  பதிலாக குழந்தையினை ஏறப் பார்த்து விட்டு டீ யை மடக் மடக் என்று குடிப்பதிலேயே கவனமாக இருக்கிறார்.
ஆகவே உயிரில்லாதவர் போல வாழாது சுவையுடன் வாழ்ந்து உங்கள் இன்ப, துன்பங்களை வெளிக்காட்டுங்கள்

உங்கள் நாவினை சுவையுள்ளதாக ஆக்குங்கள்:

மனித உடல் பகுதியில் மிகவும் காக்கப்பட  வேண்டிய சதைபிண்டம் நாக்குதான்.
உங்கள் மனைவி உங்களுக்காக சுடச்சுட வஞ்சரம் மீன் குழம்பு சமைத்து சாப்பிடப் பரிமாறுகிறார். நீங்கள் முதல் கவள சாப்பாட்டினை எடுத்து வையில் வைக்கிறீர்கள். குழம்பில் உப்பு அதிகமாக இருக்கிறது. அதற்காக வானத்திற்கும் பூமிக்கும் குதித்து உங்கள் கோபத்தினைக் காட்டினால் உங்கள் மனைவி மனம் வருந்தும். ஆகவே, உன் மீன் குழம்பு மிகவும் ஜோர், கொஞ்சம் உப்பை குறைத்திருந்தால் இன்னும் சுவையாக இருக்கும் என்று சொல்லிப் பாருங்கள். அடுத்தத் தடவை மிக கவனமாக சாப்பாடு உங்கள் மனைவி தயாரிப்பார்.
ஒரு நண்பர் மற்றொரு நண்பரிடம் ஒரு புத்தகத்தினை படிக்க இரவல் வாங்கிச் சென்றார். பல நாள் கழித்து அதனை திருப்பிக் கொடுத்தார். அப்போது அந்தப் புத்தகத்தில் பல பக்கங்கள் தண்ணீரில் நனைத்தும், சிறு சிறு உணவுப் பொருளும் இருந்ததால் அழுக்காகவும் மற்றும் கசங்கியும் இருந்தது.  அதே நண்பர் சில நாட்கள் கழித்து திரும்ப வந்து இன்னொரு புத்தகத்தினைப் படிக்கக் கேட்டார். நண்பர் தன் வீட்டுக்குள் சென்று அவர் கேட்ட புத்தகத்தினை ஒரு தட்டில் வைத்துக் கொடுத்து எடுத்துச் செல்லுங்கள் என்றார். இரவல் கேட்ட நண்பர் சொன்னார் நான் புத்தகம் மட்டும் தானே கேட்டேன், நீங்கள் தட்டையும் சேர்த்துக் கொடுக்கிறீர்களே என்றார். அதற்கு புத்தக நண்பர் சொன்னார், புத்தகம் நீங்கள் படிப்படிற்கு, தட்டு நீங்கள் படிக்கும்போது சாப்பிடும் உணவுப் பொருள் வைப்பதிற்கும், தண்ணீர் மூடுவதிற்கும் என்று சொன்னாரே பார்க்கலாம், இரவல் கேட்ட நண்பர் நாணப் பட்டு இனிமேல் அதுபோன்று நடக்காது என்று சொல்லி தட்டுவினைத் திருப்பிக் கொடுத்து விட்டு நகன்றார்.
'ஒவ்வொரு கனிவான வார்த்தையும், ஒரு அன்பளிப்பாகவும் அருளிரக்கச் செயலாகவும் அமையும்' என்பது முன்னோர் பழமொழி

அடுத்தவர் குறை சொல்லுவார்கள் என அஞ்ச வேண்டாம்:.

குறை சொல்லுபவர் பல விதம்:

1) சிலர் உண்மையிலேயே அறிவுரை சொல்ல வேண்டும் என நினைப்பர். ஆனால் அவருக்கு திறமை போதாது.

2) சிலருக்கு உங்கள் மீது பொறாமை கொண்டு உங்களை அவர்களின் வார்த்தைகளால் வருந்தச் செய்வர்.

3) சிலருக்கு தாம் என்ன செய்கிறோம் என்றே தெரியாது குறை சொல்வர்.
4) சிலர் இருண்ட உள்ளம் கொண்டவர். எப்போதுமே குறை சொல்லுவதையே வழக்கமாகக் கொண்டவர் ஆவர்.

சீன பழமொழி, 'மக்களுக்கு ஒரே சுவையுணர்வு இல்லாவிட்டால் உலகில் வியாபாராமே நடக்காது'

ஆகவே வேண்டு என்றே குறை சொல்லுபவர் உலகில் ஏராளம்.  அவர்கள் கூற்றினை சட்டை செய்யக் கூடாது.

ஒருவர் தனது பழைய காரை விற்றவுடன் நண்பர் ஒருவர் வந்து விற்ற விபரம் கேட்டுவிட்டு எனக்குத் தெரிந்திருந்தால் இன்னும் அதிக விலைக்  கொடுத்து வாங்கி இருப்பேன் என்று. உடனே உங்கள் மனம் சஞ்சலப்படும். அதனைத் தவிர்க்க நீங்கள், 'காரை விற்றாகி விட்டது பின்பு அதைப் பற்றிய பேச்சை விடுங்கள்' என்று  சொல்லவேண்டும்,

மனிதனுக்கு பகையில்லாத இவ்வுலகமில்லை. அதற்காக நீங்கள் இமயமலைக்குப் போய்யா தனியாக வாழ்ந்து உங்களை வருத்த   வேண்டும்?

சிரித்துக் கொண்டே இருங்கள்:

சிரிப்பது கோபம் கொள்வதினை தவிர்க்கும். துணிச்சலானவர் யார் என்றால் கோபத்தினை அடக்கி துன்பத்திலும் சிரிப்பவர் ஆவர்.

மகாத்மா காந்தி, கோட்சேயின் துப்பாக்கிக் குண்டுக்கு இறையானபோதும், நபிகள் நாயகத்தின் கழுத்தில் கிடந்த துண்டினை முறுக்கிய கடன் கொடுத்தவர் கண்டு பலர் கோபப்பட்டும் அவர்கள் கோபம் அடையவில்லை. ஆகவே தான் அவர்கள் உலகில் உயர்ந்தவர்களாக கருதப் படுகிறார்கள்.

கிராமப் பழமொழி, 'வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்'

ரகசியம் காக்க:

எந்த ஒரு ரகசியமும் ஒருவரினை மீறிப் போகிறதோ அவை ரகசியமாக இருக்க முடியாது. எது அந்த இருவர் என்பதிற்கு பலர் பல விளக்கங்களை சொல்வர். ஆனால் உண்மையில் அந்த இருவர் ஒரு மனிதனின் இரு உதடுகளே என்றால் மிகையாகாது.

ஒருவர் ஒரு இரகசியத்தினை சில காலம் பத்திரமாக பூட்டுப் போட்டு  வைத்திருப்பார். காலச் சக்கரம் சுழல சுழல அந்த ரகசியம் வெளி வரத் தொடங்கும். அது பல நபர்களை அடைந்து பல்வேறு உருவம் கொடுக்கப்பட்டு பூதாகாரமாக கிளம்பும்.

ஒருவர் இரகசியத்தினை காக்க திறனில்லாதவராக  இருந்தால் அது மனைவியே ஆனாலும் அவரிடம் சொல்லாதீர்கள்.

நீங்கள் ஒரு இரகசியத்தினை எவ்வளு தூரம் காபாத்துகிரீர்கள் என்பதினைப் பொருத்து உங்கள் மீது பிறர் வைத்து இருக்கும் நண்பகத்தன்மையும்,மதிப்பும் அதிகர்க்கும்.

எவர் ஒருவர் உங்கள் இரகசியத்தினை அறிவாரோ அவர் உங்களை சீக்கிரமே அடிமைப் படுத்தி விடுவார்.
மக்களுக்கு உதவி செய்யுங்கள்:

பலன் நோக்கா உதவி செய்பவர் புகழ் என்றுமே மறைவதில்லை:

அடுத்தவர்களுக்காக வாழ்ந்தவர் பிற்காலத்தில் வறுமையில் வாழலாம். ஆனால் அவர் பிறர் மனதில் நீகா இடம் பிடித்து புகழுடன் மறைவார்.
உங்கள் திறமை மீறி உங்கள் தொழில் பழுவினை ஏற்றாதீர்கள்
சிலர் எந்தக் காரியத்தையும் நான் நான் என்று அள்ளிப் போட்டுக் கொண்டு செய்வர். அதனால் சில குறைபாடுகள் ஏற்படும்.

ஒரு பொது சேவை நண்பரினைத் தேடி பலரும் உதவி கேட்டு வருவர். அத்தனை உதவியையும் ஒருவர் செய்து கொடுக்க முடியாது. முடிந்த காரியத்தினை செய்து கொடுத்து
விட்டு முடியாத காரியத்தினை தவிர்த்து விடுங்கள். இல்லையென்றால் பலரின் பகையினையும் பெற வேண்டியிருக்கும்
'மக்களுக்கு உதவி செய்பவர்களுக்கு இறைவன் உதவி செய்வான்', பல வேதங்கள் கூறும் பொன்மொழி.

'அடுத்த வீட்டுப் பிள்ளைக்கு ஊட்டி வளத்தால் தன் பிள்ளை தானே வளரும்' கிராமிய பழமொழி.


உங்கள் சோம்பேறித்தனம் பலரைப் பாதிக்கும்:

ஒரு கம்பனி மேனேஜர் சோம்பேறியாக இருக்கிறார். அவர் மேஜையில் பைலுக்கு மேல் பைல் தேங்கிக் கிடந்தது. ஒரு நாள் அவருடைய எம்.டி இடமிருந்து தொலைபேசி வந்தது. அதில் அந்த அலுவலகத்திற்கு அடுத்த நாள் காலையில் ஆய்வுக்காக வருவதாகச் சொன்னார். உடனே மேனேஜர் சுதாரித்துக் கொண்டு முயல் வேகத்தில் தன் பி.ஏ வினைக் கூப்பிட்டு 'ஏன் இத்தனை பைல்கள் தேங்கிக் இடக்கின்றன என்று சொல்ல வில்லை என்று சப்தம் போட்டு அதனை பைல்களையும் எடுத்துச் சென்று இன்று மாலைக்கும் அனைத்து ஊழியர்களும் முடித்துக் கொடுத்து விட்டுத்தான் வீடு போக வேண்டும் என்று கட்டளையிட்டார். பி.ஏவும் அனைத்து பைல்களையும் எடுத்துச் சென்று எரிச்சலுடன் ஒவ்வொரு மேசையாக வீசி விட்டு மேனேஜர் கட்டளையினைச் சொன்னார். அப்போது ஒரு ஊழியர் சொன்னார், 'சார், என் மகனுக்கு இன்று பிறந்த தினம், மாலை சீக்கிரமாக வீட்டுக்குப் போக வேண்டும் என்றார். அதற்கு பி.ஏ முடியாது என்று சொல்லி விட்டார். அந்த ஊழியரும் மற்றவர்களைப் போல முனு முணுத்து விட்டு வெகு நேரம் இருந்து வேலையினை முடித்துக் கொடுத்து விட்டுச் சென்றார். வீட்டுக்குள் சென்றதுமே செருப்புகள் ஒரு பக்கமும், ஆபீஸ் பை ஒரு பக்கமும் பறந்தது. அதற்கு மேல் மனைவி,' ஏங்க கொஞ்ச சீக்கிரம் வரக்கூடாதா பிள்ளை நீங்கள் வருவீர்கள் என எதிர்பார்த்து ஏமாந்து தூங்கி விட்டான்' என்று சொன்னது தான் தாமதம் தன் மேனேஜர் மேல் உள்ள கோபத்தினை தன் மனைவியிடம் காட்ட ஆரம்பித்து விட்டார். அத்தனைக்  குழப்பதிற்கும் சோம்பேறி மேனேஜர் தான் காரணம். ஆகவே வேலையினை பலரிடம் பகிர்ந்து கொடுத்து குறிப்பிட்டக் காலத்திற்குள் முடிக்கப் பாருங்கள். நீங்கள் சோம்பேறியாக இருந்தால் அடுத்தவர் உங்கள் மீது சவாரி செய்ய நினைப்பார்.   .

குறிப்பறிந்து உதவுங்கள்

உங்களை ஒருவர் அவமதிக்கும்போதோ, அல்லது சீண்டும்போதோ உங்கள் நண்பர் உங்களுக்கு உதவிக்கு வருகிறார் என்றால் உங்கள் முகம் எவ்வளு பிரஹாசம் அடையும். அதேபோன்று நீங்களும் அடுத்தவருக்கு உதவுங்கள். ஒருவனுடைய வேஸ்டி ஆற்றில் அடித்து செல்லும்போது கரையில் இருக்கும் நண்பர் தனது வேஸ்டியினைக் கொடுத்தால் எவ்வளவு மகிழ்வார்.
உங்களது நண்பர் வீட்டுக்குச் செல்கிறீர்கள். உங்கள் வருகையினை பார்த்து மகிழ்ச்சியில் உங்கள் நண்பரின் ஒன்பது வயது மகன் அவனது தாயார் கொடுத்த டீயினை தட்டில் வைத்து எடுத்து வருகிறான். அப்போது உங்கள் முன் டீயினை வைக்கும் பதட்டத்தில் டீயினை சிந்தி விடுகிறான். அப்போது அவனை உங்கள் நண்பர் திட்டுகிறார். நீங்கள் அந்தப் பையனுக்காக பரிந்து பேசினால் அந்த சிறுவனுடைய மகிழ்ச்சிக்கு அளவே இருக்காதல்லவா?

அறிவாளிகள் எப்போதும் அடுத்தவர் மனங்கவர்ந்து அன்பைத் தேடுவர்.:

வெளித்தோற்றங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்:
நீங்கள் ஒரு நண்பருடைய வீட்டுக்குச் செல்கிறீர்கள். அவர் வீட்டில் செருப்புகள் பல பக்கத்திலும், ஸ்கூல் பைகள் மற்றும் புத்தகங்கள் வீட்டு ஹாலுக்குள் இரைந்தும், பாத்திரங்கள் சில பக்கங்களில் அலங்கோலமாக கிடக்கின்றன என்றால். அந்த நண்பர் வீட்டினைப் பற்றிய நன் மதிப்பு உங்களிடம் வருமா?நீங்கள் வேலை பார்க்கும் அலுவலகம் சுத்தமாக வைக்கப் பழகிக்கொள்ளுங்கள்.
அதே போன்று தான் உங்களைப் பார்க்கும் முதல் பார்வையிலே உங்கள் தோற்றத்தினை வைத்து அடுத்தவர் எடை போடுவார். நீங்கள் நல்லாடைகளை உடுத்த எப்போதுமே ஆர்வமாக இருங்கள். 'ஆள் பாதி ஆடை பாதி என்பது' கிராமிய பழமொழி இன்றைய நவீன உலகத்திற்கும் பொருந்தும். 

பொய் சொல்லுவதினை தவிர்ங்கள்:

சிலர் பொய் சொல்ல்வதினையே வாடிக்கையாக வைத்திருப்பார். பொய் சொல்லுவது உங்களுடைய நண்பர்களையும், உறவினர்களையும், சக ஊழியர்களையும் உங்களிடமிருந்து பிரித்து விடும். 'புலி வருது, புலி வருது' என்று விளையாட்டாக சொல்லி உண்மையிலே ஆபத்து வந்தால் யாரும் காப்பாற்ற மாட்டார்கள்.

சிலர் சில சம்பவங்கள் சுவாரிசமாக இருக்கவேண்டும் என்று கண்ணும் காதும் வைத்து பலர் ரசிக்கச் சொல்லுவார்கள். அவர்கள் எத்தனை காலத்திற்குத்தான் மிகை படுத்திச் சொல்ல முடியும். அவர்களுடைய சாயம் சீக்கிரமே வெளுத்து விடும்.

கொண்ட கொள்கையில் உறுதியாக இருங்கள்:

ஒரு மனிதனை எடை போடும்போது அவன் கொள்கையில் எவ்வாறு உறுதியாக இருக்கின்றான் என்பதினைப் பொறுத்தே அமையும். ஒரு ஊழியர் லஞ்சம்,கையூட்டு, மது, மாது, அடுத்தவர் விருந்தோம்பலை விரும்புவதில்லை என்றால் அவர்  மீது சக ஊழியர் மதிப்புடன் பழகுவர்.

ஒரு கணவர் மது, புகைத்தல், சூதாடுதல், விலை மாதர்களில் நாட்டம் கொண்டவர் என்றால் மனைவி அவரை கண்டிக்க தவறக் கூடாது. கணவரின் ஊதாரித் தனத்தினை முளையிலே கட்டுபடுத்த வில்லை என்றால் பிற்காலத்தில் ஒரு குடும்பமே பாதிப்பினை அடைய நேரிடும்.

நீங்கள் பொய் சொல்லுபரின் செயலை ஆதரிக்காதீர்கள். அப்படி நீங்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தால் உங்கள் மீது உள்ள நன்பகத் தன்மையும் போய்விடும்

வறியவருக்கு தீங்கு விளைவிப்பதினைத் தடுப்போம்:

ஒருவர் பிறரைப் பற்றி அவதூறு பேசுவதால் பலருக்கு அவரைப் பிடிப்பதில்லை. அவரை யார் விரும்புவார் என்றால் அவர் போன்று புறம் பேசுபவரே!

வசதிப் படைத்தவர் வறியவரின் சொல்லை சட்டை செய்வதில்லை. ஒரு சிலர் சிங்கம் போல ஏழைகளை அடிப்பதும், வறியவரை ஓட, ஓட விரட்டுவதுமாக இருப்பார். ஆனால் அவர்களுக்கு ஒரு சங்கடம் வந்தால் தீக்கோழி தன் தலையினை  மணலுக்குள் புதைத்துக் கொள்வதுபோல் மறைந்து விடுவர்.

'ஒரு நாள் அகங்காரம் கொண்டவர் ஓய்வு எடுக்கும்போது ஒடுக்கப் பட்டவர் வீறு கொண்டு எழுவர்' என்பது உலக நியதி.

எதிரிகளின் எண்ணிக்கையினை அதிகமாக்காதீர்கள்:

 நீங்கள் பலரிடம் பழகும்போது, சிலர் கோபம் கொள்பவராக இருப்பார், சிலர் அறியாமையின் சிகரங்களாக இருப்பார், சிலர் தீய எண்ணங்கள் கொண்டவராக இருப்பார், சிலர் விதண்ட வாதம் செய்பவர்களாக இருப்பார். அவர்கள்  எல்லோரையும்   நீங்கள் பகைத்துக் கொள்ள முடியாது. நீங்கள் உலகில் வாழும் நாள் குறுகியதே ஆனதால் அதிகமான எதிரிகளை தேடிக்கொள்ளதீர்கள்.

தாராள மனப் பான்மை கொள்ளுங்கள்:

உற்றார், சுற்றத்தார்,மிகவும் விரும்பக் கூடியவர், விருந்தோம்பலுக்குப் பெயர் போனவர், அடுத்தவர் கேட்காமலே உதவுவர்தான் தாராள மனப் பான்மை கொண்டவர்.
ஆனால் புகழுக்காகவும்,, தலைமைப் பதவிக்காகவும், அடுத்தவர் புகழ வேண்டும் என்று தாராள மனப் பான்மையுடன் நடந்து கொள்பவர் சாயம் சீக்கிரமே வெளுத்து விடும்.
அதே நேரத்தில் கையினை ரெம்போ தாராளமாக விரிக்கவும் கூடாது, கஞ்சதனத்தில் இறுக்கிப் பிடிக்கவும் கூடாது
உணர்வுப் பூர்வமாக இருங்கள்:
ஒரு மனிதர் உங்களை கடைத் தெருவில் பார்கிறார். அவர் முகம் இறுகிப் போயிருந்தது. அதே நபரை சில நாட்கள் கழிந்து ஒரு திருமண நிகழ்ச்சியில் பார்கிறீர்கள்., அப்போதும் அதே இறுகிய முகத்துடன் காட்சி தருகிறார். நீங்கள் உங்கள் வீட்டுக்குச் சென்றால் அந்த இறுகிய முகம் தான் நினைவுக்கு வரும். அதே நேரத்தில் ஒருவர் உங்களை நடை பயிற்சியின் பொது ஹல்லோ என்று சிரித்த முகத்துடன் சொல்லி விட்டு செல்கிறார். நீங்கள் வீட்டுக்குச் சென்றாலும் அந்த சிரித்த முகம் தான் நினைவுக்கு வரும்.
ஆனால் அன்றாடம் உங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் உங்கள் மனைவி, குழந்தை, பெற்றோர், உற்றார், உடன் பிறந்தோர், அலுவலக நண்பர்கள் ஆகியோர்களை சிரித்த முகத்துடன்  அதே நேரத்தில், கோபத்திலும், வாக்குவாதத்திலும், குறை சொல்லும்போதும் சந்திக்க நேரிடும். ஆனால் அவர்களுக்கும் நாம் காட்டும் அன்பும், பரிவுமே என்றென்றும் நிலைத்து இருக்கும்.
ஆகவே வாழ்கையில் உணவுப் பூர்வமாக இருங்கள்.
முடிந்தவரை உதவுங்கள்:
ஒரு மனிதர் உங்களிடம் ஒரு உதவியினை பெற நினைத்து அதைப் பெற முடியாமல் திரும்பும்போது உங்களது மனம் வருந்துமல்லவா?
ஆகவே கூடியமானவரை உதவி கேட்டு வரும் நபரின் தேவைகளை குறைந்தளவாது நிறைவேற்ற முயற்சி செய்யுங்கள். இல்லை என்றால் உங்களிடம் உதவி பெற முடியாதவர் உங்களைப் பற்றி அவதூறு பரப்புவார். ஒருவர் கேட்ட உதவியினை கொடுக்க முடியாவிட்டால் அவரை உபசரித்து ஒரு கிளாஸ் தண்ணீராவது கொடுத்து கனிவாகப் பேசி அனுப்பி வையுங்கள்.

இரண்டு கண்களாலும் பாருங்கள்:

நாம் இயற்கையிலேயே குறைகளை கண்டு பிடிப்பவர்களாக இருக்கின்றோம்.
ஒரு பள்ளி ஆசிரியர் சோம்பேறி மாணவரை குறை சொல்லுவதும், ஒழுங்காக படிக்கும்  மாணவனைப் பாராட்டுவதும், ஒரு வீட்டில் சுட்டி செய்யும் மகனை தந்தை கண்டிப்பதும், அமைதியான பிள்ளைகளை செல்லமாக நடத்துவதினையும் காணலாம். அதே நேரத்தில் மக்கு மாணவனின் வேறு திறமையினை ஆசிரியர் அறிந்து பாராட்டியும், சுட்டி செய்யும் பிள்ளைகளின் நல்ல குணங்களை கண்டறிந்து பலர் முன்னிலையில் தந்தை பெருமை கொள்ளும்போது அவர்கள் திருந்தி வாழ வழி பெறக்கும். அத்துடன் நீங்கள் அவர்கள் மனதில் என்றும் நீங்காமல் இருப்பிஈர்கள்.

காரியம் சாதிக்க தாராளமாக புகழுங்கள்:

ஒரு குழந்தை தன் காரியத்தினை சாதிக்க தந்தையின் கழுத்தைக் காட்டிப் பிடித்துக் கொண்டு கொஞ்சி தனக்கு வேண்டியதினைப் பெறும். அதேபோன்று ஒருவரிடம் உதவியினை நாட வேண்டுமென்றால் அவரை தாராளமாக புகழுங்கள்.
உங்கள் நண்பரை உங்கள் வீட்டுக்கு சாப்பிடுவதிற்காக அழைக்க எண்ணினால் உங்கள் மனைவிடம் எவ்வாறு கெஞ்சி ஒத்துக் கொள்ள வைக்கிறீர்களோ அதேபோன்று வார்த்தைகளை தாராள உபயோகிங்கள்.
'பெரிய கவலை சாப்பாடு முழுங்குமுன் பற்களால் அரைத்துக் கொள்ள பழகிக் கொள்ளுங்கள். இல்லையென்றால் அந்த உணவு செரிக்காது'.
நீங்கள் எப்போதும் வெற்றியினை அடைய முடியாது:
மேலே குறிப்பிட்ட பல பண்பாட்டுச் செயல்களால் வாழ்க்கையினை சிறப்புடன் நடத்த முடியும். அவ்வாறு முடியா விட்டாலும் உங்கள் முயற்சியினை விட்டு விடாதீர்கள்,


ஏனென்றால் நான் சொல்லாத பண்பாடுகள் பல இருக்கின்றன. அவை மேலும் அனுபவத்தில் தெரிந்து கொள்ள வேண்டியவை. 

வெள்ளி, 6 மே, 2016

இந்தியா குறித்து நபிகள் நாயகம்

ஹிந்து - ஹிந்துஸ்தான் - ஹிந்துத்துவா என்ற பெயர்கள் இப்பொழுது இந்தியா முழுவதும் பிரச்சினைக்குரிய பெயர்களாக சில அரசியல்வாதிகளாலும்,
சில மதவாதப் பேர்வழிகளாலும் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டு விட்டன.
ஹிந்து என்ற வார்த்தை ஹிந்து மத வேதங்களான எந்த வேதங்களிலும் கிடையாது. அது பகவத்கீதை,  மஹாபாரதம், இராமாயணம், பவிஷ்ய புராணம் அல்லது ரிக், யஜூர், சாமம், அதர்வணம் போன்ற நான்கு வேதங்களிலும் ஹிந்து என்ற மூன்று எழுத்தே இல்லை என்று வாதிடுகிறார்கள். வாதிடுபவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. வரலாற்று ஆய்வாளர்களும், சரித்திர வித்தகர்களும் தான்.

ஹிந்த் என்ற வார்த்தையை தீர்க்கமான ஆதாரமாக இஸ்லாம் தான் நிரூபித்துக் காட்டியுள்ளது. இவற்றிற்கு ஆதாரமாக முஸ்லிம்களின் புனிதமிக்க ஆலயமான 'கஅபா'வின் ஒரு முனைக்கு (ருக்னுல் ஹிந்த்)  ஹிந்த் முனை என்று ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே கூறப்பட்டுள்ளது.
  
நபிகள் நாயகம் அவர்கள் திருக் கபாவின் அருகில் நின்று ஒரு மாலைப்பொழுது தமது ஜூப்பாவைத் திறந்த வண்ணம் இந்தியாவின் திசை நோக்கி நின்று இப்படி கூறியுள்ளார்கள். நான் ஹிந்த்துவிலிருந்து (தவ்ஹீத்) ஏகத்துவ தென்றலை உணர்கின்றேன். என்றும், மேலும் ஒரு முறை கூறியுள்ளார்கள். நான் ஹிந்த்வில் இருக்கிறேன் என்னில் ஹிந்த் இருக்கிறது என்று கூறியுள்ளார்கள்.
மேலும், நபிகளாரின் தோழர்கள் இந்தியாவிற்கு வந்து தமது வணிகத்தை முடித்துக் கொண்டு, இந்தியாவில் இருந்து கொண்டு வந்த புளியை நபிகளாருக்கு முன்னால் வைத்தார்கள்.  நபிகளார் அவர்கள் தமது விரலால் புளியைத் தொட்டு தமது நாக்கில் வைத்துக் கொண்டே இது (தமருல் ஹிந்த்) இந்துஸ்தானத்தின் பேரிச்சம் பழமா? என்று கேட்டுள்ளார்கள்.
  
ஒரு முறை கஃபு இப்னு சுஹைர் என்ற கவிஞர் நாயகத் தோழர் நபிகளாரை வர்ணித்துப்பாடும் போது 'தங்களின் திருவதனம் அல்லாஹ்வினால் உருவாக்கப்ட்ட ஹிந்துஸ்தானத்தின் வாளாகும்' என்றார்கள்.  ஆக 'ஹிந்த்' என்ற வார்த்தை நபிகள் நாயகம் அவர்களின் காலத்திலேயே புழங்கப்பட்டதாக வரலாறு உண்டு.
ஹிஜிரி 10ஆம் ஆண்டு காலித் அவர்கள் நஜ்ரான் நாட்டிலிருந்து வந்த போது அவர்களுடன் 'பனூஹாரிஸ்' கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு குழுவும் வந்திருந்தது. அவர்களைக் கண்டதும் இவர்கள் அல்ஹிந்த்விலிருந்து வந்தவர்கள் போன்றுள்ளதே என்றார்கள்.
இஸ்லாமிய தொடக்க காலத்தில் நபிகளாரின் எதிரியாக இருந்த அபூசுஃப்யான் (பின்னாளில் இவர் இஸ்லாத்தை தழுவினார்) அவர்களின் மனைவியாருக்கு 'ஹிந்தா' என்று தான் பெயர் வைக்கப்பட்டிருந்தது. அரேபிய பாலைவனத்திலிருந்து வணிகக் கூட்டங்கள் அடிக்கடி இந்தியா சென்று வந்ததன் நினைவாக அப்பெண்ணுக்கு 'ஹிந்தா' என பெயரிடப்பட்டதாக கூறப்படுகிறது.
  
இந்தியாவின் தென் கிழக்கே உள்ள இந்தோ-ஏசியா என்ற நாடு பூர்விகத்தில் ஹிந்து நாடாகவே இருந்தது. இஸ்லாத்தின் பக்கம் அநாட்டு மக்கள் ஈர்க்கப்பட்டதன் பின் ஹிந்தோனேசியா என்று மறுவி, தற்பொழுது இந்தோனேசியா என அழைக்கப்படுகிறது. இன்றும் அந்நாட்டில் பூர்விகக் கலை நிகழ்ச்சிகளில் இராமாயணம், மஹாபாரதம் போன்ற நாடகங்கள் நடத்தப்பட்டு  வருகின்றன.
  
உலகில் ஆதி மனிதன் ஆதம் தோன்றிய இடம் இந்தியா தான். கடல்கோள் நிகழ்வுக்கு முன்பு கடலால் பிரிக்கப்படாத நிலப்பகுதியாக இருந்தது தான் தமிழகம் என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை.
  
தற்போது உள்ள இலங்கையில் ஆதம் மலை என்று அழைக்கப்பட்டு வரும் அம்மலையின் மீது தான் மனித குலத்தின் முதல் மனிதன் ஆதம் அவர்களை சுவனத்தில் இருந்து இறைவன் பூமிக்கு இறக்கியதாகவும், அவர்கள் பாதச்சுவடுகள் அங்குள்ள குன்றின் மீது பதிந்துள்ளதாகவும், யூத, கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம்கள் நம்புகின்றனர்.  ஆதம் அவர்கள் தோன்றிய இடமாகக் கருதப்படும் இடத்திலுள்ள பாதச்சுவடுகளை, இந்துக்கள் சிவனொளி பாதம் என்றும், பௌத்தர்கள் ஸ்ரீபுத்த பாதமென்றும் கூறி வழிபடுகின்றனர். அதே போல் ஆதம் மலைக்கு அருகாமையில் கால்கோள் நிகழ்ந்ததால், நிலம் பிரிக்கப்பட்டு தற்போது கடல் தோன்றியுள்ள பகுதியை, ஆதம்பாலம் என்றும், அதனை ஒட்டியுள்ள ராமேஸ்வரம் நிலப்பகுதியில் ஆதம் அவர்களின் வம்சாவழிகளான ஆபில், காபில் ஆகியோர் அடக்கம் செய்யப்பட்ட இடமும் உள்ளது.
அரேபிய வணிகர்கள் இலங்கைக்கு வந்து திரும்பும் பொழுது சேர நாட்டை ஆண்ட மன்னர் சேரமான் பெருமாள் அரபு வணிகர்களுடன் சேர்ந்து அரேபியா சென்று இஸ்லாத்தை ஏற்று, முஸ்லிமான  முதல் இந்து மன்னர் என வரலாறு கூறுகிறது. எனவே இந்தியாவிற்கும் இஸ்லாமியர்களுக்கும் நீண்ட தொடர்பு பண்டைய காலத்தில் இருந்தே இருந்து வருகிறது என்பதனை இத்தகைய வரலாறுகள் மூலம் அறிய கொள்ளலாம்.
ஆதார நூல்கள்:
1. சோழச் சுடரொளி, குந்தவை நாச்சியார், ஏ.கே.ராசன்
2.. சமுதாய வீதியில் சன்மார்க்கப்பித்தன், எஸ்.எம்.கனிசிஷ்தி
3.. மறைக்கப்பட்ட வரலாறும், மறைக்கப்படும் உண்மைகளும், அனிஸ்தீன்
4. .சேரமான் பெருமாள், சி.எம்.என்.சலீம்
5.. விடுதலைப்போரில் முஸ்லீம்கள், வி.என்.சாமி
கட்டுரையாளர் : வைகை அனிஷ் அவர்களுக்கு நன்றி!

சனி, 2 ஏப்ரல், 2016

ஸஹாபாக்கள் வலிமார்கள் போதித்த வஹ்ததுல் வுஜூத்

♣ நான் அல்லாஹ்வைத் தவிர வேறொன்றையும் பார்க்கவில்லை, என் உள்ளே இருக்கிற விஷயத்தை நான் வெளியிடுவேனானால், ஆழமான கிணற்றில் விடப்பட்ட கயிறு துடிப்பதை போன்று நீங்களும் துடிப்பீர்கள். 

ஸெய்யதுனா இமாம் அலி ரலியல்லாஹு அன்ஹு 

♣ அல்லாஹ், தன்னையே வணங்குவோனும், வணங்கப்படுவோனும் ஆவான். 

ஹழ்ரத் முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு 

♣ நான் இறைவனை முப்பதாண்டுகளாக தேடினேன். ஆனால் ஆழ்ந்து கவனிக்கும் பொழுது அவனே தேடுபவனாகவும் நான் தேடப்படும் பொருளாகவும் இருந்ததை உணர்தேன். 

இமாம் அபூ யஸீத் பிஸ்தாமி ரலியல்லாஹு அன்ஹு

♣ அகப் பார்வையுடைய ஞானக் கண்ணானது ஒளி பெற்றதாக இருந்தால், அது எந்தத் திசையை நோக்கினாலும் அவனது தோற்றத்தையே காணும். 

ஹழ்ரத் காஜா மீர்தர்த் ரலியல்லாஹு அன்ஹு

♣ ஒரு தடவை ஜுனைதுல் பக்தாத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பனா நிலையில் பேசுகின்றவனும் நானே, கேட்கின்றவனும் நானே, ஈருலகிலும் வேறு யார் உள்ளார்? என்று தன்னை மறந்த நிலையில் கூறி விட்டனர். இதன் காரணமாக அவர்களை காபிர் என்று மார்க்க அறிஞர்கள் கூறவும், அவர்கள் சிறைத் தண்டனைக்கு உள்ளாகவும் நேரிட்டது. 

நூல்: வலிமார்களின் வரலாறு பாகம் - 2

♣ எல்லாம் அவனுடைய ஒளிதான், எல்லாம் அவனே, அவன் அல்லாததற்கு எந்த ஒரு எதார்த்தமும் இல்லை.

இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு
மிஷ்காத்துல் அன்வார், பக்கம் 60

♣ ஏகத்துவம் எதுவென இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு அதற்கு அவர்கள் கூறினார்கள் அனைத்தையும் ஒன்றாக்க வேண்டும். ஒன்றென்றே நோக்க வேண்டும். ஒன்றென்றே அறிய வேண்டும். தமக்கோர் உள்ளமையும், அல்லாஹ்வுக்கோர் உள்ளமையும் உன்றென்று கற்பனை கூட செய்ய கூடாது. அப்படி எண்ணுவது வழிகேடாகும். ஆரிஃப் ரப்பை பார்க்கலாம். பார்க்காமலும் இருக்கலாம் என்ற பாகுபாட்டை கடக்கும் போதுதான் அவருக்கு சர்வமும் சித்தியாகும். 

நூல்: காஜா முயீனுத்தீன் சிஸ்தி ரலியல்லாஹு அன்ஹு

♣ உள்ளமையில் அல்லாஹுதஆலாவையும் அவனுடைய செயலையும் தவிர வேறொன்றுமில்லை.

இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு
இஹ்யா உலூமுத்தீன் 3வது பாகம் 15வ‌து பக்கம்

♣ நிச்சயமாக அவனே எல்லாம். உள்ளமையில் அவனுக்கு வேறான எதுவுமில்லை.

இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு
இஹ்யா உலூமுத்தீன் 4வது பாகம் 328வது பக்கம்

♣ நன்றிசொல்பவனும் நன்றி சொல்லப்பட்டவனும். அன்பு வைத்தவனும் அன்பு வைக்கப்பட்டவனும் அவன்தான். அவனுக்கு வேறானது வுஜூதிலே ஒன்றுமில்லை.

இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு
இஹ்யா உலூமுத்தீன் 4வது பாகம் 86வது பக்கம்

♣ஸூபிய்யாக்கள், ஆரிபீன்கள் ஒரே முடிவை எடுத்திருக்கிறார்கள். அது உள்ளமையில் அல்லாஹ்வை அன்றி வேறு எதனையும் காணவில்லை.

இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு
மிஷ்காத்துல் அன்வார், பக்கம் 57

♣ மெய்ஞ்ஞானிகளுக்கு அகக்கண் திறந்ததும் வெளிக்கண் பார்வை இழந்து விடுகிறது. எனவே அவர்களுடைய கண்களுக்கு இறைவனை தவிரவுள்ள வேறு யாதொன்றும் தென்படுவதில்லை. 

ஹழ்ரத் அபூ சுலைமான் தாரானி ரலியல்லாஹு அன்ஹு

♣முப்பது ஆண்டுகளாக நான் இறைவனோடு உரையாடி கொண்டிருக்கிறேன். ஆனால், மக்கள் நினைக்கிறார்கள், நான் அவர்களோடு உரையாடிக் கொண்டிருக்கிறேன் என்று. 

இமாம் ஜுனைதுல் பக்தாத் ரலியல்லாஹு அன்ஹு

♣ நீங்கள் இறைவனை அறியாவிட்டாலும், இறைவனுடைய அடையாளங்களையாவது அறிந்து கொள்ளுங்கள். நான் தான் மெய்ப்பொருள் (அனல் ஹக்) உண்மையின் மூலமாகிய நானே நிரந்தரமான உண்மையாவேன். 

ஹழ்ரத் மன்ஸுர் ஹல்ஹாஜ் ரலியல்லாஹு அன்ஹு
நூல்: வலிமார்களின் வரலாறு பாகம் - 2

♣ மக்கள் அபூபக்கர் ஷிப்லி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை பைத்தியம், பைத்தியம் என்று அழைத்த பொழுது, 
“நான் பைத்தியம் அல்ல. நீங்கள் தான் பைத்தியம். இந்த உண்மை உங்களுக்கு நியாய தீர்ப்பு நாள் அன்று தான் தெரியவரும் என்று கூறினார்கள்.

ஜுனைதுல் பக்தாத் ரலியல்லாஹு அன்ஹு தம் மாணவர்களையும், ஏனையோரையும் நோக்கி கூறினார்கள். நீங்கள் ஒருவர் மற்றொருவரை பார்க்கும் கண்களுடன் அபூபக்கர் ஷிப்லியை பார்க்காதீர்கள். காரணம் அவர் அல்லாஹ்வின் கண்களை கொண்டு பார்க்கிறார். 

♣ அல்லாஹ் “ முந்தினவனும் அவனே பிந்தினவனும் அவனே வெளியானவனும் அவனே உள்ளானவனும் அவனே” என்ற தனது பேச்சு கொண்டு அவனுக்கு வேறானவை அனைத்தையும் அழித்துவிட்டான் என்று இமாம் அபுல் ஹஸன் அலி ஷாதுலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்ன போது அவ்வாறாயின் படைப்பு பற்றி என்ன சொல்வீர்கள் படைப்பு உண்டா? இல்லையா? என்று அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு. 

படைப்பு உண்டு ஆயினும் அது வீட்டின் கூரையிலுள்ள துவாரத்தின் வழியாக உள்ளே விழும் சூரிய வெளிச்சத்தில் மேலும் கீழுமாக ஏறி இறங்கும் தூசி போன்றது அது உனது கண்ணுக்கு – பார்வைக்கு மட்டும் தான் தெரியுமேயன்றி நீ அதை கைகொண்டு பிடித்தால் பிடிக்க முடியாது. இவ்வாறு தான் படைப்பு என்பது. அது உனது கண்ணுக்கு மட்டும் தான் தெரியுமேயன்றி அதற்கு வுஜூத் – உள்ளமை இல்லை. அது பார்வைக்கு மட்டு உள்ளதே தவிர எதார்த்தத்தில் இல்லாததாகும் என்று பதில் கூறினார்கள். 

இமாம் அப்துல் வஹ்ஹாப் ஷஃரானி ரலியல்லாஹு அன்ஹு
நூல்: அல்யவாகீத் - 01 ம் பாகம் 65ம் பக்கம்

♣ எல்லா பொருள்களிலும் நான் இறைவனையே காண்கிறேன். இறைவனுடைய மகத்துவத்தை நான் வெளிப்படுத்துவேனாயின். மக்கள் என்னை பைத்தியக்காரன் என்று கூறுவார்கள். 

ஹழ்ரத் அபுல் ஹஸன் ஹர்கானி ரலியல்லாஹு அன்ஹு 

♣ இறைவன் தனது “ஸிபாத்” தன்மைகளான அறிவைக் கொண்டும் சக்தியைக் கொண்டும்தான் எல்லா இடத்திலும் இருக்கின்றான். தனது வுஜூத் எனும் உள்ளமை கொண்டல்ல என்று வழிகெட்டவர்கள் கூறுவார்கள். இக்கூற்று உண்மைக்கு முரணானதாகும்.

இமாம் அப்துல் வஹ்ஹாப் ஷஃரானி ரலியல்லாஹு அன்ஹு
நூல்: அல் யவாகீத் வல் ஜவாஹீர், பாகம் – 02 பக்கம் – 60 பாடம் – 08

♣ மன்ஸூர் ஹல்ஹாஜ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஓராண்டு காலம் சிறையில் வைக்கப்பட்டிருந்தார்கள். அந்த ஓராண்டு காலமும் அவர்கள் நாளொன்றுக்கு ஆயிரம் ‘ரக்அத்’ கள் வீதம் தொழுது வந்தார்கள். 

அப்போது அவர்களை காண வந்த மக்கள் ‘நீங்கள் தான், உங்களை ஹக் என்று கூறுகிறீர்களே பின்னர் எவருக்காக இத்தொழுகையை தொழுகின்றீர்கள். என்று வினவியபொழுது,

என்னுடைய மகத்துவத்தை நான் ஒருவனே நன்கு அறிவேன். நேசனும் நானே. நேசிக்கப்படுபவனும் நானே! தொழுபவனும் நானே தொழப்படுபவனும் நானே. "அனல் ஹக்" "அனல் ஹக்" என்று அவர்கள் பதில் கூறினார்கள்.

நூல்: வலிமார்களின் வரலாறு பாகம் - 2

♣ அல்லாஹ்வும் அடியானும் ஒன்று கலந்துவிட்ட நிலைக்குத்தான் (மகாம் ஐனிய்யத்) அன்வயித்தல் என்ற என்று கூறப்படும். சந்திரன் வேறு ஒளி வேறு என்று கற்பிப்பது சரியாகாது. 

ஹழ்ரத் காஜா முஹினுத்தீன் சிஸ்தி ரலியல்லாஹு அன்ஹு 

♣ உலகம் கானல் நீர்போன்றது. அதுயதார்த்தத்தில் அல்லாஹ்தான். இந்த உண்மையை தெரிந்துகொண்டவர் தரீக்காவின் ரகசியத்தை புரிந்துகொண்டவராவார். இந்த உலகம் வெளித் தோற்றத்தில் பல உருவங்களையும் தோற்றங்களையும் உடையதாக இருந்தாலும், யதார்த்தத்தில் சந்தேகமின்றி அது அல்லாஹ்வாகவே இருக்கின்றது. உருவம் என்பது திரை. அத்திரையில் மாட்டினவன் அவ்வுருவத்தில் தோற்றுபவனை புரிந்து கொள்ளமாட்டான்.

ஷெய்குல் அக்பர் இமாம் முஹ்யித்தீன் இப்னு அரபி ரலியல்லாஹு அன்ஹு
நூல் : புதூஹாத்துல்மக்கிய்யா, பக்கம் : 201

♣ அன ஹிய (நான் தான் அவன்) 

இமாம் இப்னு ஃபாரின் ரலியல்லாஹு அன்ஹு
நூல்: வலிமார்களின் வரலாறு பாகம் - 3

♣ என்னுடைய இருக்கை சென்றது. அவனுடைய சிந்தனையே நின்றது. இப்போது நீ பார்க்கின்ற இவன் நானல்ல, ஆனால், அவனே தான். 

அமீர் குஸ்ரூ ரலியல்லாஹு அன்ஹு

♣ “வாஜிபுல்வுஜூத்” என்ற மெய்ப்பொருள் ஒன்றே ஒன்றுதான். அது இரண்டுமில்லை; பலதுமில்லை. ஒன்றை இன்னொன்றுடன் சேர்த்துப் பார்க்கும் போதுதான், இரண்டு, அதிகம் போன்ற எண்ணிக்கை ஏற்படுகின்றது.

மூலப்பொருளான மெய்ப்பொருள் ஒன்றே ஒன்றாக இருந்தாலும்கூட அதன் பாத்திரங்கள் பலதாக உள்ளன. அந்த மெய்ப்பொருள் அதன் உடையைப் பொறுத்து இரண்டாகவும் பலதாகவும் தோற்றுகின்றது. யதார்த்தத்தில் இரண்டுமில்லை பலதுமில்லை. சிருஷ்டிகள் என்பன அந்த மெய்ப்பொருளின் உடைகளேயாகும்.

இமாம் இப்னு ஹஜர் அல் ஹைதமீ ரழியல்லாஹுஅன்ஹு
நூல் : அல்பதா வல்ஹதீதிய்யா, பக்கம் : 246

♣ மெய்ப்பொருளை அடைந்து கொள்ளுதல் என்பது அல்லாஹ் உமக்களித்த விஷேட அறிவினால் நீ அவன் என்றும், அவன் நீ என்றும் அறிந்து கொள்வதேயாகும். இது “ஹுலூல், இத்திஹாத்” என்ற வழிதவறிய கொள்கையல்ல. அடியான் அடியான் தான். இறைவன் இறைவன் தான். அடியான் இறைவனாக மாறுவதுமில்லை. இறைவன் அடியானாக மாறுவதுமில்லை.

இமாம் அப்துல் கரீம் ஜீலி ரலியல்லாஹு அன்ஹு
நூல்: அல் இன்ஸானுல் காமில், பக்கம்: 230

♣உலகிலுள்ள சகல சிருஷ்டிகளும் அவற்றின் மூலத்தைக் கவனிப்பது கொண்டு, அல்லாஹ்தானாகவே இருக்கின்றன. எனினும் வெளியமைப்பைக் கவனிப்பது கொண்டு மட்டு நோக்கினால், அல்லாஹ் அல்லாதவையாக இருக்கின்றன. யதார்த்தத்தை கவனித்துப் பார்க்கும் பொழுது எல்லாம் அல்லாஹ்தானாகவே இருக்கின்றது.

உதாரணமாக, ஐஸ்கட்டி, அலை என்பன போன்று இவ்விரண்டும் வெளியமைப்பில் எவ்வாறிருந்தாலும், இவ்விரண்டுக்கும் மூலமாயிருப்பது தண்ணீர்தான். இது போன்றுதான் சிருஷ்டிகள் அவை எந்த அமைப்பில் இருந்தாலும், அவற்றுக் கெல்லாம் அல்லாஹ்வின் “வுஜூத்” எனும் உள்ளமைதான் மூலமாக இருக்கின்றது.

இமாம் முஹம்மத் இப்னு பழ்லுள்ளாஹ் ரலியல்லாஹு அன்ஹு
நூல் : அத்துஹ்பதுல் முர்ஸலா, பக்கம் : 68

♣ அவனல்லாதது (எங்கும்) பெற்றுக் கொள்ளப்படாத நிலையில் அவன் எங்கே மறைந்திடுவான்?. எனினும், அவன் கடுமையாக வெளியாகி இருப்பது அவனை மறைத்து விட்டது. 

நூல்: மகானி - இமாம் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (ரஹ்மதுல்லாஹி அலைஹி)

♣ ஏகத்துவம் என்பது இரண்டு அம்சங்களைக் கொண்டது. ஒன்று- தன்ஸீஹ் எனும் அரூபநிலை. மற்றையது- தஸ்பீஹ் எனும் ரூபநிலை. அரூப நிலையில் இறைவன் கண்பார்வையால் காணப்படமாட்டான். அந்நிலையில் அவன் மனதால் அறியப்பட்டவனாயிருப்பான். எனினும், ரூபநிலையில் கண்களால் பார்க்கப்படுபவனாயிருப்பான்.

ஷெய்ஹுல் அக்பர் இமாம் முஹ்யித்தீன் இப்னு அரபி ரலியல்லாஹு அன்ஹு 
நூல் : புதூஹாத்துல்மக்கிய்யா, பக்கம் : 283

♣ மெய்ப்பொருள் என்று சொல்லப்படுகின்ற இறைவனின் வுஜூத் ஒன்றே ஒன்றுதான். அது இரண்டோ பலதோ இல்லை. சிருஷ்டிகள் யாவும் ஒரு மரத்தின் கிளைகள் போன்றவை. அக்கிளைகள் மரத்தை விட்டும் பிரியாதது போல், ஷிருஷ்டிகள் மெய்ப்பொருளான வுஜூதை விட்டும் பிரிந்தவைகள் இல்லை.

இமாம் அப்துல் வஹ்ஹாப் ஷஃரானி ரலியல்லாஹு அன்ஹு
நூல் : அல்யவாகீத் வல்ஜவாஹீர் பாகம் – 01 பக்கம் - 78

இன்னும் ஏராளமான வலிமார்கள் கூறிய வார்த்தைகள் ஏராளம் உண்டு. அகப் பார்வையுள்ளவர்கள் அனைத்திலும் இறைவனை பார்ப்பார்கள். இந்த உண்மைகளை அறிந்தவர்கள் பாக்கியசாலிகள். 

இந்த உண்மைகளை அறியாமல் ஹக்கை எவர்கள் நிராகரிக்கிறார்களோ அவர்கள்தான் வழி தவறியவர்கள் என்று அல்லாஹ் அல் குர்ஆனில் கூறுகிறான்.

எவர் இதில் (இவ்வுலகில் நேர் வழியை விட்டும் அகக்) குருடராக இருந்தாரோ, அவர் மறுமையிலும் குருடராக இருப்பார். இன்னும் (அவர்) பாதையால் மிகத் தவறியவராவார். அல் குர்ஆன் (17: 72)

குருடனும் பார்வை உடையவனும் சமமாவார்களா? அல்குர்ஆன் (13:16 ) 

- G+ ல்  இந்த பகிர்விற்கு Ansari Alice அவர்களுக்கு என் அன்பின் நன்றிகள்.

செவ்வாய், 22 மார்ச், 2016

பிரசவ வேதனை



ஒரு பெண் தன் வயிற்றில்
கரு சுமந்திருக்கும் அந்த பத்து மாதங்களும் ஒவ்வொரு விநாடியும் திக் திக் என்று தான் ஒரு பெண்ணிற்கு கழியும் - கரு நன்கு வளர்ந்த காலகட்டத்தில் கர்ப்பிணிப் பெண் மல்லாக்க படுக்க கூடாது - ஒருக்கழித்து தான் படுத்திருக்க வேண்டும் என்கிற அறிவுரை வரும்- ஒரே பொசிசனில் படுத்திருக்க முடியாது என்பதால் இன்னொரு பக்கம் ஒருக்கழித்து படுக்க வேண்டு் என்று தோன்றும் - அப்பொழுது படுத்தபடியே பொசிசன் மாறக் கூடாது - தூக்கத்திலும் எழுந்து உட்கார்ந்து பிறகு தான் சாவகாசமாக மாறிப்படுக்க வேண்டும்
உட்கார்ந்து கொண்டே இருக்காதே - அதை செய் இதை செய் என்று வருகிற போகிற பார்க்கிறவங்க ஃபோன் பேசறவங்க என்று அத்தனை பேர்களும் விதவிதமாக அட்வைஸ் செய்வார்கள் - இதில் கொடுமை என்னவென்றால் - ஒருத்தர் சொன்ன அட்வைசிற்கு துளியும் சம்மந்தமிருக்காது இன்னொருவர் சொல்வது - இதை செய்வதா அதை செய்வதா என்கிற குழப்பம் தான் மிஞ்சி நிற்கும் - ஒவ்வொரு அடியும் பார்த்து பார்த்து எடுத்து வைத்துக் கழிக்கும் தருணங்கள் இருக்கிறதே அப்பப்பா - தெருவில் வாக்கிங் போனால் கூட அத்தனை வாகனங்களும் நம் வயிறு நோக்கி நகர்வது போலவே மனம் திக் திக் என்று அடித்துக் கொள்ளும்
சிறு வயது தொட்டது முதல் நம் தமிழ் சினிமாவில் கர்ப்பிணி பெண்கள் வயிற்றில் வில்லன்கள் எத்துவது போலவும் - தடுக்கி விழுந்து கரு கலைவது போலவும் காட்சிகள் பார்த்து பார்த்து புத்தியில் ஏற்றியதன் பின்விளைவு எல்லாம் நாம் கருவுற்ற காலத்தில் தான் மனதிற்குள் அரங்கேறும்
ஆண்களுக்கும் கருவுறாத பெண்களுக்கும் இந்த கர்ப்பிணி அனுபவத்தை வார்த்தைகளால் சொல்லி உணரவைக்கவே முடியாது - வேண்டுமானால் ஒரு வார கோழிக்குஞ்சை எடுத்து உள்ளங்கையில் வைத்துப் பொத்திப் பாருங்கள் - அந்த குஞ்சு மென்மையாக திமிறும் போது இரண்டு உள்ளங்கைகளுள்ளும் ஒரு வித சிலிர்ப்பும் பரவசமும் தோன்றும் - அதை விட ஆயிரம் மடங்கு பரவசம் கருவுற்ற பெண்ணின் வயிற்றுனுள் அனுதினம் நடக்கும்
ஒரு குழந்தைக்கு உயிர் கொடுக்கப் போகிறோம் என்கிற அந்த உணர்வு அவளை கடவுள் ரேஞ்சிற்கு கொண்டு சென்று சந்தோஸப்படவும் வைக்கும் - கருவிற்கு நம் அஜாக்கிரதையால் எதுவும் ஆகிவிடுமோ என்கிற உணர்வு அனுதினமும் கொன்று வதைக்கும் - மொத்தத்தில் அந்த ஒன்பது மாதங்களும் கடப்பதே இன்னவென்று சொல்லமுடியாத மனஉளைச்சலோடு தான்
ஆனால் பிரசவ வேதனை வந்து - உள்ளங்காலிலிருந்து உச்சந்தலை வரை நரம்புகள் எல்லாம் இழுத்துப்பிடித்தாற்போல் ஒரு வேதனை வருமே - அதற்கு மட்டும் ஆண்களுக்கு டெமோ மூலம் தெரிந்து கொள்ள விரும்பினால் - ஒவ்வொரு ஆணும் சாகத் துணிந்து தான் தெரிந்து கொள்ள வேண்டும்
பனிக்குடம் உடைந்து - மருத்துவமனை பிரசவ டேபிளில் படுத்திருக்கும் போது நர்சுகள் சொல்வது காதிலேயே விழாது - அந்த நொடியே என் உயிரை எடுத்துக்கோடா கடவுளே என்று தான் கிட்டத்தட்ட எல்லா உள்ளங்களும் வேண்டியிருக்கும்
வாயில் அதிக சூடுடன் காபியோ டீயோ தெரியால் ஊற்றி விட்டால் - உடனே முழுங்கவும் முடியாமல் துப்பவும் தோன்றாமல் ஒரு அரைவிநாடி குழம்பி - அந்தக்குழப்பத்திலேயே சிலர் ஓரிரு நொடிகள் தாமதமாகி கடைசியில் குடிக்கவோ துப்பவோ ஏதோ ஒன்று செய்துவிடுவர் - உங்களுக்கு அந்த அனுபவம் இருந்தால் அதை இதோடு ஓரளவு ஓப்பிடலாம் - அந்த இரண்டு விநாடிகளுக்கே நாம் அத்தனை துடி துடித்தால் பிரசவ வலி வந்து குறைந்த பட்சம் ஒரு மணிநேரம் அதிக பட்சம் ஓரிருநாட்கள் வரை கூட வலி பொறுத்திருக்க வேண்டிய சூழ்நிலை கர்ப்பிணிகளுக்கு
ஆனால் கடைசியில்
குழந்தை தலை வெளிவரும்போது வரும் அந்த உச்ச கட்ச ராட்சஷ வலியைக் கடந்து - தலைக்கு வெளியே வந்த பின் - அடுத்தடுத்த விநாடிகளில் துப்பாக்கியிலிருந்து வெளிவரும் தோட்டா போல் ஓரிரு நிமிடங்களுக்குள் வயிற்றில் இருந்த அத்தனை கழிவும் ஒரு காட்டாறு போல் கால் வழியே கடந்து வெளியே போனபின் ஒரு அந்த பிள்ளைத்தாச்சியின் உடலில் ஒருவித சுகம் வந்து நிற்குமே
அடடடா - வார்த்தைகளேயில்லை - படுத்தபடியயே வானில் ஒட்டுமொத்த உடலும் சொர்க்கத்தில் சிறகுகளை ஆட்டாமல் மிதந்து பறந்து செல்வது போல் இருக்கும்
அவ்வளவு ஒரு சுகம் - அதற்கு ஈடு இணையே இல்லை
அந்த சுகத்தை எப்பேர்ப்பட்ட கொம்பனாயிருந்தாலும் ஆணா பொறந்திருந்தா அனுபவிக்க முடியாது - பெண்ணா பிறந்திருந்தாலும் - கருவுற்று - அதுவும் சிசேரியன் இல்லாமல் பெற்று அதை உணர ஒரு கொடுபிப்னை நிச்சயம் வேண்டும்
-----------------------------
இன்று உச்சக்கட்ட வலி பிரசவம்... ஆனாலும் அதை சுக'ப்பிரசவம்னுதான் சொல்றோம்!
என்று நம்ம Kaadhal Sugumar பதிவு போட்டிருக்காங்க - அவருக்கு என் பதில் கமெண்ட் ஐ தான் இங்கே விரிவாக எழுதியிருக்கேன்
----------------
கிரிஸ் மணி பதிலுரை....
சகோதரி Sivakamy Sooraj அவர்களின் பதிவிற்கு என் பின்னூட்டம். நான் மிகவும் நுட்பமாக எழுதவில்லை. இருந்தாலும் epidural முறை சகோதரிகளைப் போய்ச்சேரும்.
இக்காலத்தில் epidural என்ற முறைப்படி முதுகில் தண்டு வடத்தின் ஒரு பகுதியில் ஒரு சில milli meter அளவு துளை செய்து ஒரு தந்துகி (capillary tube) வழியே இடுப்பிலிருந்துகால்வரை மரத்துப் போகும் மருந்தை சொட்டுச் சொட்டாக செலுத்தும் முறை உள்ளது. இதனால் பல மணி நேர வலியைத் தவிர்த்து குழந்தை வெளிவர ஆரம்பித்தவுடன் மரத்துப் போகும் மருந்தை நிறுத்திவிடுவார்கள். ஏனென்றால் இறுதிக்கட்டத்தில் ஒரு இருபது நிமிடம் தாய் வலியை உணர்ந்து உந்தித்தள்ளி தான் ஆக வேண்டும் கடும் வலியோடு!
ஓரளவு குழந்தை வெளிவர மருத்துவர் கத்தியால் பிறப்பு வழியை சிறிது அறுத்து(Episiotomy) உதவுவார். இரத்தம் பீறிப்பாயும்! சேதமடைந்த தசைத் துணுக்குகள் துண்டங்கள் சரிந்து விழும்! அவ்வளவு இரத்தத்தை நாம் வாழ்நாளில் பார்த்திருக்க முடியாது! இக்காட்சியைப் பார்க்க திடமான மனதும் அளவற்ற அன்பும் வேண்டும்! அன்றுதான் பெண் போகப் பொருளல்ல என்பதன் practical பயிற்சி எனலாம்! இன்னும் எவ்வளவோ சொல்லலாம்! அமெரிக்கா போன்ற நாடுகளில் காணொளி எடுக்க அனுமதி உண்டு. எப்போதாவது மனைவி " ஒரு தடவ போட்டுக் காட்டுங்க !" என்பார். " வேண்டாம்மா !"என மறுத்துவிடுவேன்! Epidural முறை கத்துக்குட்டி மருத்துவர்களிடம் செய்து கொள்ளாதீர்கள் சகோதரிகளே! சொதப்பினால் தண்டு வடத்தில் பிரச்சனை வரும்.

புதன், 2 மார்ச், 2016

காஞ்சிப் பெரியவருக்கு ஒரே சந்தோஷம் – இஸ்மாயிலைப் பார்த்ததில்...!


யார் இந்த இஸ்மாயில்..?
சென்னை உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பணியாற்றியவர் இந்த மு. மு. இஸ்மாயில்..!
இஸ்லாமியராக இருந்தபோதிலும் கம்ப ராமாயணத்தில் ஈடுபாடு அதிகம் கொண்டிருந்தவர் ..!
சென்னையில் கம்பன் கழகத்தை உருவாக்கி ஆரம்ப நாள் முதல் , தன் அந்திமக் காலம்வரை அந்த அமைப்பின் தலைவராக இருந்தவர்..!
“கம்பன் கண்ட சமரசம்” , “கம்பன் கண்ட ராமன்” இன்னும் பல இலக்கிய நூல்களை இனிக்க இனிக்க எழுதியவர்..!
அந்த கம்பனின் ரசிகரான நீதிபதி இஸ்மாயிலும் , காஞ்சிப் பெரியவரும் ஒருமுறை சந்தித்து , சந்தோஷமாக உரையாடினார்கள்..!
இலக்கியம்... கம்பராமாயணம்.... இன்னும் பல விஷயங்களைப் பற்றியும் இருவரும் விரிவாக விவாதித்தனர்...!
குறிப்பாக , நீதிபதி எம்.எம்.இஸ்மாயில் எழுதிய “மூன்று வினாக்கள்” என்ற புத்தகத்தைப் பற்றி..!
அந்தப் புத்தகத்தில் , “ வாலியை இராமன் மறைந்திருந்து கொன்றது சரிதான்..” என திட்டவட்டமாக , தீர்ப்பளித்து எழுதி இருந்தாராம் நீதிபதி இஸ்மாயில் ..!
அதைக் குறிப்பிட்டு காஞ்சிப் பெரியவர் , “ஒரு தலைமை நீதிபதியான , நீங்கள் இராமனுக்கே நீதி வழங்கி விட்டீர்கள் ” என்று ரொம்பவும் சந்தோஷப்பட்டாராம்..!
இருவரும் விடை பெறும் நேரம்..!
இப்போது மடத்திலிருந்தவர்களுக்கு மனதுக்குள் ஒரு பெருத்த சந்தேகம்..!
நீதிபதி விடை பெற்றுப் புறப்படும்போது...காஞ்சிப் பெரியவர் என்ன பிரசாதம் கொடுக்கப் போகிறார் ..?
இந்துக்கள் என்றால் விபூதி , குங்குமம் கொடுப்பார் ..!
ஆனால் ஒரு இஸ்லாமியருக்கு , இந்து மத பெரியவர் என்ன பிரசாதம் கொடுக்க முடியும்....?
இதோ... இஸ்மாயில் விடை பெற எழுந்து விட்டார்...!
அனைவரும் ஆவலோடு உற்று நோக்க....
காஞ்சிப் பெரியவர் ஒரு வெள்ளிப் பேழையில் இருந்த சந்தனத்தை எடுத்து , இஸ்மாயிலைப் பார்த்து “இந்தப் பேழையில் சந்தனம் இருக்கிறது... நம் இரு மதத்தினருக்கும் பொதுவான அம்சம் இந்த சந்தனம்...! உங்கள் தர்காவிலும் சந்தனக்கூடு இருக்கிறது...எங்கள் கோவில்களிலும் சந்தனம் இருக்கிறது... இதை அணிந்துகொண்டு நலமாக இருங்கள்” என்று வழியனுப்பி வைக்க , சந்தனத்தோடும் , சந்தோஷத்தோடும் புறப்பட்டுச் சென்றாராம் நீதிபதி எம்.எம்.இஸ்மாயில்..!
# படிக்கும்போதே சந்தனமாக மணக்கிறது இந்த சந்திப்பு...!
# அரைக்க அரைக்க சந்தனம் மணக்கும்....!
இது போன்ற பெரியவர்கள் இருக்க இருக்க
இந் நாட்டில் சமாதானம் இருக்கும்...!