சனி, 26 ஜூலை, 2014

Face Book என்ற பெயர் சொல்லை ஏன் மொழி பெயர்க்க வேண்டும்


  • Senapathy Thirugnanasambandam ஒரு ஐயம் எனக்கு ?

    பெயர்ச்சொல்லை(facebook) ஏன் மொழி பெயர்க்க வேண்டும் ?

    inbox / draft போன்றவைகளுக்கு தேவை உள்ளது...
    9 hrs · Edited · Like
  • இராஜ. தியாகராஜன் ஃபேஸ்புக் என்பது ஒரு வணிகச் சொல். பயன்படுத்தும் தமிழன்பர்கள் மாற்றாக ஒரு தமிழ்ச் சொல் பயன்படுத்தினர். உங்களைப் போல பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் முகநூல் அமைப்பாளர்களே பெரும்பான்மைப் பயன்பாட்டினால் அதனைத் முதன்மைத் தமிழ்மொழி பெயர்ப்பாக ஏற்றுக் கொண்டனர். சஞ்சிகை என்கிற செங்கிருதப் பெயர்ச் சொல்லைக் கூட பத்திரிக்கை என்றும், நாளிதழ் என்றும் மாற்றிய போதில் கூட நிறைய எதிர்ப்புகள். டீ/ சாயா இந்தப் பெயர்ச் சொல்லைக் தேநீர் என்று பயன்படுத்திய போதில் கூட நிறைய எதிர்ப்புகள். 

    ஆப்பிள் என்கிற ஆங்கிலச் சொல்லின் வேர் கூட ape என்கிற வாலில்லா குரங்கின் வாயின் வண்ணத்தால் வந்தது. எனவே குருதியின் (அரத்தம்) வண்ணமாக இருப்பதால் ஆப்பிளை அரத்தி என்று சொல்கிறோம் புதுவையில். பிடித்தவர்கள் பயன்படுத்துகிறார்கள். தமிழிலக்கணப் புணர்ச்சியின் படி கோயில் தான் சரி; கோவில் சரியில்லைதான்; ஆனால் இத்தனை பேர்கள் பயன்படுத்துகையில் அதுவும் சரிதான். தேளின் பன்மை தேட்கள் ஆகாது; ஆனால் நாளின் பன்மை நாட்களாகவும், வாளின் பன்மை வாட்களாகவும், ஆனதை நாம் ஏற்றுக் கொண்டோம். இயன்றவரை புதுப்புனைவுகளை ஏற்பதில் தடையிருப்பது சரியில்லை. 

    மரபியலிலான செய்யுளோத்துகள் மட்டும் கொண்ட தமிழ்க் கவிதை இலக்கியத்தில், இன்று புதுப்பாக்கள், குறும்பாக்கள், துளிப்பாக்கள் இவையும் வந்தன. தமிழை நேசிக்கும் அனைவருமே ஏற்றுக் கொண்டிருக்கிறோம். 

    ஒன்றே ஒன்று மட்டும் எனக்கு ஐயம்: ஆங்கிலேயர் வாயில் வழங்க இயிலாமையால், வைத்துவிட்டார்கள் என்பதற்காக ப்ராப்பர் நவுன்களான தஞ்சாவூரை டாஞ்சுர் என்றும், பறங்கிப்பேட்டையை போர்ட்நோவா என்றும், கன்னியாகுமரியை கேப் கேமரின் என்றும், திருவனந்தபுரத்தை ட்ரிவாண்ட்ரம் என்றும், தரங்கம்பாடியை ட்ரங்க்பார் என்றும் சொன்ன்னதை ஏற்றுக் கொண்டிருந்தோம். பின்னர் முயன்று பழைய பேர்களை வைக்கவில்லையா? முதலில் சைக்கிளை மிதிவண்டி என்றும், பஸ்ஸை பேருந்து என்றும், காரை சீருந்து என்றும், ப்ளேனை ஆகாயவிமானம்/ வானூர்தி என்றும் பயன்படுத்திய போதில் சிரிக்காதவர் எவர்?
    9 hrs · Edited · Unlike · 6
  • இராஜ. தியாகராஜன் இன்னும் கொல்லம், கோழிக்கோடு, சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, மும்பை என்று நிறையச் சொல்லலாம். நான் அதிகம் இப்படிப்பட்ட கருத்தாடல்களில் அதிகம் ஈடுபடுவதில்லை நான் முகநூலி வரும் கொஞ்ச நஞ்ச நேரத்தைக் கூட அஃது வெகுவாகத் தின்றுவிடுகிறது.
    9 hrs · Like

பொறுமை

பொறுமை ஆன்மீக குணங்களில் மிகச் சிறந்தது.
உன்னால் பொறுமையாக இருக்க முடிந்தால் வேறு எதுவும் தேவையில்லை.
பொறுமை மட்டுமே போதுமானது, அது மட்டுமே போதும்.
. பொறுமை என்றால் இணைப்புணர்வு.
எந்த வித அவசரமும் இல்லாமல், எந்த வித அவசரமும் இன்றி இணைப்புணர்வோடு இருத்தல்.
நேசம் மிகவும் மெதுவாக வளரும், அதற்கு பொறுமை தேவை.
பொறுமை மிகவும் கவனமானது, பொறுமை சக்தியானது, பொறுமை விரிவடையக்கூடியது.
காத்திருத்தல் என்பது மிகவும் சிறப்பான குணம், அதற்கு ஆழ்ந்த பொறுமை தேவை. அது ஆழமான இணைப்புணர்வு.
உன் உள்ளிருப்பு குணப்பட தேவை ஒரு ஆழ்ந்த பொறுமை தேவை .
பயணகாலம் அளவிட முடியாதது. எனவே அளவற்ற பொறுமை தேவை.
பொறுமையான மனிதன் தியானிப்பவனாக மாறுவான், ஏனெனில் அவன் உள் வாங்குபவனாக மாறுகிறான்.
நீ வாழ்வை உள் வாங்குபவனாக மாறும் அந்த கணத்தில் உனக்கு யாரும் போதனை தர தேவை இருக்காது .
நீயே ஒரு புத்தாவாக மாறி இருப்பாய் .
--- ஓஷோ ---

அந்தப்புறக் காவலுக்கு அரசர்கள் வைத்த அலிகள் !


கவிமாமணி பேராசிரியர் தி.மு அப்துல் காதர்

********************************
தஸ்பீஹ் மணிகளைக்
கொத்தித் தின்னும்
இஸ்ராயீல் கழுகுகளின்
ஏவுகணை அலகுகளில்
அத்தஹியாத் விரல்கள் !

செடார் மரக் கிளைகளில்
தொட்டில்கள்
தொங்கும் கல்லறைகள் !

காற்றும் கந்தலாக்கும்
கந்தக எச்சில்கள்
காருவது அமெரிக்கா
உமிழ்வது இஸ்ரேல் !

அந்தப்புரக் காவலுக்கு
அரசர்கள் வைத்த
அலிகளைப்போல்
ஐ.நா .

மானபங்கப்படும்
மனிதநேயத்திற்கு
உத்தரீயம் கொடுக்கவும்
அமெரிக்க சகுனியிடம்
உத்தரவு கேட்கும்
கவுரவர் சபை
பஞ்ச பாண்டவர்களாய்
வளைகுடா நாடுகள் !

கிப்லாவை
டாலருக்கு மாற்றிக் கொண்டு
முசல்லாவை விற்று
அமெரிக்க அழகுச் சிலை வாங்கியதால்
மினாராக்கள்
யூதர்களுக்கு சஜ்தா செய்கின்றன !

ஆப்கன் விதைஎடுத்து
அமெரிக்கா பயிரிடும்
கொடிமுந்திரித் தோட்டக்
குலைகளில்
முஸ்லிம் குழந்தைகளின்
முழிக்கும் விழிகள் !

அமெரிக்க - இஸ்ரேல்
காக்டெயில் விருந்தின்
ஐஸ்க்ரீம் மகுட உச்சியில்
செர்ரிப் பழமாய்
பாய்மார்களின்
தாய் மார்க்காம்புகள் !

அலிப்
எழுத்துப்போல சேராது
தனித்திருக்கும்
அரபு நாடுகளே ...

ஒன்றாய் நீங்கள்
ஒன்றுக்கிருந்தால்
மூத்திரத்தில் மூழ்கிப்போகும்
யூத - அமெரிக்கக்
கள்ள உறவில் தோன்றிய
கர்ப்பக் கழிவு !

அஸாக் கோல்களால் ஆன
சந்தூக்குகள்
அமெரிக்காவில் கிடைக்கலாம் !
ஆனால்...
மூமின் உடல்களை
அடக்கம் செய்ய
ஓரடி மண்கூட
உங்களிடம் இருக்காது !

உங்கள் பாலஸ்தீன
கபர்க்குழி ஒன்றிலிருந்து
கடிதம் ஒன்று
கண்ணிமை உதடு திறக்கிறது !

" பாலஸ்தீன விடுதலை இயக்கப்
பதினாறு வயதுப்
பச்சிளம் பிறை நான் !
போரில் வெடித்து சிதறிய
விரலால்
இரத்தம் தொட்டு எழுதுகிறேன் !

வீரர்களே ...
தாயக மீட்சிக்காக
தீன் நெறி ஆட்சிக்காக
என் கையத்துப் போனாலும்
என் மெய்யத்துப் போனாலும்
நான் மையத்து ஆனாலும்
என் நிய்யத்துப் போகாது !

மூமின்களே ...
ஆமீன்களுக்காக மட்டும்
உயரும் கரங்கள்
புனித
ஆயுதங்களுக்காக உயரட்டும் !

விடுதலை விதைகளே...
நீங்கள் எப்போதாவது
களத்தில்
நிராயுதபாணியாக நின்றால்
ஆயுதம் இல்லையே என
அவதியுற வேண்டாம் !

என் சவக்குழியைத் தோண்டுங்கள்
என் கபாலத்தைக் கேடயமாக்குங்கள்
என் கைகால் எலும்புகளை
ஆயுதமாக்குங்கள்
என் எலும்புகளுக்கு
இரண்டாம் முறையும்
போரிடும் வாய்ப்பு தாருங்கள்
இன விடுதலைக்காக... ! "

" நமது முற்றம் "
செப்டம்பர் 2006 இதழில் எழுதிய கவிதை !
************************************************

செவ்வாய், 22 ஜூலை, 2014

கர்பலாவே காட்சியாக!


கர்பலாவில் ...

கர்பலா போர்க்கள கூடாரத்தில் தங்கி இருந்த
இமாம் ஹுசைனாரின் நிறைமாத 
கர்ப்பிணி மனைவி அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
அழகுக் குழந்தையை தன் கைகளில் ஏந்தி 
" அப்துல்லாஹ் " என பெயர் சூட்டி
குழந்தையின் காதில்
" பாங்கு " சொல்லிக் கொண்டிருந்தார் இமாம் ஹுசைன் ( ரலி ).
அந்த நேரத்தில் எதிரி எய்த அம்பு ஒன்று
குழந்தையின் கழுத்தில் பாய்ந்து ....
அதன் உயிரைப் பறித்தது !

கர்பலா போர்க்களக் கொடுமைகளை நான் இப்படியெல்லாம் எழுதி இருக்கிறேன் .
காட்சியாக இப்போதுதான் பார்க்கிறேன் !

யா அல்லாஹ்....
உன்னிடம் முறையிட
என்னிடம் வார்த்தைகளில்லை !
ஹஸ்ஸான் இப்னு தாபித் ( ரலி ) சொன்னதைப்போல ...
" நான் சொல்லாற்றலில் ஏழை !
ஏழை எப்போதும் தோற்று விடுகிறான் !"
அதனால்...
நான் எதுவும் சொல்லப்போவதில்லை !

நாங்கள் காணும் காட்சிகள் சொற்பம் !
அனைத்தையும் காண்பவன் நீ !
ஏன் ? எதற்கு ? என்று
அறிந்தவன் நீ !

ஆத்திரப்பட்டு
ஆதங்கப்பட்டு
அவசரப்பட்டு
யூதர்களின் அழிவுக்கு
நாங்கள் கொஞ்சம் போல்
துஆ செய்து விடுவோமோ
என்று அச்சமாக இருக்கிறது !

அதனால் ...
கடல் அளவு
கை ஏந்தி
உன்னிடம் நாங்கள்
பிரார்த்தித்ததாக
ஏற்றுக்கொள் !

இறைவா !
பாலஸ்தீன முஸ்லிம்களுக்கு
கருணை காட்டு !
யூதர்களுக்கு
உண் கருணையின்
எதிர் புறத்தை சாட்டு !

நான் ஒரு பாலஸ்தீனியனாக பிறந்திருந்தால்..!

நான் ஒரு பாலஸ்தீனியனாக 
பிறந்திருந்தால்...
இந்நேரம் 
ஷஹீதாகி இருப்பேனே...!
கேள்வி கணக்கே இல்லாமல் 
சுவனம் போயிருப்பேனே !
அதற்குமுன்னால் 
பத்து யூதனையாவது 
சாவூருக்கு அனுப்பி இருப்பேனே !

போர்க்களச்சாவு என்ன
எல்லோருக்குமா வாய்த்து விடுகிறது ?

இறைவா ...
முஸ்லிம்களெல்லோரும்
சகோதரர்கள் என்று
சொல்லப்பட்ட மார்க்கத்தில்
அரிசி விலையையும்
காய்கறி விலையையும்
சிந்தித்து சிந்தித்தே
சிந்தை சேதாரம் ஆகிப்போனவர்கள்
மத்தியில்
ஒரு சகோதரனுக்காக ...
தலை சிதறி
செத்துப்போன
அவன் மகளுக்காக
கண்ணீர் சிந்தும்
இரக்கத்தையாவது
எனக்குத் தந்தாயே...
நீ கருணையுள்ளவன் !

" அடுத்தவர்மீது
அன்போ இரக்கமோ
இல்லாதவர் மீது
இறைவனின்
அன்போ இரக்கமோ
ஏற்படுவதேயில்லை "
என்று சொன்ன
உத்தம நபிகளின்
உம்மத்தாய் என்னை
ஆக்கி வைத்த
இறைவா ....
நீ
அளவற்ற அருளாளன்
நிகரற்ற அன்புடையோன் !

ரத்தம் இல்லாத யுத்தம் ....

-அபூஹாஷிமா

" பச்சைப் பறவைகளாய் 
சுவனச் சோலையில் 
சுற்றிப் பறப்பவர்கள் 
இஸ்லாத்திற்கான
வீரப்போரில் இறப்பவர்கள் !"
உம்மி நபி சொன்ன இந்த
உயர் வாழ்த்துக்காக
வானம் செனறு கொண்டிருக்கிறார்கள்
வாஞ்சையுள்ள
பாலஸ்தீன் முஸ்லிம்கள் !
குர் ஆன் சுமக்கும் வயதில்
குண்டுகளை சுமந்து சாய்ந்த
சின்னமலர்ச் செண்டுகள் !
உடலெல்லாம் குருதி
உயிரெல்லாம்
நம்பிக்கையின் சுருதி
இறுதி மூச்சிலும்
கலிமா கூறி
ஈமானின் சுருமா
பூசிக் கொண்ட
மூமின் பெண்கள் !
" முடம் உடலுக்கென்றாலும்
எதிரிக்கில்லை இங்கே இடம் "
யூதர்களின் குண்டு மழையில்
தலை நனைத்து
மரணத்தால் உயிர் துடைத்துக் கொண்ட
முதியவர்கள் என
கொத்து கொத்தாய்
உருவப்பட்ட உயிர்கள்
மொத்த மொத்தமாய்
வீசி எறியப்படுகின்றன
சுவனச் சோலைக்குள் !
எறிபவர்கள் ...
நரகத்தின் நெருப்பு வயிற்றுக்கு
நிரந்தர உணவாகப்போகும்
யூத விறகுகள் !
ஆயிரத்தி நானூறு
ஆண்டுகளுக்கு முந்திய
இஸ்லாத்தின் தியாக வரலாறு
மீண்டும்
மறுபதிப்பாகிக் கொண்டிருக்கிறது
காஸாவில் !
காஸாவிலும்
கரையிலும்
உடல் கிழிக்கப்பட்ட
யாசிரின் தோழர்களே !
ஏவுகணைகளால்
சாவுகணைகளை பிரசவித்த
சுமையாவின் தொப்புள் கொடிகளே !
போரையே
போர்வையாகப் போர்த்திக் கொண்டிருக்கும்
உங்களுக்கு
எதிரிகள் வீசும்
ஏவுகணைகளெல்லாம்
சிக்கன் குனியா கொசுவைப்போல !
போக்களச் சாவு
புதிதாய்ப் பிறக்கும் சிசுவைப்போல !
பத்ருப்போரும்
உஹதுப்போரும்
பறித்துபோகாத உயிர்களா ?
மூத்தப் போரில்
மூச்சை இழந்து
சுவனக் காற்றை
சுவாசிக்கச் சென்ற
சஹாபாக்கள் சரிதையை
நான் சொல்லவா ?
ஹம்சாவின் ஈரல்
அறுக்கப்படவில்லையா ?
ஜாபரின் உடல் சிதைக்கப்படவில்லையா ?
அந்த உத்தமர்கள் ஊதிவிட்ட
உயிர் காற்றில்தானே
இஸ்லாத்தின் வெற்றிக்கொடி
உயரே உயரே பறந்தது !
மடியும் வேளையிலும்
குடிக்க நீரின்றி துடித்தவர்
குருதியைக் குடித்துத்தானே
தீன் பயிர்
திசையெங்கும் முளைத்தது !
அன்று ...
சஹாபாக்களின் வறுமை
வாழ்விலிருந்தது !
உயிருக்கு விலைபோகாத
ஆண்மை
வாளிலிருந்தது !
அதனால் ...
அல்லாஹ்வின் வாள் என
பெயருமிருந்தது !
இன்று ...
" அல்லாஹ்வின் அப்து " என்ற
பெயர் இருக்கிறது !
பெட்ரோலில் ஊறும் பணம்
கோடி கோடியாய் குவிகிறது !
உள்ளத்தில் மட்டும்
இனத்துக்கே இல்லாத
பேடித்தனம் பல்லிளிக்கிறது !
சகோதரனின்
சாவு சத்தம் கேட்டும்
சத்தமின்றி
அமெரிக்கக் காலடியில்
சரிந்து கிடக்கும்
சாம்ராஜ்ஜிய சாக்கடைகள் !
சாகாவரம் கேட்டு
வெள்ளையரின் காலைக்
கழுவத் துடிக்கும்
ராஜ அவமானங்கள் !
சோரத்திற்கு ஓரம் போனவர்களை
காறித்துப்பிவிட்டு
தீரத்தோடு போராடும்
பாலஸ்தீனப் போராளிகளே ....
நாய்கள் வீசிய
நாசகார குண்டுகளின் கூச்சலை விட
உச்சமாகக் கேட்கிறதே
" அல்லாஹு அக்பர் " என்று
முழக்கமிடும்
உங்கள் நெஞ்சுக் கூட்டின் சப்தம் !
ஆனாலும் ...
என் அருமைத் தோழர்களே ..
உரிமைப் போராளிகளே ...
ஆயுதமே இல்லாமல்
அணுப்பேய்களோடு மோதலாமா ?
தலை போனாலும் தப்பில்லை
தலைப்பாகை தப்பித்தால் போதுமென்று
நினைக்கலாமா ?
சாதிப்பதைவிட
சாவதிலேயே
சாதனை நிகழ்த்துகின்ற
உங்கள் சடலங்களை
எண்ணி எண்ணி
செத்துப் போகிறதே
எங்களது ரத்தம் !
சுவனத்தின் கதவுகள்
மண்ணறையிலும் உங்களுக்கு
திறந்தே இருக்கின்றன !
ஈராக்கும்
பாலஸ்தீனும்
நரகமாகவே இருக்கின்றன !
அழிவதைப் பார்த்தும்
அழவேத் தெரியாத
உங்களைப் பார்த்து
ஆவி துடிக்குது எங்களுக்கு !
பக்கத்திலிருந்த
பாபர் மசூதியையே
பாதுகாக்கத் தெரியாத
பேதைகள் எங்களால்
கடற்கரை ஓரத்தில் நின்று
கோஷம் போடுவதைத் தவிர
வேறென்ன செய்து விட முடியும் ?
களத்துக்கே வர வக்கில்லாத அரபிகளையும்
முக நூலில் வீரம் காட்டுகின்ற எங்களையும்
நம்பி
செத்துப் போகாதீர்கள் !
யுத்தங்களை வெற்றி கொள்ளும்
சக்தியும் யுக்தியும்
சித்தியாகும் வரை
சாவுகளை முக்திபெறச் செய்யுங்கள்
பக்தியில் மனம் நனையுங்கள் !
சண்டைதான் வேண்டுமென்றால்
இங்கே வந்து விடுங்கள் !
அது கூடுமா கூடாதா ?
ஆதாரம் இருக்கா இல்லையா ?
இதுபோல் இன்னும்
எத்தனையோ உண்டு
நமக்குள் சண்டைபோட !
கத்தியின்றி ரத்தமின்றி
இனத்தின் அடையாளமே
தெரியாமல்
அழிந்து போக
இது போதாதா ?
அதைத்தான்
நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம் !
கியாம நாள் வரை
கவலையே இல்லை !

சனி, 19 ஜூலை, 2014

இஸ்லாம் குறித்து கவிஞர் வாலி:

எழுத்தால் போட முடியாத எடை ......... கவிஞர் வாலி 



பாடம் பயில நான் 
பள்ளிவாசல் புகுந்த 
பிராயந்தொட்டு தொழுகை புரிய 
பள்ளிவாசல் 
புகுவாரோடு பழகி நின்றவன்! 
அவர்களது அன்பை ஆரா 
அமுதமாய் தின்றவன் ! 

என் ஒவ்வொரு பருவத்திலும் 
எனக்கு ஒத்தாசை பண்ணிய பெருமக்கள் 
இஸ்லாமிய இனத்தவர் 
அவரெலாம் - தண்ணீர் கலவா 
தாய்ப்பால் மனத்தவர் ! 

இன்றைய என் ஏற்றம் 
அவர்களிட்ட பிச்சை 
இதைச் சொல்ல 
எனக்கில்லை லஜ்ஜை ! 

எல்லா சமயமும் 
எல்லாச்சமயமும் 
பேசுவது அன்பு 
பேணுவது அறம் இதை 
ஒர்ந்தார்க்கு இயல்பாகக் 
கைவரும் சமயப் பொறை 
எனும் இமயப் பொறை ! 
இந்தப் பொறை 
இருப்பின் இச்சமயம் 
அச்சமயம் 
என எச்சமயமாயினும் 
எவரும் 
அச்சமின்றி வாழலாம் என்பதை 
உணர்ந்து வாழ்ந்திடும் மன்பதை ! 

கவிவேந்தர் மு.மேத்தா காவியமாய் 
வரைந்த நபிகளார் வரலாற்றை வரிவிடாமல் 
படித்தவன் படித்து - பரவசத்தில் புளகாங்கிதம் எய்தி 
விழிப்புனலை வடித்தவன் ! 

அருளார்ந்த அத்தனும் அன்னையுமான 
அப்துல்லாவும் ஆமினாவும்
 இருளார்ந்த உலகிற்கு ஓர் இரவியை ஈந்தனர்
 அங்கனம் ஈர்ந்ததால் அவர்கள் மரித்த பின்னும் 
மக்கள் மனங்களில் மீந்தனர் ! 

அண்ணலார் அவர்கள் என்பு தோல் 
கொண்டு எழுந்து வந்த அன்புரு ! ம
றம் தன்னை புறம் காண வந்த அறம் ! 
காலணி அணிந்து தர்மம் நடந்த நூலணி ! 
மனிதம் என்னும் வடிவில் வந்த புனிதம் ! 
பயிர் உய்ய பெய்யும் வான் மழைபோல் 
ஞாலத்தின் உயிர் உய்யப் பெய்த ஞான மழை ! 
உலகு வணங்கும் உயரிய விழுமங்களின் 
மொத்தக் குழுமம் 
தகிக்கும் பாலையில் 
தவிக்கும் வேர்களுக்கான 
தண்ணீர்த் தடாகம் ! 
கதியற்றோர் கண்ணீரைத் துடைக்க 
வந்த பூந்துவாலை ! 
விட்டொழிக்க வேண்டிய வெற்றுச் சடங்குகளை 
சுட்டெரிக்க வந்த செந்தணல் சுவாலை ! 
எவ்வுயிரும் ஏற்று நிற்கும் செவ்வுயிர் ! 
சுருங்கச் சொன்னால் 
அண்ணல் நபிகளார் அவர்கள் 
இவ்வுலகிற்கு இறைவன் தந்த கொடை ! 
தூரிகையால் தீட்ட முடியாத ஓவியம் ! 
யாப்பதிகாரங்களால் காட்ட முடியாத காவியம் ! 
வார்த்தைகளால் சுட்ட முடியாதவர் வானம் போல் 
எட்ட முடியாதவர் ! 

பகை புகுந்த நெஞ்சத்தார் பார்வையில் படாமல் 
குகை புகுந்த குணாளரை 
கதீஜா மணாளரை காத்து நின்றது - ஒரு கருஞ்சிலந்தி ! 
அது - வாய் நூலால் குகைக்கு 
வாய்ப் பூட்டுப் போட்ட அருஞ்சிலந்தி ! 
ஆறறிவிடமிருந்து - ஒரு பேரறிவை 
ஆன்றறிவில்லாத ஒரு மூன்றறிவுக் காத்தது 
அதனால் அதற்கு அழியாப் புகழ் பூத்தது ! 
நபிகளார் பற்றி நாளெல்லாம் சொல்லலாம் 
சொல்லச் சொல்ல இன்னும் 
சொல்லாததாய் இருக்கும் சொல்லலாம் ! .....


.நன்றி:நமது முற்றம் - மாத இதழ் - ஜூலை -2007 
நன்றி: அபு ஹாசிமா

விலைமாதின் விண்ணப்பம்!


ராமன் வேசமிட்டிருக்கும்
பல ராட்சசனுக்கு
என்னை தெரியும்.
பெண் விடுதலைக்காக போராடும்
பெரிய மனிதர்கள் கூட
தன் விருந்தினர் பங்களா
விலாசத்தை தந்ததுண்டு.
என்னிடம்
கடன் சொல்லிப் போன
கந்து வட்டிக்காரகளும் உண்டு.
சாதி சாதி என சாகும்
எவரும் என்னிடம்
சாதிப் பார்ப்பதில்லை.
திருந்தி வாழ நான் நினைத்தபோதும்
என்னை தீண்டியவர்கள் யாரும்
திரும்பவிட்டதில்லை.
பத்திரிக்கையாளர்களே!
விபச்சாரிகள் கைது என்றுதானே
விற்பனையாகிறது..
விலங்கிடப்பட்ட ஆண்களின்
விபரம் வெளியிடாது ஏன்...?
பெண்களின் புனிதத்தை விட
ஆண்களின் புனிதம்
அவ்வளவு பெரிதா?
காயிந்த வயிற்றுக்கு
காட்டில் இரை தேடும்
குருவியைப் போல்
என்னை யாரும் பரிகசிக்கவில்லை.
கட்டில் மேல் கிடக்கும்
இன்னொரு கருவியைப் போலத் தான்
என்னை கையாளுகிறார்கள்.
நான் இருட்டில் பிணமாக மாறினால்தான்
பகலில் அது பணமாக மாறும்.
பின்தான்
என் குடும்பத்தின் பசியாறும்.
நிர்வாணமே என்
நிரந்தர உடையானல்தான்
சேலை எதற்கென்று
நினைத்ததுண்டு.
சரி
காயங்களை மறைப்பதற்கு
கட்டுவோம் என்று
கட்டிக்கொண்டு இருக்கிறேன்.
என் மேனியில் இருக்கும்
தழும்புகளைப் பார்த்தால்
வரி குதிரைகள் கூட
வருத்தம் தெரிவிக்கும்.
எதையும் வாங்க வசதியில்லாத
எனக்கு
விற்பதற்க்காவது இந்த
உடம்பு இருக்கிறதே!
நாணையமற்றவர் நகங்கள்
கீறி கீறி என்
நரம்பு வெடிக்கிறதே!
வாய்திறக்க முடியாமல்
நான் துடித்த இரவுகள் உண்டு
எலும்புகள் உடையும் வரை
என்னை கொடுமைப் படுத்திய
கொள்கையாளர்களும் உண்டு.
ஆண்கள்
வெளியில் சிந்தும் வேர்வையை
என்னிடம் ரத்தமாய்
எடுத்து கொள்கிறார்கள்.
தூறல் சிந்தாத வான் மேகமில்லை.
கீறல் படாத வேசி தேகமில்லை.
என்னை வேசி என்று
ஏசும் எவரைப் பற்றியும்
கவலைப் பட்டதே இல்லை..
ஏனெனில்
விதவை - விபச்சாரி
முதிர்கன்னி - மலடி
ஓடுகாலி - ஒழுக்கங்கெட்டவள்
இதில் ஏதேனும்
ஒரு பட்டம்
அநேக பெண்களுக்கு
அமைந்திருக்கும்.
இது இல்லாமல் பெண்கள் இல்லை.
எப்போதும்
இழிவு சொல் ஆண்களுக்கு இல்லை.
முதுமை என்னை
முத்தமிடுவதற்க்குள்
என் மகளை மருத்துவராய்
ஆக்கிவிட வேண்டும்.
என் மீது படிந்த தூசிகளை
அவளை கொண்டு
நீக்கி விட வேண்டும்.
இருப்பினும்
இந்த சமூகம்
இவள்
மணிமேகலையை என்பதை மறந்துவிட்டு
மாதவியின் மகள் என்பதை மட்டுமே
ஞாபகம் வைத்திருக்கும்.
இறுதியாக
இரு கோரிக்கை.
என்னை
மென்று தின்ற ஆண்களே!
மனைவிடமாவது கொஞ்சம்
மென்மையாக இருங்கள்.
எங்களுக்கு இருப்பது
உடம்பு தான்
இரும்பல்ல.
என் வீதி வரை
விரட்டிவரும் ஆண்களே!
தயவு செய்து விட்டுவிடுங்கள்.
நான் விபச்சாரி என்பது
என் வீட்டுக்கு தெரியாது.
கவிஞர்:தமிழ்தாசன்

வெள்ளி, 18 ஜூலை, 2014

யார் இந்த ‪இஸ்ரேல்‬ ?


அவர்கள் சாமானிய மனிதர்கள் அல்லர். உலகின் மிகப்பெரிய கந்து வட்டிக்காரர்கள் . மகா மகா கோடீஸ்வரர்கள் அமெரிக்க அரசிற்கே அவர்கள் கடன் கொடுப்பவர்கள், ஆம். அவர்கள் யூதர்கள். அவர்களுடைய இனத்திற்கென்று ஒரு பூமி இல்லை. இது தங்கள் தேசம் என்று சொல்லிக் கொள்ள அவர்களுக்கு ஒரு நாடு இல்லை. உலக வரைபடத்தில் முகவரி இல்லை. அவர்கள் தங்களுக்கு இனி ஒரு விலாசம் தேடிக்கொள்வது என்று அந்த சூதாட்ட விடுதியில் முடிவு கண்டனர். அவர்களின் தலைவன் தியோடர்ஹெட்நெல் என்பவன். அவர்கள் ‘யூததேசிய நிதி’ என்று வலிமை மிக்க ஓர் பெட்டகத்தைத் திறந்தனர். அங்கே கூடியவர்களே ஆளுக்குப் பல்லாயிரம் கோடி டாலர் என்று நிதி அளித்தனர். இது ஒரு நூற்றாண்டிற்கு முன்னரே நடந்த நிகழ்வு.


இனி அவர்கள் தங்கள் இனத்திற்கென்று ஒரு தேசத்தை உருவாக்க வேண்டும். எங்கே உருவாக்குவது? எப்படி உருவாக்குவது ? அவர்களுடைய வேதத்திற்கு பெயர் ‘தவுராத்.’
பத்துக் கட்டளைகள் என்றும் கூறுவார்கள். தங்கள் தேசம் எங்கே இருக்கிறது என்பதை அந்த வேதம் சுட்டிக் காட்டியிருப்பதாக கற்பிதம் செய்தார்கள். இப்படித் தான் இஸ்ரேல் என்ற நாட்டிற்காக ஒரு கரு உருவாக்கப்பட்டது.

இதனை முதன் முதலாக எதிர்த்துக் குரல் எழுப்பியவர் அண்ணல் காந்தியடிகள் தான். தங்கள் தேசம் இருந்த இடம் என வேதம் வாக்களித்திருக்கிறது என்று கூறி எந்த நாட்டையும் ஆக்கிரமிக்கக் கூடாது. அப்படி இஸ்ரேல் என்று ஒரு நாடு உருவாக்கப் படுவதை எதிர்க்கிறோம். அதனையும் மீறி அப்படி ஒரு நாடு உருவாக்கப்படுமானால்
அதனை உலகம் அங்கீகரிக்கக் கூடாது. கண்டிப்பாக இந்தியா அங்கீகரிக்காது என்று அண்ணல் காந்தியடிகள் தெரிவித்தார்.

ஆனாலும், வட்டிக்காக கடன் பெற்றவளின் கண்களையே கேட்கின்ற அந்த யூத மகாப்பிரபுக்கள் ஜோர்டான் எல்லையை ஓட்டிய பாலஸ்தீனப் பகுதிக்குள் காலடி பதித்தனர். அரபு மக்கள் ஒரு வகையினர் நமது நாடோடி மக்களைப் போல் வசிக்கும்
பழங்குடி மக்கள் . அவர்களுக்கு ஜோர்டான் எல்லையோரம் பாலஸ்தீனப் பரப்பிற்குள் சொந்த நிலங்கள் இருந்தன. அவைகள் ரோஜா தோட்டங்களோ, பேரீச்சை தோட்டங்களோ அல்ல. கள்ளிச்செடி மேலும் வானம் பார்த்த பூமி. அந்த நிலங்களை யூத மகாபிரபுக்கள் வாங்கினர். விலை என்ன தெரியுமா? யானை விலை, குதிரை விலை என்பார்களே அதற்கும் அதிகம்தான். அப்படி வாங்கப்பட்ட இடங்களில் யூதர்கள் குடியமர்த்தப்பட்டனர்.

அப்போது அண்டையிலுள்ள அரபு நாடுகளெல்லாம் அவர்களுக்கு அனுதாபமாகவே இருந்தன. யூத இனத்தையே பூண்டோடு ஒழிப்பது என்பது ஹிட்லரின் லட்சியம். அதற்காக அவன் படை கொண்டு சென்ற நாடுகளிலெல்லாம் முதன் முதலாகச் செய்த கைங்கரியம் யூத மக்களை அழித்ததுதான். தப்பித்த யூதர்கள் அடைக்கலம் தேடி உலகம் முழுமையும் ஓடிக்கொண்டிருந்தனர். இது அண்மைக் கால வரலாறு.

ஆனால், சென்ற நூற்றாண்டின் துவக்கத்திலேயே ஷியாவும், ஐரோப்பிய நாடுகளும் யூதர் என்றாலே முகம் சுளித்தனர். அவர்களை தண்டிக்கப்பட்ட மக்களாகவே கருதினர். அப்படி சரித்திரத்தால் சபிக்கப்பட்ட மக்கள் இங்கேயாவது இளைப்பாறட்டுமே என்று
உண்மையில் அரபு மக்கள் அவர்கள் மீது இரக்கம் கொண்டனர். அவர்கள் உருவாக்கிக் கொண்ட குடியிருப்பு நாளை தங்கள் எல்லைகளையே தீண்டப்போகும் மலைப்பாம்பு என்பதனையும் அதற்கு இரையாகப் போகும் மான்குட்டிகள்தான், அரபு நாடுகள் என்பதனையும் அப்போது அவர்கள் உணரவில்லை. அந்த மலைப்பாம்பு மெள்ள மெள்ள நெளியத்தொடங்கியது. தமது நீளத்தை காட்டதொடங்கியது. சுற்றிலுமுள்ள அரபு நாடுகளுக்குள் தமது வாலினை நீட்டியது. அந்த நிலமெல்லாம் யூத சமுதாயத்திற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உரிமையாக இருந்தது. எனவே, இப்போது தங்கள் மூதாதையர் விட்டுச்சென்ற பரம்பரைச் சொத்தில் தங்களுக்குப்பாத்தியம் உண்டு என்று யூதர்கள் கோரிக்கை வைக்கவில்லை. அபகரிக்கவேத்தொடங்கினர்.

முதல் உலகப் போருக்குப் பின்னர் பாலஸ்தீனம் பிரிட்டனின் ஆளுகைக்குள் வந்தது.
பாலஸ்தீனத்தில் யூதர்கள் தமது எல்லைகளை விரிவுபடுத்துவதை பிரிட்டன் ஊக்கப்படுத்தியது. காரணம் அந்த நாட்டை விட்டு வெளியேறினாலும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு மத்தியில் -அரபு நாடுகளுக்கு மத்தியில் ஒரு ஏவல் பிராணியை வளர்த்து விட வேண்டும் என்பதில் குறியாக இருந்தது. பின்னர் பிரிட்டனுக்கு துணையாக அமெரிக்காவும் வந்தது.

பாலஸ்தீனத்திற்குள்ளேயே யூதர்களின் குடியிருப்புக்கள் பெருகின. பின்னர் இணைந்தன. தங்கள் பூமிக்குள் ஓர் கள்ள தேசம் உருவாவதை அப்போதுதான் பாலஸ்தீன மக்கள் நன்றாக உணரத் தொடங்கினர். எனவே, 1920ம் ஆண்டு முதன்முதலாக பாலஸ்தீன மக்களுக்கும், யூதர்களுக்கும் இடையே நேரடி மோதல்கள்
வெடித்தன. அடுத்த ஆண்டே இன்னொரு இனக்கலவரம். 1929 ம் ஆண்டு நடந்த மோதல் பயங்கரமானது. `ஹெப்ரான் படுகொலை’ என்று வர்ணிக்கப்பட்ட அந்த வெறித்தனமான மோதலில் ஏராளமான பாலஸ்தீனிய மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். காரணம் யூதர்கள் வலிமை வாய்ந்த ஆயுதங்களை பெற்றிருந்தனர். அத்தனையும் அமெரிக்க தயாரிப்புத் தான்.

1936ம் ஆண்டு பாலஸ்தீன மக்கள் யூத ஆதிக்கத்தை எதிர்த்து வெகுண்டெழுந்தனர்.
அந்த எழுச்சி 1939 ம் ஆண்டு வரை பொங்கும் எரிமலையாய் குமுறிக்கொண்டிருந்தது.
அதே சமயத்தில் யூதக்குடியிருப்புக்களுக்கு உதவியாக பிரிட்டனும், அமெரிக்காவும் பெருமளவில் ஆயுத உதவிக்கள் செய்தன. கரங்களாலும், கவண் கற்களாலும் பாலஸ்தீனிய இளைஞர்கள் எவ்வளவு காலம் போராட முடியும்? பாலஸ்தீனத்திற்குள் யூதர்களுக்கு என்ன உரிமை என்பதனை தீர்மானிக்க பல்வேறு கமிஷன்களை பிரிட்டன் அமைத்தது. கடைசியாக இந்தப் பிரச்சனையை ஐ.நா மன்றத்திற்கு கொண்டு சென்றது இப்படி. பாலஸ்தீனத்தின் இதயத்தைப் பிளந்து உருவாகிவரும் இஸ்ரேலைஒரு நாடாக
அங்கீகரிப்பது என்பதுதான் தீர்வாகும்.

எப்படி நமது துணைக் கண்டத்தை இந்தியா -பாகிஸ்தான் என்று இரு நாடுகளாக உருவாக்கியதோ, அதே போல பாலஸ்தீனம் அதற்குள் இஸ்ரேல் என்ற கோட்பாட்டை ஐ.நா மன்றத்தில் பிரிட்டன் முன்மொழிந்தது. இந்த நிலையில்தான், இன்னொரு தேசத்தைத் துண்டாடி ரத்தக்கோடுகளால் இஸ்ரேல் என்று ஒரு நாட்டை உருவாக்குவதை உலகம் ஏற்கக்கூடாது என்று அண்ணல் காந்தியடிகள் அறைகூவல் விடுத்தார். ஆனாலும், அரபு மக்களின் தாயகமான பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் என்று ஒரு நாடு உருவாக்கப்படுவதை ஐ.நா மன்றம் அங்கீகரித்தது. அந்த மன்றம் அமெரிக்கா ஆட்டி வைக்கும் பொம்மை என்பதனை எத்தனையோ முறை மெய்பிக்கவும் செய்திருக்கிறது.

1947 ம் ஆண்டிற்கு முந்தைய உலக வரை படத்தை பாருங்கள். இஸ்ரேல் என்ற நாடே இடம் பெற்றிருக்காது. அதன் பின்னர் வெளியிடப்பட்ட உலக வரை படத்தைப் பாருங்கள்
இன்றைக்கும் ரத்தம் சொட்டிக் கொண்டிருக்கிற எல்லைகள் தெரியும். அதற்குள் இருக்கின்ற நாடுதான் இஸ்ரேல். ‘இஸ்ரேல் என்ற நாட்டை இந்தியா அங்கீகரிக்கவில்லை. பாலஸ்தீனம் என்பது ஒரே பூமிதான். அதுதான் நாடு. அதைத்தான் அங்கீ கரிக்கிறோம்’ என்று பிரதமர் ஜவஹர்லால் நேரு முரசறைந்தார். இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலம் வரை இஸ்ரேல் அங்கீகரிக்கப்படவில்லை. பாலஸ்தீன மக்களின் தானைத் தலைவராக விளங்கிய யாசர் அராபத்தை அழைத்து இந்தியா கவுரவித்தது.

உலகப்புகழ் பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன் ஓர் யூதர். உருவாகும் இஸ்ரேல் நாட்டிற்கு அவரே முதல் பிரதமராக இருக்க வேண்டும் என்பதை யூதர்கள் மட்டுமல்ல அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளும் விரும்பின. இன்னொருவர் பூமியை ஆக்கிரமித்து உருவாக்கும் ஒரு நாட்டிற்கு தான் பிரதமராக இருக்க முடியாது என்று அறிவித்து ஐன்ஸ்டீன் விலகி விட்டார்.

ஆனாலும், 1948ம் ஆண்டு முதல் இஸ்ரேல் என்ற நாடு செயல்படத் தொடங்கியது.
தேசமில்லாது அலைந்தவர்கள் ஒரு தேசத்தின் வரலாற்றை துப்பாக்கி முனையில் எழுதத் தொடங்கினர். 1949 ம் ஆண்டு இஸ்ரேலிலிருந்து ஒரு லட்சத்திற்கும் அதிகமான பாலஸ்தீனிய மக்கள் வெளியேற்றப்பட்டனர். அப்படி வெளியேற்றப்பட்டவர்கள் இத்தனை ஆண்டுகளில் நாற்பது லட்சம் பேராக பெருகியிருக்கின்றனர். ஆனால் அவர்களெல்லாம் மீண்டும் வருவதற்கு அருகதையற்றவர்கள் என்று இஸ்ரேல் தெரிவித்துவிட்டது. அதே சமயத்தில் கொச்சியிலும், மணிப்பூரிலும் எத்தனையோ நூற்றாண்டுகளாக இருக்கும் யூதர்களை தங்கள் குடிமக்கள் என்று அழைத்துக் கொள்கிறது.

ஒரு நாடாக அறிவிக்கப்படுவதற்கு முன்னரே வலிமை வாய்ந்த ஆயுதச்சாலையாக இஸ்ரேல் தன்னை உருவாக்கிக் கொண்டது. இன்றைக்கு அமெரிக்காவிற்கு ஈடாக ராணுவ வல்லமை பெற்றிருக்கிறது. பாலஸ்தீனத்திற்குள் உருவான பாம்புப் புற்றை அகற்றுவதற்கு எகிப்து, சிரியா, லெபனான், ஈராக் ஆகிய நாடுகள் கூட்டாக முயன்றன. அப்போதுதான் இஸ்ரேலின் ராணுவ வலிமை வெளிப்பட்டது. இஸ்ரேலின் கரங்கள் தான் உயர்ந்தன. அந்த மோதலைப் பயன்படுத்தி அண்டை நாடுகளின் பரப்பளவுகளை இஸ்ரேல் கைப்பற்றிக்கொண்டது. அந்தப் பிரதேசங்களும் தங்கள் வேதம் சொல்லும் தங்களின் புனித பூமிதான் என்று வன்முறை வாதம் செய்தது. அனுமானங்கள் தான் அதற்கு அடையாளங்களாம். பாலஸ்தீனத்திலிருந்து வெளியேற்றப் பட்ட மக்கள் அண்டை நாடுகளில் குடியேறினர். அந்தக் குடியிருப்புகளெல்லாம் தங்கள் தேசத்திற்கு ஆபத்தானவை என்று கூறி இஸ்ரேல் ஆக்கிரமிப்பு யுத்தம் நடத்தியது. அதற்குத் துணை அமெரிக்காதான்.

தமது ஆயுத வியாபாரத்திற்கு இஸ்ரேல் நல்ல சந்தை என்று அந்த நாடு கருதுகிறது.
இப்படி இன்று வரை பாலஸ்தீன மக்களின் ரத்தத்தில்தான் இஸ்ரேல் நீராடிக்கொண்டிருக்கிறது. 1967 ம் ஆண்டு எகிப்தின் மீது படையெடுத்த இஸ்ரேல் அதன்
காசா பகுதியைக் கைப்பற்றிக் கொண்டது. ஜோர்டான் மீது படையெடுத்து மேற்குக்கரையை ஆக்கிரமித்துக் கொண்டது.

1982ம் ஆண்டு லெபனான் மீது இஸ்ரேல் படையெடுத்தது. எல்லை நெடுகிலும் அந்த
நாட்டிற்குள் தங்கியிருந்த 3 ஆயிரத்து 500பாலஸ்தீனியர்கள் படு கொலை செய்யப்பட்டனர். அவர்கள் ஆயுதங்களே இல்லாத அப்பாவி மக்கள். அந்தப் படுகொலைக்கு இஸ்ரேலிலிலேயே எதிர்ப்புக் கிளம்பியது.

அதனால் அன்றைய பாதுகாப்பு அமைச்சர் ஓரியல் ஜரான் பதவி விலகினார். இந்த கொடுமைகள் கண்டு இஸ்ரேல் ஆக்கிரமித்த பகுதிகளில் வசிக்கும் பாலஸ்தீனிய மக்கள்
வெகுண்டெழுந்தனர். ஆங்காங்கே மூர்க்கத்தனமாக இஸ்ரேல் படைகளுடன் மோதினர். ரத்த தடாகங்களில் அவ்வப்போது வெற்றி மலர்கள் மணம் வீசவே செய்தன. ஆனாலும் பூச்செண்டுகளைக் கொடுத்தால் இஸ்ரேல் எரிகுண்டுகளை திருப்பிக் கொடுத்தது. எனவே பாலஸ்தீனிய மக்கள் ஆக்கிரமிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் இஸ்ரேலுக்கு எதிராக போர்க்கோலம் பூண்டனர். அவர்களுடைய ஆயுதம் என்ன தெரியுமா? விளைந்த காடுகளில் பறவைகளை விரட்ட நாம் வீசும் கவண் கற்கள்தான்
இஸ்ரேலின் ராட்சஷ ஆயுதங்களை வெற்றிகரமாக சந்தித்தன.

1987ம் ஆண்டு இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகளை எதிர்கொள்ள ஹமாஸ் இயக்கம் தோன்றியது. அந்த இயக்கம் இளைய தலைமுறையின் போர் பாசறை. மேற்குக் கரையிலும், காசா பகுதியிலும் அந்த இயக்கத்தின் செல்வாக்கு சிகரம் தொட்டது. உண்மையில் அந்த இரு பரப்பிலும் சமூகப்பணிகளையும் மேற்கொண்டது. பாலஸ்தீனிய மக்களை பயங்கர ஆயுத பலத்தால் அடிபணிய வைக்க முடியாது என்பதனை இஸ்ரேலுக்கு காலம் உணர்த்தியது. எனவே பாலஸ்தீனவிடுதலை இயக்கத்தை அங்கீகரிக்க முன் வந்தது.

1993ம் ஆண்டு ஓஸ்லோ நகரில் அமைதிப்பேச்சு வார்த்தை நடந்தது. அந்த மாநாடு முழு வெற்றி என்று கூற முடியாவிட்டாலும், மேற்குக் கரையிலும் காசா பகுதியிலும் சுயாதிக்க அமைப்புகளை பாலஸ்தீன மக்கள் அமைக்கலாம் என்று அந்த மாநாடு முடிவு கண்டது. அதனைத் தொடர்ந்து பலப் பல மாநாடுகள் நடந்தன. 2000ம் ஆண்டு அமெரிக்க குடியரசுத் தலைவர் கிளிண்டன் ஓர் மாநாடு கூட்டினார். பாலஸ்தீனியத் தலைவர் யாசர் அராபத்தும், இஸ்ரேலியப் பிரதமர் எகுட்பாராக்கும் கலந்து கொண்டனர். உடன்பாடு ஏற்படவில்லை.

ஆனால் அதே சமயத்தில் இழந்த தங்கள் தேசத்தை இஸ்ரேல் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணி நேரமும் பாலஸ்தீனிய மக்கள் போராடுகிறார்கள்; அங்குலம் அங்குலமாக முன்னேறுகிறார்கள். மேற்குக் கரையும் காசா பகுதியும் தான் இன்றைக்கு அங்கீகரிக்கப்பட்ட பாலஸ்தீனம். அங்கே ஒருநாள் கூட மக்கள் நிம்மதியாக உறங்கியதில்லை.

2006 ம் ஆண்டு பாலஸ்தீனத்தில் பொதுத்தேர்தல் நடைபெற்றது. மக்கள் தீர்ப்பு அறிய அந்தத் தேர்தல் ஓர் வாய்ப்பு என்று ஐ.நா. மன்றமும் கருதியது. தேர்தலில் காசா பகுதியில் ஹமாஸ் இயக்கம் மகத்தான வெற்றி பெற்றது. மேற்கு கரைப்பகுதியில் மிதவாத அரசு அமைந்தது. ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹமாஸ் அரசை அங்கீகரிக்க மாட்டோம் என்று இஸ்ரேலும், அமெரிக்காவும் அறிவித்தன. அதனைத்தொடர்ந்து காசா பகுதியை கலவர பூமியாகவே வைத்திருக்க பிரியப்படுகின்றன. தங்கள் அரசை அங்கீகரிக்க மறுக்கும் இஸ்ரேலை, ஹமாஸ் இயக்கமும் அங்கீகரிக்கவில்லை. தங்கள் தாயகத்தின் இதயப்பகுதியில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் யூத ஆக்கிரமிப்பாளர்களை அகற்றுவோம் என்று ஹமாஸ் இயக்கம் சூளுரைத்து செயல்படுகிறது.

எனவே ஏதாவது ஒரு காரணம் கூறி காசா பகுதிக்குள் அவ்வப்போது இஸ்ரேல் படையெடுக்கிறது. ஒரு பக்கம் வான்வழித் தாக்குதல் - இன்னொரு பக்கம் கடல்வழித் தாக்குதல் - தொடர்ந்து தரைவழித் தாக்குதல் என்று சமீபத்தில் கூட மூர்க்கத்தனமாக
தாக்குதலைத் தொடர்ந்தது. காசா பகுதியில் இன்னொரு ரத்த ஆறு ஊற்றெடுத்தது. ஆனாலும் பாலஸ்தீன மக்கள் அடிபணியவில்லை. மூன்று வார அநியாய யுத்தத்திற்குப் பின்னர் போர் நிறுத்தம் என்று இஸ்ரேலே அறிவித்திருக்கிறது. ஈவிரக்கமற்ற இஸ்ரேல் படையெடுப்பை ஐ.நா. மன்றம் ஒரு மனதாகக் கண்டித்திருக்கிறது. இன்றைக்கு உலகத்தின் முன்னால் ஆக்கிரமிப்பு நாடு வெட்கித்தலைகுனிந்து நிற்கிறது.

முன்னாள் பாலஸ்தீனிய மக்களுக்கு கவண் கற்கள்தான் ஆயுதம். ஆனால் இன்றைக்கு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் பறக்கின்றன. இன்னொரு பக்கம் தரைவழிப் போரில்
பாலஸ்தீனிய மக்களை வெல்ல முடியவில்லை. எல்லைகளை முறித்துக் கொண்டு நுழையும் டாங்கிகளை அவர்கள் அப்பளங்களாக நொறுக்குகிறார்கள். இன்றைக்கு மத்திய கிழக்கில் ஏகாதிபத்திய சக்திகளின் பயங்கர ஆக்கிரமிப்புக்களை பார்க்கிறோம்.

அரசு பயங்கரவாதம் என்றால் என்ன என்பதற்கு இஸ்ரேல் இலக்கணம் வகுத்துக் கொண்டிருக்கிறது. ஹமாஸ் இயக்கம்தான் காசா பகுதிக்கும் மேற்குக் கரைக்கும் உண்மையான அரசியல் இயக்கம். அதனை அழித்தொழிக்காது கண் துஞ்சமாட்டோம் என்று இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் கொக்கரிக்கிறார்கள். ஆனால் சர்வவல்லமை படைத்த அந்த ஆக்கிரமிப்பாளர்கள் அவ்வப்போது சோர்ந்து போகிறார்கள். அதனால் போர் நிறுத்தம் என்கிறார்கள். பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையில் மிதவாத ஆட்சி அமைந்தாலும் முழு பாலஸ்தீன மக்களின் அங்கீகாரம் பெற்ற மாபெரும் இயக்கமாக ஹமாஸ் தலை நிமிர்ந்து நிற்கிறது. அதனைப் பணிய வைக்க அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் சில அரேபிய நாடுளே துணை நிற்கின்றன என்பது வேதனை தரும் செய்தி.

எனினும் பாலஸ்தீனம் இமயம் போல எழுந்து நிற்கும்.
வல்ல ரஹ்மான் பாலஸ்தீனிய
மக்களுக்கு மென்மேலும்
வெற்றியை தருவானாக
என்று பிரார்த்தனை செய்தவனாக.!
THANK.S mohamed sha  முகநூல் பதிவு 18-7-2014

வெள்ளி, 4 ஜூலை, 2014

தியானம்

தியானம் செய்யுங்கள் தியானம் என்பது சும்மா இருப்பது அன்று .

தியானம் என்பது நீ தினமும் செய்யும் 

ஒவ்வொரு வேலையையும் இன்னும் அழகாக , 

இன்னும் கவனமாக , இன்னும் நேர்த்தியாக , செய்வது. 

எதையும் உணர்வுடன் செய்யும்போது

ஒரு விருப்ப அனுமதித்தல் அங்கே நிகழும்; 

உணர்வுடன் பணி புரியும் போது 

தொடர்ந்து உயிரோட்டத்துடன் இருப்பாய்.

இப்போதே ஆரம்பி. 

நடக்கும்போது உணர்வுடன் நட. 

பேசும்போது உணர்வுடன் பேசு. 

பணிபுரியும் போது உணர்வுடன் பணி புரி ..

உண்ணும் போது உணர்வோடு உண் ..

இப்படி நீ ஒவ்வொரு கணத்திலும் 

எந்த ஒரு வேலை செய்தலும் முழு உணர்வுடன் செய் .

ஆனந்தம் அருவியாய் உன்னுள் பாயும் ஒவ்வொரு கணத்திலும் ..

--- ஓஷோ ---