புதன், 29 ஜூன், 2016

அலி ரலியல்லாஹ் அறிவுக்கூர்மை -9

அலீ ரலி அவர்களின் நினைவு தின சிந்தனைகள்
ஒரு சமயம் பெண் அலீ ரலி அவர்களிடம் அலறி அடித்துக் கொண்டு வந்தாள்
" என் குழந்தை மோட்டு மீது ஏறிக் கொண்டு அங்கேயே இருக்கிறது நான் கூப்பிட்டால் குழந்தை வரமாட்டேன் என்கிறது அதை அப்படியே விட்டு விட்டால் கீழே விழுந்து விடுமோ என எனக்கு பயமாக இருக்கிறது இது ஆபத்து என்பதை புரிந்து கொள்ளக் கூடிய வயதும் அதற்கில்லை சைக்கினை காட்டினால் அதை அது புரிந்து கொள்ள இயலவில்லை பல முறை அதற்குப் புகட்டும் பாலைக் காட்டினேன் அது தன் முகத்தை திருப்பிக் கொள்கிறது என் மனம் ரொம்பவும் பதறுகிறது" என்றாள்
அவளைப் பார்த்து அலீ ரலி அவர்கள் "இன்னொரு குழந்தை அந்த மோட்டு பக்கம் காட்டும் போது அந்த குழந்தை இந்தக் குழந்தையின் பக்கம் வந்து
விடும் மேலும் தன் தாயின் கையில் இன்னொரு குழந்தையைப் பார்க்கும் போது உடனே தன் தாயுடன் சேரவே விரும்பும்"" என்றார்கள்
அவ்விதமே செய்யப்பட்டு குழந்தையும் காப்பாற்றப்பட்டது

அலி ரலியல்லாஹ் அறிவுக்கூர்மை -8

அலீ ரலி அவர்களின் நினைவு நாள் சிந்தனை 2
அலீ ரலி அவர்கள் வேகமாக தொழுகைக்கு சென்று கொண்டு இருந்தார்கள் அப்போது ஒருவர் அவர்களை வழிமறித்து
" குட்டி போடும் பிராணிகள் எவை ? 
முட்டை இட்டு குஞ்சு பொரிக்கும் பிராணிகள் எவை ? என்று கேட்டார்
ஓடும் ஓட்டத்திலேயே அலீ ரலி அவர்கள்
" எந்தப் பிராணிக்களுக்கு செவி வெளிப்புறமாக இருக்கிறதோ அவை குட்டி போடும் . எவற்றிற்கு செவி உட்புறமாக இருக்கிறதோ அவை முட்டை இட்டு குஞ்சு பொரிக்கும் என்று கூறிவிட்டு பள்ளிவாசலுக்கு விரைந்தார்கள்

அலி ரலியல்லாஹ் அறிவுக்கூர்மை -7

அலி ரலி அவர்கள் கோவேறு கழுதையில் வேகமாக பயணம் செய்து கொண்டு இருக்கும் போது , ஒரு பெண் " என் உடன் பிறந்தவன் இறந்து விட்டான் அவன் இறக்கும் போது 600 திர்ஹம் சொத்து விட்டுச் சென்றான் அதில் என் பங்கு ஒரு திர்ஹம்தானே எனக்குரிய பங்கு . ? என்று அவள் கேட்டாள்
உடனே அலி ரலி அவர்களின் இயற்கையாக அமைந்த கணித அறிவு துரிதமாக வேலை செய்தது
ஒருவனுக்குத் தங்கையான இவள் ஒரு திர்ஹம் பங்கு பெற வேண்டுமானால் இவளுடன் யார் யார் பங்குதாரர்களாக இருக்க வேண்டும் என்பதை ஊகித்துக் கொண்டு அக்கணமே அவர்கள் பதில் அளித்தார்கள
" உன் உடன் பிறந்தவன் 600 திர்ஹம்களையும் இரு பெண் மக்களையும் , தன் தாயையும், மனைவியையும் , 12 சகோதரர்களையும் , உனக்கும் விட்டுச் சென்றான்
அந்த 600 திர்ஹம்களில் இரண்டு மக்களுக்கும் இறைவன் குர்ஆனில் சொல்லிபடி 400 ம் , தாய்க்கு 100 ம் , மனைவிக்கு 75 ம் , சகோதரர்கள் பன்னிரண்டு பேர்களுக்கும் 24 ம் , உனக்கு ஒரு திர்ஹம் வருகிறது . இது குர்ஆனில் கூறியபடி மிகச் சரியாக பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது
நண்பர்கள் அந்த குர்ஆன் வசனத்தை குறிப்பிடுங்கள் பார்க்கலாம்

அலி ரலியல்லாஹ் அறிவுக்கூர்மை -6

ஒரு முறை 3 நபர்கள் 17 ஒட்டகைகளுடன் வந்து இந்த 17 ஒட்டகைகளில் இரண்டில் ஒரு பங்கு ( 1/2)
முதலாமருக்கும் , மூன்றில் ஒரு பங்கு (1/3) இரண்டாமவருக்கும் , ஒன்பதில் ஒரு பங்கு (1/9)
மூன்றாமவருக்கும் பங்கிட வேண்டும் ஒட்டகைகளை வெட்டி கூறு போடக்கூடாது என்று கூறினார்கள்
அலீ ரலி அவர்கள் அரசாங்க பொது நிதியிலிருந்து ஒரு ஒட்டகை கொண்டு வரச் செய்து அதை அந்த 17 ஒட்டகைகளுடன் சேர்த்து 18 ஒட்டகைகளாக்கினார்கள்
முதல் நபருக்கு இரண்டில் ஒரு பங்கு அதாவது 9 ஒட்டகங்கள்
இரண்டாவது நபருக்கு மூன்றில் ஒரு பங்கு 6 ஒட்டகங்கள்
மூன்றாம் நபருக்கு ஒன்பதில் ஒரு பங்கு 2 ஒட்டகங்கள் கொடுத்தார்கள்
இவ்விதம் 9 + 6 +2 = 17 அரசாங்க பொது நிதியிலிருந்து கொண்டு வரப்பட்ட அதே ஒட்டகம் அங்கேயே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது

அலி ரலியல்லாஹ் அறிவுக்கூர்மை -5

இரண்டு பிரயாணிகள் ஒருவர் 5 ரொட்டியும் இரண்டாமவர் 3 ரொட்டியும் வைத்திருந்தார்கள்
சாப்பிடும் போது மூன்றாமவர் ஒருவர் சேர்ந்து கொண்டு 8 ரொட்டிகளையும் சமமாக பங்கீட்டு மூன்று பேர்களும் சாப்பிட்டனர் அது வரை எந்த பிரச்சனையும் இல்லை
மூன்றாமவர் சாப்பிட்டு முடித்ததும் 8 திர்ஹம் காசுகள் கொடுத்தார் அவ்வளவுதான் பிரச்சனை வந்துவிட்டது
முதலாமர் 5 திர்ஹம் எடுத்துக் கொண்டு மீதி 3 திர்ஹம்களை இரண்டாமவருக்கு கொடுத்தார்
இரண்டாமவரோ தனக்கு அவர் கொடுத்ததில் பாதி 4 திர்ஹம் கேட்டார்
வழக்கு அலி ரலி அவர்களிடம் வந்தது 3 ரொட்டி கொண்டு வந்த இரண்டாமவரை 3 திர்ஹம் களை பெற்றுக் கொள்வது உனக்கு நல்லது என்றார்கள் அவனோ தனக்கு 4 திர்ஹம்தான் வேண்டும் என்று அடம்பிடித்தான்
அலி ரலி அவர்களிடம் தீர்ப்பு செயயும்படி சொன்னார்கள்
3 ரொட்டி கொண்டு வந்தவனுக்கு ஒரே ஒரு திர்ஹமும் , 5 ரொட்டிகள் கொண்டு வந்தவனுக்கு 7 திர்ஹமும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்கள்
எப்படி என்று இரண்டாமவர் கேட்டார்
மொத்தம் உள்ள 8 ரொட்டிகளை ஒவ்வொரு ரொட்டியும் மூன்று மூன்று துண்டுகளாக சமமாக பிரித்தால் 24 துண்டுகள் வரும் சரிதானே ? சரிதான்
மூவரும் ஆளுக்கு 8 துண்டுகள் சாப்பிட்டுள்ளனர்
3 ரொட்டி வைத்திருந்தவன்
9 துண்டுகளில் 8 துண்டுகளை அவனே சாப்பிட்டுள்ளான் ஒரே ஒரு துண்டுதான் மீதமாகி இருக்கிறது சரிதானே சரிதான்
5 ரொட்டிகளை வைத்திருந்தவன் 15 துண்டுகளாக்கி அவன் 8 துண்டுகள் சாப்பிட்டு போக 7 மீதமாகி இருக்கிறது சரிதானே சரிதான்
மூன்றாமவர் 8 துண்டுகள் 8 திர்ஹம் கொடுத்துள்ளார்
அதாவது இருவரும் மீதப்படுத்திய 1 + 7 = 8 துண்டுகள் அவர் சாப்பிட்டுள்ளார் அதன் பிரகாரம்தான் திர்ஹம்களும் பங்கீடு செய்யப்பட்டது என அலி ரலி அவர்கள் தீர்ப்பு அளித்தார்கள்

அலி ரலியல்லாஹ் அறிவுக்கூர்மை -4

அலீ ரலி அவர்கள் இவ்வளவு அறிவுஞானத்திற்கு மூலக் காரணமாக இருந்தது திருக்குர்ஆன் முழுவதும் மனனம் செய்தவர்களாகவும் குர்ஆனின் ஆழ்ந்த கருத்துக்களையும் தெளிவாக புரியக்கூடியவர்களாகவும் அதே சமயம் குர்ஆனின் வசன நடை நுட்பங்களில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்களாகவும் திகழ்ந்தார்
திருக்குர்ஆன் வசனத்தை விளக்குவதற்கு அதே திருக்குர்ஆன் இன்னொரு வசனம் இன்னொரு வசனம் என்று அடிக்கிக் கொண்டே போவார்கள்
திருக்குர்ஆனுக்கு விளக்கம் திருக்குர்ஆனாகத் தானே இருக்க முடியும் என்பார்கள்
அலீ ரலி அவர்கள் கணிதம் மருத்துவம் ,மனோ தத்துவம் ,இயற்பியல் வானவியல் மற்றும் எல்லாவற்றிக்கும் மேலாக ஆன்மீக ஞானம் அதிகம் பெற்று திகழ்ந்தார்கள்
அலீ ரலி அவர்களை இரண்டாம் சுலைமான் என்று நபித்தோழர்கள் குறிப்பிடுவதுண்டு
நபி சுலைமான் அலை அவர்களுக்கு அல்லாஹ் எல்லாக் கலைகளையும் கற்றுக் கொடுத்து ஈடு இணையற்ற அறிஞராய் இருந்தார்கள் அவர்களுக்கு பின் அவர்களைப் போன்ற அறிஞர் என்றால் அது அலீ ரலி அவர்கள்தாம்

அலி ரலியல்லாஹ் அறிவுக்கூர்மை -3

அலீ ரலி அவர்களின் நினைவு தின சிந்தனை 3
யூதன் ஒருவன் இவர்களின் அறிவு திறனையும் கணித அறிவையும் சோதிக்க எண்ணினான்
""ஒன்று முதல் ஒன்பது வரையுள்ள எண்களினால் மீதமின்றி வகுபடக் கூடிய எண்ணை உம்மால் கூற முடியுமா ? "
மாதத்தின் நாட்கள் எண்ணிக்கை 30
வாரத்தின் நாட்கள் எண்ணிக்கை 7
மாதங்களின் எண்ணிக்கை 12
இம்மூன்றையும் பெருக்கினால் வரும் விடை எதுவோ அதுவே உன் கேள்விக்கான விடை என்றார்கள்
யூதன் பெருக்கி பார்த்தான் 2520 வந்தது அதை 1 முதல் 9 வரையுள்ள எண்களால் வகுத்துப் பார்தான் வியந்து போனான் இஸ்லாத்தை ஏற்றான்

அலி ரலியல்லாஹ் அறிவுக்கூர்மை -2

உமர் அலி அவர்களின் ஆட்சி காலத்தில் ஒரு கல்யாணம் ஆகாத பெண் வந்து உமர் ரலி அவர்களின் சமூகம் வந்து " எனக்கு திருமணம் ஆகவில்ல ஆனால் நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்னை எந்த ஆணும் தீண்டியதில்லை" என்றாள்
உடனே உமர் ரலி அவர்கள் தன் வாளை உருவி " செய்த தப்பை மறைக்க முடியாமல் எனக்கு எதுவும் தெரியாது என்று கூறி தப்பிக்கலாம் என்று எண்ணி வந்தாயோ " என்று கூறி அவளை கல் எறிந்து கொல்ல வேண்டும் என்று தீர்ப்பு அளிக்க எண்ணினார்கள்
அந்தப் பெண்ணும் " கலீபா அவர்களின் தீர்ப்பு நான் மனமுகந்து ஏற்கத் தயார் ஆனாலும் இறைவனின் மீது ஆணையாக நான் எந்த ஆணுடனும் தொடர்பு கொண்டதில்லை " என்றாள்
உடனே உமர் ரலி அவர்கள அலி ரலி அவர்களிடம் இது பற்றி விசாரித்தார்
அலி ரலி அவர்கள் அந்த பெண்ணிடம் , மூன்று மாதங்களுக்கு முன் நீ எங்கே இருந்தாய் ?
" அக்காள் வீட்டு திருமணம் பக்கத்திலுள்ள கிராமத்தில் நடைபெற்றது அங்கு போய் இருந்தேன் என்றாள்
"போகும் வழியில் நடந்து பற்றி விபரமாக சொல் "
இயற்கையின் உபாதையின் காரணமாக சிறுநீர் கழிக்க ஒதுக்குபுறமான ஒரு மரத்தடியில் சிறுநீர் கழித்து விட்டு அந்த மரப் பொந்தில் வைக்கப்பட்டிருந்த பஞ்சை எடுத்து சுத்தம் செய்தேன்
உடனே உமர் ரலி அவர்களிடம் " மூன்று மாதங்களுக்கு முன் அந்த குறிப்பிட்ட இடத்தில் என்ன நடந்து என்பது பற்றி அரசாங்க பதிவொட்டில் ஏதேனும் குறிப்பு இருக்கிறதா ? என்று கேட்டார்கள்
உடனே உமர் ரலி அவர்கள்
பதிவேட்டை பார்த்து போது சிறு யுத்தம் நடந்தது யுத்தம் முடிந்ததும் முன்று இரவுகள் குறிப்பிட்ட நான்கு அல்லது 5 பேர்கள் தங்கி இருப்பது போர் மரபு என்றார்கள் உமர் ரலி அவர்கள்
"தங்கியிருந்தவர்களை அழையுங்கள் நான் விசாரணை செய்ய வேண்டும் என்றார்கள் அலி ரலி அவர்கள்
5 இளம் சஹாபிகளிடம் விசாரணை செய்யும் போது அதில் ஒரு இளம் சஹாபி ஒருவர் "அமீருல் மூமின் அவரகளே . . . . . அன்றிரவு யுத்த கள பாதுகாப்பில் இருந்த போது என்னை அறியாமல் என் விந்து வெளிப்பட்டு விட்டது யுத்த களத்தில் சஹாபிகளின் இரத்தம் சிந்திய பூமி என் விந்து பட்டு கண்ணிய குறைவு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஒரு பஞ்சில் சுத்தம் செய்து ஒரு மரப் பொந்தில் நான்தான் வைத்தேன் விடிந்ததும் அதை எடுத்து யுத்த களத்தை தாண்டி அப்புறப்படுத்த இருந்தேன் மறுநாள் காலையில் அந்த மரப் பொந்தில் பஞ்சை தேடினேன் காணவில்லை" என்றார்கள்
அலி ரலி அந்த பெண்ணின் செய்கை எடுத்து சொன்னார்கள் நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் ஏனெனில் இது இறைவன் சேர்த்த மணப் பொருத்தம் என்றார்கள்
இருவருக்கும் திருமணம் இனிதே நடந்தது
உமர் ரலி அவர்கள் " இந்த அலீ ரலி அவர்கள் இல்லை என்றால் உமர் நாசமாக போயிருப்பான் என்றார்கள்

அலி ரலியல்லாஹ் அறிவுக்கூர்மை -2

உமர் அலி அவர்களின் ஆட்சி காலத்தில் ஒரு கல்யாணம் ஆகாத பெண் வந்து உமர் ரலி அவர்களின் சமூகம் வந்து " எனக்கு திருமணம் ஆகவில்ல ஆனால் நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்னை எந்த ஆணும் தீண்டியதில்லை" என்றாள்
உடனே உமர் ரலி அவர்கள் தன் வாளை உருவி " செய்த தப்பை மறைக்க முடியாமல் எனக்கு எதுவும் தெரியாது என்று கூறி தப்பிக்கலாம் என்று எண்ணி வந்தாயோ " என்று கூறி அவளை கல் எறிந்து கொல்ல வேண்டும் என்று தீர்ப்பு அளிக்க எண்ணினார்கள்
அந்தப் பெண்ணும் " கலீபா அவர்களின் தீர்ப்பு நான் மனமுகந்து ஏற்கத் தயார் ஆனாலும் இறைவனின் மீது ஆணையாக நான் எந்த ஆணுடனும் தொடர்பு கொண்டதில்லை " என்றாள்
உடனே உமர் ரலி அவர்கள அலி ரலி அவர்களிடம் இது பற்றி விசாரித்தார்
அலி ரலி அவர்கள் அந்த பெண்ணிடம் , மூன்று மாதங்களுக்கு முன் நீ எங்கே இருந்தாய் ?
" அக்காள் வீட்டு திருமணம் பக்கத்திலுள்ள கிராமத்தில் நடைபெற்றது அங்கு போய் இருந்தேன் என்றாள்
"போகும் வழியில் நடந்து பற்றி விபரமாக சொல் "
இயற்கையின் உபாதையின் காரணமாக சிறுநீர் கழிக்க ஒதுக்குபுறமான ஒரு மரத்தடியில் சிறுநீர் கழித்து விட்டு அந்த மரப் பொந்தில் வைக்கப்பட்டிருந்த பஞ்சை எடுத்து சுத்தம் செய்தேன்
உடனே உமர் ரலி அவர்களிடம் " மூன்று மாதங்களுக்கு முன் அந்த குறிப்பிட்ட இடத்தில் என்ன நடந்து என்பது பற்றி அரசாங்க பதிவொட்டில் ஏதேனும் குறிப்பு இருக்கிறதா ? என்று கேட்டார்கள்
உடனே உமர் ரலி அவர்கள்
பதிவேட்டை பார்த்து போது சிறு யுத்தம் நடந்தது யுத்தம் முடிந்ததும் முன்று இரவுகள் குறிப்பிட்ட நான்கு அல்லது 5 பேர்கள் தங்கி இருப்பது போர் மரபு என்றார்கள் உமர் ரலி அவர்கள்
"தங்கியிருந்தவர்களை அழையுங்கள் நான் விசாரணை செய்ய வேண்டும் என்றார்கள் அலி ரலி அவர்கள்
5 இளம் சஹாபிகளிடம் விசாரணை செய்யும் போது அதில் ஒரு இளம் சஹாபி ஒருவர் "அமீருல் மூமின் அவரகளே . . . . . அன்றிரவு யுத்த கள பாதுகாப்பில் இருந்த போது என்னை அறியாமல் என் விந்து வெளிப்பட்டு விட்டது யுத்த களத்தில் சஹாபிகளின் இரத்தம் சிந்திய பூமி என் விந்து பட்டு கண்ணிய குறைவு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஒரு பஞ்சில் சுத்தம் செய்து ஒரு மரப் பொந்தில் நான்தான் வைத்தேன் விடிந்ததும் அதை எடுத்து யுத்த களத்தை தாண்டி அப்புறப்படுத்த இருந்தேன் மறுநாள் காலையில் அந்த மரப் பொந்தில் பஞ்சை தேடினேன் காணவில்லை" என்றார்கள்
அலி ரலி அந்த பெண்ணின் செய்கை எடுத்து சொன்னார்கள் நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் ஏனெனில் இது இறைவன் சேர்த்த மணப் பொருத்தம் என்றார்கள்
இருவருக்கும் திருமணம் இனிதே நடந்தது
உமர் ரலி அவர்கள் " இந்த அலீ ரலி அவர்கள் இல்லை என்றால் உமர் நாசமாக போயிருப்பான் என்றார்கள்

அலி ரலியல்லாஹ் அறிவுக்கூர்மை -1

ஒரு முறை அலீ ரலி அவர்களிடம் சிலர் யானை கொண்டு வந்து எடை போட்டு தரும்படி கேட்டார்கள்
அலீ ரலி அவர்கள் அந்த யானையை நீரில் மிதந்து கொண்டிருக்கும் ஒரு படகில் ஏற்றச் சொன்னார்கள்
பிறகு அந்த படகு நீரில் சிறிது அமிழ்ந்திருக்கும் போது நீர் மட்டத்தை சுண்ணாம்பால் குறித்துக் கொள்ளச் சொன்னார்கள்
பிறகு யானையை இறக்கி விட்டு அந்த படகில் செங்கற்களை சுண்ணாம்பு கோடு குறித்த நீர் மட்டம் வரும் வரை அடுக்குச் சொன்னார்கள்
பின் செங்கற்களை எடைப் போட்டு யானையின் எடையை துள்ளியமாகச் சொன்னார்கள்
-
Rahmath Rajakumaran

சனி, 18 ஜூன், 2016

தமிழ் மொழியும் சோழர்களும்

 தமிழ் மொழிப் பற்று ஒரு சிறுவிழுக்காட்டினரைத் தவிர மற்றவர்களுக்கு இல்லை. தமிழ்மொழி பல நூற்றாண்டுகளாக தமிழர்களது சமூக தளத்தில் இருந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. தஞ்சைப் பெருவுடையார் கோயிலை எழுப்பிய இராஇராச சோழன் (அவனது இயற்பெயர் அருண்மொழித் தேவன்) ஒரு தமிழ்ப் பள்ளிக் கூடம் கட்டவில்லை. மாறாக நூற்றுக் கணக்கான வேத பாடசாலைகளை நிறுவி அவற்றுக்கு நிவந்தங்கள் பல வழங்கினான். ஆசிரியர்களுக்கு அரச கருவூலத்தில் இருந்து ஊதியம கொடுக்கப்பட்டது. இராசஇராசன் அவன் மகன் முதலாவது முதலாவது இராசேந்திரன் காலத்தில் ஆயிரக்கணக்கான பார்ப்பனர்களை கஷ்மீர், வங்காளம் போன்ற நாடுகளில் இருந்து கொண்டுவந்து இறையிலி நிலங்களில் குடியேற்றினான். அவன் காலத்தில் தமிழகம் சமற்கிருத மயமாக்கப்பட்டது. இராசராசனது அரச குரு வடநாட்டு ஈசான பண்டிதர். இராசேந்திரனது அரச குரு சர்வசிவ பண்டிதர். முதலாம் குலோத்துங்க சோழன் சமயம் சார்ந்த அரச நிருவாகத்தை தனது குரு சுவாமி தேவரிடம் ஒப்படைத்திருந்தான். பல்லவர், சோழர் ஆட்சியில் தமிழ் நீச பாசை எனவும் சமற்கிருதம் தேவ பாசை என்றும் கொண்டாடப்பட்டது. இதனால் தமிழ்மொழி ஓரங்கட்டப்பட்டது. சாமிநாத தேசிகர் என்று ஒருவர் 17ஆம் நூற்றாண்டில் திருநெல்வேலி ஈசான மடத்தில் இருந்தார். அதனால் ஈசான தேசிகர் என்றும் அவருக்குப் பெயருண்டு. இலக்கணக் கொத்து என்ற அவருடைய நூலுக்கு, அவரே ஒரு பாயிரமும் எழுதியிருக்கிறார். (இலக்கணக் கொத்தை ஆறுமுக நாவலர் ஓலைச்சுவடியில் இருந்து வெளிக் கொணர்ந்தார்.) அந்தப் பாயிரத்தில் தான் இந்த "ஐந்தெழுத்துப் பாடை" என்ற சொற்றொடர் வருகிறது. வடமொழியில் இல்லாத ழ. ற, ன, எ, ஒ ஆகிய ஐந்தெழுத்துக்கள் தமிழில் உள்ளனவாம்; மற்றவை எல்லாம் வடமொழியில் இருக்கின்றனவாம். எனவே தமிழ் மொழி 5 எழுத்துக்களால் ஆன மொழி என ஈசான தேசிகர் தமிழைப் பழித்தார். 

"அதாவது, "வடநூல் வழி கலவாது, தமிழைத் தனியே தர முடியாது - வேறு வாக்கில் சொன்னால், வடமொழி இன்றி தமிழ் தனித்தியங்காது. தமிழ்நூல் ஒன்றிலும் தனித் தமிழ் கிடையாது; ஐந்தெழுத்தால் ஒரு பாடை என்று சொல்லிக் கொள்ள அறிவுடையோர் நாணுவோர்; நானும் நாணுகிறேன்; வடமொழி, தமிழ்மொழி ஆகிய இரண்டிற்கும் ஒரே இலக்கணம்" என்று சொல்லுகிறார. தமிழர்களது கோயில்களில் தமிழ் இல்லை. தேவார திருவாசகங்கள் உள் வீதியில் இருந்து பூசைகள் எல்லாம் முடிந்த பின்னர் பாடப்படுகிறது. தமிழ் தமிழர்களது திருமணத்தில் இல்லை. யாருக்கும் புரியாத சமற்கிருத மொழியில்செய்யப்படும் திருமணத்தை தமிழர்கள் விரும்பி ஏற்றுக் கொள்கிறார்கள். தமிழ் தமிழர்களது பெயர்களில் இல்லை. இன்றைய பிள்ளைகளுக்கு பெற்றோர் பொருள் இல்லாத வாயில் எளிதாக நுழையாத பெயர்களைச் சூட்டுகிறார்கள். ஆசா, கோசா, யுரேனியா, லக்ஷன், ருக்ஷன், அலக்கா, நிரோஷன் (வெட்கம் இல்லாதவன்) நிரோஷினி (வெட்கம் இல்லாதவள்) அஷ்யா, மகிஷா (எருமைமாடு) யதூஷா, யூவிஸ் போன்ற பெயர்கள் அருவருக்கத்தக்க பெயர்களாகும்.


- வேலுப்பிள்ளை தங்கவேலு (இலங்கை)

வியாழன், 16 ஜூன், 2016

மழையில் என் வீடு

மழையில் தனியாக வீடு திரும்பிகொண்டிருக்கிறேன்
சட்டெனெ குழந்தைகளை
நினைத்து விடுகிறேன்.
அது ஆழமான திடுக்கிடலை
உருவாக்குகிறது
கட்டுப்படுத்த முடியாத இருமலில்
நடுங்குகிறேன்.
காரோட்டி கருணையுடன்
தண்ணீர் தருகிறான்
மழையில் என் வீடு
எங்கோ வெகு தொலைவில்
இருக்கிறது.
அல்லது
அப்படி ஒன்று இருப்பதாக
நம்ப விரும்புகிறேன்.
- மனுஷ்ய புத்திரன்

நாற்பது வயதின் நிழல்கள்- 10

பேசிக்கொள்ள அதிக நேரம் இல்லாத
ஒரு சந்திப்பின்
நழுவும் கணத்தில்
என் பழைய சிநேகியைச் சந்தித்தேன்
தினமும் தனக்குத்தானே நூறுமுறை
சொல்லிப் பார்த்துக்கொண்டிருந்த வாக்கியத்தை
அவ்வளவு அவசரமாக கூறினாள்.
“ இருபத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு
வீட்டை விட்டு வெளியேறிய
என் திருமண நாளில்
உன்னைத்தான் தேடி வந்தேன்
எனக்கு வேறு யாரையும் தெரியாது
எனக்கு அன்றே பஸ்ஸே இல்லை
அன்று ராஜீவ் காந்தியை கொன்றுவிட்டார்கள்
பஸ் எதுவும் ஓடவில்லை
என் வீட்டிற்கு திரும்பிப்போனேன்
அன்று ராஜீவ் காந்தி இறக்காமல் இறந்திருந்தால்
என் விதியை நோக்கி
நான் திரும்பிப் போயிருக்க மாட்டேன்”
அவளது குரலில் ஒரு நிந்தனை இருந்தது
ஒரு நீதி கேட்டல் இருந்தது
ஒரு நிராசை இருந்தது
ஒரு வருத்தம் இருந்தது
நாற்பது வயதுகள் சங்கடமானவை
நமது பாதைகள் திரும்பிய இடம் குறித்த
எண்ணற்ற பிரமைகளை ஏற்படுத்துபவை
நான் அவளிடம் கூறவிரும்பினேன்
’’ நீ அன்று வீட்டிற்கு திரும்பிப் போயிராவிட்டால்
இருபத்தி இரண்டு ஆண்டுகளுக்கு பிறகோ
அதற்கு சற்று முன்னதாகவோ
நிச்சயம் உன் வீட்டிற்குத்தான்
திரும்ப வேண்டியிருந்திருக்கும்”
- மனுஷ்ய புத்திரன்
( புலரியின் முத்தங்கள்)

புதன், 1 ஜூன், 2016

நீங்க வெற்றி பெற

ஆழ்மனதைப் பற்றி ஓர் ஆய்வு. நமது ஆழ்மனம் நாம் விரும்பும் எதையும் நமக்கு கொடுக்கவல்லது! மனத்தில் இரண்டு நிலைகள் உண்டு.
1.மேல் மனம் (conscious Mind) அல்லது வெளிமனம்
2. ஆழ்மனம் ( Sub Conscious Mind)
மனமென்பது ஆர்டிக் கடலில் மிதக்கும்பனிப் பாறைகளைப் போன்றது. கடலுக்கு மேல் கண்ணுக்குத் தெரிகின்ற 20% பனிப்பாறையைப் போன்றது மேல் மனம். கடலில் மூழ்கியிருக்கின்ற கண்ணுக்குத்த தெரியாத 80% பனிப்பாறையைப் போன்றது ஆழ்மனம்.
மேல்மனத்தை விடப் பல மடங்கு பெரியதும், ஆற்றல் மிக்கதும் ஆழ்மனம் ஆகும்.
மேல்மனம் என்பது விழிப்பு, உணர்வு நிலை எனப்படும். நினைவு நிலைக்கு இதுவே காரணமாகிறது. ஆனால் ஆழ்மனம் துயில் நிலைக்கும், துயிலுக்கும் விழிப்புக்கும் இடைப்பட்ட மெய்மறதி நிலைக்கும் காரணமானது!
நாம் படிப்பதும், பேசுதலும், செயல்படுவதும் மேல் மனத்தின் மூலமாகத்தான், ஆனால் என்ன படிக்கிறோம், ஏன் – எப்படிச் செயல்படுகிறோம் என்பதற்கெல்லாம், ஏன் – எப்படிச் செயல்படுகிறோம் என்பதற்கெல்லாம் காரணம் அடிமனம் தான் (ஆழ்மனம்)
எனவே நமது குறிக்கோள்களை நமது அடிமனம் ஏற்றுக்கொள்ளுமாறு எண்ணங்களைச் செலுத்த வேண்டும். நாம் செய்ய வேண்டியது இதுதான்.
1. நமது ஆழ்மனத்தோடு தொடர்பு கொள்ள வேண்டும்.
2. உங்கள் வாழ்க்கையின் குறிக்கோள்கள் என்ன என்பதை ஆழ்மனதிற்கு தெரிவிக்க வேண்டும்.
உங்கள் குறிக்கோள்களைத் தெளிவாகத் தெரிந்து கொண்ட ஆழ்மனம், அந்த குறிக்கோள்களை விரைவில் அடைய வழிமுறைகளைக் கண்டுபிடித்து, உடனே உங்களைச் செயல்படுத்த தூண்டும்.
நமது குறிக்கோள்களை ஆழ்மனத்திற்கு எப்படி கொண்டு செல்வது:
1. நமது எண்ணங்கள் எல்லாம் நமது குறிக்கோள்களைப் பற்றியதாகவே இருக்க வேண்டும்.
2. ஒரு நாளைக்கு ஒரு குறிப்பிட்ட வேளையில் (காலையில் 15 நிமிடங்கள்) குறிக்கோளை அடைவதற்கான மனப்பயிற்சியை செய்துவர வேண்டும்.
3. நமக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம், கண்ட குப்பை எண்ணங்களை எண்ணாமல், நமது குறிக்கோளைப் பற்றிய எண்ணங்களாகவே நினைக்க வேண்டும்.
உதாரணமாக வீடு வேண்டும் என்றால் அந்த வீட்டில் (கற்பனை வீட்டில்) எத்தனை அறைகள் இருக்க வேண்டும். அதனுடைய அளவுகள் எப்படி இருக்க வேண்டும், எந்த அளவில் கதவுகள், வர்ணங்கள் என்ன என்பதை பற்றிய கற்பனைகளையே உங்களது எண்ணம் முழுவதும் நிரம்பியிருக்க வேண்டும்.
நமது முன்னால் குடியரசுத் தலைவர் திரு ஆ.பெ.ஜெ. அப்துல்கலாம் கூட இதன் அடிப்படையில் தான் ‘கனவு காணுங்கள்’ என்று சொன்னார்.
4. உங்கள் மனதில் குறிக்கோள் விதையை வலுவாக ஊன்றுங்கள்… அதை உங்களது தீவிர எண்ணங்களால் உரமேற்றுங்கள்.. நிச்சயம் உங்களது குறிக்கோளை அடைந்துவிடுவீர்கள். விதைத்ததையே அறுவடை செய்து விடுவீர்கள் என்பது நிச்சயம்.
5. உங்களது கற்பனையில் உங்களது குறிக்கோளை ஒரு படமாக மாற்றி அதை உங்கள் மனத்திரையில் ஓட்டிப் பார்க்க வேண்டும். என்ன நினைக்கிறீர்களோ அதை அப்படியே செய்து முடிப்பதாக நினக்க வேண்டும். உதாரணத்திற்கு ஒரு புதிய வீடு கட்ட வேண்டும் எனில், கற்பனையில் வீடுகட்டி அதற்கு கிரகப்பிரவேசமும் செய்து முடித்ததாக எண்ண வேண்டும்.. உங்கள் கற்பனை எண்ணங்கள் மேலோங்கி , எண்ணங்கள் வலுப்பெற்று அது உண்மையாகவே நடக்க ஆரம்பித்துவிடும்.
6. குறிக்கோள்களை அடைவதற்கு, தற்காலத்தில் அனுபவிக்கக் கூடிய சிறுசிறு சுகங்களை தியாகம் செய்யவும் தயங்கக் கூடாது.
7. உங்கள் ஆழ்மனத்தை, பிடிவாதத்துடன் நம்ப வைத்துவிடுங்கள். ஆழ்மனம் வெகு சீக்கிரம் உங்கள் குறிக்கோளில் கொண்டு சேர்த்துவிடும்…
8. உங்களது குறிக்கோளை தெளிவாக ஒரு அட்டையில் எழுதி / உங்கள் கண்களில் அடிக்கடி படும்படியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதைப் பார்க்கும் போதெல்லாம், எண்ணங்கள் உங்கள் குறிக்கோளின் மீது குவியட்டும்.
எனவே நாம் நமது குறிக்கோளைத் தெளிவாக ஒரு காலவரையில் முடித்தே தீருவேன் என்று முதலில் தீர்மானித்துக் கொள்ளுங்கள். பின்பு ஆழ்மனத்துடன் தொடர்பு கொள்ளுங்கள். வெற்றி நிச்சயம்!

ஒரு தந்தை தன் மகனுக்கு எழுதிய அழகிய / அருமையான கடிதம்

இக்கடிதம் புகழ் பெற்ற ஹாங்காங் தொலைக் காட்சி ஒலிபரப்பாளர் / குழந்தை உளவியல் நிபுணரால் அவருடைய மகனுக்கு எழுதப்பட்டது. இக் கடிதத்தில் உள்ள வார்த்தைகள் / கருத்துக்கள் உண்மையிலேயே நம் அனைவருக்கும் பயனளிப்பதாகும். இளமையானவர்கள், முதியவர்கள், குழந்தைகள் அல்லது பெற்றோர்கள் அனைவருக்கும் இது பயனளிக்கும். அனைத்து பெற்றோர்களும் தங்களுடைய குழந்தைகளுக்கு இதனை படிப்பினையாக கற்பிக்கலாம்.
அன்புள்ள மகனுக்கு,
மூன்று காரணங்களுக்காக நான் இதை உனக்கு எழுதுகிறேன்:
1. வாழ்க்கை, அதிர்ஷ்டம்/நல்ல வாய்ப்பு, இடையூறுகள் ஆகிய அனைத்தும் முன் மதிப்பிட்டு அறிய(கணிக்க) முடியாதவை. தாம் எவ்வளவு காலம் வாழ்வோம் என்று எவரும் அறிவதில்லை. சில கருத்துக்களை / அறிவுரைகளை சரியான நேரத்தில்(முன் கூட்டியே) கூறிவிடுவது நல்லது.
2. நான் உன்னுடைய தந்தை. நான் உனக்கு இதனை கூறாவிடில் உனக்கு இதனை யாரும் கூறப் போவதில்லை.
3. நான் உனக்கு எழுதுவது யாதெனின், எனக்கேற்பட்ட சிறு அளவிலான சொந்த அனுபவங்களேயாகும். இது ஒரு வேளை தேவையற்ற அதிகப்படியான இதய வலிகளிலிருந்து உன்னைக் காக்க இயலும். .
கீழ்க் கண்டவற்றை நீ உன் வாழ்க்கை முழுவதும் கவனத்தில் கொள்ள வேண்டும்:
1. உன்னிடத்தில் நல்லவர்களாக நடந்து கொள்ளாதவரிடம் நீ உன் வன்மத்தை / பொல்லாங்கை காட்டாதே. உன் அம்மாவையும் என்னையும் தவிர உன்னை நல்லவிதமாக நடத்தி செல்லும் பொறுப்பு எவருக்குமில்லை. உனக்கு யாராவது நல்லவர்களாக இருப்பின் அது உனக்கு கிடைத்த புதையல் / பொக்கிஷம் போன்றதாகும். அவர்களுக்கு நீ நன்றி உடையவனாக இரு. மேலும் நீ அவர்களிடத்தில் கவனமாக நடந்து கொள்ளுதல் அவசியம். ஏன் எனில், ஒவ்வொருவரின் அணுகுமுறையும் ஏதேனும் ஒரு நோக்கத்துடனேயே இருக்கிறது. உன்னிடத்தில் ஒரு மனிதன் நல்லவனாக நடந்து கொள்கிறான் என்றால், உன்னை அவன் உண்மையாக நேசிக்கிறான் என்று அர்த்தம் இல்லை. நீ விழிப்புடன் இருக்க வேண்டும். அவனை நீ ஆய்ந்தறியாமல், மதிப்பிடாமல் உண்மையான் நண்பன் என்று கொள்ளாதே.
2. இந்த உலகில் இன்றியமையாதது என்று ஒன்று இல்லை. உனக்கு உடமையானது என்று எதுவும் இந்த உலகில் இல்லை. இந்த கூற்றினை நீ புரிந்து கொண்டாய் என்றால், உன்னை சுற்றி மனிதர்கள் சூழ்ந்திருந்தாலும், எவரும் தேவை இல்லை என்றாலும் அல்லது நீ அதிகமாக விரும்பிய ஒன்றையோ/ ஒருவரையோ நீ இழக்க நேர்ந்தாலும் உன் வாழ்க்கையை நீ எளிதில் வழி நடத்திச் செல்ல இயலும்.
3. வாழ்கை என்பது மிகவும் குறுகிய காலத்திற்கு உட்பட்டது. இன்றைய வாழ்க்கையை நீ வீணடித்தாய் என்றால் உன் வாழ்க்கை உன்னைவிட்டு சென்றுவிட்டதை நாளை நீ கண்டுகொள்வாய். வாழ்க்கையின் மதிப்பினை நீ எவ்வளவு விரைவில் உணர்ந்து கொள்கிறாயோ ஓரளவாகிலும் நீ வாழ்வினை அனுபவிப்பாய்.
4. அன்புதான் என்றாலும் அது உறுதியற்ற ஒரு உணர்வே ஆகும். காலத்தை பொருத்தும் ஒருவரின் மனநிலையை பொருத்தும் இந்த உணர்வு மங்கி / குறைந்து விடுகிறது. உன்னை மிகவும் நேசித்தவர் உன்னை விட்டு விலகிச் செல்லும் பொழுது நீ அமைதியாக இரு. காலம் உன் வலிகளையும் கவலைகளையும் துடைத்தழித்துக் கொண்டு போய்விடும். இனிமையான அன்பையும், அழகையும் நீ மிகையாக எண்ணாதே. அன்பில்லாமல் போகின்ற தருணத்தில் ஏற்படும் கவலைகளையும் நீ பெரிதாகக் கொள்ளாதே.
5. வெற்றி பெற்ற நிறைய மனிதர்கள் நல்ல கல்வியறிவு பெற்றவர்கள் இல்லை. நீ சிரமப்பட்டு கல்வி பயிலாவிடினும் வெற்றி பெற இயலும் என்பது இதன் பொருள் இல்லை. என்னென்ன அறிவுத் திறனைப் நீ பெற்றிருக்கின்றாயோ அது வாழ்க்கையில் உனக்கான ஆயுதங்களாகும். ஒரு சிலர் வாழ்க்கையில் உயர்கின்ற தருணத்தில் இன்னல்களை அனுபவிக்கின்றனர். ஒரு சிலர் துவக்கத்திலேயே இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது.
6. என்னுடைய வயதான காலத்தில், உன்னுடைய வருமானத்தை சார்ந்து வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்கில்லை. அதே போன்று உன்னுடைய வாழ்க்கை முழுதும் நான் உனக்கு நிதி ஆதாரங்களை அளிக்க இயலாது. உன்னை வளர்த்து ஆளாக்கும் வரையில் தான் என்னுடைய ஆதரவும் பொறுப்பும்; நீ வளர்ந்து விட்ட பிறகு இந்த பொறுப்பு முடிவடைந்து விடுகிறது. அதன் பிறகு நீ தான் முடிவு செய்ய வேண்டும். நீ பயணிக்கப் போவது பொது போக்குவரத்திலா அல்லது உன் சொந்த வாகனத்திலா / இரதத்திலா; வசதி படைத்தவனாக அல்லது ஏழையாக.
7. நீ கூறும் வார்த்தைகளுக்கு நீ மதிப்பளிக்க வேண்டும். ஆனால் பிறர் அவ்வாறு இருத்தல் வேண்டும் என்று நீ எதிர்பார்க்கக் கூடாது. நீ அனைவருக்கும் நல்லவனாக இரு. ஆனால் உனக்கு அனைவரும் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பாராதே. நீ இதனை புரிந்து கொள்ளாமல் போனால் உன் வாழ்க்கை தேவையற்ற பிரச்சினைகளில் உழல வேண்டி இருக்கும்.
8. நான் பல வருடங்களாக பரிசு சீட்டுகளை வாங்கி இருக்கிறேன். ஆனால் எந்த பரிசும் எனக்கு அடித்ததில்லை / கிடைக்கவில்லை. நீ வசதி படைத்தவனாக வேண்டுமென்றால் நீ கடினமாக உழைக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது! இலவசமாக உணவு கிடைக்காது!
9. நான் உன்னுடன் எவ்வளவு அதிகப்படியான நேரம் இருக்கிறேன் என்பது ஒரு பொருட்டல்ல. நாம் ஒன்றாக இணைந்திருக்கும் அந்த நேரத்தை பெரும் பாக்கியமாகக் (பொக்கிஷம்) கருதுவோம். நமக்கு தெரியாது நாம் மறுபடியும் நம்முடைய அடுத்த பிறவியில் சந்திப்போம் என்று.
அன்புடன் ,
உன் அப்பா. 

வாரன் பஃப்பட் பற்றி சில சுவாராசியங்கள்

உலகின் இரண்டாவது பெரிய பணக்கார மனிதரான "வாரன் பப்பட்" (Warren Buffet ) பற்றி சில சுவாராசியமான தகவல்கள் 



1. அவர் முதல் பங்கு (share) வாங்கியது அவரின் 11 வயதில்.... அதுவே தான் தாமதமாக வாங்கியதாக பிற்காலத்தில் அவர் தெரிவித்தார்....

2. 14 வயதிலேயே தனது சுய சம்பாத்தியத்தில் சின்ன பண்ணை வீடு ஒன்றினை அவர் வாங்கினார்.....அப்பணம் அவர் பேப்பர் டெலிவரி செய்ததில் சம்பாதித்து, சேமித்த பணம் 

3. இன்று வரை 3 படுக்கை அறை கொண்ட சாதாரண வீட்டிலேயே அவர் குடியிருந்து வருகின்றார்..அவ்வீட்டிற்கு சுற்றுச் சுவரோ அல்லது வேலியோ இல்லை

4. அவராகவே அவர் காரை எங்கும் ஓட்டிச் செல்வார்.... டிரைவர் மற்றும் பாதுகாப்புக்கென ஆட்கள் யாரும் கிடையாது

5. அவர் இதுவரை எங்கும் தனி விமானத்தில் பயணித்தது கிடையாது. .. உலகின் பெயர்பெற்ற, பெரிய‌ விமான கம்பெனிக்கு சொந்தக்காரர் அவர்....

6. அவரின் சொந்த கம்பெனிகள் மொத்தம் 63. வருடம் ஒரு முறை மட்டுமே கம்பெனியின் தலைமை பொறுப்பாளர்க்கு ( CEO) கடிதம் எழுதுவார்.... இடைப்பட்ட எந்தவொரு மீட்டிங் மற்றும் சந்திப்புகளும் இருக்காது.... அந்த கடிதத்தில் கம்பெனியின் அடுத்த இலக்கை குறிப்பிட்டு இருப்பார்.....

7. கம்பெனி பொறுப்பாளர்க்கு இரண்டு விதிகளை மட்டும் குறிப்பிடுவார் ..... அது

(அ) பங்குதாரர்களின் பணத்தை நஷ்டமடைய செய்யக் கூடாது

(ஆ) முதலாவது விதியை மறக்க கூடாது

8.அவரைச் சுற்றி எப்போதும் ஒரு உயர்தர சமூகத்தினரின் கூட்டம் இருக்காது....அவரின் ஓய்வு நேரத்தில் அவர்க்குத் தேவையான பாப் கார்னை வீட்டில அவரே தயார் செய்து சாப்பிடுவார், டிவி பார்ப்பார்....

9. அவரிடம் எந்தவொரு செல் போனோ அல்லது மடிக் கண்ணியோ வைத்திருக்க மாட்டார்....

10. உலகின் முதல் பணக்காரரரான பில் கேட்ஸ் சில வருடங்களுக்கு முன் இவரை சந்திக்க‌ , இருவருக்கும் பொதுவான எதுவும் இல்லையென்று எண்ணி முதலி வெறும் 30 நிமிடங்கள் மட்டுமே வாரன் பப்பட் டை சந்திக்க 
நேரம் ஒதுக்கியிருந்தார்... ஆனால் சந்தித்த பொழுது, அந்த சந்திப்பு பத்து மணி நேரங்களுக்கும் மேலாக நடைப்பெற்றது 

எளிமையின் மனிதரான வாரன் பப்பட் நமக்கு சில அறிவுரைகளைச் சொல்கின்றார்....... அவை : 

1. பணம் மனிதனை படைக்கவில்லை ஆனால் பணத்தை படைப்பவனை மதிக்கின்றது 

2. உங்கள் வாழ்க்கையினை எளிமையாகவும், எளிதாகவும் வாழுங்கள் 

3. அடுத்தவர்கள் சொல்வதை செய்யாதீர்கள். மற்றவர்கள் சொல்வதை கேளுங்கள் ஆனால் உங்களுக்கு சரியெனப் படுவதை நீங்கள் செய்யுங்கள்

4. புகழ்பெற்ற கம்பெனியினை (brand names) பின்பற்றாதீர். உங்களுக்கு வசதியானதை வாங்கி பயன்படுத்துங்கள்......

5. பணத்தை தேவையற்ற காரியங்களை வாங்கி வீணாக்காதீர்

6. உனது வாழ்க்கை....நீயே விதிகளை தீர்மாணி, அடுத்தவரை உன் வாழ்க்கையினை தீர்மானிக்க அனுமதிக்காதே.......