சனி, 26 நவம்பர், 2011

வேறு மழை

மிஞ்சிப்போனா என்ன சொல்லிற முடியும் உன்னால
இந்த மழையைப் பத்தி

ஓதமேறுன கொட்டாய்ல
கோணில மொடங்கியும் குளுர்ல நடுங்கியிருக்கியா

உங்கூட்டுப் பொண்டுக நமுத்த சுள்ளியோட சேந்தெரிஞ்சு
கஞ்சிக் காய்ச்சியிருக்காங்களா கண்ணுத்தண்ணி உப்பு கரிக்க

ஈரஞ்சேராம எளப்பு நோவெடுத்து செத்த சொந்தத்த எடுக்க வக்கத்து
பொணத்தோட ராப்பகலா பொழங்கித் தவிச்சதுண்டா

ஒழவுமாடொன்னு கோமாரியில நட்டுக்க
ஒத்தமாட்டைக் கட்டிக்கிட்டு உயிர்ப்பதற அழுதிருக்கா உங்குடும்பம்

எதுக்கும் ஏலாம
உஞ்செல்லப்புள்ளையோட சிறுவாட்டக் களவாண்டு
சீவனம் கழிஞ்சிருக்கா

தங்கறதுக்கு வூடும் திங்கறதுக்கு சோறுமிருந்துட்டா
சவுரியத்துக்கு எழுதுவியாடா மயிரானே
ஒண்ணு தெரிஞ்சுக்கோ
மழை ஜன்னலுக்கு வெளியதான்
எப்பவும் பெய்யுது உனக்கு
எங்களுக்கு எங்க பொழப்பு மேலயே.

- ஆதவன் தீட்சண்யா

பேஸ்புக்கில் பார்த்து என் உதடுகளை மேலுயர்த்தி ஆச்சிரியத்தின் உச்சிக்கு கொண்டு சென்ற கவிதை - கவின் மலர் என்பவர் பகிர்ந்திருந்தார் - நன்றிகளோடு உங்களுக்கு இந்த கவிதைப் படையல்

வெள்ளி, 11 நவம்பர், 2011

குர்ஆன் - கேள்வி - பதில்கள்

Q1) குர்ஆன் என்பதற்கு என்ன பொருள்?

A) ஓதுதல்! (that which is recited; or that which is dictated in memory form)

Q2) குர்ஆன் யாரால் அருளப்பட்டது?

A) அகிலங்கள் அனைத்தையும் படைத்த அல்லாஹ்வால் அருளப்பட்டது

Q3) குர்ஆன் எந்த இரவில் அருளப்பட்டது?

A) லைலத்துல் கத்ர் இரவில்

Q4) குர்ஆன் யார் மூலமாக அருளப்பட்டது

A) கண்ணியமிக்க வானவர் ஜிப்ரயீல் (அலை) அவர்களின் மூலமாக.

Q5) குர்ஆன் எந்த தூதருக்கு அருளப்பட்டது?

A) இறுதி தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு.

Q6) முதன் முதலாக குர்ஆன் எந்த இடத்தில் வைத்து அருளப்பட்டது?

A) மக்காவிலுள்ள ஹிரா குகையில் அருளப்பட்டது

Q7) எந்த கலிபாவின் ஆட்சிக் காலத்தில் குர்ஆன் எழுத்து வடிவில் தொகுக்கப்பட்டது?

A) அபூபக்கர் (ரலி) அவர்களின்ஆட்சிக்காலத்தில்

Q8) எந்த கலிபாவின் ஆட்சிக் காலத்தில் குர்ஆன் முதன் முதலாக பிரதியெடுக்கப்பட்டது?

A) உதுமான் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில்.

Q9) கலிபா உதுமான் அவர்களின் காலத்தில் பிரதியெடுக்கப்பட்ட குர்ஆன் தற்போது எங்கிருக்கிறது?

A) ஒன்று தாஸ்கண்டிலும், மற்றொன்று துர்கியின் இஸ்தான்புல் அருங்காட்சியகத்தில் உள்ளது.

Q10) அல்லாஹ்விடத்தில் உயர்ந்த அந்தஸ்து உடையவர்கள் யார் என குர்ஆன் கூறுகிறது?

A) தக்வா (இறையச்சம்) உடையவர்கள்

Q11) குர்ஆனில் மிகப்பெரிய அத்தியாயம் எது?

A) சூரத்துல் பகரா (இரண்டாவது அத்தியாயம்)

Q13) குர்ஆனில் மிகச் சிறிய அத்தியாயம் எது?

A) சூரத்துல் கவ்ஸர் (108 வது அத்தியாயம்)

Q14) குர்ஆனை பாதுகாப்பது யார் பொறுப்பில் உள்ளது?

A) அதை இறக்கிய இறைவனே அதன் பாதுகாவலன் ஆவான்.

Q15) நபி (ஸல்) அவர்களின் எத்தனையாவது வயதில் முதன் முதலாக குர்ஆன் அருளப்பட்டது?

A) 40 ஆவது வயதில்

Q16) குர்ஆனுக்கு இருக்கும் மற்ற பெயர்களில் சிலவற்றைக் கூறுக:

A) அல்-ஃபுர்கான், அல்-கிதாப், அத்-திக்ர், அல்-நூர், அல்-ஹூதா

Q17) இறைவன் நம்மோடு இருக்கிறான் என கூறிய நபி யார்?

A) முஹம்மது (ஸல்) அத் தவ்பா(9:40)

Q18) ஜின்களுக்கு மறைவான விஷயங்கள் தெரியுமா?

A) ஜின்களுக்கு மறைவான விஷயங்கள் தெரியாது. அஸ் ஸபா(34:14) மற்றும் அல் ஜின்னு(72:10)

Q19) குர்ஆனில் மூன்றில் ஒரு பகுதி என சிறப்பித்துக் கூறப்பட்ட சூரா எது?

A) சூரத்துல் இக்லாஸ் (112 வது அத்தியாயம்)

Q20) குர்ஆனில் எத்தனை அத்தியாயங்கள் இருக்கிறது?

A) 114 அத்தியாயங்கள்

Q21) நபி முஸா (அலை) அவர்களோடு இறைவன் பேசிய பள்ளத்தாக்கின் பெயர் என்ன?

A) துவா பள்ளத்தாக்கு. அந் நாஜிஆத்(79:16), தாஹா(20:12). இது தூர் மலையின் அடிவாரத்தில் உள்ளது. (19:52)

Q22) அல்-குர்ஆனை மனனம் செய்த முதல் மனிதர் யார்?

A) முஹம்மது நபி (ஸல்) அவர்கள்

Q23) நபி (ஸல்) அவர்களின் பெயர்கள் குர்ஆனில் எத்தனை முறை இடம் பெற்றுள்ளது?

A) முஹம்மது (ஸல்) என நான்கு முறையும், அஹ்மது என ஒரு முறையும் இடம் பெற்றுள்ளது.

Q24) இறைவனை வணங்குவதற்காக கட்டப்பட்ட முதல் இறையில்லம் எது என குர்ஆன் கூறுகிறது?

A) கஃபா

Q25) எதிர்கால சந்ததியினருக்கு அத்தாட்சியாக விட்டு வைக்கப்பட்டுள்ளவற்றில் இரண்டைக் கூறுக:

A) நூஹ் (அலை) அவர்களின் கப்பல் (54:15), மற்றும் பிர்அவ்னின் உடல் (10:92)

Q26) நூஹ் நபியின் கப்பல் எங்கு ஒதுங்கியது என குர்ஆன் கூறுகிறது?

A) ஜூதி மலையில் (11:44 )

Q27) குர்ஆனில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஒரே ஒரு ஸஹாபியின் பெயர் என்ன?

A) ஜைத் பின் ஹாரித் (ரலி) அஹ்ஜாப் (33:37)

Q28) ஷைத்தான் எந்த இனத்தைச் சேர்ந்தவன் என குர்ஆன் குறிப்பிடுகிறது?

A) ஜின் இனம்

Q29) இஸ்ராயிலின் வழித்தோன்றல்களுக்கு கடமையாக்கப்பட்ட வணக்கங்கள் என குர்ஆன் குறிப்பிடுபவை எவைகளை?

A) தொழுகை மற்றும் ஜக்காத்

Q30) ‘பிஸ்மில்லாஹ்’ கூறி ஆரம்பம் செய்யப்படாத சூரா எது?

A) சூரத்துத் தவ்பா

Q31) ‘பிஸ்மில்லாஹ்’ இரண்டு முறை வரும் சூரா எது?

A) சூரத்துந் நம்ல் -எறும்புகள் (27:30)

Q32) குர்ஆன் முழுவதுவதுமாக இறக்கியருளப்பட எத்தனை வருடங்கள் ஆனது?

A) 23 வருடங்கள்

Q33) தொழுகையில் அவசியம் ஓதப்பட வேண்டிய சூரா எது?

A) அல்-பாத்திஹா

Q34) துஆ (பிரார்த்தனை) என குறிப்பிடப்படும் சூரா எது?

A) அல்-பாத்திஹா

Q35) திருமறையின் தோற்றுவாய் என குறிப்பிடப்படும் சூரா எது?

A) அல்-பாத்திஹா

Q36) குர்ஆனில் பெயர் குறிப்பிடப்பட்ட ஒரே ஒரு பெண்மணி யார்?

A) மர்யம் (அலை)

Q37) நபிமார்களின் பெயரால் எத்தனை சூராக்கள் இருக்கின்றன?

A) 6 சூராக்கள் (யூனுஸ், ஹூத், யூசுப், இப்ராஹீம், நூஹ், முஹம்மது (ஸல்))

Q38) ஆயத்துல் குர்ஸி குர்ஆனில் எந்த பாகத்தில், சூராவில் உள்ளது?

A) மூன்றாவாது பாகத்தின் ஆரம்பத்தில், இரண்டாவது அத்தியாயத்தின் 255 ஆவது வசனம்.

Q39) அல்-குர்ஆனில் இறைவனின் திருநாமங்களாக எத்தனை பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது?

A) 99 பெயர்கள்

Q40) மதினா வேறெந்த பெயரில் குர்ஆனில் குறிப்பிடப்படுகிறது?

A) யத்ரிப் (33:13)

Q41) பனி இஸ்ராயில் என யாரை குர்ஆன் குறிப்பிடுகிறது?

A) யாகூப் (அலை) அவர்களின் சந்ததியினர்களை

Q42) ஈமான் கொணடவர்களுக்கு உதாரணமாக அல்லாஹ் தன் திருமறையில் கூறும் இரு பெணமணிகள் யாவர்?

A) பிர்அவ்னின் மனைவி (66:11), இம்ரானின் புதல்வி மர்யம் (அலை) (66:12)

Q43) காபிர்களுக்கு உதாரணமாக இறைவன் தன் திருமறையில் கூறும் இரு பெண்கள் யாவர்?

A) நூஹ் (அலை) அவாகளின் மனைவி (66:10), லூத் (அலை) அவர்களின் மனைவி (66:10)

அல்லாஹ் நூஹ் நபியின் மனைவியை காபிர் என்று கூறியிருக்க, நம்மவர்கள் திருமண துஆக்களில் நூஹ் நபியின் மனைவி போல் வாழ்க என்று வாழ்த்துகிறார்கள். நூஹ் நபிக்கு பாரிஸா என்று நல்ல மனைவியும் இருந்ததாக இதற்கு ஒரு கடடுக் கதையையும் கூறுகிறார்கள். இது குர்ஆனிலோ, ஹதீஸிலோ ஆதாரமில்லாத வெறும் யூதக் கடடுக்கதைகளாகும்.

Q44) உள்ளங்கள் எவ்வாறு அமைதி பெறுகிறது என அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்?

A) அல்லாஹ்வை நினைவு கூறுவதன் முலம் உள்ளங்கள் அமைதி பெறுகின்றன. (13:28)

Q45) நபி ஈஸா (அலை) அவாகள் செய்ததாக இறைவன் குறிப்பிடும் அற்புதங்கள் யாவை?

A) 1) குழந்தையில் பேசியது, 2) களிமண்ணினால் பறவையை செய்து, இறைவனின் அனுமதியைக் கொண்டு உயிர் கொடுத்தல், 3) பிறவிக் குருடனுக்குப் பார்வையளித்தல், 4) வெண்குஷ்ட ரோகியைக் குணப்படுத்துதல், 5) இறந்தவரை அல்லாஹ்வின் உத்தரவு கொண்டு உயிர் பெறச் செய்தல் (5:110), 6) பிறா உண்பதை வீடடில் உள்ளவற்றை பார்க்காமலே அறிவித்தல் (3:49)

Q46) சுவனத்தில் இருக்காது என்று இறைவன் குறிப்பிடுவது எவை?

A) 1) பசி, 2) நிர்வானம், 3) தாகம், 4) வெயில் (20:118,119)

Q47) வீரமுள்ள செயல் என குர்ஆன் எதைக் கூறுகிறது?

A) எவரேனும் (பிறர் செய்யும் தீங்கை) பொறுத்துக் கொண்டு மன்னித்து விடடால் அது மிக உறுதியான (வீரமுள்ள) செயலாகும். (42:43), (31:17), (3:186)

Q48) நபி முஸா (அலை) அவர்கள் கற்பாறையில் அடித்த போது எத்தனை நீர் ஊற்றுக்கள் பீறிட்டு எழுந்ததாக இறைவன் கூறுகிறான்?

A) பன்னிரணடு நீர் ஊற்றுகள் பீறிடடு எழுந்தது. (2:60) & (7:160)

Q49) தொழாதவர்களுக்காக இறைவன் சித்தப்படுத்தி வைத்திருப்பதாகக் கூறும் நரகத்தின் பெயர் என்ன?

A) ஸகர் என்ற நரகம். அல் முத்தஸ்ஸிர்(74:41,42,43)

Q50) இறைவன் என்னோடு இருக்கிறான் என்று கூறிய நபி யார்?

A) முஸா (அலை) அஷ் ஷுஃரா(26:62)

நேர மேலாண்மை / திட்டமிடல்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்
அன்பு சகோதரர்களே!
நம் தினசரி 24 மணி நேர திட்டமிடல் (வார நாட்களில்)
காலை 5 மணி முதல் காலை 5 மணி வரை
5 am – 6 am
Fபஜர் தொழுகை, திக்ரு, குர்ஆன் ஓதுதல் மற்றும் ஹதீஸ் படித்தல்
6 am – 7 am
உடற்பயிற்சி, நாளிதழ் வாசித்தல், மற்றும் பொது/சமூக சேவை
7 am – 8 am
குடும்ப பராமரிப்பு, குளியல், காலை உணவு, அலுவலகத்துக்கு தயாராகுதல் மற்றும் ளுஹா தொழுகை
8 am – 6 pm
அலுவலக பணிகள்
6 pm – 7 pm
மஃரிப்B தொழுகை, திக்ரு மற்றும் பொது/சமூக சேவை
7 pm – 8 pm
குடும்ப பராமரிப்பு, புத்தகங்கள் வாசித்தல், இமெயில் மற்றும் பல…
8 pm – 9 pm
இஷா தொழுகை, திக்ரு, குர்ஆன் ஓதுதல், ஹதீஸ் படித்தல் மற்றும் இரவு உணவு
9 pm – 10 pm
குடும்ப பராமரிப்பு
10 pm – 5 am
தூங்கும் முன் ஓதும் திக்ருகள், சுயபரிசோதனை பின் உறக்கம்
நம் தினசரி 24 மணி நேர திட்டமிடல் (விடுமுறை நாட்களில்)
காலை 5 மணி முதல் காலை 5 மணி வரை
5 am – 6 am
Fபஜர் தொழுகை, திக்ரு, குர்ஆன் ஓதுதல் மற்றும் ஹதீஸ் படித்தல்
6 am – 7 am
உடற்பயிற்சி, நாளிதழ் வாசித்தல், மற்றும் பொது/சமூக சேவை
7 am – 9 am
குடும்ப பராமரிப்பு, குளியல், காலை உணவு, மற்றும் ளுஹா தொழுகை
9 am – 12 pm
கடைவீதி/சந்தைக்கு போவது, குடும்பத்தினருக்கு உதவுதல், சமூக சேவை
12 pm – 1 pm
ஓய்வு / சிறு உறக்கம்
1 pm – 2 pm
லுஹர் தொழுகை, திக்ரு, குர்ஆன் ஓதுதல் மற்றும் ஹதீஸ் படித்தல்
2 pm – 4 pm
மதிய உணவு, குடும்ப பராமரிப்பு, புத்தகங்கள் வாசித்தல், இமெயில், மற்றும் பல…
4 pm – 6 pm
அஸ்ர் தொழுகை, குடும்பத்துடன் வெளியில் செல்லுதல் அல்லது நண்பர்களை / உறவினர்களை வீட்டிற்கு அழைக்குதல்
6 pm – 7 pm
மஃரிப்B தொழுகை, திக்ரு மற்றும் பொது/சமூக சேவை
7 pm – 8 pm
குடும்ப பராமரிப்பு, புத்தகங்கள் வாசித்தல், இமெயில் மற்றும் பல…
8 pm – 9 pm
இஷா தொழுகை, திக்ரு, குர்ஆன் ஓதுதல், ஹதீஸ் படித்தல் மற்றும் இரவு உணவு
9 pm – 4 am
தூங்கும் முன் ஓதும் திக்ருகள், சுயபரிசோதனை பின் உறக்கம்
4 am – 5 am
இரவுத் தொழுகை, குர்ஆன் ஓதுதல் மற்றும் துஆ கேட்குதல்
பின்வரும் விஷயங்களில் உங்களுடைய நேரங்களை வீனடிக்காதீர்கள்:
1. தொலைபேசி / அலைபேசியில் பேசுவது
2. தொலைக்காட்சி அல்லது இனையதளங்கள் பார்ப்பது
3. பகல் நேரங்களில் உறங்குவது
4. தேவையின்றி வெளியில் செல்லுவது
5. வெறுவெனெ சும்மா வீட்டில் உட்காந்திருப்பது
குறிப்பு:
- உங்களுக்கென்று இது போன்று திட்டங்கள் நடைமுறையில் இருக்குமானால் அதை தொடர்ந்து பின்பற்றி வாருங்கள்.
- இந்த விஷயங்களை இதயங்களில் பதித்து நடைமுறைபடுத்துங்கள்.
- இது போன்று உங்களுடைய நடைமுறை அல்லது வசதிக்கு தக்கவாரு இதில் கூடுதல்/குறைத்தல் அல்லது சில மாற்றங்கள் செய்து கொள்ளலாம்.
- ஆனால், கண்டிப்பாக இதை தொடர்ந்து கடைபிடித்து வர வேண்டும்.
பொது/சமூக சேவை: மார்க்கத்தின் பக்கம் மக்களை அழைப்பது, இஸ்லாமிய கூட்டங்களில் கலந்து கொள்ளுதல், இஸ்லாமியர்களுக்கு கல்வி புகட்டுதல், மக்களுக்கு உதவி புரிதல், மற்றும் பல…
குடும்ப பராமரிப்பு: குடும்பத்திற்கு (பெற்றோருக்கு, மனைவி மக்களுக்கு) செய்யும் அனைத்து வகையான உதவிகள், பிள்ளைகளுக்கு கல்வி கற்பித்தல் இன்னும் பல…
திக்ரு: காலை மாலை திக்ருகள், ஐவேளை தொழுகைக்கு பின்னால் ஓதும் திக்ருகள், அன்றாடம் ஓதும் ஔராதுகள், இன்னும் பல…

வெள்ளி, 28 அக்டோபர், 2011

முனாஜாத் கொஸிய்யா

முத்தால் படச்சே ஹயாத்தாய் நிக்கும் நாள்
முவப்பர் முஹ்யித்தீன் காவலில் யேகல்லாஹ்

(
பொருள்) உலகில் வாழும் காலமெல்லாம் முஹ்யித்தின் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் காவலை தந்தருள்வாயாக........

காலாமே அஸ்ராஈல் மௌத்து வாங்கும் நாள்
கருத்தர் முஹ்யித்தீன் காவலில் யேகல்லாஹ்

(
பொருள்) இஸ்ராஈல் (அலைஹிஸ்ஸலாம்) எங்கள் ரூஹை வாங்கும் நாள் முஹ்யித்தீன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை காவலில் ஏகல்லாஹ்

பேடை பெருத்தே கப்ரகம் போகும் நாள்
பெருபர் முஹ்யித்தீன் காவலில் யேகல்லாஹ்

(
பொருள்) அதிகம் பயம் உண்டான கப்ருக்குள் போகும் நாள் இறை நேசர் முஹ்யித்தீன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை காவலில் ஏகல்லாஹ்

ஸுரு பிலி கேட்டு ஒக்கே புறப்பட்டால்
ஸுல்தான் முஹ்யித்தீன் காவலில் யேகல்லாஹ்

(
பொருள்) ஸுரு ஊதும் சத்தம் கேட்டு எல்லோரும் புறப்பட்டு சென்றால் ஸுல்தான் முஹ்யித்தீன் காவலை தா யா அல்லாஹ்....

யேழு முகமிட்டு அடுப்பிச்சே உதிக்கும் நாள்
யெங்கள் முஹ்யித்தீன் காவலில் யேகல்லாஹ்

ஏழு முகத்துடன் நெருக்கமாக சுரியன் உதிக்கும் நாள் எங்கயள் முஹ்யித்தீன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை காவலில் ஏகல்லாஹ்

சூடு பெருத்தே தரம்மல் ஞான் நிக்கும் நாள்
சொக்கர் முஹயித்தீன் காவலில் யேகல்லாஹ்

அதிகம் சூடாக்கப் பட்ட மணலில் நான் நிக்கும் நாள் முஹ்யித்தீன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை காவலில் ஏகல்லாஹ்


நரகம் அதேழும் கரூடம் மிகச்சே நாள்
நலவர் முஹ்யித்தீன் காவலில் யேகல்லாஹ்

ஏழு நரகமும் அதிகம் கோபம் நிறைந்த நாள் நல்லவர் முஹ்யித்தீன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை காவலில் ஏகல்லாஹ்

துவக்கம் பிடிச்சு கணக்கெல்லாம் நோக்கும் நாள்
தலவர் முஹ்யித்தீன் காவலில் யேகல்லாஹ்

எங்கள் நன்மை தீமைகளை பட்டியலிட்டு கணக்கெடுக்கும் நேரத்தில் தலைவர் முஹ்யித்தீன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை காவலில் ஏகல்லாஹ்


அறிப்பத்தில் இட்டே ஸிராத்து கடக்கும் நாள்
அறிமா முஹ்யித்தீன் காவலில் யேகல்லாஹ்

மகவும் மெல்லியதான ஸிராதுல் முஸ்தகீம் பாலம் கடக்கும் நாள் முஹ்யித்தீன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை காவலில் ஏகல்லாஹ்

கோஜா ஷபாஅத்தில் முஹ்யித்தீன் தன் கூடே
கூட்டு சுவர்கத்தில் ஆலம் உடயோனே

பெருமானர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் ஷபாஅத்துடன் முஹ்யித்தீன் அப்துல் கபதிர் ஜீலானி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுடன் சுவர்கத்தில் ஒன்று சேர்பாய் ரஹ்மானே......

கோஜா பைதாம்பர் மங்களம் காணுவான்
மங்கள பேளகள் காணுவான் யேகல்லாஹ்

காரூண்யக் கடல் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் கண்கொள்ளா காட்சிசியாம் அவர்களின் திருமணத்தையும் திருமண அலங்கார வேலைகளையும் காணத்தருவாய் ரஹ்மானே.........

யென்னயும் யென்னும்மா பாவயும்
அறிவே படிப்பிச்சே ஒஸ்தாதன் மாரயும்
யென்னயும் மற்றுல்லே முஃமின் யெல்லாரயும்
யெங்கள் நபின்டே ஷபாஅத்தில் கூட்டல்லாஹ்

என்னையும் என் பெற்றோரையும் நல் அறிவை போதித்த ஆசிரியர்களையும் எங்கள் தலைவர் முஹம்மத் முஸ்தாபா (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் ஷபாஅத்தில் ஒன்று சேர்பாயாக.....

ஆமீன் ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்

திங்கள், 24 அக்டோபர், 2011

தேசப் பிரிவினைக்கு யார் காரணம்?

தேசப் பிரிவினைக்கு யார் காரணம்? -கனியூர் இஸ்மாயில் நாஜி

இந்து-முஸ்லிம் உறவு கடந்த காலங்களில்.


கி-பி எட்டாம்நூற்றாண்டு முதல் கிபி 18ம் நூற்றாண்டு வரை இந்தியாவை ஆண்ட முஸ்லிம்களின் ஆட்சியை தலை சிறந்த ஆட்சியென போற்ற இயலாவிட்டலும் அந்த 10 நூற்றாண்டுகளில் இந்து முஸ்லிம் கலவரங்கள் நடந்ததாக இந்திய சரித்திரத்தின் எந்த பகுதிலும் காண இயலாது.ஆனால் ஏகாதிபத்திய வெள்ளையர்கள் தங்கள் ஆட்சியை இங்கே நிலை நிறுத்த முயன்ற 19-ம் நூற்றாண்டில் தான் நாம் முதன் முறையாக இந்து-முஸ்லிம் கலவரங்களைப் பற்றி அறிகிறோம்.


பிரிட்டிஷ் ஆட்சியில் இந்துக்களும் -முஸ்லிம்களும் இந்துக்களையும்,முஸ்லிம்களையும் பிரித்தாளுதல் மூலமே தங்களின் ஆட்சியை நிலைபெற வைக்க முடியுமெனத் திட்டமிட்டனர் வெள்ளையர்.அதற்கு இரு வழியினைக் கடைப் பிடித்தனர்.


1)
இந்துக்களின் மனதில் முஸ்லிம்களைப் பற்றிய தப்பான எண்ணத்தை ஏற்படுத்தும் வண்ணம் வரலாற்று நிகழ்ச்சிகளை திரித்துக் கூறல்.


2)
பொருளாதார ரீதியில் இரண்டு இனங்களுக்குமிடையே ஏற்றத் தாழ்வை ஏற்படுத்துவதின் மூலம் இருவருக்கிடையே போட்டியையும்.பொறாமையையும்,குரோதத்தையும் ஏற்படுத்துதல்.

பிரிட்டிஷ் சதி


ஒரிஸாவின் முன்னாள் ஆளுனரும் முன்னால் ராஜ்யசபை உறுப்பினருமான பி.என்.பாண்டே அவர்கள் சரித்திரங்கள் எப்படி திருத்தப்பட்டன என்பதைக் குறிப்பிடும்பொழுது தன் கருத்துக்கு ஆதரவாகக் கீழ்கண்டவாறு எழுதுகிறார்:
பிரிட்டிஷ் தஸ்தாவேஜுகளைப் பார்த்தால் பிரித்தாலும் கொள்கை எப்படி உருவெடுத்தது என்பது புலப்படும்.எல்கின் பிரபுவுக்கு பிரிட்டிஷ் அரசின் செயலாளார் வுட்எழுதியுள்ள கடிதத்தில்,


ஒரு பகுதிக்கு எதிராக அடுத்ததைத் தூண்டிவிடும் யுக்தி மூலம் இந்தியாவில் நமது ஆதிக்கத்தை நிலை நாட்டியுள்ளோம்.இதை நாம் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.அனைவருக்குமிடையே பொதுவான உணர்வு ஏதும் ஏற்படவிடாமல் இருக்க உங்களால் இயன்றது அனைத்தையும் செய்யுங்கள்எனக் குறிப்பிட்டுள்ளனர்.


கவர்னர் ஜெனரல் டfபரினுக்கு கிராஸ் எழுதிய கடிதத்தில்,
மத உணர்வுகளால் ஏற்படும் பிளவுகள் நமக்கு பொருத்த சாதகமாக உள்ளன.இந்தியாவுக்கான கல்விமுறைப் பற்றி ஆராயத் தாங்கள் நியமித்துள்ள ஆய்வுக்குழு மேலும் பல நல்ல விளைவுகளை நமக்கு ஏற்படுத்தித் தரும் என்று எதிர் பார்க்கிறேன்என எழுதிய்யுள்ளார்.


கர்ஸன் பிரபுக்கு ஜார்ஜ் பிரான்சிஸ் ஹாமில்டன் பின் கண்டவாறு எழுதியுள்ளார்:
படித்த இந்தியர்களை வெவ்வேறு கருத்துகளை இரு கூறுகளாகப் பிரித்தால் பரவிவரும் கல்வியறிவு காரணமாக நமது அரசுமீது ஏற்படவிருக்கும் நுட்பமான தாக்குதல்களிலிருந்து நம்மை நம் பாதுகாத்துக்கொள்ள முடியும்.எனவே.இனத்துக்கு இனம் பிளவை அதிகப்படுத்துகிற வகையில் பாடப் புத்தகங்கள் இருக்கும்படி நாம் திட்டமிட வேண்டும்
(
இஸ்லாமும்,இந்தியக்கலாச்சாரமும்.byP.N.பாண்டே.நீரோட்டம் பதிப்பகம்,சென்னை)


இதன் அடிப்படையில் இந்திய சரித்திரப் பாடப் புத்தகங்கள் திட்டமிட்டுத் திருத்தி எழுதப்பட்டன.மத்திய காலத்தில் முஸ்லிம் மன்னர்களில் ஆட்சியில் இந்து மக்கள் கொடுமைப் படுத்தப்பட்டனர் என்பது போன்ற கருத்துக்கள் வலிந்து திணிக்கப்பட்டன.


பொருளாதாரத் தாக்குதல்


இரண்டாவதாக,பொருளாதார ரீதியில் இருவரிடையே விரோதத்தை எற்படுத்த முனைந்தனர்.வங்காளத்தில் நிரந்தரக் குடியேற்றம் என்ற பெயரில் முஸ்லிம்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு அவர்களிடம் ஊழியர்க்ளாக இருந்த இந்துக்களிடம் தரப்பட்டன.டாக்டர்.டபிள்யூ.டபிள்யூ.ஹாண்டர் பின்வருமாறு எழுதுகிறார்:


நிரந்தரக் குடியேற்றத்தின் இலட்சியமே இந்து அதிகாரிகளை நிலச்சுவாந்தார்களாக் மாற்றுவதே.அன்றுவரை முக்கிய பதவிகளில் இல்லாமல் இருந்த வரி வசூலிப்பவர்களை இக்குடியேற்றம் உயர்த்திவிட்டது.முஸ்லிம்களுக்கு கிடைக்க வேண்டியிருந்த செல்வங்களையெல்லாம் இந்த இந்து ஏவலாளார்கள் சேகரித்து கொள்ள அனுமதிக்கப்பட்டது.


(Quote in the meaning of pakistan by F.K.Khan Duarrani).


நிதி நிர்வாக விசயங்களில் முஸ்லிம்கள் புற்க்கணிக்கப்பட்டனர்.இராணுவத்தில் முஸ்லிம்கள் சேராமல் தடை செய்யப்பட்டனர்.
கல்கத்தாவிலிருந்து வெளிவந்த டோர்பீன்என்ற பத்திரிக்கை 1867ம் ஆண்டு ஜூலை 14ந்தேதி இதழில் எழுதியிருந்த ஒரு கட்டுரையின் ஒரு பகுதி அன்றைய முஸ்லிம்களின் அவலநிலையை வெளிப்படுத்தும்.
பெரியதும் சிறியதுமான எல்லா அலுவல்களும் நாளடைவில் முஸ்லிம்களிடமிருந்து பறிக்கப்பட்டு இதர மதத்தினரிடம் குறிப்பாக இந்துக்களுக்குக் கொடுக்கப்பட்டன.ஆட்சியாளர் தனது குடிமக்களில் எல்லா வகுப்பாளரையும் ஒரே விதமாகப் பாவிக்கக் கடமை ப்பட்டுள்ளனர்.

அவ்வாறிருக்க முஸ்லிம்களை அரசாங்க பதவிகளிலிருந்து அகற்றி விடுவதற்குத் தங்களின் கெஜட்டுகளிலிருந்து முஸ்லிம்களைப் பகிரங்கமாக நீக்கிவிட்டிருந்தது.சமீபத்தில் சுந்தர் பான்ஸ் காரியாலயத்தில் சில இடங்கள் காலியாயின.இதைப்பற்றிக் கமிஷனர்,அரசாங்கக் கெஜட்டில் வெளியிட்ட விளம்பரத்தில் அவ்வேலைகள் இந்துக்களைத் தவிர வேறெவருக்கும் தரபடமாட்டாதென அறிவித்திருந்தனர்.முஸ்லிம்கள் அரசாங்க வேலைகளுக்குத் தகுதியானவர்களாக இருப்பினும் அரசாங்க அறிக்கையில் அவர்களைப் புறக்கணித்தே வைக்கப்பட்டிருந்தது.இவ்வளவு தாழ்ந்த நிலைமைக்கு முஸ்லிம்கள் ஆக்கப்பட்டனர்.


மேற்கண்டவாறு ஆட்சியாளர்கள் செய்த திட்டமிட்டச் சதியின் விளைவாக இந்துக்களின் மீது முஸ்லிம்களுக்கு ஒரு வகையான பொறாமையும்,முஸ்லிம்களைவிடத் தாங்கள் சக்தி வாய்ந்தவர்கள் என்னும் மனோபாவம் இந்துக்களுக்கும் வளர ஆரம்பித்தன.


சிப்பாய்க் கலகத்திற்குப் பின்


இந்நிலையில்,1857ம் வருடத்தில் பசுமாட்டின் கொழுப்பினால் தயாரிக்கப்பட்ட குண்டுகளைக் காரணம் காட்டி இந்து சிப்பாய்களால் சிப்பாய்க் கலகம் துவக்கப்பட்டது.அதில் முஸ்லிம்களும் பூரணமாகக் கலந்து கொண்டனர்.அக்கலகம் சில மாதங்களிலேயே ஒடுக்கப்பட்டு விட்டது.இந்துக்களில் சிலர் தங்களுடன் தோளோடு தோள் சேர்ந்து ஆயுதந்தாங்கிப் போரிட்ட முஸ்லிம்களுக்குத் துரோகிகளாக மாறி அரசாங்கத்திடம் காட்டிக் கொடுத்தனர்.இதனால் அரசாங்கத்தின் கோபமெல்லாம் முஸ்லிம்கள் மீது விழுந்தது.


சிப்பாய்க் கலகத்திற்குப் பின் முஸ்லிம்களின் மீது நடைபெற்ற கொடுமைகளை நேரில் கண்ட சர்.ஸையித் அஹ்மதுகான்.1887ம் ஆண்டு காங்கிரஸ் மாநாட்டிற்குத் தலைமை வகித்த பம்பாய் பாரிஸ்டர் ஜனாப் பத்ருத்தீன் தையிப்ஜீக்கு எழுதிய கடிதத்தில் ,

சிப்பாய் கலகத்தின் போது என்ன நடந்தது?இந்துக்கள் அதை ஆரம்பித்தனர்.முஸ்லிம்கள் அதிக தைரியத்துடன் அதில் ஈடுப்பட்டனர்.இறுதியில் இந்துக்கள்,கங்கையில் முழுகித் தங்களின் பாவங்களைப் போக்கிக் கொண்டு முன் போல் நல்ல பிள்ளைகளாகி விட்டனர்.ஆனால்,ஆயிரக்கணக்கான முஸ்லிம் குடும்பங்கள் நசித்து நாசமடைந்தன.என குறிப்பிட்டுள்ளார். (பாகிஸ்தான் விளக்கம்.by எப்.கே.துர்ரானி)


சொல்லவொணா துன்பங்களை அனுபவித்த முஸ்லிம்கள் தங்களின் எதிர்காலம் குறித்து அச்சம் கொள்ளும் பல நிகழ்ச்சிகள் நடந்தன.
இந்து தீவிரவாதிகளின் போக்கு


1867
ல் காசியிலுள்ள இந்துத்தலைவர்கள் உருது மொழிக்கெதிராக கிளர்ச்சியில் ஏடுபட்டனர்.1875ல்இந்தியா இந்துக்களுக்கேஎன்ற கோஷத்துடன் சுவாமி தயானந்த சரஸ்வதி என்பவரால் ஆர்ய சமாஜ் என்ற இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது.இதன் முக்கிய நோக்கம் இஸ்லாத்தையும்.கிறிஸ்துவ மதத்தையும் எதிர்ப்பதே.


1890
ல் முஸ்லிம்கள் அந்நியர்கள்என்க் கூறிக் கொண்டிருந்த பாலகங்காதர திலகர்.முஸ்லிம்கள் குர்பானி கொடுப்பதை எதிர்த்து பசு பாதுகாப்பு இயக்கத்தைத் துவக்கினர்.


1882
ல் பங்கிம் சந்திர சாட்டர்ஜிஆனந்த மடம்எனும் பெயரில் ஒரு நாவல் வெளியிட்டார்.அதில்தான் வந்தே மாதரம் என்ற கீதம் வருகிறது.அதில் இந்தியாவை காளிஎன்ற கடவுளுக்கு ஒப்பிட்டு அந்த காளி துஷ்டர்களை ஒழிக்கச் சொல்கிறாள் எனும் கருத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட நூல் முஸ்லிம்களுக்கு எதிராக தனது துவேஷத்தை வெளிப்படுத்தியது.
இவையெல்லாம் முஸ்லிம்களின் மனதில் ஒரு வகையான பய உணர்ச்சியை ஏற்படுத்தின.அது பின்னாளில் இரு சாரரிடையே நிரந்தரப் பகையாக மாறியாது.
காங்கிரஸும் முஸ்லிம்லீக்கும்


இந்நிலையில்,1885ல் தேசிய காங்கிரஸ் தோன்றியது.அதன் முன்னோடி தலைவர்களில் பெரும்பாலோர் முஸ்லிம் எதிர்ப்பாளர்களே,அவர்கள் முஸ்லிம்களின் அச்சத்தைப் போக்க எவ்விதநடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆங்கிலேயர் தூவிய வேற்றுமை விஷ வித்துகளுக்கு பலியான இந்துமதத் தலைவர்கள் சுதந்திர போராட்டத்தை இந்து மறுமலர்ச்சி எனும் அடிப்படையில் நடத்த விரும்பினர்.முஸ்லிம்களை அரவணைத்துச் செல்வதற்குப் பதிலாக அவர்களை ஒதுக்கிவிட்டு தங்களின் சுதந்திரப் போராட்டத்தை நடத்த விரும்பினர்.விளைவு?1906ம் ஆண்டு அகில இந்திய முஸ்லிம் லீக்.சர்.ஆகாகான் அவர்கள் முயற்சியால் தோற்றுவிக்கப்பட்டது.
முஸ்லீம் லீக் ஏன் தோன்றியது?என்பதன் காரணத்தை R.P.Dutt இப்படி குறிப்பிடுகிறார்.


தீவிரவாத தேசிய இந்துத் தலைவர்கள் தங்களின் போராட்டத்தை இந்துமத அடிப்படியில் நடத்த விரும்பினர்.இந்துமத மறுமலர்ச்சி மூலமே தேசிய விழுப்புணர்ச்சி ஏற்படுத்தப்பட்டதாகக் காட்ட விரும்பினர்.எனவே அவர்கள் தேசிய நீரோட்டத்தில் முஸ்லிம்கள் கலந்துவிடாமல் இருக்க முயற்சித்தனர்.அதன் விளைவே 1906ல் முஸ்லிம்லீக் தோன்றியது”.
(Quoted in R.A.Deasai’s social background of Indian Nationalism)
Most members of the congress made a serious error refusing to admit the existence and validity of muslim nationalism.


முஸ்லிம்களின் தேசிய உணர்வுகளின் அவசியத்தையும் நிலைபாட்டையும் மறுத்ததின் மூலம் பெரும்பாலான காங்கிரஸ் உறுப்பினர்கள் மோசமான தவறினைச் செய்தனர்.


(A short History of India and Pakistan by t.Walter Wall Bank)(U.S.A.)1965.
முஸ்லிம்லீக் தோன்றினாலும் முஸ்லிம்களில் பலர் காங்கிரஸிலும் லீக்கிலும் இருந்தனர்.மவ்லானா அலி சகோதரர்கள் காங்கிரஸை பெரிதும் நம்பினர்.
பிரிவினைப் பிரச்சாரம் யார் துவக்கியது?


இந்தியப் பிரிவினை தவிர்க்க முடியாமல் போனதற்கு 1920க்கும் 1940க்குமிடையே நடைபெற்ற பல நிகழ்ச்சிகளே காரணம்.இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் தனித்தனி நாடு எனும் திட்டத்தை முதன் முதலில் கூறியவர்கள் இந்து தீவிரவாதிகள் தாம்.


இன்று இந்திய பிரிவினைக்கு முஸ்லிம்கள் தான் காரணம் எனப் பிரச்சாரம் செய்வோர் 1920க்கும் 1940க்குமிடையே நடைப்பெற்ற நிகழ்ச்சிகளையும் பேச்சுக்களையும் ஒரு முறை ஆராய்ந்து பார்க்கட்டும்.
இந்நாட்டைவிட்டும் வெளியேறிவிடுங்கள்;அல்லது இங்கு இரண்டாம் தர பிரஜையாக இருக்க சம்மதியுங்கள் எனும் கோஷம் முஸ்லிம்களை நோக்கி பகிரங்கமாகப்போடப்பட்டது.


முஸ்லிம்களுக்கும்.இந்துக்களுக்கும் தனித்தனி நாடு எனும் சிந்தனை லாலா லஜ்பத்ராயின் மூளையில்தான் முதன் முதலில் உதித்ததுஎன அவரிடம் ஆறு ஆண்டுகள் அந்தரங்கச் செயலாளராக இருந்தவரும் காந்திஜியின் நெருங்கிய சகாவுமான பண்டிட்சுந்தர்லால்.ரேடியன்ஸ்வார இதழில் (13-6-87)ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார்.


இன்று R.S.S. போற்றிப் புகழும் V.D.சாவர்க்கார்.இந்துக்கள் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்றும் இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எவ்வித எதிர்காலமமும் இல்லை என்றும் 1917ம் ஆண்டிலிருந்து கூறி வந்ததாகR.N.அகர்வால் தனது The National Movement என்ற நூலில் குறிப்பிடுகிறார்.


குர்தகி மட சங்கராச்சாரியார்,இந்தியா இந்துக்களுக்கே சொந்தமானது. முஸ்லிம்கள் இங்கு விருந்தினர்களே.அவர்கள் விருந்தாளியைப்போலவே நடந்து கொள்ள வேண்டுமென்று முஸ்லிம்களை எச்சரித்தார்.
அகில இந்திய சிவில் சர்வீஸில் உறுப்பினராக இருந்த ஹர்தயால்,A Joint Hindu-Muslim state is Sheer Nonsense “இந்து-முஸ்லிம் இணைந்த ஒரு நாடு என்பது முழு முட்டாள்தனம்என உரத்துச் சொன்னார்.


1923
ல் வாரணாசியில் பண்டிட் மதன்மோகன் மாளவியா தலைமையில் இந்துமகாசபை புதுப்பிக்கப்பட்டது.இந்தத் தீவிரவாத இயக்கத்தின் கொள்கை முஸ்லிம்களை மீண்டும் இந்துவாக மாற்றல்,இந்துக்களுக்குப் போர் பயிற்சிதரல்.அதன் முக்கிய குறிக்கோள் இந்தியா இந்துக்களுக்கே வேறு யாருக்கும் அதில் உரிமை இல்லை என்பதே.இந்த இயக்கம் தொடங்கப்பட்ட பின் வகுப்புக் கலவரங்கள் அதிகமாயின இஸ்லாத்தையும் முஹம்மது நபி (ஸல்) அவர்களையும் இழிவுபடுத்தும் முயற்சிகள் நடைபெற்றன.1924ல் லாஹூரில் ரங்கிலா ராஜா (கெட்ட நடத்தையுள்ள ராஜா)என்ற நூல் ஒன்று வெளியிடப்பட்டது.அதில் இஸ்லாமியர்கள் போற்றும் முஹம்மது நபி அவர்களைத் தரக்குறைவாக விமர்சிக்கப்பட்டது.


முஸ்லிம்களின் நிலை


இவ்விதம் இந்துமதத் தலைவகளில் பலர் இந்தியாவின் பிரிவினையைப் பற்றி 1917லிருந்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது முஸ்லிம் தலைவர்களின் நிலை என்னவாக இருந்தது?
இன்று இந்தியாவைத் துண்டாடியதாக அதிகம் குறை சொல்லப்படும் முஹம்மது அலி ஜின்னா சாஹிப் அவர்கள் முதலில் இரு நாடு எனும் திட்டத்தைக் கடுமையாக எதிர்த்தார்.1906ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம்லீக்கில் அவர் 1936ல் தான் அதிகாரப் பூர்வமாக இணைந்தார்.அதுவரை அவர் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பாலமாக இருந்தார்.’The Ambassadur Hindu-Muslim Unity’என்று சரோஜினி நாயுடுவால் பாராட்டப்பட்டவர்.1993ல் லண்டனில் மாணவராக இருந்த ரஹ்மத் அலி என்பவர் பாகிஸ்தான் என்ற ஒரு நாட்டைப் பற்றிக் குறிப்பிட்ட பொழுது ‘An Impossible Dream’நடைப்பெற இயலா கனவுஎன்றார் ஜின்னா
1906
ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம்லீக் 1940ம் ஆண்டுவரை தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தவில்லை.1945,1946ல்தான் பாகிஸ்தான் கோரிக்கை வலுப்பெற்றது.


ஜின்னா ஏன் கேட்டார் தனி நாடு?


தனி நாடு கோரிக்கையைப் பற்றி சிந்திக்காத ஜின்னா சாஹிப் பின் பிடிவாதமாக தனிநாடு கேட்டது ஏன்?1937க்குப் பின் ஆட்சிப் பொறுப்பை எற்ற காங்கிரஸ்தான் காரணம் என்கிறார் சர்.சிம்மன்லால் சிடால்வாட்.லிபர்ல் பார்டியின் தலைவரும் 1930ம் ஆண்டு நடைபெற்ற வட்டமேஜை மாநட்டில் கலந்து கொண்டவருமான சிடால்வாட்,தனது Recollection and Reflection என்ற நூலில் ,Congress Parentage of Partition” என்ற தலைப்பின் கீழ் எழுதுகிறார்:
பாகிஸ்தான் இயக்கத்திற்கு மூலதரம் காங்கிரஸ்தான்.அது 1935-ம் ஆண்டுச் சட்டப்படி ஆட்சிக்கு வந்தபொழுது நடந்துகொண்ட முறைகள் முஸ்லிம் சமுதாயத்தின் மனதில் சந்தேகத்தினை ஏற்படுத்தியது.முஸ்லிம்களின் முறையான கோரிக்கைகளைக் கூட அது நிறைவேற்றவில்லைஎன்கிறார்.
வட்டமேசை மாநாட்டில் மாகாண மந்திரிச் சபைகளில் சிறுபான்மைப் பிரதிநிதிகளையும் சேர்த்து கொள்வதென ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தது.ஆனால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த மாகாணங்களில், லீகின் உறுப்பினர் பதவியை விட்டு விலகி காங்கிரஸ் உறுப்பினராக ஆனாலே தவிர மந்திரிப் பதவி இல்லை என காங்கிரஸ் கூறிவிட்டது.இதனை முஸ்லிம்கள் எதிர்த்தனர்.இதனைப் பற்றி டாக்டர்.அம்பேத்கர் குறிப்பிடும் பொழுது:காங்கிரஸ் அனுசரித்த போக்கு விதிக்கு நேர்மாறானது.நாட்டின் இதர கட்சிகளையெல்லாம் நிர்முலமாக்கி காங்கிரஸை நாட்டின் ஒரே அரசியல் கட்சியாகச் செய்வதற்கே இந்த முறை கையாளப்பட்டது.ஒரு ஏகாதிபத்திய,யதேச்சதிகார அரசாங்கத்தை நிறுவ செய்யப்படும் இம் முயற்சியை ஹிந்துக்கள் ஒருக்கால் வரவேற்கலாம்.ஆனால் இது சுதந்திர மக்கள் என்ற முறையில் முஸ்லிம்களை அரசியலில் சாகடிப்பதாகும்எனக் கண்டித்துக் கூறுகிறார்.


(quoted in A Short History of India and Pakistan)


காங்கிரஸ் ஆட்சியில் இருந்த இரண்டு ஆண்டுகால ஆட்சியில் முஸ்லிம்கள் விரும்பாத பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன.அரசாங்க மொழியாக ஹிந்தி மட்டுமே உபயோகிக்கப்பட்டது.உருது புறக்கணிக்கப்பட்டது.முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் அலட்சியம் செய்யப்பட்டன.தங்கள் நபியைப் பற்றியோ கலிபாக்களைப் பற்றியோ மற்றும் இஸ்லாம் சம்பந்தமான விஷயங்களோ பாடத் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை.தங்களின் கலச்சாரம் ஒரே அடியாக அழிந்து விடுமோ என முஸ்லிம்கள் அச்சப்பட்டனர்.(Sir Regined Coupland.The Indiyan Problem)
இவ்வாறு காங்கிரஸ் நடந்து கொண்ட முறைகளைக் கண்ட ஜின்னா சாஹிப் பூரண சுயாட்சி கிடைக்காத ஒரு நாட்டில் இடைக்கால ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் காங்கிரஸ் இவ்வளவு அநீதி இழைத்தால் பரிபூரண சுயாட்சிப் பெற்று ஆட்சிக்கு வந்தால் என்னவாகும் என எண்ணியே தனிநாடு தீர்மானத்தை 1940ல் ஆதரித்தார்.எனினும் அதனைத் தீவிரமாக வற்புறுத்தவில்லை.
நேருவின் பேட்டியால் நிலை மாறியது


ஒன்றுபட்ட இந்தியாவில் மாகாண சுயாட்சி என்ற அடிப்படையில் மாகாணங்களைப் பிரிக்கலாம் என 1946ம் ஆண்டு மே மாதம் 16ந்தேதி வெளியிடப்பட்ட கேபினட் தூதுக்குழுவின் முடிவினை ஜூன் மாதம் 6ந்தேதி கூடிய முஸ்லிம் லீக் கவுன்ஸில் ஜின்னா சாஹிபின் ஆலோசனையின்படி ஏற்றுக்கொண்டது.1940ல் அக்கட்சி இயற்றிய தனி நாடு கோரிக்கையைகைவிட தயாரானது.ஆனால் ஜூலை 10ந்தேதி நேரு அவர்கள் கேபினட் குழுவின் முடிவை மாற்ற காங்கிரஸுக்கு உரிமை உண்டு என்ற ரீதியில் அளித்த பேட்டி நிலைமையை மோசாமாக்கியது.அடிக்கடி தன் நிலையை மாற்றிக் கொள்ளும் காங்கிரஸை நம்பத் தயாராக இல்லை.தனி நாடுதான் தீர்வுஎன முடிவாக ஜின்னா கூறிவிட்டார்.


நேருவின் பேட்டி இந்தியாவின் சரித்திரத்தையே மாற்றி விட்டதுஎன மவ்லானா அபுல்கலாம் ஆஜாத் தனது India Wins Freedom என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சிகளிலிருந்து ஜின்னா சாஹிபும் முஸ்லிம்லீக்கும் முஸ்லிம்களும் பிரிவினையை நிர்ப்பந்த சூழ் நிலையில் தான் கேட்டார்கள் என்பது விளங்கும்.


R.S.S.
ஐ நோக்கி ஒரு கேள்வி?


இன்று இந்தியாவைத் தூண்டிய பாவிகள் என முஸ்லிம்களைக் குற்றஞ்சாட்டிப் பிரச்சாரம் செய்யும் R.S.S.அன்று என்ன செய்தது?இந்தியாவைப் பிரிக்க வேண்டும் என இந்து மகாசபையினர் பேசினார்களே;பிரிக்கலாம் என இராஜாஜி அவர்கள் ஆலோசனை வழங்கினாரே;பிரிக்கவே கூடாது என பிடிவாதம் செய்த காந்தியை வல்லபாய்படேல் சமாதனாப் படுத்திச் சம்மதிக்க வைத்தாரே;இவ்வளவு நிகழ்ச்சிகள் நடந்த பொழுது R.S.S. என்ன செய்தது?இன்று பாரதமாதாவைத் துண்டாடிய பாவிகள் என நீலிக்கண்ணீர் வடிப்போர் அன்று பிரிவினைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனரா?மாநாடுகள் நடத்திக் கண்டனத் தீர்மானம் போட்டார்களா?இல்லையே!ஏன்?


முஸ்லிம்லீக்கை ஜின்னாசாஹிபை காயிதேமில்லத்தை முஸ்லிம்களைப் பிரிவினை வாதிகள் எனச் சாடுவோர் பிரிவினைக்கு முதலில் வித்திட்ட லஜ்பத்ராயை, பண்டிட் மாளவியாவை, ஆதரித்த இராஜாஜியை, பட்டேலை பிரிவினைவாதிகள் எனச் சொல்லுவது இல்லையே?ஏன்?
இந்தியா பிளவுபட்டாலும் பரவாயில்லை முஸ்லிம்களை இந்நாட்டை விட்டும் விரட்டிவிட வேண்டும் என்ற தணியாத ஆசையால் அதனை ஏற்றுக்கொண்டனர்:விரும்பினர் R.S.S.காரர்கள்.ஆனால் அவர்கள் விரும்பியது போல் இந்திய முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக இந்நாட்டை விட்டும் சென்று விடவில்லை.இந்நாட்டிலே பிறந்து இந்நாட்டிலே வளர்ந்து இந்நாட்டின் வளர்சிக்கும் வளத்திற்கும் பாடுபட்ட முஸ்லிம்கள் எப்படி போவார்கள்?அவர்களை விரட்ட யாருக்கும் எவ்வித குரோத உணர்வே R.S.S.க்காரர்கள் ஒன்றுமே அறியாத அப்பாவிகள் போல் கபட வேடமிட்டு புலம்புகின்றனர்.


சற்று சிந்தியுங்கள்!


மேற்குறிப்பிட்ட ஆதாரப் பூர்வமான நிகழ்ச்சித்தொகுப்புகளிலிருந்து நாம் என்ன புரிகிறோம்?
பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன் முஸ்லிம்களின் ஆட்சியில் வகுப்புக் கலவரம் நடக்கவில்லை.
இந்து-முஸ்லிம் கருத்து வேற்றுமையும்-குரோதமும் பிரிட்டிஷரால் திட்டமிடடு ஏற்படுத்தப்பட்டவை.
முஸ்லிம்கள் இந்நாட்டைப் பிரிக்க முதலில் விரும்பவோ,திட்டமிடவோ இல்லை.


இந்து தீவிரவாதிகளும் அடிக்கடித்தன்நிலையை மாற்றிக் கொண்ட காங்கிரஸுமே இந்தியப் பிரிவினைக்கு முதல் காரணம்.
எனவே இந்தியப் பிரிவினைக்கு முஸ்லிம்கள்தான் காரணம் என்பது திட்டமிட்டு நடத்தப்படும் துர்பிரச்சாரமே தவிர அதில் உண்மை ஏதுமில்லை.மேற்கொண்டு உண்மை நிலையை அறிய விரும்புவோர்.H.M.Sreevai எழுதிய partition of India:Legend and Reality, என்ற நூலையும்,The dialogue Between Hindus and Muslims என்ற நூலையும் படித்து பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்

courtesy: niduronline.com