சனி, 19 மே, 2012

குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை?


கணவன் மனைவி எதிர்பார்ப்புகள் என்னென்ன?
குழந்தைகளை தன்னம்பிக்கையுடன் வளர்ப்பது எப்படி?
குடும்ப மகிழ்ச்சியில் உறுப்பினர்களின் பங்கு என்ன?
வரவுசெலவை வரையறுப்பது எப்படி?

குடும்ப மகிழ்ச்சிக்கு எது தேவை?

* 1. வருமானம்
* 2. ஒத்துழைப்பு
* 3. மனித நேயம்
* 4. பொழுதுபோக்கு
* 5. ரசனை
* 6. ஆரோக்கியம்
* 7. மனப்பக்குவம்
* 8. சேமிப்பு
* 9. கூட்டு முயற்சி
* 10.குழந்தைகள்

கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?

* 1. அன்பாக பிரியமாக இருக்க வேண்டும்.
* 2. மனது புண்படும்படி பேசக் கூடாது.
* 3. கோபப்படக்கூடாது.
* 4. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது
* 5. பலர் முன் திட்டக்கூடாது.
* 6. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.
* 7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
* 8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
* 9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்
* 10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும்மதிக்க வேண்டும்.
* 11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.
* 12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தைகுடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.
* 13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.
* 14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.
* 15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.
* 16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.
* 17. ஒளிவு மறைவு கூடாது.
* 18. மனைவியை நம்ப வேண்டும்.
* 19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
* 20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.
* 21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.
* 22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.
* 23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.
* 24. சின்னசின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
* 25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
* 26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் இது உன் குழந்தை ‘ என்று ஒதுங்கக் கூடாது.
* 27. அம்மாவிடம் காட்டும் பாசத்தைமனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விடஅக்காதங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.
* 28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.
* 29. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
* 30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.
* 31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.
* 32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.
* 33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.
* 34. மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
* 35. பொய்சூதுமதுமாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.
* 36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.
* 37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.

மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன?

* 1. பள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் தயாரித்தல்.
* 2. காலையில் முன் எழுந்திருத்தல்.
* 3. எப்போதும் சிரித்த முகம்.
* 4. நேரம் பாராது உபசரித்தல்.
* 5. மாமியாரை தாயாக மதிக்க வேண்டும்.
* 6. கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும்.
* 7. எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக் கூடாது.
* 8. அதிகாரம் பணணக் கூடாது.
* 9. குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன்தம்பி பிரிப்பு கூடாது.
* 10. கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.
* 11. கணவனை சந்தேகப்படக் கூடாது.
* 12. குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக் கூடாது.
* 13. பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.
* 14. வீட்டுக்கு வந்தவுடன்சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்துப் பேசக் கூடாது.
* 15. கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும்.
* 16. இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.
* 17. அளவுக்கு மீறிய ஆசை கூடாது.
* 18. குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
* 19. கொடுக்கும் பணத்தில் சீராகக் குடும்பம் நடத்த வேண்டும்.
* 20. கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது.
* 21. தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
* 22. எதிர்காலத் திட்டங்களைச் சிந்திக்கும் போது ஒத்துழைக்க வேண்டும்.
* 23. தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும்.
* 24. தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும்.
* 25. அடக்கம்பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற் போல் ஆடைஅலங்காரம் செய்ய வேண்டும்.
* 26. குழந்தையைக் கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது.
* 27. சுவையாகச் சமைத்துஅன்புடன் பரிமாற வேண்டும்.
* 28. கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும்படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* 29. பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
* 30. உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன்பொருத்தமான முறையில் எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும்.
* 31. தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது.
* 32. உடம்பை சிலிம் ஆக வைத்துக் கொள்ள வேண்டும்.
பிள்ளைகளுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டி வளர்ப்பது எப்படி?

தன்னம்பிக்கை என்பது மனித வாழ்க்கைக்கு ஒரு நெம்புகோல் போன்றது. அது இல்லையேல் வாழ்க்கை இல்லை. இதனைப் பெற்றோர் தம் குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும். சுயமாகச் சிந்திக்கசுயமாகச் செயல்பட குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். படிப்பில் ,அதோடு கூட வீட்டு வேலைகளில் குழந்தைகளுக்குப் பெற்றோர் போதிய பயிற்சி அளிக்க வேண்டும்.

குழந்தைகளை அச்சுறுத்தி அடித்துக் கண்டிக்கக் கூடாது. ஆனாலும் அதன் போக்கில் எதேச்சையாக விட்டுவிடக் கூடாது. குழந்தைகளுக்கு அனபுப்பால் ஊட்டிஅரவணைத்துப் பெருமைப் படுத்த வேண்டும் .நீ ராசா அல்லவாராசாத்தி அல்லவா?’ என்கிற வாசகங்கள் பெற்றோர் வாயிலிருந்து வர வேண்டும். மக்குமண்டுமண்டூகம் – போன்ற வாசகங்கள் மலையேற வேண்டும்.
பயம்கூச்சமின்றிஉறுதியான நெஞ்சம்உண்மையான பேச்சுஉயர்வான பண்பு இவை குழந்தைகளுக்கு அமைய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

மகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது?

பொதுவாகக் கீழ்க்கண்ட சில காரணங்களால்தான் ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சி குறைகிறது. உங்கள் குடும்பத்தில் எந்தெந்த காரணங்கள் என்பதை உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தனித்தனியாக டிக் செய்து கண்டு பிடியுங்கள். பின்னர் அவற்றை நிவர்த்தி செய்ய முயற்சி மேற்கொள்ளுங்கள்.

* 1. அடிக்கடி வரும் சண்டைச் சச்சரவுகள்.
* 2. ஒருவறையொருவர் குறை கூறும் பழக்கம்.
* 3. அவரவர் வாக்கைக் காப்பாற்றத் தவறுதல்.
* 4. விரும்பியதைப் பெற இயலாமை.
* 5. ஒருவரையொருவர் நம்பாமை.
* 6. ஒருவர் மீது ஒருவர் அக்கறை காட்டுவதில்லை.
* 7. உலலாசப் பயணம் போக இயாலாமை.
* 8. ஒருவர் வேலையில் பிறர் உதவுவதில்லை.
* 9. விருந்தினர் குறைவு.
* 10. பொருள்களை ஆளுக்கு ஆள் இடம் மாற்றி வைத்தல்.
* 11. புதிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு இலலை.
* 12. விட்டுக் கொடுக்கும் பண்பு குறைவு.
* 13. ஒருவர் மனம் புண்படும்படியாகப் பேசுதல்.
* 14. மகிழ்வான சூழ்நிலைகளை உருவாக்குதல் குறைவு.
உங்கள் பங்கு என்ன?

உங்கள் குடும்பம் மகிழ்வாக இருக்க அல்லது அதில் மகிழ்ச்சியைக் குறைக்கதான் எந்த அளவு காரணம் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து இல்லாததைக் கொண்டு வர வேண்டும்.

* 1. அன்பாகப் பேசுவது
* 2. பிறர் மீது அக்கறை காட்டுவது.
* 3.வீட்டை அழகாக வைத்துக் கொள்வது.
* 4. குறை கூறாமல் இருப்பது.
* 5.சொன்னதைச் செய்து கொடுப்பது.
* 6. இன்முகத்துடன் இருப்பது.
* 7.முன் மாதிரியாக நடந்து கொள்வது.
* 8. பிறரை நம்புவது.
* 9.ஒன்றாக பயணம் போக விரும்புவது.
* 10. பணிவு
* 11. எதையும் எடுத்தஉரிய இடத்தில் வைப்பது.
* 12. பிறர் வேலைகளில் உதவுவது.
* 13. பிறருக்கு விட்டுக் கொடுப்பது.
* 14. பிறர் வருந்தும் போது ஆறுதல் கூறுவது.
* 15. சுறுசுறுப்பு
* 16. சிறிய விசயங்களைக் கூடப் பாராட்டுவது.
* 17. புதிய முயற்சிகளை ஊக்குவிப்பது.
* 18. நகைச்சுவையாகப் பேசுவது.
* 19. அதிகமாக வேலை செய்ய விரும்புவது.
* 20. செலவுகளைக் குறைக்க ஆலோசனை கூறுவது.
* 21. நேரம் தவறாமை.
* 22. தற்பெருமை பேசாமல் இருப்பது.
* 23. தெளிவாகப் பேசுவது.
* 24. நேர்மையாய் இருப்பது.
* 25. பிறர் மனதைப் புண்படுத்தாமல் இருப்பது.

எதற்கும் யார் பொறுப்பு?

நமது அனைத்து நன்மை தீமைகளுக்கும் நாமே பொறுப்பு. அன்றாடம் அனேகம் பேரைச் சந்திக்கிறோம் உதவி கேட்கின்றோம். ஆணையிடுகிறோம். அனைத்து சந்தர்ப்பங்களிலும் வெற்றி பெறுகிறோமாபல நேரங்களில் பகையும்பிரச்சனைகளுமே மிஞ்சுகின்றன. விளைவாக – விரக்தியும்இரத்த அழுத்தம்நரம்புத் தளர்ச்சிதீராத கவலைஅமைதியின்மை,மதுசிகரெட் பழக்கம்தூக்க மின்மைஒத்துப்போக இயலாமை உணர்ச்சி வசப்படுதல் அஜீரணம் ஏன் இந்த நிலைநாம் மகிழ்வாக இருக்கநம்மால் பிறரும் மகிழச்சி பெற பிறர் நம்மை விரும்பபிறர் மத்தியில் நம் மதிப்பு உயரபிறரிடம் நம் காரியங்களைச் சாதித்துக் கொள்ள பத்து கட்டளைகள்

பத்து கட்டளைகள்

* 1. அன்பு செலுத்துங்கள். அக்கறை காட்டுங்கள்.
* 2. ஆர்வத்துடன் அதிகமாக செயல்பட விரும்புங்கள்.
* 3. இன்சொல் கூறி நான்எனது போன்ற வார்த்தைகளைத் தவிர்த்திடுங்கள்.
* 4. உணர்வுகளை மதிக்கவும்மரியாதை கொடுக்கவும் புகழவும் கற்றுக் கொள்ளுங்கள்.
* 5. ஊக்கத்துடன் சுறுசுறுப்பாகச் செயல்படுங்கள்.
* 6. எப்போதும் பேசுவதைக் கேட்டுபின்விளைவை யோசித்து சரியான சைகைமுகபாவத்துடன் தெளிவாகப் பேசுங்கள்.
* 7. ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்துடன் பிறர் குறைகளை அலட்சியப் படுத்துங்கள்.
* 8.ஐங்குணமாகிய நகைச்சுவைநேர்மைசமயோசிதம்இன்முகம்விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள்.
* 9. ஒவ்வொருவரையும் வெவ்வேறு புதுப்புது வழிகளில் கையாளுங்கள்
* 10.ஓஹோஇவர் இப்படித்தான் என்று யாரையும் பார்த்த மாத்திரத்தில் மதிப்பிடாதீர்கள்.

வாழ்க்கையில் நல்வழிகளைக் கடைப்பிடிப்போம். வெற்றியை எட்டிப் பிடிப்போம்.

சமுதாய மரபுகளில் குழப்பம் ஏற்படுத்தக் கூடாது முஸ்லிம் லீக் வேண்டுகோள்


ஈதுப் பெருநாள் அறி விப்பு செய்வது தலைமை காஜிதான். அதை பின் பற்றித்தான் முஸ்லிம்கள் பெருநாள் கொண்டாடுவர். தமிழக முஸ்லிம் சமுதா யத்தில் தொன்று தொட்டு நீடித்து வரும் சமுதாய முறைகள், சன்மார்க்க மரபு கள் எத்தகைய குழப்பங் களும் இல்லாமல் தொடர வேண்டும். அதற்கு சமுதாய மக்கள் தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழகத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை எருக்கஞ்சேரி யில் நடைபெற்ற வட சென்னை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயல் வீரர்கள் கூட் டத்தை தொடர்ந்து செய்தி யாளர்களிடம் பேசுகை யில் அவர் குறிப்பிட்ட தாவது-

முஸ்லிம் சமுதா யத்தைப் பொறுத்தவரை பக்ரீத், ரமளான் பெரு நாட்கள் எப்போது வரு கிறது? எந்த நாளில் இதைக் கொண்டாட வேண்டும்? என்பதை அறிவிப்புச் செய்யும் அதிகாரம் தமிழக அரசால் அங்கீகரிக்கப் பட்ட தலைமை காஜியி டம் மட்டுமே உள்ளது. மஹல்லா ஜமாஅத் நிர்வாகிகளோ, சங்கைக் குரிய உலமாக்களோ, நம் பத்தகுந்த நபர்களோ அவர் கள் வசிக்கும் பகுதிகளின் தலைப்பிறையை பார்த்தா லும் அந்தத் தகவலை முறைப்படி தலைமை காஜிக்கு தெரிவித்து அதை அவர் ஊர்ஜிதம் செய்து அதன் பின்பே பெரு நாட் களை பற்றிய தகவலை அல்லது ரமளான் முதல் நோன்பை அறிவிப்புச் செய்கிறார்.

பக்ரீத் பெருநாள் வரும் 17-ம் தேதிதான்
இந்த அடிப்படையில் இந்த வருடம் பக்ரீத் பண்டிகை என்னும் புனித ஹஜ்ஜுப் பெருநாள் வரும் 17-ம் தேதி புதன்கிழமை என்று தலைமை காஜி டாக்டர் முஃப்தி ஸலா ஹுத்தீன் முஹம்மது அய்யூப் அறிவித்துள்ளார்.

இதனை ஏற்றுக் கொண்டு ஒட்டு மொத்த சமுதாயமும் பெருநாள் கொண்டாட ஆயத்தமாக உள்ள நிலையில், சிலர் தங்களை விளம்பரப் படுத்திக் கொண்டு சமு தாயத்தில் குழப்பம் விளை வித்து ஆதாயம் தேட வேண்டும் என்ற நோக் கோடு பக்ரீத் பெருநாள் 16-ம் தேதி என்றும், 18-ம் தேதி என்றும் அறிவிப்பு களை வெளியிட்டு பெரு நாள் தொழுகை நடத்து வதற்கான ஆயத்தங்களை யும் செய்து வருகின்றனர்.

சமுதாயத்தின் ஒற்றுமையை மஹல்லா ஜமாஅத் கட்டுப்பாட்டை அடியோடு தகர்ப்பதற்கு செய்யப்படும் இந்த விஷமத்தனத்தை சமுதாயம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. இத்தகைய போக்கை தடுத்து நிறுத்துவது சமுதாயத்தின் கட்டாய கடமையாகும். எனவே தலைமை காஜி அறிவித்த 17-ம் தேதிக்கு முன்போ அல்லது பின்போ பக்ரீத் பெருநாள் என்று பொது இடத்தில் தொழுகை நடத்த யாரா வது அனுமதி கேட்பார் களேயானால் தமிழக அரசு மாவட்ட நிர்வாகங்கள், காவல் துறை அதனை ஏற்காமல் அனுமதி மறுக்க வேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கி றோம்.

தீபாவளி இன்னொரு நாள் என்று, இந்துவோ கிறிஸ்துமஸ் மறுநாள் என்று கிறிஸ் தவரோ அறிவித்து விட்டு அவர்கள் நடமாட முடியாது. அந் தந்த மதங்களைச் சார்ந்த வர்கள் அதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆனால், முஸ்லிம்களில் மட்டும் யார் வேண்டு மானாலும் எத்தகைய அறிவிப்பையும் செய்து விட்டு சமுதாயத்தை கேலிப் பொருளாக் குகிறார்கள். இதனால் சமுதாய ஒற் றுமை கேள்விக்குரிய தாகின்றது.

ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள், சிவசேனா போன்ற இந் துத்துவ அமைப்புகள் செய்ய முடியாத ஒன்றை இஸ்லாத்தின் பெயரால் முஸ்லிம்கள் சிலரே செய்யத் துணிகிறார்கள் என்றால் அதை பொறுத் துக் கொண்டிருக்க முடி யாது. சமுதாய கண்ணியத்தை காப்பாற்றுவோம்
முஸ்லிம் சமுதாயத்தின் கண்ணியத்தை காப் பாற்றுவதும், மஹல்லா ஜமாஅத்தின் ஐக்கியத்தை நிலை நாட்டுவதும் இப் போது நமது தலையாய கடமையாகி விட்டது.

எனவேதான், டிசம்பர் 11-ம் தேதி சென்னை தாம்பரத்தில் நடத்துகின்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டின் காலை அமர்வை மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சியாக நடத்தி அதிலே சமுதாயப் புரவ லர்கள், சன்மார்க்க அறிஞர் கள், மஹல்லா ஜமாஅத் நிர்வாகிகளையெல்லாம் பங்கேற்கச் செய்து மஹல்லா ஜமாஅத் கட்டுப் பாடு, ஷரீஅத் பஞ்சாயத்து, பைத்துல்மால், கவி அபி விருத்தி போன்ற தலைப்பு களில் கருத்தரங்கமும் நடத்தவிருக்கிறோம்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு விளம் பரம் தேடுவதற்கு இந்த மாநாடு அல்ல. சமுதாய ஒற்றுமை மூலமே சமுதா யத்தின் மானம் மரியாதை காப்பாற்ற முடியும். சமு தாய ஒற்றுமை நிலைக்க வேண்டுமானால் மஹல்லா ஜமாஅத் கட்டுப்பாடு என்பது பலம் பொருந் தியதாக அமைய வேண் டும்.

எனவே, ஒவ்வொரு மஹல்லாவைச் சார்ந்த வர்களும் குடும்பத்தோடு இந்த மாநாட்டில் பங் கேற்க வேண்டும்.

இவ்வாறு தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் குறிப்பிட்டார்.

ஞாயிறு, 13 மே, 2012

தாய்மை (கவிதை)



ஆணினத்திற்கே கிடைக்காத பாக்கியம்
பெண்னினம் மட்டுமே பெற்று வந்த பரிசு!

ஒரு கவளம் சோற்றைக் கூட - அதிகமாய்
உட்கொள்ளாத வயிறு..!

ஒரு உயிரையே உள்ளே வளரச் செய்யும்
உலக அதிசயம்..!

எவ்வளவுதான் விஞ்ஞான வசதிகள் வந்தாலும்
கருவறையை விடப் பாதுகாப்பான அறையை
குழந்தைக்கு தர யாருக்கு முடியும்..?

இறைவனின் வல்லமைக்கு இதனை விட
சான்று வேண்டுமா..?

பத்து நிமிடம் சுமந்தால் தோள் கனத்துப் போகிறது
பத்து மாதம் சுமந்தாலும் கருவறை கனப்பதில்லை..!

வலி என்றாலே உயிர் போகிறது என்பார்கள் - ஆனால்
இந்த வலியில் மட்டுமே உயிர் வரும்..!

குழந்தையாய்...
சிறுமியாய்...
குமரியாய்...
மனைவியாய் வளரும் உறவு
தாய்மையில்தான் தன்னிறைவு பெறுகிறது..!

கொஞ்சும் போது தனக்கும் ஆனந்தம் வருவதாலேயே
தகப்பன் கூட குழந்தையை கொஞ்சுவது சாத்தியம்ஸ!

நள்ளிரவில் குழந்தையின் அழுகை
எல்லோருக்கும் எரிச்சல்
தாய்மைக்குத்தான் பதட்டம்..!

வாழைப்பழ தோலில் வழுக்கி விழுந்தால்
அனைவரும் சிரிப்பார்கள் - ஏன்
மனைவி கூட மறைவாய் சிரிப்பாள் - ஆனால்
சிரிக்காதவள் தாய் மட்டுமே...!

தாய்மையின் மகத்துவத்தை எத்தனை
தத்துவமாயும் தத்ரூபமாயும் சொல்லலாம் - எல்லாவற்றையும் விட
அல்லாஹ்வின் தூதர் அழகாய்ச் சொன்னார்கள்
தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறதென்று...!

கவிதை: வி.அ.உவைஸ்

புதன், 9 மே, 2012

சிப்பாய் கழகம் துவங்கியது(1857) - 1


பிரிட்டீஷாரின் அதிகாரம் இந்தியா முழுவதும் பரவியிருந்த காலகட்டம். தங்களது ஆட்சி விரிவாக்கத்திற்காக ராஜாக்கள், நவாப்கள் மட்டுமல்லாமல் டில்லி முகலாய மன்னர்களின் ஆட்சியிலும் தலையிட்டனர். மன்னர்களுக்கு பிறந்த நாள் பரிசளிக்கும் வழக்கத்தை நிறுத்தினர்.

இந்தச் சூழலில் தான் 1837 –இல் பகதுர்ஷா ஜஃபர் டில்லி அரியணையில் ஏரினார். மக்கள் மத்தியில் பகதுர்ஷாவுக்கு இருந்த செல்வாக்கை முறியடிக்க பிரிடடீஷார் செய்த முயற்சிகள் பல.

1847 - இல் ஆங்கில அதிகாரி கெய்த் தன் மனைவிக்கு எழுதிய கடிதத்தில், நாளை ஈத் பெருநாள். முஸ்லிம்கள் மாடுகளைக் குர்பான் (பலி) கொடுப்பர். இந்துக்களின் புனித வழிபாட்டுக்குரியதான மாடுகளை முஸ்லிம்கள் குர்பான் கொடுப்பதா? என்று இந்துக்கள் கொதித்தெழும் சூழலை உருவாக்கியுள்ளேன். எனவே நான் நாளை டில்லியில் இந்து - முஸ்லிம் கலவரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். 

நான் எதிர் பார்க்கும் நல்ல செய்தியும் அதுவாகத்தான் இருக்கும். என்று பகதுர்ஷா ஆட்சியை சீர்குலைக்க இந்து - முஸ்லிம் கலவரத்தைத் தூண்டிவிடும் தன் எண்ணத்தை வடித்துள்ளான்.

இந்த நாசப்பின்னணியை அறிந்த பகதுர்ஷா ஈத் பெருநாளுக்கு முந்திய நாள் இரவு, "ஆடுகளை மட்டுமே குர்பான் கொடுக்க வேண்டாம் மாடுகளை வெட்டக்கூடாது" - என்று பிரகடனப் படுத்துகிறார்.

நடக்க இருந்த கெய்த்தின் சூழ்ச்சி கானல் நீரானது. ஏமாற்றம் அடைந்த கெய்த் தனது மனைவிக்கு எழுதிய அடுத்த கடிதத்தில், 

"என் எண்ணம் ஈடேறவில்லை. வருத்தமாக இருக்கிறது. பகதுர்ஷா முந்திக் கொண்டார்" - என்று எழுதியுள்ளான். இப்படி பிரிட்டீஷ் அரசாங்கம் பகதுர்ஷாவுக்கு கொடுத்த இன்னல்கள் ஏராளம். 

பிரிட்டீஷாரை இந்தியாவை விட்டு விரட்ட தீவிரமாக சிந்தித்து வந்த பகதுர்ஷாவின் தலைமையில் மிகப்பெரிய திட்டம் உருவானது.

இந்தியாவின் புதல்வர்களே! உறுதியுடன் முடிவு செய்து கொண்டோமேயானால், எதிரியை நொடியில் அழித்துவிட நம்மால் முடியும்.

அவனை முடித்து உயிரினும் அருமையான நமது நாட்டையும், சமயங்களையும், அவற்றை எதிர்பட்டுள்ள அபாயங்களிலிருந்து காப்போம். என்ற அரசு பிரகடனத்தைத் துணிச்சலுடன் வெளியிட்டார்.

தேசத்தின சுதந்திர விரும்பிகளான ராஜாக்கள், நவாப்கள், சிறுபரப்புகளை ஆளும் தலைவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, பிரிட்டீஷாருக்க எதிரான ஒன்றுபட்ட எதிர்ப்புக்கு போர் தொடுக்க திட்டம் வகுக்கப்பட்டது. 

அத்திட்டத்தைச் செயல்படுத்த 1857 மே மாதம் 31-ஆம் தேதியையும் தேர்ந்தெடுத்தனர்.

ஹிந்துக்களும் முஸ்லிம்களும் தோளோடு தோள் நின்று தேசத்தின் சுதந்திரத்திற்காகப் போர் புரிய வேண்டும் என்றும், இந்தியா சுதந்திரம் பெற்றதும் இந்திய மன்னர்களின் தலைமையில் ஐக்கிய அரசாங்கத்தை அமைக்க வேண்டுமென்றும் முடிவெடுத்தனர்.

இம்முயற்சியில் ஒன்றுபட்ட ஜான்ஸிராணி லடசுமிபாய், நானா சாஹிப், தாந்தியா தோப், ஒளத் பேரரசி பேகம் ஹஜரத் மஹல், பீஹாரின் சிங்கம் குவர்சிங், மௌல்வி அஹமதுல்லா ஷாஹ், ஹரியானா - ராஜஸ்தான் - மகாராஷ்டிரா மன்னர்கள் மே 31-ஆம் தேதிக்காக - ஒன்று பட்டு ஆங்கிலேயரை ஒழித்துக்கட்டும் அந்நாளுக்காக காத்திருந்தனர்.

ஹிந்துஸ்தான் சரித்திரத்திலேயே மிகப்பிரசித்திப் பெற்ற அந்த நாட்களை (1857 மே மாதம்) நாம் ஒரு காலத்திலும் மறக்க முடியாது. இந்துக்களும் முஸ்லிம்களும் விரோதிகளல்ல என்பதும், சகோதரர்களே என்பதும் அப்போதுதான் உலகமறிய பிரகடனம் செய்யப்பட்டது.