ஞாயிறு, 11 டிசம்பர், 2011

அயோத்தி ராமன் அழுகிறான்

- கவிப் பேரரசு வைரமுத்து (06.12.1992)


கங்கை காவிரி இணைக்க வேண்டும்
கர சேவகரே வருவீரா
காடுகள் மலைகள் திருத்த வேண்டும்
கர சேவகரே வருவீரா
வறுமைக் கோட்டை அழிக்க வேண்டும்
கர சேவகரே வருவீரா

மாட்டீர்கள் சேவகரே மாட்டீர்கள்
நாம் உடைப்பதற்கே பிறந்தவர்கள்
படைப்பதற்கில்லை
வித்துன்னும் பறவைகள்
விதைப்பதில்லை

விளைந்த கேடு
வெட்கக் கேடு
சுதந்திர இந்தியா
ஐம்பதாண்டு உயரத்தில்
அடிமை இந்தியன்
ஐநூறு ஆண்டு பள்ளத்தில்

நாடாளுமன்றமே
வறுமைக் கோட்டிற்குக் கீழ்
நாற்பது கோடிப் பேர் என்றாய்
அறிவுக் கோட்டின் கீழ்
அறுபது கோடிப் பேர்
அதை மட்டும் ஏன்
அறிவிக்க மறந்தாய்

மதம் ஓர் பிரம்மை
மதம் ஓர் அருவம்
அருவத்தோடு என்ன
ஆயுத யுத்தம்
மதம் என்பது ஓர்
வாழ்க்கை முறை, சரி
வன்முறை என்பது
எந்த முறை

கட்டிடத்தின் மீது எப்போது
கடப்பாரை விழுந்ததோ
அப்போதிருந்தே
சரயு நதி
உப்புக் கரித்துக் கொண்டு
ஓடுகிறது..
சீதை சிறைப் பட்டப்பின்
இப்போதுதான் ராமன்
இரண்டாம் முறை அழுகிறான்

மாண்பு மிகு மத வாதிகளே
சில கேள்விகள் கேட்பேன்
செவி தருவீரா

அயோத்தி ராமன்
அவதாரமா மனிதனா
அயோத்தி ராமன்
அவதாரமெனில்
அவன்
பிறப்புமற்றவன்
இறப்புமற்றவன்
பிறவாதவனுக்கா
பிறப்பிடம் தேடுவீர்

அயோத்தி ராமன்
மனிதனெனில்
கற்பத்தில் வந்தவன்
கடவுளாகான்
மனித கோவிலுக்கா
மசூதி இடித்தீர்

போதும்
இந்தியாவில்
யுகம் யுகமாய்
ரத்தம் சிந்தியாயிற்று
இனிமேல்
சிந்தவேண்டியது
வியர்வைதான்
நம் வானத்தை
காலம் காலாமாய்
கழுகுகள் மறைத்தன

போகட்டும்
இனிமேலேனும்
புறாக்கள் பறக்கட்டும்

(
பாபர் மசூதி இடிக்கப்பட்ட அந்த நாளில்
இடிந்து போய் எழுதியது என்று
கவிப் பேரரசு எழுதிய இந்த கவிதை
தமிழுக்கு நிறமுண்டு என்ற நூலில்
வெளிவந்துள்ளது..)

பாரதியார் உட்கார்ந்த நாற்காலி!

(ஆனந்த விகடன் - 13.9.1964)

"இதுதான் பாரதியார் குடியிருந்த வீதி!'' என்றார் புதுவை நண்பர்.

''இந்த வீதிக்குப் பெயர்..?''

''ஈசுவரன் கோயில் தெரு!''

கிழக்கு மேற்காகச் செல்லும் அந்த வீதி, கடற் கரையில் போய் முடிகிறது.

''பத்துப் பன்னிரண்டு வருஷ காலம் இந்தத் தெருவில்தான் குடியிருந்தார். அதோ தெரிகிறது பாருங்கள், இடது சாரியில் இருபதாம் நம்பர் வீடு... அதுதான் பாரதியார் குடியிருந்த வீடு!''

கவியரசர் வாழ்ந்த அந்த மாடி வீட்டையே சற்று நேரம் இமை கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். பூட்டப்பட்ட கதவுகளுடன் பாழ்பட்டு நின்ற அந்த இல்லத்தின் தோற்றம், என் உள்ளத்தில் ஏதேதோ சிந்தனைகளைக் கிளறிவிட்டன.

பாரதியாரின் இல்லத்துக்கு அடுத்த வீட்டு வாசல் திண்ணையில், சாதுவாக ஒரு மனிதர் உட்கார்ந்தபடி எங்களைக் கவனித்துக்கொண்டிருந்தார். அவர் நெற்றியிலே பளிச்சென்று திருநீறு ஒளி வீசிக்கொண்டிருந்தது.

''அடுத்த வீட்டில்தானே பாரதியார் குடியிருந்தார்?'' என்று மெதுவாக அவரிடம் விசாரித்தேன்.

''ஆமாம். இப்போது அது என் வீடு. 1953-ல் நான் விலைக்கு வாங்கிவிட்டேன். பத்து வருஷமா சும்மாவேதான் பூட்டி வெச்சிருக்கேன். போன வருசமே சர்க்கார்லே இந்த வீட்டை வாங்கறதா இருந்தது. இந்த வருசத்துக்குள்ளேயாவது முடிஞ்சுடும்னு எம் புத்தியிலே படுது. தனிப்பட்டவங்க யாருக்கும் இதை விக்க றதா உத்தேசமில்லை. சிவாஜி கணேசன் கூட வந்து பார்த்துட்டுப் போனாரு...''

''நீங்க பாரதியாரை நேரிலே பார்த் திருக்கீங்களா? பேசியிருக்கீங்களா?''

''பார்க்காமல் என்ன? அடுத்த வீட்டு லேதானே பத்து வருசத்துக்கு மேல இருந் தாரு! கவர்மென்ட்டுக்கு விரோதமாக இங்கே வந்தாரு. தங்கமான குணம். எல்லார்கிட்டேயும் சகஜமா பழகுவாரு. குழந்தைங்களைக் கண்டால் தூக்கிட்டுப் போய் விளையாடுவாரு. குழந்தைங்க ஏணையிலே தூங்கிக்கிட்டு இருந்தாக் கூட தூக்கிட்டுப் போயிடுவாரு. குழந் தைங்கன்னா அவ்ளோ பிரியம்! அவரும் சரி, அவர் பெண்ஜாதியும் சரி... ரொம்ப நல்ல குணம். ஒருத்தரையும் கடுமையாப் பேசமாட்டாரு. யார் கூப் பிட்டு சாப்பாடு போட்டாலும் சாப்பிடு வாரு. வித்தியாசமே கிடையாது.''

''பார்க்க எப்படி இருப்பார்?''

''எப்பப் பார்த்தாலும் கறுப்புக் கோட்டு ஒண்ணு போட்டுக்கிட் டிருப்பாரு. தலையிலே ஒரு துணியைச் சுத்திக்குவார். மாடி மேலே உலாத்திக் கிட்டே பாடிக்கிட்டிருப்பார்.''

''எந்தப் பாட்டாவது ஞாபகம் இருக்குதா?''

''அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க. அந்தக் காலத்திலே இவர் இவ்வளவு பெரிய ஆசாமியாவார்னு தெரிஞ்சிருந்தா, கொஞ்சம் உன்னிப்பாவே கவனிச்சிருக்கலாம்!''

''அவர் உங்களோடு பேசி யிருக்காரா?''

''ஆமாம். 'என்ன செட்டி யாரே'ன்னுதான் கூப்பிடு வார்.''

''உரக்கப் பாடுவாரா?''

''பெரிய குரல் கொடுத்துத் தான் பாடுவார். பேச்சும் அப்படித் தான் ஆவேசமாயிருக்கும். எப்ப வும் ஒரு வேகம்தான்; ஆவேசந்தான். சில சமயம் 'ஓம் சக்தி! ஓம் சக்தி'ன்னு கூவுவாரு. சின்னக் குரலே கிடையாது. உறைப்பாப் பேசுவாரு. அடிக்கிறாப் போல இருக்கும். 'என்னடா இவர் இப்ப டிப் பேசறாரே'னு கூடத் தோணும். அது அவரு சுபாவம். கவர்மென்ட் பேரிலே இருக்கிற வெறுப்பு அப்படி...''

''உங்க பேரு?''

''கு.மா.சி.எம். அண்ணாமலைச் செட்டியார்.''

''செட்டிநாடா?''

''இல்லே. இந்த ஊரேதான். இவர் என் மகன். காளத்தின்னு பேரு.''

''எதிர் வீட்டிலே ராஜரத்தினம் செட்டியார் இருக்கிறார். அவருக் கும் பாரதியாரோடு பழக்கம் உண்டு. அவர் வீட்டிலே பாரதி யார் உட்கார்ந்த நாற்காலி கூட ஒண்ணு இருக்குது. பார்த்துட்டுப் போங்க. வாங்க, நானே அழைச் சிட்டுப் போறேன் அவரிடம்'' என்று கூறி, எங்களை எதிர் வீட் டுக்கு அழைத்துச் சென்றார் காளத்தி.

''ரொம்பக் கஷ்டம்தாங்க அவ ருக்கு, அந்தக் காலத்திலே! எந்த நேரமும் யூனியன் போலீஸ் ஸி.ஐ.டி-ங்க தெருக் கோடியிலே இருந்துக்கிட்டு 'வாச்' பண்ணிக் கிட்டே இருப்பாங்க. அப்பெல் லாம் அவரைக் காப்பாத்தினது ரௌடி வேணுதான்'' என்றார் ராஜரத்தினம் செட்டியார்.

''என்ன? ரௌடி வேணுவா?!''

''ஆமாங்க! பாரதியார்கிட்டே அவனுக்கு என்னவோ அவ்வளவு அன்பு. அவர் கூடவே இருந்து பந்தோபஸ்து கொடுப்பான். பாரதியார் அவன் கூடத்தான் தென்னந்தோப்புப் பக்கமெல்லாம் உலாத்தப் போவாரு. 'பாரதியாரை புதுச்சேரி பார்டர் தாண்டி இட் டுக்கிட்டு வந்துடு. ஆயிரம் ரெண் டாயிரம் தரேன்'னு இங்கிலீஷ் போலீஸ் சொல்லுவாங்க. ஆனா லும் வேணு ரொம்ப நேர்மையான வன். பாரதியாருக்கு உண்மையாய் இருந்தான். கடைசி வரைக்கும் அவரைக் காப்பாத்தினான்.''

''உங்களுக்கு அப்ப என்ன வயசு இருக்கும்?''

''இருபதுக்குள்ளே இருக்கலாம். அவருக்கு முப்பது இருக்கலாம்.''

''அவர் பாடறப்போ நீங்க கேட்டிருக்கீங்களா?''

''உம். மெத்தையிலேருந்து உரக்கப் பாடுவாரு. காளி பூஜை பண்ணுவாரு. சுதேசமித்திரன் ஆபீசிலேருந்து மாசா மாசம் முப்பது ரூபா வரும் அவருக்கு. அதிலேதான் ஜீவனம். ஏழு ரூபாயோ என்னமோதான் வாடகை. அதையே அவரால கொடுக்க முடியாது. ஒரு நாள் அவர் சம்சாரம் வந்து 'ராஜம்! - அந்தம்மா என்னை ராஜம் ராஜம்னுதான் கூப்பிடும் - அவச ரமா எனக்கு ஏழு ரூபா கொடு. இந்த நாற்காலியை வெச்சுக்கோ. இதை விலைன்னு வெச்சுக்க வேணாம். உதவி செய்யறதா நினைச்சுக் கொடு'ன்னாங்க. இன்னுங்கூட அந்த நாற்காலி இருக்குது. பத்திரமா வெச்சிருக் கேன். பிரம்பு பின்னின நாற்காலி. நாலு ரூபா கூட பெறாது. பிரம்பு கூட மேலேதான் பின்னினோம். அடியிலே இருப்பது அப்படியே தான் இருக்குது. மாத்தல்லே. கடையிலே இருக்குது நாற்காலி. போய்ப் பாருங்க. டேய்... இவங் களை அழைச்சுக்கிட்டுப் போய்க் காட்டுடா! ரொம்பப் பேரு வந்து பாக்கறாங்க. 'எனக்குக் கொடுத் துடு'ன்னு கேக்கறாங்க. பாரதியார் ஞாபகார்த்தமா இருக்கட்டும்னு யாருக்கும் கொடுக்கல்லே!'' என் றார் ராஜரத்தினம் செட்டியார்.

அவருடைய பேரனுடன் சென்று அந்த நாற்காலியைத் தரிசித்தோம்.

சித்திரக்காரர் அதைப் படம் வரைந்துகொள்ளும் நேரத்தில் நான் அதைத் தொட்டு, நகர்த்தி, நிமிர்த்திப் புரட்டிச் சாய்த்துக் கவிழ்த்து ஒருக்களித்து எத்தனை கோணங்களில் எப்படியெல்லாம் பார்க்கமுடியுமோ அத்தனை கோணங்களிலும் ஆசை தீரப் பார்த்தேன்.

கடைசியாகக் கவியரசரின் ஆசனத்தைத் தொட்டு வணங்கி விட்டுப் புதுவையிலிருந்து ஒரு புதிய உணர்ச்சியோடும் ஊக்கத் தோடும் திரும்பி வந்தேன்.

என் மூச்சிலே இப்போது ஒரு சக்தியே பிறந்திருக்கிறது!

****

புரட்சி தெரியுமா புரட்சி?


இன்றும் நாம் நடைமுறைப்படுத்தத் தயங்கும் விதவை மறுமணத்தை வலியுறுத்திய முதல் தமிழன் மகாகவி பாரதி!

பாரதி எழுதி முற்றுப்பெறாத 'சந்திரிகையின் கதை' என்ற நாவலில் விதவை மறுமணத்தை வலியுறுத்து கிறார். கோமதி என்ற பெண் தன் மரண காலத்தில், அருகிலிருந்த விசாலாக்ஷி என்பவளிடம் கூறுகிறாள்...

''... நீ விவாகம் செய்துகொள். விதவாவிவாகம் செய்யத்தக்கது. ஆண்களும் பெண் களும் ஒருங்கே யமனுக்குக் கீழ்ப்பட்டிருக்கிறார்கள். ஆதலால், ஆண்களுக்குப் பெண்கள் அடிமைகளாய், ஜீவனுள்ள வரை வருந்தி வருந்தி மடியவேண்டிய அவசியமில்லை! ஆதலால், நீ ஆண்மக்கள் எழுதி வைத்திருக்கும் நீசத்தனமான சுயநல சாஸ்திரத்தைக் கிழித்துக் கரியடுப்பிலே போட்டுவிட்டு, தைரியத்துடன் சென்னைப் பட்டணத்துக்குப் போய், அங்கு கைம்பெண் விவாகத்துக்கு உதவி செய்யும் ஸபையாரைக் கண்டு பிடித்து, அவர்கள் மூலமாக நல்ல மாப்பிள்ளையைத் தேடி, வாழ்க்கைப்படு..!''

- 'சந்திரிகையின் கதை' முதல் அத்தியாயத்தில்!

சனி, 10 டிசம்பர், 2011

சொர்க்கம் புகும் ஒரு கூட்டம் எது ?

எனது உம்மத்துக்கள் எழுபத்திரண்டு கூட்டங்களாக பிரிவார்கள். அவற்றில் ஒரு கூட்டத்தைத் தவிர அனைத்துக் கூட்டத்தினரும் நரகில் நுழைவார்கள். என்று நவின்றார்கள் நபீகள் நாதர் (ஸல்) அவர்கள். அங்கிருந்த தோழர்கள் அந்த ஒரு கூட்டம் யார் என்று நபீகளிடம் கேட்டனர். அதற்கு நபீகள் அவர்கள் “ நானும் எனது தோழர்களும் இருந்த கொள்கையில் இருந்தவர்கள் ” என்று பதிலளித்தார்கள். பிறிதொரு ஹதீதின்படி “ நானும் எனது குடும்பமும் இருந்த கொள்கையில் இருந்தவர்கள் ” என்று நவின்றார்கள். இந்த நபீ மொழியில் இருந்து “ லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் றஸூலுல்லாஹ் ” என்று நம்பி, மொழிந்து வழி நடந்தவர்களான நபீகள் நாதரின் “ உம்மத் ” சமூகத்தவர்தான் 72 கூட்டமாக பிரிவார்கள் என்றும், அவர்களில் ஒரு கூட்டம்தான் சொர்க்கம் நுழையும் என்றும், ஏனைய எழுபத்தொரு கூட்டத்தவரும் நரகில் நுழைவார்கள் என்றும் சொர்க்கத்தில் நுழையும் ஒரு கூட்டம் நபீகளின் – அவர்களின் தோழர்களின், குடும்பத்தவரின் வழி நடந்தவர்கள் என்றும் தெளிவாகிறது.

இதில் வியப்பும் அதிசயமும் என்னவெனில் கலிமஹ்வை ஏற்ற எழுபத்திரண்டு கூட்டத்தில் ஒரு கூட்டம் மட்டும் நேர்வழி பெற்று சொர்க்கம் நுழையும் என்று குறிப்பிட்டதாகும். இன்று எமது நாட்டை மட்டுமல்ல உலகைப் பார்க்கும் போது இஸ்லாமியரிடையே பலதரப்பட்ட கொள்கையுடையோர் காணப்படுகின்றனர். ஒவ்வொரு கூட்டத்தவரும் தாம் சொல்லும் கொள்கை குர்ஆனிலும் ஹதீஸிலும் இருப்பதாகவே சொல்கின்றனர். எமது முன்னோர்கள் பல நூற்றாண்டுகளாக செய்துவந்த “சுன்னத் வல் ஜமாஅத்” கொள்கை அனுட்டானங்களை மறுக்கின்றனர். அவை இஸ்லாத்திற்கு முரணான ஷிர்கான கொள்கை என்றும் அவற்றைப் பின்பற்ற கூடாதென்றும் பகிரங்கப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். குர்ஆனையும், ஹதீஸையும் மட்டுமே ஆதாரம் எடுக்க வேண்டும் என்றும் இஜ்மாஉ, கியாஸ் ஆகியவை இஸ்லாமிய மூலாதாரங்களல்ல என்றும் பறைசாற்றுகின்றன. இன்னோரின் கூற்றுக்களை நாமும் சீர்தூக்கிப் பார்த்திடும் போது நபீகள் சொல்லி வைத்த 71 கூட்டத்தவர்கள் இவர்கள்தான் என்பது தெளிவாகிறது. இந்த 71 கூட்டத்தவர்களும் இன்று எழுபத்தோராயிரம் கூட்டங்களாக பிரிந்துள்ளனர். மத்ஹபுகளைப் பின்பற்றக் கூடாதென்றும் அம்மத்ஹபுகளின் இமாம்கள் வழிகேடர்கள் என்றும் இவர்கள் சொல்வது விந்தையும், வியப்புக்குரியதுமாகும். நபீகள் (ஸல்) அவர்கள் எனது ( சொல், செயல், நடைமுறை – வழிமுறை ) சுன்னத்தைப் பற்றிப் பிடித்து கொள்ளுங்கள்.

இன்னும் குலபாஉர்றாஷிதீன்களின் சுன்னத்தையும் பற்றிப் பிடித்து கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். வழிகேடர்களின் கருத்து சரியெனில் எனது சுன்னஹ்வை மட்டும் பற்றிப் பிடியுங்கள் என்று மட்டும் நபீகள் திலகம் சொல்லியிருக்க வேண்டும். குலபாஉர்றாஷிதீன்களின் வழிமுறையையும் பற்றிப் பிடித்து கொள்ளுங்கள் என்று சொன்னது மத்ஹபுகளை – இமாம்களை இஜ்மாஉ – கியாஸ் போன்றவற்றையும் பின்பற்றுங்கள் என்று சொன்னதாகும். எனவே அன்றும் இன்றும் நடைமுறையிலுள்ள சுன்னத் வல் ஜமாஅத்தின் கொள்கை கிரியைகளை பின்பற்றி நடப்பது மேற்கூறப்பட்ட ஹதீதின் ஆதாரப்படி இஸ்லாம் ஏற்ற கொள்கை, கிரியை என்பதை நாம் விளங்குவதுடன் அதை ஏற்று நடப்போரே நபீகள் (ஸல்) சொர்க்கம் நுழையும் ஒரு கூட்டம் என்று குறிப்பிட்டோருமாகும்.

இதற்கு மாற்றமாக நடப்போரை அவர்கள் கோடிக்கணக்கில் இருப்பினும் நபீகள் குறிப்பிட்ட எழுபத்தொரு கூட்டத்தவராகும். எனவே, நாம் வழிகேடர்களின் போலி கூச்சலுக்கு ஏமாந்து போகாமல் இஸ்லாத்திற்கு முரணான அவர்களது நவீன கொள்கையை ஏற்காமல் நாமும் எமது முன்னோரும் வழி நடந்த சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையில் வாழ்ந்து அக்கொள்கையில் மரிப்போமாக. இறைவன் எம்மனைவரையும் நபீகள் திலகம் முஹம்மது (ஸல்) அவர்களையும் அவர்களது குடும்பத்தவரையும் தோழர்களையும் அவ்லியாஉகளான இறைநேசர்களையும் நேயம் வைத்து வாழ்ந்தவர்களாக ஆக்குவானாக மறுமையில் அவர்களுடன் இருப்பதற்கு அருள் புரிவானாக ! ஆமீன்

ஹக்கும், கல்கும் ஒன்றா?

ஹத்தாத் இமாம் தரும் விளக்கம்.

இமாம் ஹத்தாத் (ரஹ்) அவர்களின் இயற்பெயர் அப்துல்லாஹ் அவர்கள் ஹூசைன் (ரலி) அவர்களின் வழியில் வந்தவர்கள். இவர்கள் தம் மூதாதையின் பெயரால் “ஹத்தாதி” என்று அழைக்கப்பட்டார்கள். இவர்கள் ஹிஜ்ரி 1044 இல் தர்யம் எனும் ஊரில் பிறந்தார்கள். பல அறிஞர்களிடமும், குறிப்பாக காளி ஸஹல் இப்னு அஹ்மது பாஹஸன் என்ற பெரியாரிடம் கல்வி கற்ற இவர்கள், சிறந்த அறிஞராகவும், மார்க்க மேதையாகவும், மெஞ்ஞானியாகவும் ஆகி பெரிய இமாமென மக்களால் பிற்காலத்தில் பாராட்டுப் பெற்றார்கள்.


பெரியார்களின் அடக்க விடங்களைத் தரிசிப்பதில் பேரார்வம் காட்டிய இவர்கள், ஹூது (அலை) அவர்களின் அடக்க விடத்தைத் தேடிக் கண்டுபிடித்துத் தரிசனம் செய்தார்கள். ஹிஜ்ரி 1080 இல் மக்கா, மதீனா ஆகிய நகரங்களல் தங்கி மக்களுக்கு அறிவுரை நல்கினார்கள். அப்போது இவர்களிடம் ஏராளமானோர் தீட்சை பெற்றனர்.சிறந்த இறைநேசரச் செல்வரான இவர்கள் தம்மிடம் வருபவர்களின் மனதிலுள்ள விருப்பங்களை “கஷ்பின்” (ஞானோதயத்தின்) மூலம் அறிந்து ஆசீர்வதிப்பார்கள் என்றும், அதன் காரணமாக அவர்களின் விருப்பங்கள் நிறைவேறின என்றும் கூறுவர்.இவர்கள் ஹிஜ்ரி 1132 இல் காலமானார்கள். இவர்கள் எழுதிய நூல்கள் அன்னஸாயிஹூத்தீனிய்யா, ரிஸாலதுல் மஜீத், இத்திஹாபுஸ் ஸாயில், அல் கிஸ்முத்தாலிது பீ கலாமில் மன்சூர், ரிஸாலதுல் முஆவனா ஆகியவை, அவற்றில் இறுதியாக கூறப்பட்ட நூலின் ஒரு பகுதி தமிழில் காயல்பட்டணம் வள்ளல் வாவு ஷாஹுல் ஹமீது அவர்களின் நினைவாக அவர்களின் மக்களால் அச்சிட்டப்பட்டு வெளிவந்துள்ளது. ஹத்தாது (ரஹ்) அவர்களின் றாதிபு சிறப்பு மிக்கதாகும் அதனை ஓதிய மக்களின் நாட்டங்கள் இறையருளால் நிறைவேறுகின்றன.

இறைவழி நடக்கும் நல்லடியார்களின் ஆத்மீக முன்னேற்றத்தை மனதிற் கொண்டு அவர்கள் இயற்றிய றாதிபு வெள்ளிக்கிழமை தோறும் இந்தியா, இலங்கைபோன்ற நாடுகளிலும், குறிப்பாக இலங்கையின் தென்மாகாணத்தைச் சேர்ந்த ஊர்களிலும் பக்திப் பரவசத்தோடு ஓதப்பட்டு வருகிறது.ஹத்தாது றாதிபு என்ற பெயரால் அழைக்கப்பட்டுவரும் றாதிபு, பல அவ்றாது ஒதல்களை உள்ளடங்கியதாக இருக்கின்றது. அதில் பல அவ்றாதுகளைச் சேர்த்த இமாமவர்கள் முனாஜாத்து அடிப்படையில் பல பாடல்களையும் எழுதியுள்ளார்கள். அவை ஏகத்துவ ஞான தத்துவங்களை விளக்கமாக கூறுகின்றன. அந்தப் பாடல்களிற் சில பின்வருமாறு.

இலாஹில் கல்கு மித்லஹூபாப் அலா மாஅன் லதல் அஹ்பாப் பமாஉன் பில் பனாஇ ஹூபாப் வஹால் பகாஹூ யா அல்லாஹ். பஐன அன இதா அந்தா பிதாதீ தாயிமன் குந்தா பமா பிந்து வலா பிந்தா வலா ‘தா’ பைனனா அல்லாஹ் இறைவா! கல்கு எனும் பிரபஞ்சம் நீரின்மேல் எழுந்து நிற்கும் குமுழிபோன்றது. குமுழி என்பது உண்மையிலேயே அது குமிழியாயிருக்கும்போதும் தண்ணீர்தான்.

அது அழிந்து உடைந்த பின்னும் தண்ணீர்தான். இறைவா! என்னுடைய தாத்திலே (என்னிலே) நீ நிலைபெற்றிருக்கின்றபொழுது ‘அன’ நான் என்பது எங்கே? எனவே நான் உன்னைப் பிரியவுமில்லை, நீ என்னைப் பிரியவுமில்லை. இறைவா! எமக்கிடையில் ‘தே’ என்பதே இல்லை. மேற்கூறப்பட்ட பாடல்கள் மூலம் இமாம் ‘ஹத்தாத்’ (ரஹ்) அவர்கள் தவ்ஹீத் ஏகத்துவ தத்துவத்தை ஒழிப்பு மறைப்பு இல்லாமல் யாரும் எழிதில் புரிந்து கொள்ளும் வகையில் தெளிவான உதாரணத்தின் மூலம் விளக்கியுள்ளார்கள்.

அப்பாடல்களைப் பாடுபவர்களில் அனேகர், அவைகளில் கூறப்பட்ட உண்மையான தத்துவத்தை அறியாமலேயே பாடலை மட்டும் பாடி மகிழ்கிறார்கள்.இவர்கள் பாடலின் இசையில் மயங்கி பலகோணங்களிலும் ஆடி அசைகிறார்களே அல்லாமல்அந்தப் பாடல் தரும் தத்துவத்தையுணர்ந்து பேரின்ப மது மயக்கத்தில் ஆடி அசைபவர்களாக இல்லை.அவர்களுக்கு அறபு மொழியின் பொருள் விளங்காமல் இருப்பதுதான் அதற்கான காரணம். அதில் வியப்பொன்றுமில்லை. ஆனால் உலமாக்கள், மௌலவிகள் எனப்படுவோர் அறபு மொழியறிவு பெற்றிருந்தும் கூட அப்பாடல்களின் உண்மையை உணராமலிப்பது வேதனையாகவும், அவ்வண்மையை உணராமலேயே அதை மறுப்பது விந்தையாகவும் உள்ளது. இமாம் ஹத்தாத் (ரஹ்) அவர்கள் முதற் பாடில் ஹக்தஆலாவுக்கு நீரையும், அவனது படைப்புக்களுக்கு அந்த நீரில் உண்டாகும் குமுழிகளையும் உதாரணம் கூறியுள்ளார்கள்.

மேலும் குமிழி குமிழியாயுக்கும்போதும் அது தண்ணீர்தான். அது உடைந்த பின்னும் தண்ணீர்தான் என்ற தத்துவத்தையும் கூறியுள்ளார்கள். ஹக்தஆலாவுக்கு அவனது படைப்புக்களை உதாரணம் காட்டுவதில் எவ்வித தவறுமில்லை. ஆயினும் அவனது படைப்புக்களில் எதையும் அவனுக்கு நிகரானதென்று கூறக்கூடாது. அவ்வாறு கூறுவது அசாத்தியமானதாகும். ஏனெனில் ‘ஷிர்க்’ இணை எண்பது எதார்த்தத்தில் இல்லாத ஒன்றேயாகும்.

அல்லாஹ்வுக்கு நிகராக எந்தவொரு வஸ்துவும் இல்லை என்று குர்ஆன் கூறுகிறது. ஆயினும் ஒருவரின் எண்ணத்தைப் பொறுத்துதான் ‘ஷிர்க்’ இணை ஏற்படுகிறதேயல்லாமல் ‘ஹகீகத்’ எதார்த்தத்தில் ‘ஷிர்க்’ என்பதே கிடையாது. அல்லாஹ்வுக்கு உதாரணம் உண்டு,ஆனால் அவனுக்கு நிகரில்லை என்பதற்கு குர்ஆன் ஷரீபில் தெளிவான ஆதாரங்கள் உள்ளன. ‘வலில்லாஹில் மதலுல் அஹ்லா’ அல்லாஹ்வுக்கு உயர்ந்த உதாரணம் உண்டு. என்று குர்ஆனில் ஒர் இடத்திலும், ‘வலஹூல் மதலுல் அஹ்லா’ அவனுக்கு உயர்ந்த உதாரணம் உண்டு என்று குர்ஆனில் மற்றோர் இடத்திலும் ஹக்தஆலா கூறியுள்ளான்.எனவே, ஹக்தஆலாவுக்கு அவனது படைப்புக்களை உதாரணமாகக் கூறுவதில்த எவ்வித தவறுமில்லை. ஆனால் ‘மதல்’ என்ற உதாரணத்துக்கும், ‘மித்லு’ என்ற நிகருக்கும் இடையிலுள்ள வித்தியாசம் தெரியாதவர்களுக்கு விளக்கமில்லாததால் ஒருவகை மயக்கம் ஏற்படுவதுண்டு. மேலே கூறப்பட்ட பாடல்களில் இமாம் ஹத்தாத் (ரஹ்) அவர்கள், ஹக்காகிய அல்லாஹ்வுக்கு தண்ணீரை உதாரணமாகவும், கல்காகிய சிருஷ்டிகளுக்கு தண்ணீரினால் உண்டான குமுழியை உதாரணமாகவும் கூறியுள்ளார்கள்.

ஒன்றை இன்னொன்றுக்கு உதாரணம் கூறுவதானால் இரண்டுக்குமிடையில் எந்த வகையிலேனும் தொடர்பு இருத்தல் வேண்டும். இரண்டுக்குமிடையில் எவ்விததொடர்பில்லாமல் உதாரணம் கூறுதல் அர்த்தமற்றதாகும். முகம்மது சிங்கத்தைப் போன்றவன் என்று அவனை சிங்கத்திற்கு உதாரணமாக கூறினால் சிங்கத்துக்கும், முகம்மதுக்குமிடையில் எந்தவகையிலேனும் தொடர்பு இருந்தாக வேண்டும். முகம்மதுவிடம் சிங்கத்திடமுள்ள தன்மைகளில் ஒன்றான வீரம் இருக்குமானால் அவன் சிங்கத்தைப் போன்றவன் என்று கூறலாம். இமாம் ஹத்தாத் (ரஹ்) அவர்கள், ஹக்தஆலாவுக்கு நீரையும், படைப்புக்களுக்கு குமிழியையும் உதாரணம் கூறியிருப்பதால் அந்த உதாரணத்தில் எந்த வகையில் தொடர்பு உண்டு என்பதை ஆராய்ந்தறிதல் அவசியம். இறைவனுக்கும், அவனது படைப்புகளான பிரபஞ்சத்துகுமிடையில் உள்ள தொடர்பு நீருக்கும், குமிழிக்குமிடையிலுள்ள தொடர்ப்பு போன்றதென்பது இமாமவர்களின் உதாரணத்திலிருந்து கிடைக்கப்பெறும் விளக்கமாகும்.

நீருக்கும், குமிழிக்குமிடையிளுள்ள தொடர்பு எத்தகையதென்றால், நீர் இல்லையானால் குமிழி இல்லையென்ற அளவுக்கு அவ்விரண்டுக்குமிடையில் தொடர்பு உண்டு. அதாவது குமுழி என்பது நீர்தான் என்பதாகும், மேலும் நீரில்லாமல் குமுழி உண்டாகவோ அல்லது நிலைபெற்றிருக்கவோ முடியாது. குமுழி என்ற பெயரைப் பெற்றிருப்பது நீரேயல்லாமல் வேறொன்றுமில்லை.குமுழியின் உருவத்தில் தோன்றியது நீரேயல்லாமல் வேறெதுவுமில்லை. குமுழி நீரின் கோலமேயன்றி அதற்கு வேறானதல்ல. குமிழி நீருக்கு வேறானதென்று யாரும் சொல்லவும் முடியாது. அதேபோல் குமுழியில் நீர் இல்லையென்றோ, அல்லது குமுழியின் இன்ன இடத்தில் நீருண்டு இன்ன இடத்தில் நீரில்லை என்றோ நம்பவும் முடியாது.இதேபோல் குமுழிக்கு தனியான, சுயமான ‘வுஜுது’ உள்ளமை கிடையவே கிடையாது. ஆயினும்மந்தக் குமிழி நீரின் ‘வுஜுதை’ உள்ளமையைக் கொண்டுதான் நிலை பெற்றுள்ளது.எனவே, இமாம் ஹத்தாத் (ரஹ்) அவர்களின் தத்துவமிக்க உதாரணத்திலிருந்து ‘ஹுபால்’ எனும் குமுழி, நீரின் வேறாக வெளிப்பாடு என்பதும், நீர்தான் குமிழிக்கு மூலம் என்பதும்,அந்தக் குமுழி தனக்கு மூலமான நீருக்கு எந்த வகையிலும் வேறானதல்ல என்பதும், குமுழி எந்தக் காரணத்தைக் கொண்டும் நீரைப்பிரிந்திருக்க முடியாது என்பதும், குமுழி என்ற பெயர் அதன் உருவத்துக்குரியதல்லாமல் குமுழி என்பது அதன் கருவான நீருக்குரியதல்லவென்பதும்,

குமுழியானது குமுழி என்ற பெயரிலும், உருவத்திலும் இருந்தாலும் எதார்த்தத்தில் அது நீரேயல்லாமல் வேறல்லவென்பதும் தெளிவாகிவிட்டது. இமாம் ஹத்தாத் (ரஹ்) அவர்கள் கூறியுள்ள இவ்வுதாரணத்தின் மூலம் ஹக்தஆலாவினது ‘வுஜுது’ உள்ளமை நீரைப்போன்றதும், அந்த வுஜுதிலிருந்து உண்டான சர்வ சிருஷ்டிகளும் குமுழி போன்றது மாகுமென்பதும் தெளிவாகிவிட்டது. மேலும் நீரின் மேலேழுந்த நாட்டியமாடும் குமுழிக்கூட்டம் நீரைப் பிரியாததாயும்,அந்த குமுழிகள் நீருக்கு வேறாகாதவையாகவும் இருப்பது போலவே ஹக்த ஆலாவின் ‘வுஜுது’ உள்ளமை என்ற உள்ளமை என்ற நீரின் மேலெழுந்த நடனமாடும் பலகோடி சிருஷ்டிகள் அந்த வுஜுதெனும் நீரைப் பிரியாதவையாகவும், அதற்கு எந்த வகையிலும் வேறாகாதவையாகவும் இருக்கின்றனவென்பதும், குமுழி குமுழியாயிருக்கும் போதும் அது நீர்தான், அது உடைந்த பின்னும் அது நீர்தான் என்பது தெளிவாகிவிட்டது. இமாமவர்கள் தங்களின் இரண்டாவது பாடலில் என்னுடைய தாத்தில் (என்னில்) நீக்கமற நீ இருக்கும்பொழுது நான் எங்கே? ஆகையால் (நீயே நானாக வெளியாகியிருப்பதால்) உன்னைவிட்டும் நான் பிரிவதோ அல்லது என்னை விட்டும் நீ பிரிவதோ இல்லை. அதனால் நமக்கிடையில் ‘தே’ இல்லை என்று கூறி, முந்திய பாடலில் கூறப்பட்ட உதாரணத்தை தெளிவாக்கிப் பாடியுள்ளார்கள். குமுழியானது தண்ணீரிடம், நீரே! நீதான் நானாக (குமுழியாக) இருக்கும் பட்சத்தில் குமுழி எனும் நான் எங்கே இருப்பது என்று கேட்பதுபோல், இறைவா! குமுழிக்கு உவமிக்கப்பட்ட சிருஷ்டியான நான், உனக்கு வேறாகாத, உன்னைப் பிரியாத வெளிப்பாடாயிருக்கும் பட்சத்தில் குமுழி என்ற பெயரில் இருக்கும் எனக்கு ‘வுஜுது’ ஏது? நானே இல்லாமலிருக்கும்போது எனக்கு ‘வுஜுது’ எங்ஙனம் இருக்கும்! நீரின் வேறாகாத வெளிப்பாடாக குமுழி இருப்பது போலும், குமுழியை விட்டு நீரைப் பிரித்தெடுக்க முடியாமலிருப்பதுபோலும் உன்னை விட்டு என்னை பிரிக்கவோ, என்னை விட்டு உன்னை பிரிக்கவோ முடியாது.ஏனெனில் பிரித்தல் என்பதற்கோ, சேர்த்தல் என்பதற்கோ குறைந்தது இரண்டு வஸ்துக்கள் தேவை.

ஒரேயொரு வஸ்துவை சேர்க்கவோ, பிரிக்கவோ முடியாது, அது அசாத்தியமானதாகும். பலகோடிக் குமுழிகள் பல கோடி உருவங்களில் இருந்த போதிலும் அவை அனைத்தும் தண்ணீரின் வேறு படாத, தண்ணீரை விட்டும் எக்காரணம் கொண்டும் பிரிக்க முடியாதவைகளாயிருப்பதுபோல், பிரபஞ்சமெனப்படும் சர்வ சிருஷ்டிகள் அனைத்தும் ஹக்த ஆலாவின் வுஜுதுக்கு வேறுபடாதவைகளும், அவனுடைய பரிசுத்த ‘தாத்தை’ உள்ளமையை விட்டும் பிரிக்க முடியாதவைகளுமாகும். இமாம் ஹத்தாத் (ரஹ்) அவர்கள், இறைவா! எனக்கும் உனக்குமிடையில் ‘தே’ என்பதே இல்லை என்று கூறியதன் விளக்கம் என்னவெனில், அறபு மொழியில் ‘அன’ என்ற சொல்லுக்கு நான், என்ற பொருள் உண்டு. ‘அன’ என்ற சொல்லுடன் அறபு அட்சரங்களில் ஒன்றான ‘தே’ என்பதை சேர்த்தால் ‘அனத’ என்ற சொல் உண்டாகும்.அறபு இலக்கண இலக்கியப்படி ‘அனத’ என்ற சொல்லை ‘அந்த’ என்று மொழிந்து ‘நீ’ என்ற பொருளைத் தரக்கூடிய முன்னிலையைக் காட்டும் சொல்லாக உபயோகிக்க வேண்டும். எனவே, இமாம் ஹத்தாத் (ரஹ்) அவர்கள் ‘அன-அந்த’ நான்-நீ என்ற வேற்றுமைகளைவிட்டு, எல்லாமாய் நீ இருக்கும் பட்சத்தில் நீ என்றும், நான் என்றும் எங்ஙனம் பிரிக்க முடியும் என்று இறைவனிடம் கலிமாவின் உண்மையான ஏகத்துவ ஞானத்தை கூறுகிறார்கள். இமாம் ஹத்தாத் (ரஹ்) அவர்களின் மேற்கூறப்பட்ட இரண்டு பாடல்கள் மூலம் கிடைக்கின்ற விபரத்தை சுருக்கமாக ஆராய்ந்தால் பின்வரும் விவரம் தெளிவாகும் அதாவது தண்ணீரினால் உண்டான குமுழிக்கு தண்ணீர்தான் வுஜுதாய் இருப்துபோன்று குமுழியானது தண்ணீரில் நின்றும் உண்டாகி அதைக்கொண்டே நிலைபெற்றிருப்பதைப் போன்றும் இன்னும் குமுழி தண்ணீரை விட்டும் எந்தவகையிலும் பிரியாமலும் அதற்குவேறுபடாமலும் இருப்பது போன்றும்தான் ஹக் தஆலா தனது படைப்புக்களுடன் இருக்கின்றான்.

அவனுடைய தாத் அல்லது வுஜுது உள்ளமை ஒன்றேயல்லாமல் அது பலதல்ல அந்த தாத்துக்கு இரண்டு நிலைகள் உள்ளன. ஒன்று ‘தன்ஸீஹ்’ ஒப்புவமையற்ற நிலை அது அரூபநிலை என்றும் சொல்லப்படும் மற்றநிலை ‘தஷ்பீஹ்’ ஒப்புவமை உள்ள நிலை அது ரூபநிலையென்றும் அழைக்கப்படும். ‘தன்ஸீஹ்’ ஒப்புவமை அற்ற நிலை, அருப நிலை என்று அழைக்கப்டும் நிலை சிருஷ்டிகளின் சிந்தனைக்கும் அறிவுக்கும் எட்டாத கருப்பு வெள்ளை என்ற கட்டுப்பாடும் கட்டை நெட்டை என்ற கட்டுப்பாடும் மில்லாத எந்த அறிஞனாலும் அந்த வகையிலும் கட்டுப்படுத்தமுடியாத நிலையாகும். இறைவனுக்குரிய இந்த நிலை பற்றி சிந்திக்க முடியாது. ‘அல்லாஹ்வின் படைப்பைப் பற்றி சிந்தியுங்கள் ஆனால் அவனுடைய தாத்தை பற்றி சிந்திக்காதீர்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் அந்த தாத்துடைய இந்த நிலை (தன்ஸீக்) பற்றித்தான் கூறினார்களேயல்லாமல்

அவனுடைய ஸிபத் தன்மையைப்பற்றி சிந்திப்பதை தடுக்கவில்லை. படைப்புக்கள் யாவும் அவனுடைய ஸிபாத் தன்மைகளேயாகும். ‘தஷ்பீஹ்’ ஒப்புவமை உள்ள நிலை ரூப நிலையென்றழைக்கப்படும் நிலை சிருஷ்டிகளின் சிந்தனைக்கும் அறிவுக்கும் எட்டக்கூடிய நிறங்களைக்கொண்டும், கட்டை நெட்டையென்ற கட்டுப்பாடுகளைக் கொண்டு கட்டுப்படுத்தக்கூடிய நிலையுமாகும். இறைவனுக்குரிய இந்த நிலை பற்றி சிந்திக்க முடியும்.சிந்திப்பதும் கடமை. தஷ்பீஹ் ஒப்புவமை உள்ள நிலைதான் படைப்புக்களாக அவன் வெளியாகியிருக்கும் நிலையாகும் இந்த தஷ்பீஹ் உடைய நிலை பற்றி சிந்திப்பதற்கு நாம் ஏவப்பட்டுள்ளோமேயல்லாமல் தடுக்கப்படவில்லை. நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் படைப்புக்களைப் பற்றி சிந்தியுங்கள் என்று கூறியது தஷ்பீஹ் உடைய நிலையேயாகும். மேற்கூறப்பட்ட ஹக்தஆலாவின் ‘தன்ஸீஹ்’ ‘தஷ்பீஹ்’ ஆகிய இரண்டு நிலைகளையும் ஈமான் விசுவாசிப்பது கடமை.

இந்த கடமை ஞான வழி நடக்கும் சூபிகளுக்கு மட்டும் சொந்தமானதல்ல விசுவாசிகள் யாவரும் நம்பவேண்டிய ஒன்றேயாகும். ஆனால் இந்த காலத்தைப்பொறுத்த வகையில் ஹக்தஆலாவின் தன்ஸீஹ், ஒப்புவமையற்ற நிலையைதான் விசுவாசிக்கின்றார்களேயல்லாமல் அவனுடைய மற்ற நிலையான தஷ்பீஹ் ஒப்புவமையுள்ள நிலையை விசுவாசிக்கிறார்கள் இல்லை.ஒரு விசுவாசி காட்டாயமாக விசுவாசிக்கவேண்டிய இந்நிலையை ‘ஷிர்க்’ இணை என்று கூறுகிறார்கள். ஈமானை தலைகீழாகப் புறட்டிவிட்டார்கள் தன்ஸீஹ் உடைய நிலையை ‘அல் பாதின்’ உள்ளானவன் என்ற திருநாமமும் தஷ்பீஹ் உடைய நிலையை ’அள்ளாஹிர்’ வெளியானவன் என்ற திருநாமமும் காட்டுகின்றன. ஒரு விசுவாசி அவ்விரு திருநாமத்தையும் நம்புதல் வேண்டும். மேலும் அவ்விரண்டும் திருக்குர்ஆன் வசனங்களில் வந்துள்ளதால் அவ்விரண்டும் குர்ஆன் வசனங்களைச் சேர்ந்ததேயாகும். குர்ஆனில் கூறப்பட்டுள்ள வசனங்கள் யாவையும் நம்பியவன்தான் குர்ஆனை நம்பியவனாவான். சில வசனங்களை மட்டும் நம்பிக் கொண்டு மற்ற வசனங்களை நம்பாதவன் குர்ஆனை நம்பியவனாக மாட்டான். குர் ஆன் வசனங்கள் யாவையும் நம்பாதவன் முஃமின் விசுவாசியாய் இருக்க மாட்டான் காபிரீன்களில் சிலர் குர்ஆனை முழுக்க நம்பாவிட்டாலும் அதிலுள்ள சில வசனங்களை நம்பியும் வேறு சில வசனங்களை நம்பாதவர்களாகவும் இருந்தார்கள்.அது பற்றி அல்லாஹ் குர்ஆனில் “யுஃமினூன பிபஹ்லின் வயக்புறூன பிபஹ்லின்’ அவர்கள் (காபிரீன்கள்) சில வசனங்களை ஈமான் கொள்கிறார்கள் சில வசனங்களை நம்பாமல் விடுகிறார்கள். காபிராகிவிடுகிறார்கள் என்று கூறியுள்ளான். எனவே ஹக் தஆலாவுக்குள்ள இரண்டு நிலைகளையும் நம்புவது குர்ஆனை நம்புவதேயாகும். குர்ஆனை நம்பாதவன் விசுவாசியாக முடியாததுபோல் அவ்விருநிலைகளை நம்பாதவனும் விசுவாசியாக மாட்டான் மேற்கூறப்பட்ட பாடல்களில் இமாம் ஹத்தாத் (ரஹ்) அவர்கள் இவ்வுண்மையைதான் நீரையும் குமுழியையும் உதாரணம் காட்டி விளக்கியுள்ளார்கள்.ஹத்தாத் இமாம் என்று சகல மக்களாலும் போற்றப்பட்டு வருகின்ற இமாம் அவர்கள் என்ன கொள்கையுள்ளவர்களாக இருந்தார்கள் என்பது அவர்களின் பாடல் மூலம் தெளிவாகிவிட்டது. மேற்கூறப்பட்ட கொள்கை விளக்கத்தை அறிவில்லாதவர்கள் மறுப்பதுண்டு அவர்களே அந்த பாடல்களை றாதிபு மஜ்லிஸ் சபைகளில் பாடுவதும் உண்டு.

பணத்திற்காக வாழும் அறிஞர்களுக்கு கொள்கை எதற்கு ? -முற்றும்-

ஹக்கும், கல்கும் ஒன்றா?

ஹத்தாத் இமாம் தரும் விளக்கம்.

இமாம் ஹத்தாத் (ரஹ்) அவர்களின் இயற்பெயர் அப்துல்லாஹ் அவர்கள் ஹூசைன் (ரலி) அவர்களின் வழியில் வந்தவர்கள். இவர்கள் தம் மூதாதையின் பெயரால் “ஹத்தாதி” என்று அழைக்கப்பட்டார்கள். இவர்கள் ஹிஜ்ரி 1044 இல் தர்யம் எனும் ஊரில் பிறந்தார்கள். பல அறிஞர்களிடமும், குறிப்பாக காளி ஸஹல் இப்னு அஹ்மது பாஹஸன் என்ற பெரியாரிடம் கல்வி கற்ற இவர்கள், சிறந்த அறிஞராகவும், மார்க்க மேதையாகவும், மெஞ்ஞானியாகவும் ஆகி பெரிய இமாமென மக்களால் பிற்காலத்தில் பாராட்டுப் பெற்றார்கள்.


பெரியார்களின் அடக்க விடங்களைத் தரிசிப்பதில் பேரார்வம் காட்டிய இவர்கள், ஹூது (அலை) அவர்களின் அடக்க விடத்தைத் தேடிக் கண்டுபிடித்துத் தரிசனம் செய்தார்கள். ஹிஜ்ரி 1080 இல் மக்கா, மதீனா ஆகிய நகரங்களல் தங்கி மக்களுக்கு அறிவுரை நல்கினார்கள். அப்போது இவர்களிடம் ஏராளமானோர் தீட்சை பெற்றனர்.சிறந்த இறைநேசரச் செல்வரான இவர்கள் தம்மிடம் வருபவர்களின் மனதிலுள்ள விருப்பங்களை “கஷ்பின்” (ஞானோதயத்தின்) மூலம் அறிந்து ஆசீர்வதிப்பார்கள் என்றும், அதன் காரணமாக அவர்களின் விருப்பங்கள் நிறைவேறின என்றும் கூறுவர்.இவர்கள் ஹிஜ்ரி 1132 இல் காலமானார்கள். இவர்கள் எழுதிய நூல்கள் அன்னஸாயிஹூத்தீனிய்யா, ரிஸாலதுல் மஜீத், இத்திஹாபுஸ் ஸாயில், அல் கிஸ்முத்தாலிது பீ கலாமில் மன்சூர், ரிஸாலதுல் முஆவனா ஆகியவை, அவற்றில் இறுதியாக கூறப்பட்ட நூலின் ஒரு பகுதி தமிழில் காயல்பட்டணம் வள்ளல் வாவு ஷாஹுல் ஹமீது அவர்களின் நினைவாக அவர்களின் மக்களால் அச்சிட்டப்பட்டு வெளிவந்துள்ளது. ஹத்தாது (ரஹ்) அவர்களின் றாதிபு சிறப்பு மிக்கதாகும் அதனை ஓதிய மக்களின் நாட்டங்கள் இறையருளால் நிறைவேறுகின்றன. இறைவழி நடக்கும் நல்லடியார்களின் ஆத்மீக முன்னேற்றத்தை மனதிற் கொண்டு அவர்கள் இயற்றிய றாதிபு வெள்ளிக்கிழமை தோறும் இந்தியா, இலங்கைபோன்ற நாடுகளிலும், குறிப்பாக இலங்கையின் தென்மாகாணத்தைச் சேர்ந்த ஊர்களிலும் பக்திப் பரவசத்தோடு ஓதப்பட்டு வருகிறது.ஹத்தாது றாதிபு என்ற பெயரால் அழைக்கப்பட்டுவரும் றாதிபு, பல அவ்றாது ஒதல்களை உள்ளடங்கியதாக இருக்கின்றது. அதில் பல அவ்றாதுகளைச் சேர்த்த இமாமவர்கள் முனாஜாத்து அடிப்படையில் பல பாடல்களையும் எழுதியுள்ளார்கள். அவை ஏகத்துவ ஞான தத்துவங்களை விளக்கமாக கூறுகின்றன. அந்தப் பாடல்களிற் சில பின்வருமாறு.இலாஹில் கல்கு மித்லஹூபாப் அலா மாஅன் லதல் அஹ்பாப் பமாஉன் பில் பனாஇ ஹூபாப் வஹால் பகாஹூ யா அல்லாஹ். பஐன அன இதா அந்தா பிதாதீ தாயிமன் குந்தா பமா பிந்து வலா பிந்தா வலா ‘தா’ பைனனா அல்லாஹ் இறைவா! கல்கு எனும் பிரபஞ்சம் நீரின்மேல் எழுந்து நிற்கும் குமுழிபோன்றது. குமுழி என்பது உண்மையிலேயே அது குமிழியாயிருக்கும்போதும் தண்ணீர்தான். அது அழிந்து உடைந்த பின்னும் தண்ணீர்தான். இறைவா! என்னுடைய தாத்திலே (என்னிலே) நீ நிலைபெற்றிருக்கின்றபொழுது ‘அன’ நான் என்பது எங்கே? எனவே நான் உன்னைப் பிரியவுமில்லை, நீ என்னைப் பிரியவுமில்லை. இறைவா! எமக்கிடையில் ‘தே’ என்பதே இல்லை. மேற்கூறப்பட்ட பாடல்கள் மூலம் இமாம் ‘ஹத்தாத்’ (ரஹ்) அவர்கள் தவ்ஹீத் ஏகத்துவ தத்துவத்தை ஒழிப்பு மறைப்பு இல்லாமல் யாரும் எழிதில் புரிந்து கொள்ளும் வகையில் தெளிவான உதாரணத்தின் மூலம் விளக்கியுள்ளார்கள். அப்பாடல்களைப் பாடுபவர்களில் அனேகர், அவைகளில் கூறப்பட்ட உண்மையான தத்துவத்தை அறியாமலேயே பாடலை மட்டும் பாடி மகிழ்கிறார்கள்.இவர்கள் பாடலின் இசையில் மயங்கி பலகோணங்களிலும் ஆடி அசைகிறார்களே அல்லாமல்அந்தப் பாடல் தரும் தத்துவத்தையுணர்ந்து பேரின்ப மது மயக்கத்தில் ஆடி அசைபவர்களாக இல்லை.அவர்களுக்கு அறபு மொழியின் பொருள் விளங்காமல் இருப்பதுதான் அதற்கான காரணம். அதில் வியப்பொன்றுமில்லை. ஆனால் உலமாக்கள், மௌலவிகள் எனப்படுவோர் அறபு மொழியறிவு பெற்றிருந்தும் கூட அப்பாடல்களின் உண்மையை உணராமலிப்பது வேதனையாகவும், அவ்வண்மையை உணராமலேயே அதை மறுப்பது விந்தையாகவும் உள்ளது. இமாம் ஹத்தாத் (ரஹ்) அவர்கள் முதற் பாடில் ஹக்தஆலாவுக்கு நீரையும், அவனது படைப்புக்களுக்கு அந்த நீரில் உண்டாகும் குமுழிகளையும் உதாரணம் கூறியுள்ளார்கள். மேலும் குமிழி குமிழியாயுக்கும்போதும் அது தண்ணீர்தான். அது உடைந்த பின்னும் தண்ணீர்தான் என்ற தத்துவத்தையும் கூறியுள்ளார்கள். ஹக்தஆலாவுக்கு அவனது படைப்புக்களை உதாரணம் காட்டுவதில் எவ்வித தவறுமில்லை. ஆயினும் அவனது படைப்புக்களில் எதையும் அவனுக்கு நிகரானதென்று கூறக்கூடாது. அவ்வாறு கூறுவது அசாத்தியமானதாகும். ஏனெனில் ‘ஷிர்க்’ இணை எண்பது எதார்த்தத்தில் இல்லாத ஒன்றேயாகும். அல்லாஹ்வுக்கு நிகராக எந்தவொரு வஸ்துவும் இல்லை என்று குர்ஆன் கூறுகிறது. ஆயினும் ஒருவரின் எண்ணத்தைப் பொறுத்துதான் ‘ஷிர்க்’ இணை ஏற்படுகிறதேயல்லாமல் ‘ஹகீகத்’ எதார்த்தத்தில் ‘ஷிர்க்’ என்பதே கிடையாது. அல்லாஹ்வுக்கு உதாரணம் உண்டு,ஆனால் அவனுக்கு நிகரில்லை என்பதற்கு குர்ஆன் ஷரீபில் தெளிவான ஆதாரங்கள் உள்ளன. ‘வலில்லாஹில் மதலுல் அஹ்லா’ அல்லாஹ்வுக்கு உயர்ந்த உதாரணம் உண்டு. என்று குர்ஆனில் ஒர் இடத்திலும், ‘வலஹூல் மதலுல் அஹ்லா’ அவனுக்கு உயர்ந்த உதாரணம் உண்டு என்று குர்ஆனில் மற்றோர் இடத்திலும் ஹக்தஆலா கூறியுள்ளான்.எனவே, ஹக்தஆலாவுக்கு அவனது படைப்புக்களை உதாரணமாகக் கூறுவதில்த எவ்வித தவறுமில்லை. ஆனால் ‘மதல்’ என்ற உதாரணத்துக்கும், ‘மித்லு’ என்ற நிகருக்கும் இடையிலுள்ள வித்தியாசம் தெரியாதவர்களுக்கு விளக்கமில்லாததால் ஒருவகை மயக்கம் ஏற்படுவதுண்டு. மேலே கூறப்பட்ட பாடல்களில் இமாம் ஹத்தாத் (ரஹ்) அவர்கள், ஹக்காகிய அல்லாஹ்வுக்கு தண்ணீரை உதாரணமாகவும், கல்காகிய சிருஷ்டிகளுக்கு தண்ணீரினால் உண்டான குமுழியை உதாரணமாகவும் கூறியுள்ளார்கள். ஒன்றை இன்னொன்றுக்கு உதாரணம் கூறுவதானால் இரண்டுக்குமிடையில் எந்த வகையிலேனும் தொடர்பு இருத்தல் வேண்டும். இரண்டுக்குமிடையில் எவ்விததொடர்பில்லாமல் உதாரணம் கூறுதல் அர்த்தமற்றதாகும். முகம்மது சிங்கத்தைப் போன்றவன் என்று அவனை சிங்கத்திற்கு உதாரணமாக கூறினால் சிங்கத்துக்கும், முகம்மதுக்குமிடையில் எந்தவகையிலேனும் தொடர்பு இருந்தாக வேண்டும். முகம்மதுவிடம் சிங்கத்திடமுள்ள தன்மைகளில் ஒன்றான வீரம் இருக்குமானால் அவன் சிங்கத்தைப் போன்றவன் என்று கூறலாம். இமாம் ஹத்தாத் (ரஹ்) அவர்கள், ஹக்தஆலாவுக்கு நீரையும், படைப்புக்களுக்கு குமிழியையும் உதாரணம் கூறியிருப்பதால் அந்த உதாரணத்தில் எந்த வகையில் தொடர்பு உண்டு என்பதை ஆராய்ந்தறிதல் அவசியம். இறைவனுக்கும், அவனது படைப்புகளான பிரபஞ்சத்துகுமிடையில் உள்ள தொடர்பு நீருக்கும், குமிழிக்குமிடையிலுள்ள தொடர்ப்பு போன்றதென்பது இமாமவர்களின் உதாரணத்திலிருந்து கிடைக்கப்பெறும் விளக்கமாகும். நீருக்கும், குமிழிக்குமிடையிளுள்ள தொடர்பு எத்தகையதென்றால், நீர் இல்லையானால் குமிழி இல்லையென்ற அளவுக்கு அவ்விரண்டுக்குமிடையில் தொடர்பு உண்டு. அதாவது குமுழி என்பது நீர்தான் என்பதாகும், மேலும் நீரில்லாமல் குமுழி உண்டாகவோ அல்லது நிலைபெற்றிருக்கவோ முடியாது. குமுழி என்ற பெயரைப் பெற்றிருப்பது நீரேயல்லாமல் வேறொன்றுமில்லை.குமுழியின் உருவத்தில் தோன்றியது நீரேயல்லாமல் வேறெதுவுமில்லை. குமுழி நீரின் கோலமேயன்றி அதற்கு வேறானதல்ல. குமிழி நீருக்கு வேறானதென்று யாரும் சொல்லவும் முடியாது. அதேபோல் குமுழியில் நீர் இல்லையென்றோ, அல்லது குமுழியின் இன்ன இடத்தில் நீருண்டு இன்ன இடத்தில் நீரில்லை என்றோ நம்பவும் முடியாது.இதேபோல் குமுழிக்கு தனியான, சுயமான ‘வுஜுது’ உள்ளமை கிடையவே கிடையாது. ஆயினும்மந்தக் குமிழி நீரின் ‘வுஜுதை’ உள்ளமையைக் கொண்டுதான் நிலை பெற்றுள்ளது.எனவே, இமாம் ஹத்தாத் (ரஹ்) அவர்களின் தத்துவமிக்க உதாரணத்திலிருந்து ‘ஹுபால்’ எனும் குமுழி, நீரின் வேறாக வெளிப்பாடு என்பதும், நீர்தான் குமிழிக்கு மூலம் என்பதும்,அந்தக் குமுழி தனக்கு மூலமான நீருக்கு எந்த வகையிலும் வேறானதல்ல என்பதும், குமுழி எந்தக் காரணத்தைக் கொண்டும் நீரைப்பிரிந்திருக்க முடியாது என்பதும், குமுழி என்ற பெயர் அதன் உருவத்துக்குரியதல்லாமல் குமுழி என்பது அதன் கருவான நீருக்குரியதல்லவென்பதும்,குமுழியானது குமுழி என்ற பெயரிலும், உருவத்திலும் இருந்தாலும் எதார்த்தத்தில் அது நீரேயல்லாமல் வேறல்லவென்பதும் தெளிவாகிவிட்டது. இமாம் ஹத்தாத் (ரஹ்) அவர்கள் கூறியுள்ள இவ்வுதாரணத்தின் மூலம் ஹக்தஆலாவினது ‘வுஜுது’ உள்ளமை நீரைப்போன்றதும், அந்த வுஜுதிலிருந்து உண்டான சர்வ சிருஷ்டிகளும் குமுழி போன்றது மாகுமென்பதும் தெளிவாகிவிட்டது. மேலும் நீரின் மேலேழுந்த நாட்டியமாடும் குமுழிக்கூட்டம் நீரைப் பிரியாததாயும்,அந்த குமுழிகள் நீருக்கு வேறாகாதவையாகவும் இருப்பது போலவே ஹக்த ஆலாவின் ‘வுஜுது’ உள்ளமை என்ற உள்ளமை என்ற நீரின் மேலெழுந்த நடனமாடும் பலகோடி சிருஷ்டிகள் அந்த வுஜுதெனும் நீரைப் பிரியாதவையாகவும், அதற்கு எந்த வகையிலும் வேறாகாதவையாகவும் இருக்கின்றனவென்பதும், குமுழி குமுழியாயிருக்கும் போதும் அது நீர்தான், அது உடைந்த பின்னும் அது நீர்தான் என்பது தெளிவாகிவிட்டது. இமாமவர்கள் தங்களின் இரண்டாவது பாடலில் என்னுடைய தாத்தில் (என்னில்) நீக்கமற நீ இருக்கும்பொழுது நான் எங்கே? ஆகையால் (நீயே நானாக வெளியாகியிருப்பதால்) உன்னைவிட்டும் நான் பிரிவதோ அல்லது என்னை விட்டும் நீ பிரிவதோ இல்லை. அதனால் நமக்கிடையில் ‘தே’ இல்லை என்று கூறி, முந்திய பாடலில் கூறப்பட்ட உதாரணத்தை தெளிவாக்கிப் பாடியுள்ளார்கள். குமுழியானது தண்ணீரிடம், நீரே! நீதான் நானாக (குமுழியாக) இருக்கும் பட்சத்தில் குமுழி எனும் நான் எங்கே இருப்பது என்று கேட்பதுபோல், இறைவா! குமுழிக்கு உவமிக்கப்பட்ட சிருஷ்டியான நான், உனக்கு வேறாகாத, உன்னைப் பிரியாத வெளிப்பாடாயிருக்கும் பட்சத்தில் குமுழி என்ற பெயரில் இருக்கும் எனக்கு ‘வுஜுது’ ஏது? நானே இல்லாமலிருக்கும்போது எனக்கு ‘வுஜுது’ எங்ஙனம் இருக்கும்! நீரின் வேறாகாத வெளிப்பாடாக குமுழி இருப்பது போலும், குமுழியை விட்டு நீரைப் பிரித்தெடுக்க முடியாமலிருப்பதுபோலும் உன்னை விட்டு என்னை பிரிக்கவோ, என்னை விட்டு உன்னை பிரிக்கவோ முடியாது.ஏனெனில் பிரித்தல் என்பதற்கோ, சேர்த்தல் என்பதற்கோ குறைந்தது இரண்டு வஸ்துக்கள் தேவை. ஒரேயொரு வஸ்துவை சேர்க்கவோ, பிரிக்கவோ முடியாது, அது அசாத்தியமானதாகும். பலகோடிக் குமுழிகள் பல கோடி உருவங்களில் இருந்த போதிலும் அவை அனைத்தும் தண்ணீரின் வேறு படாத, தண்ணீரை விட்டும் எக்காரணம் கொண்டும் பிரிக்க முடியாதவைகளாயிருப்பதுபோல், பிரபஞ்சமெனப்படும் சர்வ சிருஷ்டிகள் அனைத்தும் ஹக்த ஆலாவின் வுஜுதுக்கு வேறுபடாதவைகளும், அவனுடைய பரிசுத்த ‘தாத்தை’ உள்ளமையை விட்டும் பிரிக்க முடியாதவைகளுமாகும். இமாம் ஹத்தாத் (ரஹ்) அவர்கள், இறைவா! எனக்கும் உனக்குமிடையில் ‘தே’ என்பதே இல்லை என்று கூறியதன் விளக்கம் என்னவெனில், அறபு மொழியில் ‘அன’ என்ற சொல்லுக்கு நான், என்ற பொருள் உண்டு. ‘அன’ என்ற சொல்லுடன் அறபு அட்சரங்களில் ஒன்றான ‘தே’ என்பதை சேர்த்தால் ‘அனத’ என்ற சொல் உண்டாகும்.அறபு இலக்கண இலக்கியப்படி ‘அனத’ என்ற சொல்லை ‘அந்த’ என்று மொழிந்து ‘நீ’ என்ற பொருளைத் தரக்கூடிய முன்னிலையைக் காட்டும் சொல்லாக உபயோகிக்க வேண்டும். எனவே, இமாம் ஹத்தாத் (ரஹ்0 அவர்கள் ‘அன-அந்த’ நான்-நீ என்ற வேற்றுமைகளைவிட்டு, எல்லாமாய் நீ இருக்கும் பட்சத்தில் நீ என்றும், நான் என்றும் எங்ஙனம் பிரிக்க முடியும் என்று இறைவனிடம் கலிமாவின் உண்மையான ஏகத்துவ ஞானத்தை கூறுகிறார்கள். இமாம் ஹத்தாத் (ரஹ்) அவர்களின் மேற்கூறப்பட்ட இரண்டு பாடல்கள் மூலம் கிடைக்கின்ற விபரத்தை சுருக்கமாக ஆராய்ந்தால் பின்வரும் விவரம் தெளிவாகும் அதாவது தண்ணீரினால் உண்டான குமுழிக்கு தண்ணீர்தான் வுஜுதாய் இருப்துபோன்று குமுழியானது தண்ணீரில் நின்றும் உண்டாகி அதைக்கொண்டே நிலைபெற்றிருப்பதைப் போன்றும் இன்னும் குமுழி தண்ணீரை விட்டும் எந்தவகையிலும் பிரியாமலும் அதற்குவேறுபடாமலும் இருப்பது போன்றும்தான் ஹக் தஆலா தனது படைப்புக்களுடன் இருக்கின்றான்.அவனுடைய தாத் அல்லது வுஜுது உள்ளமை ஒன்றேயல்லாமல் அது பலதல்ல அந்த தாத்துக்கு இரண்டு நிலைகள் உள்ளன. ஒன்று ‘தன்ஸீஹ்’ ஒப்புவமையற்ற நிலை அது அரூபநிலை என்றும் சொல்லப்படும் மற்றநிலை ‘தஷ்பீஹ்’ ஒப்புவமை உள்ள நிலை அது ரூபநிலையென்றும் அழைக்கப்படும். ‘தன்ஸீஹ்’ ஒப்புவமை அற்ற நிலை, அருப நிலை என்று அழைக்கப்டும் நிலை சிருஷ்டிகளின் சிந்தனைக்கும் அறிவுக்கும் எட்டாத கருப்பு வெள்ளை என்ற கட்டுப்பாடும் கட்டை நெட்டை என்ற கட்டுப்பாடும் மில்லாத எந்த அறிஞனாலும் அந்த வகையிலும் கட்டுப்படுத்தமுடியாத நிலையாகும். இறைவனுக்குரிய இந்த நிலை பற்றி சிந்திக்க முடியாது. ‘அல்லாஹ்வின் படைப்பைப் பற்றி சிந்தியுங்கள் ஆனால் அவனுடைய தாத்தை பற்றி சிந்திக்காதீர்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் அந்த தாத்துடைய இந்த நிலை (தன்ஸீக்) பற்றித்தான் கூறினார்களேயல்லாமல் அவனுடைய ஸிபத் தன்மையைப்பற்றி சிந்திப்பதை தடுக்கவில்லை. படைப்புக்கள் யாவும் அவனுடைய ஸிபாத் தன்மைகளேயாகும். ‘தஷ்பீஹ்’ ஒப்புவமை உள்ள நிலை ரூப நிலையென்றழைக்கப்படும் நிலை சிருஷ்டிகளின் சிந்தனைக்கும் அறிவுக்கும் எட்டக்கூடிய நிறங்களைக்கொண்டும், கட்டை நெட்டையென்ற கட்டுப்பாடுகளைக் கொண்டு கட்டுப்படுத்தக்கூடிய நிலையுமாகும். இறைவனுக்குரிய இந்த நிலை பற்றி சிந்திக்க முடியும்.சிந்திப்பதும் கடமை. தஷ்பீஹ் ஒப்புவமை உள்ள நிலைதான் படைப்புக்களாக அவன் வெளியாகியிருக்கும் நிலையாகும் இந்த தஷ்பீஹ் உடைய நிலை பற்றி சிந்திப்பதற்கு நாம் ஏவப்பட்டுள்ளோமேயல்லாமல் தடுக்கப்படவில்லை. நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் படைப்புக்களைப் பற்றி சிந்தியுங்கள் என்று கூறியது தஷ்பீஹ் உடைய நிலையேயாகும். மேற்கூறப்பட்ட ஹக்தஆலாவின் ‘தன்ஸீஹ்’ ‘தஷ்பீஹ்’ ஆகிய இரண்டு நிலைகளையும் ஈமான் விசுவாசிப்பது கடமை. இந்த கடமை ஞான வழி நடக்கும் சூபிகளுக்கு மட்டும் சொந்தமானதல்ல விசுவாசிகள் யாவரும் நம்பவேண்டிய ஒன்றேயாகும். ஆனால் இந்த காலத்தைப்பொறுத்த வகையில் ஹக்தஆலாவின் தன்ஸீஹ், ஒப்புவமையற்ற நிலையைதான் விசுவாசிக்கின்றார்களேயல்லாமல் அவனுடைய மற்ற நிலையான தஷ்பீஹ் ஒப்புவமையுள்ள நிலையை விசுவாசிக்கிறார்கள் இல்லை.ஒரு விசுவாசி காட்டாயமாக விசுவாசிக்கவேண்டிய இந்நிலையை ‘ஷிர்க்’ இணை என்று கூறுகிறார்கள். ஈமானை தலைகீழாகப் புறட்டிவிட்டார்கள் தன்ஸீஹ் உடைய நிலையை ‘அல் பாதின்’ உள்ளானவன் என்ற திருநாமமும் தஷ்பீஹ் உடைய நிலையை ’அள்ளாஹிர்’ வெளியானவன் என்ற திருநாமமும் காட்டுகின்றன. ஒரு விசுவாசி அவ்விரு திருநாமத்தையும் நம்புதல் வேண்டும். மேலும் அவ்விரண்டும் திருக்குர்ஆன் வசனங்களில் வந்துள்ளதால் அவ்விரண்டும் குர்ஆன் வசனங்களைச் சேர்ந்ததேயாகும். குர்ஆனில் கூறப்பட்டுள்ள வசனங்கள் யாவையும் நம்பியவன்தான் குர்ஆனை நம்பியவனாவான். சில வசனங்களை மட்டும் நம்பிக் கொண்டு மற்ற வசனங்களை நம்பாதவன் குர்ஆனை நம்பியவனாக மாட்டான். குர் ஆன் வசனங்கள் யாவையும் நம்பாதவன் முஃமின் விசுவாசியாய் இருக்க மாட்டான் காபிரீன்களில் சிலர் குர்ஆனை முழுக்க நம்பாவிட்டாலும் அதிலுள்ள சில வசனங்களை நம்பியும் வேறு சில வசனங்களை நம்பாதவர்களாகவும் இருந்தார்கள்.அது பற்றி அல்லாஹ் குர்ஆனில் “யுஃமினூன பிபஹ்லின் வயக்புறூன பிபஹ்லின்’ அவர்கள் (காபிரீன்கள்) சில வசனங்களை ஈமான் கொள்கிறார்கள் சில வசனங்களை நம்பாமல் விடுகிறார்கள். காபிராகிவிடுகிறார்கள் என்று கூறியுள்ளான். எனவே ஹக் தஆலாவுக்குள்ள இரண்டு நிலைகளையும் நம்புவது குர்ஆனை நம்புவதேயாகும். குர்ஆனை நம்பாதவன் விசுவாசியாக முடியாததுபோல் அவ்விருநிலைகளை நம்பாதவனும் விசுவாசியாக மாட்டான் மேற்கூறப்பட்ட பாடல்களில் இமாம் ஹத்தாத் (ரஹ்) அவர்கள் இவ்வுண்மையைதான் நீரையும் குமுழியையும் உதாரணம் காட்டி விளக்கியுள்ளார்கள்.ஹத்தாத் இமாம் என்று சகல மக்களாலும் போற்றப்பட்டு வருகின்ற இமாம் அவர்கள் என்ன கொள்கையுள்ளவர்களாக இருந்தார்கள் என்பது அவர்களின் பாடல் மூலம் தெளிவாகிவிட்டது. மேற்கூறப்பட்ட கொள்கை விளக்கத்தை அறிவில்லாதவர்கள் மறுப்பதுண்டு அவர்களே அந்த பாடல்களை றாதிபு மஜ்லிஸ் சபைகளில் பாடுவதும் உண்டு. பணத்திற்காக வாழும் அறிஞர்களுக்கு கொள்கை எதற்கு ? -முற்றும்-

ஃபிக்ஹுச் சட்டங்கள் தேவையா ?

ஃபிக்ஹுச் சட்டங்கள் தேவையா ? (பகுதி-2)

மௌலானா அல்ஹாஜ் எச். கமாலூத்தீன் ஹழ்ரத் அல்-பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரி, வேலூர். கியாஸ் உடைய ஆதாரங்கள்

மாதவிடாய் உடைய பெண்கள் மய்யித்தை குளிப்பாட்டலாமா?இமாம்கள் கியாஸ் செய்து குர்ஆன், கதீஸ்களின் கருத்துக்களை மாற்றி விட்டதாக சிலர் சொல்லித் திரிகிறார்கள். இது தவறு. குர்ஆன் கதீஸில் மறைந்துள்ள உட்பொருளை வெளிப்படுத்தி உள்ளனர். நாம் ஆராயும்போது குர்ஆன், ஹதீஸிலிருந்து இதற்கு ஆதாரம் கிடைக்கின்றது.


"விசுவாசிகளே! தர்மம் செய்யக் கருதினால் நீங்கள் சம்பாதித்தவற்றிலிருந்தும், நாம் உங்களுக்கு பூமியிலிருந்து வெளிப்படுத்திய (தானியம், கனிவர்கம், முதலிய) வற்றிலிருந்தும் நல்லவற்றையே (தானமாகச்) செலவுசெய்யுங்கள். அவற்றில் கெட்டவற்றில் செலவு செய்ய விரும்பாதீர்கள். (ஏனென்றால் கெட்டுப்போன பொருட்களை உங்களுக்கு ஒருவர் கொடுத்தால்) அவற்றை நீங்கள் (வெறுப்புடன்) கண்மூடியவர்களாகவேயன்றி எடுக்க மாட்டீர்கள்". (2.227)

என அல்லாஹ் கூறியுள்ளான்.

இவ்வசனத்தில் கெட்டுப்போனதை நீங்கள் வாங்க விரும்பாததைப் போன்று அதைக் கொடுக்கவும் விரும்பாதீர்கள் எனக்கூறியுள்ளான். இவ்வாறு ஒப்பிட்டுக் கூறுவதற்குத்தான் கியாஸ் என்று சொல்லப்படுகின்றது. “தாதுஸ்ஸலாஸில்” என்ற இடத்தில் நடந்த போருக்காக சில ஸஹாபாக்களை றஸூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். அது கடினமான குளிர்காலம். அந்த இரவில் அம்ருப்னுல் ஆஸ் (றழி) அவர்களுக்குக் குளிப்பு கடமையாகி விட்டது. குளிர் கடினமாக இருந்ததால் அவர் தயமும் செய்து விட்டு தன் சகாக்களுக்கு சுபஹ் தொழுகையை தொழ வைத்தார். பெருமானார் (ஸல்) அவர்களிடம் இந்த விபரத்தை ஸகாபாக்கள் கூறினார்கள்.


பெருமானார் (ஸல்) அவர்கள் அம்ரிடம் "அசுத்தமான நிலையில் தொழவைத்தீரோ?" என வினவினார்கள். அதற்கு அவர்கள் “உங்களுடைய ஆத்மாக்களை கொன்றுவிடாதீர்கள் நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கிருபையுள்ளோனாக இருக்கின்றான்” (4.29) என்ற வசனத்தை நினைத்துப் பார்த்தேன். தயம்மும் செய்து தொழவைத்தேன் என்று கூறியவுடன் பெருமானார் (ஸல்) அவர்கள் சிரித்துவிட்டு எதுவும் கூறாமல் இருந்துவிட்டார்கள். (நூல் அபூதாவுத் தாரகுத்னீ) ஒருவர் கடும் குளிர் நேரத்தில் தண்ணீரில் குளித்து ஆபத்து ஏற்பட்டால் அது தன்னைத்தானே கொலைசெய்வதற்கு ஒப்பாகும் என்று விளங்கிய அம்ரு (றழி) அவர்கள் குளிப்பை விட்டுவிட்டார்கள். அதை பெருமானார் (ஸல்) அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். இதுவும் கியாஸ்தான். காரணத்தைக் கொண்டு சட்டம் அமைப்பது.


முன் விபரிக்கப்பட்ட விஷயங்களில் ஒப்பிடுவதற்கான காரணம் வெளிப்படையாகத் தெரிகின்றது. சில சட்டங்களுக்கு காரணம் வெளிப்படையாகத் தெரியாது ஆய்வு செய்து காரணத்தைக் கண்டு பிடித்து இந்தக் காரணம் எங்கெங்கு பெற்றுக் கொள்ளப்படுகிறதோ அங்கெல்லாம் அந்தச் சட்டமும் இருக்குமென்று தீர்ப்புச் செய்வதும் இமாம்களின் பணியாக இருந்தது. இந்த முறையும் பெருமானார் (ஸல்) அவர்கள் காலத்திலிருந்தே நடைமுறையில் உள்ளதுதான். (யுத்த காலத்தில் சிறப்பு மிக்க இந்நான்கு மாதங்கள் முடிந்தபின்) இணைவைப்போரை, கண்ட இடத்தில் வெட்டுங்கள் (9.05) என்று அல்லாஹ் கூறியுள்ளான். ஒரு சமயம் யுத்த களத்தில் ஒரு பெண் வெட்டப்பட்டு கிடந்த்தை நபீ (ஸல்) அவர்கள் கண்டபோது“பெண்களையும் சிறுவர்களையும் வெட்டாதீர்கள்” என்று கூறினார்கள் (நூல் புகாரி) நம்மை யார் வெட்டுகிறார்களோ நோவினை தருகிறார்களோ அவர்களைத்தான் வெட்டவேண்டும். சிறுவர்களும் பெண்களும் அத்தகையோர் அல்லர் என பெருமானார் (ஸல்) அவர்கள் விளக்கம் தந்தார்கள். அதாவது காரணத்தை விளக்கினார்கள். முந்தஹல் அக்பர் என்ற இப்னுத் தைமிய்யாவின் ஹதீஸ் கிதாபுக்கு விளக்கம் எழுதிய ஷவ்கானி அவர்கள்

“வணக்கத்திலேயே ஈடுபட்டிருக்கும் துறவிகளையும், வெட்ட வேண்டாம்"

என்ற ஹதீஸை எடுத்துக்கூறி இந்த ஹதீஸ் ஊர்ஜிதம் ஆவதில் பிரச்சினை இருக்கிறது. என்றாலும் பெண்கள் விஷயத்தில் பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்ன ஹதீஸில் விளக்கப்பட்டுள்ள காரணம் இந்த ஹதீஸையும் உறுதிப்படுத்துகின்றது. ஏனெனில் இத்தகையோரால் இடர் இல்லை எனவே இக்காரணத்தை வைத்து நொண்டி, முடம், குருடர்களையும், வெட்டக்கூடாது என்று விளங்களாம். (நூல்-நைலுல் அவ்தார்) எதற்கெடுத்தாலும் ஹதீஸ் இருக்கிறதா?என்று கூறுபவர்கள் இமாம் ஷவ்கானீ, இப்னுத் தைமிய்யாஹ் போன்றவரக்ளின் ஆய்வுக்கு மதிப்பளிப்பவர்களான அவர்களே காரணத்தை வைத்து சட்டத்தை நிர்ணயிக்கலாம் என்று கூறுகிறார்கள். இல்லாவிட்டால் ஹதீஸில் குருடர், முடவர், ஆகியோர் பற்றி வெளிப்படையாகச் சட்டம் கிடையாது. எனவே, இவ்வாறு ஒப்பிட்டு விளங்கிய விளக்கம் ஹதீஸுக்கு முரணாகாது.


மலம் கழித்தபின் சிறு கற்களால் துப்பரவு செய்வதற்கு கதீஸ்களில் அனுமதியுள்ளது. "(குபா என்ற) அப்பகுதியில் தூய்மையை விரும்புகின்ற ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் அப்பரிசுத்தவான்களை நேசிக்கிறான்.(9.108) என்ற திருவசனத்தில் கற்களால் துப்பரவு செய்தபின் தண்ணீரால் சுத்தம் செய்வோரை அல்லாஹ் புகழ்ந்து கூறியுள்ளான். ஹழ்ரத் அலீ (றழி) அவர்கள் பிற்காலத்தில் மக்களை நோக்கி "நீங்கள் தண்ணீரில்தான் சுத்தம்செய்ய வேண்டும் ஏனென்றால் பெருமானார் (ஸல்) அவர்களின் காலத்தவர்கள் புழுக்கை போன்று மலம் கழித்தனர் நீங்கள் அவ்வாறல்ல" எனக்கூறி கல்லால் துடைத்தற்கு காரணம் கூறி, காரணம் மாறும்போது சட்டமும் மாறும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்கள். (நூல் கன்ஸுல் உம்மால்) ஹதீஸுக்கலை வல்லுனர்களும் ஃபிக்ஹு சட்ட நிபுணர்களின் பால் தேவையுடையவர்களே! முஹத்திஸீன்கள் (ஹதீஸ் ஆய்வாளர்கள்) பெருமானார் (ஸல்) அவர்களின் சொல் செயல்களை மனனம் செய்து அடுத்தவர்களுக்கு எடுத்துக் கூறினர் இவர்களுக்கு ஹதீஸின் வெளிக்கருத்துதான் தெரியும். ஆழ்ந்த கருத்தை உணர்வதற்கு இவர்கள் ஃபிக்ஹுச் சட்ட நிபுணர்களிடம் சென்றாக வேண்டும் ஹதீஸ்களை கற்றுப் புலமை பெற்றிருந்த சிலர் ஃபிக்ஹையும் படித்தார்கள். எனவே அத்தகையோர் தம் திறமைக்குத் தகுந்தாற்போல் ஃபிக்ஹை அறிந்தார்கள்.


மாதவிடாயாக இருந்த பெண்மணி ஒருத்திக்கு ஒரு மய்யித்தை குளிப்பாட்டவேண்டிய நிலை ஏற்பட்டது மாதவிடாய் நிலையிலுள்ள மையித்தை குளிப்பாட்டலாமா? என்ற சந்தேகம் அந்த பெண்மணிக்கு ஏற்பட்டது. பள்ளிவாயிலின் ஒரு பகுதியில் ஹதீஸ்களைக் கற்றுக் கொடுப்போர் கூடியிருந்தனர். அவர்களிடம் அப்பெண்மணி சென்று மாதவிடாய் காலத்திலுள்ள பெண் ஒருத்தி மய்யித்தைக் குளிப்பாட்டலாமா? என்று கேட்டாள். அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்த வண்ணம் "அவ்வாறு ஏதும் ஹதீஸ் வந்திருப்பதாக நினைவில்லை. “மஸ்ஜிதின் மறுபுறத்தில் ஃபிக்ஹுச் சட்ட நிபுணர்கள் இருக்கிறார்கள் அவர்களிடம் போய்க்கேள். அவர்கள் கூறும் பதிலை எங்களிடம் கூறிவிட்டுப்போ” என்று அப்பெண்மணியிடம் சொல்லியனுப்பினார்கள். அப்பெண்மணி அங்கு சென்றபோது அபூதௌர் (றஹ்) என்ற ஃபகீஹ் பள்ளியினுள் நுழைந்து கொண்டிருந்தார்கள். அவரிடம் அப்பெண்மணி சட்டத்தை குறித்து வினவினாள். உடனே அவர்கள் “கூடும்” என்று சொல்லிவிட்டு பள்ளியினுள் சென்று விட்டார்கள். அப்பெண்மணி அதை முஹத்திஸீன் களிடம் கூறினாள். உடனே அவர்கள் கூட்டமாக எழுந்து ஃபிக்ஹு சட்ட நிபுணரான அபூதௌர் மற்றும் அவர்களுடைய குழுவினரிடம் சென்று “உங்களின் அறிவுப்படி தீர்ப்புச் சொல்கிறீர்களா?” என்று கேட்டனர். அதற்கவர்கள் “இல்லை, நீங்கள் கூறிய ஹதீஸிலிருந்துதான் சொன்னோம்” என்று கூறினார்கள். அதற்கு முஹத்திஸீன்கள்"அப்படியொரு ஹதீஸை நாங்கள் கூறவில்லையே" என்றனர்.

அதற்கவர்கள். “ஒரு சமயம் பெருமானார் (ஸல்) அவர்கள் பள்ளியினுள் வீட்டை ஒட்டிக்கிடந்த சிறிய பாய் ஒன்றினை எடுக்குமாறு ஆயிஷா (றழி) அவர்களிடம் கூறினார்கள். ஆயிஷா (றழி) அவர்கள் நான் மாதவிடாயாக இருக்கிறேன் என்று பதில் கூறினார்கள். அதற்கு பெருமானார் (ஸல்) அவர்கள் உனது மாதவிடாய் உனது கையிலில்லை. அதை எடு” என்று கூறினார்கள்.இதிலிருந்து மாதவிடாய் என்பது ஒருவரை தொட்டால் ஒட்டிக் கொள்ளும் என்ற நிலையில் உள்ளதல்ல என்று விளங்கலாம்.

அதனால்தான் மாதவிடாயுள்ள பெண் இறந்தவரைக் குளிப்பாட்டினால் அவருடைய அசுத்தம் இறந்தவரை ஒட்டிக் கொள்ளாது. எனவே“குளிப்பாட்டுவது கூடும்” என்று கூறினோம் என்றனர். முஹத்திஸ்கள் இந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டனர். ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. நபீ மொழிகளிலிருந்து அதற்கொப்பானவற்றைப் பகுத்து அறிய வேண்டியது ஃபகீஹ்களின் பணியாகும். இத்தகைய நுட்பமான விளக்கங்களுக்காக முஹத்திஸீன்கள் ஃபகீஹ்களின் பால் தேவைப் பட்டவர்களாகவே இருந்தார்கள்.


"நாங்கள் மருத்துவச் சாமான்களை விற்பவர்கள். நீங்கள் (ஃபகீஹ்கள்) அதைக் கொண்டு மருத்துவம் செய்பவர்கள்" என்று முஹத்திஸீன்கள் ஃபகீஹுகளை புகழ்ந்து கூறியுள்ளார்கள். ஹதீஸ் ஆய்வாளர்கள் ஹதீஸ்களை மனனம் செய்து தரம் வாரியாகப் பிரித்து தங்களுடைய கிதாபுகளில் எழுதிவைத்துள்ளார்கள். அவற்றில் மறைவாக உள்ள உட்பொருளை விளங்குவது அவர்களுடைய துறையன்று. அத்தகைய விளக்கம் பெறுவதற்குரிய தனித்துறையாகவே ஃபிக்ஹு விளங்குகின்றது. முஹத்திஸுகள் அத்தகைய விளக்கம் பெற வேண்டுமாயின் ஃபிக்ஹுத்துறையில் பயின்றே ஆகவேண்டும். அவ்வாறு இரண்டையும் படித்தால் இரு திறமையையும் அவர்களுக்கு ஏற்படும். ஃபிக்ஹு இல்லாமலிருந்தால் இஸ்லாமிய மார்க்கம் அறிவுக்குப் பொருத்தமில்லாமல் ஆகியிருக்கும்.


அவர்கள் ஒவ்வொறு சட்டத்திற்கும் காரணங்களைப் பகுத்துக் கூறியதால் நாமும் இஸ்லாத்தில் சொல்லப்பட்டவைகளுக்குரிய காரணங்களைக் கூறி அறிவுக்குப் பொருத்தமானது தான் இஸ்லாம் என மார்தட்டிக் கூறிக் கொண்டிருக்கின்றோம். ஹதீஸை கூறா விட்டால் ஃபிக்ஹு கிதாபுகளில் சட்டங்களைக் கூறும்போது அவற்றுக்கான குர்ஆன் வசனங்களையும் ஹதீஸுகளையும் எடுத்துக் கூறுவதில்லை. எனவே, அவையெல்லாம் ஃபகீஹ்களின் சொந்தக் கருத்து என்று சிலர் நினைக்கின்றனர். அது தவறு. ஃபகீஹ்களின் போக்கை உணராததால்தான் அவர்கள் அவ்வாறு கருதுகின்றார்கள். ஃபகீஹுகள் குர்ஆன் ஹதீஸிலிருந்து காரணங்களை விளங்கி அதைப் பொதுச் சட்டமாக்கி அதிலிருந்து உட்பிரிவுச் சட்டங்களையும் இயற்றுகின்றனர். ஆயிஷா (றழி) கூறுகிறார்கள்


“ஹதீம் என்ற பகுதி இறையில்லமான கஃபாவின் ஒரு பகுதியாகும். குறைஷிகள் கஃபாவைக் கட்டும் பொழுது அதை விட்டுவிட்டுக் கட்டிவிட்டனர். “ஆயிஷாவே உனது கூட்டத்தினர் சமீப காலத்தில் இஸ்லாத்தை தழுவியவர்கள். அவ்வாறில்லாவிட்டால் கஃபாவை இடித்துவிட்டு இப்ராஹீம் (அலை) அவர்களின் அஸ்திவாரத்தின் மீது (ஹதீமைச் சேர்த்து) கட்டிவிடுவேன்” என நபீ (ஸல்) அவர்கள் கூறினார்கள். இந்த ஹதீஸிலிருந்து பல்வேறு சட்டங்களை ஃபகீஹுகள் எடுத்துள்ளனர்.


1. அரசன் அல்லது ஊர் தலைவன் ஒரு நல்ல பணியை செய்ய நாடுகிறான் ஆனால் அதன் மூலம் மக்களிடம் குழப்பம் ஏற்படுமென்று பயப்படுகின்றான் என்றால் அச்சமயம் அவன் அவ்வேலையை விட்டுவிடவேண்டும்.


2. ஒருவன் ஒரு வேலையைச் செய்யுமுன் அதன் பின் விளைவுகளையும் யோசிக்க வேண்டும்.

3. புதிதாக இஸ்லாத்தை தழுவியவர்களுக்கு வெறுப்பை உண்டாக்கும் வேலைகளை செய்யக் கூடாது


4. ஒரு நன்மையைச் செய்து அதன் முடிவு தீமையாக ஆகிவிடும் என்ற பயமிருந்தால் தீமை ஏற்படக்கூடாது என்பதற்காக அந்த நன்மையை செய்யாது விட்டுவிடுவது சிறந்தது.


புஹாரியின் விரிவுரையாளர் இமாம் ஐனீ (றஹ்) அவர்கள் கூறுகிறார்கள்

“ஒரு வசதியுள்ள பெண் தாய் தந்தையை இழந்து தகப்பன் யாரிடம் பொறுப்புச் சாட்டி சென்றாறோ அவரிடம் வளர்ந்து வருகிறாள். தகப்பனின் சகோதரரின் மகன் சிறிய வயதிலிருந்தே இவளுடன் அன்பாக பழகி வருகிறான் இவளும் அவனை நேசிக்கிறாள். இவள் பருவ வயதடைந்த போது இவளை திருமணம் செய்ய அவன் விரும்புகிறான். வேறு வசதிபடைத்தவனும் அந்தப் பெண்ணை திருமணம் செய்ய விரும்புகிறான். அந்தப் பெண்ணை வளர்ப்பவன் செல்வந்தனுக்கு திருமணம் முடிக்க விரும்புகிறான். இப்பிரச்சினை நீதிபதி (காழி) யிடம் சென்றது. அவ்வூர் நீதிபதி ஃபகீஹ்களிடம் ஆலோசனை கலந்தார். பலரும் செல்வந்தனுக்கு திருமணம் செய்து கொடுப்பது பெண்ணுக்கு நல்லது அதைச் செய்ய வேண்டும் என ஆலோசனை பகர்ந்தனர். அபூ முகம்மது

அஸீலி (றஹ்) என்ற ஃபகீஹ் அப்பெண்ணின் சிறிய தந்தையின் மகனுக்குத்தான் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று மேற்கூறப்பட்ட ஹதீஸை ஆதாரமாக கூறி விளக்கினார்.


அதாவது, அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நேசிக்கின்றனர். வேறு ஒருவருக்குத் திருமணம் செய்து கொடுத்தபின் இவர்களின் நேசத்தால் தீமை விளைந்துவிட்டாள் அது மிகவும் விபரீதமாகிவிடும். ஆகவே, இந்த ஹதீஸை ஆதாரமாக ஆக்கி தீமையைத் தடுப்பதுதான் முக்கியம் என்று விளக்கம் கூறினார். நீதிபதியும் இவருடைய விளக்கத்தை ஏற்று அவளை நேசித்த சொந்தக்காரனுக்கே திருமணம் செய்து வைக்கும்படி உத்தரவிட்டார். பெருமானார் (ஸல்) அவர்கள் கஃபாவை புதுப்பிக்காமல் விட்டதற்கு காரணங்கள். “இன்று கஃபாவை புதுப்பிக்கிறார். அடுத்து என்னென்ன செய்வாரோ!” என்று புதிதாக இஸ்லாத்தை தழுவியவர்களுக்கு நபீயைப்பற்றி கெட்ட எண்ணம் வந்துவிடக்கூடாது. அவ்வாறு வந்துவிட்டால் அடுத்தடுத்து நபீயின் சொல்லை பின்பற்றுவதில் அவர்கள் பின்னடைந்துவிடுவர். ஈமானிலும் மோசம் வந்துவிடும். ஹதீமை கஃபாவில் சேர்த்து கட்டததால் நட்டம் ஒன்றுமில்லை. அவ்வாறு இணைத்துக் கட்டாதது நமக்கு லாபம் என்றே கூறவேண்டும். நம்போன்றவர் கஃபாவினுள் சென்று தொழமுடியாமல் போன குறையை இது நிவர்த்தி செய்கின்றது அந்த இடமும் கஃபாதான் அதில் தொழுதால் கஃபாவினுல் தொழுததைப் போன்றாகும். எனவேதான், ஆயிஷா (றழி) அவர்கள் அங்கு தொழும்படி கட்டளையிட்டார்கள்.


இங்கு நாம் சற்று சிந்திப்போம் மேற்கூறிய நான்கு சட்டமும் ஹதீஸிலிருந்து விளங்கியவைதான். இதை அடிப்படையாக வைத்துத் தீர்புச் செய்யும்போது அத்தீர்ப்பு ஹதீஸுக்கு முரண் என்று கூறமுடியுமா? இந்த ஹதீஸுடைய உற்கருத்தை விளங்காமல் இத்தீர்ப்பு ஹதீஸில் இல்லை என்று கூறினால் அது அவர்களின் அறிவுக் குறைவைத்தான் காட்டும் ஃபகீஹுகள் ஒவ்வொறு இடத்திலும் தாங்கள் எந்த ஹதீஸிலிருந்து எடுத்தார்கள் என்பதைக் கூறத்தேவையில்லை. அவர்கள் நுட்பமான அறிவு படைத்தவர்கள். அல்லாஹ்வுக்கு பயந்தவர்கள் அவர்கள் குர்ஆன், ஹதீஸுக்கு முரணாக பேச மாட்டார்கள். அதனை அவர்களின் வாழ்கை நமக்கு புலப்படுத்துகின்றது. எனவே, அவர்களின் சொல்லை ஏற்று நடப்படதும் அவர்களை பின்பற்றுவதும் அல்லாஹ்வையும் அவனது றசூலையும் பின்பற்றுவதாகத்தான் ஆகும். அல்லாஹ் நல்லோர்களைப் பின்பற்றி நடக்கும் பாக்கியத்தை நமக்கு அருள்வானாக. ஆமீன்.

(1987 திருச்சி ஜமாஅத்துல் உலமா மாநாட்டு மலரிலிருந்து)பாரகல்லாஹு லிமன் கதப.