அந்த கதவுக்கு பின்னால்தான்
ஆயிஷா இருக்கிறாள்.
கதவுகள் போதாதென,
அவள் விரும்பிய வண்ணத்தில்
திரைச்சீலையும் தொங்குகிறது.
அந்த கதவு இரும்பினால் ஆனது அல்ல .
பழைய மரத்தினால் ஆனது ,வலுவற்றது.
உளுக்கத் துவங்கியிருக்கிறது இப்போதெல்லாம்.
அதைத் தாழிடும் உரிமை
ஆயிஷாவினுடையதே....
அந்த வழியே செல்லும்
கோவில் யானையை
அவளுக்கு மிகவும் பிடிக்கும் .
மதம் கொள்ளும்
சாத்தியங்களுள்ள யானை ,
பொய்ச் சங்கிலியால்
பிணைக்கப்பட்டிருக்கும் சூட்சுமம்
ஆயிஷா அறியாள் .....

என் சொற்பொழிவை கேட்ட நண்பர்களுக்கு தெரியும்.
எல்லா கூட்டத்திலும் தவறாமல் ஒரு வரலாற்றைச் சொல்வேன்.அதை உங்களிடம்
பகிர்ந்து கொள்கிறேன்.

இராமராஜ்ஜியம் வர வேண்டும் என்று
பேசிய.. அண்ணல் காந்தியடிகள்
... அதைப்பற்றி குறிப்பிடும் போதெல்லாம்,
அந்த ஆட்சி கலீபா உமர் அவர்களின் ஆட்சியைப் போல நீதியாக இருக்க வேண்டும் என்பார்.
நான் கலீபா உமர் அவர்களின்
வரலாற்றைப் படித்தேன்.
ஒரு முறை, கலீபா உமர் அவர்கள்
தன் ஆட்சிக்கு உட்பட்ட, ஜெருசலேம் நகருக்கு
அரசு முறைப் பயணம் செல்கிறார்.
அவரை அங்கிருக்கும் தேவாலயத்தில்,
பாதிரியார்கள் வரவேற்கிறார்கள்.
அவர்களுடன் அன்போடு உரையாடுகிறார்
உமர் அவர்கள்.
தொழுகைக்கான நேரம் வந்தது. உமர் அவர்கள் பாதிரியார்களிடம் கூறி விட்டு,
தொழுகைக்கு தயாரானார்.
அப்போது அவர் மீது பேரன்பு கொண்ட பாதிரியார்கள் ”எங்கள் தேவாலயத்தின் ஒரு பகுதியில் கூட, மெக்கா நோக்கி.. நீங்கள் தொழுகை செய்யலாமே? ”என்று அன்பினால் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
அதை மெளனமாக மறுத்து, தேவாலயத்தின் வெளிப்புறம் சென்று, வெட்டவெளியில் தொழுகை செய்கின்றார் உமர் அவர்கள்.
தொழுகை முடிந்து, விருந்துக்கான வேளை வந்தது.பாதிரியார்களுடன் சேர்ந்து, விருந்து உண்டார்.அப்போது ஒரு இளம் பாதிரியார், மனதில் பட்டதைப் போட்டு உடைத்தார்.
”இத்தனை அன்பாக சகோதரனைப்போல பழகும்
நீங்கள் வழிபாடு என்று வந்த போது மட்டும்,
வேறுபாடு காட்டினீர்களே ஏன்?” என கேட்டார்.
அப்போது உமர் அவர்கள் பதில் அளித்தார். ”உங்கள் அன்பை மதித்து, ஒரு வேளை இந்த இடத்தில் தொழுகை செய்திருந்தால், வரலாற்றில் குறிப்பு எழுதப்படும். இது உமர் தொழுகை செய்த பள்ளிவாசல் என்று பெயர் பெறும்.
ஒரு காலம் வரும். நீங்களும் நானும்
உயிரோடு இருக்க மாட்டோம்.
அடுத்த தலைமுறையைச் சேர்ந்த
என் மக்களில் சிலர், கேள்வி எழுப்புவார்கள்.
”உமர் தொழுகை செய்த இடம்
எப்படி தேவாலயமாக இருக்க முடியும்?
பள்ளிவாசலாக மட்டுமே இருக்க முடியும்” என்று உரிமை கோருவார்கள்.
அதில் சிலர் கோபம் கொண்டு, ஆயுதம் ஏந்தி இடிப்பதற்கு முனைந்து விடுவார்கள். ஆகவே தான், இந்த சூழலை, தவிர்த்துக் கொண்டேன்.வருங்கால தலைமுறையின் சமூக அமைதி கருதினேன். உங்கள் இடத்தில் தொழ மறுத்தேன் என்றார்.
ஒரு ஆட்சியாளன் தன் நாட்டு நலனை மீறி, அடுத்த தலைமுறைக்கும் சேர்த்து சிந்திக்க வேண்டும். அதனால் தான், அண்ணல் காந்தி மதச்சார்பின்மையின் முன்னோடியாக உமரின் வரலாற்றை நேசித்தார்.
இத்தகைய நல்லெண்ணம் அத்வானிகளுக்கு இருந்திருந்தால், பாபர் மசூதி உடைக்கப் பட்டிருக்காது.
பொது அமைதிக்கு ஒரு போதும் தீங்கு நேர்ந்திருக்காது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக