செவ்வாய், 22 ஜனவரி, 2013

ரிசானாவின் மரணமும் அன்பர் அமீர் அப்பாஸின் முகநூல் சிந்தனைகளும்


நபிகள் நாயகம் வரலாற்றைப் 
பல முறை படித்தேன்.

அவர் எதிரிகளை மன்னித்தார்
போரில் சிறைப்பிடிக்கப் பட்ட 
கைதிகளை கூட
கருணையாக நடத்தினர்.
அடிமைகளைகூட அவர்கள் 
ஒரு போதும் இழிவாக நடத்தவில்லை

அவரைப் பின் பற்றி
நாம் நடக்க வேண்டாமா?

நீங்கள் சொல்லும் கருத்துப் படி
நான் யாரைப் பின் பற்றுவது?

தாலிபான்
வன்முறையாளர்களையா?
 -------

ஷரியத் சட்டத்தை..
தவறாக பயன்படுத்தி
ஒரு அப்பாவிப் பெண்ணை
படுகொலை செய்த நிகழ்வை
கண்டிக்க நேர்மையற்ற..
குருட்டு நம்பிக்கையாளர்கள்
 இறைநம்பிக்கை குறித்தும்,
இஸ்லாம் குறித்தும்
பேசுவது வெட்கக் கேடானது.
-----------
அப்சல் குருவின் தவறு 
நிரூபிக்கப் படாத போதும்
பெரும்பானமைச் சமூகத்தின் திருப்திக்காக 
தூக்கில் போட வேண்டும் என்கிறார் அத்வானி.

அதைப் போலவே
ரிசானாவிற்கு அளிக்கப்பட்ட
மரண தண்டனையை 
ஷரிஅத் சட்டத்தைக் காப்பதற்காக
என்றுஅந்த படுகொலையை
நியாயப் படுத்துகிறார்கள்
இஸ்லாமியர்களில் சிலர்.

அத்வானியின் கருத்துக்கும்
இதற்கும்
எந்த வித்தியாசமும் இருப்பதாக
எனக்கு தெரியவில்லை.

அத்வானியை எப்போதும் கடுமையாக
எதிர்க்கும் இஸ்லாமியர்கள்,
ஏன் அவரை
இது போன்ற விசயத்தில் மட்டும்
கொஞ்சம் கூட
கூச்சம் இல்லாமல்
பின்பற்றுகிறார்கள்?
என்று தெரியவில்லை.
 --------

ஒரு உயிரை 
அநியாயமான முறையில் 
நீங்கள் கொலை செய்தால்
இந்த உலகில் உள்ள 
எல்லா உயிர்களையும் 
கொலை செய்த குற்றத்திற்கு 
நீங்கள் ஆளாகிறீர்கள் 
என்கிறது திரு குர் ஆன்.

ரிசானா விசயத்தில்
இஸ்லாத்திற்கு உலக அரங்கில்
தலைகுனிவை ஏற்படுத்தியவர்களும்,
அதை ஆதரிப்பவர்களும்,
மன்னிக்க முடியாத
மனித குல விரோதிகள்.
--------

இஸ்லாமிய சட்டத்தை தவறாக பயன் படுத்தி
படுகொலையை நியாயப்படுத்தும் போக்கினால்
நம்மை நாகரீகம் ஏதுமற்ற
காட்டுமிராண்டிகள் என பகிரங்கப் படுத்த
அரசியல் எதிரிகள் திட்டமிடுகிறார்கள்.

சவூதி அரசு,
உலக ரவுடி அமெரிக்காவிற்கு
துணை போவது போல,
நாமும் இது போன்ற
அநீதிகளுக்கு துணை போகலாமா?
 ------------


இஸ்லாமியர்கள் மீது போர் தொடுக்கும் போதும்,
குழந்தைகள் கொல்லப் படும் போதும்ஏன் 
சர்வதேச சமூகத்தின் கருணையைக்கூட 
அந்நிகழ்வுகள் பெறவில்லைஎன்று வருந்துவேன்.
------------

இப்போது தான் உண்மை புரிகிறது.
தங்களை சுய விமர்சனம் செய்து கொள்ள முன்வராத மூடர்களின்
கண்மூடித்தனமான செயல்பாடுகளே காரணம் என்று.
-------------

அநீதியான அரசனுக்கு முன்னால் 
நீதியை எடுத்து சொல்வது 
புனிதப்போர்” என்றார்
நபிகள் நாயகம் ஸல் அவர்கள்.
------------

இஸ்லாத்தின் உன்னத கோட்பாடுகளை 
இழிவுப் படுத்தும் பிற்போக்குவாதிகளை
அரச பயங்கரவாதத்தை மட்டுமே நான் 
தொடர்ந்து அம்பலப் படுத்துகிறேன்.
------------

இதை இஸ்லாத்துக்கு எதிரானதாக பரப்பும்
மூடர்கள் குறித்துஎனக்கு கவலை இல்லை.
------------

அத்வானியை எதிர்ப்பதுஒரு போதும்
இந்து மதத்தை எதிர்ப்பது ஆகாது.
இந்து மத வெறியை எதிர்ப்பதாகவே பார்க்கப் படும்.
 ------------
நபிகள் நாயகம் வாழ்ந்த காலமாகிய 1400 வருடத்திற்கு முன்னால் திரும்பி சென்று விடலாமா
சமகாலம் நமக்கு மிகவும் தொந்தரவாக உள்ளது.

ஜனநாயகத்தின் பெயரால்நிறைய கேள்விகள் நம்மை
அவமானப் படுத்துகின்றன.
------------

அல்லாஹ்வின் சட்டத்தைப் பாதுகாத்தால் போதும் 
யாரை மரண தண்டனையின் பெயரால்யார் 
கொலை செய்தாலும்நமக்கு கவலை இல்லை.
 ------------

அல்லாஹ் தான் ஆட்சியாளர்களை நியமிக்கிறான்
என்கிறது திருக்குர்ஆன்.

அதற்காக நரேந்திர மோடியைஎதிர்க்காமல் 
விட்டு விட முடியுமா?
 ------------

இடி அமீன் , உகாண்டாவின் அதிபராக இருந்தவன் . இவன் ஒரு சைக்கோகிறுக்கன் , பெண்களை கற்பழித்து பின்பு காயப்படுத்தி அவர்களின் கதறலை ரசிப்பவன் , அவனுடைய அமைச்சரவையிலே ஒரு அமைச்சரின் மனைவியை அவரின் கண்முன்னே கதற கதற கற்பழித்தவன் என்றால் இவன் எப்படி பட்டவன் என்று பார்த்துக்கொள்ளுங்கள் . இவன் ஆட்சியில் இன மோதலை உருவாக்கி ஆயிரம் ஆயிரமாக மக்களை கொன்று குவித்தவன் . இவனுடைய கடைசி காலத்தில் இவனை கொலை செய்வதற்கு மக்கள் முயன்ற போது . இவன் நாட்டை விட்டே தப்பித்து வேறு நாடுகளில் அடைக்கலம் தேடினான் எந்த நாடும் கொடுக்கவில்லை . ஆனால் இவனுக்கு அடைக்கலம் கொடுத்த ஒரே நாடு சவுதி அரேபியா . இவன் கடைசி காலத்தில் சவுதி அரேபியாவில் தான் மரணித்தான் . ஆயிரம் மக்களை கொன்ற இடி அமினுக்கு அடைக்கலம் கொடுப்பீர்கள் ? தவறே செய்யாத ஒரு பரதேசியான ஏழை சிறுமியை மண்ணிக்க மாட்டிர்கள் ? இது தான் சவுதி அரேபிய மக்களின் மன நிலை .
 ------------

தவறு செய்பவர்களை..
மன்னித்து விட வேண்டும்
பொறுத்துக்கொள்ளவும் வேண்டும்

இறைவன் உங்களை..
மன்னிக்க வேண்டுமென
நீங்கள் விரும்புவதில்லையா?

திருக்குர் ஆன் 24:22

தண்டிக்கும்.. 
சக்தி பெற்ற நிலையிலும்
மன்னிப்பவரே..
இறைவனிடத்தில்
கண்ணியத்திற்குரியவர்..! நபிமொழி.

நூல் - பைஹகி.

ஒரு நாளைக்கு எழுபது முறை
பணியாட்களை மன்னியுங்கள்

நபிகள் நாயகம் ஸல்
 -------------
எவர் மென்மையை 
இழந்து விட்டாரோ
அவர் எல்லா.. 
நற்பண்புகளையும்
இழந்தவர் போல் ஆவார்

நபிகள் நாயகம் {ஸல்}

 ------------
இஸ்லாத்தின் அறநெறிகளை 
உன்னதங்களை மறுக்கவில்லை.

இஸ்லாத்தின் பெயரால் அனுமதிக்கப்படும்
வன்முறைகளை களையுங்கள்..!

இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்டிருக்கும்
மென்மையான மிகவும் அன்பான 
பண்பாட்டைப் பின்பற்றுங்கள்
என்று மட்டுமே வலியுறுத்துகிறேன்.

வன்முறைக்கு இந்த சமூகம் நிறைய
விலை கொடுத்து விட்டது.
இளைஞர்களின் வாழ்வை பெரும்பகுதி
வன்முறை கெடுத்து விட்டது.
------------

எதிரிகள் உங்களை இப்படி தான் என்று
எண்ணுவதற்கு இடம் தராதீர்கள்.
 ------------

தன் சமூகத்தைச் சேர்ந்த ஒருவன் செய்கிற நன்மைகளை ஆதரிப்பது இனப்பற்று ஆகும்.

தன் சமூகத்தைச் சேர்ந்த ஒருவன் செய்யும்
தவறை ஆதரிப்பது இனவெறியாகும்.
நபிகள் நாயகம்.

என்னை விமர்சிப்பவர்கள் யார் என்று 
இந்த நபிமொழி உணர்த்தி விட்டது.

------------
அல்லாஹ் வகுத்த சட்டத்தின் பெயரால்
முல்லாக்கள் செய்கிற தவறுகளுக்கு
யார் பொறுப்பேற்றுக் கொள்வது?

------------
நபிகள் நாயகம் மறைவுக்கு பின்னால்,
ஆட்சிக்கு வந்த கலீபாக்கள்
அபூபக்கர் ரலி அவர்கள் மற்றும் உமர் ரலி அவர்கள் காலத்தில் 
உடைகள் தோலை விடவும் 
கடினமாக இருந்திருக்கிறது.
மெல்லிய உடைகள் அணிவது.. 
ஆடம்பரமான செயலாக கருதப்பட்டு,
தண்டனைக்குள்ளாக்கப் பட்டிருக்கிறது.
அதை இஸ்லாமிய சட்டம் என்று
இன்றைய சூழலில் நடைமுறைப் படுத்தினால்,
ஒருவன் கூட நாட்டில் நடமாட முடியாது.

------------
அமெரிக்காக்காரன் குடிப்பதற்கும்
விபச்சாரம் செய்வதற்கும்.. 
தனிப்பட்ட முறையில்
நகரின் சிறப்புப்பகுதியை 
தானே முன்வந்து.. 
சகலத்தையும் ஏற்படுத்தி தரும் 
சவூதி அரசு

ஷரிஅத் சட்டத்தைப் 
பின்பற்றுவதாக கூறிக்கொள்வது 
உலகையே ஏமாற்றும் 
இழிவான தந்திர அரசியல்.

------------
தன் அரசியல் செல்வாக்கை 
காப்பாற்றிக்கொள்ள..
கல்லூரி மாணவி இஸ்ரத் ஜஹானை 
போலி என்கவுண்டரில் 
படுகொலை செய்த..
நரேந்திர மோடி அரசுக்கும்..

அப்பாவியான இலங்கைப்பெண் 
ரிசானாவை...
படுகொலை செய்த சவூதி அரசுக்கும் 
நடைமுறையில்
எந்த வித்தியாசமும் இருப்பதாக
எனக்கு தெரியவில்லை.
------------

குடம் குடமாக குடித்து விட்டு..
கொலைகளும் வழிப்பறியும் செய்த 

காட்டு அரபிகள் காலத்தின் 
தண்டனை நடைமுறைச் சட்டங்களை 
எல்லாம் சம காலத்துடன் 
பொருத்தி வைத்து..
இறைவனின் சட்டம்” 
என்கிறார்கள் சைத்தான்கள்.
கேட்க நாதியற்ற.. 
ஒரு ஏழ்மையான
அபலைப் பெண்ணின் 
உயிரை விடவும்..
ஷரியத் சட்டம் பெரிது என்றால்
இஸ்லாமிய மார்க்கம்
கருணையற்றதா?
நாம் அனைவரும்
காட்டுமிராண்டிக்கூட்டமா?

எதிரிகள் நம் மீது வைத்த..
எல்லா குற்றச்சாட்டுக்களும்
உண்மை தானா?

ஈராக் மீது போர் தொடுப்பது 
கடவுளின் விருப்பம் என்று 
அறிவித்தது அமெரிக்கா.

அதைப் போலவே,
ஒரு பெண்ணுக்கு விதிக்கப் பட்ட 
மரண தண்டனையை.. 
அல்லாஹ்வின் பெயரால் 
நியாயப்படுத்துகிறார்கள் 
சில நிர்மூடர்கள்.

இந்த பெண்ணுக்கு
விதிக்கப்பட்ட தண்டனை
சரியென்று வாதிட்டால்,
ஈராக் போரும் ...
சரியான நடவடிக்கை தானே?




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக