இஸ்லாமிய வரலாற்றில் காலித் பின் வலீத் (ரழி) ஒரு தனிச்சிறப்பிடம் உண்டு. உயரமான மலை போன்ற உறுதியான தோற்றம், மற்றும் பரந்த மார்புகள், குறிப்பிட்டுச் சொல்லும் தகுதிகளான கழுகு போன்ற கூர்ந்த பார்வை, தொலை நோக்குச் சிந்தனைத் திறன், சிறந்த அறிவாற்றல், நல்ல நினைவாற்றல் மற்றும் உயர்ந்த சிந்தனைகள், உறுதியான கொள்கைப் பிடிப்பு ஆகிய குணநலன்களை ஒருங்கே பெற்றவர் தான் காலித் பின் வலீத் (ரழி). இஸ்லாமிய போர் வரலாற்றில் இவருக்கென தனி இடம் உண்டு. இவருக்கு நிகரான குதிரை ஏற்ற வீரரும், வாள் வீச்சு மற்றும் பல்வேறு ஆயுதங்களைப் பிரயோகிக்கும் திறமை படைத்தவர்கள் கிடையாது என்று சொல்லும் அளவுக்கு வீரத்தின் விளைநிலமாகத் திகழ்ந்தார்.
உஹதுப் போர்க்களத்தில் எதிரிகளின் தரப்பில் இருந்து கொண்டு, முஸ்லிம்களை கதிகலங்கச் செய்த காலித் பின் வலீத் அவர்கள், அல் முஃதா போரிலே முஸ்லிம்கள் தரப்பில் கலந்து கொண்டு, இஸ்லாமிய எதிரிகளைக் கதிகலங்க வைத்த பெருமைக்குரியவர்.
தன்னுடைய தனித் திறமை மற்றும் போர்த்திட்டத்தின் காரணமாக ரோமர்களைப் புறமுதுகிட்டோடச் செய்து, முஸ்லிம்களுக்கு மிகப் பெரிய வெற்றியை ஈட்டிக் கொடுத்த மாவீரர். ரோமும், பாரசீகமும் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் படை நடத்தி வருகின்றார் என்ற செய்தி கேட்டவுடன், அவர்களின் கைகளில் இருந்த வாள் ஆட்டம் காணும் அளவுக்கு எதிரிகளின் இதயத்தில் அச்சத்தை ஊட்டிய வீரத்தின் விளைநிலம் காலித் பின் வலீத் (ரழி) ஆவார்கள்.
இறைநிராகரிப்பாளர்களின் முன்பு காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் பெயர் உச்சரிக்கப்படுமானால், அவர்கள் கதிகலங்கினார்கள், அவரது வலிமை மிக்க தாக்குதல்கள் அவர்களை நிலைகுலையச் செய்தன. அதன் மூலம் மிகப் பெரிய வெற்றியை இஸ்லாமியப் போர் வரலாற்றில் ஈட்டிக் கொடுத்த பெருமை காலித் பின் வலீத் (ரழி) அவர்களைச் சாரும்.
இதன் காரணமாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் "அல்லாஹ்வின் வாள்" என்றழைக்கக் கூடிய சைபுல்லாஹ் என்ற பட்டப் பெயரைச் சூட்டி காலித் பின் வலீத் (ரழி) அவர்களைப் பெருமைப்படுத்தினார்கள். இஸ்லாமிய வரலாற்றிலும் சரி.., இன்னும் வரக் கூடிய நாட்களின் போர் வரலாற்றிலும் சரி.., காலித் பின் வலீத் (ரழி), என்ற மாபெரும் வீரருக்கு தனிச் சிறப்பிடம் என்றென்றும் உண்டு.
வெற்றிகள் அவரது காலை வந்து முத்தமிட்டன, அவரது எதிரிகள் கூட அவரது வீரத்தை மெச்சும் அளவுக்கு அவர் தன்னிகரற்ற வீரராகத் திகழ்ந்தார்.
பிறப்பும் வளர்ப்பு;பும் மக்காவின் பனூ மக்சூம் என்ற குலத்தில் வலீத் பின் முகீரா என்பவருக்கு மகனாகப் பிறந்த காரணத்தால், அவரது பெருமைமிக்க குலப் பெருமையின் காரணமாக, இளமையிலேயே எல்லோராலும் அறியப்படக் கூடிய மனிதராகக் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் திகழ்ந்தார்கள். அவரது இளமைக் காலத்திலேயே தூர நோக்கு, திட்டமிட்டு செயலாற்றுதல், எடுத்த காரியத்தை கனகச்சிதமாக நிறைவேற்றுதல் ஆகியவற்றின் காரணமாக பனூ மக்சூம் கோத்திரத்து வாலிபர்களில் மிகச் சிறந்த இடத்தைப் பெற்றிருந்தார்கள்.
உஹதுப் போர் முதல் ஹுதைபிய்யா வரைக்கும் இஸ்லாமிய எதிரிகளின் தரப்பில் இருந்த காலித் பின் வலீத் அவர்கள், இஸ்லாமிய எதிரிகளின் இராணுவத்தின் துணைப் பிரிவுக்குத் தலைவராகவும், குதிரைப் படைக்குத் தலைவராகவும் இருந்து பணியாற்றிய அனுபவமிக்க இவர், அதற்குப் பின் இஸ்லாத்தின் வெளிச்சப் புள்ளிகள் அவரது வாழ்வை வெளிச்சமேற்றியதன் காரணமாக, பின்னாளில் இஸ்லாமியப் போர்ப்படைத்தளபதியாகப் பரிணமித்தார். இஸ்லாத்தின் எதிரிகளை நிலைகுலையச் செய்து, இஸ்லாமிய சாம்ராஜ்யம் அரபுப் பிரதேசத்தை விட்டும் பரவத் துணை புரிந்தார்.
இஸ்ல்லாத்தைத் தழுவும் முன் இஸ்லாத்தினை தன்னுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொள்வதற்கு முன்பாக கலந்து கொண்ட அத்தனை போர்களிலும் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு எதிராக மார்தட்டி நின்ற காலித் பின் வலீத் அவர்கள், ஒவ்வொரு முறையும் இறைத்தூதர் (ஸல்) அவர்களைச் சந்திக்கும் பொழுதெல்லாம் அவர்களது குணநலன்களால் கவரப்பட்டு, தன்னுடைய நோக்கத்தை சிறிது சிறிதாக மாற்றிக் கொண்டார். இறுதியாக இஸ்லாம் என்னும் வெளிச்சப் புள்ளி, அவரது இதயத்தைக் கவ்வி இருந்த இருளைத் துடைத்தெறிந்தது. அவரது தலைமை இஸ்லாமிய போர் வரலாற்றில் சூரியனாகப் பிரகாசித்தது.
ஒருமுறை போரின் பொழுது, நபித்தோழர்கள் பின்னிற்க இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மதிய லுஹர் தொழுகையை முன்னின்று நடத்திக் கொண்டிருந்தார்கள். இது தான் தக்க சமயம் என்று எண்ணிக் கொண்ட காலித் பின் வலீத் அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களையும், அவர்களைப் பின்பற்றித் தொழுது கொண்டிருந்த தோழர்களையும் தாக்கி, அந்தப் போரைத் தங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொள்வதற்குத் தாயரானார். ஆனால் கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு படை ஒன்று, அவரைப் பின்னுக்கு இழுப்பதைப் போல உணர்ந்த காலித் பின் வலீத் அவர்கள், தன்னுடைய முயற்சியைக் கைவிட்டார்.
முஸ்லிம்களை எதிர்க்கும் துணிவையும் இழந்து விட்டார்.
மீண்டும் அஸர் தொழுகை நடந்து கொண்டிருந்தது. இந்தமுறை கண்டிப்பாக சந்தர்ப்பத்தை நழுவ விடக் கூடாது என்று சூளுரைத்து, இறைத்தூதர் (ஸல்) அவர்களையும் அவர்களைப் பின்பற்றித் தொழுது கொண்டிருந்த தோழர்களையும் நெருங்கிய பொழுது, கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு சக்தி அவரைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டதோடு, அவரால் நகரக் கூட இயலாமல் போனது. அப்பொழுது தான் ஒரு முடிவுக்கு வந்தார், இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் மோதுவது வெட்டி வேலை, அவரை ஏதோ ஒரு சக்தி பாதுகாத்துக் கொண்டிருக்கின்றது, இந்த நிலையில் அரேபியாவை மட்டுமல்ல, அரபுப் பிரதேசத்தையும் கடந்து இந்த முழு உலகத்தையும் அவர் ஒரு நாள் வென்று விடுவார் என்று தனக்குத் தானே கூறிக் கொண்டு, தனது முயற்சிகளைக் கை விட்டு விட்டார்.
இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கும் இறைநிராகரிப்பாளர்களுக்கும் ஹுதைபிய்யாவில் வைத்து உடன்படிக்கை நடந்து முடிந்ததுடன், இனி நமது நிலை என்ன? நாம் எந்தப் பாதையைத் தேர்ந்தெடுப்பது என்ற மனநிலைத் தடுமாற்றத்துக்கு உள்ளானார். அடுத்து எந்த முடிவை எடுப்பது என்ற குழப்பத்தில் தடுமாறிய காலித் பின் வலீத் அவர்கள், எத்தியோப்பியாவிற்குச் சென்று விடலாமா? என்று கூட நினைத்தார். பின் எத்தியோப்பியாவிற்கு நாம் எப்படிச் செல்வது? ஏற்கனவே, எத்தியோப்பியாவின் மன்னர் நஜ்ஜாஸி முஸ்லிம்களின் ஆதரவாளராக மாறி, முஸ்லிம்கள் அங்கு பாதுகாப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கின்ற நினைவு அவருக்கு வந்ததும் தன்னுடைய அந்த முடிவையும் மாற்றிக் கொண்டார். பின் நாம் ஹர்கல் தேசத்துக்குச் சென்று தன்னுடைய மதத்தை விட்டு விட்டு, ஒரு கிறிஸ்தவனாகவோ அல்லது யூதனாகவோ மதம் மாறி விடலாமா? என்று பல்வேறு சிந்தனைகள் அவரது மனதை அலைக்கழித்துக் கொண்டிருந்தன. ஆனால் எந்த முடிவுக்கும் அவரால் வர இயலவில்லை. இன்னும் எதுவாக இருப்பினும் இந்த அரேபியா மண்ணிற்குள் இருந்து தான் அந்த மாற்றம் நிகழ வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். போர், சண்டை என்று அனைத்தையும் விட்டு விட்டு அமைதியாக வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாமா? என்று பலவித நினைவுகள் அவரது நினைவை அலைக்கழித்துக் கொண்டிருந்தன, ஆனால் எதிலும் ஒரு முடிவுக்கு வர இயலாதவராக இருந்தார்.
அப்பொழுது ஏற்கனவே இஸ்லாத்தைத் தன்னுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டிருந்த அவரது சகோதரர், காலித் பின் வலீத் அவர்களுக்கு ஒரு கடிதத்தை எழுதினார். அந்தக் கடிதத்தில் தன்னுடைய சகோதரரைப் பற்றி விசாரித்தும், இன்னும் அதற்கும் மேலாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தங்களைப் பற்றி விசாரித்தார்கள் என்ற செய்தியையும் அதில் குறிப்பிட்டிருந்ததைக் கண்ட காலித் பின் வலீத் (ரழி) அவர்களுக்கு இனம் புரியாததொரு உளக் கிளர்ச்சி ஏற்பட்டது. இன்னும் காலித் பின் வலீத் அவர்கள் ஒரு நாள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வார்கள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்கள். அவரது அறிவு, ஆற்றல், சிந்தனைத் திறன், தொலை நோக்குப் பார்வை ஆகிய இறைவனின் அருட்கொடைகள் அனைத்தும், காலித் பின் வலீத் அவர்களை இதே நிலையில் விட்டு வைத்திருக்கப் போவதில்லை என்பதனையும் அதில், அந்த சகோதரர் குறிப்பிட்டுக் கூறியிருந்தார்.
இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுதல் மேலே உள்ள செய்திகள் யாவும் காலித் பின் வலீத் அவர்களை பல்வேறு சிந்தனைகளைத் தோற்றுவித்ததோடு, என்னை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விசாரித்தார்களா? நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வேன் என்று சொன்னார்களா? எனக்கென பிரகாசமான எதிர்காலம் ஒன்று இருக்கின்றது போல் தெரிகின்றது என்று தனக்குத் தானே கூறிக் கொண்ட காலித் பின் வலீத் அவர்கள், தான் கண்ட கனவை இப்பொழுது அசை போட்டுப் பார்க்க ஆரம்பித்தார். அடர்ந்த, காற்றோட்டம் இல்லாத குகை போன்ற இடத்தை விட்டு பச்சைப் பசேலென்ற மிகப் பரந்த பசுஞ்சோலைகளின் பக்கம் தான் மீண்டு வருவதாகக் கண்ட கனவையும், இப்பொழுது தனக்குள் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் உணர்வலைகளையும் ஒப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்தார். இனி நாம் இங்கு தங்கியிருப்பதில் பயனில்லை என்பதை உணர்ந்தவராக, இனி மதீனாவை நோக்கிச் செல்வது என்ற இறுதி முடிவை எடுத்த அவர், நாம் தனியாகப் போவதை விட, நம்முடன் யாரையாவது துணைக்கழைத்துச் செல்வது நல்லது என்று நினைத்து, யாருடன் செல்வது என்ற சிந்தனைக் குழப்பத்தில் ஆழ்ந்த பொழுது, உதுமான் பின் தல்ஹா (ரழி) அவர்களின் நினைவு வர, தனது நோக்கத்தை அவரிடம் தெரிவித்தார்.
உதுமான் பின் தல்ஹா (ரழி) அவர்களும் தனக்கும் அப்படியொரு நோக்கம் இருப்பதாகக் கூறிய அவர், சரி இருவரும் சேர்ந்து இணைந்தே மதீனாவிற்குச் சென்று இறைத்தூதர் (ஸல்) அவர்களைச் சந்திப்பதென்று முடிவாகியது. இருவரும் மதீனா நோக்கிப் புறப்பட்ட பொழுது, இடையில் அம்ர் பின் ஆஸ் (ரழி) அவர்களைச் சந்தித்தனர். அவர், நீங்கள் இருவரும் எங்கே புறப்பட்டு விட்டீர்கள் என்று கேட்ட பொழுது, அவர்கள் தங்களது நோக்கத்தைத் தெரிவித்தார்கள். தாங்கள் மதீனா சென்று இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களைச் சந்தித்து, அவர்களது கரங்களில் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளச் சென்று கொண்டிருப்பதாகக் கூறினார்கள். மதீனா செல்லும் குழுவின் எண்ணிக்கை, இரண்டு இப்பொழுது மூன்றாக மாறியது.
மூவரும் மதீனாவை ஹிஜ்ரி 8 ஆம் ஆண்டு, ஸஃபர் மாதம் முதல் தேதியன்று சென்றடைந்தார்கள். முதலில் இறைத்தூதர் (ஸல்) அவர்களைச் சந்தித்த காலித் பின் வலீத் அவர்களை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் புன்னகை தவழ வரவேற்றார்கள். பின் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் திருக்கரங்களைப் பற்றிக் கொண்டு, திருக்கலிமாவை முன்மொழிந்து இஸ்லாத்தைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார்கள். மிகவும் பாசத்துடன் காலித் பின் வலீத் (ரழி) அவர்களை நோக்கிய அண்ணலார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : காலித் பின் வலீத் (ரழி) அவர்களே....! உங்களது புத்திசாலித்தனம், கல்வி ஞானம், தொலை நோக்குப் பார்வை ஆகிய நற்பண்புகளை வைத்துக் கணித்து, என்றாவது ஒருநாள் நீங்கள் இஸ்லாத்திற்குள் நுழைவீர்கள் என்று நான் நினைத்தேன் என்றார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்களே..! எனக்கு மன்னிப்பு உண்டா? என்ற கேட்ட காலித் பின் வலீத் (ரழி) அவர்கள்..! நான் என்னுடைய வாள் பலத்தினால் பல்வேறு இன்னல்களையும், தீமைகளையும் புரிந்துள்ளேன். இதற்கு முன் இஸ்லாத்திற்கு நான் இழைத்த கொடுமைகளுக்காக மன்னிப்புக் கோரி இறைவனிடம் பிரார்த்தனை புரியுமாறு இறைத்தூதர் (ஸல்) அவர்களை வேண்டிக் கொண்ட காலித் பின் வலீத் (ரழி) அவர்களுக்கு, இறைநிராகரிப்பில் இருந்து கொண்டு நீங்கள் செய்த அத்தனை பாவங்களும் இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டதன் காரணமாக, தானாகவே அழிந்து போய் விடுகின்றன என்று பதில் கூறினார்கள்.
இல்லை..! யா ராசூலுல்லாஹ்..! இருப்பினும், நீங்கள் எனக்காக பிரார்த்தனை செய்தாக வேண்டும் என்று மீண்டும் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் வலியுறுத்தவே, இறைவா! காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் பாவங்களை மன்னித்தருள்வாயாக! அவர் மீது கருணை காட்டுவாயாக! என்று பிரார்த்தனை புரிந்தார்கள்.
அதன் பின்பு அம்ர் பின் ஆஸ் (ரழி) அவர்களும், பின்பு உதுமான் பின் தல்ஹா (ரழி) அவர்களும் இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டார்கள்.
கண்ட கனவு நனவாகுதல்.! பின்பு தான் கண்ட கனவைப் பற்றி காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், அபுபக்கர் சித்தீக் (ரழி) அவர்களிடம் கூறினார்கள்.
காரிருள் கொண்ட அறை என்பது நீங்கள் அறியாமைக்காலத்தில் இருந்து கொண்டிருந்த இறைநிராகரிப்பு என்பதாகும். பின் அதனை விட்டு வெளியேறி பரந்த புல்வெளியை நோக்கி வருவது என்பது, இறைநிராகரிப்பில் இருந்து வெளியேறி, இஸ்லாத்தினுள் நுழைவதனைக் குறிக்கும். அந்தக் கனவு நீங்கள் இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டதன் காரணமாக இப்பொழுது நனவாகி இருக்கின்றது என்றும், அவர்களது கனவிற்கு அபுபக்கர் சித்தீக் (ரழி) அவர்கள் விளக்கமளித்தார்கள்.
காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் பயம் காரணமாகவோ அல்லது பெருமைக்காகவோ இஸ்லாத்தினை ஏற்றுக் கொள்ளவில்லை, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாழ்வியல் முன்மாதிரிகள் தான் அவரை இஸ்லாத்தின் பால் ஈர்க்கக் காரணமாக அமைந்தன. மனித குல வரலாற்றில் சத்தியத்தை நிலைநிறுத்துவதற்காக பாடுபடுகின்ற மனிதர்கள் தொலை நோக்குச் சிந்தனையுடனும், வெளிப்படையான போக்குகளுடனும் தங்களது வாழ்வை அமைத்துக் கொள்வது என்பது, அவர்களது அடிப்படை மற்றும் சிறப்புத் தன்மைகளாக இருந்து வந்துள்ளன. எனவே தான் எதனை சத்தியம் என்று ஏற்றுக் கொண்டார்களோ அதனை வெளிப்படையாக மக்களுக்குத் துணிவுடன் அறிவிக்க அல்லது எடுத்து வைக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். இந்த இரண்டு அடிப்படை அம்சங்களாகிய துணிவு மற்றும் வெளிப்படையான தன்மை ஆகிய இரண்டும் காலித் பின் வலீத் (ரழி) அவர்களிடம் காணப்பட்டதே, அவர்களை இஸ்லாமிய வரலாறு போற்றும் மாவீரராக உயர்த்திக் காட்டிக் கொண்டிருக்கின்றது.
அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் வரைக்கும், இஸ்லாத்தின் பரம விரோதியாகவே இருந்தார். உஹத் போரிலே முஸ்லிம்கள் எளிதாக வெற்றி பெற்றிருக்கக் கூடிய அந்த வாய்ப்பை தவிடு பொடியாக்கி, தான் எந்த நோக்கத்திற்காக வந்தாரோ அந்த நோக்கத்தை அடைவதில் அவர் காட்டிய உறுதி மற்றும் தீவிரப் போக்கு ஆகியவைகள் தான் முஸ்லிம்களின் வெற்றியை நிலைகுலையச் செய்தது எனலாம். இருப்பினும், அந்தப் போரில் இறைநிராகரிப்பாளர்கள் வெற்றி பெற இயலாமல் போனதுடன், இனி நாம் முஹம்மது (ஸல்) அவர்களை வெற்றி பெற இயலாது என்ற நிலைக்கு, மன ரீதியாகத் தள்ளப்பட்டனர்.
முஸ்லிம்கள் நம்மை விஞ்சி விட்டார்கள், இனி அவர்களை நாம் எதுவும் செய்துவிட இயலாது என்று அனைத்து குறைஷித் தலைவர்களும் முடிவுக்கு வந்த பின்னரும், காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை. மற்றவர்களது முடிவை மண்ணில் போட்டுப் புதைத்து விட்டு, ஒரு குதிரைப் படையை ஒருங்கிணைத்துக் கொண்டு மலைப் பகுதியில் புகுந்து முஸ்லிம்களை எதிர்த்துப் போரிட்டு, முஸ்லிம்களுக்கு கடுமையான சேதத்தோடு, உயிர் சேதத்தையும் அதிகம் ஏற்படுத்தி விட்டார் காலித் பின் வலீத் அவர்கள்.
இத்தகைய மனிதர் தான், இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பின்பும் அதே வீரத்தோடும், விவேகத்தோடும் தான் எந்த நோக்கத்தை அடைய போர் முகத்துக்கு வந்தோமோ அந்த நோக்கத்தை அடைந்து கொள்வதற்காக, வேகம் குன்றாது போரிட்டார் இந்த வீரமகன்.
அவர் தனது உயிரையும், பொருளையும், ஆவியையும் இறைமார்க்கத்திற்காக அற்பணித்து விட்டிருந்தார். அவர் என்றைக்கு இஸ்லாத்தை தன்னுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டாரோ அன்றிலிருந்து, சத்தியத்தை மேலோங்கச் செய்யவும், அசத்தியத்தை வேரோடு சாய்க்கவும் போரிட்டுக் கொண்டே இருந்தார். இன்னும் மிகவும் கடுமையாக கால கட்டங்களில் கூட அவர், கொஞ்சம் கூட தடுமாற்றத்தை தன்னுடைய உள்ளத்தில் உலா விட்டதில்லை, நம்பிக்கையை இழந்து விடவில்லை.
காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் காட்டிய வீர தீர சாகசங்களை இன்றளவும் உலகம் வியந்து போற்றிக் கொண்டிருக்கின்றது. அவரது வீரம் செறிந்த அந்த தருணங்களை இஸ்லாமியர்கள் மட்டுமல்ல, இஸ்லாத்தின் எதிரிகள் கூட போற்றும் அளவுக்கு, அவரது வீரத்தை ஒப்புக் கொண்டுள்ளனர். முந்தைய ஜெர்மன் படைத்தளபதியாக இருந்த ஜெனரல் அரோன் ரோம்மல் என்பவரிடம், அவருடைய வெற்றியைக் குறித்துக் கேட்ட பொழுது, நான் காலித் பின் வலீத் அவர்களது தந்திரத்தைக் கையாண்டு கொண்டிருப்பதன் மூலம் தான் இத்தகைய வெற்றிகளைப் பெற்றுக் கொண்டிருக்கின்றேன் என்று பதில் கூறியிருக்கின்றார்.
ரோமப் பேரரசன் சீஸரை மண்ணுக்கு இரையாக்கி வைத்தது, காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் திட்டமிட்ட தாக்குதல்களும், அவர் தன்னுடைய படைவீரர்களை ஒருங்கிணைத்து செயலாற்றச் செய்ததது தான், அதன் காரணமாகும்.
ரோமும், பாரசீகமும் அன்றைக்கு இருந்த செல்வச் செழிப்பில் மற்றும் இராணுவ அமைப்பில் முஸ்லிம் படை அவர்களை வெற்றி கொள்வது என்பது இயலாத காரியம் என்றே, உலகத்தின் கணிப்பு இருந்திருக்கும். ஆனால், அத்தகைய படையை மண்ணோடு மண்ணாக ஆக்கி, அவர்களது பேரரசை புழுதி படியச் செய்த வரலாற்று நிகழ்ச்சியை ஏற்படுத்திக் காட்டியவர் காலித் பின் வலீத் (ரழி). சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் இடையே நடந்த அந்த இடையறாத போரில், இறைவனது துணை கொண்டு காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் வெற்றியைத் தவிர வேறெதனையும் கண்டதில்லை. தோல்வி என்பதே அவரது வரலாற்றில் இல்லை, என்ற சரித்திரத்தைப் படைத்தவர் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள்.
அல் முஃதா போர் இன்றைய சிரியாவின் எல்லைக்கு உட்பட்ட பகுதி அல் முஃதா. இந்த இடத்தில் நடந்த போர் தான் இஸ்லாமிய வரலாற்றில் முஃதா போர் என்றழைக்கப்படுகின்றது. இஸ்லாத்தைத் தன்னுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்ட பின் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் முதன்முதலாக இந்த முஃதா போரில் சாதாரண படை வீரராகக் கலந்து கொண்டார்கள்.
இந்தப் போரில் கலந்து கொண்ட தளபதிகள் மூவர் ஒருவர் பின் ஒருவராக வீர மரணம் அடைந்து விட, நான்காவதாக தலைமைப் பொறுப்பை ஏற்கும் பாக்கியம், காலித் பின் வலீத் (ரழி) அவர்களிடம் வந்தடைந்தது. அப்பொழுது, முஸ்லிம்களின் படையில் வெறும் 3000 படைவீரர்கள் தான் இருந்தனர், இன்னும் அவர்கள் மிக நீண்ட காலம் போர் செய்து சற்று களைப்படைந்தும் இருந்தனர். ஆனால் எதிரிகளின் பக்கமோ 2 லட்சம் படைவீரர்களும், இன்னும் அவர்கள் முழு ஆயுத பலத்தோடும் போருக்கு வந்திருந்தனர். அவர்களின் கண்களில் போர் கனல் தெறித்துக் கொண்டிருந்தது. பின்வரும் சம்பவத்திற்குப் பின் போர் மும்மூரமாக ஆரம்பித்தது.
இறைத்தூதர் (ஸல்) அவர்களின் நம்பிக்கையைப் பெற்றதொரு தோழர், ஹாரிஸ் பின் அம்ர் அஸ்தி (ரழி). இந்தத் தோழர் மூலமாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு கடிதத்தை, பஸ்ராவின் மன்னர் ஹாரிஸ் பின் அமி ஷம்மார் கஸ்ஸானி என்பவருக்கு அனுப்பி வைத்தார்கள். அவர் செல்லும் வழியில் முஃதா என்ற இடத்தில் அமைந்துள்ள சிறு நகரமான பல்கா என்ற இடத்தை இந்தத் தோழர் அடைந்தவுடன், அந்தப் பகுதியின் கவர்னராக இருந்த சர்ஜீல் பின் அம்ர் கஸ்ஸானி என்பவர், இவரின் வருகையை அறிந்து, அந்த நபித்தோழரை கைது செய்து, கொலையும் செய்து விட்டார். இந்தத் துயரச் செய்தி இறைத்தூதர் (ஸல்) அவர்களை அடைந்தவுடன், மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானார்கள். இதே காலகட்டத்தின் இன்னுமொரு நிகழ்ச்சியும் நடந்தது. அதாவது, ஒரு பதினைந்து நபர் கொண்ட முஸ்லிம்களின் குழு ஒன்று, சாத் அல் அத்லா என்ற பகுதியில் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த பொழுது, இந்தப் பதினைந்து பேர் கொண்ட குழுவும் படுகொலை செய்யப்பட்டார்கள். இதே கால கட்டத்தில் ரோமப் பேரரசன் மதீனாவைத் தாக்கப் போவதாகவும் அறிவித்திருந்தான்.
எனவே, மேற்கூறிய சம்பவங்கள் தான் இந்த முஃதா போர் நடைபெறுவதற்கு முக்கியக் காரணங்களாக அமைந்தன. எனவே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மிகப் பெரிய படையைத் தயார் செய்து, அந்தப் படைக்கு முதல் தளபதியாக ஜைத் பின் ஹாரிதா (ரழி) அவர்களையும், அவர் இறந்து விட்டால் பின் ஜாஃபர் பின் அபீதாலிப் (ரழி) அவர்களையும், இன்னும் அவரும் வீரமரணம் எய்து விட்டால், அப்துல்லா பின் ரவாஹா (ரழி) அவர்களையும் தளபதிகளாக முறையே நியமித்துக் கொள்ளும்படி, முஸ்லிம்களுக்கு அறிவுரை வழங்கி முஃதா போருக்கு முஸ்லிம் வீரர்களை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.
இந்த மூன்று தளபதிகளும் மரணமடைந்து விட்டால், பின் படைவீரர்கள் தங்களுக்குள் கலந்தாலோசனை செய்து கொண்டு, தங்களுக்குள் ஒரு தளபதியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி அறிவுரையும் வழங்கி அனுப்பி வைத்தார்கள்.
ஜைத் பின் ஹாரிதா (ரழி) அவர்கள் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு, வெள்ளைக் கொடியைத் தனது கையில் ஏந்திய வண்ணம் போர் முகத்துக்கு தனது படையை அழைத்துச் சென்று, எந்த இடத்தில் ஹாரித் பின் அம்ர் அஸ்தி (ரழி) அவர்கள் படுகொலை செய்யப்பட்டார்களோ, அந்த இடத்திலேயே தனது படையை இறக்கி, கூடாரம் அடித்து நிலைப்படுத்தினார்கள். இன்னும் நிலைகுலையாத தன்மையையும், எதிரிகளை எதிர்க்கும் போது தங்களது பாதங்கள் உறுதியாக இருப்பதற்கும் அவர்கள் இறைவனிடம் பிரார்த்தித்துக் கொண்டார்கள்.
இன்னும் வயதானவர்களையும், இன்னும் குழந்தைகளையும் பெண்களையும் கொலை செய்வதைத் தடை செய்தார்கள். இன்னும் இந்த உலக வாழ்வை ஒதுக்கி விட்டு, இறைதியானத்தில் ஈடுபடக் கூடிய துறவிகள் மற்றும் சந்நியாசிகள் ஆகியோரையும் கொலை செய்வதைத் தடுத்தார்கள். இன்னும் நீங்கள் ஏற்றுக் கொண்ட உடன்படிக்கையை மீறாதீர்கள், நீங்கள் ஏற்றுக் கொண்ட அமானிதங்களையும் முறித்து விடாதீர்கள் என்று அறிவுரை வழங்கினார்கள். எந்தக் கட்டடம் தரை மட்டமாக்கப்படுவதையோ இன்னும் மரங்களை வெட்டி நிலத்தில் சாய்க்ப்படுவதையோ படைவீரர்கள் செய்யக் கூடாது என்றும் உத்தரவிட்டார்கள். தங்களது தளபதியான இறைத்தூதர் (ஸல்) அவர்களது மேற்கண்ட அறிவுரையைச் செவி மடுத்த பின், உண்மையில் மிகவும் சிரமமாக கடிமானதொரு பணியை நிறைவேற்றுமுகமாக முஸ்லிம் படைவீரர்கள் போர்க்களம் நோக்கித் தங்களது பயணத்தைத் துவங்கினார்கள். கடுமையாக நிலப்பரப்புகளின் ஊடாகப் பயணித்த பின் இறுதியாக பால்கா என்ற அந்த குறிப்பிட்ட இடத்தை முஸ்லிம்கள் அடைந்தார்கள். அந்த இடத்தை அடைந்த பின்பு, அங்கு ஏற்கனவே இவர்களை எதிர்பார்த்து, ஹிர்கல் நாட்டு மன்னன் ஒரு படையை அனுப்பி வைத்திருப்பதை அறிந்து கொண்டார்கள். தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பின் கனத்தை எடை போட்டுப் பார்த்த இறைத்தூதர் (ஸல்) அவர்களது தோழர்கள், தாங்கள் ஏற்றுக் கொண்ட சத்தியத்தை நிலைநாட்டுவதற்கு, தங்களது உயிர், பொருள், ஆவி அத்தனையையும் அற்பணிக்குமுகமாக களத்தில் இறங்கினாhகள்.
தளபதிப் பொறுப்பை ஏற்றிருந்த ஜைத் பின் ஹாரிதா (ரழி) அவர்கள், தனக்குக் கீழ் உள்ள தோழர்களின் வீரத்தை ஊக்குவிக்குமுகமாக தான் வெகு விரைவாக எதிரிப்படைகளுக்குள் ஊடுறுவிச் சென்று முன்னேறிக் காட்டினார். ஒருவர் நான்கு நபரைச் சமாளித்து, அவர்களை உற்சாகப்படுத்திக் காட்டினார். எங்கும் அழிவும், மரண ஒலமும் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தன. எதிரிகளை ஊடறுத்துச் சென்ற ஜைத் பின் ஹாரிதா (ரழி) அவர்கள் இப்பொழுது வீர மரணம் எய்தினார்கள். பின் ஜஃபர் பின் அபீதாலிப் (ரழி) அவர்கள் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள். எதிரிகளை ஊடறுத்துச் செல்ல விரும்பிய ஜஃபர் பின் அபீதாலிப் (ரழி) அவர்களுக்கு, எதிரிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்த காரணத்தால், அந்த வாய்ப்பு எளிதாக இருக்கவில்லை. எனவே, தான் ஏறி வந்த குதிரையில் இருந்து இறங்கி, எதிரிகளின் தலைகளைக் கொய்ய ஆரம்பித்தார். ஆனால், எதிhகளில் ஒருவன் அவரது வலது புஜத்தில் கடுமையானதொரு தாக்குதலைத் தொடுத்ததன் காரணமாக, அவரது வலது கரம் துண்டிக்கப்பட்டுக் கீழே விழுந்தது. வலது கரத்தில் ஏந்தியிருந்த கொடியை இடது கரத்திற்கு ஜஃபர் பின் அபீதாலிப் (ரழி) அவர்கள் மாற்றிக் கொண்டார்கள். பின் அந்த எதிரி இடது கரத்தையும் வெட்டிச் சாய்த்தான்.
இருப்பினும் தான் ஏந்திய அந்தக் கொடியை தரையில் விழ அனுமதிக்காத ஜஃபர் பின் அபீதாலிப் (ரழி) அவர்கள், தனது கால்களைக் கொண்டு அந்தக் கொடியை ஏந்திக் கொண்டார். இறுதியாக எதிரிப்படை வீரன் கொடுத்த அடியை தாங்கவியலாத ஜஃபர் பின் அபீதாலிப் (ரழி) அவர்கள் வீர மரணமடைந்தார்கள். இப்பொழுது, இறைத்தூதர்(ஸல்) அவர்களின் அறிவுரைப்படி, மூன்றாவது தளபதிப் பொறுப்பை அப்துல்லா பின் ரவாஹா (ரழி) அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். கீழே விழ இருந்த கொடியை கையில் ஏந்திப் பிடித்த அப்துல்லா பின் ரவாஹா (ரழி) அவர்கள், தளபதிப் பொறுப்பின் கீழ் மிகச் சிறந்த வீரத்தை காட்டி எதிரிகளைக் கலங்கடித்தபின் அவரும் வீரமரணம் எய்தினார்.
எண்ணிக்கையில் வந்த பலவீனம் தங்களது படைத்தளபதிகளில் மூவரை ஒருவர் பின் ஒருவராக இழந்து விட்டிருந்த முஸ்லிம் படைவீரர்கள், இப்பொழுது மனதளவில் சற்று நிலைகுலைந்து போயிருந்தார்கள். இன்னும் எதிரிப் படைக்கும் முஸ்லிம் படைக்கும் இடையே இருந்த எண்ணிக்கை வித்தியாசமும் அவர்களது மனோ பலத்தை சற்று அசைத்துத் தான் பார்த்துக் கொண்டிருந்தது. வெற்றி கிடைக்குமா? என்ற அச்சமும் நிலவியது. ரோமப் படையின் எண்ணிக்கையே அவர்களை இந்த எண்ணத்திற்கு இட்டுச் சென்று கொண்டிருந்தது.
இன்னும் முஸ்லிம்களின் கொடி கீழே விழக் கூடிய நிலையில், எதிரிகளின் கரங்களுக்குள் சிக்கக் கூடிய நிலையில் இருந்து தப்பித்துமிருந்தது. கீழே விழ இருந்த கொடியை தாவிப் பிடித்து கைகளில் ஏந்திக் கொண்ட தாபித் பின் அர்க்கம் (ரழி) அவர்கள், தான் ஏந்திய அந்தக் கொடியை, சற்றும் எதிர்பாராத நிலையில் காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் கரங்களில் சேர்த்தார். அந்தக் கொடியை காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் கைகளில் சேர்க்கும் பொழுது, காலித் பின் வலீத் (ரழி) அவர்களே! தயவுசெய்து இந்தக் கொடியைப் பிடித்துக் கொள்ளுங்கள். இந்த மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் உங்களால் தான் தலைமைப் பொறுப்பை ஏற்று, அதனை செவ்வனே நிறைவேற்ற முடியும் என்று அவர் கோரிக்கை வைத்தார்.
கைகளில் கொடியைப் பிடித்துக் கொண்டு, என்னருமைத் தோழரே! இது இக்கட்டான சூழ்நிலை என்பதை நானறிவேன், ஆனால் என்னை விட நீங்கள் தான் இறைநம்பிக்கையில் முந்திக் கொண்டவரும், இன்னும் பத்ருப் போரில் கலந்து கொண்ட அனுபவமிக்கவரும் கூட.
எனவே நீங்கள் தான் தலைமைப் பொறுப்பிற்கு தகுதி வாய்ந்த நபர் என்று கனிந்த குரலில் கூறினார். இறைவன் மீது சத்தியாக..! உங்களது மன வலிமையும், உங்களது தியாகமும் அற்பணமும் ஏற்கனவே நிரூபணமானதொன்று. கீழே விழுந்த அந்தக் கொடியை தங்களது கைகளில் சேர்ப்பித்து விட வேண்டும் என்ற நோக்கமல்லாது வேறு நோக்கத்திற்காக நான் அதனை எடுத்துக் கொள்ளவில்லை. தயவு செய்து இந்தக் கொடியைப் பெற்றுக் கொண்டு, தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதன் மூலம் இந்த இக்கட்டான சூழ்நிலையை, தங்களது அனுபவம் மற்றும் செயல்திறன், திட்டமிடும் ஆற்றல் மூலம் சமாளித்துக் காட்டுங்கள் என்று வேண்டிக் கொண்டார்.
தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுதல் இராணுவத் தந்திரங்கள் மூலமாக எதிரிகளை அச்சுறுத்தக் கூடிய தலைவர் ஒருவர் தான் இப்பொழுது நமது வீரர்களுக்கு தேவைப்படுகின்றார். எதிரிகளைத் துவம்சம் செய்யும் திட்டங்களுடன் நமது வீரர்களை வழிநடத்திச் சென்று, எதிரிகளை நிலைகுலையச் செய்வதன் மூலம் நமது வீரர்கள் சற்று மனவலிமை பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்துங்கள் என்று கேட்டுக் கொண்டார். பின் படையினரின் பக்கம் திரும்பிய அவர், என்னருமைத் தோழர்களே! காலித் பின் வலீத் (ரழி) அவர்களை நமது தலைவராக நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா? என்று கேட்டார். அவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில், காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் எங்களுக்கு தளபதியாகப் பொறுப்பேற்பதில் சந்தோஷமே என்று கூறினார்கள். இப்பொழுது, கொடியைக் கைகளில் ஏந்திக் கொண்ட காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், முஸ்லிம் படைக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
மிகவும் உக்கிரமாக நடந்த அந்தப் போரில் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் ஒரு வாள் உடைந்து போக இன்னொரு வாளை மாற்றி மாற்றி, இவ்வாறாக அந்தப் போரில் ஒன்பது வாள்களைப் பயன்படுத்தி எதிரிகளைத் துவம்சம் செய்தார்.
எதிரிகளுடன் ஒப்பிடும் பொழுது, முஸ்லிம் படைவீரர்கள் மிகக் குறைந்த அளவே இருந்தனர்.
காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் தந்திரமும், போர் திட்டங்களும் எதிரிகளின் திட்டங்களை தவிடுபொடியாக்கின. ஒரு சில முஸ்லிம் வீரர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களை மறைந்திருக்கச் செய்து, திடீரென போர்க்களத்திற்குள் நுழையுமாறு பணித்தார்கள். திடீரென ஏற்பட்ட இந்த போர்க்களச் சூழலில், ஏற்பட்ட புழுதிப் படலம் மற்றும் ஆரவாரம் எதிரிகளை நிலைகுலையச் செய்தது. திடீர் திடீர் என வந்து போர்க்களத்திற்குள் குதித்த முஸ்லிம்களைப் பார்த்த ரோமப் படைகள், புதிய படைப் பிரிவு வந்து கலந்து கொண்டிருக்கின்றது என்று நினைத்து, அச்சத்திற்குள்ளாயினர்.
ரோமப் படைவீரர்களின் இந்த மனநிலைத் தடுமாற்றத்தைத் தங்களுக்கு சாதமாகப் பயன்படுத்திக் கொண்ட காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், எதிரிகளின் வளையத்திலிருந்து தனது படைவீரர்களை பாதுகாப்பான பகுதிக்கு அனைவரையும் அப்படியே, ஒதுக்கி அழைத்துச் சென்று விட்டார்கள். இதற்கு முன்பு ரோமர்கள் வெற்றி பெற்று விடுவோம் என்ற மமதையில் இருந்தார்கள். ஆனால், முஸ்லிம்களோ அவர்களின் ஒருவரையும் உயிருடன் போர்க்களத்திலிருந்து திருப்பி அனுப்பவில்லை. அவர்களது நம்பிக்கைக்கும் காரணமிருந்தது.
அதுவென்னவெனில், சற்று சில காலங்களுக்கு முன்பு தான் பாரசீகத்தை அவர்கள் வெற்றி கொண்டிருந்தார்கள். அந்த வெற்றிப் போதையானது, எண்ணி விடக் கூடிய அளவிற்கு இருந்த முஸ்லிம்களையும், வெகு எளிதாக வெற்றி பெற்று விடலாம் என்ற போதையை ஏற்றி இருந்தது.
இறைவன் காலித் பின் வலீத் (ரழி) அவர்களுக்கு வழங்கியி?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக